மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.7.13

பனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்!

பனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்!

பக்தி மலர்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!’ என்னும் அற்பதமான பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்:

சத்தியம் சிவம் சுந்தரம்
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

- பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
---------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/wWgxFMfsC_Y
Our sincere thanks to the person who uploaded the song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22 comments:

  1. அருமையான பாடல். பாடியவர் திருமதி.பி.சுசீலா என்று நினைக்கிறேன். என்ன ஒரு குரல். தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்பு சுத்தம். எஸ்.பி.பியும் அப்படித்தான். எழுதியவர் கண்ணதாசன் என்று தெரியாது. தகவலுக்கு நன்றி ஐயா. இசையமைத்தவர் யார்? எம்.எஸ்.வியா? இது திரைப்பாடலா? ஆம் என்றல் என்ன திரைப்படம்?

    வாத்தியார் ஐயா, நான் ஒரு ஜோதிடக் கேள்வி மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறேன். அது கிரகமாலிகா யோகம் பற்றிய கேள்வி. பதில் அனுப்புவீர்களா?

    ReplyDelete
  2. அருமையான பாடல் ஐயா... நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. ஆமாம் பாண்டியரே
    அந்த பாடல் MSVயினுடையதே

    கலைதுறையில்
    கலக்கிய பெயர் விசுவநாதன்

    இயல் இசை நாடகம் என
    இம் மூன்றிலும் சரிதானே..

    நாடகத்தில்
    பூர்ணம் விசுவநாதன்
    இசையில்
    MS விசுவநாதன்
    எழுத்து இயக்கம் வசனத்தில்
    விசு

    ReplyDelete
  4. எத்தனையோ முருகன் பாடலிருக்கையில்
    ஏன் இந்த பாடல் ... ??

    சரி..
    சுவை இப்படியும் இருக்கட்டும்

    ReplyDelete
  5. கவியரசரின் முத்தான பாடல்களுள் இதுவும் ஒன்று!.. கந்தனைக் காதலனாகக் கொண்டு இயற்றப்பட்ட அருமையான அகத்துறைப் பாடல்!... திரைப்படம் பஞ்சவர்ணக்கிளி. இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.

    ReplyDelete
  6. குருவிற்கு வணகம்,
    முருகன் அருள் அனைவருக்கும்,
    கிடைக்க செய்திர்கள் .
    நன்றி

    ReplyDelete
  7. அருமையான பாடல்.
    ஓரிடத்தில் - அண்ணல் என்பது அண்ணன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. நன்றி வேப்பிலையாரே. எம்.எஸ்.வி. சரி. மற்ற இரண்டும் பரவாயில்லை இரகம்தான்.

    ReplyDelete
  9. பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.

    இதைத் திரைப்படத்தில் இசையமைத்த MSV சிறந்த இசையமைப்பாளர்தான். ஒரு வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அவருக்கு எந்த பத்ம விருதுகளோ/தேசிய அளவிலான வேறு விருதுகளோ கிடைக்காததுதான். இதற்கு மேல் கொடுத்தாலும் பாடகி S.ஜானகி அவர்கள் செய்ததைப் போல்தான் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  10. உண்மைதான் ஆனந்த். இது வேதனைக்குரிய விஷயம்தான். இசைஞானிக்கும் இவர்கள் இதேதான் செய்வார்கள் என்று நினைத்தேன். நல்லவேளை, அவருக்கு பத்மபூஷன் கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டனர். யார் இந்த விருதுகளை முடிவு செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அந்த புண்ணியவான்களுக்கு தமிழக திறமைசாலிகள் அதிகமாக கண்ணுக்கு தெரிவதே இல்லை.

    ReplyDelete
  11. Blogger thozhar pandian said...
    அருமையான பாடல். பாடியவர் திருமதி.பி.சுசீலா என்று நினைக்கிறேன். என்ன ஒரு குரல். தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்பு சுத்தம். எஸ்.பி.பியும் அப்படித்தான். எழுதியவர் கண்ணதாசன் என்று தெரியாது. தகவலுக்கு நன்றி ஐயா. இசையமைத்தவர் யார்? எம்.எஸ்.வியா? இது திரைப்பாடலா? ஆம் என்றல் என்ன திரைப்படம்?
    வாத்தியார் ஐயா, நான் ஒரு ஜோதிடக் கேள்வி மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறேன். அது கிரகமாலிகா யோகம் பற்றிய கேள்வி. பதில் அனுப்புவீர்களா?

    ஆமாம் அது திரைப்படப்பாடல்தான். படம்: பஞ்சவர்ணக்கிளி (படம் வெளிவந்த ஆண்டு 1965)

    Grahamalika yogam is a planetary combination under which all planets occupy consecutive houses leaving the other houses vacant.It may be in six or seven houses from the lagna.The native of the horoscope under that combination will be happy, handsome, and is provided with much wealth.In short the native will be fortunate!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  12. ///Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான பாடல் ஐயா... நன்றி...
    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...////

    பார்த்தேன். தகவலுக்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  13. ////Blogger வேப்பிலை said...
    muruga
    muruga////

    உருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  14. ////Blogger வேப்பிலை said...
    ஆமாம் பாண்டியரே
    அந்த பாடல் MSVயினுடையதே
    கலைதுறையில்
    கலக்கிய பெயர் விசுவநாதன்
    இயல் இசை நாடகம் என
    இம் மூன்றிலும் சரிதானே..
    நாடகத்தில்
    பூர்ணம் விசுவநாதன்
    இசையில்
    MS விசுவநாதன்
    எழுத்து இயக்கம் வசனத்தில்
    விசு////

    வாரணாசியில் இருப்பவரைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே! நியாயமா சுவாமி?

    ReplyDelete
  15. ////Blogger வேப்பிலை said...
    எத்தனையோ முருகன் பாடலிருக்கையில்
    ஏன் இந்த பாடல் ... ??
    சரி..
    சுவை இப்படியும் இருக்கட்டும்////

    இத்தோடு விட்டீர்களே! நன்றி வேப்பிலை சுவாமி!

    ReplyDelete
  16. /////Blogger துரை செல்வராஜூ said...
    கவியரசரின் முத்தான பாடல்களுள் இதுவும் ஒன்று!.. கந்தனைக் காதலனாகக் கொண்டு இயற்றப்பட்ட அருமையான அகத்துறைப் பாடல்!... திரைப்படம் பஞ்சவர்ணக்கிளி. இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.////

    பாடலின் இலக்கண அணிகலனையும், பாடல் அமைந்த படத்தின் பெயரையும் தந்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    முருகன் அருள் அனைவருக்கும்,
    கிடைக்க செய்திர்கள் .
    நன்றி/////

    நீங்கள் மனமுருக வணங்கும்போது, அவனருள் தானாகவே கிடைக்கும் சாமி!

    ReplyDelete
  18. /////Blogger மோ.சி. பாலன் said...
    அருமையான பாடல்.
    ஓரிடத்தில் - அண்ணல் என்பது அண்ணன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.////

    திருத்தம் செய்துவிட்டேன். தட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger thozhar pandian said...
    நன்றி வேப்பிலையாரே. எம்.எஸ்.வி. சரி. மற்ற இரண்டும் பரவாயில்லை இரகம்தான்./////

    அதானே! ஆடிட்டர் விடுவாரா என்ன?

    ReplyDelete
  20. /////Blogger Ak Ananth said...
    பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.
    இதைத் திரைப்படத்தில் இசையமைத்த MSV சிறந்த இசையமைப்பாளர்தான். ஒரு வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அவருக்கு எந்த பத்ம விருதுகளோ/தேசிய அளவிலான வேறு விருதுகளோ கிடைக்காததுதான். இதற்கு மேல் கொடுத்தாலும் பாடகி S.ஜானகி அவர்கள் செய்ததைப் போல்தான் செய்ய வேண்டும்./////

    இந்த ஆண்டில் வந்த படமாக இருக்க வேண்டும் என்பார்கள். அதெல்லாம் சரியாக வராது. அதை விடப் பெரிய விருதை அவர் (எண்ணற்ற ரசிகர்கள் மனம்) பெற்றிருக்கிறார். அது போதும் சாமி!

    ReplyDelete
  21. ////Blogger thozhar pandian said...
    உண்மைதான் ஆனந்த். இது வேதனைக்குரிய விஷயம்தான். இசைஞானிக்கும் இவர்கள் இதேதான் செய்வார்கள் என்று நினைத்தேன். நல்லவேளை, அவருக்கு பத்மபூஷன் கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டனர். யார் இந்த விருதுகளை முடிவு செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அந்த புண்ணியவான்களுக்கு தமிழக திறமைசாலிகள் அதிகமாக கண்ணுக்கு தெரிவதே இல்லை./////

    தேர்வுக்குழுவில் தமிழர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com