Astrology: அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம். என்ன செய்யலாமென்று சொல்லுங்கள்!
Quiz No.31: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
தொடர் - பகுதி முப்பதியொன்று.
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். வித்தியாசமான பெண்ணின் ஜாதகம். அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================
Quiz No.31: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
தொடர் - பகுதி முப்பதியொன்று.
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். வித்தியாசமான பெண்ணின் ஜாதகம். அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================
ஆமாம், மென்மையானவர். நாம் ஏதாவது சொல்லி ....!!! ஏற்கனவே ஊடகங்கள் அவரை நிறைய காயப்படுத்தி விட்டன.
ReplyDeleteவிக்கியாண்டவர் சொல்வதைப் பார்ப்போம் (date/ POB as given in Wiki differ from popular records) :
http://en.wikipedia.org/wiki/Nayantara
(நயன்தாரா, நன்றாக இருங்கள்!)
நடிகை நயன்தாராவின் ஜாதகம்.
ReplyDeleteஜாதகத்தில் சனி, செவ்வாய் உச்சம், சூரியன் நீசபங்கம், குரு ஆட்சி. மிதுன லக்னம் லக்னத்திற்கு குருவின் பார்வை - அழகான தோற்றம். இரண்டாம் வீட்டின் மேல் செவ்வாய்+சனி பார்வை. அதிபதி 11ல் - தனயோகம். ஐந்தில் 7ஆம் அதிபதி சனி உச்சம். அதனால் நடிகை ஆனார். மக்களிடம் பிரபலம் ஆனார். 5ஆம் அதிபதி அதற்கு 2ல் (6ஆம் வீடு) லக்னாதிபதி+கேதுவுடன். 7ல் குரு ஆட்சி. ஆனால் சனி பார்வை. ஆகையால் திருமணம் தாமதம். நசவாம்சத்தில் செவ்வாய், புதன் சுக்கிரன் மற்றும் சூரியன் உச்சம். பலம் வாய்ந்த ஜாதகம். மேலும் பல வெற்றிகள் பெறுவார்.
This comment has been removed by a blog administrator.
Deleteமதிப்பிற்குற்ய ஐயா,
ReplyDelete1.லக்கனத்தை குரு பார்பதால் அழகான தோற்றம் உடையவர்.
2.2 ஆம் அதிபதி 11ல்,சிறுவயது சுக்கிரன் நல்ல பேச்சி திறமை இருக்கும்.
3.களத்திரகாரன் 6ல் மறைதாலும் , 7 ஆம் வீட்டு அதிபதி 7ல் இருப்பதால் திருமணம் நடைபெற்று இருக்கும்,
4.சனி உச்சம்,நீச்சமான சூரியன் நவாம்ச்த்தில் உச்சம்,குரு 7ல் ஆட்சி
அதனால் குழந்தை இருக்கும்.
5. இனி வரும் ராகு வாழ்கையில் பாதிப்பு ஏற்படுத்தும்.
மு.சாந்தி
முதல் முயற்சி ...
ReplyDelete2க்கு அதிபதி சந்திரன் 11-ல் ,குரு 5-ஆம் பார்வையுடன் குடும்பம்,பேச்சினால் ஆதாயம் உண்டு.
5க்கு அதிபதி சுக்கிரன் 6-ல் (ரோகஸ்தானம்), 5-ல் சூரியன்,சனி சேர்க்கை (குழந்தை பேறில் தாமதம் அல்லது குழந்தையின்மை)
7-க்கு அதிபதி 7-இல் (ஆட்சி)பலத்துடன்,
8-இல் 8-க்கு அதிபதி செவ்வாய்(உச்சம்)பலத்துடன் இருந்தாலும்
6,8-இல் தீயகிரகங்கள் இருப்பதால் 7-ஆம் விடு சுபராக இருப்பினும் திருமண தடை அல்லது தாமதம் ஏற்படும்.
Dear Sir,
ReplyDelete1. Lagna lord mercury in 6th along with kethu. Guru aspecting lagna. Hence she get some permanent decease in her life and she live due to guru aspects her. Also exalted saturn aspects lagna. Sun in neecha.
2.Second lord chandran is in 11th place aspected by neecha sun, and exalted saturn. She got married and got family. Guru aspects chandran. So guru gave her family life.
3. fifth house is occupied by neecha sun. so her father died.5th lord in 6th along with kethu. Hence she dont have children.
4.7th lord in 7th place, aspected by exalted sani, and hemmed between mars and kethu. 7th place is affected by malefics. Since sukran is affected and placed in 6th, she cannot enjoy the normal sexual life. She may be divorced.4th place mandhi also takes part to spoil the happy life. 12th place ragu also spoil the ayana sayana bogyam.
Hence due to the permanent decease in her body she did not have the happy marriage life. 8th lord sani is exalted also 8th place mars is exalted. She live for long life.
QUIZ NO: 31
ReplyDeleteவணக்கம்.
8th November 1984, பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகி, மிதுன லக்கினம் வர்கோத்தமம் அடைந்து, லக்கினாதிபதி புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்று ஜாதகிக்கு நல்ல கல்வியை தந்துள்ளார்.
ராசியில் 6ம் வீட்டில் பலவீனமான சுக்கிரன் (3 பரல்) கேதுவுடன் கிரக யுத்தத்தில் இருந்தாலும், நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ஜாதகிக்கு 25 வயதில் திருமணம் நடத்தி வைத்தார்.
7ம் வீட்டு (19 பரல்) அதிபதி குரு, 7ல் அமர்ந்து பாபகர்தாரி தோஷம் அடைந்து, நோய், சிரமம், விரயங்கள் எற்படுத்தி மிகுந்த கஷ்ட்டங்களை ஜாதகிக்கு கொடுத்துள்ளதை பார்க்கும்பொழுது மிகவும் வேதனையாகயுள்ளது.
உச்சம் பெற்ற 8ம் வீட்டு செவ்வாயின் 7ம் பார்வை , 2ம் வீட்டின் மீது பார்ப்பதால் , குடும்ப வாழ்க்கை போராட்டமாக அமைந்தது. கணவன் உறவு சுமுகமாக இல்லாமல் போய்விட்டது. வர்க்கோத்திரம் அடைந்த 8ம் வீட்டு செவ்வாய் நவாம்சத்திலும் உச்சம் பெற்று ஜாதகிக்கு ஆயுள் குறைவு, நோய் உண்டாக்கினார்.
11ம் வீட்டிற்க்கும் (34 பரல்) அவர் அதிபதியாதலால் செல்வத்திற்க்கு குறைவில்லாமல் செய்துவிட்டார்.
மேலும், 12ல் ராகு இருப்பதால், மனபோராட்டம் நிறைந்து, மன அமைதியை இழந்து துன்பத்தை வழங்கினார்.
5ம் அதிபதி சுக்கிரன் 6ல் இருப்பதாலும், காரகன் குரு பாபகர்தாரி தோஷத்தில் இருப்பதாலும், பாக்கியதிபதி சனி 5ல் சூரியனுடன் அஸ்த்ங்கம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாமல் செய்துவிட்டார்.
இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கடினமாக இருப்பதால், அதற்க்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது. இறைவன் கருனை மிக்கவர்.
ஜாதகி செல்வம் மிகுந்தவர் ஆதலால்,தினமும் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யலாம் (நோய்கள் நீங்கும்). தினமும் கோவில்களுக்கு சென்று அன்னதானம் செய்யலாம் (அயுள் பலம் கிடைக்கும்). முதியோர் இல்லத்திற்க்கு சென்று உதவி செய்யலாம் (மன நிம்மதி கிடைக்கும்)
சந்திரசேகரன் சூரியநாராயணன்
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் தாமத திருமண ஜாதகம்.
ReplyDeleteராசி மற்றும் நவம்ச சக்கரத்தில் பல கிரகங்கள் உச்சமாகவும் சுய வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்த போதிலும்
புனர்பு தோஷம் மற்றும் 7ஆம் அதிபதி குரு மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் இருவரும் 2/12 இல் உள்ளார்கள்.
லக்கனதிபதி புதன் 6இல் மறைவு
சுக்கிரன் 6இல் மறைவு
இரண்டாம் அதிபதி (சந்திரன் ) செவ்வாய் மற்றும் சனியின் பார்வையில் உள்ளார்.
பெண்மணி அஸ்வினி நட்சத்திரம். அதிபதி கேது 6-ம் வீட்டில். லக்னாதிபதி புதன் 6-ம் வீட்டில். ராசி அதிபதி செவ்வாய் 8-ம் வீட்டில். விபரீத ராஜா யோகத்தில். 12-ம் அதிபதி சுக்ரன் 6-ம் வீட்டில்.
ReplyDelete(1) லக்னாதிபதி புதன் 6-ம் வீட்டில். 7-ம் வீட்டிலிருந்து குரு (ஆட்சி) பார்வை லக்னததிற்கு. பக்தி மிகுந்தவர். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்.
(2) இரண்டாம் வீட்டில் கிரகங்கள் இல்லை. அதிபதி சந்திரன் கேது சாரத்தில். இரண்டாம் வீட்டிற்கு உச்ச சனி மற்றும் உச்ச செவ்வாய் பார்வை. வறுமை வாட்டி எடுக்கும்.சந்திரன் 11-ம் வீட்டில் இருப்பதால் சில காலங்கள் ஓரளவு பணம் புரளும்.குடும்ப ஸ்தானமும் ஆக இருப்பதால் குடும்பம் இருந்தும் இல்லாத நிலை ஏற்படும்.
(3) ஐந்தாம் வீடு அதிபதி சுக்ரன் ஆறாம் வீட்டில். ஐந்தாம் வீட்டில் உச்ச சனி மற்றும் நீச சூரியன். சனி அஸ்தமனம். அதனால் நீச பங்கம் வேலை செய்யாது. குழந்தை இல்லை.
(4) குரு இருக்கும் வீடு கெடும். 7-ம் வீட்டில் குரு ஆட்சி. முழுதாக கேட்டிருக்கும். காரகன் சுக்ரன் அதற்கு 12-ம் வீட்டில் (6-ம் வீடு). சனி பார்வை வேறு. திருமணம் இல்லை.
மொத்தத்தில் சன்யாசினியாக போயிருப்பார்.
5-ம் இடத்தில் சூரியன் + சனி, 5 க்கு உடையவன் + லக்னாதிபதி 6-ல் மறைவு. 5- வீட்டுக்கு சுபர் பார்வையும்(குரு) இல்லை. புத்திர தோஷம் கடுமையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லை.
ReplyDelete7-ம் இடத்திற்க்கு இரு புறமும் தீய கிரகங்கள் , ஆனாலும் 7-ம் அதிபதி ஆட்சி. சுமாரான கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு.
ஜாதகர் மிதுன லக்கினக்காரர் 7 ல் குரு அழகானவர். களத்திரகாரகன் கேதுவுடன் 6 ல் உள்ளார் தாமதத் திருமணம். 2 வீட்டு அதிபதி 11 ல் 3 ,8 மிட சூரியன்,சனி 5 ல் இருந்து பார்க்கிறார்கள்.6 ம் இடத்து அதிபதி 8 ல் இருந்து 2 மிடத்தை பர்ப்பதால் குடும்ப வாழ்க்கை இல்லை.அதனால் குழந்தைகளும் இல்லை.VVR.RAJU
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteகொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் தாமத திருமண ஜாதகம்.& பிரசனைகள் நிறந்த வாழ்க்கை
ReplyDeleteராசி மற்றும் நவம்ச சக்கரத்தில் பல கிரகங்கள் உச்சமாகவும் சுய வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்த போதிலும்
புனர்பு தோஷம் மற்றும் 7ஆம் அதிபதி குரு மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் இருவரும் 2/12 இல் உள்ளார்கள்.
லக்கனதிபதி புதன் 6இல் மறைவு
சுக்கிரன் 6இல் மறைவு
இரண்டாம் அதிபதி (சந்திரன் ) செவ்வாய் மற்றும் சனியின் பார்வையில் உள்ளார்.6ஆம் அதிபதி இன் பார்வை மிகவும் மோசமானது.
அஸ்தமனமான பாக்கியாதிபதி சனியின் பார்வையில் குடும்ப அதிபதி சந்திரன் உள்ளார்
நானும் பேசாமல் வருகைப் பதிவு மட்டும் போட்டு விட்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் - பகுதி 31 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 7.11.1984இல் பிறந்த இந்த மிதுன லக்ன ஜாதகிக்கு,
லக்னாதிபதி ஆறில் களத்திர காரகன் சுக்கிரனுடன் மறைந்து விட்டதால், இந்த பெண்ணுக்கு திருமண வாழ்க்கை இருக்காது. கூடவே கேதுவும் சேர்ந்து விட்டதாலும், ஆட்சி பெற்ற குரு ஏழில் இருந்து லக்னத்தைப் பார்ப்பதாலும் தீவிரமான ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.
குடும்ப ஸ்தான அதிபதி லாப ஸ்தானத்தில் இருந்தாலும், சனியின் பார்வையில் இருப்பதால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. புத்திர ஸ்தானத்தில் சனி இருப்பது புத்திர தோஷத்தைக் குறிக்கிறது. அதனால் திருமண வாழ்க்கை இல்லை என்பதை உறுதி செய்கிறது. ஆனால் தன ஸ்தான அதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பது வசதியான வாழ்க்கையைக் குறிக்கிறது.
ஐந்தாம் இடத்தில் பாக்ய ஸ்தான அதிபதி சனி உச்சமாகி, உச்சம் பெற்ற செவ்வாய்க்கு பரஸ்பர கேந்திரத்தில் இருப்பதால் ஆள், அம்பு, படை என மற்ற சௌபாக்கியங்களுக்கு குறைவிருக்காது. தைர்ய, வீர்ய ஸ்தான அதிபதி சூரியன் ஐந்தில் நீச பங்கம் பெற்று இருப்பதும் ஒரு காரணம்.
பத்தாம் அதிபதி ஏழில் இருப்பதால் பொதுத் தொண்டு செய்வதில் பிரபலமாக விளங்குவார்.
குரு 7ல் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதால் பெண் அழகானவர் என்று சொல்லலாம். (எல்லாப் பெண்களுமே அவரவர்களைப் பொருத்த வரையில் அழகுதான் என்பது வேறு விஷயம்).
ReplyDeleteஇந்தப் பெண்ணிற்கு திருமணமாகி கணவர், குழந்தை என்று மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை என்று எப்படி பார்த்தாலும் சொல்ல முடியவில்லை. 7ல் சுப கிரகமானாலும், கேந்திராதிபதி, பாதகாதிபதியான் குரு. திருமணம் நடக்க விட மாட்டார். களத்திரகாரகன் சுக்கிரன் கேதுவுடன் 6ல் மறைந்து விட்டதும் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணம். உச்ச செவ்வாய் குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தைப் பார்க்கிறார். திருமணம் செய்யாமல் தன் வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்பவராகவோ, தொண்டூழிய அடைப்படையில் அனாதை இல்லம், முதியோர் இல்லம் இவற்றைப் பராமரிப்பவராகவோ அல்லது அங்கு வேலை செய்பவராகவோ இருப்பார். சந்யாசினியாக துறவு வாழ்க்கை வாழ்பவராகக் கூட இருக்கலாம். 9 கிரகங்கள், 12 ராசிகள் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இதற்கு மேல் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
ஜாதகியின் இரண்டாம் இடத்திற்கும்,இரண்டாம் அதிபதியான சந்திரனுக்கும் 6ம் அதிபதி செவ்வாய்,8ம் அதிபதி சனி ஆகியவர்களின் பார்வை. குருவின் பார்வை இருந்தாலும் பலன் இல்லை. குடும்ப வாழ்வு வேண்டாம் என்று இருப்பார்.12ல் ராகு படுக்கை சுகம் இல்லாமல் ஆக்கிவிட்டது. அசுப கிரஹங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட சுக்கிரன் இதனை உறுதிசெய்கிறது.ஏழாம் இடமும் அசுப கிரஹங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது.ஐந்தாம் இடத்தில் சனி சூரியன் குழந்தை பாக்கியத்தை கெடுத்துவிட்டது.
ReplyDeleteஜாதகி சந்திரன் 11ல் அமர்ந்ததாலும், மிதுனலக்கினக்காரார் என்பதாலும் நிறைய
நட்பு வட்டத்தில் இருப்பார். அது சரியான நட்பாகவோ, சரியில்லாத நட்பாகவோ அமையலாம்.குரு பார்வை லக்கினத்திற்குக் கிடைப்பதால், நல்ல சகவாசங்கள் என்றே கொள்ளலாம்.
உச்சம் பெற்ற செவ்வாயால் மிகவும் உறுதியானவர், பிடிவாதக்காரர் என்று சொல்லுமளவுக்கு.
ஜாதகி வாழ்க்கையைத் துறந்து சன்னியாசம் பெற்று வாழ்கிறார்.
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteலக்னத்திற்கு குரு பார்வை. லக்னாதிபதி புதன் 6ல் உச்சம் பெற்ற கேது(ஞானகாரகன்) கூட்டணி ஜாதகிக்கு ஆன்மீக ஞானம் மற்றும் ஈடுபாடு அதிகம் உடையவர். உடன் சுக்ரன் கூட்டணி அதனால் ஜாதகி திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லாதவர் சுக்ரனுடன் இருக்கும் கேது அந்த ஞானத்தை கொடுத்து விட்டார். மேலும், ஏழாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதியும் அவரே.
இரண்டாம் வீட்டிற்கு செவ்வாய் மற்றும் சனியின் பார்வை குடும்பம் அமையாது.
10ம் அதிபதி 7ல் ஆட்சி ஜாதகி ஆன்மீகம் சம்மந்தமான போதனைகளில் ஈடுபடுவார்.Will also be a teaching professional
5ல் சூரியன்+சனி நீசபங்க ராஜயோகம். பூர்வ புண்ணிய பலம் உடையவர் will have more faith in god. 5க்குடைய சுக்ரன் 6ல் குழந்தை பாக்கியம் இல்லை as obvious.
The Date Of Birth of the native is 8th November 1984 & time 8 PM approx. She is enjoying her life in spiritual way of living.
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDelete1984 நான் பிறந்த வருடம். நான் பிறந்தது December இவர் பிறந்தது November 08.
1. சனி உச்சம்,
2. செவ்வாய் உச்சம்,
3. Kedhu உச்சம்
4. Rahu உச்சம் (Rahu,kethu உச்சம் என்பது பற்றி பல கருத்துகள் உண்டு)
5. சூரியன் நீசபங்கம்.
6. குரு ஆட்சி.
தாங்கள் சொல்வதுபோல லக்னாதிபதி 6-இல் அமர்ந்து சீட்டு ஆடிக்கொண்டு இருக்கிறார். அவர் சுகிரனை வாயா ஒரு கை குறைது நீயும் வந்து கூட சேர்ந்து ஆடு என்று அமர்த்தி வைத்து இருக்கிறார். அவருக்கு ரம்மி சேர்ந்ததா இல்லயா என்று நாளை உங்கள் பதில் மூலம் தான் தெரியும்.
எனது அலசல்.
1.) புதன் 6-இல் அமர்வு, சுக்ரன் & சந்திரன் சம்பந்தம் lagnathirku இல்லை. ஜாதகி மிகவும் அழகாணவர் என்று சொல்ல முடியாது. அவருக்கு மிகுந்த நல்ல பண்புகள் இருக்கும். நேர்மயானவராக இருப்பார்.
2.) சந்திரன் 11-இல் அமர்வு, 11-ம் இடத்தை, குரு, செவ்வாய், சனி, சூரியன் பார்வை. லாபங்கள் மிக அதிகம். 2-ம் இடத்திற்கு உச்சம் பெற்ற சனி & செவ்வாய் பார்வை. புணர்பு தோஷம் & சுக்ரன் 6-இல் அமர்வால் திருமணம் நடந்து இருக்காது.
3.) இதுவரை திருமணம் நடந்து இருக்காது என்கிற பட்சத்தில் 5 & 7-ஐ அலசுவது ஏன்..?
பிரமாஹத்தி தோஷம் இருப்பதால் ஏதோ பறிகொடுத்தார் போல இருப்பார்.
நன்றி.
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteசுக்ரன் 6ல் மறைவு அதனால் தாமத திருமணம். 2ம் வீட்டின் அதிபதி சந்திரனை 7ல் உள்ள வலுவான குரு பார்கிறார்.அதனால் திருமணம் நிச்சயம் ஆகும் ஆனால் சற்று தாமதமாகும்.5ல் நீசபங்க ராஜயோகம் குழந்தைகள் பிறக்கும்.
லக்னாதிபதி புதன், உச்சம் பெற்ற கேது சேர்ந்து இருப்பதால் ஆன்மீக நாட்டம் அதிகம் உடையவர்.
Respected Sir
ReplyDeleteGood evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
Mithuna lagnum , Mesha rasi with Bharani star
YOGTHIPATHI – SATURN
BHATHAGAPATHI – MARS & SUN
PLANETARY POSITION:
1) GURU AT QUADRANT POSITION AND AT HIS OWN HOUSE- MOOLA TRIKONAM
2) Saturn and sun at trine position – 5th house
3) Both in Thula rasi – NESSA BANGA YOGUM.
4) VENUS AND MERCURY AT 6 TH HOUSE –BAD PLACEMENT ALONG WITH kethu
5) Mars owner of 6th and 11th house at 8th house and exalted.
6) Moon owner of second house at 11th house – house of gains and aspect by guru
7) Raghu at 12th house – house of losses.
LAGNUM:
1) Aspected by Guru but the lagnathipathi is at 6 th house – Moderately strong
She will be a beautiful and intelligent woman. But may have sufferings in life as the lagnathipathi is weak
2) Mercury and venus combination – she may be interested in fine arts
SECOND HOUSE:
1) Aspected by Mars .But the lord in good position. She will have all gains in life. But since it is Aspected by mars owner of sixth house she may not have good family life and may face losses.
SEVENTH HOUISE:
1) Occupied by guru owner of the house Aspected by saturn
Will have intelligent and good husband .But the marriage may be delayed as Venus is at 6 th house and 12/2 position to Guru – Break in family life is possible.
FIFTH HOUSE:
Aspected by moon.But occupied by Sun & Saturn
Will not have children or have adopted children
She may be a teacher by profession and settled abroad
Dr.Mohan, Brunei
ஐயா அவர்களுக்கு,
ReplyDelete1.2ம் அதிபதி சந்திரன் 11ல், ஆக வருமாணம் நன்றாக இருந்திருக்கும்.
2.5ல் சூரியன் நீச்சம், சனி உச்சம் & 5ம் அதிபதி 6ல் மறைவு, குழந்தை பாகியம் இல்லை. 5ல் சனி தத்து பிள்ளை யோகத்தை தருகிறது.
3.7ல் குரு தனித்து ஆச்சி பெற்று இருப்பதால் திருமண வாழ்க்கை தாமதாம். நடந்திருந்தால் அது பெரும் அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கும்.
4.8ல் செவ்வாய் உச்சம் 8ம் அதிபதியும் உச்சம் எனவெ கணவனை பிரிந்து வாழ்வார்.
இவண்,
தே.மகேந்திரன்,
உலிபுரம்.
சேலம் மாவட்டம்.
1. லக்னாதிபதி புதன் 6ம் வீட்டில், உடன் கேது உடன் 12ம் வீட்டுக்காரன் விரையாதிபதி போராட்டமான வாழ்கை
ReplyDelete2. 2ம் வீட்டுக்காரன் சந்திரன் 11 லாப வீட்டில், சனி சந்திரன் பார்வை, புனர்ப்பூ தோசம், தம்பதிக்குள் பிரச்சனை
3. 5ம் வீட்டில் சனி, (தத்துப்பிள்ளை யோகம்) சூரியன். 5ம் வீட்டுக்காரன் சுக்கிரன் 6ல் மறைவில் குழந்தய் பாக்கியம் இல்லை
4. 7ம் வீட்டு அதிபதி 7ல் ஆட்சி, களதிரகாரகன் சுக்கிரன் 7கு 12ல் மறைவில், கணவருடன் பிரச்சனை 7க்கு 8ம் அதிபதி சந்திரன் 11ல் புனர்ப்பூ தோசம்
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.31:
Date of birth of the given native is 08.11.1984. She has completed twenty nine years.
This is typical horoscope and Heading of this post makes lot of excitement and surprise.
1. She is beautiful and intelligent.
2. She is rich and educated.
3. She has not married.
4. She doesn't have child.
FIRST HOUSE: Midhuna lagna represents beautiful and intelligent naturally as well as Jupiter aspects.
SECOND HOUSE: Second lord is sitting in good position and getting dhana karaga's aspect. So she has money at the same time, this house and house lord gets Mars and Saturn aspects. Its too bad. So lot of trouble in her life.
SEVENTH HOUSE: This house and house authority is in baba kathri yoga and kalathira karaga is sitting twelfth place from this house. Saturn aspects this house as its third aspect. From Moon lakna also seventh place is affected. Hence, she is not married. Mars is in Eighth house. It is Kalathra or Mangalya dhosa.Eventhough Bhagyathipathi is exalted it is combusted because of Sun.
FIFTH HOUSE: Saturn and Sun associated in this house. Bhuthra dhosa is there. Bhuthra karaga also is in baba kathri yoga.
In short, Lagna lord is assoicated with twelfth lord in sixth house. Since twelfth lord is Venus,she invloves in illicit sex and this leads trouble in her life (defame and all other problems)
With kind regards,
Ravichandran M.
Sir,
ReplyDelete1) The native is beautiful lady, has good physic, and strong mental characters. The reason is the lagna is aspected by guru, moon in 11th house, sun in 5th house.
2) 2nd lord moon in 11th house gives the lady good income.
3) saturn and sun in 5th house, also 5th lord is in 6th house with lagna lord and ketu. She may get Children based on her husband's horoscope.
4) The important is the native has not yet married.
Birth date is 8/11/1984. Now she is at the age of 29.
Mars dhasa and moon puthi is running. 7th house is in paba karthari yogam. But 7th lord guru in same house. So she can get married around 2016, in raagu dhasa, guru puthi.
Thanks,
Ramasamy.
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDelete1.நல்ல தோற்றம்,குணம் உள்ளவர்.
2.குடும்பம் அமையாதவர்.திருமணம் ஆகவில்லை.
*மிதுனலக்னம்.மேஷராசி 1984 நவம்பர்08ல் பிறந்தவர்.
*லக்னாதிபதி 6ல் மறைந்தார்.அத்துடன் களத்திரக்காரகனும் மறைந்தார்.
*களத்திரஸ்தானம் பாவகர்த்தாரி யோகத்தில் உள்ளதுடன் குரு தனித்து
நின்று களத்திரஸ்தானத்தை மேலும் வலுவிழக்கசெய்த்ள்ளார்.அத்துடன்
சனியின் பார்வை 7 மற்றும் 2ம் இடமான குடும்பஸ்தானத்தை பார்வை
செய்வது இதனால் மணவாழ்வு அமையவில்லை.
THANKYOU L RAGUPATHI
1.லக்னாதிபதி புதன் 6ல் மறைந்தாலும், நவாம்சத்தில் 4ல் உச்சம் பெற்று உள்ளார். அதனால் ஜாதகி படித்தவர். புத்தி கூர்மை உள்ளவர்..
ReplyDelete2.2க்குரிய சந்திரன் 11ல் செவ்வாயின் வீட்டில். நவாம்சத்தில் வலுவான செவ்வாயினால் பார்க்கப்படுவதால் நல்ல செல்வாக்கு உள்ளவர். பிடிவாதக்காரி.
3.ஐந்தில் உச்ச சனி, நீச சூரியனுடன் அஸ்தங்கம்.ஆனால் சந்திரனால் பார்க்கப் படுவதால் ஒரு பெண் குழந்தை உண்டு.
4.களத்திர காரகன் சுக்கிரன் 6ல் மறைந்து,ஏழாம் வீட்டிற்கு 12ல் கேதுவுடன்.தவிர, நவாம்சத்தில் நீசம் அடைந்து உள்ளார். விரைய ராகுவின் பார்வை வேறு உள்ளதால் வலுவிழந்து படுத்து விட்டார். களத்திராதிபதி குரு 7ல் வலுவுடன் இருந்ததாலும், களத்திர பாவம் வலுவிழந்து உள்ளது. செவ்வாய் 8ல் உள்ளதால் கடுமையான களத்திர தோஷம் அதனால் ஜாதகி கணவரை விவாகரத்து செய்தவர்.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteகொடுக்கப்பட்ட ஜாதகம் . quizno 31.
மிதுன இலக்கணம் ..லக்னாதிபதி 6ல் உடன் உச்சம் பெற்ற கேது & சுக்கிரன்
. ஆக லக்னாதிபதி 6மிடத்தில் மறைந்து போனார் ..ஆனாலும் ஒரு ஆறுதல் ஆட்சி பெற்ற குரு 7ம் பார்வை ஆகவே எதோ கொஞ்சம் வாழ்க்கை இருக்கும் .
[**பாபா கர்தாரி யோகத்தில் மாட்டி கொண்ட சுபர்களுக்கு பார்வை உண்டா என்று வாத்தியார் அய்யா தெளிவு படுத்த வில்லை**].
2......2மிடம் கடகம் வீடதிபதி சந்திரன் 11இல்...4ம் பார்வைஉச்சம் பெற்ற செவ்வாய் ஆகவே குடும்பம் அமைந்திருக்கும்...
3......4ல் மாந்தி இருப்பதால் மற்ற எல்லா சுகங்களையும் அடித்து தூக்கி சாப்பிட்டு வறுமை ஒன்றே வாழ்கை என அமைந்திருக்கும்.
4......5 மிடம் துலாம் உச்சம் பெற்ற சனி நீசம் பெற்ற சூரியனுடன் ஆகவே நீச பங்க ராஜ யோகம் இது 5 மிடமாக இருப்பதால் பேர் சொல்லும் படியாக ஒரு குழந்தை கண்டிப்பாக உண்டு . அது தலைவனாக இருக்கும்...
5......7மிடம் தனுசு குரு .அங்கேயே டெண்ட் ஆட்சி ஆனால் களஷ்திர காரகன் சுக்கிரன் இருப்பு 7க்கு 12 மிடம்
. 7 மிடம் பாபாகர்தாரி யோகத்தில் மாட்டி கொண்டு , முழிக்கிறது 6ல் கேது 8ல் செவ்வாய் இரண்டு பெரும் உச்சம் பெற்று இருக்கிறார்கள் வாத்தியார் பாஷைய்ல் சொன்னால் இரண்டு மிக பெரிய தாதாதக்கள்..நடுவே ஒரு நல்லவன் அனாலும் வல்லவன் குரு ஆகவே திருமணம் ஆகி இருந்து கணவர் சிறிது காலத்திலே இறந்திருக்கலாம்.விதவை கோலம்தான் !!! .ஏனென்றால் 8 ல் உச்சம் பெற்ற செவ்வாய்..7க்கு 2ம் வீடு உச்சம் பெற்ற சனி 7 ம் வீட்டை 3ம் பார்வை பார்கிறான் . 7ம் பார்வையாக சந்திரனை வேறு பார்கிறான் ..
முடிவாக ...
1.வாழ்க்கை சுமாராக இருக்கும் .
2.குடும்பம் அமைந்தாலும் கணவருடன் சேர்ந்த வாழ்க்கை மிக சொற்பமான காலம்
3.குழந்தை உண்டு .ஒரு தலைவனை பெற்ற பெருமை இருக்கும்
நன்றியுடன்...
Respected Sir
ReplyDeleteI thought it should be a movie star's chart When I saw the title. Looks like it is Nayanthara. I apologize for cheating.
Mithuna Lagnam: Generally people in this lagnam are beautiful and I do not have to say anything about Nayanthara's beauty.
Laknathipathy is in 6th house with kethu and Sukra (5th and 12th lord). Association of Laknathipathi with 12 lord anywhere is not good. But 6th and 11th lord Mars is exalted. Guru is also looking at laknam and will give her hand.
2 Second lord Moon is in 11 the place. In the Moons dasa only she became big star. she came from good family and no money problems.
Mars and Saturn looks at 2nd house and Moon. 7th house lord Guru is in his own place, but with Sani's look and papakarthari yogam. and laknathipathi and 7th lord are in 1/12 position. May be that is why she did not get married even though it cam close with Prabhudeva (some say they already married secretly and not sure if that counts).
5th lord is in 6th place with Kethu and Sani/sun is in 5ht place. Do not have kids so far and She may have in the future as Guru is strong (with 7 parals) and Ucha Sani (he is also 9th lord) and sun got the neecha pangam.
Since 7th lord is strong with 7 parals ( even though papakarthari yogam) and laknathipathi and 9th lords also have 7 and 5 parals and 2nd lord is in its friendly rasi/11th place with Guru parvai, she will marry in future and we wish her good luck.
மிதுன இலக்கின ஜாதகி. 1985 நவம்பர் மாதம் பிறந்தவர். மூல திரிகோணத்தில் உள்ள குரு பகவான் இலக்கினத்தை தனது நேரடி பார்வையில் வைத்திருக்கிறார். நல்ல அமைப்பு. பவுர்ணமி திதி என்று நினைக்கிறேன். அழகான ஜாதகி. நல்ல குணவதியாக இருக்க வேண்டும். மூன்று கிரகம் உச்சம், இரண்டு கிரகம் நீசம். 5ம் வீட்டில் நீச பங்க இராஜயோகம். ஆனால் இலக்கினாதிபதி புதன் 6ம் வீட்டில்.
ReplyDelete2ம் வீட்டு சந்திரன் அந்த வீட்டிற்கு 10ல். சந்திரனுக்கு குரு பார்வையும் உண்டு, உச்ச சனியின் நேரடி பார்வையும் உண்டு, உச்ச செவ்வாயின் பார்வையும் உண்டு, நீசம் பெற்ற சூரியனின் பார்வையும் உண்டு. சனி பாக்கியாதிபதி, ஆனால் அவரே எட்டாம் வீட்டு அதிபதியும் ஆகிறார். செவ்வாய் இலாபாதிபதி, ஆனால் அவரே 6ம் வீட்டு அதிபரும் (வில்லன்) ஆகிறார். சனி பகவானின் பார்வை 2ம் வீட்டின் மேலும் விழுகிறது. செவ்வாயின் பார்வையும் 2ம் வீட்டின் மேல் விழுகிறது. 2ம் வீடு பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்ப வாழ்க்கையில் சிரமங்கள் இருக்கும்.
5ம் வீட்டில் நீச பங்க இராஜ யோகம், பவுர்ணமி சந்திரனின் பார்வையுடன். 5ம் வீட்டு சுக்கிரன் அந்த வீட்டிற்கு 2ல், 6ம் வீட்டில் இருக்கிறார். உடன் கேது. குழந்தைகள் கிடையாது.
7ம் வீட்டு குரு மூல திரிகோணத்தில் தனது சொந்த வீட்டில் இருக்கிறார். ஆனால் களத்திரகாரகன் சுக்கிரன் அந்த வீட்டிற்கு 12ல் கேதுவுடன். அதனால் திருமணம் காலத்தில் நடந்திருக்காது. தாமத திருமணம்.
நீச பங்க இராஜ யோகம், உச்ச சனி, செவ்வாய், கேது, மூல திரிகோண குரு மற்றும் குரு பார்வை இலக்கினத்திற்கு இருப்பதால் ஜாதகிக்கு பல நண்மைகள் உண்டு என்றாலும் இலக்கினாதிபதி மறைவிடத்தில் இருப்பது ஒரு குறையே.
ஜாதகி பிறந்தது 1984, நான் சென்ற பதிவில் குறிப்பிட்டது போல 1985ல் அல்ல. நவம்பர் 8 1984 தான் சரியான பிறந்த நாள்.
ReplyDeleteநேற்றையப் புதிருக்கான விடை கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.
ReplyDeleteநேற்றையப் புதிரில் உள்ள ஜாதகத்தின் சொந்தக்காரர் பிரபலமான தமிழ் நடிகை. அவரின் படத்தை அடுத்த பதிவில் கொடுத்துள்ளேன். டவுன்
பாருங்கள். பின்னூட்டத்தில் படங்களை உள்ளிட முடியாது.
அவ்வாறு பிரபலங்களின் ஜாதகங்களை உங்களுக்கு இதுவரை கொடுத்ததில்லை. சிலர் ஜாதகரின் தேதியை வைத்து விக்கி மஹாராஜாவின்
துணையை நாடுவீர்கள் என்பது தெரியும். அதனால் கொடுப்பதில்லை. ஆனாலும் உங்களுடன் சற்று ஓடிப் பிடித்து விளையாடுவோம் என்றுதான் ஒரு
பிரபலமான நடிகையின் ஜாதகத்தை வேண்டுமென்றே நேற்றுக் கொடுத்தேன்.கொடுத்ததுடன் நில்லாமல் அடித்துத் துவைக்க முடியாத மென்மையான
ஜாதகம் என்ற க்ளூவையும் கொடுத்தேன்.
விக்கியின் துணையில்லாமல் எத்தனை பேர்கள் எழுதுகிறீர்கள் என்று பார்க்க விரும்பினேன். பின்னூட்டம் அனுப்பிய 29 பேர்களின் 25 பேர்கள்
விக்கியின் துணையை நாடாமல் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது விசேடமான பாராட்டுக்கள்.
சரியான விடை:
1.ஜாதகி மிகவும் அழகான தோற்றம் உடையவர்
2.இதுவரை திருமணம் ஆகாதவர்.
இந்த 2 விடைகளை எழுதினால் போதும் என்று எதிர்பார்த்துத்தான் ஜாதகத்தை வலையில் ஏற்றினேன்.
திருவாளர்கள் கிருபானந்தன், ரவிச்சந்திரன்,ல.ரகுபதிதோழர், பாண்டியன், ஆகிய 4 பேர்களும் எதிர்பார்த்த சரியான விடையை எழுதியுள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.பாராட்டுக்களும் உரித்தாகுக!
கலந்து கொண்டவர்களில் 4 பேர்கள். விக்கி மஹராஜாவின் உதவியை நாடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களின் நேர்மைக்குப்
பாராட்டுக்கள். பலர் 2 எதிர்ப்பார்ப்பில் ஒன்றை சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள். அத்துடன் கலந்து கொண்ட
அனைவருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.
ஜாதகி கேரளாவைச் சேர்ந்த திருவல்லா என்னும் ஊரில் 8 நவம்பர் 1984 ஆம் தேதி இரவு 9.55ற்குப் பிறந்தவர். அவரின் படம் அடுத்த பதிவில் உள்ளது. திரை நட்சத்திரம் நயன்தாராதான் அவர்.
அன்புடன்,
வாத்தியார்
நன்றி அய்யா. பல முயற்சிகளுக்கு பிறகு மறுபடியும் புதிருக்கு சரியான விடை அளித்திருக்கிறேன்:)
ReplyDeleteதலைவி ஜாதகமா இது? விக்கி மகாராஜா இவர் நவம்பர் 18 பிறந்தவர் என்றல்லவா கூறுகிறார். இதுதான் இவரது ஜாதகம் என்றால், இவருக்கு கேமதுருமா (அவ) யோகமும் இருக்கிறது. இதை இப்போது தான் கவனித்தேன். இதுவரை பார்த்த ஜாதகங்களில் இந்த அவயோகம் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. குறிப்பாக பிரபலங்களின் ஜாதகத்தில். இவரை காத்தருளும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆனால் இறைவன் கருணை மிக்கவர். எல்லோருக்கும் நல்லதே செய்வார்.
nellai padmanaban
ReplyDeletesir only today I am viewing it. all have not mentioned that for upaya lagnam mithunam, guru is pathagapathy and it occupies seventh. also villan for this is mars. it occupies eighth. then how the jathagi will be happy,
The two points have not been mentioned by any body. according to me for mithuna laganam guru and mars will act as notorious crimanals