மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.9.12

Astrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!

Astrology  நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!

அலசல் பாடம் (மேல்நிலைப் பாடம்)

எனது கஷ்டங்கள் எப்போது தீரும்? என்னும் தலைப்பில் முன்பு ஒரு முறை சூரியனை வைத்து அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன்.

இன்று சந்திரனை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

சந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.

(He is the authority for mind and Mother)

ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.

வலு அல்லது வலிமையாக இருப்பது என்றால் என்ன?

1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை

2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை

3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை

4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.
++++++++++++++++++++++++++++++
அப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?

தேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.

தீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம், போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும்.
வாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.

எதற்கெடுத்தாலும் கவலைப்படத்தோன்றும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூட ஜாதகன் கவலைப் பட்டுக்கொண்டிருப்பான். எதிலும்  சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.

உதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம்  தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து  வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால்  மனதில் நிம்மதியாக இருக்காது.

ஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும்  வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக  வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று  எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்

மேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப்  பார்ப்போம்!

சந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம்.

நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம்  எப்போது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப் பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் அதைக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.

உதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.

உங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத்  தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் ராசிக்கு  எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.

அது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல  பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை  அன்று செய்தால்  அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day!
அதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.

ஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில்  இருந்தால், மனைவியுடன்
அந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும்  நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.

உதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ  அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை  விலக்குவது நல்லது.

1. The transiting Moon in houses from the natal Moon will show the attitude a person has on any given day.
2. It is ideal to have the Moon in a good position from the natal Moon for daily events to run smoothly.


ராசிக்கான நட்சத்திரங்கள்:

மேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)
கடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)
துலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)
விருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை

தனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)
கும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)
மீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி

என்ன பாடம் புரியும் படியாக உள்ளதா?

அன்புடன்
வாத்தியார்


பின் குறிப்பு:  இது பெண்களுக்கு மட்டும்:  மாதவிடாய் (periods) அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக  இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30 comments:

  1. மதிபிற்குரிய குருவுக்கு கோடி நமஸ்காரங்கள்.
    நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி அய்யா...
    ஒரு சந்தேகம்..6 ,8 ,12 இடங்களை தவிர மற்ற இடங்களில் நல்ல
    பலன்கலாகக் கொள்ளலாமா ?
    மற்றும் 3 ம் இடத்தினை எப்படி பலன் கொள்வது ?
    அதுவும் inimical place அல்லவா?
    தயவு செய்து விளக்கவும்.
    பணிவுடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  2. கடக லக்னத்திலேயே அமர்ந்து ஆட்சி பெற்று நீச குருவாக இருந்தாலும் அஷ்ட வர்கத்தில் சுய வர்க பரல் 7 பெற்ற குருஜியால் பார்க்கப் பெற்றதால் சந்திரன் எனக்குச் சாதகமே.என்ன சுய வர்கப்பரல் 4 தான். ஆகவே ஓர் இரண்டும் கெட்டான் வாழ்வு.போகட்டும். 63 வயது கடந்து கடமையெல்லாம் முடிந்துவிட்டது. இனி எந்தக் கிரகம் எப்படியிருந்தாலும் கவலையில்லை.
    ஒரே கேள்வி எங்கே, எப்படி, எப்போது 'தி எண்ட்'என்பதுதான்.சீக்கிரமாகக் கிடைத்தால் நல்லதுதான். அதெல்லாம் நம் கையிலா இருக்கிறது?

    பாடத்திற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. kmr.krishnan said... ////.......63 வயது கடந்து கடமையெல்லாம் முடிந்துவிட்டது. இனி எந்தக் கிரகம் எப்படியிருந்தாலும் கவலையில்லை.
    ஒரே கேள்வி எங்கே, எப்படி, எப்போது 'தி எண்ட்'என்பதுதான்.சீக்கிரமாகக் கிடைத்தால்........

    இந்த தில் எல்லோருக்கும் வராது கிருஷ்னன் சார்.

    ReplyDelete
  4. அய்யா காலைவணக்கம் .

    ReplyDelete
  5. அருமையான ஒரு பதிவு ஐயா,
    எனக்கு தனுசு லக்கணம், 6 ம் வீடு ரிஷபத்தில் சந்திரன், அது உச்ச வீடு அதோடு ராகு ம் கூட இருந்து பல பிரச்னை களை கொடுதாலும், சுய வர்க்கம் சந்திரன் 7 பரல் பெற்றுள்ளது. அதோடு மட்டும் அல்லாது மனதுக்கு காரகன் 5 ம் வீடு மேஷம் அதன் அதிபதி 9 ம் வீடு சிம்மத்தில் இருப்பதால் எந்த பிரச்சனையும் சமாளிக்க ஆற்றலை இறைவன் எனக்கு கொடுத்துள்ளார்.

    அன்புடன்,
    ஜான்

    ReplyDelete
  6. vanakam iya rasi meenam.laknam risabam.2il puthan,sevai.3ilsurian,ragu.4il sukran.5il guru,sani.9il keathu.11il chandran yan valkai kastamaga ullathu yean iya

    ReplyDelete
  7. iya vanakam paralgal yeandral yeana yappadi kanakiduvathu nandri nan yatharthamaga ungal vaguparail nulaium pagiyam kidaithathu pala visayangalai therinthu kondean iya ithu pondra ungal muyartcigal vettri adaiya yen prarthanaigalai irraivan kaaladil samarpikiren VAALGA VAIYAGAM VALGAVALAMUDAN

    ReplyDelete
  8. எந்த கிரகம் எப்படியிருந்தாலும் கவலையில்லை

    இது

    முழுமையாக கடவுளை நம்பாதவருக்கும்

    மற்றும்

    முழுமையாக கடவுளை மட்டுமே நம்புகிறவர்களுக்கும்.. (எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில்)

    நாம் எந்தப் பக்கம் என்பதை பொறுத்துத்தான் நம்முடைய
    "தி இல்(லை)"

    இ"தில்" "தி எண்ட்" எங்கே என்பது தான் தெரிய/புரியவில்லை..


    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

    ReplyDelete
  9. In rasikattam, lakkanam 6th plase sitting 6"six houses any. yogam ?

    ReplyDelete
  10. Iya Vanakkakm,

    Pathivugal puriyum padiyaga arumaiyaga ullathu.

    puthiya jodhida manavan.

    Nandri.Nandri..Nandri...

    ReplyDelete
  11. முழுமையாகக் கடவுளை நம்பி விட்டால் நாம் ஏன் ஜாதகம் எல்லாம் பார்க்கப் போகிறோம்? உண்மையாகச் சொல்வதானால் அவ்வப்போது அவநம்பிக்கையும்,
    நம்பிக்கையும் மாறி மாறி வந்து அலைக் கழிக்கிறது.

    'தி எண்ட்' இந்த உடலுக்குத்தான் என்பதும், அதுவே கூட எங்கே, எப்போது,
    எப்படி என்பது அறிய முடியாமல் ஆக்கி வைத்துள்ளார் பரம்பொருள்.

    துறையூரில் மூன்று வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி.வெளி நாட்டில் வேலையில் இருந்த ஒரு இளைஞன் தங்கை திருமணத்திற்கு வந்துள்ளார்.
    திருச்சியில் கல்யாண ஜவுளி எடுக்கக் காரைத் தானே ஓட்டிச்சென்றுள்ளார்.
    கார் பயணத்தின் போது கைபேசியில் அழைத்து அவருடைய மனைவி இல்லத்தில் தூக்கு மாட்டி இறந்த‌ செய்தி சொல்லப்பட்டது.அதனைக் கேட்டு காரை வேகமாகத் திருப்பியுள்ளார். பின்னால் வந்த வண்டி மோதி இவரும் கார் விபத்தில் அந்த இடத்திலேயே மறைந்தார். இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதை யார் முடிவெடுக்கிறார்கள்.இவ்வளவு துன்பம் கொடுக்கும் கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் ஏன் இந்த குரூர விளையாட்டு?
    இதனால் அவருக்கு என்ன லாபம்?











    ReplyDelete

  12. இது பின் ஊட்ட பெட்டி தான்..
    இருப்பினும் கேள்வியாக தந்த சில பதில்

    இங்கு பதிலுக்கு பதிலாக எழுத வைக்கிறது
    இந்த முறை ஏற்றுக் கொண்டு அனுமதிக்க ..

    பதில் உங்களுக்கு தெரியாதது அல்ல
    இருப்பினும் எமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள அனுமதிப்"பீர்"கள் என்றே ..

    ///இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதை யார் முடிவெடுக்கிறார்கள்.///

    - உண்மையை சொன்னால் (ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்) நாம் தான்.. நம் வினைப் பயனே


    ///இவ்வளவு துன்பம் கொடுக்கும் கடவுள் இருக்கிறாரா? ///

    - துன்பம் கொடுப்பவர் கடவுள் இல்லை.. வினைப் பயனின் செயல்களே விளைவுகள்..

    "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" இது வள்ளுவம்

    ///இருக்கிறார் என்றால் ஏன் இந்த குரூர விளையாட்டு?///

    - கடவுளுக்கு வேலையே வேறு..

    விளையாடுவது அல்ல.. அவர் வேலை,
    விளையாட்டாக செய்வார் கடவுள் என்பதை பலரும் கடவுளின் விளையாட்டு என்று பொருள் கொண்டு பேசுகின்றனர்..

    எளிமையாக செய்வதை விளையாட்டாக செய்வதாக சொல்லுவர் (எங்கள் ஊர் பக்கம் இன்னமும் நடைமுறையில் இந்த சொல்லாட்சி உண்டு)
    அவரும் எங்க ஊரில் சங்கம் வைத்தவர் தானே..)

    அப்படி பொருள் கொண்டு பேசுபவர் சிலரே..


    ///இதனால் அவருக்கு என்ன லாபம்?///

    அவரடைய லாபா கணக்கே வேறு..
    எப்போதுமே நம்முடைய கணக்கு வேறு அரசாங்கத்தின் கணக்கு வேறு தானே.. (மெல்ல சிரித்துக் கொள்வோம்)

    அவரின் இயல்பு நிலையை "அறிந்து" கொண்டால் உண்மை "தெரியும்"
    அந்த உணர்வு ஏற்படும் போது தெளிவாய் "புரியும்".

    அந்நிலையில் அழுந்துதலிலே "உணர" முடியும்

    சரி..
    மௌனத்தில் பேச..

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா

    சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
    தீமைகள் செய்பவன் அழுகின்றான்
    இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
    இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

    வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
    வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

    தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
    தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

    ReplyDelete
  13. /////Blogger saravanan said...
    மதிபிற்குரிய குருவுக்கு கோடி நமஸ்காரங்கள்.
    நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி அய்யா...
    ஒரு சந்தேகம்..6 ,8 ,12 இடங்களை தவிர மற்ற இடங்களில் நல்ல
    பலன்கலாகக் கொள்ளலாமா ?
    மற்றும் 3 ம் இடத்தினை எப்படி பலன் கொள்வது ?
    அதுவும் inimical place அல்லவா?
    தயவு செய்து விளக்கவும்.
    பணிவுடன்
    ரா.சரவணன்/////

    inimical place தவிர மற்ற இடங்களை நல்ல இடங்களாகக் கொள்ளலாம்!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    கடக லக்னத்திலேயே அமர்ந்து ஆட்சி பெற்று நீச குருவாக இருந்தாலும் அஷ்ட வர்கத்தில் சுய வர்க பரல் 7 பெற்ற குருஜியால் பார்க்கப் பெற்றதால் சந்திரன் எனக்குச் சாதகமே.என்ன சுய வர்கப்பரல் 4 தான். ஆகவே ஓர் இரண்டும் கெட்டான் வாழ்வு.போகட்டும். 63 வயது கடந்து கடமையெல்லாம் முடிந்துவிட்டது. இனி எந்தக் கிரகம் எப்படியிருந்தாலும் கவலையில்லை.
    ஒரே கேள்வி எங்கே, எப்படி, எப்போது 'தி எண்ட்'என்பதுதான்.சீக்கிரமாகக் கிடைத்தால் நல்லதுதான். அதெல்லாம் நம் கையிலா இருக்கிறது?
    பாடத்திற்கு நன்றி ஐயா!/////

    The End தெரிந்தால் சுவாரசியம் இருக்காது. க்ளைமாக்ஸைத் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் படத்தைப் பாருங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger thanusu said...
    kmr.krishnan said... ////.......63 வயது கடந்து கடமையெல்லாம் முடிந்துவிட்டது. இனி எந்தக் கிரகம் எப்படியிருந்தாலும் கவலையில்லை.
    ஒரே கேள்வி எங்கே, எப்படி, எப்போது 'தி எண்ட்'என்பதுதான்.சீக்கிரமாகக் கிடைத்தால்........
    இந்த தில் எல்லோருக்கும் வராது கிருஷ்னன் சார்.//////

    அறுப’தில் அந்தத் தில் பெரும்பாலும் அனைவருக்கும் (குறிப்பாகப் பக்குவப் பட்ட அனைவருக்கும்) வந்துவிடும்!

    ReplyDelete
  17. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலைவணக்கம் ./////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger arul said...
    nalla pathivu////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger john said...
    அருமையான ஒரு பதிவு ஐயா,
    எனக்கு தனுசு லக்கணம், 6 ம் வீடு ரிஷபத்தில் சந்திரன், அது உச்ச வீடு அதோடு ராகு ம் கூட இருந்து பல பிரச்னை களை கொடுதாலும், சுய வர்க்கம் சந்திரன் 7 பரல் பெற்றுள்ளது. அதோடு மட்டும் அல்லாது மனதுக்கு காரகன் 5 ம் வீடு மேஷம் அதன் அதிபதி 9 ம் வீடு சிம்மத்தில் இருப்பதால் எந்த பிரச்சனையும் சமாளிக்க ஆற்றலை இறைவன் எனக்கு கொடுத்துள்ளார்.
    அன்புடன்,
    ஜான்/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger premnath said...
    vanakam iya rasi meenam.laknam risabam.2il puthan,sevai.3ilsurian,ragu.4il sukran.5il guru,sani.9il keathu.11il chandran yan valkai kastamaga ullathu yean iya////

    காலம் ஒருநாள் மாறும். உங்கள் கவலைகள் யாவும் தீரும். இறைவனைப் பிரார்த்திப்பதோடு பொறுமையாக இருங்கள்

    ReplyDelete
  21. //////Blogger premnath said...
    iya vanakam paralgal yeandral yeana yappadi kanakiduvathu nandri nan yatharthamaga ungal vaguparail nulaium pagiyam kidaithathu pala visayangalai therinthu kondean iya ithu pondra ungal muyartcigal vettri adaiya yen prarthanaigalai irraivan kaaladil samarpikiren VAALGA VAIYAGAM VALGAVALAMUDAN/////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  22. /////Blogger அய்யர் said...
    எந்த கிரகம் எப்படியிருந்தாலும் கவலையில்லை
    இது
    முழுமையாக கடவுளை நம்பாதவருக்கும்
    மற்றும்
    முழுமையாக கடவுளை மட்டுமே நம்புகிறவர்களுக்கும்.. (எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில்)
    நாம் எந்தப் பக்கம் என்பதை பொறுத்துத்தான் நம்முடைய
    "தி இல்(லை)"
    இ"தில்" "தி எண்ட்" எங்கே என்பது தான் தெரிய/புரியவில்லை..
    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது/////

    சில விஷயங்கள் தெரியாத வரைக்கும் நல்லதுதான் விசுவநாதன்!

    ReplyDelete
  23. ////Blogger Udhaya Kumar said...
    guruvirkku vanakkam
    Nalla pathivu
    Nandri/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  24. ////Blogger krishnababuvasudevan said...
    In rasikattam, lakkanam 6th plase sitting 6"six houses any. yogam ?////

    தந்தி பாஷையில் எழுதியுள்ளீர்கள். ஒன்றும் புரியவில்லை!

    ReplyDelete
  25. /////Blogger gsekarb@gmail.com said...
    Iya Vanakkakm,
    Pathivugal puriyum padiyaga arumaiyaga ullathu.
    puthiya jodhida manavan.
    Nandri.Nandri..Nandri...////

    நல்லது. முதலில் பதிவில் உள்ள பாடங்கள் அனைத்தையும் (மொத்தம் 585) படியுங்கள்!

    ReplyDelete
  26. /////Blogger kmr.krishnan said...
    முழுமையாகக் கடவுளை நம்பி விட்டால் நாம் ஏன் ஜாதகம் எல்லாம் பார்க்கப் போகிறோம்? உண்மையாகச் சொல்வதானால் அவ்வப்போது அவநம்பிக்கையும்,
    நம்பிக்கையும் மாறி மாறி வந்து அலைக் கழிக்கிறது.
    'தி எண்ட்' இந்த உடலுக்குத்தான் என்பதும், அதுவே கூட எங்கே, எப்போது,
    எப்படி என்பது அறிய முடியாமல் ஆக்கி வைத்துள்ளார் பரம்பொருள்.
    துறையூரில் மூன்று வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி.வெளி நாட்டில் வேலையில் இருந்த ஒரு இளைஞன் தங்கை திருமணத்திற்கு வந்துள்ளார்.
    திருச்சியில் கல்யாண ஜவுளி எடுக்கக் காரைத் தானே ஓட்டிச்சென்றுள்ளார்.
    கார் பயணத்தின் போது கைபேசியில் அழைத்து அவருடைய மனைவி இல்லத்தில் தூக்கு மாட்டி இறந்த‌ செய்தி சொல்லப்பட்டது.அதனைக் கேட்டு காரை வேகமாகத் திருப்பியுள்ளார். பின்னால் வந்த வண்டி மோதி இவரும் கார் விபத்தில் அந்த இடத்திலேயே மறைந்தார். இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதை யார் முடிவெடுக்கிறார்கள்.இவ்வளவு துன்பம் கொடுக்கும் கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் ஏன் இந்த குரூர விளையாட்டு?
    இதனால் அவருக்கு என்ன லாபம்?////

    காலதேவனின் விளையாட்டு. கர்ம வினைக் கணக்கு! கடவுளின் பங்கு அதில் இருக்காது!

    ReplyDelete
  27. /////Blogger அய்யர் said...
    இது பின் ஊட்ட பெட்டி தான்..
    இருப்பினும் கேள்வியாக தந்த சில பதில்
    இங்கு பதிலுக்கு பதிலாக எழுத வைக்கிறது
    இந்த முறை ஏற்றுக் கொண்டு அனுமதிக்க ..
    பதில் உங்களுக்கு தெரியாதது அல்ல
    இருப்பினும் எமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள அனுமதிப்"பீர்"கள் என்றே ..
    ///இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதை யார் முடிவெடுக்கிறார்கள்.///
    - உண்மையை சொன்னால் (ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்) நாம் தான்.. நம் வினைப் பயனே
    ///இவ்வளவு துன்பம் கொடுக்கும் கடவுள் இருக்கிறாரா? ///
    - துன்பம் கொடுப்பவர் கடவுள் இல்லை.. வினைப் பயனின் செயல்களே விளைவுகள்..
    "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" இது வள்ளுவம்
    ///இருக்கிறார் என்றால் ஏன் இந்த குரூர விளையாட்டு?///
    - கடவுளுக்கு வேலையே வேறு..
    விளையாடுவது அல்ல.. அவர் வேலை,
    விளையாட்டாக செய்வார் கடவுள் என்பதை பலரும் கடவுளின் விளையாட்டு என்று பொருள் கொண்டு பேசுகின்றனர்..
    எளிமையாக செய்வதை விளையாட்டாக செய்வதாக சொல்லுவர் (எங்கள் ஊர் பக்கம் இன்னமும் நடைமுறையில் இந்த சொல்லாட்சி உண்டு)
    அவரும் எங்க ஊரில் சங்கம் வைத்தவர் தானே..)
    அப்படி பொருள் கொண்டு பேசுபவர் சிலரே..
    ///இதனால் அவருக்கு என்ன லாபம்?///
    அவரடைய லாபா கணக்கே வேறு..
    எப்போதுமே நம்முடைய கணக்கு வேறு அரசாங்கத்தின் கணக்கு வேறு தானே.. (மெல்ல சிரித்துக் கொள்வோம்)
    அவரின் இயல்பு நிலையை "அறிந்து" கொண்டால் உண்மை "தெரியும்"
    அந்த உணர்வு ஏற்படும் போது தெளிவாய் "புரியும்".
    அந்நிலையில் அழுந்துதலிலே "உணர" முடியும்
    சரி..
    மௌனத்தில் பேச..
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
    தீமைகள் செய்பவன் அழுகின்றான்
    இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
    இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
    வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
    வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
    தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
    தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை/////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com