மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.12.13

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்!

 

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்!

இன்று கிறிஸ்துமஸ் தினம். அனைவருக்கும் வகுப்பறையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!


அன்புடன்
வாத்தியார்

நேற்றைய புதிருக்கான விடை கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.

================================================================================
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிரிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலும் அதன் ஒளி மற்றும் ஒலி வடிவமும் கீழே உள்ளன

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

---------------------------------------------------------
திரைப்படம்: கண்ணே பாப்பா (1969)
பாடியவர்: P.சுசீலா
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
---------------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net



=========================================================
நேற்றையப் புதிரில் உள்ள ஜாதகத்தின் சொந்தக்காரர் பிரபலமான தமிழ் நடிகை. அவரின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஸ்க்ரோல் டவுன்
செய்து பாருங்கள்.

அவ்வாறு பிரபலங்களின் ஜாதகங்களை உங்களுக்கு இதுவரை கொடுத்ததில்லை. சிலர் ஜாதகரின் தேதியை வைத்து விக்கி மஹாராஜாவின்
துணையை நாடுவீர்கள் என்பது தெரியும். அதனால் கொடுப்பதில்லை. ஆனாலும் உங்களுடன் சற்று ஓடிப் பிடித்து விளையாடுவோம் என்றுதான் ஒரு பிரபலமான நடிகையின் ஜாதகத்தை வேண்டுமென்றே நேற்றுக் கொடுத்தேன்.கொடுத்ததுடன் நில்லாமல் அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம் என்ற க்ளூவையும் கொடுத்தேன்.

விக்கியின் துணையில்லாமல் எத்தனை பேர்கள் எழுதுகிறீர்கள் என்று பார்க்க விரும்பினேன். பின்னூட்டம் அனுப்பிய 29 பேர்களின் 25 பேர்கள் விக்கியின் துணையை நாடாமல் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது விசேடமான பாராட்டுக்கள்.

சரியான விடை:

1.ஜாதகி மிகவும் அழகான தோற்றம் உடையவர்
2.இதுவரை திருமணம் ஆகாதவர்.

இந்த 2 விடைகளை எழுதினால் போதும் என்று எதிர்பார்த்துத்தான் ஜாதகத்தை வலையில் ஏற்றினேன்.

திருவாளர்கள் கிருபானந்தன், ரவிச்சந்திரன்,ல.ரகுபதிதோழர், பாண்டியன், ஆகிய 4 பேர்களும் எதிர்பார்த்த சரியான விடையை எழுதியுள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

கலந்து கொண்டவர்களில் 4 பேர்கள். விக்கி மஹராஜாவின் உதவியை நாடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களின் நேர்மைக்குப்
பாராட்டுக்கள். பலர் 2 எதிர்ப்பார்ப்பில் ஒன்றை சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள். அத்துடன் கலந்து கொண்ட
அனைவருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.

ஜாதகி கேரளாவைச் சேர்ந்த திருவல்லா என்னும் ஊரில் 8 நவம்பர் 1984 ஆம் தேதி இரவு 9.55ற்குப் பிறந்தவர். அவரின் படம் கீழே உள்ளது.
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
========================================================

13 comments:

  1. Respected Sir,

    Wishing You A Happy Christmas to Subbiah sir and all of my classroom friends.

    Nayantharavin Birth date Nov/18/1985 endru munbu wikipedia-vil parthadaga ninaivu. Asin & Nayanthara iruvarumey 1985-il pirandhadaga wikipedia-vil irundhulladhu.

    Thank You.

    ReplyDelete
  2. அவர்கள் இவரை ஏசு என்பார்
    இவர்கள் அவரை வாசு என்பார்

    ஆடுகளை மேய்ப்பவன் அவன்
    பசுக்களாகிய உயிரை மேய்ப்பவன் இவன்

    வெள்ளி மணி ஓசையும்
    வெளியில் உள்ள ஆலய மணியின் ஓசையும்

    ஓம் என்ற ஒலியை
    ஓயும் வரை ஒலிக்கும்

    பிறந்த நாளை அவர்களும்
    இறந்த (திருவடியடைந்த) நாளை இவர்களும்

    பாதங்களை கழுவி போற்றுவது அவர்கள்
    பாதங்களை பூசிப்பது இவர்கள்

    சிலுவையில் அறையபட்ட உருவத்தை
    சிறப்பாக வழிபடுவார்கள் அவர்கள்..

    சிலுவையில் ஏசுவிற்கு முன்னரே பலர்
    சிறைபடுத்தப்பட்டுள்ளனர்..

    கிருத்துமஸ் வாழ்த்துக்கள் சொல்வது
    கிரமமாக அவர்கள் இந்து கொள்கையை

    பின்பற்றுவதால் அவர்கள் நம் உடன்
    பிறவா சகோதர(ரி)களே

    வாழ்த்துக்கள் உரித்தாகுக
    வளமோடு நலம் பெறவே...

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning. X'mas greetings for all.

    Thanks for your holy day song posting.

    God will take care all of us.

    Have a holy day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. உங்களுக்கும் எங்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. ஏசு பற்றிய கவியரசரின் பாடலும் பிரமாதம். கீழே இடம்பெற்ற நடிகையின் கவர்ச்சிப் படமும் பிரமாதம்!

    ReplyDelete
  6. ////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Wishing You A Happy Christmas to Subbiah sir and all of my classroom friends.
    Nayantharavin Birth date Nov/18/1985 endru munbu wikipedia-vil parthadaga ninaivu. Asin & Nayanthara iruvarumey 1985-il pirandhadaga wikipedia-vil irundhulladhu.
    Thank You./////

    நான் கொடுத்துள்ள தேதியும், பிறந்த ஊரின் பெயரும் சரியானதுதான்! நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    அவர்கள் இவரை ஏசு என்பார்
    இவர்கள் அவரை வாசு என்பார்
    ஆடுகளை மேய்ப்பவன் அவன்
    பசுக்களாகிய உயிரை மேய்ப்பவன் இவன்
    வெள்ளி மணி ஓசையும்
    வெளியில் உள்ள ஆலய மணியின் ஓசையும்
    ஓம் என்ற ஒலியை
    ஓயும் வரை ஒலிக்கும்
    பிறந்த நாளை அவர்களும்
    இறந்த (திருவடியடைந்த) நாளை இவர்களும்
    பாதங்களை கழுவி போற்றுவது அவர்கள்
    பாதங்களை பூசிப்பது இவர்கள்
    சிலுவையில் அறையபட்ட உருவத்தை
    சிறப்பாக வழிபடுவார்கள் அவர்கள்..
    சிலுவையில் ஏசுவிற்கு முன்னரே பலர்
    சிறைபடுத்தப்பட்டுள்ளனர்..
    கிருத்துமஸ் வாழ்த்துக்கள் சொல்வது
    கிரமமாக அவர்கள் இந்து கொள்கையை
    பின்பற்றுவதால் அவர்கள் நம் உடன்
    பிறவா சகோதர(ரி)களே
    வாழ்த்துக்கள் உரித்தாகுக
    வளமோடு நலம் பெறவே.../////

    வாழ்க வேப்பிலையாரே! வளர்க உங்களின் நல்ல உள்ளம்!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. X'mas greetings for all.
    Thanks for your holy day song posting.
    God will take care all of us.
    Have a holy day.
    With kind regards,
    Ravichandran M.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Have a great day./////

    உங்களின் வாழ்த்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  10. ////Blogger Remanthi said...
    உங்களுக்கும் எங்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்....////

    உங்களின் வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger Chellappa Yagyaswamy said...
    ஏசு பற்றிய கவியரசரின் பாடலும் பிரமாதம். கீழே இடம்பெற்ற நடிகையின் கவர்ச்சிப் படமும் பிரமாதம்!/////

    அந்தப் படத்தைப்போய் கவர்ச்சிப் படம் என்கிறீர்களே? என்னத்தைச் சொல்வது? வாழ்க உங்களின் ரசனை!

    ReplyDelete
  12. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com