மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.7.13

Astrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் என்ன செய்யும்?

 
Astrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் என்ன செய்யும்?

அலசல் பாடம்

கர்மவீரர் காமராஜர்

காமராஜரைப் பற்றி அறியாதவர் யார் இருக்க முடியும்?

சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்ட இரண்டாவது தலைவர் அவர்தான். (முதல் இடம் எப்போதுமே மகாத்மா காந்திக்குத்தான்!)

விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலே தந்தையைப் பறிகொடுத்ததால் வறுமையில் அல்லல் பட்டார். ஆறு வயதில் தன் தந்தையை இழந்தார். தந்தை ஒரு தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல் போனது. இளம் வயதில் ஒரு துணிக் கடையில் வேலை செய்தார். 16 வயதில் அரசியலில் நுழைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தியின் அரவணைப்பு கிடைத்தது.

கல்கத்தாவிற்கு அருகில் உள்ள அலிப்பூர் சிறையில் 2 ஆண்டு காலம் வாசம் செய்ய நேரிட்டது. 1942ல் மீண்டும்  சிறைப்பட்டு அமராவதி நகர் சிறையில் 3 ஆண்டு காலம் வாசம் செய்ய நேர்ந்தது.

13.4.1954ஆம் தேதி தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றார்

மூடிக்கிடந்த 6,000 பள்ளிகளைத் திறக்க வைத்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வித் திட்டத்தையும், மதிய உணவுத்  திட்டத்தையும் அறிமுகப் படுத்திய முன்னோடி அவரே!

விவசாயத்திற்காக பவானி அணை, வைகை அணை, அமராவதி, சாத்தனூர் அணை பரம்பிக்குளம் பொன்ற அணைகள் எல்லாம் அவர் காலத்தில் கட்டப்பட்டவையே!

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்டிகல்ஸ் நிறுவனம், நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம், மணலி பெட்ரோலிய நிறுவனம், போன்ற பல பெரிய தொழிற் சாலைகளும், அமபத்தூர் தொழிற்பேட்டை போன்றவைகள்  எல்லாம் அவர் காலத்தில் துவங்கப்பட்டவையே. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுமார் 10 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த அவர் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளவில்லை. சொந்தவீடு கூட இல்லாமல் இருந்தவர்.

பின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி, இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்து பதவில்  அமர்த்தியவர் அவரே. அதனால் கிங் மேக்கர் என்னும் பட்டத்தையும் பெற்றார் அவர்.

அவரால் பதவி பெற்றவர்கள் லால் பகதூர் சாஸ்திரி, மற்றும் திருமதி இந்திரா காந்தி!

(கர்மவீரர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி மற்றும் பேரறிஞர் அண்ணாதுரை ஆகியோருடன் அமர்ந்திருக்கும் காட்சி!)

அவரின் பரம பக்தரான கவியரசர் கண்ணதாசன், அவரைப்பற்றி இப்படிக்குறிப்பிட்டார்.

“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்
 அன்பனே காமராஜா, உன்கையில் அதுவும் இல்லையே!”

என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!

1967ல் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் துறவறம் பூண்டவர் 2.10.1975ஆம் தேதி  இறைவனடி சேர்ந்தார்

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்!
________________________________________________________


அவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!

லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான  வாழ்க்கை அமைந்தது.

சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது. 'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்”
என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.

அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!

7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி,  மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம்  இருந்தது. அது அவருக்குப் பல  வழிகளில் கை கொடுத்தது.

ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக்  கவனியுங்கள். அவை இரண்டும் அவருக்கு புத்தி சாதுர்யத்தையும், சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும்  பெற்றுத்தந்ததுடன், எடுத்த காரியங்களில்  வெற்றிகளையும் பெற்றுத்தந்தன!

இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும்  திரிகோண, கேந்திர பலத்துடன் இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத் தலைமைப் பதவியைப் பெற்றுத்  தந்தன.

கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான 3 ஆம் இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான  பாக்கியஸ்தானத்தைப் பார்த்ததால் பல யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.

பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி தசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல் அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள். அதுவும் குறிப்பாக ராகு  கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்

இது மேல்நிலை வகுப்பில் 2011ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

20 comments:

  1. கர்ம வீரரின் ஜாதக அலசல் மீள் வாசிப்புக்கும் நண்ராகவே இருந்தது. நன்றி ஐயா!

    நண்பர் புலிகாட் பாலசுப்ரமணியன் விஷயமாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதனைக் கண்ணுற்று ஒரு அவசரத் தீர்வு அளிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. கர்ம வீரர் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர். எனக்கு மட்டுமல்ல, பலருக்கு அவரை பிடிக்கும் என்று நினைக்கிறேன். என் தலைமுறையின் துரதிர்ஷ்டம், அவரை பார்க்கவோ அவரது ஆட்சியில் வாழவோ கொடுத்து வைக்கவில்லை. அப்படிப்பட்ட மாமனிதரை கூட விதி விட்டு வைக்கவில்லை. விருதுபட்டியை விருது நகர் ஆக்கியவரை அந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்தனர். கர்ம வீரர் "படுத்துக் கொண்டே வெல்வேன்" என்று கூறியதாலும், "அரிசி கிடைக்கவில்லை என்றால் எலிக்கறி தின்னுங்கள்" என்று அன்றைய முதல்வர் திரு.பக்தவத்சலம் கூறியதாலும் தான் அவர் தோற்றார் என்று சிலர் கூறுகின்றனர். மக்களுக்கு அந்த நேரத்தில் அது சரியாகப் பட்டிருக்கலாம். அவர் கட்சி தோற்றது சரி. ஆனால் அவர் தோற்றதை நினைக்கும் போது மனம் வருந்துகிறது. மக்கள் அவருக்கு அந்த வேதனையை தராமல் இருந்திருக்கலாம் (அவர் தோற்றதுக்காக வருந்தி இருப்பாரா என்பதே சந்தேகம்). இன்று அவர் புகழ் பாடும் சில தலைவர்கள் அன்று அவரை தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்த போதிலும் அவர்களுக்கு இணையாக குழாயடி சண்டை போடாமல் தரமான முறையில் பதிலளித்தார் கர்ம வீரர். எப்போது பார்ப்போம் இவரை போன்ற ஒரு தலைவரை? இவரை நினைத்தால் பாடத் தோன்றுகிறது "இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்"

    ReplyDelete
  3. ayya,

    2-nd veetin athipathi uccham petru(chandran) 12-th veetil marainthaalum kudumba vaalkai baathikapadumaa?

    ReplyDelete
  4. Respected Sir
    It is little confusing to me when we talk about parvai of Mars, Sani and other malfic planets. Some places, it gives yogam like here in kamarajars chart. Some other places it is been said, even though they are laknathipathi or poorva punyathipathi, their parvai will do bad results. Can you please explain?

    ReplyDelete
  5. அய்யா,
    2-இற்கு உரியவன் 12-இல் இருந்தாலும் 2-ஆம் இடத்தில கலதிரகாரன் சுக்கிரன் இருக்கானே? மற்றும் 7-ஆம் அதிபதி 7-இல் தனது சொந்த வீட்டில் உள்ளானே! பின் எப்பிடி அவருக்கு திருமணம் ஆகாமல் போனது?

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,காமராஜர் ஐயா ஜாதகத்தை மிகவும் தெழிவாக விளக்கியுள்ளீர்கள்,ஆனாலும் ஒரு சந்தேகம், புதாஅதித்யயோகம் 6,8,12லும் கிடைக்குமா? நன்றி ஐயா.

    ReplyDelete
  7. அய்யா, ஒரு சந்தேகம். இங்கு செவ்வாய் மூன்றில் மறைந்து மாந்தியும் சேர்ந்து யோககாரன் கெட்டுவிட்டதாக நான் நினைத்தேன். எப்படி யோககாரகன் செவ்வாய் கெடாமல் இருந்தது என்று சற்று விளக்கவும். நன்றி

    ReplyDelete

  8. ////Blogger kmr.krishnan said...
    கர்ம வீரரின் ஜாதக அலசல் மீள் வாசிப்புக்கும் நன்றாகவே இருந்தது. நன்றி ஐயா!
    நண்பர் புலிகாட் பாலசுப்ரமணியன் விஷயமாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதனைக் கண்ணுற்று ஒரு அவசரத் தீர்வு அளிக்க வேண்டுகிறேன்////

    நல்லது உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார். புலிகாட் பாலாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.அதன் பிரதியை உங்கள் பார்வைக்கும்
    அனுப்பியுள்ளேன்!

    ReplyDelete
  9. ///Blogger thozhar pandian said...
    கர்ம வீரர் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர். எனக்கு மட்டுமல்ல, பலருக்கு அவரை பிடிக்கும் என்று நினைக்கிறேன். என்
    தலைமுறையின் துரதிர்ஷ்டம், அவரை பார்க்கவோ அவரது ஆட்சியில் வாழவோ கொடுத்து வைக்கவில்லை. அப்படிப்பட்ட மாமனிதரை கூட விதி விட்டு வைக்கவில்லை. விருதுபட்டியை விருது நகர் ஆக்கியவரை அந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்தனர். கர்ம வீரர் "படுத்துக் கொண்டே
    வெல்வேன்" என்று கூறியதாலும், "அரிசி கிடைக்கவில்லை என்றால் எலிக்கறி தின்னுங்கள்" என்று அன்றைய முதல்வர் திரு.பக்தவத்சலம் கூறியதாலும் தான் அவர் தோற்றார் என்று சிலர் கூறுகின்றனர். மக்களுக்கு அந்த நேரத்தில் அது சரியாகப் பட்டிருக்கலாம். அவர் கட்சி தோற்றது சரி. ஆனால் அவர் தோற்றதை நினைக்கும் போது மனம் வருந்துகிறது. மக்கள் அவருக்கு அந்த வேதனையை தராமல் இருந்திருக்கலாம் (அவர்
    தோற்றதுக்காக வருந்தி இருப்பாரா என்பதே சந்தேகம்). இன்று அவர் புகழ் பாடும் சில தலைவர்கள் அன்று அவரை தரம் தாழ்ந்த முறையில்
    விமர்சனம் செய்த போதிலும் அவர்களுக்கு இணையாக குழாயடி சண்டை போடாமல் தரமான முறையில் பதிலளித்தார் கர்ம வீரர். எப்போது பார்ப்போம் இவரை போன்ற ஒரு தலைவரை? இவரை நினைத்தால் பாடத் தோன்றுகிறது "இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து
    விட்டோம்"/////

    உண்மைதான். மனதை நெகிழ வைக்கும் உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பாண்டியரே!

    ReplyDelete
  10. ////Blogger Sattur Karthi said...
    Vanakkam Ayya////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  11. OpenID Keerthana said...
    ayya, 2-nd veetin athipathi uccham petru(chandran) 12-th veetil marainthaalum kudumba vaalkai baathikapadumaa?/////

    அந்த ஒரு விதியை (Rule) வைத்து மட்டும் முடிவிற்கு வரக்கூடாது. லக்கினாதிபதி, களத்திரகாரன், ஏழாம் வீட்டதிபதி போன்றவர்களையும் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  12. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    It is little confusing to me when we talk about parvai of Mars, Sani and other malfic planets. Some places, it gives yogam like here in kamarajars chart. Some other places it is been said, even though they are laknathipathi or poorva punyathipathi, their parvai will do bad results.
    Can you please explain?/////

    நீங்கள் கேட்டுள்ள கேள்விக்குப் பின்னூட்டத்தில் பதில் அளிக்க முடியாது. தனிப் பாடமாக எழுத வேண்டிய மேட்டர். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  13. ////Blogger arul said...
    good lesson/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger C.Senthil said...
    அய்யா,
    2-இற்கு உரியவன் 12-இல் இருந்தாலும் 2-ஆம் இடத்தில களத்திரகாரன் சுக்கிரன் இருக்கானே? மற்றும் 7-ஆம் அதிபதி 7-இல் தனது சொந்த வீட்டில் உள்ளானே! பின் எப்படி அவருக்கு திருமணம் ஆகாமல் போனது?/////

    களத்திரகாரகனுக்கு அது பகை வீடு.
    லக்கினாதிபதி எட்டில் மறைந்து விட்டான்.லக்கினாதிபதியும் ஏழாம் அதிபதியும் 1/12 அமைப்பில் உள்ளார்கள்.இதையெல்லாம் நீங்கள் பார்க்க வேண்டாமா?

    ReplyDelete
  15. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,காமராஜர் ஐயா ஜாதகத்தை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்,ஆனாலும் ஒரு சந்தேகம், புதாஅதித்யயோகம் 6,8,12லும் கிடைக்குமா? நன்றி ஐயா./////

    கிடைக்கும். ஆனால் முழுமையாக அல்ல!

    ReplyDelete
  16. /////Blogger Ramkumar KG said...
    அய்யா, ஒரு சந்தேகம். இங்கு செவ்வாய் மூன்றில் மறைந்து மாந்தியும் சேர்ந்து யோககாரன் கெட்டுவிட்டதாக நான் நினைத்தேன். எப்படி யோககாரகன் செவ்வாய் கெடாமல் இருந்தது என்று சற்று விளக்கவும். நன்றி /////

    முதல்நிலை சுபகிரகமான குருவின் நேரடிப் பார்வையைப் பெற்றிருப் பதால் கெடாமல் இருக்கிறான்.

    ReplyDelete
  17. சனி பகவான் 7ல் இருப்பது அரசியல் வாழ்க்கைக்கு யோகமான அமைப்பு என்றும் குடும்ப வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடியது என்றும் படித்திருக்கிறேன். சுக்கிரன் குடும்பஸ்தானத்தில் இருந்தால் நல்லதுதான். ஆனால் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதகஸ்தானாதிபதியும் ஆகிறார். அதனால் குடும்ப வாழ்க்கை அமைய விடாமல் பாதகம் செய்து விட்டாரோ என்னவோ.

    ஆரம்பக் கல்வியே கற்றிருந்தாலும் கல்விக் கண் திறந்த கடவுள் என்று போற்றப் படும் அளவுக்கு கல்வியில் ஒரு புரட்சி ஏற்படுத்தியது ஒரு சாதனைதான். http://www.perunthalaivar.org/2007/05/27/mid-day-meal-for-students/

    ReplyDelete
  18. May be in Navamsam, kalatra karakan is neecham. Will that also be a reason for marriage not taking place.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com