மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

3.1.14

சங்கே முழங்கு இங்கே முழங்கு!


இரண்டு மலர்கள்!

முதலில் பக்தி மலர். அடுத்தது தமிழ் மலர்
படித்து, கேட்டு மகிழுங்கள்.


அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
   தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே!.


அருணகிரியார் அருளிய கந்தரலங்காரப் பாடல்

விளக்கம்:
நாட்கள் அடியேனை என்ன செய்யும்?
வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள்தான் என்ன செய்யும்?
கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்?
குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும், சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும், பன்னிருதோள்களும், கடப்ப மலர் மாலையும், அடியேனுக்கு முன்வந்து தோன்றும்.
அவர் என்னைக் காத்தருள்வார்
=================================================
2.
தமிழ் மலர்

பாடல்: சங்கே முழங்கு சங்கே முழங்கு.
ஆக்கம்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
திரைப்படம்: கலங்கரை விளக்கம் (1965ஆம் ஆண்டு)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

(சங்கே முழங்கு) 


திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

(சங்கே முழங்கு)

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

=================================================
பாடலின் காணொளி வடிவம்:
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net!வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================

4 comments:

வேப்பிலை said...

பக்தியும் தமிழும் மணம்
பரப்பியது நன்றி

Kalai Rajan said...

Ayya
pathi malar paadal kandar alangaram endru ninaikiren

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
பக்தியும் தமிழும் மணம்
பரப்பியது நன்றி////

பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger Kalai Rajan said...
Ayya
pathi malar paadal kandar alangaram endru ninaikiren////

நீங்கள் சொல்வது சரிதான். இது அருணகிரியார் அருளிய கந்தரலங்காரப் பாடல். கவனச் சிதறலில் தவறாகி விட்டது. பதிவில் திருத்தம் செய்துவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே