மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.5.12

வானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததடி

 
மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 6 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததடி
ஆக்கம்: தேமொழி
மேலே உள்ள வரைபடமும் அவர் வரைந்ததுதான்!

"Lucy in the Sky with Diamonds" என்ற பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழு புகழ் ஜான் லென்னான் (John Lennon) அவர்கள் எழுதிய பாடல் வரிகளைக் கேட்டபொழுது எனக்குத் தோன்றியதை வரைந்ததுதான்  இந்த ட்ஜிட்டல் கிராபிக்ஸ் ஓவியம்.  மின்னும் கண்களை வரைய அதற்கேற்ற தூரிகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  இந்தப் பாடல் பீட்ல்ஸ்ஸின் புகழ்பெற்ற பாடல்கள் வரிசையில் உள்ள ஒரு பாடலும் கூட.  ஜான் லென்னான் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

இந்தப் பாடலைப் பற்றிய சுவையான கதைகளும் உண்டு.  நர்ஸரி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான் ஜான் லென்னானின் மகன் ஜூலியன் (Julian).   தன் பள்ளித்தோழியுடன் வகுப்பில் படம் வரைவதில் ஈடுபட்டிருந்த பொழுது தன் தோழி லூசியை பார்த்து ஒரு ஓவியம் வரைந்தான்.  குழந்தைகள் வரைந்த படம் இதுவரை யாருக்குத்தான் புரிந்திருக்கிறது.  எனவே மகனைப் பள்ளியில் இருந்து அழைத்துப் போக வந்த ஜான் லென்னான் தன் மகனிடமே விளக்கம் கேட்டிருக்கிறார்.  அவனோ அது தன் தோழி "Lucy — in the sky with diamonds" என்று விளக்கியிருகிறான்.  அவன் வரைந்த அந்தப் படத்தை இந்த இணையதளத்தில் சென்று பார்க்கலாம் (http://cdn.sheknows.com/articles/Lucyintheskywithdiamonds.jpg).  நாமாக இருந்தால், "சரி, அது கிடக்குது, மத்தியானம் ஒழுங்கா சாப்பிட்டியா இல்லையா?" என்று அடுத்து ஆக வேண்டிய வேலையைப்  பற்றி அக்கறையாக இருந்திருப்போம்.  ஆனால் அவன் தந்தைதான் வித்தியாசமானவர் என்ற பெயர் எடுத்த பாடகர் ஆயிற்றே.  உடனே ஒரு கவிதை எழுதி, தன் இசைக்குழுவுடன் பாடி, பதிவிட்டு ஒரு புகழ் பெற்ற பாடலை உருவாக்கிவிட்டார்.

பாடல் வெளியான ஆண்டு 1967.  பாடலைப் பற்றிய மேலும் பல தகவல்களை அறியவிருப்பம் உள்ளவர்களுக்கு விக்யில் ஒரு கட்டுரையும் இருக்கிறது.  பொதுவாக பீட்டில்ஸ் இசைக்குழுவை, அவர்கள் நடவடிக்கைகளை போதைப் பொருட்களுடன் தொடர்பு படுத்தி விமரிசிப்பது பொதுமக்கள் வழக்கமாக இருந்த காலம் அது.  எனவே "Lucy in the Sky with Diamonds" என்பது LSD போதைப் மருந்தின் முதல் எழுத்துக்களைக் குறிக்கிறது என்ற கதை பரவ ஆரம்பித்தது.  ஜான் லென்னான் தெரிவித்த மறுப்பினை யாரும் பொருட்படுத்தவில்லை.  இரண்டாண்டுகளுக்குமுன் ஜுலியனின் தோழி லூசி தன் 46 வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்த பொழுது மீண்டும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு நினைவில் வந்து சென்றது.

பாடலின் வரிகள் கீழே:
Lucy in the sky with diamonds

Picture yourself in a boat on a river,
With tangerine trees and marmalade skies.
Somebody calls you, you answer quite slowly,
A girl with kaleidoscope eyes.

Cellophane flowers of yellow and green,
Towering over your head.
Look for the girl with the sun in her eyes,
And she's gone.

{CHORUS}
Lucy in the sky with diamonds,
Lucy in the sky with diamonds,
Lucy in the sky with diamonds,
Ah... Ah...

Follow her down to a bridge by a fountain,
Where rocking horse people eat marshmallow pies.
Everyone smiles as you drift past the flowers,
That grow so incredibly high.

Newspaper taxis appear on the shore,
Waiting to take you away.
Climb in the back with your head in the clouds,
And you're gone.

{CHORUS}

Picture yourself on a train in a station,
With plasticine porters with looking glass ties.
Suddenly someone is there at the turnstile,
The girl with kaleidoscope eyes.

{CHORUS}

பாடலின் காணொளி சுட்டி: http://youtu.be/A7F2X3rSSCU



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2



கௌமாரம்
ஆக்கம்: பார்வதி ராமச்சச்ந்திரன், பெங்களூரு

முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

செந்தூர்ப்பதிகொண்டோன், செந்திலாண்டவன் , பக்தர் சிந்தைக் குடிகொண்டான் கந்தக் கடவுள் , வந்தனை செய்வாரையும் சொற்றமிழால் தன்னை வைதாரையும், அத்தமிழின்பத்துக்காக, வாழ்வாங்கு வாழவைக்கும் எந்தை, எம்பெருமான் முருகக் கடவுளைப் பரம்பொருளாகப் போற்றும் ,'கௌமாரம்', பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

"ஸ்வாமி' என்ற பெயர், வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது
நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான், அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் சுப்பிரமணியர்தான், அவர் குழந்தையாக இருக்கிற கடவுள், குமாரஸ்வாமி" என்று காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவர் அருளியிருக்கிறார்.

சுப்பிரமணியர் என்ற திருநாமமே, சு+பிரம்மண்யம் என்று சிரேஷ்டமான்
பிரம்மம் என்ற பொருளில் விளங்குவதாக இருக்கிறது. 'கௌ' என்றால் மயில்
என்றும் பொருள். ஆகவே, மயில் வாகனனான முருகப்பெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடும், இந்த மார்க்கத்திற்கு, கௌமாரம் என்று பெயர்.

முருகப்பெருமான், 'தமிழ்க்கடவுள்'என்றே போற்றப்படுகிறார். திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், முருகபக்தியை, சென்ற இடமெங்கும் கோவில்கள் கட்டி, வெளிப்படுத்தினர்.

'முருகு' என்றால் அழகு என்று பொருள். கந்தன், பெயரழகன்,வடிவழகன்,
அருளழகன், பக்தருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கும் கொடையழகன்.

சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகன். அந்த சச்சிதானந்தப்
பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் (ஸஹ உமா ஸ்கந்தர்) என்று போற்றி
வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே
பிரகிருதி மாயை. எனவே மாயைக்கு 'குக மாயை' என்னும் பெயரும் உண்டு.
பிரம்மா முதலான படைப்புகளுக்கு காரணம் மாயையே.

மயிலானது மாயைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. அதுதன் தோகையை விரிப்பது போலும் ஒடுக்குவது போலும் சிருஷ்டியும் சம்ஹாரமும் நடைபெறுகிறது. அந்த அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட ஞான சக்தி எம்பிரான்.

சிவபெருமானின், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம்,
அதோமுகம் என்னும் ஆறு முகங்களின் அம்சமான ஆறு நெருப்புப் பிழம்புகள்,
சிவனாரின் நெற்றிக் கண்ணின் வழியே வெளிப்பட்டு,   பரம்பொருளாகிய‌ முருகப் பெருமான் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.   (ஸ்ரீ கந்தபுராணம்)

பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்ததால், 'முருகன் மட்டுமே ஆண்பிள்ளை'
என்பார் வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபகவான், "படைத்தலைவரில் நான் கந்தன்" என்றுரைக்கிறார்.

ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: (கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்,)

ஸ்ரீ ருத்ரத்தில் வரும் 'நமோ ஹிரண்யபாகவே ஸேநாந்யே' என்ற வரிகள்,
தேவசேனாபதியாகிய முருகனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

ஓம் எனும் ஓங்கார ஒலியே வேதங்கள் தோன்றுவதற்கு மூல காரணம். ஓம் எனும் பிரணவம் மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவம்

 அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
 'உ' காராஸ்து மகேச்வர:
 'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
 பிரணவஸ்தி த்ரியாத்மக:

பிரணவ ஸ்வரூபமாக, அதன் உட்பொருளாக விளங்கும் பரம்பொருளே முருகன்.

'ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய் ' என்கிறார் ஸ்ரீ குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில்.

சுந்தரனே சுகந்தனே சுப்ரமணியனே சூரசம்காரனே!
அந்தமாதியில்லா பரமே அருவ உருவ பெம்மானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)

நிர்க்குணப்பரம்பொருளாகவும், சகுண நிலையில், படைப்பிற்குக் காரணமாகவும் உள்ளவ‌ன் முருகப் பெருமான்.

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு.

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய். (கந்தர் கலிவெண்பா).

என்று குமரகுருபரர், ஐந்தொழிலுக்கும் அப்பாற்பட்ட, குறியும், குணமும்,
வடிவுமற்று எங்கும் நிறை பரப்பிரம்மமாய் முருகன் அருளுவதைப் புகழ்கிறார்.

திருமுருகப் பெருமானின், ஆறுமுகங்களின் அழகையும் அவை செய்யும்
அருட்செயல்களையும் நக்கீரப் பெருமான் தமது 'திருமுருகாற்றுப் படை'யில்,

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்

உலகம் கொண்ட இருள் (அஞ்ஞான இருள்) நீங்கப் பொலியும் சூரியனாய் ஒரு முகம். பக்தருக்கு வரம் கொடுக்கும் ஒரு முகம், வேத விதி வழுவாது வேள்வி செய்வோர் வேள்விப் பயனைத் தந்தருளும் ஒரு முகம். வேதத்தில் உள்ள மறை பொருளை, யாவரும் மகிழும் வண்ணம், பூரண சந்திரன் போல் விளக்கி நின்றதொரு முகம். பகைவரை மாய்த்து, இனி பகைவருண்டோ என்று போர்க்களத்தை விரும்பி நின்றதொரு முகம். வள்ளியம்மையிடத்து முறுவல் செய்து மகிழும் ஒரு முகம் என்று இனிது விளக்குகிறார்.

திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் 'சரவணபவ' என்பதாகும். 'சரவணபவன்'
என்றால், நாணல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். 'சரவணபவ' மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

ச... ‍செல்வம்
ர ... கல்வி
வ ... முக்தி
ண ... பகை வெல்லல்
ப ... காலம் கடந்த நிலை
வ ... ஆரோக்கியம்

முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

கந்த புராணக் கதை, அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததே,

பாதாளச் சிறையிலே பாதகர் விரித்த வலையிலே
வேதா மேதைகள், தேவர்கள் யாவரும்; தங்கள்
கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
நாதா காப்பாய்தேவ தேவாவென்றே - நிந்தன்
பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)

என்ற வரிகளில்,முருகன் அவதாரக் காரணத்தை அறியலாம். குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன் இருப்பான் என, முருகன் நின்றாடும் தலங்கள் பல
இருந்தும், ஆறுபடை வீடுகள் என குறிக்கப்பெறும் தலங்கள் முருகப்பெருமானது வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையவை. அவையாவன,

ஓங்கார ஸ்வரூபியான முருகன், தந்தைக்கு அதனை உபதேசித்த, 'சுவாமிமலை', ஞானப்பழத்துக்காக, கோபம் கொண்டு, பின் சினம் தணிந்த 'பழனி', சூரனை சம்ஹரித்து, பின் சிவபூஜை செய்த 'நிராகுலத்' தலமான 'திருச்செந்தூர்', முருகன், தெய்வானைத் திருமணம் நடந்த 'உல்லாசம்' எனப் போற்றப் பெறும் 'திருப்பரங்குன்றம்', வள்ளியை மணம் புரிந்த,சல்லாபம்' எனப் புகழப்படும் 'திருத்தணி', ' வள்ளி தெய்வானை சமேதராக அருள்மழை பொழியும் 'சர்வ வியாபக'த் தலமான 'பழமுதிர்சோலை'.

கந்தபுராணத்தைச் சுருக்கமாக,  "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்”
(சிவனாரின் மகன், சஷ்டித் திதியில் மாமரமாகி நின்ற சூரனை வேல் கொண்டு
பிளந்தான்) என்று கூறுவதுண்டு.

சிவனாரிடமிருந்து, முருகன் தோன்றியதால், 'சிவமும் முருகனும்' ஒன்றே
என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை, சைவத்தின் ஒரு
கூறாகவே கருதுகிறது.

பிரம்மதேவர் பிரணவப்பொருள் அறியாததால் அவரைச் சிறையில் அடைத்து, அவரது படைக்கும் தொழிலைத் தானே செய்தது, சூரனை அழித்தது, தேவர்களைக் காத்தது, தனது உண்மையுருவை மறைத்து, வேடனாகவும் விருத்தனாகவும் வந்து வள்ளியை மணம் புரிந்தது, பக்தருக்கு நித்தமும் அருளுவது என்று ஐந்தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் முதலியவற்றைச் செய்யும் பரம்பொருள் கந்தனே என்பதை,  கந்தபுராணக் காட்சிகள் மறைமுகமாக நமக்கு எடுத்தியம் புகின்றன.

முருகப்பெருமான், இச்சாசக்தியான வள்ளியையும், கிரியாசக்தியான
தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.

கௌமாரத்தில், முருகனே, குண்டலினியாக உருவகப்படுத்தப்படுகிறார். ஆகவே , சில மாநிலங்களில், நாகரூபமாக முருகனை வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக'  (ஸ்ரீகந்தர் ஷஷ்டிக் கவசம்).

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும் ஆறு ஆதாரத் தலங்களாகக்
கூறப்படுகின்றன.அவை,  மூலாதாரம்....திருப்பரங்குன் றம்,
சுவாதிஷ்டானம்...திருச்செந்தூர் , மணிபூரகம்....பழனி,
அநாஹதம்...சுவாமிமலை, விசுத்தி.....திருத்தணி, ஆஜ்ஞா....பழமுதிர்சோலை.
ஞானசக்தியாகிய முருகப்பெருமான், அன்பர் பலருக்கு ஞானோபதேசம் தந்து
ஆட்கொள்ளும் கருணைப் பெருங்கடல். சிவனாருக்கு உபதேசித்த ஏரகத்துச்
செல்வன், சித்தர் பலருக்கு ஞானோபதேசம் தந்து முக்தி நிலையை அருளிய
காருண்ய மூர்த்தி. ஸ்ரீ போகர், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ அருணகிரிநாதர்,
வள்ளலார்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்,  என‌ ஷண்முகக் கடவுள், பல மகான்களுக்கு ஞானாசிரியனாக அருள் மழை பொழிந்து வருகிறார்.

பழமுதிர்சோலையில், ஔவைக்கு 'சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டு, அகந்தை அகற்றி, ஞானம் அருளிய குகக் கடவுளின் கேள்விகளுக்குப் செந்தமிழ்ப்பாமாலை சூட்டி விடையளித்தார் தமிழ் மூதாட்டி.அரியது எது? என்ற கேள்விக்கு,

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

என்று துவங்கி, விரிகிறது ஔவையின் பாமாலை.

சரவணப்பொய்கையில் உதித்த ஷண்முகக் கடவுளை, கார்த்திகைப் பெண்கள்
வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபட உகந்த தினமாகும். வைகாசி விசாகம், முருகனின் திருஅவதாரத்தினமாகக் கருதப்படுகிறது. தைப்பூசத்தில், பிரம்ம வித்யா ஸ்வரூபமான வேல் சக்தியால் முருகனுக்கு வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தில் தெய்வானையை அம்மையை மணம் புரிந்தார். ஆகவே, இந்தத் தினங்கள் 'கௌமாரர்கள்' எனப்படும் முருகபக்தர்களால் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. காவடிகள் எடுத்துவந்து பக்தர்கள் முருகப்பெருமானை இந்தத் தினங்களில் வழிபாடு செய்கின்றனர்.

சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன்,
பின் முருகனின் கருணையைப் பெற வேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை, பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் வைத்து, பொதிகை நோக்கிச் சுமந்து வரும் வேளையில், பழனியில், தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான்.

சுமை காவுபவர்கள்(தூக்குபவர்கள்), சுமை இலகுவாக இருக்க வேண்டி, ஒரு
தடியில் சுமைகளைக் கட்டி, இம்மாதிரிச் சுமந்து செல்வர். காவுதடி, என்பதே
காவடியாக உருமாறியது. வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே காவடியின் தத்துவம்.

இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. தமிழில் கா என்ற சொல், காப்பாற்று என்று பொருள்படும். முருகனின் திருவடிகள் காப்பாற்றும் என்பதால் முருகனுக்குரிய காணிக்கைகளைச் சுமந்து அவர் திருவடி சேர்க்கும் இம்முறைக்கு காவடி எனப் பெயர். காவடிகள், பால் காவடி, பன்னீர்க்காவடி, என‌ எண்ணிலா வகைகளைக் கொண்டது.

காவடியைச் சுமந்து செல்லும் பக்தர்கள், அரோஹரா' அல்லது 'அரோகரா' என்று முழங்குவது வழக்கம்.  'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கமே அரோகரா என்றாயிற்று. இதன் பொருள்,

'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
என்பதாகும்.

திதிகளில் ஷஷ்டித் திதி, முருகனுக்கு உகந்தது. ஷஷ்டிதிதிக்குரிய தேவி,
ஷஷ்டிதேவி எனப் போற்றப்படும் தெய்வானை அம்மை. (ஷஷ்டியில்) சட்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (கரு) வரும் என்ற சொல்வழக்கு, ஷஷ்டி விரதத்தின் மகிமையை உணர்த்துவதாகும். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஆறு தினங்கள் கந்தர்ஷஷ்டி என சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அந்தத் தினங்களில், முருகப்பெருமான் விரதம் இருந்து, ஷஷ்டியன்று சூரசம்ஹாரம் செய்தார். ஆகவே, அந்தத் தினங்களில், முருகப் பெருமானின் தலங்களில், சூரசம்ஹாரப் பெருவிழா பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, முருகன் வேல் வாங்கிய தலமான சிக்கலில், வேல்பூஜைக்குப் பின், வேல்நெடுங்கண்ணியம்மையிடம் இருந்து, முருகன் வேல் வாங்கும் போது, முருகனின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம்.

திருத்தணித் திருத்தலத்தில் மட்டும்,  கந்தர்ஷஷ்டி, பூச்சொரிதல்
விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப் பெருமானது புகழைப்பாடும் துதிகள் அநேகம்...அநேகம். சிவபெருமானது புகழைப்பாடும் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருப்பது போல் முருகப்பெருமானது புகழைப் பாடும் நூல்களும் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பெரும்பணியைச் செய்தவர், திரு.தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆவார்.

திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாம் திருமுறை
திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாம் திருமுறை
திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காம் திருமுறை
குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாம் திருமுறை
பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாம் திருமுறை
பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாம் திருமுறை
கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாம் திருமுறை
திருவகுப்பு - ஒன்பதாம் திருமுறை
கந்தரனுபூதி - பத்தாம் திருமுறை
நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,   முதலானவர்கள் பாடல்கள் -
பதினோராம் திருமுறை
சேய்த்தொண்டர் புராணம் (சிவனாரது சேய் ஆன முருகனின் அடியவர் வரலாறு) -
பன்னிரண்டாம் திருமுறை இயற்றியவர்.தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.
முருகப்பெருமானுக்கும் அவதாரங்கள் உண்டு. ஸ்ரீ குமாரில பட்டர், மாமதுரை
அரசி மீனாட்சியம்மை, சொக்கநாதப்பெருமானின் திருக்குமாரர்
உக்கிரபாண்டியனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரை முருகனின்
திருஅவதாரங்களாகக் கருதுகிறார்கள்.

'வேலை வணங்குவதே வேலை' என்றிருப்போர் வேதனை தீரும். நாதன் முருகன் நல்லருள் தந்து சோதனை நீக்கிச் சுகம் பல தருவான். ஆறுமுகமும்
பன்னிருகரமும் கொண்டு, சேவல்கொடியேந்தி மயில்வாகனத்தில், வள்ளி
தெய்வானையோடு, வேல்முருகனாகக் காட்சியளிக்கும் எம்பெருமான் முருகனின் திருவுருவத்தை மனதிலிருத்தி, முருகப்பெருமானின் திருவடிகளைப் பணிவோம். முருகன் திருவடிகளே சரணம்.

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே 
(பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய
தௌத்தியம் (திருவடித் துதி)).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


அப்புறம் நடப்பது நடக்கட்டும்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

தஞ்சை மாவட்டக்காரர்களுடைய‌ கோபத்திற்கு ஆளாவது என்றே முடிவெடுத்து விட்டேன்.

'சரி உன் விதி! யார் என்ன செய்ய முடியும்?' என்று என் மனசாட்சி திரைப்படங்களில் வருவதுபோலத் தனியாகப் பிரிந்துசென்று  புகை உருவத்தில் நின்று கூறுகிறது.

நான்: 'இப்போ என்ன சொல்கிறாய்? நான் இதைப் பேசவா வேண்டாமா?'

ம சா:'நான் வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறாய்? எப்போது என்    பேச்சை கேட்டுள்ளாய்,இப்போது கேட்பதற்கு?'

ம சா சொன்னதுபோல எப்போதும் ம சா கூறிய எச்சரிக்கைகளை நான் செவி மடுத்ததே இல்லை.ஆகவே இந்த முறையும் செவி மடுக்காமல், கூற நினைத்த‌தைக் கூறிவிடுகிறேன்.அப்புறம் நடப்பது போல் நடக்கட்டும். ஈஸ்வரோ ரக்ஷது.

நான் பிறந்தது வளர்ந்தது சேலம் நகரம்.என் பெற்றோர்களோ நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள்.ஆகவே மதுரை, நெல்லை, குமரி மாவட்ட மக்களுடன் பரிச்சயம் உண்டு. மாமனகள் கோவையில் வாழ்ந்ததால் கோவை ஈரோடு மக்களுடன் பழகியிருக்கிறேன்.என் மூத்த சகோதரியும் மூத்த அண்ணனும் சென்னையில் வாழ்ந்ததால் சென்னையும், என் பங்காளிகள் வேலுரில் இருந்ததால் வடஆற்காடும், அப்பாவின் சந்நியாசித் தொடர்புகளால் தென்னாற்காடு, திரு அண்ணாமலைத் தொடர்பும் எனக்கு உண்டு. பல ஊர் தண்ணீர் குடித்து பல மக்களுடைய இயல்புகளையும் அருகாமையிலிருந்து கண்டிருக்கிறேன்.

தஞ்சையில்தான் 38 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தேன். ஆகவே தஞ்சைதான் என் குழந்தைகளுக்கு பிறந்த மண். ஆனாலும் எனக்கு தஞ்சை மண் ஒட்டவில்லை.

'ஏன் ஒட்டாது? கொஞ்சம் மண்ணில் நீர்விட்டுக் குழைத்து பூசிப்பார்ப்பதுதானே?'என்று எடக்கு மடக்காக சிலர் கேட்கலாம்.

நான் சொல்ல வருவது அந்த மக்களுடன் எனக்கு ஒட்டுறவு ஏற்படவில்லை என்பதுதான்.காரணம் என்ன?

'இன்டெர் பெர்சனல் ரிலேஷன்ஷிப்'எனக்குத்தான் குறைவோ அல்லது தஞ்சைக்காரர்களுக்குத்தான் குறைவோ?

தஞ்சையில் ஒரு அலுவலக சக ஊழியர், நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்,மாதந்தோறும் 15 தேதியில் இருந்து மாதக் கடைசி வரை  எல்லோரிடமும் சிறு தொகைகளைக் கைமாத்துக் கடனாகக் கேட்பார்.இவர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று ஆராய்ந்தபோது வங்கியில் அந்த நாட்களில் இருக்கும் தொகைக்கு வட்டி சேருமாம்.தன் வங்கிக் கையிருப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூச்ச நாச்சம் இல்லாமல் தன்னைவிட அலுவலகப் படித்தரத்தில் கீழ் உள்ளவர்களிடம் கூட 50, 100 என்று வாங்கிக் காலம் தள்ளுவார். 

அவர் அப்படி யென்றால் இன்னொருவருடைய குணம் இன்னும் வக்கரம்.

ஒரு நாள் திடீரென அலுவலக நேரத்தில் என் இருக்கை அருகில் வந்தார்.
'நான் சொல்வதுபோல சத்தமாகச்சொல்லு'என்று கூறினார்.

"என்ன கூற வேண்டும்?"

"புதன்கிழமை வாருங்கள் கட்டாயம் தருகிறேன்' என்று சத்தமாகச் சொல்லு"

 இதை யார் காதில் ப‌டவேண்டும் என்று சொல்லச் சொல்கிறார் என்று சுற்று முற்றும் பார்த்தேன்.பொதுமக்கள் அமரும் வெளி இருக்கையில் ஒரு பட்டாணியர் கையில் தடியை வைத்துக் கொண்டு எங்களையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

"நானும் உங்களுக்கு ஒன்றும் தர வேண்டாம்; நீங்களும் எனக்கு ஒன்றும் தர வேண்டியது இல்லை" என்று சத்தமாகக் கூறினேன்.

"ஆபத்துக்கு உதவாத நீயெல்லாம் ஒரு மனிதனா?"என்று திட்டிவிட்டுப் போனார்.அப்பாவியான‌ என்னைப் பாட்டாணியிடம் சாட்டிவிடப் பார்த்த அவர் மனிதராம்! நான் மனிதனல்ல, மிருகமாம்! என்ன ஒரு நியாயம்? வாழ்க தஞ்சை!

ஒரு நாள் பார்யாள்  'மோருஞ்சாம்'கூடக் கட்டித் தரவில்லை.சரி. நமக்குத்தான் இருக்கவே இருக்கு மங்களாம்பிகா ஓட்டல் என்று மதியம் சாப்பிடப் போனேன்.கூட‌வே ஒரு நபர், முன்பின் தெரியாதவர் என்னோடு ஒட்டிக் கொண்டு உள்ளே வந்துள்ளார். கல்லாவில் இருப்பவருக்கும் மற்ற சர்வர்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்து வந்தவர்கள் என்று எண்ணம் வரும்படி நடந்து கொண்டுள்ளார்.என் ஒருவனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நாங்கள் நண்பர்கள், சேர்ந்து சாப்பிட வந்திருக்கிறோம் என்றே தோற்றம் கொடுத்திருக்கிறது.

என்னுடன் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த நபர். நான் எது ஆர்டர் பண்ணினாலும் அவருக்கும் அது வருகிறது. நான் தோசை என்றால் அவரும் 'அதே' என்பார்.இப்படி சாப்பிட்டு முடித்துவிட்டு காப்பிக்குக் காத்திருக்கும் வேளையில் ஆள் 'எஸ்கேப்'! எனக்கு இரட்டை தொகைக்கு பில் வந்தது. நான் காரணம் கேட்க, அவர்கள் 'உங்களுடன் சாப்பிட்டவருக்கும் சேர்த்து பில்' என்க 'அவரை எனக்குத் தெரியவே தெரியாது' என்று நான் சொல்ல, 'இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க' என்று என் சட்டையைக் கோக்க...ஹும், இன்று நினைத்தாலும் அவமானம் பிடுங்கித் தின்கிறது  வாழ்க தஞ்சை! வாழ்க  எத்தர்கள்!

ஒரு சக ஊழியர் செய்ததது இன்னும் பெரிய எற்று வேலை.சொல்கிறேன் கேளுங்கள்.

நான் அந்த ஊழியருக்கு கண்காணிப்பாளன். சாதாரணமாக எங்கள் அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம் கிடையாது. வந்த வாடிக்கையாளர்களை சரியாக வரவேற்கவில்லை,சரியாகப் பதில் அளிக்கவில்லை,ஊழியர்கள் கோபமாக பதில் சொன்னார்கள் என்றெல்லாம் புகார் வருமே அல்லாது லஞ்சம் கேட்டார்கள் என்ற புகாரே வராது.

குறிப்பிட்ட அந்த ஊழியர் இந்த நல்ல பெயருக்கும் களங்கம் வரும்படி நடந்து கொண்டார். அவர் கெட்ட பெயர் எடுத்தால் பரவாயில்லை. அவர் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு நான் லஞ்சம் வாங்குவது போன்ற ஒரு காட்சியை  உருவாக்கினார். நடந்தது என்ன?

ஒரு நாள் மாலை அலுவலகம் முடியும் நேரம் "சார் ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்கள். நாளை காலை கொடுத்து விடுகிறேன்"என்றார். நானும் கொடுத்து விட்டேன்.

மறுநாள் காலை அலுவலகத்தில் என் மேஜைக்கு அருகில் ஒரு கோப்பைக் கொண்டு வந்து என் கையொப்பத்திற்கு நின்றார்.அந்த ஃபைலுக்கு அடியில் அந்த ஐம்பது ரூபாயை வைத்தார்.காதருகில் வந்து "நேற்று வாங்கிய ரூபாயை  வைத்து இருக்கிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்"என்றார்.

எதேச்சையாக நிமிர்ந்த நான் அவர் தடுப்புக்கு அப்பால் இருந்த ஒரு வாடிக்கையாளருக்குக் கண் ஜாடை காட்டுவதைக் கண்டு கொண்டேன்.உடனே என் மூளைக்கு செய்தி எட்டிவிட்டது. எனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று அந்த வாடிக்கையாளரிடம் கூறிப் பணம் பெற்று இருக்கிறார் என்றும்,அதனை அவர் முன்பாகவே எனக்குக் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் என்றும் புரிந்து கொண்டேன்.

"பணத்தை எடு" என்று கண்டிப்புடன் கூறினேன்.அந்த வாடிக்கையாளரிடம் "இந்த வேலைக்கோ அல்லது வேறு எந்த வேலைக்குமோ எங்கள் அலுவலகத்தில் யாருக்கும் லஞ்சம் தர வேண்டியதில்லை. அப்படி ஏதாவது கொடுத்திருந்தால் திரும்பக் கேட்டுப் பெற்றுக் கொள்"ளும்படி அறிவுறுத்தினேன்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் ஜாக்கிரதை உணர்வை அடைந்தேன்.நான் அந்த ஊழியரை வாடிக்கையாளர் முன்பாக அவமானப் படுத்தி விட்டதாக பெரிய சர்ச்சை வந்தது. நான் ஓய்வு பெறும் வரை அவரால் எனக்கு நிறைய தொல்லைகள்தான். வாழ்க தஞ்சை.வாழ்க எத்தனுக்கு எத்தர்கள்!
============================================
ஓர் அலுவலக ஊழியரிடம் மிகவும் நட்புப் பாராட்டி விட்டேன்.

அந்தக் காலத்தில் ராலே சைக்கிள் விலை ரூ.400/=  அலுவலகத்தில் ரூ.280/= சைக்கிள் கடன் கொடுப்பார்கள். மீதமுள்ள ரூ120/=நாம் அலுவலகத்தில் செலுத்தி மொத்தத் தொகைக்கு காசோலை பெற்று சைக்கிள் விற்கும் கடையில் கொடுத்து வண்டியை டெலிவரி எடுக்க வேண்டும்.(இந்தத் தொகை எல்லாம் மிக அற்பமாக இன்று லட்சத்தில் ஊதியம் வாங்குபவர்களுக்குத் தோன்றலாம்.மொத்த சம்பளமே ரூ290/= என்னும் போது இந்தத் தொகை மிகவும் பெரியது அப்போது)

அப்படி எனக்கு வண்டி எடுக்கச் சென்ற போது நண்பரும் கூட வந்தார். வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன்," என்னால் ஒரு 120/= சேமிக்க முடியவில்லை. அது இருந்தால் நானும் வண்டி எடுப்பேன்" என்றார்.

"உங்களுக்கும் வண்டி வேண்டுமா? நான் தொகை செலுத்தி விடுகிறேன். நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்"

மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். மறுநாள் அவர் பெய‌ருக்கு அலுவலகத்தில் பணம் கட்டி காசோலை பெற்று அவருக்கும் வண்டி எடுத்துக் கொடுத்தேன்.
அவருக்குப் பணம் கொடுத்ததற்கு என்னிடம் எந்த சான்றும் நான் வைத்துக் கொள்ளவில்லை.

மாதம்தோறும் ரூ10/=திருப்பி அளிப்பார்.ஒவ்வொரு முறை திருப்பி அளிக்கும் போதும் என்னிடம் 'ரூ10/‍= பெற்றுக்கொண்டேன்' என்று ரசீது பெற்றுக் கொள்வார். நட்புக்கு நான் செய்தேன். ஒரு வேளை அவ‌ர் அந்தத் தொகையைக் கொடுக்கவில்லை என்றாலும் அவரைக் கேட்டு இருக்க மாட்டேன். ஆனால் அவர் நட்பை விட கணக்கு வழக்கில் சரியாக இருந்தார்.
இது வாழ்க்கையில் ஒரு பாடம். அதன் பின்னர் ஆழ்ந்த நட்பு எனக்கு யாரிடமும் தோன்றாமல் போயிற்று.தாமரை இலைத் தண்ணீர் போல வாழ ஆரம்பித்தேன்.அந்த வகையில் கீதையின் சாரத்தை உணர்த்திய அந்த நண்பருக்கு என் நன்றிகள்.
======================================
எனக்குத் திருமணம் ஆயிற்று.திருமணம்  ஆனாலே அடிக்கடி "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று எல்லோரும் கேட்பது வழக்கம் தானே? அப்படி அலுவலகத்தில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெகு சீக்கிரமாகவே அந்த சந்தர்ப்பமும் வந்தது. 'ஆம், விசேஷம் உண்டு!'என்று கூறிவந்தேன்.

ஒரு சக ஊழியர் என்னைத் தனியாக அழைத்துச் சென்று ரகசியமாக‌க் கேட்டார்

"ஆமாம், அந்த மூன்று நாட்கள் உன் புது மனைவிக்குத் திருமணம் ஆன பின்னர் வந்து விட்டதா? அதனை உறுதி செய்து கொண்டாயா?" என்று தூண்டித் தூண்டிக் கேட்டார்.என்ன ஒரு ஜாக்கிரதை உணர்வு. அவர் கட்டியுள்ள ஆடையையாவது அவர் நம்புவாரோ என்னமோ?

இப்படி பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தஞ்சைக்காரர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்தான். இதனால் எல்லாம்தான் எனக்கு அந்த மண்ணும் அதன் மைந்தர்களும் 38 ஆண்டுகள் வாழ்ந்தும் பிடிபடவில்லை என்றேன்.

தஞ்சை அன்பர்கள் கோபப் பட வேண்டாம்.பின்னர் ஒரு முறை பாஸிடிவ் செய்திகளைத் த‌ஞ்சையைப் பற்றிச் சொல்கிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

சகோதரிகள் பார்வதி அவர்கள் "போர் முழக்கம்' எனும் பெயரிலும் ,தேமொழி அவர்கள், 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' எனும் பெயரிலும் கவிதைத் தொகுப்பு தனுசு வெளியிடலாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்கள். என்னால் அந்த மாதிரி தொகுப்பெல்லாம் வெளியிட முடிகிறதோ இல்லையோ அது இறைவன் செயல்.ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கும் என்னுடைய ஆர்வத்துக்கும் அவர்கள் சொன்ன அந்த இரு தலைப்புகளுக்கும்  (போர் முழக்கம், காதல் வந்தால் சொல்லி அனுப்பு ) இரண்டு கவிதைகள் அனுப்பி உள்ளேன்.என்னை உற்சாகப்படுத்திய பார்வதி அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.




போர் முழக்கம்
கவிதையாக்கம்: தனுசு

ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
வேங்கைமரம் யாவும் தெய்வமரங்கள்-ஆனால்
தேடிப்பார்த்தேன் தென்படவில்லை
தெய்வத்திடமே போய்விட்டதோ?

அன்று பெண்ணாசைக்கொண்டு
காட்டிலிருந்த சீதையை
கடத்தினான் ராவணன்.
இன்று
காட்டையே கடத்துகிறானோ?
வனமெல்லாம் பாலைவனமாகிவிட்டதே!

கடத்தட்டும்!
முப்படைக் கொண்டும் கடத்தட்டும்!-ஆனால்
நான் நட்டுவளர்த்த மரத்தை
மட்டும் விட்டுவிடட்டும்!
அவை
என் ஒரு பிறப்புக்கு மட்டும்
நிழல் கொடுத்த வம்சங்களல்ல!

நாய்க்கு வெறிபிடித்தால்
வெள்ளையும் கருப்பும் ஒன்றுதான்-பண
பேய்க்கு வெறிபிடித்தால்
மரமும் மட்டையும் ஒன்றுதானோ?
போகையில் கொண்டுசெல்வது
மட்டும் போதாதா?

மண்ணாசை கொண்ட
ராவணனின் படைகள்
அழகை காட்டி சிரித்த-என்
ஊரோர மரத்தை வெட்டினால்
எனக்கு வெறி எட்டும்-என்
உயிரில் நெரிகட்டும்

பெற்றால்தான் பிள்ளையா
நட்டு வளர்த்தால் இல்லையா?
பச்சைக்கு
பாடை கட்டும் வேலை
கண் முன்னே நடந்தால்
பார்த்துக்கொண்டிருக்க நானென்னா பிணமா?

ஒரு யுத்தம் செய்ய
சத்தமாக சொல்கிறேன்!
கிளை அறுக்கும் தலையும்
வேர் அறுக்கும் உயிரும்
வீடு போய் சேராது!
சுடுகாட்டுக்கும் ஏதும் மீறாது!!

தீ திரியிட
தீம்தரிகிட
ஓம் பிளிறிட
ஓர் பிரகடனம்!-அது
போர் முரசிட-மர
வேர் அறுவடை தடைபட
தொடங்கிடும் யுத்தம் -இது
வேண்டுமா?

வளர்ந்து வாழவேண்டியது
பிள்ளைகளும் மரங்களும்
கோடாரியை புதைத்துவிட்டு
நம் குழந்தைகளை கற்றுப்போக்கில்
நம்மோடு வாழவிடுங்கள்
பிள்ளைகள் நம்மை காப்பதுபோல்
மரங்கள்
இந்த பூமியை காப்பாற்றும்.
-தனுசு-

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
கவிதையாக்கம்: தனுசு

காலையின் கதிராய்
கலைநயம் ஒன்னு
மாலையின் நிறத்தில்
மயக்குது நின்னு.

மாங்குயில் குரலில்
பாடுது கண்ணு
மார்கழி குளிறாய்
அழகிய பொண்ணு.

கோடையின் நிழலாய்
ஈரெட்டு வயசு
அவளின் பார்வை
செய்வதும் புதுசு.

இதழை விரித்து
இதயம் வருடி
என்னை கவரும்
இனிய திருடி.

வாணத்தின் வில்லாம்
மன்மதன் அம்பு
நீயதை தொடுத்தால்
இதுயென்ன வம்பு.

நூலிடை ஆடையில்
நவரச பின்னல்
நானதை நோக்கிட
நானத்தின் மின்னல்.

ஏனடி அழகி
என்னிடம் சொல்லு
என்னடி விஷயம்
தயக்கம் தள்ளு.

காதுக்குள் கேட்குது
உந்தன் துடிப்பு
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு.

கேளடி  கண்ணே
கொடுப்பேன் உயிரு
யாரடி தடுப்பார்
தெளிவாய்க்கூறு.

மாமன் முறையன்
அச்சம் விலக்கு
துனிந்து வருவேன்
நீதான் இலக்கு.

தடையும் படையும்
எனக்கில்லை பெருசு
குலமும் பலமும்
அதைவிட சிருசு.

சொடுக்கு போட்டு
சிறையை உடைத்து
ஜெயத்தில் முடிப்பேன்
மூன்று முடிச்சு.
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

WHAT IS LOVE....!?
Sent by S.Sabari Narayanan.S

When a little girl puts her energy to give her dad a kiss;That is Love
When a wife makes tea for her husband & take a sip before him ;That is Love
When a mother gives her son the best piece of cake ; That is Love
When your Friend holds your hand tightly on a slippery road ;That is Love
When your brother/sister messages you & ask if you reached home on time ;That is Love
Love is not just a guy holding a girl & going around the city!
Love is actually another name of "Care "!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி
"Pride destroys the merit of service"
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

81 comments:

  1. அன்பார்ந்த வாத்தியார் அவர்களுக்கு,
    என் கௌமாரம் வெளியிட்டதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. ஆனால் முருகனே பரம்பொருள் என நிறுவும் மிகப் பல பகுதிகள் விடுபட்டுள்ளன. message truncated என வந்ததால் மறுமுறை அனுப்பினேன். மீண்டும் தங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன் ஐயா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. எம் தெய்வம் முருக பெருமானை பற்றிய
    பதிவு அருமை.
    இன்னும் விளக்கங்கள் சொல்லி இருக்கலாம்.
    பழனியில் நவபாஷண ரூபனாய் நிற்கும்
    ஞான தெய்வம்,நம் அனைவருக்கும்
    அருள் புரியட்டும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  3. 1.

    மதிப்பெண்ணிற்கு
    மதிப்பெண் போட முடியுமா
    கருத்தேதும் இல்லை.
    கப்சிப் ..மௌனம்

    2.
    முருகா சரணம்..

    3.
    உலகம் சுற்றிய(சுற்றும்) வாலிபனுக்கு இந்த பாடலினை சுழல விடுகிறோம்
    ரசித்து மகிழ்வீர் தானே..


    தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு

    சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம
    இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம

    எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா
    அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா பதில் சொல்லுமா

    மூக்கு செஞ்ச மண்ணு அது
    மூணாரு - பட்டுக்

    கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு

    காது செஞ்ச மண்ணு அது
    மேலூரு - அவ

    ஒதடு செஞ்ச மண்ணு மட்டும்
    தேனூரு

    கருப்புக் கூந்தல் செஞ்சது
    கரிசப்பட்டி மண்ணுங்க

    தங்கக் கழுத்து செஞ்சது
    சங்ககிரி மண்ணுங்க

    வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க

    பல்லழகு செஞ்சது
    முல்லையூரு மண்ணுங்க

    நெத்தி செய்யும் மண்ணுக்கு
    சுத்தி சுத்தி வந்தேங்க

    நெலாவில் மண்ணெடுத்து
    நெத்தி செஞ்சேன் பாருங்க

    தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்

    தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு

    வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட

    கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
    காஞ்சிபுர வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு

    சீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு

    பட்டுக்கோட்ட ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு

    பாஞ்சாலங்குருச்சியில மண்ணெடுத்தேன் நெகத்துக்கு

    ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு

    என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு

    4.5,
    போர் முழங்கியதால்
    வார் பிடிக்கும் காதல் வந்ததோ..

    வீரனுக்கு பெண்தருவது தானே
    வீரபாண்டி வழக்கம்.. நம்ம

    புலியாருக்கு கிடைக்கட்டும்
    மலிவிழாக் கோலங்கள்..

    6.
    LOVE பற்றிய விளக்கம் தரும் சபரியாரே
    LAST Week எல்லாம் எங்கே போனீர்

    உமது பதிவுகள் சென்னையை கலக்குகின்றன
    உக்கிரகமாக வெய்யில் கூட உட்கார்ந்து கொண்டன

    வாழ்த்துக்கள்.,,
    வழக்கம் போல.,,,

    ReplyDelete
  4. சகோதரி தேமொழியின் கைவண்ணத்தில் உருவான நீலவண்ணப் படம் அருமை.
    குருந்தகவல்களோடு காணொளியும் ரசிக்கச் செய்தது..
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதரியாரே!

    ReplyDelete
  5. அறிய பலத் தகவல்களை திரட்டி முருகனின் அழகை அருமையாக செதுக்கிய கட்டுரை.
    சகோதரி பார்வதியின் கைவண்ணத் திற்கும் நன்றி அப்பன் முருகன் திருவருள் எப்போதும் முன் வந்து நிற்கட்டும்.
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதரியாரே!

    ReplyDelete
  6. கிருஷ்ணன் சாரின் அனுபவங்கள் அட இப்படியுமா மனிதர்கள் என்று நினைக்கச் செய்தது..
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  7. ////நாய்க்கு வெறிபிடித்தால்
    வெள்ளையும் கருப்பும் ஒன்றுதான்-பண
    பேய்க்கு வெறிபிடித்தால்
    மரமும் மட்டையும் ஒன்றுதானோ?
    போகையில் கொண்டுசெல்வது
    மட்டும் போதாதா?

    தீ திரியிட
    தீம்தரிகிட
    ஓம் பிளிறிட
    ஓர் பிரகடனம்!-அது
    போர் முரசிட-மர
    வேர் அறுவடை தடைபட
    தொடங்கிடும் யுத்தம் -இது
    வேண்டுமா?////

    சபாஷ் கவிஞரே! கோபக் கனல் கொப்பளிக்கும் அருமையான வரிகள்.
    உணர்ச்சியின் விளிம்பில் நின்று செதுக்கிய வரிகள் sikamaaga நிற்கின்றன..
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    ReplyDelete
  8. அடுத்தும் அசத்துகிறது... காதல் வந்தால் சொல்லி அனுப்பு என்று..

    ஓசை நயத்தில் ஒய்யார நடையில்
    ஆசை நாயகி அயித்தை மகளை
    அசத்தியே மிற்கும் அற்புதக் கவிதை.

    அருமை.. அருமை கவிஞரே!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அன்பு என்பது கவனிப்பு என்ற அற்புதக் கருத்தை
    அழகாய் சொல்லிய நண்பர் சபரியாருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. ஐயா என் படத்திற்கும், அதன் தொடரான தகவலுக்கும் மாணவர் மலரில் இடம் கொடுத்ததற்கு நன்றி.
    பார்த்து படித்து ரசிப்பவர்களுக்கும் நன்றி.
    "போர்முழக்கம்" மற்றும் சபரியின் "அன்பு" பதிவிற்கும் வந்த படங்கள் மிகவும் பிடித்தது.
    முதல் ஆக்கத்திற்கு வந்த படமும் அருமை. (ஒ.. அது நான் அனுப்பியதுதானா? ...சரி ...சரி.. கண்டுக்காதீங்க..)
    அய்யர் ஐயா அவர்களின் மதி + பெண் சொல்விளையாடலை ரசித்தேன் அருமை.

    புவனேஷ்வர் இந்தவாரமும் கற்பனைக் காதலியைப் பற்றி மேலும் இரண்டு கவிதை அனுப்பியிருக்கக் கூடாதா?

    சபரியின் "WHAT IS LOVE....!?" நன்றாக இருந்தது.
    குடை எடுக்காமல் போய் மழையில் நனைந்து உடலைக் கெடுத்துக் கொள்ளும்பொழுது மனைவி வைதால் அதுவும் அன்புதான்.
    மதிப்பெண் குறைந்ததென்று அம்மா திட்டினால் அதுவும் அன்பு தான் ஹி. ஹி. ஹீ..........

    ReplyDelete
  11. "அரோஹரா" என்பதின் பொருள் இபொழுதுதான் தெரிந்துகொண்டேன், ஏனோ தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதுவரை இருந்ததில்லை. உன்பொருள் இனி உனக்கில்லை என்ற (கோவிந்தா ...கோவிந்தா போன்று) அர்த்தத்தில் விளையாட்டாக உபயோகிப்பதை இனி யோசித்துப் பார்க்கவேண்டும். பதிவைப் படித்துவிட்டு கைவேலையாக சென்று மீண்டும் வந்து பின்னூட்டத்தை படித்தபின்தான் தெரிந்தது, எனவே மீண்டும் இணைக்கப்பட்ட முழுகட்டுரையையும் படித்தேன். இனிமேல் நீண்ட கட்டுரையாக இருந்தால், word document கோப்பாக இணைத்து விடுங்களேன்.

    மலையையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக பண்டைத்தமிழில் குறிப்பிடப்படும் முருகனுக்கு வள்ளி என்ற காதல் மனைவி மட்டும் இருந்ததாகவும், பின் வந்த கலாச்சார மாறுதல்கள் மற்ற உறவுகளை ஏற்படுத்தி சைவ வைணவ மத ஒற்றுமைக்கு வழிவகுத்ததாக எங்கோ படித்த ஞாபகம். அதன் பிறகுதான் தெய்வானையை இணைத்து இருதார வழக்கும் வந்ததாம் (இதனால் யார் என்ன பயனடைந்தார்களோ தெரியவில்லையே :))). தகவல்கள் பல நிறைந்த உங்கள் பதிவிற்கு நன்றி பார்வதி.

    ReplyDelete
  12. KMRK ஐயா, "சக்க போடு போடு ராஜா" என்று நீங்கள் மனசாட்சியுடன் நடத்திய உரையாடல் பிடித்திருந்தது. ஆனால் கவனம் ....யாரும் பக்கத்தில் இல்லாதபொழுது மட்டும் மனசாட்சியுடன் இப்படி கலந்துரையாடலில் ஈடுபடுங்கள்.

    ///"நானும் உங்களுக்கு ஒன்றும் தர வேண்டாம்; நீங்களும் எனக்கு ஒன்றும் தர வேண்டியது இல்லை" என்று சத்தமாகக் கூறினேன்.///

    "நான்தான் ஏற்கனவே உங்களுக்கு கடன் கொடுக்க முடியாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பின்ன ஏன் தினமும் வந்து கடன் கொடு, கடன் கொடு உயிரை எடுக்கறீங்கன்னு" என்று அந்த மனிதரிடம் சண்டைக்குப் போவது போலவாவது கத்தியிருக்கலாம்தானே. உங்களிடம் இருந்து வரவேண்டிய பணம் புதன்கிழமை வந்ததும் பட்டுவாடா செய்வதாக கடன்காரர்களிடம் சாக்கு சொல்ல நினைத்திருக்கலாம் அந்த மனிதர்.

    ///கூட‌வே ஒரு நபர், முன்பின் தெரியாதவர் என்னோடு ஒட்டிக் கொண்டு உள்ளே வந்துள்ளார். கல்லாவில் இருப்பவருக்கும் மற்ற சர்வர்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்து வந்தவர்கள் என்று எண்ணம் வரும்படி நடந்து கொண்டுள்ளார்.///

    பாருங்க KMRK ஐயா, ஓடிப்போன காதலர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் நீங்கள் பரிவுடன் அன்னதானம் செய்வதைப் பல நாட்கள் கவனித்தவராக இருந்திருக்கலாம். அதனால் எத்தனனை பேர் உணவுவிடுதிக்கு வந்தாலும் உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறார். பாவம் அவரிடம் போய் கோபப்படலாமா? அவர் தஞ்சை ஆள் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? அவருக்கு தஞ்சை ஆட்களிடம் தன் பப்பு வேகாது, நம்மள மாதிரியே இருக்காரே இந்த வெளியூர் ஆள்தான் தோதுப்படுவார் என நினைத்திருக்கலாம் இல்லையா?

    ///சாதாரணமாக எங்கள் அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம் கிடையாது. வந்த வாடிக்கையாளர்களை சரியாக வரவேற்கவில்லை,சரியாகப் பதில் அளிக்கவில்லை,ஊழியர்கள் கோபமாக பதில் சொன்னார்கள் என்றெல்லாம் புகார் வருமே அல்லாது லஞ்சம் கேட்டார்கள் என்ற புகாரே வராது. ///

    எதற்காக சரியான கவனிப்பு கிடைப்பதில்லை என்று புரியாத மக்குகளா அந்த வாடிக்கையாளர்கள்?

    ///தஞ்சை அன்பர்கள் கோபப் பட வேண்டாம்.பின்னர் ஒரு முறை பாஸிடிவ் செய்திகளைத் த‌ஞ்சையைப் பற்றிச் சொல்கிறேன்.///

    பாஸிடிவ் செய்திகளும் இருக்கிறதா??????!!!!!!!!!

    ReplyDelete
  13. ///பெற்றால்தான் பிள்ளையா
    நட்டு வளர்த்தால் இல்லையா?///
    என்பது நல்ல கேள்வி. "தீ திரியிட தீம்தரிகிட" வரிகள் போர் முழக்கத்தை கேட்ட உணர்வைக் கொண்டு வந்துவிட்டது. அப்படியே கவிதையின் நகலை பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயாவிற்கும் அனுப்பிவைக்க பரிந்துரைக்கிறேன்.

    ///இதழை விரித்து
    இதயம் வருடி
    என்னை கவரும்
    இனிய திருடி.......
    .
    .
    காதுக்குள் கேட்குது
    உந்தன் துடிப்பு
    காதல் வந்தால்
    சொல்லி அனுப்பு........///
    தனுசு... கவிதை முழுவதுமே அருமை, அனாலும் மேலே குறிப்பிட்ட வரிகள்இன்னமும் அருமை. எப்படி அந்த மாதிரி கோபத்தில் முழங்கிவிட்டு உடனே குழைவாகவும் எழுதுகிறீர்கள்?

    ReplyDelete
  14. கௌமாரம்
    விடுப்பட்ட பகுதிகளை மறுபடியும்
    இணைத்து படித்தேன்.அருமையாக
    இருந்தது.
    கோர்வையாக அழகாகவும் இருந்தது.
    அழகனை பற்றிய செய்திகள் அழகாய்தானே
    இருக்கும்.
    உங்களுக்கும் உங்கள் குடும்ப்பத்தினருக்கும்
    முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  15. நான் இனிமேல் ஆங்கிலமொழி ஆக்கங்கள், கவிதைகள்,ஆன்(மீக?)மிக ஆக்கங்கள் என்ற வகைகளைப் படித்து கமென்ட் அடிப்பதில்லை என்று கொள்கை முடிவெடுத்துள்ளேன்..

    முடிந்தால் கதை, கட்டுரை போன்றவற்றிலே என்னைக் கவர்ந்தவற்றை பற்றி மட்டும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

    இந்த முறை எனைக் கவர்ந்த ஆக்கம் தஞ்சாவூரைப் பற்றிய KMRK அவர்களின் ஆக்கம்தான்..
    எழுதப்படிருந்த எல்லா சம்பவங்களுமே நல்ல சுவாரஸ்யமானவை..அருமையாக விவரித்து எழுதப்பட்டவை என்கிற வகையிலே
    தொடர்ந்தும் நல்ல எழுத்தாளர் என்ற பெயரை KMRK தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம்..'தஞ்சாவூர் எத்தன்' என்று வழக்கிலே ஒரு சொல் உண்டு..அதனை விலாவாரியாக விளக்க முயற்சித்திருகிறார்..

    பேசப்படவேண்டும்,விவாதப் பொருளாக வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்துடன் ஒரு ஊரைக் குறிப்பிட்டு இப்படி சம்பவங்களை விவரித்திருக்கிறார்..இப்படிப் பகிரங்கமாகச் சொல்லத் துணிச்சலும் வேண்டும்..

    அதனால் விட்டுவிடுகிறேன்..ஆனால் எல்லா இடங்களிலும் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்..
    நான் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவன் என்ற போதிலும் விசுவாசமான நண்பர்கள் என்றால் அது ராமநாதபுரம்,திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களே என்று சொல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குக் காரணங்களிலே KMRK பட்டியளிட்டுள்ளவைகளும் சில..

    மாறிவரும் வேகமான பிசினெஸ் உலகிலே காரியக்காரர்களாக இருப்பதிலும் கூடத் தவறில்லையே..
    எங்குமே இனிவரும் காலங்களில் விசுவாசமான,நேர்மையான,எதார்த்தமான,அன்பான, ஒட்டுதலான வாழ்க்கை உறவுகளைத் தேடி எமாற்றமடையவோ சலிப்படையவோ வேண்டாம் என்பதே எனது கருத்து..

    ReplyDelete
  16. தேமொழி அவர்களின் ஓவியத்திலே 'மின்னும் கண்கள்' மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டதைப் போன்ற கலை அம்சத்துடன் பளிச்சிட்டுக் கண்ணைக் கவர்கின்றன..

    LSD என்றதும் நினைவுக்கு வருகிற விஷயம்..அசஹாரா ஷோகோ என்கிற ஜாபனீஸ் ஆள் ஒருவனால் 'ஓம்' என்கிற சம்ஸ்கிருத வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட 'ஓம் ஷ்ன்றிக்யோ' என்கிற அமைப்பு இந்துத்துவ,புத்த,கிறிஸ்துவ மதங்களின் தீவிர அம்சங்களில் இருந்து தவறான பிரச்சாரங்களுக்கான சாராம்சத்தை கொள்கைப்படுத்தி LSD போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தி யோகா,ஆன்மிக வேஷம் போட்டு உலகமெங்கும் கிளைகளைப் பரப்பி, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு டோக்யோ வின் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்களிலே சரின் கேஸ் மூலம் பயணிகளின் உயிருக்குச் சேதம் விளைவித்தது என்று எபோலா,ஆந்த்ராக்ஸ் பயோ ஆயுதங்களைக் கொண்டு பெரும்அழிவுக்கு திட்டம் தீட்டியது என்று 1995 லே விசுவரூபம் எடுத்த ஒரு பிரச்சினை நேற்று NHK ஸ்பெஷல் ப்ரோகுராமிலே டிவியிலே ஒளிபரப்பப்பட்டது..
    2011 லே 1500 க்கும் மேலான ஆட்கள் மெம்பர்ஷிப் வகிப்பதாகவும் சொல்கிறது செய்தி..
    http://en.wikipedia.org/wiki/Aum_Shinrikyo

    ReplyDelete
  17. என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி. மறுதலிக்கப்படும் என்றே எண்ணியிருந்தேன்.என் ஆக்கததைப்படித்துப் பின்னூட்டம் இடப்போகும் நண்பர்களுக்கு நன்றி.

    தற்சமயம் ஜூன் முதல் தேதிவரை வெளியூர் பயணம். எனவே மற்றவர்ககளுடைய ஆக்கங்களைப் படித்துவிட்டாலும் விரிவான பின்னூட்டங்களை இட முடியவில்லை. அனைத்து ஆக்கங்க‌ளும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  18. மிகவும் கனமான செய்திகளைச் சுமந்து வந்திருக்கிறது வாரமலர். நிதானமாகப் படித்துவிட்டுத்தான் கருத்துச் சொல்ல வேண்டும்.

    வழக்கம் போல் தனுசு வெளுத்துக் கட்டியிருக்கிறார். படிக்கிறேன்.

    எனக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டிய பகுதி கே.எம்.ஆர். அவர்களின் "தஞ்சைச் சாடல்" பகுதிதான். இதே சாடல்களை தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியும் அல்லவா? ஒரு ஊரில் அனைவரும் நல்லவர் அல்லது கெட்டவர் என்று இருக்க முடியுமானால் சில ஊர்களில் சிறைச்சாலைக்கோ அல்லது மனநலம் குன்றியோர் இல்லத்துக்கோ வேலை இல்லாமல் போய்விடுமே.

    தஞ்சை வாசத்தின் 38 ஆண்டு கால அனுபவம் லால்குடிக்குச் சென்ற மாத்திரத்தில் மாறிவிடுமா என்ன? சில கெட்ட பழக்கங்கள், ஏமாற்று வித்தைகள், அடாவடிகள், அபூர்வ சாமர்த்தியங்கள் ஓரளவு எல்லா பகுதிகளிலும் உண்டு. அதை ஒரு பகுதியினரின் சொத்தாக மாற்ற நண்பர் முயன்றிருக்கிறார்.

    நான் பிறந்ததுமுதல் தஞ்சை வாசிதான் என்றாலும் நண்பர் சொன்ன எந்த குணமும் எனக்கு இல்லை என்பதை அடித்துக் கூறலாம். அப்படியென்றால் பெருவாரியானவர்களுக்கு இருக்கலாம் என்று அவர் வாதிடலாம். இப்படியொரு குற்றச்சாட்டை அல்லது பழியை எந்தப் பகுதியினர் மீதும் போடாமல் இருப்பது நல்லது என்பது அவருக்கும் மூத்தவன் என்ற முறையில் அவருக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  19. தெரியாத தகவலை தேடி கொடுத்துள்ளார் தேமொழி,பாராட்டுக்கள்.

    நமக்கு ஆங்கில பாடல் என்றால் மைக்கேல் ஜாக்சன்(அதுவும் டான்சுக்காக).மட்டும் தான்.ஆனால் அனைத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வம் உண்டாக்குகிறார் தேமொழி. நன்றாகவே இருந்தது.
    +++++++++++++++++++++++++++++
    முருகனைவிட
    பார்வதியின் எழுத்து நடை
    அவரின் ஆக்கத்தை படிக்க தூண்டுகிறது.

    கௌமாரம்
    நல்லதொரு திருப்புகழ் பாடி
    சாமரம் வீசியது
    +++++++++++++++++++++++++++++++++

    கிருஷ்னன் சார் தஞ்சையை குறை சொல்லி உள்ளீர்கள். கோபாலன் அய்யா கோபித்துக்கொள்ள போகிறார்.அதுவும் அனைத்தும் பணம் சம்பந்தமாகவேஉள்ளது.

    முதலாமவர்- காசை பெருக்குகிறார்
    இரண்டாமவர்- காசை பொருக்குகிறார்
    மூன்றாமவர்- சாப்பாட்டுக்கள்ளன்
    நாங்கமவர்- பலே பாண்டியா
    ஐந்தாமவர்- தமிழன்
    ++++++++++++++++++++++++++++++++++++++

    எனது இரு ஆக்கத்தையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.
    +++++++++++++++++++++++++++++++
    சபரி
    அதுதான் அன்பு-இன்று
    இதுதான் டாப்பு.

    ReplyDelete
  20. வரிசையாக ஆக்கங்களை படித்துவிட்டு அப்படியே எனது பின்னூட்டத்தையும் பதிவிட்டேன். அதன் பின் மற்றவர்களின் பின்னூட்டங்களை படிதேன், கோபாலன் அய்யா அவர்களின் பின்னூட்டத்தில் கிருஷ்னன் சாரின் ஆக்கத்திற்கு எனக்கு வந்த எண்ணம் லேசாக பிரதிபலித்திருந்தது.

    சோழ நாடு சோருடைத்தது
    தஞ்சாவூரார்கள்
    மண்ணையும் மண்ணின் மைந்தனையும் விட்டுதர மாட்டார்கள்.

    கிருஷ்னன் சார் அடுத்தவாரம் அவர்களின் உயர்குணங்களையும் எழுதிவிடுங்கள்.

    ReplyDelete
  21. அய்யர் said..
    .மதிப்பெண்ணிற்கு
    மதிப்பெண் போட முடியுமா////

    நான் ரசித்த வார்த்தை ஜாலம்.

    அருமை அய்யர் அவர்களே.

    ReplyDelete
  22. அய்யர் said..
    போர் முழங்கியதால்
    வார் பிடிக்கும் காதல் வந்ததோ..

    வீரனுக்கு பெண்தருவது தானே
    வீரபாண்டி வழக்கம்.. நம்ம

    புலியாருக்கு கிடைக்கட்டும்
    மலிவிழாக் கோலங்கள்..

    பாராட்டுக்களுக்கு நன்றிகள் அய்யர் அவர்களே.

    ReplyDelete
  23. ஜி ஆலாசியம் said...
    சபாஷ் கவிஞரே! கோபக் கனல் கொப்பளிக்கும் அருமையான வரிகள்.
    உணர்ச்சியின் விளிம்பில் நின்று செதுக்கிய வரிகள் sikamaaga நிற்கின்றன..
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    அடுத்தும் அசத்துகிறது...அருமை.. அருமை கவிஞரே!
    வாழ்த்துக்கள்.

    ரசித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் ஆலாசியம்.

    ReplyDelete
  24. தேமொழி said...அப்படியே கவிதையின் நகலை பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயாவிற்கும் அனுப்பிவைக்க பரிந்துரைக்கிறேன்

    எப்படி அனுப்புவது விவரமாக சொல்லுங்களேன்.முயற்சிப்போம்.

    ReplyDelete
  25. தேமொழி said...எப்படி அந்த மாதிரி கோபத்தில் முழங்கிவிட்டு உடனே குழைவாகவும் எழுதுகிறீர்கள்?

    பிரசவம் சுகமாக
    தினமும் நடைப்பயிற்சி அவசியம்
    மருத்துவம் சொல்கிறது.

    நானும்
    கருவை தலையில் சுமந்துக்கொண்டு -அதற்கு
    உருவை தர
    ஒரு மணி நேரம் நடையில்
    மனதை திறப்பேன்,
    கவிதை பிறப்பாள்.

    உங்களின் பாராட்டுக்கு நன்றிகள் தேமொழி.

    ReplyDelete
  26. இதை முயற்சித்துப் பார்த்தல் என்ன தனுசு?

    http://www.abdulkalam.com/kalam/jsp/Contactus.jsp

    No 10, Rajaji marg,
    New Delhi -110011.
    Phone: 011 23793601
    email:apj@abdulkalam.com

    *also see:*
    http://118.91.233.120/kalam/jsp/SendToKalam.jsp

    assuming they will keep their words
    :)))

    ReplyDelete
  27. மைனர்வாளும் தஞ்சாவூராரும் கூறியுள்ள கருத்துப்படி மற்ற எந்த ஊரிலும் இது போன்ற நபர்களைச் சந்தித்துவிடலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.தஞ்சைக்காரர்களின் சிறப்பு என்னவெறால் அவர்களுடைய 'கேமோஃப்ளாஜ்'ஜை சுலபமாக விலக்கி அவர்களை சுலபமாக அறிந்துவிட நம்மை அனுமதிக்க மாட்டார்கள்.மற்ற ஊர்க்கார்கள் தங்கள் குறைகளை மறைக்கத் தெரியாமல் சுலபமாக வெளிப்பட்டு விடுவார்கள்.

    ReplyDelete
  28. எனது வேண்டுகோளை ஏற்று, கட்டுரையை மீண்டும் வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  29. /////kmr.krishnan said...
    மைனர்வாளும் தஞ்சாவூராரும் கூறியுள்ள கருத்துப்படி மற்ற எந்த ஊரிலும் இது போன்ற நபர்களைச் சந்தித்துவிடலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.தஞ்சைக்காரர்களின் சிறப்பு என்னவெறால் அவர்களுடைய 'கேமோஃப்ளாஜ்'ஜை சுலபமாக விலக்கி அவர்களை சுலபமாக அறிந்துவிட நம்மை அனுமதிக்க மாட்டார்கள்.மற்ற ஊர்க்கார்கள் தங்கள் குறைகளை மறைக்கத் தெரியாமல் சுலபமாக வெளிப்பட்டு விடுவார்கள்.//////

    நன்றி..நம்மில் பலருக்கும் பல சமயங்களில் 'கமப்லேஜ்' அவசியமாகத்தனே இருக்கிறது..
    எதிராளிகள் எப்போதுமே குறிவைத்துக் காத்திருக்கும் போது ஆயத்தமாக இல்லாவிட்டால்தான் பிரச்சினை..

    முதலில் நான் சொல்லியிருந்த என் கருத்தை ஒட்டிய வேறொரு உதாரணத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்..தமிழக அளவிலானது..முக்கியப் பொறுப்புக்கு அடுத்த வாரிசு யாரென்று முன்பொரு சமயம் சிக்கல் வந்த போது தயங்காமல் தென்பகுதியைச் சார்ந்த தேனிமாவட்டத்துக்காரரை விசுவாசம்,நம்பிக்கை அளவிலே பொறுப்பிலே அமர்த்தி அழகு பார்த்தவர்கள் கூடவே இருந்த தஞ்சை மாவட்டத்துக் காரர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை..சமீபத்திலும் கூட அதே சிக்கல் நீடிக்கிறது..கைதுப் படலங்களும் தொடர்கிறது..
    தற்போதைய ஆளுங்கட்சிதான் அப்படியென்றால் முன்னாள் ஆளுங்கட்சி ஒரு தஞ்சை மாவட்டத்து முக்கியப் பெருந்தலையை முக்கியப் பதவிகள் கொடுக்காமலே வைத்து கடைசி வரை அவரது அரசியல் வாழ்வையே ஒன்றுக்குமில்லாமல் ஆக்கப் போக சவால் விட்டு வெகுண்டெழுந்த அவர் தமிழகத்திலே ஒரு பெரும் மாற்று அரசியல் கட்சியையே உருவாக்கிக் கொடுத்தார்..அந்த புது அரசியல் தலைமை திருநெல்வேலி மாவட்டம்.அவரும் உருவாக்கிக் கொடுத்த தஞ்சாவூர்க் காரரையே நம்பமுடியவில்லை என்று ஓரம்கட்ட ஆரம்பித்தாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..அதனால் இப்போ அந்தப் பெருந்தலை வேறு வழியில்லாமல் பழைய இடத்துக்கே ஐக்கியமாகிப் போனார்..காரணம் அவர் எதிர்த்துக் கொண்ட அரசியல் தலைமையும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர்க்காரர் அல்லவா ?எத்தனுக்கு எத்தனல்லவா அவர்?
    இன்னமும் தமிழகத்தின் எதிர்காலம் இவர்களின் கைக்குள்ளே கட்டுப் பட்டுப் போயிருப்பதை அரசியல் தெரிந்த யாரும் மறுக்கமுடியாது மவுநிப்பதைத் தவிர வேறு வழியில்லை..
    அட..'இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்கள்' என்னும் சொலவடை கூட ஒத்துவருகிறதே என்று KMRK அவர்கள் என்னதான் தஞ்சையைப் பற்றி குறை சொல்லிப் புளகாங்கிதப் பட்டாலும் இந்தப் பழமொழி முழுவதும் பொருந்திவருவது என்னவோ திருவண்ணாமலை மாவட்டத்துக்காரகளுக்குத்தான்...அதிலும் இளிச்சவாயாக இருப்பது மதுரை மாவட்டம்தான்..

    ReplyDelete
  30. தேமொழியின் படம் அருமை. ஜான் லென்னானின் பாடலையும் அது சம்பந்தமாக மிக அரிய தகவல்களைத் தொகுத்து தந்தமைக்கு நன்றி. என் ஆக்கம் தொடர்பான தங்கள் மேலான கருத்துக்களுக்கும் நன்றி.

    //பதிவைப் படித்துவிட்டு கைவேலையாக சென்று மீண்டும் வந்து பின்னூட்டத்தை படித்தபின்தான் தெரிந்தது, எனவே மீண்டும் இணைக்கப்பட்ட முழுகட்டுரையையும் படித்தேன்.//

    பின்னூட்டத்தைப் படித்தவுடனேயே, கட்டுரை மீண்டும் இணைக்கப்பட்டு விட்டதை எப்படித் தெரிந்து கொண்டீர்கள். ரியலி சூப்ப்ப்ப்ப்ர்.!!!!.

    //இனிமேல் நீண்ட கட்டுரையாக இருந்தால், word document கோப்பாக இணைத்து விடுங்களேன்.//

    சம்பந்தப்பட்ட விஷயம் தொடர்பான எல்லாத் தகவல்களையும் தரவேண்டும் என்ற ஆர்வக்கோளாறே, நீண்ட கட்டுரைகள் தருவதற்குக் காரணம். இனிமேல் நீண்ட கட்டுரைகள் தருவதைத் தவிர்க்கிறேன். படிப்பதற்கும் எளிதாக இருக்கவேண்டும் அல்லவா!!!!.

    ReplyDelete
  31. //அதிலும் இளிச்சவாயாக இருப்பது மதுரை மாவட்டம்தான்..//

    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களே, நானும் மதுரைதான். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எல்லா மதுரைக்காரர்களும் இளிச்சவாயர்கள் அல்ல. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாதவர்கள், காரியம் ஆகவேண்டுமென்றால் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள் நிறையப் பேரைப் பார்த்த கசப்பான அனுபவங்கள் நிறைய உண்டு.

    ReplyDelete
  32. திரு.கே.எம்.ஆர் அவர்களின் ஆக்கம் தஞ்சை மண்ணின் மைந்தர்களின் 'நெகடிவ்' பக்கத்தை வெளிப்படுத்தியது. சீக்கிரம் பாஸிடிவ் பக்கத்தையும் படிக்கத் தாருங்கள்.

    ReplyDelete
  33. உண்மையில் நான் சொன்ன தலைப்பில் கவிதை எழுதி நீங்கள் தான் என்னைக் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள் தனுசு. மிக மிக நன்றி.

    //அவை
    என் ஒரு பிறப்புக்கு மட்டும்
    நிழல் கொடுத்த வம்சங்களல்ல!//

    உண்மை. தலைமுறைகள் கடந்து பலன் கொடுக்கும் வள்ளல்களல்லவா மரங்கள். அது போல் ராவணனின் பெண்ணாசையையும், ராவணனின் படைகளின் (அரக்கர்கள்) மண்ணாசையையும் ஒரு சேரச் சொல்லியிருக்கிறீர்கள்.

    //நாய்க்கு வெறிபிடித்தால்
    வெள்ளையும் கருப்பும் ஒன்றுதான்-பண
    பேய்க்கு வெறிபிடித்தால்
    மரமும் மட்டையும் ஒன்றுதானோ?
    போகையில் கொண்டுசெல்வது
    மட்டும் போதாதா?//

    அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள். 'இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே' என்ற வரிகள்
    மறந்ததால் தானே, விருட்சங்களைத் துச்சமாய் வெட்டுகிறார்கள். மிக மிக‌
    அருமையான வரிகள் கவிஞரே. உங்கள் புகழை இலக்கிய உலகம் மிகப்பலமாக‌
    உச்சரிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

    //சொடுக்கு போட்டு
    சிறையை உடைத்து
    ஜெயத்தில் முடிப்பேன்
    மூன்று முடிச்சு.//

    சத்தியமாய் இந்த வரிகளை சூப்பர் ஸ்டார் பாடியபடி சொடுக்கு போட்டு சிறை
    உடைக்கும் காட்சி கண்முன் வந்தது. 'ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே'
    என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியிலும் சிருங்காரம்
    ததும்புகிறது. புலிகட் ஃபுல்கட்டு கட்டி விட்டார் கவிதையில். நன்றி தனுசு.

    ReplyDelete
  34. இந்தமுறை சபரியார் நெஞ்சம் நெகிழச் செய்து விட்டார். சொந்த ஆக்கம் எப்போ சார். 'அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்' !!!!.

    ReplyDelete
  35. ஜி ஆலாசியம் said...

    //சகோதரி பார்வதியின் கைவண்ணத் திற்கும் நன்றி அப்பன் முருகன் திருவருள் எப்போதும் முன் வந்து நிற்கட்டும்.//

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே. ஆனால் இம்முறை மிகப் பலத்த ஏமாற்றம் எனக்கு. தங்கள் கவிதையை எதிர்பார்த்து ஏமாந்தேன். நல்ல தமிழ் படிக்கக் கிடைப்பதே கஷ்டம். அது தொடர்ச்சியாகப் படிக்கக் கிடைக்காமல் போவது மிகப்பெரிய வருத்தம்.

    சகோதரர் புவனேஷ்வரின் கவிதைகள், அவருக்குள்ளிருக்கும் கவிஞனின் விஸ்வரூபம் எத்தகையது என்பதைப் போனவாரம் புரியவைத்தன. இருநாட்களுக்கு முன் அவர் பின்னூட்டத்தில் எழுதிய கவிதைகளும் அப்படியே. இம்முறை காணாதது வருத்தம்.

    நான் 2010ம் ஆண்டு டிசம்பரில், வாரமலரில் வெளிவந்த 'எதைப்போற்ற வேண்டும் என்று தெரிந்த பெண்கள்' தலைப்பில் வெளிவந்த உமா அவர்களின் ஆக்கத்தைப் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டுத் தான் வாரமலர் படிக்க ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை என்று நினைத்திருந்த நேரத்தில் அவர் கிருஷ்ணன் சாரின் பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கதை
    எழுதியிருப்பதாக பதிலளித்திருந்தார். வாரமலர் 'ஸ்டார் எழுத்தாளர்களில்' ஒருவரான அவரது ரீ என்ட்ரி நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒன்று. காணாதது வருத்தம். அடுத்த வாரம் வரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. Bhogar said...

    //உங்களுக்கும் உங்கள் குடும்ப்பத்தினருக்கும்
    முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.//

    தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா. தங்களைப் போன்ற சான்றோர் பெருமக்களின் வாழ்த்துக்களைப் பெறும் வாய்ப்பை தந்தருளிய இறைவனுக்கு நன்றி. இருமுறை கட்டுரையைப் படித்து வாழ்த்திய தங்கள் பெருந்தன்மைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  37. //முருகனைவிட
    பார்வதியின் எழுத்து நடை
    அவரின் ஆக்கத்தை படிக்க தூண்டுகிறது.//

    மிக்க நன்றி தனுசு.

    ReplyDelete
  38. திருமதி பார்வதி ராமசந்திரனுக்கு வணக்கம்.

    கௌமாரம் பற்றிய(முருகபெருமானின்)கட்டுறையை படிக்க படிக்க, பக்தி
    உணர்வுகள் எனக்கு மிகமிக மகிழ்சியை தந்தது.தொடற‌ட்டும் தங்களது ஆன்மீக‌
    கட்டுறைகள்.வாழ்க வளமுடன், அரிபாய்.

    ReplyDelete
  39. முருகனின் சடாட்சர மந்திரமாகிய
    'ஓம் சரவணபவ'
    என்கிற ஆறெழுத்து மந்திரத்தை பற்றி,
    ஞானிகளும் யோகிகளும் சித்தர்களும்
    கூறி இருந்தாலும்
    சித்தருக்கெல்லாம் சித்தர்,சித்தர்களின் தலைவன்
    அகத்தியர் தன்னுடைய 'ஆறெழுத்தந்தாதி'
    என்கிற சிறு நூலில், பக்தி சுவையோடும்
    சித்தர்களுக்கே உரிய யோக நெறியோடும்
    விளக்கி உள்ளார்.
    முருகனின் 'ஓம் சரவணபவ' என்ற
    மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும்
    எதை தரும்.
    அகத்தியர் இப்படி பாடுகிறார்.
    கதிகாட்டும் மோரெழுத்தே வஜ்ர காயந்தரும்
    நிதிகாட்டும் மோரேழுத் தோரெழுத்தெ யுண்ணிரப்பு மருண்
    மதிகாட்டும் மோரெழுத் தோரெழுத்தெ யெண்ணுள் வைத்தபொற்றாட்
    டுதிகாட்டும் மேகுக நின்னாறெழுத்துள்ள சூத்திரமே

    என்கிறார் அகத்தியர்.
    சரி. இந்த உலக ஆசைகளை எல்லாம் விட்டு,
    முருகனே பரம் பொருள் என்று உணர்ந்த,
    யோக சாதகர்களுக்கு சடாட்சர
    மந்திரத்தால் என்ன கிடைக்கும்.

    ஆறெழுத் துண்மையை யறியார்கள் கன்ம மறுக்க வப்பால்
    வேறெழுத்தில்லை வெண்ணீரில்லை மால் சிவ வேடமில்லை
    தேறெழுத்தேதயன் கையுங் கருக்குழிச் சேரலும் பின்
    மாறெழுத் தந்தகன் றென்புறத்தே யென்றும் வௌவுவரே

    என்கிறார் அகத்திய பெருமான்.
    எளிய தமிழில் இருப்பதால் விளக்கம் சொல்லவில்லை.

    புத்தியும் நீ முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச்
    சத்தியும் நீ சிவமாய் எங்குமாய்நின்ற சர்வமுகச்
    சித்தியும் நீ அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
    முத்தியும் நீ அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே

    என்று வேதங்கள் அனைத்தும் முருகனின்
    திருவடிகளிலே முடிகிறது என்று
    முடிவாக முடித்து கூறிகிறார் அகத்தியர்.
    சடாட்சர மந்திர சித்தியின் பலனால்
    முருகனின் அருளோடு,இன்றும் அதி சூட்சும
    அரூப நிலையில் வலம் வரும் அகத்தியரின் அருளும் நம் அனைவருக்கும்
    கிடைக்கட்டும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. அன்பர்களே,
    சற்று தாமதமாக வந்து விட்டேன்.
    :)

    ----
    தேமொழி அவர்களின் கட்டுரை மிக சிறப்பானதாக இருந்தது. குழந்தைகளின் படைப்புகளை நோக்கும் போது நம்மவர்களின் அலட்ச்சியப்போக்கை தலையில் சம்மட்டி கொண்டு அடிதாற்போலே விளக்கி உள்ளார்.
    வாழ்த்துக்கள்.

    ----

    சகோதரி பார்வதி அவர்கள் ஷண்மதங்களை பற்றி எழுதுகிறார் போல. :) போன தடவை சௌரம், இந்த முறை கௌமாரம்......

    அமரகோசத்தில் சுவாமி என்ற பெயர் குமாரனுக்கு மட்டும் தான் இருக்கிறது. அதில் வரும் மற்றொரு பெயர் சிகித்வஜன் - சேவற்கொடியோன் எனும் பொருள் படைத்த ஒன்று.

    சில சுவாரஸ்யங்கள் உண்டு...... நம் தென்னாட்டில் தமிழ்நாட்டில் நாட்டில் முருகனுக்கு இரு தேவியர் வள்ளி, தேவசேனா. அண்ணன் கணபதி பிரம்மச்சாரி....... ஆனால் கொஞ்சம் வடக்கே போனால் முருகன் கட்டை பிரம்மச்சாரி. கணபதி இரு தேவியரோடு இருப்பார். இது பற்றி மேலும் சகோதரியே எழுதுவார் என ஊகிக்க முடிவதால் விட்டு விடுகிறேன்.... அவர் வழியே கேட்போம்....... :)

    முருகனுக்கு இன்னும் வெளியே தெரியாத மிகச்சிறந்த கோயில்கள் உண்டு. அறுபடை வீடுகள் தவிர.
    அதில் ஒன்று ஓதி மலை. வாத்தியார் ஊருக்கு அருகே தான். பவானி அணைக்கட்டுக்கு அருகே இருக்கும்.
    அய்யன் முருகன் ஐந்து முகங்களோடு பத்து கரங்களோடு காட்சி அளிக்கும் அபூர்வமான ஸ்தலமே ஆகும்.
    எல்லாரும் எளிதில் போக முடியாது. ஒரு மணி நேரம் போல மலை ஏறி போக வேண்டும். வாரம் இரு நாட்கள் சேவை உண்டு. இரவு எட்டுக்குள் திரும்பி விட வேண்டும். ஆனால் மிக மிக அழகிய இடம். ஏறும் வழியில் ஸ்வம்பு லிங்க வடிவில் சிவனார் இருப்பார். கீழே விநாயகர் கோயில் உண்டு. உட்கார்ந்து மனம் ஒருமுகம் பண்ணி தியானம் செய்யுங்கள், வேறு ஏதும் நான் சொல்ல மாட்டேன். போய் பாருங்கள்! :). தண்ணீர் குடுவை மறக்காமல் கொண்டு போகவும்.

    முருகன் வள்ளி அம்மையை மணம் முடித்த ஸ்தலம் அழகிலேல்லாம் அழகான கோயில். வேளி மலை. நான் போன கோயில்களில் எல்லாம் மிக அழகிய மூர்த்தியை உடைய கோயில். நாகர் கோயிலுக்கு அருகே தக்கலை செல்லும் வழியில் குமாரகோயில் நிறுத்தத்தில் இறங்கினால் கோயிலுக்கு போகலாம்.

    எட்டரை அடி உயர மாப்பிள்ளை கோல முருகனும் ஆறரை அடி உயர மணப்பெண்ணாக வள்ளியம்மையும் கண்டால் கண்டு கொண்டே இருக்கலாம். சந்நிதிக்கு வலப்பக்கம் இருந்து பார்த்தல் மட்டுமே வள்ளி அம்மையை பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. தாராளமாக பிரசாத விபூதி தருவார்கள். கை நிறைய தருவார்கள், வெளியூர் போக வேண்டும் என சொல்லி வினயமாக நாம் கேட்டால். மணக்க மணக்க அந்த நீற்றினை பூசுகையில் கோயிலிலேயே இருப்பது போன்ற உணர்வு உண்டாவது நிஜம்.

    பழமை வாய்ந்த வேங்கை மர சந்நிதி உண்டு. சாப்பாடு வசதி தக்கலையில் தான். உமா சங்கர் ஹோட்டல் மட்டும் தான் சைவ சாப்பாடு தரும்........ நினைவில் கொள்க.

    -----
    தனுசுவின் கவிதை simply அருமை...... நண்பரே.... நீங்கள் உயரங்களை தொடுவீர்கள். நிச்சயமாக. எழுதிக்கொண்டே இருங்கள். ஒருநாள் நாங்கள் எல்லாம் உங்களை பார்த்து பெருமைப்படும் நிலை வரும். வாழ்த்துக்கள்.
    ----
    அன்புடன்,
    புவனேஷ்வர்

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. தேமொழி அவர்களே,

    //சைவ வைணவ மத ஒற்றுமைக்கு வழிவகுத்ததாக//
    இதனை பற்றி என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.

    பாரத நாட்டில் சைவம் என்றோ வைணவம் என்றோ தெய்வத்தின் ரூப அடிப்படையில் என்றுமே மத பிரிவுகள் இருந்தது கிடையாது.

    தத்துவ அடிப்படையில் - அத்வைதம், விசிஷ்ட-அத்வைதம், த்வைதம், சாருவாகம் என்ற பிரிவுகளின் அடிப்படையில் தான் பிரிவென்று ஏதாவது இருந்தால் இருந்தன.

    அத்வைதம்: ஒரே ஆதார ப்ரஹ்மம் சகல வஸ்துக்களாகவும் ஆகி தோற்றம் கொடுக்கிறது என்ற தத்துவம்; அநாதி காலமாக வேதங்களின் முடிபு இது. பலரும் நினைப்பது போல ஆதி சங்கரர் இதற்கு தோற்றுவிக்கவில்லை. முன்னம் இருந்ததை புனர்-உத்தாரணம் செய்தார். அவ்வளவே. முக்தி என்பது தன்னிலை அழிந்து பிரம்மத்தில் கரைந்து அதுவாகவே ஆகி விடுவது.

    விசிஷ்ட - அத்வைதம்: ராமானுஜரால் பிரபலமாக்கபட்ட கொள்கை. இறைவன் நமக்கெல்லாம் உயிருக்கு உயிராக பிரிக்க முடியாதவனாக இருக்கிறான், ஆனாலும் அவன் ஆண்டான் நாம் அடிமைகள் என்ற பாவம். முக்தி என்பது இறைவனோடு பிரியாமல் லயித்துப்போய் அவன் சேவடி சிந்தை செய்து அவனுடனேயே இருப்பது.

    த்வைதம்: மாத்வாச்சாரியார் பிரபலம் செய்த வழி. இறைவன் வேறு நாம் வேறு. முக்தி என்பது அவன் சந்நிதியில் அவன் கட்டளைகளை நிறைவேற்றி இன்புற்றிருப்பது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் இவையும் த்வைத மதங்களே. இதை மனதில் குறிக்கவும்.
    ஆதலால் வேத மார்கத்தில் அவை அந்நிய மதங்களே இல்லை. அவர்கள் நம்மை அந்நிய மதஸ்தர் என்னல்லாம். நமக்கு அவர்கள் கொள்கையும் நம்மில் ஒன்றியதே. இதனால் எதனை அடிபட்டாலும் விட்டேனா பார் என நம் மதம் இன்றும் தழைத்து இருக்கிறது.

    சாருவாகம் - நாத்திகம். ஆமாம். நாத்திகம். கடவுள் மறுப்பு.

    என்னடா பெரிய கடவுள்? இந்த வாழ்கையை அனுபவிப்போம் என அழகாக பேசிய வாதம் என்று அர்த்தம். (சாரு - அழகு)...... அந்த காலத்திலேயே நம் மதம் அதையும் அனுமதித்தது.

    நிற்க.

    விசிஷ்ட - அத்வைதம், த்வைதம் வித்தியாசம் என்ன என்றால் முக்தியில் விசிஷ்ட அத்வைதத்தில் செயல் இல்லை. ஆனால் அவனோடு நாம் ஒன்றுவதும் இல்லை. வேறு வேறாக இருந்த நிலையில் இறைவனை அனுபவிப்பது. சவிகல்ப சமாதி என்று சொல்லுவர் யோக மார்க்கத்தில்.

    பலரும் நினைப்பது போல அத்வைதிகள் சைவர் என்றோ விசிஷ்ட அத்வைதிகள் (மற்றும் த்வைதர்) வைணவர் என்றோ இல்லை.

    சைவர்களிலும் சைவ சித்தாந்தம் மற்றும் பாசுபதம் எனும் மதங்களை பின்பற்றுவோர் (காபாலிகமும் அந்த நாளில் உண்டு) விசிஷ்ட அத்வைதிகளே.

    வைணவர்களிலும் இன்றும் கீற்று நாமக்காரர்கள் என்ற பிரிவினர் அத்வைதிகள்.

    சைவம், வைணவம் என்பது தத்துவ அடிப்படையில் பிரிந்தது அன்று. இஷ்ட ரூப வழிபாடு மூலமே நிகழ்ந்தது. அதுவும் ராமானுஜர் காலத்துக்கு அப்புறம் தான். அவர் தான் முதலில் விஷ்ணு மட்டுமே தெய்வம் என ஆரம்பித்தார்.

    அதுவரை வேத மார்க்கத்தை பின் பற்றிய (ஸ்மார்த்தர்கள்; ஸ்ம்ருதி - வேதம்) மக்களுள், விஷ்ணு பக்தர்கள் பலர், ஆஹா இவர் என்னவோ நம் சுவாமிக்கு உத்க்ருஷ்டம் (ஏற்றம்) தருகிறாரே என போனவர்களே அதிகம். தத்துவ விசாரணை செய்து போனவர்கள் குறைவு தான்.

    இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், பலருக்கும் நம் நாட்டு வரலாறு வெள்ளைக்காரன் சொன்னதில் இருந்து தான் தெரிகிறது. இந்த ஆரிய திராவிட பொய் உட்பட.

    -----

    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  44. ///Bhuvaneshwar said...

    இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், பலருக்கும் நம் நாட்டு வரலாறு வெள்ளைக்காரன் சொன்னதில் இருந்து தான் தெரிகிறது. இந்த ஆரிய திராவிட பொய் உட்பட.///

    யார் எங்கிருந்தால் என்ன?
    நாம் எங்கிருக்கிறோம்...?

    பார்க்காத கடவுளுக்கும்
    போகாத சொர்க்கத்திற்கும் எதற்கு இத்தனை சண்டைகள் சச்ரவுகள்..?

    உண்மைகள் புரிந்தால்
    உலகம் புரியும்..

    உங்களுக்குத் தெரியாததா தோழரே
    உயிரை பிரித்து உடலை பார்க்கும்

    சித்தர் கூற்றுக்கள்
    சி(ந்)த்திக்க வைக்குமோ?

    ReplyDelete
  45. அய்யர் அவர்களே, நல்ல கேள்வி....... இதோ என் பதில்.......

    -----

    காட்டில் தொலைந்தனர் பிள்ளைகள்....... வீடு நோக்கி நடந்த பிள்ளை, வழியில் கற்களை கண்டான். பளபளத்த கல் மீது மோகம் கொண்டு சேகரித்தான். பிற பிள்ளைகளும் வந்தார்கள்...... சேகரிப்பதில் சண்டை..... பொறாமை...... வீடு போக தானே வழிக்கு வந்தோம்...... மீண்டும் வழி மறந்தோம் என்ற நினைவின்றி அங்கேயே உழன்றார்கள்......
    வீடு மறந்ததால் வீடு இல்லாமலா போகும்?

    நினைவிருக்கட்டும், பெற்றோர் வருவர்......

    இவன் திரும்பவில்லைஎன்றால் பெற்றவள் விட மாட்டாள்....... தானே வருவாள்.....

    இல்லையேல் காவலனை தூதாக அனுப்பி பிள்ளை தனை அழைத்து அணைத்துக்கொள்வாள்.

    அந்த ஒரு தாயின் முயற்சியால் எல்லா பிள்ளைகளும் பிழைக்கும்.

    இருப்பதே ஒரு தாய்.......

    மறந்த பிள்ளைக்கு தாயோ தாயின் தூதோ தேடி வந்தவுடன் தெரியும் வீடு இருக்குதென்று......

    வீட்டில் முத்து இருக்குதென்று...... அப்போது கல்லை விட்டு எறிந்து விடுவான் அறிவுடைய பிள்ளை...........

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. நாகர்கோவிலுக்கு முன்னாள் வள்ளியூர் என ஒரு சிற்றூர் வரும். (வள்ளிமாநகரம் என நாங்கள் சொல்லுவோம் அந்த பக்கத்தில்).....
    அங்கே ஒரு முருகன் கோயில் உண்டு.
    முழுக்க முழுக்க மலையில் குடைந்த கோயில். குடை-வரை-கோயில்....
    அதாவது வரையை (வரை = மலை) குடைந்து எடுத்த கோயில்......
    போனால் பார்க்க வேந்திய அழகான சிற்பங்கள் நிறைந்த இடம்....... அவசியம் போய் வாருங்கள்.
    சகோதரர் போகர் அவர்கள் விரும்புவார் என்பது திண்ணம்.
    ----
    சொல்ல மறந்தேன். ஓதி மலையில் போகர் தவம் செய்த பாறை உண்டு.

    ReplyDelete
  48. ///Bhuvaneshwar said...
    வீட்டில் முத்து இருக்குதென்று...... அப்போது கல்லை விட்டு எறிந்து விடுவான் அறிவுடைய பிள்ளை...........///

    அது சரி...
    நாம் அறிவுடையவர்கள் தானா

    அறிவுடையவர்கள் நாம் என
    அறிந்து கொள்வதெப்படி

    அறிவினால் அறிந்த யாவும்
    அசத்து அல்லவா?

    முன் பின் பார்க்கையில்
    முரனாக இருக்கிறதல்லவா ...?

    ReplyDelete
  49. அன்புச் சகோதரர் புவனேஷ்வருக்கு,

    இந்த வகுப்பறையில் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பலர் உதவி செய்திருக்கின்றனர். அதில் முக்கியமான இடம், திரு.கே.எம்.ஆர் அவர்களுக்கு உண்டு. என் பின்னூட்டங்கள் வழியாக, என்னிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை அறிந்து, என்னை ஆக்கங்கள் தருமாறு தொடர்ந்து ஊக்கமளித்தவர் அவர். 'இதற்கு விளக்கமளிக்க வேண்டுகிறேன், இதற்கு பொருள் பார்வதி சொல்ல வேண்டுகிறேன்' என்று மிகப்பல சமயங்களில் என்னுள்ளிருக்கும் இதிகாச, புராண அறிவை வெளிக்கொணர்ந்த பெருமை அவருக்கே. அடுத்தவர் வளர்ச்சியில் அவருக்கிருக்கும் அக்கறைக்கு ஈடு இணை இல்லை. அவரிடமிருந்து கற்றுக் கொண்டதை உபயோகப்படுத்தும் வேளை இன்று வந்து விட்டதை உணர்கிறேன்.

    சகோதரரே, இன்று தேமொழியின் பின்னூட்டத்தைப் பார்த்ததும், எனக்கு ஏனோ என்னிலும் மேம்பட்ட விளக்கம் தர நீங்கள் வருவீர்கள் என்று தோன்றியது. நாளை வரை பார்க்கலாம் என்றே பொறுத்திருந்தேன். எப்போதும் அடுத்தடுத்த பின்னூட்டங்களில் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி விடுவேன்.

    தங்களின் வருகையும், விளக்கமும் தங்களின் பரந்து பட்ட பல்துறை ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருப்பதை உணர்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

    ReplyDelete
  50. ஐயர் அவர்களே....... மீண்டும் சரியான கேள்வி! :)

    இறங்கிவரா நிலை ஏற அறிவோ ஓர் ஏணி....... ஏறியபின் ஏணி வேண்டாம்.... ஏறும்வரை வேண்டுமே.......

    தாயில் அழைப்பு இது என்று புரியும் வரை அறிவு தேவை.

    நான் பூடகமாக சொன்னது இது தான்:

    பிள்ளைகள் - நாம்

    காடு - சம்சார வாழ்க்கை

    கற்கள் - புலன் இன்பங்கள், சொத்து சுகங்கள், லௌகிகம்

    பிள்ளைகள் வீடு மறந்தது - வீடுபேறு அடையும் லட்சியத்தை நாம் மறந்தது

    தாயின் தூது - குரு வருவது

    தாயே வருவது - பக்குவப்பட்ட ஆத்மாவுக்கு இறைவனே வந்து தீக்ஷை தருவது

    முத்து - ஆத்மசுகம்

    லௌகிகத்தில் உழலும் மனிதன் முத்து ஆகிய ஆத்மசுகத்தை குருமுகமாக அறிவானாயின் லூகிகமான கூழாங்கல்லை மதிப்பானோ?

    ஆன்மீகத்தில் அறிவு ஒரு பிணம் சுடும் கோல். மனமான பிணம் சுடப்படும் வரை அறிவான கோல் வேண்டும். ஆனால் என்ன விந்தை! மனம் நசித்த போது அந்த அறிவான கோலும் சாம்பலானதே!

    ReplyDelete
  51. பெருமதிப்பிற்கு உரிய சகோதரி பார்வதி அவர்களே,

    சந்தனமும் முத்துகள் உடைய தந்தங்களை உடைய யானைகளையும் கொண்ட பசிய மலையின்கண் வீழும் அமுதமன்ன நீருடைய கண்டார்க்கு அச்சத்தை விளைவிக்கும் தன்மையுடைய அருவியின் மேன்மையை அதன் இம்மென்ற ஓசை விளக்கும்.

    தங்கள் உயர்ந்த ஒளி பொருந்திய பண்பின் மேன்மையை தங்கள் பின்னூட்டம் தெள்ளென விளக்குகிறது.

    தெரிந்த்ததை பிறர் சொல்லட்டும் என விடுவது தெரிந்ததைப்பகிர்ந்து கொள்வதை விட உயரிய சீரிய குணமே ஆகும். வயதாலும் அறிவாலும் சிறியவனான நான் வளர நீங்கள் வழிவிட்டீர்கள் என்றால் அதற்கு யான் தலை வணங்குவதே முறைமை.

    ReplyDelete
  52. அன்பு சகோதரி பார்வதி அவர்களே,
    நான் பெற்ற சிற்றறிவு எனது குருநாதரான ஸ்ரீ மகா பெரியவர் தந்த பிச்சை என்றே சொல்ல வேண்டும்.
    அவர் பாதங்களுக்கு தங்கள் பாராட்டை சமர்ப்பிக்கிறேன்.

    (அவரும் அவர் குருவுக்கு எல்லா பாராட்டையும் சமர்ப்பணம் பண்ணினார்)......

    ReplyDelete
  53. அன்பு சகோதரி பார்வதி அவர்களே,
    தாங்கள், தங்களது பண்பான அடக்கதினால், நான் உங்களை விட நல்ல விளக்கம் தருவேன் என கூறி விட்டர்கள்......
    பக்தியும், அனுபவமும் மிக்க தங்களது திருமுன் நான் ஒன்றும் இல்லை........
    தங்களது மறுமொழியையும் தருக.
    அதையும் படித்து நானும் நலமிகு அறிவினை பெற விழைகிறேன், அக்கா.....

    ReplyDelete
  54. Bhuvaneshwar ....,

    ஆதி சித்தன் முருகன் உள்ள இடங்கள்
    எல்லாம் அடியவனுக்கு பிரியமானவைகளே
    நீங்கள் சொல்லி உள்ள ஓதிமலைக்கு நான்
    சென்று உள்ளேன்.

    சித்த சூட்சும அதிர்வுகள் நிரம்பிய
    அற்புத இடம் ஓதிமலை.
    பௌர்ணமி அன்று போனால், விதி இருந்தால்
    சில சூட்சுமங்களை உணரலாம்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  55. ///Bhuvaneshwar said...
    மனம் நசித்த போது அந்த அறிவான கோலும் சாம்பலானதே!///

    அறிவு சடப்பொருளா?
    புரிவது தான் அறிவா?

    புரிந்து விட்டது என சொல்வது அறிவா
    அறியாமை என்பதும் அறிவு தானோ

    அறிவு அழிந்தால்
    உயிர் அழியும் தானா?

    சம்சார வாழ்க்கை துறந்தவருக்கு
    அறிவின் நிலை எப்படி இருக்கும்

    ஆத்மாவும் உயிரும் ஒன்று தானா?
    இறைவனே வருகையில் தீக்கை எதற்கு?

    உங்களிடம் இனி தினமும்
    உரிமையுடன் கேள்விகளை வைப்போம்

    தெளிவான பதில்களை
    துல்லியமாக தெரிந்த கொள்ள
    அவர்களும் தெரிந்து கொள்ள

    ReplyDelete
  56. Bhogar, dear Brother, I am glad to hear about that :)... Me too :). Love to go to Murugan temples and holy places tucked away in the woods. I would love someone to guide me to the holy place where Guru Bhogar attained Nirvikalpa Samaadhi.

    Please e-mail me - bhuvaneshwar.d@gmail.com, if you can kindly help in this regard.

    ஓம் சரவணபவ நம
    ஓம் சரவணபவ நம
    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  57. I know Sathguru Bhoga Sithar attained Nirvikalpa Samaadhi in Pazhani. But I do not know how to reach his Samaadhi.

    ReplyDelete
  58. Bhuvaneshwar said...

    //தங்களது மறுமொழியையும் தருக.
    அதையும் படித்து நானும் நலமிகு அறிவினை பெற விழைகிறேன், அக்கா.....//

    தாங்கள் சொல்லியதை விட மேலாக நான் எதுவும் சொல்லியிருக்கப் போவதில்லை.

    //பாரத நாட்டில் சைவம் என்றோ வைணவம் என்றோ தெய்வத்தின் ரூப அடிப்படையில் என்றுமே மத பிரிவுகள் இருந்தது கிடையாது.//

    எனபதைத்தான் சொல்லியிருப்பேன். மிகப்பழங்காலத்தில் ஒரே குடும்பத்தில் வேறு வேறு கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இருந்திருக்கின்றனர். தாங்கள் ஒவ்வொரு கொள்கையையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.

    //தெரிந்த்ததை பிறர் சொல்லட்டும் என விடுவது தெரிந்ததைப்பகிர்ந்து கொள்வதை விட உயரிய சீரிய குணமே ஆகும்//

    தன்னிடம் வந்த ஒரு ஊமைச் சிறுவன் 'ஹஸ்தாமலகீயத்தைப்' பொழிய,
    அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, அதற்கு உரையும் எழுதிய‌
    ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் நெறியில் செல்லும் பாரம்பரியத்தில் வந்தவர்களாக இருக்கிறோம். சிஷ்யனின் ஸ்லோகத்துக்கு உரை எழுதுவது எவ்வளவு மேன்மைமிக்க செயல்.!!!!!!.

    தனது வலைப்பூவில் ஒரு நாள் மற்றவர்கள் எழுதட்டும் எனப் பிறரது எழுத்துக்களை ஊக்குவிக்கிறார் வாத்தியார் அவர்கள். அவருக்கு மாணவி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு அர்த்தம் வேண்டாமா!!!!.

    இங்கு புராண இதிகாச அறிவில் மேன்மை பெற்றோர் பலர் இருக்கிறார்கள்.
    பட்டியல் எடுத்தால் மாளாது.

    //பக்தியும், அனுபவமும் //

    உண்மையில் அப்படிச்சொல்லிக் கொள்வதற்கு நான் இன்னும் நிறையத் தூரம்
    போக வேண்டும்
    திரு. போகர் அவர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது அவரது பரந்து பட்ட விஷய ஞானமும், அருள் நெறியில் அவர் அடைந்திருக்கும் மிக உயர் நிலையும் மிக நன்றாகத் தெரிகிறது. மேலதிகத் தகவல்களைத் தரும்போது கூட‌
    பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களில் கூட எவ்வளவு மென்மையும் மேன்மையும்!!!!!!. தளும்பாத நிறைகுடம் அவர். அதைப் பார்க்கும் போது எனக்குக் கடவுள் பக்தி உண்டு என்று நான் சொல்லிக்கொள்வதே அதிகப்படி என்று தோன்றுகிறது. தங்களுக்கு என்றும் தெய்வ அருள் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறேன். நன்றி.!!!!

    ReplyDelete
  59. மதிப்பிற்குரிய அய்யர் அவர்களே,

    உடலோடு தொடர்புடையது உயிர்....... அது பிராண சக்தி.......

    மனித உடலை இனிமேல் இந்த சக்தி கொண்டு நடத்த முடியாது என்ற நிலைக்கு குறைந்து விட்ட பிராண சக்தியோடு உள்ள ஜீவன் அந்த உடலை விட்டு சுலபமாக வெளியேறி அடுத்த உடலை எடுத்துக்கொள்ளும். குழந்தையின் உடல். அதற்கு அந்த ஜீவனிடம் உள்ள அளவு பிராண சக்தி போதும். அந்த மரணம் வலி இல்லாமல் நிகழும்.உடலை maintain பண்ண பிராண சக்தி தேவை. ஒரு அளவுக்கு கீழ் குறைந்து விட்டால் இளைத்த விரலிலிருந்து மோதிரம் நழுவுதல் போல சுலபமாக, இயற்கையாக மரணம் நிகழும். இது ஜீவன் முழுக்கட்டுப்பாட்டில் மனமறிந்து செய்யும் செயலாக இருக்காது (முக்கால்வாசி அதற்கு மேலும் கூட இப்படித்தான்....).

    அந்த பிராண சக்தி ஒரு அளவுக்கு மேல் அதிகமாகி விட்டால், இந்த உடல் தாங்காது. ஜீவன் வெளியேறி விடும். அது யோக சமாதி. அது முழு விழிப்புணர்வோடு உடலை கழற்றி வீசும் செயல். அது பற்றி பேசுதல் இப்போது வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு பேசும் வேலையே தேவை இல்லை. நமக்குத்தான்.

    ஏதோ ஒரு காரணத்தால் பிராண சக்தி நல்ல துடிப்போடு இருக்கையில் உடலை விடித்து விட்டால் (தற்கொலை, விபத்து, கொலை, வீர மரணம், ஏதோ ஒன்று.....) அந்த ஜீவன் உடனே ஒரு சிசுவின் உடலை எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் பிராண சக்தி அதிகமாக இருக்கிற பொழுது சிசுவின் உடல் அந்த intensity தாங்காது. (பால யோகிகள் அதிக நாள் உடலில் வாழ்வதில்லை என்பது இதனால் தான்)...... வயதாகி உடல் துறந்தவரின் பிராண சக்தி நாற்பத்தி எட்டு மணிக்குள் அடுத்த சிசு உடலை எடுக்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் அகாலத்தில், பிராண சக்தி நிறைய மீதம் இருக்கையில், அது கடினம்.

    பலரும் சொல்வது போல பிறவிக்கான கர்மா தீரும் வரை உயிர் வாழுவது என்பது சரியன்று. கர்மாவை தீர்க்க உடல் தேவை. அது அந்த செயலாற்ற பிராண சக்தியை stock போல உடலுக்கேற்ற அளவு கொண்டு வரும். அது தீர்ந்தவுடன் மேல்சொன்ன மாதிரி அடுத்த உடலை தேடும். இந்த பிராண சக்தியை தீர்த்தவுடன் தான் அடுத்த உடலை எடுத்தல் சாத்தியம். உடல் இருக்கும் போது பிராண சக்தியை தேய்ப்பது சுலபம். உடல் இல்லாமல் கடினம். உடலோடு இருந்திருந்தால் பத்து ஆண்டுகளில் முடித்திருக்க கூடிய பிராண சக்தி உடல் இல்லாமல் திரிந்தால் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதை தான் தற்கொலை பண்ணினால் கர்மா கழியும் வரை பேயாக அலைய வேண்டும் என்பது. உண்மையில் கர்மா உடல் இருந்தால் தான் கழிக்க முடியும். பிராண சக்தி குழந்தைக்கு ஏற்ற அளவு குறையும் வரை அலைய வேண்டியது தான். கொண்டு வந்த பிராண சக்தியை மட்டும் வைத்து கொண்டு உடல் இல்லாமல் அலைவது தான் தற்கொலையால் மிச்சம்.

    நீங்களும் பாருங்கள், இந்த ஆவிகள் தொல்லை எல்லாம் தற்கொலை, கொலை, விபத்து ஆகியவற்றால் போனவர்களால் தானே? இயற்கை மரணம் அடைந்தவர்கள் பண்ணுகிறதில்லை. ஏனெனில் அவர்களுக்கு தோதாக எங்காவது ஒரு உடல் கருப்பையில் கிடைத்து விடும். அவர்கள் ஆவியாக அலைந்தாலும் பிராண சக்தி குறைவு என்பதால் நம்மால் உணர்வது மிக கடினம். அகால மாறன் அடைந்தவர்கள் ஆவிகள் பிராண சக்தி துடிப்போடு அலைவதால் அவர்களை நாம் உணர முடிகிறது.

    அதற்கு முடியாமல் வளர்ந்த உடலுக்கு ஏற்ற பிராணன் சக்தி உடையவர்கள் தான் வளர்ந்த உடல் உடையவர்களை பிடிப்பது. அவர்களை கண்டு பரிதாபம் தான் பட வேண்டும். பயப்பட வேண்டியதில்லை. நாமும் ஆவிகளாக அலைந்து தானே உடல் எடுத்தோம்.!!! எல்லாரும் ஆவிகளாக அலைவது உண்டு. எவ்வளவு காலம் என்பதே கேள்வி.
    -----
    continued in next comment

    ReplyDelete
  60. உடலாகவும் காட்டிக்கொள்வது ஆத்ம ஸ்வரூபம்..... உடலாகாது...... ஆனால் உடல் அதற்கு அன்னியமன்று.......
    இன்னொன்றை புரிந்து கொள்ள அறிவு வேண்டும். தானாகி நிற்க அறிவு வேண்டுமோ?

    இரண்டாம் பொருள் இருக்கும் வரை அதை "அறிய" வேண்டும். அனைத்தும் தானான பின் நோக்குமிடம் தோறும் நமையன்றி வேறில்லை! தீக்கை..... சைவ சித்தாந்த வார்த்தை! வடசொல்.... தீக்ஷை...... initiation....
    ஐந்தாம் தொழில்...... திரை விலக்கல்...... அது தான் தீக்ஷை....... அதன்பின் சீடனும் குருவும் வேறல்ல காணீர்!
    துறவுக்கு இலக்கணம் காட்டிற்கு போவதா? மனைவி துறப்பதா? துவராடை தரிப்பதா? இல்லை....... தான் வேறு பிரம்மம் வேறு என்ற அறியாமையை தொலைப்பதே துறவு. அப்படிப்பட்டவனுக்கு வீடும் காடும் ஒன்று தான்...... மனைவியை மகிழ்விக்க அவள் வேண்டினால் தினம் அவளுடன் இனிது இருந்து கொண்டே, ஆத்மஸ்வரூபத்தை அனுபவிப்பவனாக இருக்க முடியும்.

    மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்
    வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்

    மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள்

    முலைத்தடத்து இருக்கினும் பிற்ப்பறுத்திருப்பரே

    இது சிவவாக்கியர் கூற்று........

    துறவியாகிறேன் என காட்டுக்கு போனவனும் தனது தவத்தின் மீது கொண்ட பற்று மூலம் துறவை தொலைக்க முடியும்.

    "பற்று விடுமின் பற்று விடுமின் ஈசனோடாயினும் பற்று விடுமின்" - திருமூலர் வாக்கு

    வளமுடன் வாழ எமது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  61. ....//// Bhuvaneshwar said...
    .///உடல் அதற்கு அன்னியமன்று.......
    இன்னொன்றை புரிந்து கொள்ள அறிவு வேண்டும். தானாகி நிற்க அறிவு வேண்டுமோ?

    இரண்டாம் பொருள் இருக்கும் வரை அதை "அறிய" வேண்டும்.//

    அப்போ அது தான்
    அத்வைதமோ...

    அறிவு அறிவுடைய பொருளா
    இல்லையென்றால் ஏன் அதனை அடைய வேண்டும்?


    ///தீக்கை..... சைவ சித்தாந்த வார்த்தை! வடசொல்.... தீக்ஷை...... initiation....///
    தீஷை வடசொல் என்றால்
    தீக்கை தமிழ் சொல் என்று சொல்லாமல் சைவ சித்தாந்த வார்த்தை என்றதற்கு ஏதேனும்சிறப்பு பொருள் உள்ளதா விளக்குங்கள்


    ///துறவுக்கு இலக்கணம் காட்டிற்கு போவதா? மனைவி துறப்பதா? துவராடை தரிப்பதா? இல்லை.......

    ///தான் வேறு பிரம்மம் வேறு என்ற அறியாமையை தொலைப்பதே துறவு///

    தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்றுதும் இது தானோ..

    உற்ற நோய் நோற்றல்
    உயிருக்கு ஊறு செய்யாமை
    அற்றே தவதக்கு உறு என வள்ளுவர் சொன்னதும் இது தானோ..

    துவர் ஆடை உடுத்துவது
    நம் கலாச்சாரத்தில் இல்லையே பின்
    அதனை தாங்கள் குறிப்பிட்டதன் நோக்கம் என்ன என அறிய ஆவல்


    ///தினம் அவளுடன் இனிது இருந்து கொண்டே, ஆத்மஸ்வரூபத்தை அனுபவிப்பவனாக இருக்க முடியும்.///

    ஆனாந்தாக்கள் இந்ப பட்டியிலில் வருவார்களே...


    விளக்கம் வேண்டி
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கூறியபடி

    வழக்கமான
    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. அன்புடைய அய்யரே,
    மறுமொழிக்கு நன்றி......

    தீக்கை என்ற சொல் தமிழ்ச்சொல் ஆனாலும் சைவ சித்தாந்திகள் தான் அதை கையாளுபவர்கள் ஆதலால் அவ்விதம் கூறினேன்.

    ஆனந்தாக்கள்......

    நான் சொன்னது தினம் அவளுடன் இனிது இருந்து கொண்டே, ஆத்மஸ்வரூபத்தை அனுபவிப்பவனாக இருக்க முடியும் என்று...... கர்ம யோகிகளுக்கு... ....... மரவுரி தரிதவனுக்கு மங்கையர் உறவில்லை.

    (மரவுரி = மரப்பட்டை. கேரளா காடு, அஸ்ஸாம் காடுகள் மட்டும் தான் இது கொடுக்கும்.... தெரிந்தவர் துணையின்றி போனால் அடைவது இயலாது.....)

    ஆனந்தாக்கள் மனைவியோடும் இல்லை (துறவி என சொன்ன பின் கலியாணம் பண்ணுவது முடியாதே) ஆத்மஸ்வரூபத்தை அனுபவிக்கவும் இல்லை.

    துறவியின் அறையுள் தனியாக தையல் வரக்கூடாது. Full stop.

    அவர்களை பற்றி பேச்சு எதற்கு?

    ReplyDelete
  64. பெருமதிப்பிற்குரிய போகர் அவர்களே,
    தங்கள் அறிவுரைப்படி செய்கிறேன். அந்தப் பெரியாரை சந்திக்கிறேன். நான் தமிழகத்தில் தான் உள்ளேன். அதுவும் தென் மாவட்டத்தில், அவர் இடத்திற்கு அருகில் தான்.....
    மடல் மூலம் தொடர்பு கொள்ள அன்னாரின் முகவரி தருவீர்களா என பணிவுடன் வேண்டுகிறேன்.
    புத்தகங்களையும் படிக்கிறேன்.
    தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றிகள் பல பல........

    ReplyDelete
  65. பெருமதிப்பிற்குரிய போகர் அவர்களே,
    //நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. அதற்க்கான விதியும் இல்லை//

    தாங்கள் இங்ஙனம் உரைத்ததின் பொருள் சிறியேனுக்கு விளங்கவில்லை.

    அடியேனிடம் சொல்லக்கூடியதாக இருப்பின் கூறி அருளுமாறு பணிவன்புடன் கேட்கின்றேன்.

    அடியேன் கேட்டதில் ஏதேனும் குற்றம் இருப்பின் பெரியீர் பொறுத்து அருள வேண்டுகிறேன்.

    நன்றியும் வணக்கங்களும்.
    ---
    புவனேஷ்வர்

    ReplyDelete
  66. ////Bhuvaneshwar said...
    ஆனந்தாக்கள்......
    ஆனந்தாக்கள் மனைவியோடும் இல்லை (துறவி என சொன்ன பின் கலியாணம் பண்ணுவது முடியாதே) ஆத்மஸ்வரூபத்தை அனுபவிக்கவும் இல்லை.

    துறவியின் அறையுள் தனியாக தையல் வரக்கூடாது. Full stop.

    அவர்களை பற்றி பேச்சு எதற்கு?///

    ஆனந்தத்தில் இருப்பவர்கள் என கூறினோம்
    தாங்கள் "அந்த" ஆனந்தாக்களை சொல்கின்றீர்களோ என பின்னர் தான் அறிந்தோம்..

    மற்ற கேள்விகளுக்கு
    விடை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. அன்பிற்குரிய அய்யர் அவர்களே,


    ஓஹோ...... நீங்கள் சொன்னது இந்த ஆனந்தத்தையோ? இந்த ஆத்ம ஆனந்தத்தில் இருபவனுக்குத்தான் மனைவியின் கோவைப்பழம் போன்ற உதடும் மண்ணாங்கட்டியும் ஒன்றாகத்தான் தெரயுமே............ அவர்களை தான் நான் சிவவாக்கியர் பாட்டு மூலம் சுட்டினேன். பிறகு தனியாக ஆனந்தாக்கள் என வினவியது ஏனோ, அன்பரே?


    "அம்பாளின் கருணாவிலாசத்தால் அவளுடைய கடைக்கண் பார்வை வீச்சுக்கு ஆளான பக்தர்கள் எல்லாதையும் சமமாகப்பார்க்கின்றனரே....... அவருக்கு இளம் பெண்ணின் கோவை போன்ற இதழ்களும் மண்ணாங்கட்டியும் சமமாக ஒன்றாகவே ஆகிவிட்டனவே...... சிவ சிவா என்ன விந்தை!" என மூகாசாரியார் பாடுகிறார் (சிவ சிவ பச்யந்து சமம் என்ற ஸ்லோகத்தில் அவர் அருளிச்செய்தது) ......



    மாலைக்குள் சைந்தவனின் முடி கொய்வேன், தவறினால் செந்தழல் வாய் தீப்பாய்வேன் என்ற அருச்சுனன், சம்சப்தகரோடு சமரிட்டது கால விளம்பமா?

    ReplyDelete
  69. //நாகர்கோவிலுக்கு முன்னால் வள்ளியூர் என ஒரு சிற்றூர் வரும். (வள்ளிமாநகரம் என நாங்கள் சொல்லுவோம் அந்த பக்கத்தில்).....//

    வள்ளியூரிலிருந்து 10 கி மீ தூரத்தில் உள்ள தென்கரை மஹாராஜராஜேஸ்வர்தான்
    எங்கள் குலதெய்வம். அங்கே பலமுறை சென்ற அனுபவம் உண்டு. ஆனால் ஓதி மலை பற்றி இப்போதுதான் அறிகிறேன். தகவலுக்கு நன்றி புவனேஷ்வர்.

    ReplyDelete
  70. அய்யர் தமக்கு ஏற்ற விஷ‌யஞர்களை போகர், புவனேஷ்வர், பார்வதி ஆகியோர் மூலம் அடைந்துள்ளார்.கற்றாரைக்கராரே காமுறுவர்.உம்... தொடரட்டும் அறிவாளிகளின், ஞானவான்களின் சங்கமம். நாங்கள் அறிந்துகொள்வோம் தெரியாத செய்திகளை...

    ReplyDelete
  71. ///kmr.krishnan said...
    அய்யர் தமக்கு ஏற்ற விஷ‌யஞர்களை போகர், புவனேஷ்வர், பார்வதி ஆகியோர் மூலம் அடைந்துள்ளார்.கற்றாரைக்கராரே காமுறுவர்.///

    அறிவுக்கு விளக்கம் கேட்டு அறிந்தவரிடமிருந்து காத்திருக்கின்றோம்

    பதில் வரவில்லை..
    பதில் வராவிட்டால்...

    அது அது தான் இல்லேயேல்
    அதுவும் அதுவே...

    ReplyDelete
  72. தேமொழியின் ஆக்கம் இதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்தப் படம் என்னை அவ்வளவாகக் கவரவில்லை.

    பார்வதியின் ஆக்கத்தில் வழக்கம் போல் நிறையத் தகவல்கள்.

    கிருஷ்ணன் சாரின் ஆக்கத்தில் எல்லாமே நெகடிவ் செய்திகள், பாசிடிவ் செய்திகளையும் எதிர்பார்க்கிறேன்.

    தனுசுவின் முதல் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நிறைய பேர் குறிப்பிட்டது போல் சபரியின் சொந்த ஆக்கத்தை நானும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  73. வாரமலரில் வெளிவந்த 'எதைப்போற்ற வேண்டும் என்று தெரிந்த பெண்கள்' தலைப்பில் வெளிவந்த உமா அவர்களின் ஆக்கத்தைப் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டுத் தான் வாரமலர் படிக்க ஆரம்பித்தேன்.//

    !!!!!!!!!!!!!!!!!!!!

    இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை என்று நினைத்திருந்த நேரத்தில் அவர் கிருஷ்ணன் சாரின் பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கதை
    எழுதியிருப்பதாக பதிலளித்திருந்தார். வாரமலர் 'ஸ்டார் எழுத்தாளர்களில்' ஒருவரான அவரது ரீ என்ட்ரி நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒன்று. //

    கதை வாத்தியாருக்கு அனுப்பியிருந்தேன், வாத்தியார் இந்த வாரம் வெளியிடாமல் அடுத்த வாரம் வெளியிட சில காரணங்களை உத்தேசித்து எண்ணியிருக்கலாம். மற்றபடி ஸ்டார் எழுத்தாளர் என்று சொல்லுமளவு தகுதி எனக்கு இருப்பதாக நினைக்கவில்லை.

    ReplyDelete
  74. புவநேஸ்வரின் பின்னூட்டத்தில் நிறைய தகவல்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  75. திரு. போகர் அவர்களே, தங்களின் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா? உங்களிடம் சில கேள்விகள் எனக்குக் கேட்கவேண்டும். இல்லையெனில் என் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள், நன்றி!

    ReplyDelete
  76. கற்றாரைக்கராரே காமுறுவர்.உம்... தொடரட்டும் அறிவாளிகளின், ஞானவான்களின் சங்கமம். நாங்கள் அறிந்துகொள்வோம் தெரியாத செய்திகளை...//

    இதற்கும், எனது இதற்கு முந்தைய பின்னூட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன், ஹி ஹி!

    ReplyDelete
  77. ///uma....
    உங்களிடம் சில கேள்விகள் எனக்குக்
    கேட்கவேண்டும்.///

    உங்களின் சந்தேகங்களை வகுப்பறை
    பின்னூட்டங்களிலே கேளுங்கள்.
    எமக்கு தெரிந்த வரை முருகன்
    அருளால் தெரிவிக்கிறோம்.
    உங்களின் கேள்விகள் தனிப்பட்ட,முறையில்
    இருக்க கூடாது.
    பலருக்கு பலன் தருபவையாக
    இருக்க வேண்டும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com