மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.9.12

Astrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா?!

Astrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா?!

எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு!

எவ்வளவுதான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக் குறை!

இங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல!

தலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்

சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்! அது
இயற்கையானதுதான்.

”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோஜனமுமில்லை. உழைப்போடு அறிவும் சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்!” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.

சிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம் நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய
உழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும்  நிறுவனத்தில் நல்ல பெயரைத்
தட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.

இது ஒருவகை!

சிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”

அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை!

ஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான்.
ஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.

மாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன்,
விருதை வாங்கிக் கொண்டு  போய்விடுவான்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு  ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.

அதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.

மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50  ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர்  கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் -

தேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.

ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால்
காந்திஜி அமரவில்லை. இந்தியாவின்  முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா?

அவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள்
பதவியில் அமர்ந்தார் என்று சொல்லலாம்.

சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை?

அவருடைய ஜாதகப்பலன் அதுதான்.

அவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது  சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது.

அதனால்தான் அவர் பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.

நேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன

சீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல! இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான
குறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ்,
செல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.

இந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம்  என்பது கனவாகத்தான் இருக்கும்.

அது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று  எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும்.

குடும்பவாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம்  (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள் இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

லக்கினத்தை அலசும் குறுக்குவழி இதுதான்.

இது மேல்நிலை வகுப்பிற்கான பாடம் (classroom2012) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பொதுவகுப்பில் வலை
ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

42 comments:

  1. Respected Sir
    Simply superb...Like SUPER STAR....No more word to say.....
    A lot of Thanks for your excellent lesson.....

    With Regards
    R.Saravanan

    ReplyDelete
  2. மிகவும் அருமையானப் பாடம்...
    லக்னத்தில் குறைந்த பரல் இருப்பதன் பலன் இப்படி இருப்பினும்.
    அதே நேரம் காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கும்
    இது ஒரு சிறந்த அமைப்பாகவும் அமையும், அப்படிப் பார்க்கையில்
    இப்படி லக்னத்தில் குறைந்த பரல்கள் இருப்பதும் ஒருவகையில் நன்மையே::::))))
    தாங்கள் குறிப்பிடுவது போல் எல்லோருக்கும் 337 தானே!

    பாடத்திற்கும், பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. குருவிற்க்கு வணக்கம்,
    நன்றி

    ReplyDelete
  4. இன்று வந்த முயலும்,மொழியும்,முத்து .

    ReplyDelete
  5. சுருங்க சொல்லி புரிய வைப்பதில் வாத்தியார் வாத்தியார் தான். இத்தனை சுலபமாக புரியும்படி தேடினாலும் கிடைக்காத ஜோதிட குறிப்புகள் இவை.நல்ல பதிவு நன்றி அய்யா.

    ReplyDelete
  6. /////தேசபிதாவுக்கு லக்னத்தில் பரல்கள் குறைவு. அதனால் பதிவிக்கு வரவில்லை.////

    தேசத்தந்தைக்கு பதவி இல்லை பவர் இருந்தது. ஆனால் இன்று பதவி இருக்கிறது பவர் இல்லை.

    ReplyDelete
  7. எனக்கு இருப்பதிலேயே லக்னத்துக்குத்தான் பரல்கள் அதிகம் 33 . அடுத்த இடம் பதினொன்றாம் வீட்டுக்கு 32 . இருந்தும் சில இடங்கள் அடி வாங்கி விட்டது .இன்றைய பதிவு எனக்கு கொஞ்சம் பொருந்துகிறது. இந்த ஜோதிட பாடங்கள் என்னை எனக்கே புரியவும் வைக்கிறது. நன்றிகள் அய்யா .

    ReplyDelete
  8. பாடம் படித்தேன்.பயன் பெற்றேன். நன்றி ஐயா!

    காந்திஜிக்கு தேசத்தந்தை என்ற ப‌ட்டம் யாரால் எப்போது கொடுக்கப்பட்டது என்று ஒரு சிறுமி சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டாள். அதற்கான அரசாணை ஏதாவது உள்ளதா என்பது கேள்வி.ஆவணக் காப்பகத்தில் அப்படிப்பட்ட ஆவணம் ஏதும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.

    காந்திஜியின் மனைவியார் அன்னை கஸ்தூரிபாய் இறந்த அன்று, சுபாஷ் சந்திர போஸ் ராணுவ முகாமில் இருந்து அவர்களுடைய தனிப்பட்ட வானொலியில் காந்திஜிக்கு இரங்க‌ல் செய்தியைக் கூறினார்.அப்போது காந்திஜி ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்."நீங்கள் நடத்தும் சத்தியாகிரகப் போராட்டத்தினால் விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயரை வெளியேற்றி விடமுடியும் என்று தோன்றவில்லை.எனவே ஆயுதம் ஏந்திவிட்டோம்.எங்க‌ளை ஆசீர்வதியுங்கள் தேசத் தந்தையே" என்று அச்செய்தியில் கூறினார்.அதுதான் முதல் முதலாக அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்ட தருணம். காந்திஜியை நாம் இழந்த அன்று அப்போதைய பிரதமர் நாட்டுக்கு ஆற்றிய உரையில் மீண்டும் தேசத்தந்தை என்று காந்திஜியைக்குறிப்பிட்டார்







    ReplyDelete
  9. Queen Victoria - 24
    Obama - 24
    Indira Gandhi - 24

    How to justify the above cases...those with lagana parals less than average?

    ReplyDelete
  10. அய்யா வணக்கம்,

    லக்ன பரல்கள் வைத்து பார்க்கும் பொழுது புரிகிறது என் வீட்டில் இருப்பவர்களின் முக்கியத்துவம்
    இப்பொழுது மனம் சமாதானம் அடைந்தது

    நன்றி

    ReplyDelete
  11. இந்த முறை என் ஜாதகம் மட்டுமின்றி, கல்லூரியில் மாணவர் செயலாளராக தேர்தலில் வெற்றி பெற்ற என் தோழனின் ஜாதகம், இன்னும் குறிப்பிடத்தக்க பொறுப்பில் இருக்கும் (சின்ன லெவல் பொறுப்புதான்) ஆறு பேரின் ஜாதகத்தை அலசினேன்.

    அவர்களில் ஒருவர் பெண். அவருக்கு அதிகபட்சமாக லக்னத்தில் 38 பரல்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் படிக்கும்போது பயந்த சுபாவமாக இருந்த அந்த பெண் திருமணமாகி பெரிய நகரம் ஒன்றுக்கு சென்று அரசியல்வாதி கணவரின் வற்புறுத்தலால் கவுன்சிலராக இருக்கிறார்.

    லக்னத்தை குறுக்கு வழியில் அலசும் வழி அருமை ஐயா.

    (அடியேனுக்கு லக்னத்தில் 22 பரல்கள்தான். நான் எழுதி அனுப்பும் கதைகள், கட்டுரைகள் பல நேரங்களில் பிரசுரமாகாது. ஆனால் நண்பர்களின் படைப்பை லேசாக திருத்தி பட்டி டிங்கரிங் செய்து கொடுத்து அனுப்ப சொல்வேன். அவை சில நேரங்களில் அவர்களுக்கு பரிசுகள் கூட பெற்றுத்தந்திருக்கின்றன.

    எல்லாம் லக்ன அமைப்பு செய்த மாயம் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த நிலைக்காக வருத்தப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் 337ஆம் நம்பர் டானிக் இருக்கே)

    ReplyDelete
    Replies
    1. ayya vanakam paralkalai kanakiduvathu mattum puriyavillai thayau seithu uthaungal

      Delete
  12. kmr.krishnan said...காந்திஜிக்கு தேசத்தந்தை என்ற ப‌ட்டம் யாரால் எப்போது கொடுக்கப்பட்டது என்று ஒரு சிறுமி சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டாள். அதற்கான அரசாணை ஏதாவது உள்ளதா என்பது கேள்வி.ஆவணக் காப்பகத்தில் அப்படிப்பட்ட ஆவணம் ஏதும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.

    காந்திஜியின் மனைவியார் அன்னை கஸ்தூரிபாய் இறந்த அன்று, சுபாஷ் சந்திர போஸ் ராணுவ முகாமில் இருந்து அவர்களுடைய தனிப்பட்ட வானொலியில் காந்திஜிக்கு இரங்க‌ல் செய்தியைக் கூறினார்.அப்போது காந்திஜி ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்."நீங்கள் நடத்தும் சத்தியாகிரகப் போராட்டத்தினால் விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயரை வெளியேற்றி விடமுடியும் என்று தோன்றவில்லை.எனவே ஆயுதம் ஏந்திவிட்டோம்.எங்க‌ளை ஆசீர்வதியுங்கள் தேசத் தந்தையே" என்று அச்செய்தியில் கூறினார்.அதுதான் முதல் முதலாக அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்ட தருணம். காந்திஜியை நாம் இழந்த அன்று அப்போதைய பிரதமர் நாட்டுக்கு ஆற்றிய உரையில் மீண்டும் தேசத்தந்தை என்று காந்திஜியைக்குறிப்பிட்டார்

    நன்றி கிருஷ்ணன் சார். எல்லாமே கேட்டிராத புதிய செய்தி.

    ReplyDelete
  13. I came to know that 35 paral in my lagna... will i go up in position?
    Subhashini, Dubai

    ReplyDelete
  14. I hear that 35 paral in my lagna.. wat abt my career prospects sir?

    Subhashini, Dubai

    ReplyDelete
  15. மிகவும் அருமையானப் பாடம். லக்னதில் அதிக பரல்கள் இருப்பது நன்மை, இது அனைத்து லக்னகளுக்கும் பொருந்துமா? இல்லை லக்னதுக்கு லக்னம் மாறுபடுமா?

    ReplyDelete
  16. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு மாலை வணக்கம்.

    ReplyDelete
  17. லக்கினத்தில் உள்ள பரல்கள் ஓரளவுக்கு கோடிட்டு காட்டும் என்பது ஒப்புக்கொள்ள முடியும். ஆயினும், மற்ற கிரக அமைப்புகள் ஒருத்தனை தலைமைக்கு உயர்த்தலாம் இல்லையா? லக்கினத்தில் அதிக பரல்கள் என்றால், அவனது இயற்கையில் தலைமைப்பண்பும் ஆளுமையும் அதிகம் எனக்கொள்ளலாம். அதற்கேற்ற கிரக அமைப்புகள் துணை புரிந்தால் அவனால் அத்தலைமைப்பதவியை நன்கு தக்க வைக்க முடியும் (யாரும் அசைச்சுக்க முடியாது).....

    அதே போல, லக்கினத்தில் சற்றே குறைந்த பரல்கள் உள்ளவனும், மற்ற கிரக அமைப்பால் தலைவனாகலாம். ஆனால் அது நிலைக்குமா, நிலைத்தால் எவ்வளவு காலம்? இதெல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் பார்த்து, தசா புக்தி பார்த்து சொல்ல வேண்டிய விஷயங்கள் அல்லவா?

    அதே போல, ஒரு குறிப்பிட்ட நற்கிரக அமைப்புள்ள மங்கையை மணந்தவன் அரசனாவான் (அதாவது தலைவனாவான்) என்று உள்ளது அல்லவா? அப்படி பார்த்து கலியாணம் கட்டிக்கொண்டால் (அப்படி ஒரு பெண் கிடைக்க வேண்டும், அவள் ஜாதகம் பொருந்த வேண்டும் என்கிற நடைமுறை விஷயங்கள் உண்டு - அது தான் வினைப்பயன்!!!!!!) அவளுடைய ஜாதக விசேஷத்தால் இவன் முன்னேறலாம் இல்லையா?

    "முன்னேறதுக்கு எப்படில்லாம் யோசிக்கரானுவ நம்ம பசங்க", நு நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு கேக்குது கேக்குது கேட்டுருச்சு!!!)

    நான் ஏன் சொல்கிறேன் என்றால், என்னைப்பொறுத்தவரை (தனிப்பட்ட எண்ணம், தவறாக இருப்பின் வாத்தியார் திருத்த வேண்டுகிறேன்), கலியாணம் ஆனா பின் தான் ஒருத்தனுடைய வாழ்க்கை, அந்த இரண்டு ஜாதகங்களின் கூட்டு கலப்பால் ஒரு நிலையான (அதாது finalized ஓடு பாதையில்) தன்மையை அடைகிறது. அதன் பின்னரே அவனது உண்மையான முன்னேற்றம் வெளிப்பதுகிறது. இவன் யோகக்காரனாக இருந்து வருபவள் ஜாதகம் சரியில்லை எனில் இவன் கிரக பலம் அவள் ஜாதக குறையை சரி செய்து ஈடு கொடுக்கவே சரியாக பொய் விடும் அல்லவா? அதே போல யோகக்காரிக்கு சிறப்பில்லாத/குறையுள்ள ஜாதகத்தை கட்டி வைத்தால் இவள் கிரக பலம் அவனை தூக்கி நிறுத்தவே கழிந்து விடும் அல்லவா? அவளால் இவனுக்கும் இவளால் அவனுக்கும் (ஜாதக ரீதியாக also) exchanges and sharing இருப்பதால் தானே மனைவிக்குரிய வீடு லக்கினத்தை பார்க்க ஏதுவாக, ஏழாம் வீடாக அமைத்தார்கள்? அதாவது ஒருத்தர் ஜாதகம் இன்னொருத்தரின் ஜாதகத்தை பார்ப்பதாக?

    இதை தானே கம்பர் சொன்னார் "அண்ணலும் நோக்கினா னவளும் நோக்கினாள்" என்று! :-)))))))))))))))))))))))))

    [பி. கு: "பயபுள்ள, ஓவரா பேசுற நீயி? ஒழுங்கு மரியாதையா சட்டு புட்டுனு ஒரு புள்ளைய கட்டிட்டு பேசாம அமைதியா போயிரு, இங்கன வந்து அலப்பறைய குடுத்து அலம்பாத" என்று எல்லாம் சின்னப்பசங்களை குச்சியை எடுத்து மிரட்டக்கூடாது! ok? :-)))))]

    இதை சொல்லிய அதே ஒழுகலில் (flow) இன்னொன்றும் தோன்றியது, சொல்லி விடுவிறேன்.

    முன் சொல்லியது போல வீட்டின் காரகத்வம்:

    உதாரணமாக, இரண்டாம் வீட்டு வேலை வாக்கு, குடும்பம், தனம். அதிகம் பேசாமல் வாயைப்பொத்திக்கொண்டு வேலையை பார்த்தால், அந்த கிரக பலம், மற்ற இரண்டுக்கு திருப்பி விடப்படும் அல்லவா? பத்து ரூபாய் இருக்கிறது, அதில் தேவை அற்ற செலவுகளை குறைத்தால் நல்ல தேவையான செலவுகளுக்கு அந்த பத்து ரூபாய் இருக்கும் அல்லவா, அந்த லாஜிக்கில் சொல்கிறேன்.

    பரிகாரத்திலும், இந்த தசை புக்தியில் நமக்கு விரயம் உண்டு எனில் நாமே ஏதாவது தானம் கொடுப்பது/தர்மம் பண்ணுவது போல பண்ணி விட்டால்? ரத்த காயம் ஏற்பட வேண்டிய காலம் எனில் நாமே ரத்த தானம் பண்ணி விட்டால்? அதே போல கடன் வரும் எனில்..... நாமே கடன் வாங்கி வைத்து விட்டால்? நோய் வரும் எனில் முடிந்த வரை மருந்து மாத்திரை எடுக்காமல் தலை வலியை பொறுத்து கொண்டால்?

    வலிமை குறைந்த வீடு/கிரகங்களின் சுப பலன்களை அனுபவிக்க, நாமே அவற்றின் அசுப பலன்களை கொஞ்சம் ஏற்று அனுபவித்து விட்டால் அவற்றின் செயல் ஆற்றல்.பலம் சுப விஷயங்களுக்கு போகுமே என்ற எண்ணம். அதே போல வலிமை பெற்ற கிரகங்களுக்கும்/வீடுகளுக்கும் இதையே செய்தால் நன்மைகளை maximize பண்ணலாமே என்று ஒரு எண்ணம்.

    தங்கள் பரிசீலனைக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன்.

    என்ன வாத்தியாரையா? ரொம்ப யோசிக்கறேனோ? பின்னே? மாணவன் நா சும்மாவா?

    சரி..... நான் போயிட்டு வரவா? அனைவரும் நலமுடன் வாழ்க.

    +++++++

    பிரியங்களுடன்
    புவனேஷ்

    ReplyDelete
  18. அடடே!!.. ரத்தின சுருக்கமான வழி.... நன்றி அய்யா.
    ஜவஹர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  19. /////Blogger saravanan said...
    Respected Sir
    Simply superb...Like SUPER STAR....No more word to say.....
    A lot of Thanks for your excellent lesson.....
    With Regards
    R.Saravanan/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சரண்!!

    ReplyDelete
  20. Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  21. /////Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அருமையானப் பாடம்...
    லக்னத்தில் குறைந்த பரல் இருப்பதன் பலன் இப்படி இருப்பினும்.
    அதே நேரம் காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கும்
    இது ஒரு சிறந்த அமைப்பாகவும் அமையும், அப்படிப் பார்க்கையில்
    இப்படி லக்னத்தில் குறைந்த பரல்கள் இருப்பதும் ஒருவகையில் நன்மையே::::))))
    தாங்கள் குறிப்பிடுவது போல் எல்லோருக்கும் 337 தானே!
    பாடத்திற்கும், பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  22. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    நன்றி/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  23. ////Blogger thanusu said...
    இன்று வந்த முயலும்,மொழியும்,முத்து ./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  24. ////Blogger thanusu said...
    சுருங்க சொல்லி புரிய வைப்பதில் வாத்தியார் வாத்தியார் தான். இத்தனை சுலபமாக புரியும்படி தேடினாலும் கிடைக்காத ஜோதிட குறிப்புகள் இவை.நல்ல பதிவு நன்றி அய்யா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ////Blogger thanusu said...
    /////தேசபிதாவுக்கு லக்னத்தில் பரல்கள் குறைவு. அதனால் பதிவிக்கு வரவில்லை.////
    தேசத்தந்தைக்கு பதவி இல்லை பவர் இருந்தது. ஆனால் இன்று பதவி இருக்கிறது பவர் இல்லை.////

    இன்று பவர் எல்லாம் காசில் இருக்கிறது நண்பர்களே!

    ReplyDelete
  26. /////Blogger thanusu said...
    எனக்கு இருப்பதிலேயே லக்னத்துக்குத்தான் பரல்கள் அதிகம் 33 . அடுத்த இடம் பதினொன்றாம் வீட்டுக்கு 32 . இருந்தும் சில இடங்கள் அடி வாங்கி விட்டது .இன்றைய பதிவு எனக்கு கொஞ்சம் பொருந்துகிறது. இந்த ஜோதிட பாடங்கள் என்னை எனக்கே புரியவும் வைக்கிறது. நன்றிகள் அய்யா .////

    உன்னை அறிந்தால் ..நீ உன்னை அறிந்தால் - இந்த உலகத்தில் போராடலாம்” என்ற வரிகள் நினைவிற்கு வருகிறது தனுசு!

    ReplyDelete
  27. /////Blogger kmr.krishnan said...
    பாடம் படித்தேன்.பயன் பெற்றேன். நன்றி ஐயா!
    காந்திஜிக்கு தேசத்தந்தை என்ற ப‌ட்டம் யாரால் எப்போது கொடுக்கப்பட்டது என்று ஒரு சிறுமி சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டாள். அதற்கான அரசாணை ஏதாவது உள்ளதா என்பது கேள்வி.ஆவணக் காப்பகத்தில் அப்படிப்பட்ட ஆவணம் ஏதும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.
    காந்திஜியின் மனைவியார் அன்னை கஸ்தூரிபாய் இறந்த அன்று, சுபாஷ் சந்திர போஸ் ராணுவ முகாமில் இருந்து அவர்களுடைய தனிப்பட்ட வானொலியில் காந்திஜிக்கு இரங்க‌ல் செய்தியைக் கூறினார்.அப்போது காந்திஜி ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்."நீங்கள் நடத்தும் சத்தியாகிரகப் போராட்டத்தினால் விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயரை வெளியேற்றி விடமுடியும் என்று தோன்றவில்லை.எனவே ஆயுதம் ஏந்திவிட்டோம்.எங்க‌ளை ஆசீர்வதியுங்கள் தேசத் தந்தையே" என்று அச்செய்தியில் கூறினார்.அதுதான் முதல் முதலாக அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்ட தருணம். காந்திஜியை நாம் இழந்த அன்று அப்போதைய பிரதமர் நாட்டுக்கு ஆற்றிய உரையில் மீண்டும் தேசத்தந்தை என்று காந்திஜியைக்குறிப்பிட்டார்/////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  28. ////Blogger Sembiyan said...
    Queen Victoria - 24
    Obama - 24
    Indira Gandhi - 24
    How to justify the above cases...those with lagana parals less than average?////

    லக்கினம் பரல்கள் குறைவாக இருந்தாலும் ஜாதகத்தின் மேன்மை அவர்களைத் தலைவராக்கியிருக்கிறது. வேண்டாமென்று சொல்ல முடியுமா? இந்திரா காந்தி அம்மையாருக்கு ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை! அதை மனதில் வையுங்கள்

    ReplyDelete
  29. ////Blogger Rajeswari Vijayakumar said...
    அய்யா வணக்கம்,
    லக்ன பரல்கள் வைத்து பார்க்கும் பொழுது புரிகிறது என் வீட்டில் இருப்பவர்களின் முக்கியத்துவம்
    இப்பொழுது மனம் சமாதானம் அடைந்தது
    நன்றி////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. ////Blogger eswari sekar said...
    vanakamsir////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  31. /////Blogger சரண் said...
    இந்த முறை என் ஜாதகம் மட்டுமின்றி, கல்லூரியில் மாணவர் செயலாளராக தேர்தலில் வெற்றி பெற்ற என் தோழனின் ஜாதகம், இன்னும் குறிப்பிடத்தக்க பொறுப்பில் இருக்கும் (சின்ன லெவல் பொறுப்புதான்) ஆறு பேரின் ஜாதகத்தை அலசினேன்.
    அவர்களில் ஒருவர் பெண். அவருக்கு அதிகபட்சமாக லக்னத்தில் 38 பரல்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் படிக்கும்போது பயந்த சுபாவமாக இருந்த அந்த பெண் திருமணமாகி பெரிய நகரம் ஒன்றுக்கு சென்று அரசியல்வாதி கணவரின் வற்புறுத்தலால் கவுன்சிலராக இருக்கிறார்.
    லக்னத்தை குறுக்கு வழியில் அலசும் வழி அருமை ஐயா.
    (அடியேனுக்கு லக்னத்தில் 22 பரல்கள்தான். நான் எழுதி அனுப்பும் கதைகள், கட்டுரைகள் பல நேரங்களில் பிரசுரமாகாது. ஆனால் நண்பர்களின் படைப்பை லேசாக திருத்தி பட்டி டிங்கரிங் செய்து கொடுத்து அனுப்ப சொல்வேன். அவை சில நேரங்களில் அவர்களுக்கு பரிசுகள் கூட பெற்றுத்தந்திருக்கின்றன.
    எல்லாம் லக்ன அமைப்பு செய்த மாயம் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த நிலைக்காக வருத்தப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் 337ஆம் நம்பர் டானிக் இருக்கே)////

    ஆமாம். எனக்கும் பல சமயங்களில் அந்த டானிக்தான் மருந்தாகப் பயன்படுகிறது! நன்றி சரண்1

    ReplyDelete
  32. /////Blogger RS said...
    I came to know that 35 paral in my lagna... will i go up in position?
    Subhashini, Dubai////


    அதற்கு உரிய தசா புத்தியில் அந்த மேன்மை உண்டாகும் சகோதரி!

    ReplyDelete
  33. ///Blogger Pugazhenthi said... மிகவும் அருமையானப் பாடம். லக்னதில் அதிக பரல்கள் இருப்பது நன்மை, இது அனைத்து லக்னகளுக்கும் பொருந்துமா? இல்லை லக்னதுக்கு லக்னம் மாறுபடுமா?////

    அனைத்து லக்கினங்களுக்கும் பொருந்தும்!

    ReplyDelete
  34. ////Blogger Bhuvaneshwar said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு மாலை வணக்கம்.////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  35. /////Blogger Bhuvaneshwar said...
    லக்கினத்தில் உள்ள பரல்கள் ஓரளவுக்கு கோடிட்டு காட்டும் என்பது ஒப்புக்கொள்ள முடியும். ஆயினும், மற்ற கிரக அமைப்புகள் ஒருத்தனை தலைமைக்கு உயர்த்தலாம் இல்லையா? லக்கினத்தில் அதிக பரல்கள் என்றால், அவனது இயற்கையில் தலைமைப்பண்பும் ஆளுமையும் அதிகம் எனக்கொள்ளலாம். அதற்கேற்ற கிரக அமைப்புகள் துணை புரிந்தால் அவனால் அத்தலைமைப்பதவியை நன்கு தக்க வைக்க முடியும் (யாரும் அசைச்சுக்க முடியாது).....
    அதே போல, லக்கினத்தில் சற்றே குறைந்த பரல்கள் உள்ளவனும், மற்ற கிரக அமைப்பால் தலைவனாகலாம். ஆனால் அது நிலைக்குமா, நிலைத்தால் எவ்வளவு காலம்? இதெல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் பார்த்து, தசா புக்தி பார்த்து சொல்ல வேண்டிய விஷயங்கள் அல்லவா?
    அதே போல, ஒரு குறிப்பிட்ட நற்கிரக அமைப்புள்ள மங்கையை மணந்தவன் அரசனாவான் (அதாவது தலைவனாவான்) என்று உள்ளது அல்லவா? அப்படி பார்த்து கலியாணம் கட்டிக்கொண்டால் (அப்படி ஒரு பெண் கிடைக்க வேண்டும், அவள் ஜாதகம் பொருந்த வேண்டும் என்கிற நடைமுறை விஷயங்கள் உண்டு - அது தான் வினைப்பயன்!!!!!!) அவளுடைய ஜாதக விசேஷத்தால் இவன் முன்னேறலாம் இல்லையா?/////

    யார் இல்லை என்றது. ஆடைகள் பல உள்ளதுபோல. விதிகளும் (Rules) பல உள்ளன!
    இதே பக்கத்தில் அன்பர் செம்பியனின் கேள்வியையும் அதற்கு வாத்தியாரின் (அடியேனின்) பதிலையும் படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  36. ////Blogger Jawahar Govindaraj said...
    அடடே!!.. ரத்தின சுருக்கமான வழி.... நன்றி அய்யா.
    ஜவஹர் கோவிந்தராஜ்////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. ////Blogger premnath said...
    ayya vanakam paralkalai kanakiduvathu mattum puriyavillai thayau seithu uthaungal/////

    அஷ்டகவர்க்கப் பாடம் படித்தால் புரியும். அது மேல்நிலை வகுப்பில் நடந்து கொண்டிருக்கிறது. (classroom337.com) அந்தப் பாடங்கள் பின்னால் புத்தகமாக வரவுள்ளது. அப்போது அமைவரும் படித்த்துத் தெரிந்துகொள்ளலாம்!

    ReplyDelete
  38. /////Blogger manikandaprakash said...
    Lakanathil 37 paralhal ulathu ayya....//////

    அதற்கான பலன் அதற்கு உரிய தசாபுத்திக் காலத்தில் கிடைக்கும். பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  39. வாத்தியார் ஐயா !

    வணக்கம். கடந்த தினத்தில் வகுப்பிற்கு வரமுடியாமல் போனதிற்க்கும் மன்னிக்கவும்.


    தங்களுடைய ஆசிர்வாதத்திற்கு நன்றி ஐயா!. எம்மை பற்றி நன்கு அறிந்தும் ஆசிர்வதிக்கின்றிர்களே இந்த ஒன்றே போது எமக்கு எல்லை இல்லா சந்தோசம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com