மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

29.1.14

Astrology: மணமாலை கொண்டு வரும் - திருநாளும் என்று வரும்?

 

Astrology: மணமாலை கொண்டு வரும் -  திருநாளும் என்று வரும்?

Quiz No.38: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்தியெட்டு..

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின்  திருமண வாழ்க்கையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

46 comments:

Sathyanarayanan said...

Result: Delayed Marriage, Average Married Life. Puthra dosham is also there because of Mars,Ketu in 5th house. If she got married in first half of sukra dasha, possible chances of divorce.

Reason:
1) Saturn in 7th house
2) Sukra in 3rd house
3) 7th lord in 12th house, with 8th aspect from 6th lord mars.

thozhar pandian said...

பொதுவாக 7ல் சனி இருந்தால் விதவை ஜாதகம். இந்த ஜாதகத்தில் 7ம் இடத்து குரு அந்த வீட்டிற்கு 8ல், இலக்கினத்திற்கு 12ல் (மறைவிடத்தில்) வேறு இருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீடான சிம்மத்தில் பகை வீட்டில் இருக்கிறார். அவர் 7ம் வீட்டிற்கு 9ம் வீட்டில் இருப்பதாலும், இலக்கினாதிபதி உச்சம் பெற்று வலுவாக இருப்பதாலும் சுக்கிர தசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும். 5ம் வீட்டில் கேது மற்றும் செவ்வாய். புத்திர தோஷமும் உள்ளது. 5ம் வீட்டு சுக்கிரன் அந்த வீட்டிற்கு 11ல். புத்திர‌ காரகன் குரு 5ம் வீட்டிற்கு 8ல். 1 குழந்தைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஜாதகி தனது கணவரை இழந்திருப்பார். கணவர் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் வலுவாக இருந்தால், அவரை பிரிந்து வாழ்ந்திருப்பார்.

janani murugesan said...

மதிப்பிற்குரிய ஐயா,

ஜாதகிக்கு திருமணம் ஆகியிருக்காது.
7க்குடைய குரு 12ல்
7ல் 8க்குடைய சனி
சுக்ரன் 3ல் பகை வீட்டில்
5ல், 6க்குடைய செவ்வாய் + கேது
குழந்தைகள் இருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை as obvious.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
quiz எண் 38.
லக்னம் மிதுனம்.
ராசி கடகம் .
1.லக்னாதிபதி திரிகோணமான.4ல் உச்சம் உடன் சூரியன்.. புத ஆதித்திய யோகம்
2.ராசியாதிபதி சந்திரன் கடகத்தில் ஆட்சி .
3. 7ல் சனி 8&9 கு உடையவன் பொதுவாக 8 உடையவன் 7ல் அவ்வளவு சொல்லும்படி கிடையாது .
4.7ம் வீட்டதிபதி .குரு 12ல் பகை வீட்டில் .கெட்டு போய்விட்டார் இருந்தாலும் அவர் *குரு* கொஞ்சம் பவர் உண்டு..ஆடம்பரமான பெண்மணி..
5.முக்கியமான களஸ்திர காரகன் சுக்கிரன் பகை வீடு சிம்மத்தில் .கெட்டு போய் விட்டான் .........!!!!!!
6.சுப மான விஷயம் லக்னம் சுப கர்தாரி யோகம் லக்னத்தில் மாந்தி பிடிவாதம்.
7. 2மிடமான குடும்பஷ்தானத்தில் சந்திரன் ஆட்சி அவன் பார்வை ..8மிடத்தை ..7ம் பார்வையாக ஆட்சி பெற்ற சந்திரன் பார்க்கிறது ...இது ஒரு சுபம் [8ம் வீட்டுகாரன் சனி 7ல் கூடாரம் போட்டிருக்கிறான்]
8. புதன் திசை,15.7.9.அடுத்து கேது 7 வருடம்.அடுத்து களஷ்திரகாரகன் சுக்கிரனின் திசை .அதில் தனது புக்தி சுக்கிரன் ,சூரியன்,சந்திரன்,ராஹு, குரு புக்தி.ல் கேது அந்தரம் முடிந்து ..34வயது 1மாதம் 1 நாள் கழித்து சுக்கிரன் அந்தரம் வருகிறது 5மாதம் 10 நாள் இந்த நேரத்தில் திருமணம் நடை பெரும்...
9..குழந்தைகள் உண்டு ..5ம் வீடு சுபர் வீடு
திருமணம் உண்டு ..34 வயதுக்கு மேல் ..குழைந்தைகள் உண்டு..
s.n.ganapathi

Chandrasekaran Suryanarayana said...

QUIZ NO.38

28th September 1929 23.51.00 PM (age- 84 years)
இந்தூர், மத்தியபிரதேஷத்தில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகியின் பெயர் லதா மங்கேழ்கர் இந்திய நாட்டின் புகழ் பெற்ற பாடகி.

திருமணம் நடைபெறவில்லை.

மிதுன லக்கினம்(30 பரல்)சிவந்த மேனி அழகுடன் இருப்பார். லக்கினாதிபதி புதன் 4ல் உச்சத்தில் சூரியனுடன் புத‍-‍‍ஆதித்திய நிபுன யோகத்தில். வர்கோத்திரமான புதன் நவாம்சத்திலும் உச்சம். சங்கீத‌த்தில் உயர்ந்த நிலைக்கு சென்றதிற்க்கு இதுவும் ஒரு காரணம்.

7ம் வீட்டு அதிபதி குரு லக்கினத்திற்க்கு 12ல் பகைவீட்டில் ரிஷபத்தில். ல‌க்கினத்தில் மாந்தி, 7ம் வீட்டில் சனி(3 பரல்) அமர்ந்திருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. 7ம் வீட்டில் 25 பரல்கள்.

களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில்.நவாம்சத்திலும் சுக்கிரன் சனி, கேதுவுடன் கூட்டு.

சந்திரனிலிருந்து 4ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டு.

இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள், பத்திர யோகம், சுனபா யோகம், சாமர யோகம், வசுமதி யோகம், நிபுன யோகம், உபயசர யோகம் என பல யோகங்கள் உள்ளன.

இந்த ஜாதகத்தை மேலும் நிறைய அலசலாம். ஆனால், கேட்ட கேள்வி திருமணம் மட்டும் என்பதால் இத்துடன் அல‌சலை நிருத்தி கொள்கின்றேன்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்.

Ravi said...

7th Saturn.
7th lord in 12th house.
4th occupied by Mars and Ketu.


An unhappy / denied married life.

ramesh venkatapathy said...

இரண்டாம் பாவத்தில் சந்திரன் சொந்தவீட்டில் ஆட்சியில் இருப்பதால்...இளவயதில் திருமணம்! சுக்ரதசை சுக்ரபுத்தியில், அதாவது ஜாதகரின் 22 - 24 வயதில் திருமணம் நடக்கும்!
ஏழாம் பாவத்தில் எட்டாம் சனி இருப்பதாலும், ஏழாம் பாவாதிபதி குரு, விரையத்தில் அமர்ந்ததாலும், தொல்லை தரும் களத்திரம் அமையும் !

Bagavathi S said...

Hi Sir,

7th house: Native will get lately married since Saturn[will cause delay] is in 7th house.
Also 7th place owner is in 12th house and enemy's rasi.
Since 2nd house[family] owner[Moon] is in own house and Lagna lord in exaltation[but combust with sun] marriage life will be normal.

Govindasamy said...

7க்குரிய குரு லக்கினத்திற்கு 12ல்.
7ம் வீட்டிலிருந்து ஆறில்
7ம் வீட்டில் எட்டு ஒன்பதுக்குரியவன்
களத்திர காரகன் சுக்கிரன் 3ம் வீட்டில்

திருமண பாக்கியம் சந்தேகமே. அப்படி ஆனாலும் கணவர் சொல்லும்படி இருக்கமாட்டார்

லக்கினத்தில் மாந்தி. லக்கினாதிபதி 4ல் ஆட்சி.

அம்மணிக்கு மனக்குழப்பம் இருந்தாலும் மிகவும் தைரியமானாவர். புத்திசாலி. தன்னம்பிக்கையுடன் இருப்பவர்.

2க்குரியோனும் 4க்குரியோனும் அவரவர்களது வீட்டில் ஆட்சி. குரு பார்வை 4ம் வீட்டில்
11ல் ராகு

தன பாக்கியவதி. வீடு மற்றும் செல்வம் அதிகமாகவே இருக்கும். அதிகாரமும் கிடைக்கும்.

5ல் கேதும் 6க்குடைய செவ்வாயும்

மண பாக்கியம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் கேள்விக்குரியே

சனி பார்வை லக்கினத்திலும் 4ம் வீட்டிலும்

அம்மணி சற்று நிறம் குறைச்சல். சொத்திலும் சில வழக்குகள் இருக்க வாய்ப்பு.

இரண்டாம் அதிபதியின் திசை நடப்பு 40 வயதுக்கு மேல்

திருமணபாக்கியம் வாய்த்தால் 40 வயதுக்கு மேல்தான் சாத்தியம்.

அய்யா..

இது maiden attempt.

தவறிருந்தால் மன்னிக்கவும்

Srinivasa Rajulu.M said...

35 வயதில் தாமதத் திருமணம் (சுக்கிர தசை-குரு புக்தி)

களத்திரஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவு. காரகன் மூன்றில். களத்திரஸ்தானத்தில் எட்டாம் அதிபன் சனி.

ஆனாலும் குடும்பஸ்தானம் வலுவாக இருப்பதாலும், சயனபோக ஸ்தானத்தில் குரு (நவாம்சத்தில் உச்சம் மற்றும் பரிவர்த்தனை) இருப்பதாலும், காரகன் தசையில் தன்னுடைய புக்தியில் குரு திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்.

Kaven said...

வணக்கம் ஐயா. இது லதா மங்கேஷ்கரின் ஜாதகம். ஏழில் 8ஆம் அதிபதி சனி, லக்னத்தில் மாந்தி. ஏழாம் அதிபதி குரு 12ல் (7க்கு 6ல்) மறைவு. திருமண வாழ்வு இல்லை.

karuppiah Sakthi said...

வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் திருமணம் மறுக்கப்பட்டுள்ள ஜாதகம்

1) 8ஆம் அதிபதி சனி 7இல் அமர்ந்து லக்கணத்தையும் லக்கனதிபதியையும் தன் பிடியில் வைத்துள்ளார்.

2) 7 ஆம் அதிபதி குரு 12இல் மறைவு

3) 6ஆம் அதிபதி செவ்வாய் 5இல் உடன் கேது. 5 இல் கேது இருப்பது பொதுவாக சந்நியாச யோகத்தை தரும்.அத்துடன் செவ்வாயின் 8ஆம் பார்வையாக 7ஆம் அதிபதி குருவை பார்க்கிறார்

4) களத்திரக்காரகன் சுக்கிரன் பகை வீட்டில் அத்துடன் லக்கனத்துக்கு 3இல்.மேலும் புதனும் சுக்கிரனும் 2/12 அமைப்பில் உள்ளார்கள்

Sakthivel K said...

dear sir..
ammaniin jathagam nallajathagam !!!
ammani supakarthari yogam petravar !
ammanigku lagnathipathi utcham +paint
ammanigku thirumanam thamatham
ammanigku kulanthai ellai or thamatam
ammani sugavaasi,panagkaari !!!
ammani life enjay, enjay, enjay....

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 38 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

மிதுன லக்கினக் காரரான இந்தப் பெண்மணியில் ஜாதகத்தில் லக்கினம் சுபகத்தாரி யோகத்தில் இருந்தாலும் மாந்தி இருப்பதால், திருமண வாழ்க்கை இருக்காது.

களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனியும், களத்திர ஸ்தான அதிபதி குரு, 12ல் மறைந்து விட்டதும் அதை உறுதிப் படுத்துகிறது.

குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் ஆட்சி பெற்றிருந்தாலும், குருவின் பார்வை இல்லாததோடு, களத்திர காரகன் சுக்கிரனுக்கு 12ல் அமர்ந்து விட்டது. அதனால் திருமணமாகி குடும்பம் அமையாமல் போய்விட்டது.

Saravanan J said...

Dear Sir,
Here I want to answer for the quiz no.38.
1. 7th lord Jupiter is present in rishaba rasi, from its place it is sixth place.it is not the good position.
2. 8th lord is present in 7th place(sani), which it shows natives kalathiram has been affected.
3. Mars has been adjoined with kethu. That it shows native may be MUTHIRKANNI.
4. But she may be the well educated woman

அருண் குமார் said...

லக்னத்தை சனி தான் 7-ஆம் பார்வையில் வைத்துள்ளார்.பூரண ஆயுள் உண்டு.

2-ஆம் வீடு :

2-ஆம் வீடு சந்திரன் ஆட்சி பலத்துடன் உள்ளார் குடும்பம்,சுகஸ்தானம் நன்றாக இருபின்னும்
சனியின் 8-ஆம் பார்வை முழுவதுமாக நன்மை கிடைக்காது.

4-ஆம் வீடு

லக்னதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று 4-ஆம் வீட்டில் உள்ளார்.
உடன் சூரியன் + குருவின் 5-ஆம் பார்வை 4-ஆம் வீட்டிற்க்கு.
வீடு ,வாகன வசதிக்கு கூறவில்லை.

5-ஆம் வீடு

5-ஆம் வீட்டில் கேது குழந்தை பிறப்பில் பாதிப்பு இருக்கும் உடன் செவ்வாய் 5-ஆம் வீட்டில் (பகை வீட்டில்)+
ராகுவின் 7-ஆம் பார்வையுடன் குழந்தை பிறப்பு இல்லை என்றே கூறலாம்.

7-ஆம் வீடு

7-இல் சனி திருமண தடை ,தாமதம் . 7-க்கு உடையவன் ( குரு 12-இல் மறைவு)
குரு 7-ஆம் வீட்டிற்க்கு 6-இல் உள்ளார்.

சந்திரனுக்கு 7-ஐ எடுத்துக்கொண்டாலும் ,மகரம்( 8-ஆம் வீடு) சனி அதன்
அதிபதி அதற்கு 12-இல் உள்ளார் .

சுப கிரகங்களின் பார்வையும் இல்லை.

உடன் தசை கணக்கில் எடுக்கும் போது
புதன் தசை- 15 வருடம் பிறகு
கேது தசை - 7 வருடம் (திருமணத்திற்க்கு வாய்ப்பில்லை) பிறகு
சுக்கிர தசை 18 வருடம் (சுக்கிரன் பகை வீட்டில் அதுவும் 3-ஆம் வீட்டில்)
(திருமணத்திற்க்கு வாய்ப்பில்லை)

காலபோக்கில் ஜாதகிக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போயிருக்கலாம்.

மொத்தத்தில் இது ஒரு திருமணம் மறுக்க பெற்ற ஜாதகம்.

9-ஆம் வீடு

கும்பம் அதன் அதிபதி சனி அந்த இடத்திற்க்கு 11-இல் (தனுசில்) ,
சுக்கிரனின் 7-ஆம் பார்வையால்

சுக்கிர தசையில் கிடைக்க வேண்டிய பாக்கியம் கிட்டும்.

10-ஆம் வீடு

மீனம் அதன் அதிபதி குரு அதற்கு3-ஆம் வீட்டில்
சூரியன்- 7-ஆம் பார்வை +ஆட்சிபலத்துடன் உள்ள புதனின் பார்வை
15 வயது வரை கற்ற கல்வி துணை வரும்.

11-ஆம் வீடு

11-ஆம் வீட்டில் ராகு நட்பு வீட்டில் ,
மேஷம் அதன் அதிபதி செவ்வாய் தான் 7-ஆம் பார்வையில் வைத்துள்ளார்.
ஊர்ஊராக மாறி மாறி சென்று வேலை செய்து இருப்பார்
ராகுவால் திரை கடல் ஓடியும் திரவியம் தேடி இருப்பார்

kalai chitra said...

7 ல் சனி, 7ம் அதிபதி குரு 12ல், திருமணம் கசந்து விடும்

JAWAHAR P said...

வணக்கம்

மணமாலை கொண்டு வரும் - திருநாளும் என்று வரும்?

திருநாள் வர வாய்ப்பு இல்லை

Ravichandran said...

Ayya,

She must be married to good family, but her husband must be expired soon. The reason for good family Chandran in own house(that too second house-family house). Mangalya sthana owner(8th house) owner sitting from his 12th house(7th house)- Due to that her mangalyam might be gone soon after marriage.

Your Student,
Trichy Ravi

C.Senthil said...

அய்யா,
DAOB: 28-செப்-1929
திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
7-இல் சனி, 7-ஆம் அதிபதி லக்னத்திற்கு 12-இல், கலதிரகாரன் சுக்கிரன் 3-இல்.

Ramesh Balakrishnan said...

Q: 38

Reasons: married women with children

1. Married woman (2nd lord chandran in her own house)

2. laknathipathi bhu with suri ( bhu-adithya yoga - guru aspects both.

3 8th lord malfic Sani in 7th place

3. 7th lord guru 12th place

4. 6th lord chevvai aspects 7th lord guru

Thanking you
Sincerely yours

rameshraja

Ramesh Balakrishnan said...

Q: 38

Reasons: married women with children

1. Married woman (2nd lord chandran in her own house)

2. laknathipathi bhu with suri ( bhu-adithya yoga - guru aspects both.

3 8th lord malfic Sani in 7th place

3. 7th lord guru 12th place

4. 6th lord chevvai aspects 7th lord guru

Thanking you
Sincerely yours

rameshraja

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.38:

Date of birth : 28.09.1929
Time of birth : 11:30pm to 12:00pm
Place of birth: Indore, Madhya Pradesh, India

Name of the Native: Melody Queen LATA MANGESHKAR (84 years old)

SHE DID NOT MARRIED. MARRIAGE WAS NEVER HER CUP OF TEA.

MARRIAGE WAS DENIED AS PER HER HOROSCOPE.

SEVENTH HOUSE:
Eighth house auhtority saturn is sitting in seventh house and seventh house lord is sitting in twelfth house from langa and sixth house from its own house and not getting any good planets aspect. Hence she was not blessed to get marry.

SECOND HOUSE:
Second house lord Moon sitting in own house and eleventh house lord Mars aspects its own house(11th). Hence she is rich and having good voice.

FIFTH HOUSE:
Kethu alongwith Mars sitting in fifth house. This placement and companion not allowed her to think about marriage.

In short, Lagna lord exalted in Kendra(4th house) along with Sun and Jupiter aspects as it's fifth aspect. Its great yoga.

With kind regards,
Ravichandran M.

KJ said...

Late marriage due to Sani in 7th house. Marriage life will not be long. Sukran aspect for 9th house. Lagnathypathy ucham with Budha-adhitya yoga.

Subamohan Subbu said...

Respected Sir
Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
Mithuna lagnum , Kadaka rasi with Anusham star
YOGTHIPATHI – Saturn
BHATHAGAPATHI – Sun,Mars
PLANETARY POSITION:
1) Guru – owner of 7th house at 12th house + enemy house
2) Sun ,Mercury and Saturn at Kendra
3) Mars at trine position
4) Saturn aspecting lagnum and lagmathipathi
5) Guru aspecting lagmathipathi
6) Mars aspecting guru
7) Saturn and guru – 6/8 relation

Assessment Of Family life:
LAGNUM:
1) Aspected by saturn
Lagnum is made weak by Saturn as he is also owner of 8th house
Lagnum is Moderately strong
LAGNATHIPATHI
1) Mercury is own house and exalted. VARGOTHAMAM but retrograde.
2) Budhaaditya yogum
SECOND HOUSE:
1) Occupied by Moon but waning – no aspects – Not strong
SEVENTH HOUSE:
1) Occupied by Saturn – oener of 8th house

PREDICTIONS
1) Beautiful woman. Will be intelligent
2) Saturn would have given family life. But there is high chance that she will not live with her husband. Either husband is separated or the possibility loss of husband.
Dr.Mohan, Brunei

poigai said...

இந்த பெண் மணிக்கு கண்டிப்பாக திருமண வாழ்க்கை கிடையாது.அமைந்தாலும் ஊற்றிகொள்லும் .7 இல் சனிஸ்வரன்,8 இம் அதிபதி 7 இல்,7 இம் அதிபதி 12 இல் மறைவு , எந்த ஒரு சுப கிரகமும் 7 ம் வீட்டை பார்க்கவில்லை, மேலும் குழந்தை பாகியதுக்கான அமைப்பும் இல்லை.5 இல் கேது, செவ்வாய் மற்றும் 6 ம் அதிபதி.5 ம் அதிபதி 3 இல் மறைவு.

jagvettri@gmail.com said...

திருமனம் மறூக்க பெற்ற் ஜாதகம் .ஏழாம் அதிபதி குரு 12 இல், 6ஆம் அதிபதி சனி 7 இல் ,சுக்ரன் மூன்ரில்.
மஙகல காரகன் செவ்வாய் கேதுவுடன் கூட்டு .சந்திரன் ஆட்சி பெட்ரதால் நல்ல் குடும்பம் புத ஆதித்ய யோகம் உல்லதால் நல்ல படிப்பு ஆனால் லகனதில் மாந்தி குனம் பற்றி அரிய வேண்டும்.

jagvettri@gmail.com said...

அய்யா சிரு திருத்தம் 8 உக்கு உடய சனி

Manikandan said...

8க்கு உடையவன் 7-ல் . 7-ம் அதிபதி 7-க்கு ஆறாம் இடத்திலும் லக்கனதிற்க்கு 12-லும் மறைவு. சுப கிரகங்கள் பார்வையும் 7 இடத்திற்க்கு இல்லை. சுக்கிரன் 3-ல் மறைவு. ஆகையால் திருமணம் இல்லை

Susheela kandhaswamy said...

ஐயா,
1.திருமணம் மறுக்கப் பட்ட ஜாதகம். 7ல் சனி, 7க்குடைய குரு 12 ல்
2.லக்னாதிபதி புதன் வலுவாக இருப்பதாலும் 2ல் சந்திரன் ஆட்சி பலத்துடன் இருப்பதாலும் படித்து வருமானம் உள்ள தொழில் அமைந்து விட்டது.
3.மூன்றில் 5க்குடைய சுக்ரன் மறைவு 5ல் செவ்வாய்+கேது அதனால் குழந்தைகள் இல்லை.

ஐயா,
1.திருமணம் மறுக்கபட்ட ஜாதகம்
லக்னத்திற்கு ஏழில் சனி ஏழாமிடத்து அதிபதி குரு 12ல்.
2.லக்னாதிபதி புதன் 4ல் வலுவாக இருப்பாலும், 2ல் சந்திரன் ஆட்சி பலத்துடன் இருப்பதாலும் படித்து வருமானம் உள்ள தொழில் அமைந்து விட்டது
3.3ல்5க்குடைய சுக்கிரன், 5ல் செவ்வாய் கேது, குழந்தை மறுக்க பட்ட ஜாதகம்.bg said...

1. லக்கினத்தில் மாந்தி.
2. 7 இல் சனி.
3. 7 ஆம் அதிபதி குரு 12 இல் விரயஸ்தானத்தில் உள்ளார்.
அது அவருக்கு பகை வீடு.
காரகன் சுக்கிரன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.
அது அவருக்கு பகை வீடு.
ஆகவே இந்த ஜாதகருக்கு திருமண வாழ்வு வாய்ப்பு குறைவு.

யோகம் – புத அதித்ய யோகம் உள்ளது.
பிறந்த வருடம் – 1930.

vijayarangaraju venkidasamy said...

வாழ்க்கை போராட்டம் மிகுந்து இருக்கும்

Sattur Karthi said...


வணக்கம் அய்யா !

இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சந்திரன் இளம் வயதில் திருமண வாழ்க்கை கொடுத்திருப்பார்.

களஸ்திர ஸ்தானத்தில் எட்டாம் அதிபதி ஆன சனி இருக்கிறார்.
களஸ்திர ஸ்தனதிபதி குரு பன்னிரண்டாம் இடத்தில விரய ஸ்தானத்தில் இருக்கிறார்.

எனவே, களஸ்திர ஸ்தானத்தில் உள்ள சனியும், விரய ஸ்தானத்தில் உள்ள குருவும் குடும்ப வாழ்க்கை நிலைக்காமல் செய்து இருப்பார்கள் .

Sattur Karthi

Sanjai said...

மண வாழ்க்கை இல்லை,
1. லக்னத்தில் மாந்தி (ஏழாம் பார்வை ஏழாம் வீட்டில்),
2. ஏழுக்குடையவன் பன்னிரெண்டாம் வீட்டில்.
3. எட்டுக்குடைய சனி ஏழில்.

GANAMURUGU said...

Respected Sir,
The Marriage life of the jatagar is NOT happy because of the following reasons.
1) Sani is in 7th place aspecting Lagnam. Marriage life not happy. There is chance of marrying a old man.
2)7th Lord Guru is in 12th place of Lagnam.
3) Sani from 7th House is aspecting the Sun in Sugasthanam (4th house). The husband may have bad habits.

Ravi Sankar said...

Hi Sir, Greetings!

As 7th Lord in in 12th place from Lagna. 8th Lord (Saturn) is in 7th place and Venus is also in 3 rd place, there is no chance in getting married.

Thanks, Ravisankar. M

rm srithar said...

Dear Sir
Given Horoscope is Lata Mangeswar born on 29 september 1929 at Indore

She not got married
Reason
1. Seventh place Jupiter placed in 12th House
2. Saturn is placed in Seventh place. note Saturn is 8th house in charge.
3.Marriage incharge Venus is place in 3rd house.
4. Family house incharge place in second house ruling is good but karagathipathi standing in own house it will spoil karaga nasam, that means family life got lost.
Regards
rm.srithar

Chandrasekharan said...

Respected Sir,

Lagna adhipathy Uccham petru irundhalum.., 2m adhipathy chandran aatchi petru irundhalum.., Nalla Thirumana valkaiku edhirana jadhagam indha penmaniyin jadhagam. Mangalya sthanamagiya 8-m idam adhipathy sani, 7-il (Avar veetirku 12-il). chevvai-in paarvai 8-m veetirku, chevai avar veetirku 12-il. 12-m adhipathy sukran 3-il (Veeriyam illai). 6-m adhipathy 5-il udan kethu and guru 12-il. 6-m idam Kadan, Noyie, Edhiry adhanal 6-m adhibathy-in paarvai 8, Jadhagiyin kanavar Edhavadhu Disease Karanamaga Irnadhiruppar alladhu Jadhagiyai Vivagarathu seidhuruppar (Kulandhai illadha karanathirkaga vivagarathu seidhuruppar.)

Thank You.

vanikumaran said...

7ல் சனி, 7ம் அதிபதி குரு லக்கினத்திற்கு 12ல்,களத்திரகாரகன் சுக்கிரன் 3ல். திருமணதிற்கு எதிரான அமைப்பு.

8ம் அதிபதி அதற்கு 12ல் இதுவும் திருமணதிற்கு எதிரான அமைப்பு உடன் 8ம் வீட்டிற்கு 6ம் வீட்டதிபதி செவ்வாய் பார்வை உள்ளது

சனி பார்வை சுகஸ்தானத்தில் சுகஸ்தானாதிபதி புதன் உடன் 3ம் வீட்டதிபதி சுகக்கேடு

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

புதிர் 38க்குரிய விடை: இனிய பாடகி லதாமங்கேஷ்கர் அவர்களுடைய ஜாதகத்தை கொடுத்துள்ளீர்கள் என தெரிகிறது.திருமணதடையுள்ள ஜாதகம்.
*மிதுன லக்னம், கடகராசி.லக்னாதிபதி புதன் உச்சம் பெற்று 10ம் இடத்தை பார்வை செய்வது சிறப்பு.வாக்குகாரகன்,வாக்கு ஸ்தானாதிபதி இருவரும் வலுவான நிலையில்,சுபகிரகமான சந்திரன் இவருடைய குரலில்
இனிமையை தருகிறார்.
*குரு களத்திர ஸ்தானாதிபதியாகி 12ல் மறைந்ததுடன் 7ல்சனி அமர்ந்து
லக்னத்தை பார்ப்பதும் திருமணதடைக்கு காரணம் என அறியமுடிகிறது
*10ம் இடத்தை தன்பார்வையில் வைத்துள்ள புதன்,தனது தொழிலில் நிபுண‌த்துவத்தையும் 11ல் அமர்ந்த‌ ராகு பேரும் புகழும் கிடைக்கச்செய்தார்.
*4ம் இடமான சுகஸ்தானம் வலுத்து நிலபுலன்க‌ள் வாகன வசதிகளையும் கொடுத்த‌து

*சனி மூலந‌ட்ச்சத்திரத்தில் அமர்ந்ததுடன் ஏனைய கிரகங்கள் ராகு கேதுவின் பிடியில் உள்ளனர். காலசர்ப்ப தோசம் உள்ள ஜாதகம்
*5ல் செவ்வாய் கேது குழந்தை பாக்கியம் கிடையாது.
*லக்னம் சுபகர்த்தாரி யோகத்தில் ஊள்ளது சிறப்பு.
தங்களின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ஐயா.
நன்றி ல ரகுபதி

Dallas Kannan said...

Respected Sir
No marriage for this chart.
Sani in 7th place.
7th lord Guru is in 12 place.
No Benefic look to 7th place or 7th lord.
Mars looks at 7th lord.
Sukra also in 3rd place and in enemy place.
since Chandra is 2nd lord is in its own place, the birth family is good.

I have to confess here, that I checked Google only after concluding above (honestly) to see if there is any famous personality to validate my answer. Looks like it is Latha Mangeshkar. Did not want to do it first. But could not control my curiosity. Sorry about it.

dhana lakshmi said...

Quiz - 38

ஐயா அவர்களுக்கு

லக்ககினாதிபதி கேந்திரத்தில் மற்றும் ஆட்சி வீட்டீல் ,இரண்டாம் வீட்டு அதிபதி ஆட்சி வீட்டீல் பலமாக உள்ளார்.

7ம் வீட்டீல் சனி அந்த இடம் சனிக்கு உகந்த இடம். . . தாமத திருமணம்

சுக்கிரன்,குரு பகை வீட்டீல் மற்றும் மறைவிடங்களில்.

லக்கினத்தில் மாந்தி முரட்டு குணம், பந்தா பேர்வழி

செவ்வாய் + கேது = திருமண பிரிவு

தாமத திருமணம், இயந்திரமான வாழ்க்கை இவரின் முரட்டு குணத்தால் திருமண பிரிவு ஏற்பட்டு மறுமணம் நடந்திருக்கும்.

C Jeevanantham said...

Dear Sir,

The given horoscope girl 7th lord in 12th. also saturn in 7th.

Saturn delays the marriage. Also 7th lord in 12th. Hence she will get very late marriage. Her second lord in second placed good. so she will get family. but late.

Thanking you.

C.Jeevanantham

Udhayaganesh said...

She is a married.

Pons:
Venus is in 3rd house(not in good position) and Venus dasa was going on after 22 age.
So that would help her to get into marriage life.
Lagna god is in good position.

Cons:
Saturn is in 7th house and 12th house for his house(magram).
Guru is in 12 house.
all because this she would get divorce, late marriage , not happy life or get marry with old age man.

It my view on this astrology.

cvraghu said...

Good Morning Sir,

Saturn in 7th house, 7th lord in 12th house and Venus in 3rd house all denote marriage denial or delayed marriage with difficulties. May be divorced.

Raghu

Subbiah Veerappan said...

இன்றையப் பதிவில் கொடுத்திருந்த ஜாதகம் திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். அந்த ஜாதகத்திற்கு உரிய பிரபலம் யார் என்று தெரிந்தால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அடுத்த பதிவில் கொடுத்துள்ளேன். சென்று பாருங்கள்

புதிர்ப்போட்டிக்குப் பதிலாக வந்த பின்னூட்டங்கள் மொத்தம் 45. அதில் சரியான விடையை எழுதியவர்கள் 22 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். போட்டில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். (I wish better luck for them next time)

சரியான விடைகள், எழுதிய அன்பர்களின் பெயருடன் அடுத்த பதிவில் உள்ளது!

அன்புடன்
வாத்தியார்