மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.9.12

Astrology மண வாழ்க்கை மணக்குமா? மணக்காதா?

Astrology  மண வாழ்க்கை மணக்குமா? மணக்காதா?

Key Points - Part 4

திருமண வாழ்க்கை!

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.

கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?  சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால், மணவாழ்க்கை மணக்குமா அல்லது மணக்காதா? ஜாதக அமைப்புப்படிதான் எல்லாம் நடக்கும். நம் கையில் ஒன்றும் இல்லை. எல்லாம் வாங்கி வந்த வரம். அதைப் பற்றி இன்று பார்ப்போம்.

பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப் பயன் பெறுக!

இது மேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று இன்று அதை இங்கே பதிவிட்டுள்ளேன்.
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.

3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (associaton or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந்திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.

6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.

7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!

9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.

11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,

12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!

சில முக்கியமான விதிகளைத்தான் குறிப்பிட்டுள்ளேன். எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டகவர்க்கப்பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

62 comments:

  1. திருமண வாழ்வு பற்றிய பாடத்தை அனைவரும் அறிய செய்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. காலை வணக்கம் ஐயா

    ReplyDelete
  3. இங்கு குறிப்பிட்ட எந்த நல்ல அமைப்பும் என் ஜாதகத்திலும் என் மனைவியின் ஜாதகத்திலும் இல்லை.

    மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை ஒரு மாதம் மட்டுமே குடும்பத்துடன் இருக்கிறேன். என் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி செய்வாய் எட்டில். அதே போன்று என் மனைவியின் ஜாதகத்திலும் ஏழாம் அதிபதி செய்வாய் எட்டில்.இருவருக்குமே செவ்வாய் தோஷம். இருவருக்கும் செவ்வாய் தோஷம் என்பதாலோ என்னவோ இந்த குறையை தவிற மற்றபடி இருவரும் மகிஷ்சியாக இருக்கிறேம்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  4. பதிவை படித்தேன்.

    ஓஹோ அப்படியா என நினைத்தேன். முன்பெல்லாம் இந்த தலைப்பை தேடி பிடித்து படித்ததுண்டு. சில நாட்களாக "விடுடா மாப்ளே, கவலைப்பட்டு என்ன ஆவப்போவுது? எப்படியும் கல்யாணம் கட்டி வுட்ருவாங்க, என்ன தான் நடக்கும் பார்த்துருவோம்" நு ஒரு குருட்டு தகிரியம்.

    கல்கியின் அலை ஓசை சின்ன வயசிலே புரியவில்லை. இப்போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது.

    மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. கலியாணம் பண்ணினவுடன் பையனுக்கு கண்ணு கட்டியாச்சு, பிள்ளை வந்தவுடன் காலும் கட்டியாச்சு என்று.

    யாருக்கு யாரோ (அட அந்த காமெடி படம் இல்லீங்க, நன் சொல்றது பழமொழி) என நிச்சயிக்கப்பட்ட பின் தான் பிறக்கிறோம். இருந்தாலும் இத்தனை தேடல், எதிர்பார்ப்பு, கலர் கலர் கனவுகள். மல்லிகை மணமா (அ) மகளிர் காவல் நிலையமா, வளையல் ஒலியா (அ) வரதட்சிணை வழக்கா, சிலம்போலியா (அ)) சிறை வாசமா, முத்தமா(அ) யுத்தமா என ஏற்கெனவே வரம் வாங்கி வந்துட்டோம். நடப்பது நடக்கட்டும்.

    என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
    உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
    பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
    முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே

    எது வந்தால் என்ன? நல்ல பெண் என்றால் அது லௌகிகதுக்கு ஓகே. வேறு விதம் என்றால் முக்திக்கு இன்னும் கொஞ்சம் பக்கம் போய் விட்டேன் என பொருள்.

    செய்த பாவம் தீருதடா சிவ பெருமானே! திருமணம் மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்.

    சரி நான் ரொம்ப அறுக்கறேன் போலயே..... இனி பேசுனா வைஞ்சாலும் வைவாங்க...... நல்ல பையனா நான் போயி வரவா?

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா அவர்களுக்கு
    இனிய காலை வணக்கம்.
    நல்லதொரு பதிவு.
    இன்று முதல் மாணவனாக பின்னூட்டம் இடுவதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.
    கடந்த மூன்று நாட்களாக திருசெந்தூர் மற்றும் நவதிருப்பதி சென்றிருந்தேன்
    நல்ல தரிசனம் .மனதுக்கு மிகவும் நன்றாக இருந்தது.
    அன்புடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  6. ஆசிரியர் தின வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா!

    ஏழும் எழுக்குரியவனும் சரியில்லாது போயும்
    நாளும் நாளுக்குரியவனும் சரியில்லாது போயின்
    ஐந்தும் ஒன்பதும் அற்புதமாக இருக்கும்
    நொந்துநூலாகாது 337-ஐ நினைவாய் நெஞ்சே!:::)))

    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்
    திருமண அமைப்பை பற்றி நல்லபாடம் அருமையக உள்ளது
    நன்றி

    ReplyDelete
  8. அன்புள்ள வகுப்பரை ஆசிரியர் ஐயா அவர்கட்கு இதயப்பூர்வமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தங்கள் பணி மேலும் சிறக்க செந்தூர் முருகனை பிரார்த்திக்கின்றேன். நன்றிகள்.

    ReplyDelete
  9. அய்யா காலைவணக்கம் .
    எனக்கு 7 ம் அதிபதி குரு 5 ல் நீசம் ( கும்பம்) சனி ஆட்சி வீட்டில் . சுக்கிரன் 7 ல் ( மீனம் ) உச்சம், கன்னியா லக்னம் . மணவாழ்க்கை சந்தோசமாக உள்ளது . நன்றி

    ReplyDelete
  10. sir, nan epa than entha siteku varen, oru lesson padichen sir,
    RASI
    enaku mithuna laknam. 7th housela ragu iruku. 7th owner guru 2nd houselal utcham in kadagam sir. 2nd housela With sevai nesam with sukran. 8th owner sani sit in 8th own house. Sani 7m parvaiyaga 2nd housea pakuraru sir,
    Navamsam
    7th house owner sun sit in 9th house thulam 9thla sun nesam. 7th house empty sir. Plz tel rply sir.

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் இரண்டுபேருக்குமே 6இல் 7ஆம் அதிபதி அவளுக்கு 4இல் ராகு அதனைப்பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளீர், ஆயினும் என் மனைவியை தெய்வமாக மதிக்கின்றேன் everything going very cool,
    G R MURUGAN BSNL

    ReplyDelete
  12. Rasi:

    enaku mithuna laknam, 7th housela ragu sir. But 7th house owner guru(utcham) sit in 2nd house kadagam. With sevai nesam, sukran in kadagam. 8th owner sani (own house) sit in 8th own house, 7m parvaiyaga, 2nd housea parkuthu sir.
    NAVAMSAM:
    Kumpa laknam,
    sani sit in kumpam.
    7th house empty. Owner sun(nesam) sit in 9th house thulam. So payama iruku sir.

    ReplyDelete

  13. Mr. முருகன் சொல்வது:

    //ஆயினும் என் மனைவியை தெய்வமாக மதிக்கின்றேன்//

    நான் சொல்வது:

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காணுயர்
    காதல் நலமேனவே களினடமிடுவோம்;
    காதலது நல்லின்பம் காதலி தெய்வம்
    அதில் ஊறு சுவை உண்ட ஃ துயிர்கட்கமுதாம்;

    நம்ம அலைவரிசை ஒத்து வர்றாப்ல இருக்கே.... :)

    ReplyDelete
  14. மீள்பார்வைப்பதிவு என் போன்ற பழைய மாணவர்களுக்கு. புதிய மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.

    ஆசிரியர் தின நமஸ்காரங்கள்.

    5 செப்டம்பெர் போலவே 11 செப்டம்பெரும் முக்கியமல்லாவா?

    ReplyDelete
  15. Sukkiran எந்த pabagiragam இணைந்து. இரண்டாவது marige முடியும்?

    ReplyDelete
  16. sir,
    my star: Magam
    laknam:mithunam
    rasi : simam

    laknathula 3 kiragam sir

    SUN (miruga sirdam 3m patham)

    PUTHAN
    (THIRUVATHIRAI 2M PATHAM)

    then

    KETHU
    (punar posam 2nd patham)

    1st, 6 yers, 2 mnth. 27 days kethu thisai, then sukuran, 20 yers. Epa age 21 cmplete. Epa enaku Sukra thisai sani puthe. Sani 8il atche. So rompa kasta paduren. Job ila, 10th house empty, owner guru 2il utcham,with seivai nesam, sukran pagai in kadagam

    next year sukra thesai PUDHAN Puthe, . Sunku pakathula iruku, ASTHAMANA? OR ASTHAMANAMILAIYA? sir,
    puthan atche in lakanam sir plz rply sir, nan puthana nampi than sir iruken plz help

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்,

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. Happy Teachers Day Aiyaa.
    Anayvarukum 337 paralgal en vazhkaiai matriyadhu.

    ReplyDelete
  19. Happy Teachers Day Aiyaa.
    Anayvarukum 337 paralgal en vazhkaiai matriyadhu.

    ReplyDelete
  20. ஏழில் சனி நீச்சமடைந்து சுக்ரனுடன் மேஷத்தில் சேர்ந்து அமர்ந்திருந்து செவ்வாய் தனது 2ம் வீட்டில் ஆட்சி பெற்றிருந்தால் இந்த காம்பினேஷன் மன வாழ்வில் எந்த வகையான பாதிப்பை ஏர்படுத்தும்? சனி நீசமடைந்திருந்தாலும் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ளதால் நீசத்திற்கு பாதிப்பு வர வாய்ப்பு இருக்க்கிறதா? துலா லக்னத்திற்க்கு சனி யோககாரகன் எனும் பட்சத்தில் ஜாதகருக்கு இந்த காம்பினேஷன் திருமன வாழ்வில் எந்த விதமான பலனை கொடுக்கும்?

    ReplyDelete
  21. “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”

    நமது நாடு தத்துவ ஞானிகளால் உலகப்புகழ் பெற்றது ஐயன் திருவள்ளுவருக்கு நல்ல மனைவி அமைந்ததால் உலகத்திற்கே
    பொதுமறை தந்தார். விதியும் விதிக்கு ஒர் விலக்கும் இருக்கும் என்று நம்புவதும் கூட தவறாகவே படுகிறது. முயற்சி வேண்டும் முயன்றும் நேர்மாறாக அமையுமானால் இதுவும் நன்மைக்கே என வாழ்வதுதான் தத்துவமாக படுகிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்

    ReplyDelete
  22. ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் ஐயா,
    மிகவும் நல்ல ஒரு பதிவு...

    ReplyDelete
  23. ல்லிகை மணமா (அ) மகளிர் காவல் நிலையமா, வளையல் ஒலியா (அ) வரதட்சிணை வழக்கா, சிலம்போலியா (அ)) சிறை வாசமா, முத்தமா(அ) யுத்தமா என ஏற்கெனவே வரம் வாங்கி வந்துட்டோம். நடப்பது நடக்கட்டும்.///

    :) / :( :)/ :( :)/ :(

    ReplyDelete
  24. அய்யா அனந்த முருகன் அவர்களே..
    அந்த வரிசையில் முப்பதுக்கு பிறகு

    அதை சொல்லாமல் வைத்த சஸ்பென்சு என்ன..?
    அறிந்து கொள்ள தரு.."வீரா(?)"..

    ReplyDelete
  25. ////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    திருமண வாழ்வு பற்றிய பாடத்தை அனைவரும் அறிய செய்தமைக்கு நன்றி ஐயா!////

    எப்போதும் பிரச்சினையில்லாமல் பின்னூட்டமிடும் நண்பர் ரமேஷ் வெங்கடபதிக்கு நன்றி!

    ReplyDelete
  26. ////Blogger Bhuvaneshwar said...
    காலை வணக்கம் ஐயா/////

    பொழுதை எப்போதும் வணக்கத்தோடு துவங்கும் புவனேஷ்வருக்கு நன்றி!!!

    ReplyDelete
  27. Blogger thanusu said...
    இங்கு குறிப்பிட்ட எந்த நல்ல அமைப்பும் என் ஜாதகத்திலும் என் மனைவியின் ஜாதகத்திலும் இல்லை.
    மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை ஒரு மாதம் மட்டுமே குடும்பத்துடன் இருக்கிறேன். என் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி செய்வாய் எட்டில். அதே போன்று என் மனைவியின் ஜாதகத்திலும் ஏழாம் அதிபதி செய்வாய் எட்டில்.இருவருக்குமே செவ்வாய் தோஷம். இருவருக்கும் செவ்வாய் தோஷம் என்பதாலோ என்னவோ இந்த குறையை தவிற மற்றபடி இருவரும் மகிஷ்சியாக இருக்கிறேம்.
    நல்ல பதிவு./////

    மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாகச் சொன்ன மேன்மைக்கு நண்பர் தனுசுவிற்கு நன்றி!

    ReplyDelete
  28. ////Blogger Bhuvaneshwar said...
    பதிவை படித்தேன்.
    ஓஹோ அப்படியா என நினைத்தேன். முன்பெல்லாம் இந்த தலைப்பை தேடி பிடித்து படித்ததுண்டு. சில நாட்களாக "விடுடா மாப்ளே, கவலைப்பட்டு என்ன ஆவப்போவுது? எப்படியும் கல்யாணம் கட்டி வுட்ருவாங்க, என்ன தான் நடக்கும் பார்த்துருவோம்" நு ஒரு குருட்டு தகிரியம்.
    கல்கியின் அலை ஓசை சின்ன வயசிலே புரியவில்லை. இப்போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது.
    மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. கலியாணம் பண்ணினவுடன் பையனுக்கு கண்ணு கட்டியாச்சு, பிள்ளை வந்தவுடன் காலும் கட்டியாச்சு என்று.
    யாருக்கு யாரோ (அட அந்த காமெடி படம் இல்லீங்க, நன் சொல்றது பழமொழி) என நிச்சயிக்கப்பட்ட பின் தான் பிறக்கிறோம். இருந்தாலும் இத்தனை தேடல், எதிர்பார்ப்பு, கலர் கலர் கனவுகள். மல்லிகை மணமா (அ) மகளிர் காவல் நிலையமா, வளையல் ஒலியா (அ) வரதட்சிணை வழக்கா, சிலம்போலியா (அ)) சிறை வாசமா, முத்தமா(அ) யுத்தமா என ஏற்கெனவே வரம் வாங்கி வந்துட்டோம். நடப்பது நடக்கட்டும்.
    என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
    உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
    பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
    முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே
    எது வந்தால் என்ன? நல்ல பெண் என்றால் அது லௌகிகதுக்கு ஓகே. வேறு விதம் என்றால் முக்திக்கு இன்னும் கொஞ்சம் பக்கம் போய் விட்டேன் என பொருள்.
    செய்த பாவம் தீருதடா சிவ பெருமானே! திருமணம் மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்.
    சரி நான் ரொம்ப அறுக்கறேன் போலயே..... இனி பேசுனா வைஞ்சாலும் வைவாங்க...... நல்ல பையனா நான் போயி வரவா?/////

    ’’மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
    அன்பே.. என் அன்பே’’
    என்று பாட வேண்டிய வயதில், பட்டினத்தார் பாடல்களா? இடிக்கிறதே கண்ணா!!!!:-))))

    ReplyDelete
  29. /////Blogger saravanan said...
    அன்புள்ள அய்யா அவர்களுக்கு
    இனிய காலை வணக்கம்.
    நல்லதொரு பதிவு.
    இன்று முதல் மாணவனாக பின்னூட்டம் இடுவதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.
    கடந்த மூன்று நாட்களாக திருசெந்தூர் மற்றும் நவதிருப்பதி சென்றிருந்தேன்
    நல்ல தரிசனம் .மனதுக்கு மிகவும் நன்றாக இருந்தது.
    அன்புடன்
    ரா.சரவணன்/////

    முதல் இல்லை.3 பேர்கள் முந்திக்கொண்டுவிட்டார்கள். கடலில் குளித்தீர்களா? சைவப் பிள்ளைமார்கள் நடத்தும் உணவு விடுதிகளில் உண்டு மகிழ்ந்தீர்களா? அதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  30. ////Blogger ஜி ஆலாசியம் said...
    ஆசிரியர் தின வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா!
    ஏழும் எழுக்குரியவனும் சரியில்லாது போயும்
    நாளும் நாளுக்குரியவனும் சரியில்லாது போயின்
    ஐந்தும் ஒன்பதும் அற்புதமாக இருக்கும்
    நொந்துநூலாகாது 337-ஐ நினைவாய் நெஞ்சே!:::)))
    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!////

    ஆமாம் 337 இருக்கையில் கவலைக்கு இடமேது? நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  31. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    திருமண அமைப்பை பற்றி நல்லபாடம் அருமையக உள்ளது
    நன்றி////

    நல்லது. நன்றி உதயகுமார்!!

    ReplyDelete
  32. /////Blogger sadan raj said...
    அன்புள்ள வகுப்பறை ஆசிரியர் ஐயா அவர்கட்கு இதயப்பூர்வமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தங்கள் பணி மேலும் சிறக்க செந்தூர் முருகனை பிரார்த்திக்கின்றேன். நன்றிகள்./////

    ஆகா. நன்றி. கொடுத்துவைத்தவர். சண்முகநாதனுக்குப் பக்கத்திலேயே இருக்கிறீர்களே - எப்போது வேண்டுமென்றாலும் தரிசித்துவிட்டு வரலாம்!

    ReplyDelete
  33. /////Blogger selva murugan said...
    hai, sir good morning/////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  34. ////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலைவணக்கம் .
    எனக்கு 7 ம் அதிபதி குரு 5 ல் நீசம் ( கும்பம்) சனி ஆட்சி வீட்டில் . சுக்கிரன் 7 ல் ( மீனம் ) உச்சம், கன்னியா லக்னம் . மணவாழ்க்கை சந்தோசமாக உள்ளது . நன்றி/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ////Blogger selva murugan said...
    sir, nan epa than entha siteku varen, oru lesson padichen sir,
    RASI
    enaku mithuna laknam. 7th housela ragu iruku. 7th owner guru 2nd houselal utcham in kadagam sir. 2nd housela With sevai nesam with sukran. 8th owner sani sit in 8th own house. Sani 7m parvaiyaga 2nd housea pakuraru sir,
    Navamsam
    7th house owner sun sit in 9th house thulam 9thla sun nesam. 7th house empty sir. Plz tel rply sir.////

    எந்த வீடும் எம்ப்ட்டியாக இருக்காது. அந்த வீட்டுக்காரன் வீட்டைப் பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பான். முதலில் பதிவில் உள்ள பாடங்களை எல்லாம் வரிசையாகப் படித்து முடித்துவிட்டுப் பிறகு நடப்பு வகுப்பிற்கு வாருங்கள்.

    ReplyDelete
  36. ////Blogger murugan said...
    வணக்கம் ஐயா,
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் இரண்டுபேருக்குமே 6இல் 7ஆம் அதிபதி அவளுக்கு 4இல் ராகு அதனைப்பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளீர், ஆயினும் என் மனைவியை தெய்வமாக மதிக்கின்றேன் everything going very cool,
    G R MURUGAN BSNL/////

    வீட்டிலே தெய்வம் இருக்கும்போது, பிரச்சினையே இருக்காதே சாமி! கொடுத்து வைத்தவர்!

    ReplyDelete
  37. ////Blogger selva murugan said...
    Rasi:
    enaku mithuna laknam, 7th housela ragu sir. But 7th house owner guru(utcham) sit in 2nd house kadagam. With sevai nesam, sukran in kadagam. 8th owner sani (own house) sit in 8th own house, 7m parvaiyaga, 2nd housea parkuthu sir.
    NAVAMSAM:
    Kumpa laknam,
    sani sit in kumpam.
    7th house empty. Owner sun(nesam) sit in 9th house thulam. So payama iruku sir./////

    ஜோதிடம் படிப்பதை நிறுத்திவிடுங்கள். பயம் போய்விடும்!

    ReplyDelete
  38. Blogger kmr.krishnan said...
    மீள்பார்வைப்பதிவு என் போன்ற பழைய மாணவர்களுக்கு. புதிய மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.
    ஆசிரியர் தின நமஸ்காரங்கள்.
    5 செப்டம்பெர் போலவே 11 செப்டம்பெரும் முக்கியமல்லாவா?/////

    நீங்கள் நீண்ட நாள் மாணவர். எதைப் படித்தாலும் உங்களுக்கு மீள்பார்வை உணர்வு வருவது தவிர்க்க முடியாததது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  39. ////Blogger அய்யர் said...
    வருகை பதிவு////

    வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  40. /////Blogger Ananthamurugan said...
    Teachers day wishes to ayya!!!////

    Thank you for your greetings my dear Ananthamurugan!

    ReplyDelete
  41. ////Blogger krishnababuvasudevan said...
    Sukkiran எந்த pabagiragam இணைந்து. இரண்டாவது marige முடியும்?////

    சுக்கிரனுடன் பாவிகள் சேர்ந்தால் சுகக்கேடாயிற்றே சாமி! சுகம் இல்லாதபோது எத்தனை மனைவிகள் வந்து என்ன பயன்?

    ReplyDelete
  42. ////Blogger eswari sekar said...
    vanakam sir////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  43. ////Blogger selva murugan said...
    sir,
    my star: Magam
    laknam:mithunam
    rasi : simam
    laknathula 3 kiragam sir
    SUN (miruga sirdam 3m patham)
    PUTHAN
    (THIRUVATHIRAI 2M PATHAM)
    then
    KETHU
    (punar posam 2nd patham)
    1st, 6 yers, 2 mnth. 27 days kethu thisai, then sukuran, 20 yers. Epa age 21 cmplete. Epa enaku Sukra thisai sani puthe. Sani 8il atche. So rompa kasta paduren. Job ila, 10th house empty, owner guru 2il utcham,with seivai nesam, sukran pagai in kadagam
    next year sukra thesai PUDHAN Puthe, . Sunku pakathula iruku, ASTHAMANA? OR ASTHAMANAMILAIYA? sir,
    puthan atche in lakanam sir plz rply sir, nan puthana nampi than sir iruken plz help/////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை

    ReplyDelete
  44. /////Blogger arul said...
    superb post////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. ////Blogger arumuga nainar said...
    ஐயா வணக்கம்,
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.////

    உங்கள் வாழ்த்திற்கு நன்றி நைனா(ர்)!!!!!!

    ReplyDelete
  46. ////Blogger praveen'z blog said...
    Happy Teachers Day Aiyaa.
    Anayvarukum 337 paralgal en vazhkaiai matriyadhu////.

    அதே 337தான் எனக்கு ஜோதிடத்தின் மேல் மிகுந்த பிடிப்பை ஏற்படுத்தியது! நன்றி!

    ReplyDelete
  47. ////Blogger Ramnath said...
    ஏழில் சனி நீச்சமடைந்து சுக்ரனுடன் மேஷத்தில் சேர்ந்து அமர்ந்திருந்து செவ்வாய் தனது 2ம் வீட்டில் ஆட்சி பெற்றிருந்தால் இந்த காம்பினேஷன் மன வாழ்வில் எந்த வகையான பாதிப்பை ஏர்படுத்தும்? சனி நீசமடைந்திருந்தாலும் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ளதால் நீசத்திற்கு பாதிப்பு வர வாய்ப்பு இருக்க்கிறதா? துலா லக்னத்திற்க்கு சனி யோககாரகன் எனும் பட்சத்தில் ஜாதகருக்கு இந்த காம்பினேஷன் திருமன வாழ்வில் எந்த விதமான பலனை கொடுக்கும்?/////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை

    ReplyDelete
  48. ////Blogger நடராஜன் said...
    “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”
    நமது நாடு தத்துவ ஞானிகளால் உலகப்புகழ் பெற்றது ஐயன் திருவள்ளுவருக்கு நல்ல மனைவி அமைந்ததால் உலகத்திற்கே
    பொதுமறை தந்தார். விதியும் விதிக்கு ஒர் விலக்கும் இருக்கும் என்று நம்புவதும் கூட தவறாகவே படுகிறது. முயற்சி வேண்டும் முயன்றும் நேர்மாறாக அமையுமானால் இதுவும் நன்மைக்கே என வாழ்வதுதான் தத்துவமாக படுகிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி அன்பரே!!

    ReplyDelete
  49. ///Blogger john said...
    ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் ஐயா,
    மிகவும் நல்ல ஒரு பதிவு...////

    Thank you for your greetings my dear friend!

    ReplyDelete
  50. /////Blogger praveen'z blog said...
    Super ayya:)////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. எனக்கு நல்ல திருமண வாழ்க்கைதான் அமைந்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. அதற்கு வேறு backup plan இருந்தது. எனக்கு திருமணம் நடந்தால் நடக்கட்டும் இல்லாவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று நானாக யாரையும் தேடிப் போகாமல்தான் இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் எதையும் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. என் ஜாதகத்தில் 7ம் இடத்தை ஒரு சுப கிரகமும், 2ம் இடத்தை 2 சுபகிரகங்களும் பார்க்கிறார்கள். திருமணம், குடும்ப வாழ்க்கை அமையாமல் போக வாய்ப்பில்லை.

    அடுத்து நவாம்சத்தில் இருந்த கிரக நிலை. இது இந்த பாடத்திற்கு சம்பந்தமில்லாதது. ஆகையால் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

    ReplyDelete
  52. முதல் இல்லை.3 பேர்கள் முந்திக்கொண்டுவிட்டார்கள். கடலில் குளித்தீர்களா? சைவப் பிள்ளைமார்கள் நடத்தும் உணவு விடுதிகளில் உண்டு மகிழ்ந்தீர்களா? அதைச் சொல்லுங்கள்!

    ஆஹா .......நாழி கிணற்றில் குளித்து , பின் கடலில் குளித்து , முருகனை தரிசித்து , பஞ்ச லிங்கம் சேவித்து ,
    குருபஹவானின் அபிஷேகமும் கண்டோம்.ஏற்கனவே தங்களின் பழைய பாடத்தில், ஒரு பின்னூட்டத்தில்
    குரிப்பிடிருந்ததை நினைவில் கொண்டு தவறாமல் சைவப் பிள்ளைமர்களின் உணவகத்திலும் உண்டு மகிழ்ந்தோம்.
    இது வரை 30 தடவைக்கும் மேல் திருசெந்தூர் சென்றிருக்கிறேன்.ஆனால் இதுதான் முதல் முறையாக சைவ பிள்ளைமார்களின்
    உணவகத்தில் உண்ட அனுபவம்.அதன் சுவை ......ஆஹ்ஹா..முருகனை போலவே....வார்த்தைகளில் அடங்காது.
    மாலையில், பௌர்ணமி நிலவில் கடற்கரையில் மனைவியுடனும் , மகளுடனும், சுக்கு காப்பியோடு , சந்திரனையும்
    தரிசித்து பரவசமடைந்தோம்.
    நன்றியுடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  53. Blogger ananth said...
    எனக்கு நல்ல திருமண வாழ்க்கைதான் அமைந்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. அதற்கு வேறு backup plan இருந்தது. எனக்கு திருமணம் நடந்தால் நடக்கட்டும் இல்லாவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று நானாக யாரையும் தேடிப் போகாமல்தான் இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் எதையும் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. என் ஜாதகத்தில் 7ம் இடத்தை ஒரு சுப கிரகமும், 2ம் இடத்தை 2 சுபகிரகங்களும் பார்க்கிறார்கள். திருமணம், குடும்ப வாழ்க்கை அமையாமல் போக வாய்ப்பில்லை.
    அடுத்து நவாம்சத்தில் இருந்த கிரக நிலை. இது இந்த பாடத்திற்கு சம்பந்தமில்லாதது. ஆகையால் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.////

    நல்லது. நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  54. /////Blogger saravanan said...
    முதல் இல்லை.3 பேர்கள் முந்திக்கொண்டுவிட்டார்கள். கடலில் குளித்தீர்களா? சைவப் பிள்ளைமார்கள் நடத்தும் உணவு விடுதிகளில் உண்டு மகிழ்ந்தீர்களா? அதைச் சொல்லுங்கள்!
    ஆஹா .......நாழி கிணற்றில் குளித்து , பின் கடலில் குளித்து , முருகனை தரிசித்து , பஞ்ச லிங்கம் சேவித்து ,
    குருபஹவானின் அபிஷேகமும் கண்டோம்.ஏற்கனவே தங்களின் பழைய பாடத்தில், ஒரு பின்னூட்டத்தில்
    குரிப்பிடிருந்ததை நினைவில் கொண்டு தவறாமல் சைவப் பிள்ளைமர்களின் உணவகத்திலும் உண்டு மகிழ்ந்தோம்.
    இது வரை 30 தடவைக்கும் மேல் திருசெந்தூர் சென்றிருக்கிறேன்.ஆனால் இதுதான் முதல் முறையாக சைவ பிள்ளைமார்களின்
    உணவகத்தில் உண்ட அனுபவம்.அதன் சுவை ......ஆஹ்ஹா..முருகனை போலவே....வார்த்தைகளில் அடங்காது.
    மாலையில், பௌர்ணமி நிலவில் கடற்கரையில் மனைவியுடனும் , மகளுடனும், சுக்கு காப்பியோடு , சந்திரனையும்
    தரிசித்து பரவசமடைந்தோம்.
    நன்றியுடன்
    ரா.சரவணன்/////

    நீங்கள் கண்டு ரசித்தவைகளையும், உண்டு ரசித்தவைகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சரவணன். வாழ்க! வளர்க!

    ReplyDelete
  55. சார், லக்னாதிபதி சனி, ஏழாம் வீட்டில் வர்க்கமாக சந்திரனுடன் இருந்தால் எப்படி இருக்கும்...குழப்பமாக உள்ளது...

    ஏழாம் வீடு கடகம், சந்திரன் ஆட்சி கிரகம்...

    நன்றி சார்...

    ReplyDelete
  56. ////Blogger anba said...
    சார், லக்னாதிபதி சனி, ஏழாம் வீட்டில் வர்க்கமாக சந்திரனுடன் இருந்தால் எப்படி இருக்கும்...குழப்பமாக உள்ளது...
    ஏழாம் வீடு கடகம், சந்திரன் ஆட்சி கிரகம்...
    நன்றி சார்.../////

    லக்கினாதிபதி 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பது நல்லதுதானே! அதில் என்ன குழப்பம்?
    தெளிவு பெறுவதற்குத்தான் ஜோதிடத்தைப் படிக்க வேண்டும்!. குழப்பம் வருகிறது என்றால் ஜோதிடம் கற்றுக்கொள்வதை/ படிப்பதை நிறுத்திவிடுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com