மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.12

Short Story: வினைப் பயன்!




சிறுகதை: வினைப் பயன்!

சிங்காரம் செட்டியாரின் ஒன்று விட்ட தங்கச்சி, அதாவது அவருடைய சின்னத்தாள் மகள் சாலா, அதிகாலையிலேயே வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

அவள் கணவனுக்கு கேன்சர் நோயாம். ஆரம்பக்கட்டமாம். கழுத்தில் புறப்பட்டிருந்த கட்டியைச் சிறிது வெட்டி பயோப்ஸி சோதனை செய்ததில் உறுதியாகி உள்ளதாம். முப்பது சிட்டிங் கதிர்வீச்சு சிகிச்சையும்,  எட்டு டோஸ் ஹீமோதெரபி ஊசி மருந்தும் போட வேண்டுமாம். மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் செலவாகுமாம். முதலில் 25,000 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி மருத்துவமனையில் சொல்லிவிட்டார்களாம்.

பாவம் இல்லாதவள். கஷ்ட ஜீவனம். பணத்திற்கு எங்கே போவாள்?

அதுதான் உதவி கேட்டு சிங்கார அண்ணனைப் பார்க்க வந்திருக்கிறாள்.

அண்ணனின் மனைவி சிந்தாமணி ஆச்சி, வந்தவளுக்கு அருமையான ஃபில்டர் காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு, அவள் அருகில் அமர்ந்து, அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அண்ணனின் மனம் பேச்சில் லயிக்காமல், என்ன காரணம் சொல்லி அவளை அனுப்பலாம் என்பதில் முனைப்பாக இருந்தது.

அண்ணன் நினைத்தால், ஒன்றும் சொல்லாமல் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவியிருக்கலாம். அவருக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல! ஆனால் அப்படிச் செய்வதில் அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.

அவள் பேசி முடித்தவுடன், குரலைச் சற்றுக் கடுமையாக்கிக்கொண்டு, ”அவ்வளவு பணம் தற்சமயம் என்னிடம் இல்லை சாலா. நீ திருப்பித்தர வேண்டாம். நான் மூவாயிரம் ரூபாய் தருகிறேன். மீதிப் பணத்திற்கு எங்காவது நீ ஏற்பாடு செய்துகொள்” என்று சொன்னவர், உள் அறைக்குச் சென்று தன்னுடைய அலமாரியில் இருந்து மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டும் கொண்டு வந்து கொடுத்தார்.

முதலில் அதை மட்டும் வாங்கிக் கொள்ளத் தயங்கியவள், சிந்தாமணி ஆச்சியின் கண் ஜாடையைப் பார்த்துப் புரிந்து கொண்டு, கை நீட்டி அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டாள்.

அவள் சென்றவுடன், ஆச்சி செட்டியாரை ஒரு பிடிபிடித்து விட்டார்கள்.

“உங்களிடமென்ன பணமா இல்லை? அவள் கேட்ட தொகையை நீங்கள் கொடுத்திருக்கலாம்”

“புரியாமல் பேசாதே! அந்த இருபத்தையாயிரத்துடன் பிரச்சினை முடியாது. அடுத்தடுத்து அவள் வருவாள்!”

“அவள் இந்த ஊருக்கு வந்து இருபது வருஷமாகுது. இதுவரை ஒரு தடவையாவது, பணம் கேட்டு நம் வீட்டு வாசப்படியை  மிதித்திருக்கிறாளா - சொல்லுங்கள்! இப்போது, கஷ்டத்திற்குத்தானே வந்து கேட்கிறாள்”

”கஷ்டம் வருவதெல்லாம் வினைப்பயனால் வருவது. அடுத்தவன் அதை வாங்கிக் கொள்ள முடியாது. பட வேண்டிய கஷ்டத்தை அவள் பட்டுத்தான் ஆகவேண்டும். அதை நீ புரிந்துகொள்!”

"அவள் கணவனுக்கு வந்துள்ளது, இவளுக்கு எப்படி வினைப்பயனாகும்?”

“அவள் கணவனே இவளுடைய வினைப்பயன் காரணமாக வந்தவன்தான். இல்லாவிட்டால் இவளுக்கு நல்ல கணவன் கிடைத்திருக்க மாட்டானா?”

“நல்ல கணவன் கிடைப்பதெல்லாம் அமையும் வாய்ப்பைப் பொறுத்தது. அவளுடைய கணவன் மிகவும் நேர்மையானவன். அதை முதலில் உணருங்கள். நல்லவர்களுக்குத்தான் அடுத்தடுத்து சோதனைகள் வரும். அவர் தீவிர முருக பக்தர். பழநியப்பன் அவருக்கு நிச்சயம் உதவி செய்வான்” என்று சொன்ன ஆச்சி, அதற்கு மேல் பேச வேண்டாம் என்று எழுந்து உள்ளே போய் விட்டார்கள்.

அடுத்து என்ன நடந்தது?

அன்று காலை பதினோரு மணிக்கு, சரவணம்பட்டியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து காந்திபுரம் வரை சென்று வருவதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்ற ஆச்சி, சாலாவை அவள் வீட்டில் சந்தித்து, இருபத்தையாயிரம் ரொக்கத்தைக் கொடுத்து மருவத்துவமனைச் செலவிற்கு வைத்துக் கொள்ளும்படி கூறியதோடு, தான் பணம் கொடுத்துள்ளது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள்

                              +++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு மாதம் சென்றிருக்கும். எதிர்பாராத ஒன்று சிங்காரம் செட்டியார் வீட்டில் நடந்து விட்டது.

அதில், சிந்தாமணி ஆச்சிக்கு ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டு மணிவிழாக்கள், ஒரு கல்யாணக்கார வீடு, என்று மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஒரு வாரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஆச்சியும், செட்டியாரும் ஊருக்குப் போய்விட்டு, திரும்பக் கோவைக்கு வருவதற்குள், யாரோ சில களவாணிப் பயல்கள், பூட்டை உடைத்து, வீட்டிற்குள் இருந்த முக்கியமான, விலை உயர்ந்த  சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போயிருந்தார்கள்.

போனவைகளில் சிங்காரம் செட்டியாரின் உடைமைகளே அதிகம்.

கழுத்துச் செயின், கைச் செயின், இரண்டு கேரட் வைர மோதிரம், பஞ்சு வியாபாரி ஒருவருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், சட்டை தைப்பற்காக வைத்திருந்த இருபது மீட்டர் உயர்ரக வெள்ளைத் துணி, புது வேஷ்டிகள் ஆறு, ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில் மூன்று என்று செட்டியாரின் பீரோவில் இருந்த பெரும்பாலான பொருட்கள் களவு போயிருந்தன. களவுபோனது பண மதிப்பில் மொத்தம் பத்து லட்சம் இருக்கும்

ஆச்சியின் பீரோவை அவர்கள் உடைக்கவில்லை. அந்தக் காலத்து லண்டன் பீரோ. உடைக்க முடியவில்லை போலும். ஆச்சி பயன் படுத்தும் பொருட்களில், டேபிள் டாப் வெட் கிரைண்டர் ஒன்றும், சி.டி ப்ளேயர் ஒன்றும் காணாமல் போயிருந்தது.

இது வருத்தப்பட வேண்டிய சம்பவம்தானே? சற்று மகிழ்வதற்கு என்ன இருக்கிறது?

ஆச்சி தன் இருபத்தைந்து வருட மண வாழ்க்கையில் செட்டியாரிடம் அதிகமாகக் கண்டதெல்லாம் அவருடைய கருமித்தனம்தான். கோவில் குருக்களின் தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் தட்சணை போடமாட்டார். உண்டியலில் பத்து ரூபாய்க்கு மேல் போட்டதில்லை!

அக்கம் பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைகளில் மளிகைச் சாமான்கள், காய்கறிகள் எல்லாம் விலை அதிகம் என்று அங்கே வாங்க மாட்டார். ராஜவீதி மார்க்கெட்டில் உள்ள மொத்தவிலைக் கடைகளில்தான் வாங்குவார். கோவையில் தையற்கூலி மிக அதிகம் என்று சட்டை, துணிமணிகளை செட்டி நாட்டிலுள்ள தனது ஊரிலேயே வருடத்திற்கு ஒருமுறை தைத்துக் கொண்டு வந்துவிடுவார்,

இரவு சமையல் கூடாது. கேஸைப் பிடித்த கேடு என்று சொல்லி, மதியமே இரவிற்கும் சேர்த்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவருக்கு தயிர் சாதமும், மாங்காய் ஊறுகாயும் இருந்தால் போதும். ஆச்சி சற்று ருசியுடன் சாப்பிடக்கூடியவர்கள் தனக்கு வேண்டியதை மதியமே விதம் விதமாக சமைத்து வைத்துக்கொண்டு விடுவார்கள்.

உயர்ரக வெள்ளைத் துணிகள், புது வேஷ்டிகள், ஈரிழைத்துண்டுகள், ஜமுக்காளங்கள் போன்ற துணிமணிகள் எல்லாம் அவர் செய்யும் பஞ்சு, மற்றும் நூல் வியாபாரத்தின் மூலம் பழக்கமான துணி உற்பத்தியாளர்களிடம் ஓசியில் வாங்கிக்கொண்டு வருவதாகும். ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில்கள், வாசனை சோப்புக்கள், ஷேவிங் க்ரீம்கள், லோஷன்கள் என்று மேனி அலங்காரப் பொருட்கள் எல்லாம் துபாயில் பணியில் இருக்கும், அவருடைய உடன்பிறப்பு வாங்கிக் கொண்டுவந்து தருவதாகும்.

செட்டியார் ஆடிப் போயிருந்தார். அவரைச் சமாதானப் படுத்தி, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று ஆச்சிதான் அனுப்பிவைத்தார்கள்.

புகார் கொடுத்துவிட்டு வந்தவர், காலைப் பலகாரத்தைக்கூடச் சாப்பிடாமல், உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

ஊருக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வங்கிகள் ஸ்ட்ரைக்கில் இருந்ததால், புதிதாகச் செய்து வந்த நகைகளை லாக்கரில் வைக்க முடியாமல் போனதைப் பற்றியும், பணத்தைப் பஞ்சு வியாபாரிக்கு அனுப்ப முடியாமல் போனதைப் பற்றியும், திரும்பத் திரும்பச் சொல்லி, புலம்பிக் கொண்டிருந்தார். தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆச்சி ஒரே போடாகப் போட்டு அவருடைய புலம்பலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

“நீங்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதால், போன சாமான்கள் திரும்பி வரவா போகிறது? எல்லாம் வினைப்பயன் என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் வினைப்பயனைப் பற்றி நன்றாகத் தெரியுமே! போக வேண்டிய நேரம் போய்விட்டது. அவ்வளவுதான்!”

ஆனாலும் அவர் விடவில்லை.

“ஆண்டிற்கு இரண்டு தடவை நடைபாதப் பயணம் சென்று  பழநியப்பனையும், குழந்தை வேலாயுதசாமியையும் தொடர்ந்து கும்பிட்டு வருகிறேனே, அவர் ஏன் இதைத் தடுக்கவில்லை?”

“தெய்வத்தை எல்லாம் நிந்தனை செய்யாதீர்கள். உங்களுக்குப் பெரிதாக ஏதோ வர வேண்டியதைக் குறைத்து, இந்த அளவோடு நஷ்டத்தைக் கொடுத்துத் தப்பிக்க வைத்திருக்கிறார் முருகப் பெருமான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.”

“இதைவிடப் பெரிதாக என்ன வரவேண்டும்?”

“ சாலை விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில், மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். நஷ்டம் எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அந்த நிலைமை எல்லாம் இல்லாமல், இந்த அளவோடு போனதே என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்”

“அப்போ, நான் வருடத்திற்கு இரண்டு முறை பாதயாத்திரை செல்வதற்கு இவ்வளவுதான் பயனா?”

“நீங்கள் மட்டும்தான் போகிறீர்களா? ஆயிரக் கணக்கான மக்கள் போகிறார்கள். எல்லோரும் ஒவ்வொரு பிரார்த்தனையோடு போகிறார்கள்.  வேண்டுதல் களோடு போகிறார்கள்.  அப்படி செல்லும் மக்களுக்கு, பல நகரத்தார் பெருமக்கள், ஆயிரம், இரண்டாயிரம் பேர்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு செய்து போடுகிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். வழியில் நடப்பவர்கள் தங்குவதற்குப் பெரும் பொருட் செலவில் கொட்டகை போட்டுக் கொடுக்கிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். தண்ணீர் பந்தல்களை வைத்து தாகத்தைத் தணிக்கிறார்களே அவர்களை நினைத்துப் பாருங்கள். கைக்காசை செலவழிப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும்? பரந்த மனப்பான்மை வேண்டும்? முருகப் பெருமான் உங்கள் கால்களைப் பார்த்து உதவுவதில்லை. உங்கள் மனதைப் பார்த்துத்தான் உதவுவார்.அதைப் புரிந்து கொள்ளுங்கள்”

செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது.

ஆச்சியின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டதால், செட்டியாரின் கண்கள் கலங்கிவிட்டன!

அன்று மதியம், வங்கிக்குச் சென்று, தன் கணக்கில் இருந்து இருபத்தை யாயிரம் ரூபாய் பணத்தை எடுத்தவர், அந்தப் பணத்துடன் தன் சின்னத்தா மகள் சாலா வீட்டிற்குச் சென்றார். சாலா வீட்டில்தான் இருந்தாள். அவளுடைய கணவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு நலமுடன் வந்துவிட்டவன்,  கவலை தோய்ந்த முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

சிங்காரம் அண்ணனைப் பார்த்தவுடன், இருவரும் முகம் மலர ’வாருங்கள்’ என்று வரவேற்றார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர், தன் கைப் பையில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து சாலாவிடம் கொடுத்த போது, அவள் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள்.

“இல்லை அண்ணே! தேவையான பணம் கிடைத்து விட்டது. இவர்களும் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். ஆகவே இப்போது பணம் எதுவும் வேண்டாம் அண்ணே!” என்றாள்.

“கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லாதே ஆத்தா! சிகிச்சை முடிந்து விட்டாலும், இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு உன் கணவன் வேலைக்குச் செல்ல முடியாது. ஆகவே நடப்புச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள். மேலும் தேவைப் பட்டாலும் வந்து கேள். தருகிறன்” என்று சொன்னதுடன், கட்டாயப் படுத்தி அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்தார்.

வந்தவர், அதைத் தன் மனைவியிடம் சொல்லவும் இல்லை. ”செய்யும் உதவியை, வெளிச்சம் போட்டுக் காட்டினால், அதற்குப் பலன் கிடையாது” என்று ஆச்சி சொல்வார்கள்.

அவர் ஆச்சியிடம் சொல்லாததற்கு அதுதான் காரணம்.

                                    +++++++++++++++++++++++++++++++++++++
அடியவன் எழுதி., இந்த மாதம்,  இலக்கிய மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை  இது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

32 comments:

  1. Good morning vaathiyaar sir! Superb!

    ReplyDelete
  2. What surprises me is the portrayal of the sister in law. Usually brothers would be forthcoming, especially if younger sister comes and asks something. It is their wives who would prevent them from helping their sisters. Here, the brother is a miser and his wife entreats him to help her naathanaar.

    ReplyDelete
  3. அருமையான கருத்தைக் கொணர்ந்தக் கதை....
    புற்றுநோய் மருத்துவம் பற்றிய வைத்திய முறை, மருந்துகள் யாவும் விளக்கமாக எடுத்தாண்டு உள்ளது அருமை...

    எனக்கு மட்டும் ஏனிப்படி என்று ஏங்குவோருக்கு வினைப்பயனை பற்றிய அழகிய விளக்கம்; அதுவே ஆழ்ந்த விளக்கமும் கூட.
    அனுபவிக்கும் தீமைகள் வினைப்பயனால் என்பதால் அனுபவித்தாலும், இயற்கையாகவே அப்படி அனுபவிப்பவர்கள் அதற்கு ஏதாக மிகவும் நேர்மையானவர்களாக இருப்பதும் எதார்த்தம் அதை கதையில் காண்பித்து குறிபிட்டது இன்னும் அருமை.

    வரவும் செலவும்; வினைப் பயனால் என்பதால்.... வரவு வரும் போது வரவில் வைக்கும் யாவரும், இது போன்று பாவப்பட்டவர்கள் கையேந்தும் போது வரவைப் பார்த்தவர்கள் செலவைப் பார்க்க மனம் ஒப்புவதில்லை. செலவளிக்க வேண்டும் என்று விதி ஒரு புண்ணியமான வழியில் செலவளிக்க வாய்ப்பளிக்க செய்த போது அதை செய்யாது விட்டவர், ஒரு பெரிய இழப்பிற்கு பிறகு உணர்ந்தது அருமை. அதை உணர்த்திய ஆச்சியின் தெய்வ உள்ளம் அருமையிலும் அருமை.

    இருந்தால் புண்ணிய காரியங்களுக்கு செலவளிப்பது நல்லது... அதுவும் அப்படி ஒரு வாய்ப்பு வரும் போது இருப்பவர்கள் தட்டாமல் செலவளிப்பதே நல்லது. அது தான் தன்னிடம் பணம் இருப்பதற்கும் அர்த்தம்; இறைவன் அதற்காகவே கொடுத்து வைத்திருக்கிறான் என்றே நினைத்து செயல் படவேண்டும் என்ற உயரியக் கருத்தை அழகாக தந்துள்ளீர்கள் ஐயா! அருமை.

    நல் வினைப்பயனால் வந்தப் பொருளைக் கொண்டு தீவினைப் பயனால் வரும் துயரங்களுக்கு உதவுவது ஒரு வகையில் மீதம் நம்மிடம் ஒட்டி இருக்கும் நமது தீவினைப் பயனை கழிப்பதே (செலவளிப்பதே) ஆகும் என்பதை கதையின் வழியே தாங்கள் கூறும் நீதி!!!....
    மிகவும் அருமை...

    ''ஊரணி நீர்நிறைந் தற்றே உளவாம்
    பேரறி வாளன் திரு''

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. அருமையான உண்மை நிகழ்வுகளை தெளிவாக கூறிவருகிறீர்கள் . நன்றி அய்யா

    ReplyDelete
  5. நல்ல கதை .
    மனம் படைத்தோரே மார்க்கம் கண்டோர். சல்லிப்பைசா இழக்காமல் தர்மமோ உதவியோ செய்யாமல் சேர்த்து சேர்த்து வைப்பவர்கள் ,ஒரு நாள் மொத்தமாக இழப்பார்கள் என்பது இந்த கதையில் உண்மையாகி உள்ளது .வாத்தியாரின் கதைகளில் குடும்ப தலைவிகளே பிரதானம். இங்கும்.சிந்தாமணி ஆச்சியார் வினைப்பயன் பற்றி திருப்பி பேசும் இடம் எனக்கு மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  6. Guru Vanakkam,

    Again a superb story. What I like the most in your stories is the way you bring out, Courtesy and bakthi.
    Writing good things is also a social service which is what you are doing relentlessly.

    Keep up the good work.

    Regards
    RAMADU

    ReplyDelete
  7. குருவிற்க்கு வணக்கம்
    நண்றி

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    ஜூன் 3ஆம் தேதி இரவு 7மணியளவில் என்னுடைய PULSOR 150 CC வண்டி தொலைந்து போயிற்று. இன்றுவரை மாற்று வண்டி வாங்க வசதி வரவில்லை. நடந்தே பிராட்பேண்ட் faultஐ பார்த்து வருகின்றேன் 2008இல் வாங்கியது. மனம் அழுது புலம்பிவிட்டேன், என்ன வினைபயானோ தெரியவில்லை, 1983இல் canon A1 CAMERA ரூபாய் 5000மதிப்பு 2009இல் 5000மதிப்புள்ள NOKIA CELLPHONE, 2011இல் varilux A1 EYE CLASS RS8000,எல்லாம் தொலைத்தேன், 7 வருடமாக photography side businessஇல் படுநஷ்டம் CTO CHENNAI DIVNலிருந்து மாற்றுதலாகி BSNL CHENNAI TELEPHONEளுக்கு வந்தேன், உண்மையை சொல்லுகிறேன் இதுவரை லஞ்சம் கூட வாங்கியது கிடையது.D.O.B 29.6.60 8.45AM. CHENNAI. " கணக்கன் கணக்கரிவான் ஆனால் தன் கணக்கை அறியான்" இது உண்மை அதனால் கேட்கிறேன் ஒரே கேள்வி நான் என்ன செய்ய வேண்டும் வினைப்பயன் தீர.
    G R MURUGAN BSNL CHENNAI

    ReplyDelete
  9. Respected Sir,

    Meaningful story....It's very practical.........

    Thanks for your post.......

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  10. இறைக்க, இறைக்கத் தான் கேணி ஊறும். அதைப் போல், இயன்ற அளவில், தர்மம் செய்யச் செய்ய, நன்மைகள் பெருகும் என்பதை உணர்த்தும் அற்புதமான கதை. நிறைய வார்த்தைகள் மனதில் நின்றன.

    //முருகப் பெருமான் உங்கள் கால்களைப் பார்த்து உதவுவதில்லை. உங்கள் மனதைப் பார்த்துத்தான் உதவுவார்.அதைப் புரிந்து கொள்ளுங்கள்”//

    "இறைவன் நிறைந்த கைகளை அல்ல, (கறை படியாத) சுத்தமாக இருக்கும் கரங்களையே பார்க்கிறான்" என்று முன்பு ஒரு முறை படித்ததை நினைவுபடுத்தும் அருமையான வரிகள்.

    செட்டியார்களின் கொடை, ஆச்சிமார்களின் தர்ம சிந்தனையால் பெருகுகிறது என்பது மிக நன்றாகப் புரிந்தது. மனைவி, கணவனுக்கு, நல்லதொரு மந்திரியைப் போல், தவறு செய்யும் போது, இடித்துரைத்துத் திருத்த வேண்டும்.இதைப் புரிந்து கொண்டு, செயலில் காட்டிய ஆச்சி பாராட்டுக்குரியவர். சொந்தத் தங்கை, தம்பிகளை மட்டுமல்லாது, ஒன்று விட்ட சொந்தங்களைக் கூட விட்டுக் கொடுக்காது, 'செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்' என்னும் உயர்ந்த மனப்பாங்கு கொண்ட ஆச்சி நினைவில் நிற்கிறார்.

    கடைசி வரியான,

    // ”செய்யும் உதவியை, வெளிச்சம் போட்டுக் காட்டினால், அதற்குப் பலன் கிடையாது” என்று ஆச்சி சொல்வார்கள். //
    மிக அருமை.

    அருமையானதொரு கதை பதிவில் தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  11. இந்தக் கதையில் செட்டியார் பொருள் இழந்ததைப் படித்தவுடன் ஈயார் தேட்டை தீயார் கொள்வர் - கொன்றை வேந்தன் (பாடல் 4 ) நினைவிற்கு வந்தது.

    பூட்டி வைக்கப் பட்டுள்ள வாகனங்கள் காணாமல் போகும் போது, நான் சில சமயங்களில் கவனக் குறைவாக வாகனத்தைப் பூட்டி விட்டு சாவியை ஞாபக மறதியாக அதிலேயே விட்டு வந்திருக்கிறேன். (சில காலங்களுக்கு முன்பு, இப்போதல்ல) எதுவும் திருடு போனதில்லை. இதை எந்த வகையான கர்ம வினையில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  12. ////Blogger Bhuvaneshwar said...
    Good morning vaathiyaar sir! Superb!////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger Bhuvaneshwar said...
    What surprises me is the portrayal of the sister in law. Usually brothers would be forthcoming, especially if younger sister comes and asks something. It is their wives who would prevent them from helping their sisters. Here, the brother is a miser and his wife entreats him to help her naathanaar.////

    அந்த வித்தியாசம்தான் கதைக்கு சுவையைச் சேர்த்தது. உங்கள் மனதிலும் இடம் பிடித்தது. நன்றி புவனேஷ்!

    ReplyDelete
  14. //////Blogger ஜி ஆலாசியம் said...
    அருமையான கருத்தைக் கொணர்ந்தக் கதை....
    புற்றுநோய் மருத்துவம் பற்றிய வைத்திய முறை, மருந்துகள் யாவும் விளக்கமாக எடுத்தாண்டு உள்ளது அருமை...
    எனக்கு மட்டும் ஏனிப்படி என்று ஏங்குவோருக்கு வினைப்பயனை பற்றிய அழகிய விளக்கம்; அதுவே ஆழ்ந்த விளக்கமும் கூட.
    அனுபவிக்கும் தீமைகள் வினைப்பயனால் என்பதால் அனுபவித்தாலும், இயற்கையாகவே அப்படி அனுபவிப்பவர்கள் அதற்கு ஏதாக மிகவும் நேர்மையானவர்களாக இருப்பதும் எதார்த்தம் அதை கதையில் காண்பித்து குறிபிட்டது இன்னும் அருமை.
    வரவும் செலவும்; வினைப் பயனால் என்பதால்.... வரவு வரும் போது வரவில் வைக்கும் யாவரும், இது போன்று பாவப்பட்டவர்கள் கையேந்தும் போது வரவைப் பார்த்தவர்கள் செலவைப் பார்க்க மனம் ஒப்புவதில்லை. செலவளிக்க வேண்டும் என்று விதி ஒரு புண்ணியமான வழியில் செலவளிக்க வாய்ப்பளிக்க செய்த போது அதை செய்யாது விட்டவர், ஒரு பெரிய இழப்பிற்கு பிறகு உணர்ந்தது அருமை. அதை உணர்த்திய ஆச்சியின் தெய்வ உள்ளம் அருமையிலும் அருமை.
    இருந்தால் புண்ணிய காரியங்களுக்கு செலவளிப்பது நல்லது... அதுவும் அப்படி ஒரு வாய்ப்பு வரும் போது இருப்பவர்கள் தட்டாமல் செலவளிப்பதே நல்லது. அது தான் தன்னிடம் பணம் இருப்பதற்கும் அர்த்தம்; இறைவன் அதற்காகவே கொடுத்து வைத்திருக்கிறான் என்றே நினைத்து செயல் படவேண்டும் என்ற உயரியக் கருத்தை அழகாக தந்துள்ளீர்கள் ஐயா! அருமை.
    நல் வினைப்பயனால் வந்தப் பொருளைக் கொண்டு தீவினைப் பயனால் வரும் துயரங்களுக்கு உதவுவது ஒரு வகையில் மீதம் நம்மிடம் ஒட்டி இருக்கும் நமது தீவினைப் பயனை கழிப்பதே (செலவளிப்பதே) ஆகும் என்பதை கதையின் வழியே தாங்கள் கூறும் நீதி!!!....
    மிகவும் அருமை...
    ''ஊரணி நீர்நிறைந் தற்றே உளவாம்
    பேரறி வாளன் திரு''
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    சிறப்பானதொரு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. ////Blogger Gnanam Sekar said...
    அருமையான உண்மை நிகழ்வுகளை தெளிவாக கூறிவருகிறீர்கள் . நன்றி அய்யா////

    அனைத்தும் கற்பனை நிகழ்வுகள்தான் நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger eswari sekar said...
    vanakam sir story super////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger thanusu said...
    நல்ல கதை .
    மனம் படைத்தோரே மார்க்கம் கண்டோர். சல்லிப்பைசா இழக்காமல் தர்மமோ உதவியோ செய்யாமல் சேர்த்து சேர்த்து வைப்பவர்கள் ,ஒரு நாள் மொத்தமாக இழப்பார்கள் என்பது இந்த கதையில் உண்மையாகி உள்ளது .வாத்தியாரின் கதைகளில் குடும்ப தலைவிகளே பிரதானம். இங்கும்.சிந்தாமணி ஆச்சியார் வினைப்பயன் பற்றி திருப்பி பேசும் இடம் எனக்கு மிகவும் பிடித்தது////.

    அதுபோன்ற சிறந்த குடும்பத் தலைவிகள் பலரை நான் பார்த்துள்ளேன். அதை வெளிப் படுத்தும் முகமாகத்தான் பல கதைகளில் நாயகிகளே உயர்வாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். நன்றி தனுசு!

    ReplyDelete
  18. /////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Again a superb story. What I like the most in your stories is the way you bring out, Courtesy and bakthi.
    Writing good things is also a social service which is what you are doing relentlessly.
    Keep up the good work.
    Regards
    RAMADU/////

    உண்மைதான் நண்பரே. நல்ல விஷயங்களைச் சமூகத்திற்குச் சொல்வதும் ஒரு பொது சேவைதான். நன்றி!

    ReplyDelete
  19. //Blogger Udhaya Kumar said...
    குருவிற்க்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  20. கதை... அது பற்றி
    கருத்துச் சொன்ன தோழர்

    சிங்கை செல்வர் ஆலாசியத்தின்
    பின்ஊட்டம் நெஞ்சை தொட்டு நின்றது

    கதை விமர்சனம் என்பதால்...
    சில.. உங்களிடம்..

    தானம் என்பது வேறு
    தர்மம் என்பது வேறு..

    அடுத்தவர்களுக்கு தெரியவேண்டும்
    அல்லது தான் தர்மம் செய்யவேண்டும் என்பதற்காகவே ஏழ்மையில் பலர் இருக்க வேண்டும் என விரும்புவர்..

    தான் உயர்ந்த சாதி என காட்டிக் கொள்வதற்காகவே ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பவர்களும் உண்டு (இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் என்பதை அப்படி புரிந்து கொள்ளும் புத்தி(கோ)மான்கள்)

    தோட்டத்து மல்லிகைக்கும்
    டப்பாவில் அடைபட்டிருக்கும்
    மல்லிகைப் பூ தெளிப்பானுக்கும்
    (சென்டு)உள்ள வேறுபாடு தெரிந்தால்
    இவர்கள் தெளிவார்கள் திருந்துவார்கள்..

    பணம் படைத்தவன் செல்வந்தன் என்றும் பணம் இல்லாதவர் ஏழை என்பதே அடிப்படை தவறு..

    எடுக்க வேண்டும் அல்லது பெற/அடைய வேண்டும் என விரும்பும் அத்தனைபேருமே ஏழைகள் தான்..
    (என்றால் எத்தனை பேர் நம் மீது க(சொ)ற்களை எடுத்து எறிவர்..??)

    வைரமுத்துவின் வரிகளை வகுப்பறையில்
    வைக்கின்றோம்

    உயர்வும் தாழ்வும் ஒப்பீடே..
    செடியுடன் ஒப்பிடு புல் உயரமில்லை
    மரத்தோடு ஒப்பிடு செடி உயரமில்லை
    மலையோடு ஒப்பிடு மரம் உயரமில்லை
    நிலவோடு ஒப்பிடு மலை உயரமில்லை
    அப்போ நிலா உயரம் தானே..
    இல்லை
    அதனினும் உயரம் நம் அறிவுக்கு எட்ட வில்லை

    ReplyDelete
  21. /////Blogger murugan said...
    வணக்கம் ஐயா,
    ஜூன் 3ஆம் தேதி இரவு 7மணியளவில் என்னுடைய PULSOR 150 CC வண்டி தொலைந்து போயிற்று. இன்றுவரை மாற்று வண்டி வாங்க வசதி வரவில்லை. நடந்தே பிராட்பேண்ட் faultஐ பார்த்து வருகின்றேன் 2008இல் வாங்கியது. மனம் அழுது புலம்பிவிட்டேன், என்ன வினைபயானோ தெரியவில்லை, 1983இல் canon A1 CAMERA ரூபாய் 5000மதிப்பு 2009இல் 5000மதிப்புள்ள NOKIA CELLPHONE, 2011இல் varilux A1 EYE CLASS RS8000,எல்லாம் தொலைத்தேன், 7 வருடமாக photography side businessஇல் படுநஷ்டம் CTO CHENNAI DIVNலிருந்து மாற்றுதலாகி BSNL CHENNAI TELEPHONEளுக்கு வந்தேன், உண்மையை சொல்லுகிறேன் இதுவரை லஞ்சம் கூட வாங்கியது கிடையது.D.O.B 29.6.60 8.45AM. CHENNAI. " கணக்கன் கணக்கரிவான் ஆனால் தன் கணக்கை அறியான்" இது உண்மை அதனால் கேட்கிறேன் ஒரே கேள்வி நான் என்ன செய்ய வேண்டும் வினைப்பயன் தீர.
    G R MURUGAN BSNL CHENNAI/////

    மகம் நட்சத்திரம். கடக லக்கினம்
    தொடர்ந்து ஏழரை ஆண்டுகள் ஏழரைச் சனி பிடித்து வைத்திருந்து விட்டு சமீபத்தில்தான் உங்களை விடுவித்துள்ளது.
    25.10.2005 முதல் ராகு திசை நடைபெறுகிறது சாமி!
    லக்கினத்தில் விரையாதிபதி புதன்
    லக்கினாதிபதி சந்திரன் மேல் ராகு ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறார்.
    இரண்டாம் வீட்டில் குறைந்த (21) பரல்கள்
    4 & 11 ற்குரிய சுக்கிரன் 12ல்
    தலை சுற்றுகிற அமைப்பு!
    ஆனாலும் நஷ்ட ஈடு அருமையாக வழங்கப்பெற்றுள்ளது. 4ஆம் வீடும் 10ஆம் வீடும் அதிக பரல்களுடன் சூப்பராக உள்ளது.
    ரோட்டி, கப்டா, மக்கானுக்கு என்றும் கவலையில்லை!

    ReplyDelete
  22. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Meaningful story....It's very practical.........
    Thanks for your post.......
    With kind regards,
    Ravi/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //////Blogger Parvathy Ramachandran said...
    இறைக்க, இறைக்கத் தான் கேணி ஊறும். அதைப் போல், இயன்ற அளவில், தர்மம் செய்யச் செய்ய, நன்மைகள் பெருகும் என்பதை உணர்த்தும் அற்புதமான கதை. நிறைய வார்த்தைகள் மனதில் நின்றன.
    //முருகப் பெருமான் உங்கள் கால்களைப் பார்த்து உதவுவதில்லை. உங்கள் மனதைப் பார்த்துத்தான் உதவுவார்.அதைப் புரிந்து கொள்ளுங்கள்”//
    "இறைவன் நிறைந்த கைகளை அல்ல, (கறை படியாத) சுத்தமாக இருக்கும் கரங்களையே பார்க்கிறான்" என்று முன்பு ஒரு முறை படித்ததை நினைவுபடுத்தும் அருமையான வரிகள்.
    செட்டியார்களின் கொடை, ஆச்சிமார்களின் தர்ம சிந்தனையால் பெருகுகிறது என்பது மிக நன்றாகப் புரிந்தது. மனைவி, கணவனுக்கு, நல்லதொரு மந்திரியைப் போல், தவறு செய்யும் போது, இடித்துரைத்துத் திருத்த வேண்டும்.இதைப் புரிந்து கொண்டு, செயலில் காட்டிய ஆச்சி பாராட்டுக்குரியவர். சொந்தத் தங்கை, தம்பிகளை மட்டுமல்லாது, ஒன்று விட்ட சொந்தங்களைக் கூட விட்டுக் கொடுக்காது, 'செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்' என்னும் உயர்ந்த மனப்பாங்கு கொண்ட ஆச்சி நினைவில் நிற்கிறார்.
    கடைசி வரியான,
    // ”செய்யும் உதவியை, வெளிச்சம் போட்டுக் காட்டினால், அதற்குப் பலன் கிடையாது” என்று ஆச்சி சொல்வார்கள். //
    மிக அருமை.
    அருமையானதொரு கதை பதிவில் தந்தமைக்கு நன்றி ஐயா./////

    உங்களின் மேன்மையான பாராட்டிற்கு நன்றி சகோதரி!! எழுதுகிறவர்களுக்கு இதுபோன்ற பாராட்டுக்கள்தான் ஊக்க மருந்தாகும்!

    ReplyDelete
  24. ///////Blogger ananth said...
    இந்தக் கதையில் செட்டியார் பொருள் இழந்ததைப் படித்தவுடன் ஈயார் தேட்டை தீயார் கொள்வர் - கொன்றை வேந்தன் (பாடல் 4 ) நினைவிற்கு வந்தது.
    பூட்டி வைக்கப் பட்டுள்ள வாகனங்கள் காணாமல் போகும் போது, நான் சில சமயங்களில் கவனக் குறைவாக வாகனத்தைப் பூட்டி விட்டு சாவியை ஞாபக மறதியாக அதிலேயே விட்டு வந்திருக்கிறேன். (சில காலங்களுக்கு முன்பு, இப்போதல்ல) எதுவும் திருடு போனதில்லை. இதை எந்த வகையான கர்ம வினையில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை/////

    நல்வினை, தீவினை என்று இருவேறு வினைகள் உள்ளன. முதல் கணக்கில் அவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  25. நம் செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் அதன் தகுதியைப் பொறுத்து சம்பளமும்..விலையும் உண்டு எனும் செய்தியை இந்த சிறுகதை சொல்லிச் சென்றுள்ளது! வாத்தியார் ஐயாவிற்கு நன்றி..வணக்கம்!

    ReplyDelete
  26. ஐயா வணக்கம்,

    எப்படித்தான் தங்களால் மட்டும் முடியுதோ மிகவும் அருமையாக எழுத ஐயா. ஒன்றை இங்கு கூற விரும்புகின்றேன் . தங்களைவிட மிகவும் அருமையாக தாங்களே வியக்கும் வண்ணம் ஒருநாள் ஒரு பொழுதாவது வகுப்பறையில் ஒரு ஆக்கத்தை தருவேன் இது உறுதல் ஐயா.

    ReplyDelete
  27. ///அய்யர் said...
    கதை... அது பற்றி
    கருத்துச் சொன்ன தோழர்

    சிங்கை செல்வர் ஆலாசியத்தின்
    பின்ஊட்டம் நெஞ்சை தொட்டு நின்றது///

    நன்றிகள் பல திருவாளரே!


    ////கதை விமர்சனம் என்பதால்...
    சில.. உங்களிடம்..

    தானம் என்பது வேறு
    தர்மம் என்பது வேறு...////

    வாத்தியாருக்கு என்று குறிபிட்டிருக்கிறீர்கள்!

    அதை ஐயா அவர்கள் அறிவார் என்பதை ஐயரும் அறிவார் அதனால் அது பொதுவானது என்று எடுத்துக் கொள்கிறேன்!::)))

    தானம் என்பது உடலானால், தர்மம் என்பது அதன் உயிரெனக் கொள்வோம்.


    ///அடுத்தவர்களுக்கு தெரியவேண்டும்
    அல்லது தான் தர்மம் செய்யவேண்டும் என்பதற்காகவே ஏழ்மையில் பலர் இருக்க வேண்டும் என விரும்புவர்..///

    எனக்கென்னமோ தர்மம் செய்யும் அளவிற்கு உண்மையான இளகிய மனம் கொண்டோருக்கு இப்படி எண்ணமிருக்கும் என்றுத் தோன்றவில்லை.

    அய்யர் சொல்கிறார்...அனைவரும் கேட்கிறார்!!!

    ////தான் உயர்ந்த சாதி என காட்டிக் கொள்வதற்காகவே ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பவர்களும் உண்டு (இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் என்பதை அப்படி புரிந்து கொள்ளும் புத்தி(கோ)மான்கள்)////

    யார் யாரை அப்படி இருக்கச் செய்வது?

    அய்யர் என்ன குழப்புகிறார் இங்கே...

    ஒருவரை ஏழையாக வைத்திருப்பது இன்னொருவரின் செயலா! அதெப்படி சாத்தியம். எக்காலத்தைப் பற்றிய செய்தி இது!!!??

    ''இட்டார் பெரியோ இடாதார் இழிகுலத்தோர்'' உயர்ந்த குலத்தின் லட்ச்சனமாக கூறப் பட்டதாகவே நான் அறிகிறேன். (தன்னிடம் இருக்கும் எதனையும் இல்லாதவர்களுக்கு இடுவது என்பதையே இங்கும் கொள்ளலாம்)

    அய்யர் சொல்வதை பார்த்தால் பணக்காரன் எல்லாம் உயர்ந்த சாதி என்பதாகவே பொருள் கொள்ளச் செய்கிறது??!!


    ///தோட்டத்து மல்லிகைக்கும்
    டப்பாவில் அடைபட்டிருக்கும்
    மல்லிகைப் பூ தெளிப்பானுக்கும்
    (சென்டு)உள்ள வேறுபாடு தெரிந்தால்
    இவர்கள் தெளிவார்கள் திருந்துவார்கள்..///

    :::)))) தத்துவம் என்பதால் எல்லோருக்கும் புரியாது அதில் நான் மட்டும் விதி விளக்கா என்ன:::)))

    ////பணம் படைத்தவன் செல்வந்தன் என்றும் பணம் இல்லாதவர் ஏழை என்பதே அடிப்படை தவறு..////

    அய்யர் இங்கே தான் நிற்கிறார்... அப்படியானால் ஒருவனை ஏழையாக வைத்திருக்க பணம் மட்டும் படைத்தவனால் எப்படி முடியும் ஐயா!

    ////எடுக்க வேண்டும் அல்லது பெற/அடைய வேண்டும் என விரும்பும் அத்தனைபேருமே ஏழைகள் தான்..
    (என்றால் எத்தனை பேர் நம் மீது க(சொ)ற்களை எடுத்து எறிவர்..??)///

    இது முக்காலமும் உண்மையே!

    பொதுவாக உலக வழக்கில் பேசும் ஏழை என்பவன பொருளாதாரத்தை பற்றிய கருத்தே....

    அய்யரின் கருத்து அதனினும் பெரியது பெரியவர்களே அதைனை அறிவர் புரிவர்.. பாமரர்கள் அறிவது கடினமே!



    ///வைரமுத்துவின் வரிகளை வகுப்பறையில்
    வைக்கின்றோம்

    உயர்வும் தாழ்வும் ஒப்பீடே..
    செடியுடன் ஒப்பிடு புல் உயரமில்லை
    மரத்தோடு ஒப்பிடு செடி உயரமில்லை
    மலையோடு ஒப்பிடு மரம் உயரமில்லை
    நிலவோடு ஒப்பிடு மலை உயரமில்லை
    அப்போ நிலா உயரம் தானே..
    இல்லை
    அதனினும் உயரம் நம் அறிவுக்கு எட்ட வில்லை////



    இன்னொரு வைரமுத்துப் பாடல்கள் ஐயா!

    ஒருவன் ஒருவன் முதலாளி,

    உலகில் மற்றவன் தொழிலாளி...

    அந்த முதலாளிதானே உலகில் அனைத்திலும் உயர்ந்தவனாக இல்லை அதற்கும் அய்யர் கருத்து சொல்வார் தவறென்று..

    எல்லாமே அவனாகிப் போனதால்!!!

    ஒப்பிட வழியில்லாதபோது எதனோடு ஒப்பிட்டு அவனை உயர்ந்தவன் என்பது.

    அய்யர் ஏதோ சொல்லவந்தார்கள் என்றாலும் அவரின் பின்னூட்டம் என்னை இப்படி சொல்லச் செய்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  28. ////Blogger Gift: You and Me(chandrasekar) said...
    VERY NICE SIR////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    நம் செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் அதன் தகுதியைப் பொறுத்து சம்பளமும்..விலையும் உண்டு எனும் செய்தியை இந்த சிறுகதை சொல்லிச் சென்றுள்ளது! வாத்தியார் ஐயாவிற்கு நன்றி..வணக்கம்!////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  30. ////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்,
    எப்படித்தான் தங்களால் மட்டும் முடியுதோ மிகவும் அருமையாக எழுத ஐயா. ஒன்றை இங்கு கூற விரும்புகின்றேன் . தங்களைவிட மிகவும் அருமையாக தாங்களே வியக்கும் வண்ணம் ஒருநாள் ஒரு பொழுதாவது வகுப்பறையில் ஒரு ஆக்கத்தை தருவேன் இது உறுதி ஐயா./////

    அப்படி நடந்தால், உங்களைவிட நான்தான் அதிக மகிழ்ச்சி கொள்வேன். நடந்தேற வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com