மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.12.13

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் இருக்கையில், வேறு யார் வேண்டும்?

 
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் இருக்கையில், வேறு யார் வேண்டும்?

பக்தி மலர்

இன்று மார்கழி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.
இன்று ஏழுமலையானைப் போற்றிப் பாடுவோம்.
திரு ராஜாஜி அவர்கள் எழுதி, கர்நாடக இசையரசி
திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களால்
பாடப்பெற்று புகழடைந்த பாடல் இது.
1969ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஒலித்தபாடல் இது.
ஆமாம், திருமதி.எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் குரல்
அங்கேயும் ஒலித்து அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.
இந்தப் பாடலில் உள்ள மூன்று பத்திகளுமே மூன்று விதமான
ராகங்களில் ஒலிக்கும். அதையும் கவனியுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this song in the net 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

குறை ஒன்றும் இல்லை


அழகான பாடல் பதிவுக்குப் பாராட்டுக்கள்..!

Kalai Rajan said...

அய்யா
அருமையான பாடல் பதிவு.தயவு செய்து திருப்பாவை ஒலி நாடாவை ஒருதரம் பதிவிடவும்

சே. குமார் said...

அழகான பாடல்... அருமை...

வேப்பிலை said...

சில மாறுபட்ட கருத்திருப்பதால்
சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்

வருகை பதிவினை மட்டும்
வழக்கம் போல் பதிவு செய்கிறோம்..

வளமுடன் வளர்க
நலமுடன் வாழ்க

Padmanabhan Subbaraman said...

sir, I am very happy on reading this, eventhough i had a intrest to learn astrology, now only i got a excellent guru, thats you. For the past 20 days i am reading your lessons from starting, very excellent and i am too happy. Now i am in Jan 2009, will come and join with the regular classes shortly. Thanks a lot for your service.
S.Padmanabhan

Subbiah Veerappan said...

//////Blogger இராஜராஜேஸ்வரி said...
குறை ஒன்றும் இல்லை
அழகான பாடல் பதிவுக்குப் பாராட்டுக்கள்..!////

பாராட்டுக்கள் பாடிய அம்மையாரையே சேரும் சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Kalai Rajan said...
அய்யா
அருமையான பாடல் பதிவு.தயவு செய்து திருப்பாவை ஒலி நாடாவை ஒருதரம் பதிவிடவும்/////

நல்லது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger சே. குமார் said...
அழகான பாடல்... அருமை...////

பாராட்டுக்கள் பாடிய அம்மையாரையே சேரும்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
சில மாறுபட்ட கருத்திருப்பதால்
சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்
வருகை பதிவினை மட்டும்
வழக்கம் போல் பதிவு செய்கிறோம்..
வளமுடன் வளர்க
நலமுடன் வாழ்க/////

மாறுபட்ட கருத்து என்ன என்பதைச் சொல்லியிருக்கலாமே சுவாமி? கேட்டுக்கொள்வோம் அல்லவா?

Subbiah Veerappan said...

///Blogger Padmanabhan Subbaraman said...
sir, I am very happy on reading this, eventhough i had a intrest to learn astrology, now only i got a excellent guru, thats you. For the past 20 days i am reading your lessons from starting, very excellent and i am too happy. Now i am in Jan 2009, will come and join with the regular classes shortly. Thanks a lot for your service.
S.Padmanabhan/////

நல்லது. அப்படியே செய்யுங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்!