மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.12.13

Astrology: அவன் கொடிபிடித்தால் என்ன ஆகும்?

 
Astrology: அவன் கொடிபிடித்தால் என்ன ஆகும்?

அவன் கொடிபிடித்தால் கலகம்தான். அதாவது கேது கொடிபிடித்தால், கொடி பிடித்து முன் நடந்தால், ஜாதகனின் வாழ்க்கையில் கலக்கம்தான். துயரம்தான்.

உடனே பயந்துவிடாதீர்கள். மூன்று சுபக்கிரகங்களும் ஜாதகத்தில் வலிமையோடு இருந்தால், ஜாதகனின் துயரங்களைக் குறைப்பார்கள். தாக்குப் பிடிக்கும் சக்தியைக் (with standing power) கொடுப்பார்கள்
----------------------------------


நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகம் கேது கொடிபிடிக்கும் ஜாதகம். அத்துடன் அது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்தார்?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தியாக் கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்க வில்லை. பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.
-----------------------------------------------------
நேற்றைய புதிருக்குப் பலரும்  கேது கொடிபிடிக்கும் ஜாதகம் அது என்பதைக் கவனித்துப் பதில் எழுதியிருக்கிறார்கள். நன்றாக அலசியிருக்கிறார்கள். மொத்தம் 26 அன்பர்கள் மற்றும் அன்பிகள் (அன்பருக்குப் பெண்பால் அன்பிகள் - சரிதானா?) கலந்து கொண்டு தங்கள் பதிலை எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அவற்றில் ஓரளவிற்கு நெருங்கி வந்து சிறப்பாகப் பதில் எழுதியவர்களின் பெயர்களை (அவர்கள் எழுதிய முக்கியமான வரிகளுடன் கீழே கொடுத்துள்ளேன்) படித்துப் பாருங்கள். அவர்கள் 11 பேர்களுக்கும் எனது விஷேசப் பாராட்டுகள்

1. Keven: கேது கொடி பிடித்து செல்கிறார். துறவை / இழப்பைக்குறிக்கிறது.

2. KJ: 2. Suriyan and kethu at 7th house is not favour for marraige life. Though because of Guru's 5th aspect to 7th house, She got married and that ends in divorce or...

3.Janani Murugesan: 3. 2 & 5 க்குடைய குரு 3ல் நீசம், சனி ஐந்தாம் வீட்டில் அதனால் குடும்பம் குழந்தை போன்றவை இவருக்கு அமையாமல் போய் விட்டது.

4. Palani Shanmugam: குரு ஐந்தாம் பார்வையாகவும், சனி 5இல் இருந்து களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். 7ஆம் வீட்டு அதிபதி அந்த இடத்துக்கு 12இல் இருப்பதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருந்திருக்காது. 6இல் களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் மறைந்து விட்டதாலும் 7க்கு எட்டாமிடத்தில் குரு நீச்சம் பெற்று விட்டதாலும் கணவருக்கு ஆயுள் குறைவு.

5.Venkatesh.T: ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் அதற்கு 12ல். சுக்கிரனுக்கு 8ல் களத்திர காரகன் ராகுவுடன் இருப்பது கடுமையான களத்திர தோஷம். அதை தவிர 7ல் கேது இருப்பதால் ஜாதகி கணவனை இழந்தவர்.

6. Ravichandran: 3. Married and her husband died.(Widow)

7.Dr.Mohan, Brunei  Difficulty in marriage life

8.Trichy Ravi: her husband must be expired due to 7th house owner(Sukran) sitting in 12th house(Virayam) from 7th house.

9. Mahendran.D: சூரியன் + புதன் சேர்க்கை செவ்வாயின் வீட்டில் அமர்வதால் விதவையாவாள்.

10. Radha Sridhar: கேது கோடி பிடிக்க, கால சர்ப்ப தோஷம். பெரிய குறை. இரண்டாம் வீட்டதிபதி குரு நீசம். நல்ல குடும்ப வாழ்க்கை அமைவது சிரமம். ஏழாம் வீடு சூரியன் ,கேது உள்ளதால் திருமணம் ஆகாது. குழந்தை இருக்காது. ஏழாம் வீட்டதிபதி 6ல் அஷ்டமாதிபதியுடன் சேர்க்கை.

11. Hamaragana: 2மிட உள்ள குரு 3மிடத்தில் நீசமாகி போனார். ஆகவே குடும்பம் இல்லை. 5மிடம் மீனம் சனி -குரு பரிவர்த்தனை .சிறப்பாக இருந்தாலும் பிறர் குழந்தைகளை தன குழந்தைகளாக பாவிக்கும் நிலை..7மிடம் ரிஷபம் சூரியன்+கேது கூட்டணி -3ம் பார்வையாக சனி வேறு நேசம் பெற்ற குரு பார்த்தாலும் ..3 பாவிகள் செவ்வாய்,ராஹு,&சனி இவர்கள் 3 பேரின் பார்வை ஆகவே திருமணம் என்பது இந்த பெண்ணின் வாழகைய்ல் ஒரு கனவுதான் ஒரு ஆறுதலான விஷயம்.7இல் சூரியனுடன் கேது இருப்பதால் துறவி போன்று சமூக சேவை மனப்பாங்குடன் இருப்பார்
-----------------------------------------------------------
இந்த ஜாதகம் முதலிலேயே நமது வகுப்பறையில், அலசல் பாடங்கள் பகுதியில் நான் வெளியிட்டதுதான். வெளியானது நினைவில் இல்லாமல் எனது கிடங்கில் இருந்து அதை எடுத்து உங்களுக்கு நேற்று நான் கொடுத்திருந்தேன். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே நமது மாணவர் திலகம் ஒருவர் (திருவாளர் சக்தி கருப்பையா, மதுரை) அதைச் சுட்டிக் காட்டினார். அது தவறுதான். இனி அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்

முன்பு வந்த பதிவிற்கான சுட்டி  (URL) clickக்கி அதையும் பாருங்கள்

தேதி: 13.8.2012
பதிவின் தலைப்பு: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்

http://classroom2007.blogspot.in/2012/09/astrology_13.html

நேற்றையப் பாடத்தை ரிவிசன் பாடக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================================

13 comments:

  1. அய்யா,கேது கொடிபிடிக்கும் ஜாதகம் என்றால் சிரமம் என்று சொன்னீர்கள்.லக்னாதிபதி வலுவாக இருந்து மற்றும் கேது இருக்கும் வீட்டை குரு(பாக்யாதிபதி) பார்த்தால்.சிரமங்கள் உண்டா?.அது கல சர்ப்ப யோக ஜாதகம் ஆகாதா.என் சந்தேகத்தை தீர்க்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. நன்றி ஐயா
    23 - 08- 2011 அன்றும் இதே ஜாதகம் அலசப்பட்டுள்ளது. ஆகையால் second revision என்று வைத்துக்கொள்வோம்
    சுட்டி கீழே
    http://classroom2007.blogspot.in/2011/08/astrology_23.html

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு என் பணிவு கலந்த வணக்கங்கள். என்னுடைய கணிப்பு ஓரளவு சரியாக அமைந்தற்கு தங்களின் ஆசிர்வாதமே காரணம். அதை வெளியிட்டமைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன சந்தேகம். ஒருவரின் ( கணவன் (அ)மனைவி) ஜாதகத்தில் இது போன்ற களத்திர பாவத்தை ஆராயும் போது இருவரின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பலன் சொல்வது நல்லது அல்லவா? ஒரு வேளை கணவரின் ஆயுள் பலம் நன்று அமைந்திருந்தால் இந்த கணிப்பிற்கு அர்த்தம் இல்லாது போய் விடுமே!

    ReplyDelete
  4. Respected Sir,

    You are really great teacher since giving good explanation with your own (practical life) style and accepting the students opinion.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  5. Sir,

    In Ramar horo also, Kethu is holding the flag at 12th position. So that We can take his 14 years vanavasam is because of that. But still after that he ruled the country.

    That means based on other planets position also this rule gets vary ?
    Pl explain.

    ReplyDelete
  6. Respected Sir
    I am little confused when you said pakyathipathi (9th lord) went to 4th house which is 8th from 9th house. Please clear it for me if time permits.
    I thought 9th lord in 4th house is good as thrikona sthana lord in Kendram. I remember it from your 9th house lession. (Laknathipathi Mar's aspect is there in this chart, not sure if that completely spoil all the benefits)
    If we take 4th house as 8th place from 9th house, should we do that same for 10th lort being in 5th house or 4th lord being in 11th house vice versa? (if it is not spoiled by malfic planet conjection or aspect).

    Also Sukra (12th lord) Buthan (8th lord in 6th house. will it be considered Vipareetha raja yogam?

    ReplyDelete
  7. /////Blogger paulsam said...
    அய்யா,கேது கொடிபிடிக்கும் ஜாதகம் என்றால் சிரமம் என்று சொன்னீர்கள்.லக்னாதிபதி வலுவாக இருந்து மற்றும் கேது இருக்கும் வீட்டை குரு(பாக்யாதிபதி) பார்த்தால்.சிரமங்கள் உண்டா?.அது கால சர்ப்ப யோக ஜாதகம் ஆகாதா.என் சந்தேகத்தை தீர்க்க வேண்டுகிறேன்./////

    சுபகிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சிரமங்கள், துயரங்கள் குறையும். வித்தியாசப்படும். முதல் மாடியில் இருந்து தவறி விழுவதற்கும், பத்தாவது மாடியில் இருந்து விழுவதற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா? அதுபோல!

    ReplyDelete
  8. /////Blogger Kaven said...
    நன்றி ஐயா
    23 - 08- 2011 அன்றும் இதே ஜாதகம் அலசப்பட்டுள்ளது. ஆகையால் second revision என்று வைத்துக்கொள்வோம்
    சுட்டி கீழே http://classroom2007.blogspot.in/2011/08/astrology_23.html/////

    ஆகா...நீங்கள் சொன்னால் சரிதான். அப்படியே வைத்துக்கொள்வோம் கெளரிசங்கர்.

    ReplyDelete
  9. /////Blogger venkatesh r said...
    ஆசிரியருக்கு என் பணிவு கலந்த வணக்கங்கள். என்னுடைய கணிப்பு ஓரளவு சரியாக அமைந்தற்கு தங்களின் ஆசிர்வாதமே காரணம். அதை வெளியிட்டமைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன சந்தேகம். ஒருவரின் ( கணவன் (அ)மனைவி) ஜாதகத்தில் இது போன்ற களத்திர பாவத்தை ஆராயும் போது இருவரின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பலன் சொல்வது நல்லது அல்லவா? ஒரு வேளை கணவரின் ஆயுள் பலம் நன்று அமைந்திருந்தால் இந்த கணிப்பிற்கு அர்த்தம் இல்லாது போய் விடுமே!/////

    அதுபோல் அமைந்திருந்தால் அது பிரிவில் முடிந்து கணவனை ஓரங்கட்டிவிடும். It will end in separation. எப்படியும் ஜாதகியைத் தனிமைப் படுத்திவிடும்!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    You are really great teacher since giving good explanation with your own (practical life) style and accepting the students opinion.
    With kind regards,
    Ravichandran M.//////

    சுமார் நான்காயிரம் பேர்களை வைத்துப் பாடம் நடத்தும்போது, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு அந்தப் பொறுப்பையும், பொறுமையையும் கொடுத்த இறைவனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்

    ReplyDelete
  11. ////Blogger KJ said...
    Sir,
    In Ramar horo also, Kethu is holding the flag at 12th position. So that We can take his 14 years vanavasam is because of that. But still after that he ruled the country.
    That means based on other planets position also this rule gets vary ?
    Pl explain./////

    ஆமா! ஆமாம்! ஆமாம்!

    ReplyDelete
  12. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I am little confused when you said pakyathipathi (9th lord) went to 4th house which is 8th from 9th house. Please clear it for me if time permits./////

    என்ன குழப்பம் டல்லாஸ்காரரே! பதிவை மீண்டும் படியுங்கள்.கீழே உள்ளது போல் தானே சொல்லியுள்ளேன்:
    ”அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும்”

    ReplyDelete
  13. Respected Sir
    sory for asking the question again. You have taught us that aspect of benefic planets like Guru, sukra, Moon will do good beyond their athipatyam. In this chart Moon did good by its aspect. But moon being 9th house lord in 4th house should not spoil the bakyam right? Is this because of Laknathipathi Mar's aspect? I just copied and pasted the 9th house lession below. This is the main reason for my confusion. I apologize if I did not follow the lession properly or missed some thing.

    நான்காம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fourth
    house from the lagna)

    நன்றாக இருந்தால் (If well placed):
    பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான்.
    நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான்.
    உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும்.(அதில் என்ன ஆச்சரியம்?)

    நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால்
    அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது
    தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான்.

    நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

    வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும்.
    இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல
    இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க
    பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும்.

    ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து
    ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை
    பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள்
    அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com