மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.12.13

தென்கோடி தென்றல் தரும் ராகங்கள்

தென்கோடி தென்றல் தரும் ராகங்கள்

பக்தி மலர் 

 மாதங்களில் நான் மார்கழி என்றான் அந்த மாயக் கண்ணன். இன்று மார்கழி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. அந்தப் பரந்தாமனின் பகழை ஒரு பாடல் வடிவில் இன்று கொடுத்துள்ளேன். பாடலின் ஆக்கம் கவியரசர் கண்ணதாசன். பாடியவர் திரு.டி.எம்.செளந்தரராஜன். பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் 
----------------------------------------------------
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் 
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே 
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே - எங்கள் 
மதுசூதனன் புகழ் பாடுங்களே 

 (புல்லாங்குழல்) 

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் 
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே 
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் 
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே 

(புல்லாங்குழல்) 

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு 
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் 
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் 
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் 

 (புல்லாங்குழல்) 

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த 
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் 
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் 
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் 

(புல்லாங்குழல்) 
---------------------------------------------
பாடலின் காணொளி:
Our sincere thanks to the person who uploaded this song in the net! வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===============================================

9 comments:

karuppiah Sakthi said...

காரைக்குடி தென்றல் தரும் ஜோதிட ராகங்கள் சுகமானவை.

karuppiah Sakthi said...
This comment has been removed by a blog administrator.
Raja Murugan said...

அற்புதமான பாடல், மனதை மயக்கும் இசை -
என்னதான் தெரிந்த விஷயமாக இருந்தாலும், கேட்டதாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுத்துகொடுப்பதும், சொல்லுவதும் தான் மிக அருமையான விஷயம். நன்றி

வேப்பிலை said...

மூங்கில்களை கூட கெஞ்சும் காலம்
முன்னரே இருந்துள்ளது என தெரிகிறது

கொடுப்பவர் எல்லாம்
செய்பவர் அல்லர் அதனால்

அடுத்தவர் புகழை நாம் பாடுபவராக இல்லாது
அடுத்தவர் நம் புகழை பாடும் படி வாழ்வோம்

சே. குமார் said...

மனதை மயக்கும் பாடல்...
பகிர்வுக்கு நன்றி ஐயா...

Subbiah Veerappan said...

//////Blogger karuppiah Sakthi said...
காரைக்குடி தென்றல் தரும் ஜோதிட ராகங்கள் சுகமானவை./////

அப்படியா? நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது! ஏதோ சுகமாக இருந்தால் சரிதான். எனக்கும் மகிழ்ச்சிதான் மதுரைக்காரரே!

Subbiah Veerappan said...

/////Blogger Raja Murugan said...
அற்புதமான பாடல், மனதை மயக்கும் இசை -
என்னதான் தெரிந்த விஷயமாக இருந்தாலும், கேட்டதாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுத்துகொடுப்பதும், சொல்லுவதும் தான் மிக அருமையான விஷயம். நன்றி////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
மூங்கில்களை கூட கெஞ்சும் காலம்
முன்னரே இருந்துள்ளது என தெரிகிறது
கொடுப்பவர் எல்லாம்
செய்பவர் அல்லர் அதனால்
அடுத்தவர் புகழை நாம் பாடுபவராக இல்லாது
அடுத்தவர் நம் புகழை பாடும் படி வாழ்வோம்////

இறைவனையும், அவன் அவருளால் புகழ்பெற்றவர்களையும் பாடுவதில் தவறில்லை வேப்பிலையாரே! கதவைத் திறங்கள். காற்று வரட்டும்!
கதவை மூடிக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருக்காதீர்கள்!

Subbiah Veerappan said...

//////Blogger சே. குமார் said...
மனதை மயக்கும் பாடல்...
பகிர்வுக்கு நன்றி ஐயா...//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமார்!