மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.7.13

Astrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்!

 
===========================================================
 Astrology: Pineapple Technology, அன்னாச்சிப்பழ (தொழில்) நுட்பம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மேலதிகாரி ஒருவர் அன்னாச்சிப்பழத்தை வைத்து ஒரு மனவளக் கட்டுரை எழுதினார். பத்திரிக்கை ஒன்றில் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. ஏனென்றால் அதன் சாராம்சம் அப்படி!

ஆனால் எழுதிய அன்பர் பெயர் மட்டும் நினைவில் இல்லை!

என்ன சொன்னார் அவர்?

அன்னாச்சிப் பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் வையுங்கள். குழந்தைகள் யாரும் அதைத் தொடமாட்டார்கள். அதே பழத்தை, தோலைச் சீவி, சிறு சிறு தண்டுகளாக்கி, தட்டு ஒன்றில் வைத்து, அத்துடன் அதன் மீது சிறிது உப்பு, மிளகுத் தூள் ஆகியவறைத் தூவி, இரண்டு ஸ்பூன்களையும் (தேக்கரண்டி களையும்) போட்டு, மேஜை மீது வைத்துவிட்டுப் பிறகு பாருங்கள். பத்தே மணித்துளிகளில் தட்டு காலியாகிவிடும்.

நம் பிரச்சினைகளையும் அவ்வாறுதான் கையாள வேண்டும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அது பூதாகரமாகத் தெரியும். நம்மைப் பயமுறுத்தும். நம்மைக் கவலைக்கு ஆளாக்கும். நம்மைச் செயல்படாமல் முடக்கி விடும். ஆகவே பிரச்சினைகளைப் பிரித்துப் பாருங்கள். நடந்தது. நடக்க வேண்டியது. நம்மால் முடிந்தது. நாம் செய்ய வேண்டியது என்று பிரித்துப் பாருங்கள்

உதாரணத்திற்கு உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அல்லது பார்க்கும் வேலை பிடிக்க வில்லை, சம்பளம் போதவில்லை என்றிருந்தால் முடங்கிப் படுத்துவிடாமல், நம் நிலைமையை, நாம் அடுத்துச் செய்ய வேண்டியதை அந்த அன்னாச்சிபழ தொழில் நுட்பத்தை வைத்து செயல் படுத்த வேண்டியதுதான்

வேலை கிடைக்கவில்லை என்றால், என் தகுதிக்கு, என் படிப்பிற்கு உகந்த வேலை இல்லை அது என்று சொல்லிக் கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். அதுதான் உத்தமம்.

அதுபோல நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் பெண் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்காமல், கிடைக்கின்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.  அதுதான் உத்தமம்.

உங்கள் நேரம் சரியில்லை என்றால், அதாவது நடக்கின்ற தசா புத்தி சரியில்லை என்றால், அந்த புத்தி முடிகின்ற காலம் வரை பல்லக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்து அடுத்த தசா புத்தியில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அல்லது நடப்பதை நல்லது...இதுவாது நடந்ததே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லாம் வாங்கி வந்தவரத்தின்படிதான் நடக்கும்

நயந்தாரா, அனுஷ்கா சர்மா போன்ற அழகான பெண்ணிற்கு ஆசைப்படாமல், காத்திருக்காமல், காந்திமதி அல்லது சரளா அல்லது மனோரமா போன்ற சராசரி அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

சிட்டி பேங்க், ஸ்டாண்டர்டு சாட்டர்டு பேங்க் போன்ற வங்கி வேலைகளுக்கு ஆசைப்படாமல், காத்திருக்காமல், பாண்டியன் கிராம வங்கி அல்லது பாலக்காடு கூட்டுறவு வங்கி போன்ற சிறு வங்கிகளில் வேலை கிடைத்தாலும் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்.

உங்களுக்குப் பணப்பிரச்சினை உள்ளது என்றால், அது எதனால் என்று பாருங்கள். வருமானம் குறைவு என்றால் செலவுகளைச் சுருக்குங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கடன் மட்டும் வாங்காதீர்கள். கடன் எப்போதுமே கலக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும். நடுத்தரக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு முதல் எதிரி கிரிடிட் கார்டுதான். ஆகவே அதைப் பயன் படுத்தாதீர்கள்.

அடுத்து உபரி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள். மனைவியை வேலைக்கு அனுப்பலாம். சைடு பிஸினசாக சுயதொழில் ஒன்றைச் செய்யலாம். அல்லது விடுமுறை நாட்களில் இன்னொருவருக்கு (சமபளத்திற்குத்தான்) வேலை செய்து கொடுக்கலாம்.

6, 8, 12 ஆம் இடத்து அதிபதிகளின் திசா புத்திகளை விட அங்கே சென்று அமரும் கிரகங்களின் புத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறாது
ஆகவே அந்த புத்திகள் முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான். மகாதிசையின் அதிபதியும், புத்திநாதனும் அஷ்டம சஷ்டமத்தில் (அதாவது 6/8 நிலைப்பாட்டில்) இருந்தால்  அந்தக் காலகட்டமும் நன்மை பயக்ககூடியதாக இருக்காது.

அவைகள் முடியும்வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான்!

உட்கார்ந்து யோசித்தீர்கள் என்றால் எல்லா வழிகளும் புலப்படும்

அன்புடன்
வாத்தியார்


மேலதிகத் தகவல்:

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்
.
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. அன்னாசிப் பழத்தை வைத்து அழகான மனவளக்கட்டுரை அளித்த ஐயாவுக்கு நன்றி!

    அன்னாசிப்பழ ரசம் சூப்பர் மணத்துடன் நன்றாக இருக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் அன்னாசியைச் சாப்பிடலாமா? அதில் சர்க்கரை அளவு, கலோரி எவ்வளவு என்பதையும் வலை ஏற்றி விடுங்கள், ஐயா!

    ReplyDelete
  2. good moorning sir ! thanks for pineapple tips

    ReplyDelete
  3. அண்ணாச்சி.. என்ன
    அன்னாசி பழத்தை கொடுக்கறீக..

    எல்லாச் செரிதான் ஆனா
    ஏன் கடனை பத்தி அப்படி சொல்லுதீக

    ஆசையை கட்டுபடுத்தினாலே போதாதா
    அதுக்காக வசதிய கொறைக்கனுமா

    என்னதோ போங்க
    எல்லாரும் நெல்லா இருந்தா சரிதாங்க

    பச்சை மஞ்சள் வெள்ளை என
    பண்பு மாறாத மூவர்ண பழம் அன்னாசி

    ReplyDelete
  4. Good Morning. Good Lesson.
    Also The priest in the last lesson's picture works in Dallas Temple. I just realized it. He is a very nice priest and does the pooja's very well.

    ReplyDelete
  5. உண்மைதான்! அதனால்தான் நானும் வீட்டில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். 12ல் ராகு & ராகுமாகா திசை.

    ReplyDelete
  6. உண்மையில் மிக அருமையான தகவல் சார்....... நன்றி

    ReplyDelete
  7. அன்னாசி எனக்குப் பிடித்த பழங்களில் ஒன்று.

    சில சமயங்களில் நேரம் சரியில்லை என்று எந்த காரியத்தையும் தள்ளிப் போடவும் முடியாது.

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    அன்னாசிப் பழத்தை வைத்து அழகான மனவளக்கட்டுரை அளித்த ஐயாவுக்கு நன்றி!
    அன்னாசிப்பழ ரசம் சூப்பர் மணத்துடன் நன்றாக இருக்கும்.
    சர்க்கரை நோயாளிகள் அன்னாசியைச் சாப்பிடலாமா? அதில் சர்க்கரை அளவு, கலோரி எவ்வளவு என்பதையும் வலை ஏற்றி விடுங்கள், ஐயா!///////

    ஆமாம்! ஆமாம்! நானும் சாப்பிட்டிருக்கேன் - செட்டிநாட்டு விருந்துகளில்.
    ஒரு வீட்டின் மெனுவைப் பாருங்கள்:
    மாம்பழ சாம்பார்
    ஆப்பிள் மோர்க் குழம்பு
    அன்னாசிப்பழ ரசம்
    மிக்ஸட் ஃப்ரூட் பாயாசம்!

    ReplyDelete
  9. /////Blogger Sattur Karthi said...
    good moorning sir ! thanks for pineapple tips////

    நல்லது. நன்றி கார்த்தி!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    அண்ணாச்சி.. என்ன
    அன்னாசி பழத்தை கொடுக்கறீக..
    எல்லாச் செரிதான் ஆனா
    ஏன் கடனை பத்தி அப்படி சொல்லுதீக
    ஆசையை கட்டுபடுத்தினாலே போதாதா
    அதுக்காக வசதிய கொறைக்கனுமா
    என்னதோ போங்க
    எல்லாரும் நெல்லா இருந்தா சரிதாங்க
    பச்சை மஞ்சள் வெள்ளை என
    பண்பு மாறாத மூவர்ண பழம் அன்னாசி/////

    உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  11. ////Blogger arul said...
    mikka nandri ayya/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  12. //////Blogger Dallas Kannan said...
    Good Morning. Good Lesson.
    Also The priest in the last lesson's picture works in Dallas Temple. I just realized it. He is a very nice priest and does the pooja's very well.////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger boobalan vr said...
    உண்மைதான்! அதனால்தான் நானும் வீட்டில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். 12ல் ராகு & ராகுமாகா திசை./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger eswari sekar said...
    vanakam.sir////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. /////OpenID Keerthana said...
    Good morning sir...////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger Remanthi said...
    உண்மையில் மிக அருமையான தகவல் சார்....... நன்றி/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  17. Blogger Ak Ananth said...
    அன்னாசி எனக்குப் பிடித்த பழங்களில் ஒன்று.
    சில சமயங்களில் நேரம் சரியில்லை என்று எந்த காரியத்தையும் தள்ளிப் போடவும் முடியாது./////

    ஆமாம். இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு அடுத்தடுத்து உள்ள வேலைகளைச் செய்ய வேண்டியதுதான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. Good morning sir,

    Thank you for good blog with pine apple.

    ReplyDelete
  19. மிக அற்புதமான ஒரு பதிவு..ஒரு பழத்தால் பரமன் குடும்பம் இரண்டானது என்பார் கவுண்டமணி. அது போல... நீங்களும் பழத்தால் எங்களுக்கு நம்பிக்கை ஹர்லிக்சை ஊட்டி வருகின்ரிர்கள்... பாராட்டுகள்..பல பல...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com