மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.12.13

Short Story: சிறுகதை: இக்கட்டான சூழ்நிலை


 
Short Story: சிறுகதை: இக்கட்டான சூழ்நிலை

அப்பச்சி - My Father - சொன்ன கதைகள் - பகுதி 6

(எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஆறாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து
விரிவாக்கம் செய்து, எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம். மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் கதைகளில் ஒன்றை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்)

தலைப்பு: இக்கட்டான சூழ்நிலை!

இக்கட்டான சூழ்நிலை என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும்.செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் சிக்கலாக இருக்கும் சூழ்நிலை இக்கட்டான
சூழ்நிலையாகும். அதுபோல சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாத சூழ்நிலையும் இக்கட்டான சூழ்நிலைதான். ஆங்கிலத்தில் அந்த சூழ்நிலையைப் ‘பாட்டில்நெக் சிச்சுவேசன் (Bottle Neck Situation) என்பார்கள். கோலி சோடாவில் அதன் கழுத்தில் இருக்கும் கோலிக் குண்டு, உள்ளேயும் போகாமல் , வெளியேயும் வந்துவிடாமல், அதன் கழுத்திலேயே இருக்கும் அல்லவா அந்த நிலைமை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதுபோன்ற சூழ்நிலை ஒரு இளம் பெண்ணிற்கு ஏற்பட்டது.

என்ன சூழ்நிலை அது?

வாருங்கள் அதை இன்று பார்ப்போம்.

நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. செழிப்பான கிராமம் ஒன்றில் நமது கதையின் நாயகி வசித்துக்கொண்டிருந்தாள். அவள் பெயர் பூவாத்தாள். செடியில் இருந்து பறித்த பூவைப்போன்று அம்சமாக இருப்பாள். வயது 22. செல்வந்தர் வீட்டுப் பெண். வாழ்க்கைப்பட்டு, தற்சமயம் இருக்கும் கிராமத்து வீடும் செல்வந்தர் வீடுதான். அதை வீடு என்று சொல்ல முடியாது. அரண்மனை போன்ற பெரிய மாளிகை.

அவளுடைய மாமனார் பெரிய நாட்டு மருத்துவர். கோட்டா தொந்தரவு இல்லாத காலத்தில் படித்தவர். அனுபவம் மிக்கவர், கைராசிக்காரர்
என்று பெயர் பெற்றவர்.சுற்றியுள்ள எல்லா ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் அவர்தான் மருத்துவர். வேறு ஆள் கிடையாது.அறுவை சிகிச்சையைத் தவிர
மற்ற எல்லாச் சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யக் கூடியவர். அனுபவம் மிக்கவர். வயது 50.

அத்துடன் 50 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்திற்கு சென்றால்தான் வேறு வைத்தியர்கள் கிடைப்பார்கள். மண் ரோடுகள், வாகன வசதிகள்
இல்லாமல், எங்கே சென்றாலும் மாட்டு வண்டிகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

அறிமுகத்தைக் கொடுத்து விட்டேன். இப்போது கதைக்குப் போவோம்

                                  **************************************

பூவாத்தாளுக்குத் தொடையில் பெரிய கட்டி. அது வீங்கி எழுமிச்சம்பழ அளவிற்குப் பெரிதாகி, பழுத்து உடையும் நிலையில் இருக்கிறது. நான்கு
நாட்களாகத் தாங்க முடியாத வலி!.

கணவன் வேறு ஊரில் இல்லை! தனியாக அமர்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்த அவளுடைய தோழி, விசனத்திற்குக் காரணம் கேட்க விவரத்தைச் சொன்னதோடு, தன்னுடைய சேலையை முழங்கால் வரை விலக்கி, அவளுக்கு, அந்தக் கட்டியைக் காட்டவும் செய்தாள்.

தோழி அரண்டு விட்டாள், "என்னடி இவ்வளவு பெரிதாக வீங்கி, உடையும் நிலையில் உள்ளது. சுத்த பைத்தியக் காரியாக இருக்கியே – உன்
மாமனாரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? சொல்லாம அழுதுக்கிட்டிருந்தா சுகமாயிருமா?"

"எப்படியடி காட்டுவேன், அவர் என் மாமனார் ஆயிற்றே?"

"மாமனார் என்று ஏன் நினைக்கிறாய்? வைத்தியர் என்று நினைத்துக் காட்டு! எங்களுக்கு வந்தால் நாங்கள் காட்டி வைத்தியம் பார்த்துக்கொள்ள
மாட்டோமா?"

“நீங்களெல்லாம் காட்டி, மருந்தை வாங்கிக்கொண்டு போய்விடுவீர்கள். நான் வீட்டோடு அல்லவா இருக்கிறேன். அவர் எத்தனை நல்லவராக இருந்தாலும்,  எனக்கு மனசு என்று ஒன்று இருக்கிறதே - எப்படிக் காட்ட முடியும்? காட்டிவிட்டு அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு குறுகுறுக்குமே? அதோடு இந்த கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய பார்வையை எப்படித் தாங்குவேன். உனக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் என்ன செய்வாய்? அதற்கு முதலில் பதில் சொல்லடி!"

தோழி மெளனமாகி விட்டாள்.

அழுதுகொண்டே தொடர்ந்து  பூவாத்தாள் சொன்னாள்:

"எல்லாம் என் தலை எழுத்து. இப்படி ஒரு இக்கட்டு. காட்டினால் மானம் போகும்; காட்டாவிட்டால் பிராணன் போகும்!"

உண்மைதான். இதுதான் இக்கட்டான சூழ்நிலை என்பது. இக்கட்டான சூழ்நிலைக்கு, இந்தக் கதையைத்தான் எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.
இதை அவர்கள் என்னிடம் சொல்லியதில்லை. மற்றவர்களிடம் சொல்லியபோது நான் கேட்டதாகும். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன்

                          ************************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

14 comments:

Kalai Rajan said...

Ayya
this story was already published by you in classroom

ravichandran said...

Respected Sir,

Happy morning... Good story. My suggestion she would have come for treatment in another form.

With kind regards,
Ravichandran M.

Raja Murugan said...

அய்யா வணக்கம், தங்கள் சிறுகதை அருமை.

வேப்பிலை said...

உள்ளே வைத்தால் துக்கம் ..
வெளியே சொன்னால் வெட்கம்..

எதுவும் தெரியாத உயர் அதிகாரிக்கு
எடுத்து சொல்ல மெத்த படித்த உதவியாளர்

அவருக்கு ஊதியமும் (மாமூலும்)
இவருக்கு ஊதியமும் குறைவு மற்றதும் குறைவு

உள்ளே வைத்தால் துக்கம் ..
வெளியே சொன்னால் வெட்கம்..சே. குமார் said...

சிறுகதை... சிறந்த கதை...

Govindasamy said...

catch 22 situation!

very funny and thoughtful at the same time.

ayyaa sowkkiyamaa?

பெரியவாதாசன் said...

இந்தப் பண்பு எல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முந்தையது. இப்போதெல்லாம் கிழிந்த ஜீன்சும் நெருக்கும் மேல்சட்டையும் தான் அணிகிறார்கள் நகரப் பெண்களில் பலர். அழகான கதை. ஆனால் obsolete. இனி நடந்தால் மகிழ்வது நானே.

பெரியவாதாசன்
புவனேஸ்வர்

Subbiah Veerappan said...

/////Blogger Kalai Rajan said...
Ayya
this story was already published by you in classroom////

அப்போது ஜோதிடப் பாடத்திற்கு உதாரணப்படுத்திச் சொன்னதைக் கதையாகக் கொடுத்திருக்கிறேன். உங்களின் நினைவாற்றலுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Good story. My suggestion she would have come for treatment in another form.
With kind regards,
Ravichandran M./////

அந்தக் காலத்து இளம் பெண்ணின் மனப் போராட்டத் சொல்வதுதான் கதை! அவளுக்கு முடிவில் என்ன ஆயிற்று என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிட்டேன். உங்களின் யோசனைக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Raja Murugan said...
அய்யா வணக்கம், தங்கள் சிறுகதை அருமை./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
உள்ளே வைத்தால் துக்கம் ..
வெளியே சொன்னால் வெட்கம்..
எதுவும் தெரியாத உயர் அதிகாரிக்கு
எடுத்து சொல்ல மெத்த படித்த உதவியாளர்
அவருக்கு ஊதியமும் (மாமூலும்)
இவருக்கு ஊதியமும் குறைவு மற்றதும் குறைவு
உள்ளே வைத்தால் துக்கம் ..
வெளியே சொன்னால் வெட்கம்../////

வாழ்க்கை சிலசமயம் அப்படித்தான் அமைகிறது! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger சே. குமார் said...
சிறுகதை... சிறந்த கதை.../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Govindasamy said...
catch 22 situation!
very funny and thoughtful at the same time.
ayyaa sowkkiyamaa?/////

நீங்கள் இத்தனை பேர்கள் தொடரும்போது எனது செளக்கியத்திற்கு என்ன குறை? நன்றாக இருக்கிறேன். அத்துடன் நன்றியுடன் இருக்கிறேன். உங்களின்மேல் பியத்துடன் இருக்கிறேன்!

Subbiah Veerappan said...

////Blogger பெரியவாதாசன் said...
இந்தப் பண்பு எல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முந்தையது. இப்போதெல்லாம் கிழிந்த ஜீன்சும் நெருக்கும் மேல்சட்டையும் தான் அணிகிறார்கள் நகரப் பெண்களில் பலர். அழகான கதை. ஆனால் obsolete. இனி நடந்தால் மகிழ்வது நானே.
பெரியவாதாசன்
புவனேஸ்வர்/////

ஒட்டு மொத்தமாகச் சொல்ல முடியாது. இப்போதும் 10 சதவிகிதப் பெண்கள் அப்படி (பழமை, பாராம்பரியம் மாற்றம் இல்லாமல்) இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி புவன்!