மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.12.13

Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!





 Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!

Quiz No.29: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி இருபத்தியொன்பது.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்



 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===========================================

25 comments:

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. 1ம் வீடு லக்னத்தில் குரு ஜாதகர் அழகிய தோற்றம் லக்னாதிபதி 12ல் மறைவு அவரால் மற்றவர்களுக்கு லாபம்

    2ம் வீடு அதிபதி லக்னத்தில் (2க்கு 12ல்) குடும்பம் இருக்க வாய்பில்லை

    5ம் வீடு 6ம் வீடு பரிவர்தனை குழந்தை வாய்ப்பு இல்லை

    7ம் வீடு அதிபதி 6ல் மறைவு கல்யாண பக்யம் இருக்காது

    நன்றி

    ஜவஹர்

    ReplyDelete
  3. 1962ஆம் வருடம் ஜூலை 28 அல்லது 29-ஆம் தேதி (மிருகசீரிஷம், திருவாதிரை அல்லது புனர்பூசம் - இதில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்) இரவு ஏழு மணி சுமாருக்குப் பிறந்த பெண்மணி. தற்போது 51-வயதாகிறது.

    1. அறிவும், இறை உணர்வும் நிறைந்த பெண்மணி
    2. திருமணம் ஆகி குறுகிய காலத்திலேயே கணவர் இல்லாமல், குடும்ப வாழ்வும் இல்லாமல் வாழ்பவர்.
    3. ஒரு குழந்தை இருக்க வாய்ப்புண்டு

    1. லக்கினத்தில் தேவ குருவும், ஏழிலிருந்து அசுர குரு பார்ப்பதும் இந்தப் பெண்மணியின் அறிவுத்திறனைக் குறிக்கின்றன. கேதுவுடன் சேர்ந்து, ஞானஸ்தானத்தில் நிற்கும் லக்னாதிபதி இவரின் இறை உணர்வைக் குறிக்கிறது.

    2. 'காரகோ பாவ நாஸ்தி' விதிப்படி, சுக்கிரன் பகைவீட்டில் ஏழில் நிற்பதால்; ஏழாம் அதிபன் எட்டாம் அதிபன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து ஆறில் மறைந்ததாலும், செவ்வாய் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், திருமண பாக்கியமே இல்லாமல் போகியிருக்க வேண்டியது. ஆனாலும், குரு ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் தாமதத் திருமணம்.

    3. புத்திரஸ்தானம் பாபகர்த்தாரி தோஷத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. மற்றும் கும்ப லக்கினத்திற்குப் பாபியும், தேய்பிறையுமான ஆறாம் அதிபன் புத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். ஐந்தாம் அதிபதி புதன், ஆறில் மறைந்திருக்கிறார். இருப்பினும், குரு பார்வையால் ஒரு பெண் குழந்தை இருக்க அதிக வாய்ப்புண்டு.

    4. குடும்பஸ்தானாதிபதி லக்கினத்தில் இருந்து கொண்டு 5,7,9 ஆம் இடங்களைப் பார்ப்பது ஒன்றுதான் அந்த இடத்து தோஷங்களை ஓரளவு குறைக்க உதவியுள்ளது. குடும்பஸ்தானத்தை, சனியானவர் விரையஸ்தானத்தில் இருந்து பார்ப்பதால், அவரது தசையில் கணவரைப் பிரிந்திருப்பார். மாங்கல்ய ஸ்தானாதிபதி ஆறில் பாபிகளுடன் சேர்ந்து மறைந்துவிட்டார். சயனபோக ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்ந்த சனியும் குடும்ப வாழ்க்கை குலைந்ததற்கு ஒரு காரணம்.

    ReplyDelete
  4. 1. லக்னாதிபதி சனி 12ல் மறைவு கேதுவுடன் ஆனால் ஆட்சி. லக்னத்தில் குரு. லக்னத்திற்கு சுக்ரன் பார்வை. நல்ல தோற்றமுடையவர். லக்னத்தில் 27 பரல்.

    2. 2ம் அதிபதி மற்றும் தனகாரகன் குரு அந்த வீட்டிற்கு 12ல். 2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சனியின் 3ம் பார்வை.

    3. 5ம் வீட்டில் செவ்வாய். 5ம் அதிபதி புதன் 6ல் சூரியனுடன் அஸ்தமனம். 5ம் வீடு 6ம் வீட்டிற்கு உரிய புதன் சந்திரன் பரிவர்த்தனை.

    4. 7ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்ரன். 7ம் வீட்டிற்கு குரு, செவ்வாய் பார்வை. 7ம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல். 7ம் வீட்டில் 23 பரல். திருமண வாழ்க்கைக்கு கொடுப்பினை இல்லை.

    ReplyDelete
  5. Ayya,

    Please find my answers:

    Lagna: Kumba lagna ladies are heroines. So she must beautiful person. First reason is Guru(2nd and 11th owners) is sitting in lagna. Second reason is Sukran(Yogakaran) is aspecting as well. Overall she will be having good standing power.

    Second House: She must not have money problem, because Guru(Owner for money) is owner for that house. But family life is not that great. Because second house owner(Guru) sitting in 12th house from his second house. Complete virayam.

    Fifth House: She will have more than female babies as kids. The reason is Guru is aspecting 5, 7 & 9 from lagna. Because Guru is karakan for kids.

    7th House: She must be married, because Yogakaran(Sukran) sitting in 7th house and aspected by Guru. Another reason for marriage is Chevvai(9th house- Lucky house owner) aspecting his own house. But husband must be expired due to 7th house owner Suriyan sitting in 12th house(Virayam) from this 7th house.Shani is 12th house will affect ayana, sayana related stuff.

    Best Regards,
    Trichy Ravi

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    லக்கினத்தில் குரு இருப்பதால் நீண்ட நல்ல ஜீவன வசதி உள்ளவராக இருப்பார்.

    2ம் வீட்டு அதிபதி குரு லக்கினத்தில் இருப்பதால், அந்த வீட்டை சனியும் பார்க்கிறார். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.

    5இல் சந்திரன் இருப்பதால் புத்திர பாக்யம் உண்டு நல்ல தோற்றம் உடையவர்.

    7 ல் சுக்கிரன் லக்கினத்தை பார்பதால்,குரு லக்கினத்தில் இருப்பதால் திருமணம் நடந்திருக்கும்

    ஏழாம் வீடதிபதி 6ல் அஷ்டமாதிபதியுடன் சேர்க்கை,சனியும் பார்க்கிறார்.

    மு.சாந்தி.

    ReplyDelete
  7. Dear Sir,

    1. She is beautiful. sukran in 7th, guru in lagna and aspected to moon.

    2. She is wealthy. 2nd lord guru in lagna, 11th lord in lagna.
    She had family. she married. Sukran aspect guru.
    3. 5th lord in 6th, 6th lord in 5th. parivarthan yoga. but 6th lord in parivarthan yoga is not good. Hence she may not have children. even if she has the child will have some decease or some defects in body.
    4. 7th lord in 6th. with Ragu. 8th lord also in 6th. Hence Her husband may be died or seperated. She has viprateeta raja yoga. So she might have got enough wealth after her husband death.
    7th lord is seen by sani with kethu. so it is the cause for the death of her husband.
    5. She get spiritually elevation due to sani and kethu in 12th place. and get moksha in this life after death.

    Thanking you Sir,

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய ஐயா,

    1.கும்ப லக்னம், லக்னத்தில் குரு 7ல் சுக்ரன் இருந்து லக்னத்தை பார்க்கிறார் ஜாதகி அழகாக இருப்பார் நல்ல பண்புகள் உள்ளவர். ஆனால் லக்னாதிபதி சனி 12ல் மறைவு கேதுவுடன் கூட்டணி இந்த அமைப்பினால் ஜாதகியின் வாழ்க்கை போராட்டமகாவே இருக்கும். இருப்பினும் லக்னத்தில் உள்ள குரு அவருக்கு எந்த சூழ்நிலையிலும் தாக்குப்பிடிக்கும் சக்தியை தருவார்.
    2.லக்னத்தில் உள்ள குருவும் 7ல் உள்ள பாக்கியாதிபதி சுக்ரனும் உரிய நேரத்தில் அவருக்கு திருமணத்தை நடத்திவைத்தார். ஆனால் 7, 8 க்கு உடையவன் (சூரியன்&புதன்) 6ஆம் வீட்டில் உடன் ராகுவின் கூட்டணி அதற்கு சனி பார்வை. திருமண வாழ்க்கைக்கு மோசமான அமைப்பு. இன்னுமொரு எதிரான அமைப்பு களத்திரகாரகன் சுக்ரன்(பகைவீடு) ஏழில் அதற்கு செவ்வாய் பார்வை இதனால் ஜாதகி கணவனை இழந்தவர்.
    3. 2,11 க்குடையவன் லக்னத்தில் அதனால் குடும்பம் அமைந்தது. ஆனாலும் 2ஆம் வீட்டிற்கு சனிப் பார்வை. அதனால் நிலைக்கவில்லை. லக்னத்தில் குருவும் 7ல் உள்ள சுக்ரனும் அவரை வசதியாக வைத்திருப்பார்.
    4. 5,6 க்குடையர் (bad)பரிவர்த்தனை இருப்பினும் 5ம் வீடு, 9ம் வீடு, சந்திரனையும் குரு தன் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் ஜாதகிக்கு குழந்தை பிறந்து இருக்கும்.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 29 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 28.07.1962 அன்று பிறந்த இந்த ஜாதகிக்கு

    1. கும்ப லக்கினாதிபதி சனி 12ல் ஆட்சி பெற்று பலமாக (விமல யோகம்) இருப்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு.

    2. குடும்ப ஸ்தான அதிபதியும் லாபாதிபதியுமான குரு லக்கினத்தில் இருப்பதாலும், செவ்வாய் நாலில் அமர்ந்து லாபஸ்தானத்தைப் பார்ப்பதாலும் வீடு, வாசல், சொத்து, சுகம் போன்ற வசதிகளுக்கு குறைவு இல்லை.

    3. புத்திர ஸ்தானத்தில் உள்ள சந்திரன் குரு பார்வை பெற்று இருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு.

    4. ஒன்பதாம் வீட்டு அதிபதியும், களத்திர காரகனுமான சுக்கிரன் ஏழில் குருவுக்கு சம சப்தமத்தில் இருந்து குருவைப் பார்ப்பதால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை உண்டு.

    ReplyDelete
  10. 1.கும்ப லக்னம். லக்னத்தில் குரு, லக்னாதிபதி சனி 12ல் விரையத்தில் உடன் கேது. வாழ்கை விரையமாகி இருக்கும்.

    2. குடும்பதிற்கு 2ம் வீடு,அதிபதி 2ம் இடத்திற்கு 12ல் இருந்தும்,களத்திரகாரன் சுக்கிரன் 7ல் இருந்து லக்னதினை பார்பதால் திருமணம் நடந்து இருக்கும்.
    7ம் அதிபதி 7க்கு 12ல் இருப்பதால் (விரையத்தில்), 7க்கு 8ம் வீடு 2ம் வீடு.அதிபதி நீச்சம் இல்லை. அயன சயன போக பாவதில் சனி உள்ளது. கணவருடன் பிரச்சனைகள் வந்திருக்கும். பிரிந்திருப்பர்
    அதனால் குடும்பம் இல்லை.

    4. 5ம் வீட்டில் ச‌ந்திரன், 5ம் வீட்டை குரு பார்தாலும் 5ம் விடு பாப கத்தாரி யோகத்தில் இருப்பதாலும் 5ம் வீட்டதிபதி 6ல் இருப்பதாலும் குழந்தை பாக்கியம் இல்லை.

    5. 7ம் வீட்டில் சுக்கிரன் 7ம் வீட்டதிபதி சூரியன் 6ல் கணவனே எதிரி ஆகி இருப்பார்

    ReplyDelete
  11. ஒன்றில்- சனி வீட்டில் குரு- நல்ல நேர்மையான பன்பான ஜாதகர், லகினாதிபதி ஆட்சியானாலும் லக்கினத்திற்கு பணிரண்டில் மறைவு. அவர் / அவரின் நான் எடுபடாது.

    இரண்டாம் இடத்தான் குரு தனகாரகன் தனக்கு பணிரண்டில் மறைவு. அதுவும் சனியின் வீட்டில். - பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை

    ஐந்தாம் வீட்டின் புதன் ஆறில் சூரியனை முழுங்கிய இராகுவுடன் அதில் நண்பனாக இருக்கப்பெற்ற சந்திரன் பாபகர்த்தாரி யோகமுடன் குழந்தை பாக்கியத்தை கெடுத்தான்.

    ஏழாம் வீட்டின் சூரியன் இராகுவால் பாதிப்படைந்து அதற்க்கு பணிரண்டில் காணோம். அங்கு வந்த சுபமான வில்லன் சுக்க்ரன் பாவக காரக நாஸ்தி - திருமணம் நடைபெறாது / பெற்றாலும் வாழ்க்கை இல்லை.

    ReplyDelete
  12. லக்னத்தில் குரு:
    செல்வந்தர், நல்ல காரியங்கள் செய்யக்கூடியவர். நீண்ட ஆயுள் உடையவர்.
    ஐந்தில் சந்திரன். அழகானவர். அதிக பெண் குழந்தைகள் உடையவர்.
    சந்திரன் புதன் பரிவர்த்தனை. மிகவும் புத்திசாலி.
    ஏழில் சுக்கிரன். கணவனிடம் ஆசை உள்ளவள், நல்ல குணவதி, சொத்து
    சுகம் உள்ளவள்.
    அ.நடராஜன்

    ReplyDelete
  13. குரு லக்ணதில் உலதாள் அழகானவர்
    லக்நாதிபதி 12 இல் மரைந்தமயாலும்
    2 ஆம் அதிபதி 12 இல் மரைந்தமயாலும் குடும்ப ஸ்தானம் கெட்டு விட்டது . அதுடன் துஸ்கிரிதி யொகம் வேரு உள்ளது திருமனம் ஆனால் கனவனால் சந்தெகம் போன்ற தொல்லைகள் நெரும் .
    5ஆம் அதிபதி 6இல் மரைந்தாலும் குரு பார்பதாள் சற்றெ குரைந்து குழந்தை உண்டாக வாய்புல்லது.
    குரு பார்வை 7இலும் சுகிரன் 7இலும் உள்ளதாள் திருமனம் ணடைபெரும்.

    ReplyDelete
  14. Lagna: Kumba Lagna(Best lagna for female).Blessed Horoscope[Guru is placed in Lagna]. Also Yogakaran Venus Sees the lagna.

    2nd House: Person will richer having enough money to live and has good family since 2nd place owner-Jupiter[Authority of Money] is placed in lagna.

    5th house: Will have children since 5th place owner-Mercury is in parivarthana yoga with 6th place owner[Moon]. Also Jupiter[Authority for children] sees 5th place.

    7th house: Native will get married since Venus[Authority for Marriage] is placed in 7th position. 7th place owner-sun is placed in 12th position from it and is with Rahu.
    So Marriage life will have little difficulties.

    ReplyDelete
  15. ஐயா,
    1.2ஆம் வீட்டு அதிபதி லக்னத்தில்
    இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமணம் ஆகியிருக்கும். குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகள் இருக்கும்.2ஆம் வீட்டின் அதிபதியை சுக்ரன் பார்ப்பதால் நல்ல குடும்பம் அமைந்து இருக்கும். இருப்பைனும் ஏழாம் வீட்டின் அதிபதி 6ம் விட்டில் புதன் ராகுவுடன் கூட்டணியுடன் இருப்பதால் ஜாதகி கணவனை இழந்தவர்.
    குரு சந்திர யோகம் இருப்பதாலும் 10ம் வீட்டின் அதிபதி 4ல் இருப்பதால் ஜிவனத்திற்கு குறை இருக்காது.

    ReplyDelete
  16. கும்ப லக்ன ஜாதகி, லக்னத்தில் குரு. ஆனால் லக்னாதிபதி கேதுவுடன் 12ல் மறைந்துள்ளார். இதனால் தாய்நாட்டை விட்டு வெகுதூரத்தில் வசிப்பவர். 7ல் சுக்கிரன் - அழகிய தோற்றம். 2ஆம் அதிபதி லக்னத்தில் - செல்வந்தர். ஆனால் 2ற்கு 12ல் மறைவு. ஆதலால் குடும்பத்தில் சச்சரவு. முன்கோபம் கொண்டவர். 7ல் யோககாரகன் சுக்கிரன் - குரு பார்வையுடன் இருப்பதால் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் 5, 6 ஆம் அதிபதிகளின் தைன்ய பரிவர்த்தனையால் குழந்தை பாக்கியம் இல்லை. 7ஆம் அதிபதி சூரியன் 6ல் ராகுவுடன் இருப்பதால் விவாகரத்து ஆகியிருக்கும்.

    ReplyDelete
  17. Respected Sir,

    My answer for our today's quiz no.29:-

    Date of birth: 28.07.1962
    Time of Birth: 7 to 8pm

    1. She is straight forward and humble.

    2. she doesn't have money problem.

    3. Married but widowhood (Loss of spouse)

    4. She has child.

    First house: Jupiter is sitting and getting venus aspect. Hence she is straight forward,humble and respected women.

    Second house: 2nd and 11th lord jupiter is sitting in lagna. The same lord for autority of finance. she has enough money. and educated.

    Seventh House: She married since venus is sitting and getting jupiter's aspect even though sun is sitting in sixth place. Jupiter dasha venus period or sun period she would have married and her husband died. This is due to the following two rules:-

    i) 2nd house is the life place for her husband since it is 8th house from 7th house and 2nd house authority is sitting 12th place of that house. Saturn also aspects 2nd house as its 3rd aspect. It's bad.

    ii) When 7th lord associated with 8th lord placed in 6th house and getting saturn's aspect, it is caused death of spouse.

    Fifth house: she would have child due to jupiter is in good position and aspecting 5th house and moon, mercury is in exchange position.

    With kind regards,
    Ravichandran M.


    ReplyDelete
  18. புதிர் 29

    வணக்கம்.
    01 இலக்கின பாவம்

    சிறப்பான கும்ப லக்கினம். அதில் குரு. மிக சிறப்பு. உயர்ந்த எண்ணங்கள், இருக்கும். லக்கினாதிபதி, 12ல் கேதுவுடன் இருப்பது குறை. போராட்டங்கள் மிகுந்து இருக்கும்.

    5ம் பாவம்
    5, 6ம் அதிபதிகள் பரிவர்த்தனை.. 5ம் அதிபதி 6ல் ராகுவுடன் சேர்வதால் நன்மைகள் அதிகம் இல்லை. குரு பார்பதால் தோஷம் விலகி சற்று தாமதமாய் புத்திர பாக்கியம் கிட்டும்.

    7ம் பாவம்

    7ல் காரகன் சுக்கிரன் நல்லதல்ல. குரு பார்பதால் தோஷம் விலகும். 7ம் அதிபதி சூரியன் 6ல். சனி பார்பதால் தாமதமாய் திருமண வாழ்வு அமையும். செவ்வாய் 7ஐ நான்காம் பார்வை. அது தர்ம கர்மாதிபதி யோகத்தையும் தருகிறது.

    குரு சந்திர யோகம், புத ஆதித்ய யோகம் உள்ளது.

    10ம் அதிபதி, 4ம் கேந்திரத்தில் இருந்து தன வீட்டை பார்வை. நல்ல வேலையில் இருப்பார்.

    ReplyDelete
  19. 7ல் சுக்கிரன் 7ம் இடத்திற்கு காரக பாவ நாசம் செய்வார். 7ம் அதிபதி சூரியன் 6ல் மறைந்து ராகுவுடன் இருப்பதால் திருமணத்தில் பல தடங்கல்கள் ஏற்பட்டு 7ம் இடத்திற்கு லக்கின குருவின் பார்வை காரணமாகத் திருமணம் நிச்சயம் நடந்திருக்கும். 5ல் தேய்பிறைச் சந்திரன் இருப்பதும் 5ம் அதிபதி 6ல் இரு பாப கிரகங்களுடன் இருப்பதும் புத்திர பிராப்தி தடை. குருவின் 5ம் பார்வை அதைச் சரி செய்து தாமதமாகவேனும் புத்திர பிராப்தி அமையும். 2ம் அதிபதி குரு லக்கினத்தில் இருப்பதால் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை அமையும். இந்த ஜாதகத்தில் உள்ள குறைகள் எத்தனை இருந்தாலும் அவை லக்கின குருவால் சரி செய்யப்படும். சரியோ தவறோ இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. Respected Sir,

    1.) Lagnatipathi sani aatchi petru 12-il valuvaga amarndhullar udan kethu. Lagnathil 2-m adhipathy guru avar avaradhu sondha veetirku 12-il.Kastangal niraindha penmanidhan.

    2.) 2-m veetirku 12-m adhipathyin paarvai. kudumbam sthanam badippu. Thirumanam nadaipetru irukkadhu appadi nadandhu irundhalum, kanavari parikoduthu iruppar kaaranam 7-m veetirku 8-m adhipathy avar veetirku 12-il amarvu.

    3.) 5m veetirku guru paarvai irundhalum, 6-m adhipathy 5il amarvu kulandhaigal illamal irukkum.

    4.) 7-m veetil sukran adhanal kaaragobhava naasthi and sooriyan lagnathirku 6-il and avar veetirku 12-il.

    Kudumba vaalkai illadha aanmiga maargathil ivargaladhu vaazhkai sendrirukkum.

    Thank You.

    ReplyDelete
  21. Sir,
    The native has no married life. Below are the reasons from the horoscope.
    1) Except sukran all planets are within raagu& ketu.
    2) Lagna lord and seventh lord are in their twelth houses. 2nd lord & 6th lord are also in 12th houses from their houses.
    3) Seventh house is aspected by mars.
    4) 7th lord is associated with 8th lord and raagu. Also aspected by saturn. The native may suffer from heart diseases and nerves problems.

    I wish, Guru in lagna and sukran in 7th house balanced the life with standing power.

    ReplyDelete
  22. 1. Laknam:
    Guru is in the laknam - Blessed person. Guru will give hand to her in difficulty. Since Guru looks at 5th, 7th and 9th house and clears any dosams and enhance the benefits.
    Laknathipathi is in 12th house. Her life will be useful to others more than to her. Kethu with Laknathipathi is not good. But since Laknathipathy owns the house the bad effects will be reduced.
    Yogakaraka Sukra is also looking at Laknam. That will reduce the effect of 2nd lord at 12the place of itself.
    She will be beautiful.
    Since 11th lord is in Laknam, Less effort and more gains.
    Since only sukra is only planet outside of Ragu and Kethu, it has partial kala sharba dosam, but Ragu is in front.

    2. 2nd House:
    2nd lord is 12th form its house and Sani also looks at it. But since sukara looks at 2nd lord she will have good family.

    3. 5th House:
    6th lord is in 5ht house and 5th house in papakarthari yogam. Also Chandra/Butha parivarthanai. Since it involves 6th house it is bad dhaithanya parivarthani. But Since Guru is looking at 5th house; she will have kids, mostly girls.
    Also 6th house and the planets in there are in subakarthari yogam.

    4. 7th House:
    7th lord is in 6th place (12th place from it) and is with Ragu is bad and Sani also looks at it. But it is in subakarthari yogam. 9th lord is in 7th house is good(even though it is enemy house) and Guru is also looks at 7th house. So will have good Marriage, but her husband will have lot of diseases.

    ReplyDelete
  23. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    quiz 29க்குரிய விடை.
    1.கும்ப லக்னம்.மிதுனராசி.நல்ல தோற்றம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவர்.
    2.நல்ல பணவசதி உடையவர்
    3.திருமணம் ஆனவர்.பிரச்சனை உள்ள குடும்பம்.குழந்தைகள் உண்டு.
    4.கணவர் உறவு முறையில் அமைந்திருக்கும்.

    அ.கும்ப லக்னம்.லக்னாதிபதி 12ல் மறைவு.எனினும் லக்னத்தில் குரு 2 மற்றும் 11க்கு அதிபதியாகி அமர்ந்து 5,7,9 ஆகிய ஸ்தானங்களை தன் பார்வையில் வைத்திருப்பதுடன்,யோகாதிபதியான சுக்ரன் 4,9 க்குரியவனாகி 7ல் அமர்ந்துலக்னத்தை தன் பார்வையில் வைத்திருக்கிறார்.
    ஆ.இதனால் ஜாதகி நல்ல பணவசதி உடையவர். வாக்கு,குடும்ப ஸ்தானாதிபதி குரு சுயவர்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதால் நாவன்மை உடையவர்.

    இ.5மற்றும் 6 க்குரியவர்கள் பரிவர்த்தனை நல்லதல்ல‌,அத்துடன் 7ஆம் அதிபதி 6ல்மறைவு பெற்றிருப்பதும் கணவருடன் நல்லதொரு உறவினை தராது.

    ஈ.ஜாதகி குழந்தைகளிடமும் பிரச்சனை கொணடவர். எனினும் பெரிய குடும்பமாக இருக்கும்.
    விடையினை தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  24. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    அலசல் பாடம் no 29.
    லக்னம் : கும்பம் ..இந்த பெண்ணை மணம் முடிப்பவன் அதிர்ஷ்டசாலி.
    லக்னாதிபதி 12ல் இருந்தாலும் அவன் வீடு லக்னம் .இவன் .
    ஒருவனுக்கே மறைவு ஸ்தானத்தில் இருந்து விதி விலக்கு..ஆகவே . நல்ல உடல் கட்டுடன் உழப்பான நல்ல பெண்மணி.

    2மிடம் மீனம் அதிபதி குரு லக்னத்தில் .ஆக தனது வீட்டிற்க்கும் 12 +இருப்பும் 12 ஆகவே குடும்பம் அமையும் மேலும் லக்னாதிபதியாகிய சனி 3ம் பார்வை குடும்பத்தை பார்கிறான் அதலால் சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும் குடும்பம் உண்டு.

    5மிடம் மிதுனம் சந்திரன் -பாபகர்த்தாரி யோகத்தில் உட்கார்ந்து இருக்கான் அதாவது .4ம் வீடான ரிஷபத்தில் செவ்வாய் 6ம் வீடான கடகத்தில் ராகுவுடன் சூரியன் புதன் ஆகவே 5 மிடம் குழந்தை பாக்கியம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
    7 மிடம் களஷ்திரகாரகன் சுக்கிரன் அந்த வீட்டிலே கூடாரமடித்து இருக்கான் அதலால் திருமணம் உண்டு .மேலும் லக்னத்தில் இருந்து குரு பார்வை சிம்மத்தில் 7ம்வீட்டு அதிபதி சூரியன் தன வீட்டுக்கு 12 ல் ராகுவுடன் அதலால் இந்த பெண்ணின் அருமை தெரியாத ஆண் கணவனாக வந்து வைப்பான் ..
    மொத்தத்தில் திருமணம் உண்டு ,குடும்பம் உண்டு குழந்தை கிடையாது.. நல்ல கணவன் கிடையாது.(ராமர் போல )
    .

    ReplyDelete
  25. லக்னத்தில் குரு நல்ல அழகு செல்வம் ஆரோக்கியம். குரு கேந்தரத்தில் இருக்கிறார் ரகு 6ல் இருபது அஷ்டலக்ஷ்மி யோகம் செல்வத்திற்கு குறைவு இருக்காது. ஆனால் கேந்தரத்தில் குரு தனித்து இருக்கிறார். "அந்தணன் தனித்து இருந்தால் அவதிகள் அதிகம் உண்டு".வாழ்கை இவருக்கு போராட்டம் நிறைந்தகவே இருக்கும். லக்னதிபதி சனி 12ல் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தலும், 12ல் மறைவு மற்றும் விரயம் ஸ்தானம் ஆகையால் இதில் குறை இருக்க வாய்ப்பு உண்டு.

    2ம் இடம் குரு அதிபதி இவர் அதற்கு 12ல் மறைந்திருபதலும் சனியின் 3ம் இடம் பார்வை இருபதலும் குடும்பம் தனம் வாக்கு ஆகியவை இழக்க நேரிடலாம்.

    5ம் இடம் புதன் அதிபதி இவர் 6ல் மறைந்து விட்டார், அனல் 5ம் இடத்தை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இருக்கும். 9ம் இடம் பாக்கிய ஸ்தானம் இதை சனி குரு இருவரும் ஒரு சேர பார்வை உண்டு அதனால் நிச்சியம் இவருக்கு குழந்தை உண்டு அனால் ஆன் குழந்தைகள் இருக்க வாய்பு இல்லை. 5ம் இடத்தில சந்திரன், பெண் குழந்தைகள் இருக்கும். புத்திர பாக்கியம் சிறிது தாமதம் அடைந்திருக்கும்.

    7ம் விட்டின் அதிபதி சூரியன் 6ல் மறைந்து விட்டார், ஆனால் பாவ கிரகங்கள் ஆகிய சூரியன் ரகுவும் 6ல் மறைந்திருபது நன்மை பயக்கும் இவருக்கு எதிரிகள் கடன் தொல்லை அதிகம் இருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சூரியனும் புதனும் சேர்ந்து புதஆதித்யா யோகம் அமைந்தாலும் இவரின் அறிவு தேவையான நேரத்தில் பயன் பெறாது.7ம் விட்டில் சுக்கிரன் இருப்பதால் அவர் லக்னத்தை பார்பதலும் திருமணம் உண்டு. மேலும் குருவின் மற்றும் செவ்வாயின் பார்வை 7ம் வீட்டில் இருபதல் நிச்சியம் திருமணம் உண்டு. கும்ப லக்ன குனவதியாக இருப்பார்,ஆனால் சுக்கிரன் 7ம் இடத்தில் இருப்பதால் கூடா சேர்க்கை நடத்தையில் ஒழுக்கம் இல்லாமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
    8ம் இடம் சுத்தமாக இருப்பதாலும் அதற்கு எந்த தீய கிரகங்களின் பார்வை இல்லதிருபதல் என் எண்ணம் இவர் விதவை ஆக வைப்பு இல்லை என்றே எண்ணம் தோன்றுகிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com