கவிதை நயம்: ஏன் பெண் உறங்கவில்லை?
கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..
பாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப் பாருங்கள்.
நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை .. சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை ..
பெண் உறங்கவில்லை.
இளைஞர்கள் கேட்டது இதுதான்.
"உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே!அப்படியிருக்கையில், உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால்அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா? சொல்லுங்கள்! இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான். அது உங்களுக்குத்தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.
அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக் கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.
கடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.
நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும்
சமாதானமடையச் செய்தார்.
அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில், தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதில் எழுதியிருந்தார்.
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"
என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் சரணத்தில் (இடையில்)
"அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"
என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்:
"பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு
மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன
அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்ணைப் படைப்பதை நிறுத்துவார்?.
இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து
கடவுளே என்றால் என்ன ஆகும்?
ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால்
அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.
அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்!
அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும்
தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்கேட்டு அவர்களையே உணர வைத்தார்.
மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.
"இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்சொன்னேன். உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு,நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை. அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"
என்ன நிதர்சனமான உண்மை!
அன்புடன்
வாத்தியார் --------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி!
உங்களின் சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் துக்கம்
உங்களின் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் அன்பு
உங்களின் மெளனத்திற்குப் பின்னால் இருக்கும் காரணம்
ஆகிய மூன்றையும் உணர்பவர்களின் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள்
அவர்கள்தான் உங்களுடைய உண்மையான நண்பர்கள் அல்லது உறவினர்கள்!
வாழ்க வளமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++====
திரைபடப்பாடல் என்பது ஒரு திரைப்படத்தின் பாத்திரத்தோடு/ கதையோடு ஒட்டி வருவதுபோல் எழுதப் படுபவைதான். இதைப் பெரிது படுத்துவதற்கு ஒன்றுமில்லை. Situation song.
ReplyDeleteஇன்றைய பொன் மொழியும் நன்றாகதான் இருக்கிறது. இன்றைய அவசர யுகத்தில் இப்படி மனிதர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.
அனைவருக்கும் புத்த ஜெயந்தி வாழ்த்துகள். புத்தம் சரணம் கச்சாமி
பதிவிற்கேற்ற பொன்மொழிகள்..
ReplyDeleteபடித்து மகிழ வைத்தது
இது ரசிகர்களுக்கு..
இப்படித்தான் பாடலில் உள்ள
பொருள் நோக்கத்தை உணராமல் சிலர்
பொருந்தாத வரிகளை (தனக்கென) வைத்து வருந்துவர்
அதுமட்டுமன்றி எழுதியவரையும்
அவதுராக பேசுவர்/எழுதுவர்
அவர்களுக்கும் சேர்ந்து மகிழ
இந்த பாடலினை சுழல விடுகிறோம்
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றம்டி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteவாழ்கையில் கடைபிடிப்பதற்கு
தகுந்த வழியில் இன்றைய பொன் மொழியும்
கண்ணதாசனின் பாடல் ஒன்று
காலத்திற்கும்,காதலுக்கும்
இன்றைய கலை மலர் அருமையானது
நன்றி
நல்லதொரு பொன்மொழி , பாடலுக்கு ஏற்றார் போல் உள்ள பொன்மொழி.
ReplyDeleteமன உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது நாம்
சில நேரங்களில் ஊமையாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் குருடனாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் செயவிடனாய் இருக்க வேண்டும் .என்ற கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறோம்.
ஐயா,
ReplyDeleteமுன்பே பதிவில் படித்த
ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே ....
இருந்தாலும் மீண்டும் படிப்பது சுவையே...நன்றி.
தமிழ்த்திரைகளில் வெற்றிகரமாக...தேவதாசில்(1953) ஆரம்பித்து....
அறுபது ஆண்டுகளாக காதல் தோல்வி என்று அடுத்த காட்சியிலேயே
ஆண்கள் குடித்து "உலகே மாயம்" பாடுகிறார்கள்..
ஏனோ "எங்கிருந்தாலும் வாழ்க" அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை.
காதல் தோல்வியினால் ஒரு பெண்ணாவது கள்ளுக்கடைக்கு ஓடியதாக தகவல் உண்டா?
ஏதோ ஒரு அழுவாச்சி பாடல் மட்டும்தான் பாடுகிறார்கள், அதற்கு கூட பொறுக்காமல் "இது நியாயமா?" என்று கவிஞரிடம் சண்டைக்குப் போயிருக்கிறார்கள் நம் மக்கள்.
இந்த வரிசையில் சமீபத்தில் வந்த பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகள்..
ஆம்பிளை எல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளை எல்லாம் தீவிரவாதி .....
பெண்ணுக்கு தாஜ்மஹால் கட்டி வச்சாண்டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா? ....
பொன்மொழியையும் முன்பே படத்துடன் போட்டிருந்தீர்கள், அருமையானது என சேமித்து வைத்திருக்கிறேன், அதற்கும் நன்றி
///சில நேரங்களில் ஊமையாய் இருக்க வேண்டும்.
ReplyDeleteசில நேரங்களில் குருடனாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் செயவிடனாய் இருக்க வேண்டும்///
சுருக்கமாக சொல்வதென்றால் குரங்குகளைப் பின்பற்ற வேண்டும்.
அற்புதமான வரிகள். அசர வைக்கும் எழுத்து...
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
///மன உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது நாம்
ReplyDeleteசில நேரங்களில் ஊமையாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் குருடனாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் செயவிடனாய் இருக்க வேண்டும் .என்ற கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறோம். ////
அப்படி தேவையில்லை என்பது
அய்யரின் அன்பு கருத்து..
ஊமையாய் இருக்க வேண்டாம்
உண்மையில் அமைதியே உணர்வுகளை உரக்கச் சொல்லும்
குருடனாய் இருக்க வேண்டாம்
குறுக்கு காட்சி அவர்கள் எண்ணத்தை மாற்றும்
செவிடனாய் இருக்க வேண்டாம்
செவிடனாக்குளவு சங்கொலி எழுப்ப வேண்டும்..
இவைகள் அவர்களையே திருந்த வைக்கும்.. நம்விருப்பத்திற்கேற்ப
இல்லையெனில் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் உடந்தையாய் இருப்பது போன்றதாகும்..
ஏழையாய் இருக்கலாம்
கோழையாய் இருக்கலாமா..?
அருமையான வரிகள். கண்ணதாசன் உணர்ந்து நமக்கு உணர்த்திய உண்மைகள்.
ReplyDeleteஎனக்கு அவரிடம் பிடித்தது "அறிவுரை சொல்ல கூடிய தகுதிகள் அனைத்தும் என்னிடம் உள்ளது. எப்படி ஒரு மனிதன் வாழகூடதோ அப்படி வாழ்ந்தவன் நான் "
அர்த்தமுள்ள இந்து மத்தில் முகப்பில் எழுதி இருப்பார். இன்றைய தேதிக்கு "தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணுடா " என்கிறது ஒரு புது பாடல்.
மிக பிரபலமான பாடல் தெரிந்தவர் சொல்லலாம். இன்னொரு clue ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.
சோகத்திலும் , காதலிலும் கண்ணதாசன் கூட இருந்தால் அந்த தனிமையே இனிமையாகும். மனம் லேசாகும். He has attempted and tested his life to give us a message and philosophy. கண்ணதாசன் ஜாதக அலசல் ஞ்பாகம் வருகிறது.
வாவ் தேமொழி ...! உங்கள் கோடிட்டு காட்டிய பின்னோடதிற்கு. நிஜமாகவே நீங்கள் முதல் பெஞ்ச் மாணவி தான்.
பாடலில் வரும் பெண் மட்டுமா உறங்கவில்லை,பாடலை எழுதியவரும் இயற்கையில் உறங்கினாலும் தன் பாடல் வரிகளால் நம் உள்ளங்களிலே உறங்காமல் வீற்றிருக்கிறார்.அதுதான் கவியரசர். அருமையான பாடலை தந்த ஆசிரியருக்கு நன்றிகள் பல.பொன்மொழிகள் அனைத்தும் சூப்பர்.
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா!
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
இன்றைய பொன்மொழி!
ReplyDeleteஉங்களின் சிரிப்பிற்குப்
பின்னால் இருக்கும்
துக்கம்
உங்களின் கோபத்திற்குப்
பின்னால் இருக்கும் அன்பு
உங்களின் மெளனத்திற்குப்
பின்னால் இருக்கும்
காரணம்
ஆகிய மூன்றையும்
உணர்பவர்களின் மேல் நீங்கள்
நம்பிக்கை வையுங்கள்
அவர்கள்தான் உங்களுடைய
உண்மையான நண்பர்கள்
அல்லது உறவினர்கள்!
உண்மைதான். நல்ல தந்தை நல்ல தாய் நல்ல
மனைவி நல்ல குழந்தைகள்
போன்றவைகள் அமைய
வேண்டும் என்றால்
முன்ஜென்மத்தில் நாம்
அதற்கான
கர்மாக்களை செய்து இருக்க
வேண்டும்
Om Saravanabavaya Nama
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDelete" என் தாயும் தந்தையும் இருந்திருந்தால் எனக்கு தரணியில் இந்த நிலைமை வருமோ ஐயா" !
என்ற " பாபநாச சிவனின் "! பாடல் என்று நினைக்கின்றேன் . இந்த பாடலை ஐயாவிடம் கேட்டு சுமார் இரண்டு வருடம் ஆக போகின்றது . ஐயா இந்த பாடலை தருகின்றேன் என்று கூறி சுமார் இரண்டு வருடம் அக போகுது . ஐயா விற்கு உள்ள வேலை பளு காரணமாக தராமல் போகி இருக்கலாம் .
குறிப்பாக தஞ்சை பெரியவர் மற்றும் முத்து கிருஷ்ணன் சார் க்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு . ஏனெனில் இந்த பாடலை கொத்த மங்களம் சுப்புலஷ்மி அவர்கர்கள் பாடினால் உருகாத கள் நெஞ்சம் கூட கண்ணிர் வடிக்கும் என்று கேட்டது மாதியான ஞாபக சக்தி. நன்றி!.
சித்தர குப்தா,
ReplyDeleteஇன்று சித்திரா பொளர்ணமி வாத்தியார் ஐயா எனது வகுப்பறை சகோதர சகோதரிகள் எல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ செய்தா பாவததையெல்லாம் குறைத்து எழுதிக்கொள், ஆனால் அவர்கள் செய்த புண்ணிய்த்தை ரொம்ப அதிகமா கூட்டி எழுதிகொள் எனக்கும்
தேமொழி said...சுருக்கமாக சொல்வதென்றால் குரங்குகளைப் பின்பற்ற வேண்டும்.
ReplyDeleteஇந்த குரங்கு தீயவைகளுக்காக. இது சற்று வேறுபட்டது.
அய்யர் said...அப்படி தேவையில்லை என்பது
அய்யரின் அன்பு கருத்து.
உனர்ச்சி உள்ளவன் மனிதன் ,அதனை வெளிக்காட்டிக் காட்டுவதில் தான் அவனின் சதவீதம் அடங்கி உள்ளது.வீரம் வெட்டிசாய்க்கும், விவேகம் வேரோடு சாய்க்கும்.
மன உணர்வுக்கு எனும் போது உங்களிடம் வேலை செய்பவனை நீங்கள் ஒரு அடிமையைப் போல் நடத்தும் போது தருனம் வந்தால் அந்த அடிமை தனக்கு சேர வேண்டியதை எடுத்துக்(திருடிக்) கொண்டு தப்பி ஒடுகிறான் .
அய்யோ தப்பி ஒடுகிறான் அய்யோ திருடுகிறான் என்று அவன் திருட்டை நான் தடுக்கவோ, ஓடுவதை நிறுத்தவோ மாட்டேன்.
இந்த உனர்வுதான் விவேகம்.
இந்த கண் மூடலும், வாய் திறக்காமையும் தான் அந்த அடிமைக்கு ஆதரவான உணர்வு.
இது தனுசுவுக்கு பிடித்த உணர்வு ,இந்த மாதிரி சூழ்நிலைகளின் போது இந்த உணர்வுக்கு கை கொடுத்து பாருங்கள், மனம் அத்தனை சாந்தியாக இருக்கும்.
அன்பார்ந்த ஐயா, தாமதத்திற்கு மன்னிக்கவும். மிக அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை.
ReplyDeleteதிரைப்படப்பாடல்கள் எல்லாம் அந்தச் சூழல்களுக்காகாச்சொல்லப்படுபவை என்பதை அதனைச்சுட்டுபவர்கள் புரிந்துகொண்டால் சரி.
ReplyDeleteகோபத்திற்குப்பின்னால் இருக்கும் அன்பைப் புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.
பொன்மொழிக்கும் ஆக்கத்திற்கும் நன்று ஐயா!
Blogger ananth said...
ReplyDeleteதிரைபடப்பாடல் என்பது ஒரு திரைப்படத்தின் பாத்திரத்தோடு/ கதையோடு ஒட்டி வருவதுபோல் எழுதப் படுபவைதான். இதைப் பெரிது படுத்துவதற்கு ஒன்றுமில்லை. Situation song.
இன்றைய பொன் மொழியும் நன்றாகதான் இருக்கிறது. இன்றைய அவசர யுகத்தில் இப்படி மனிதர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.
அனைவருக்கும் புத்த ஜெயந்தி வாழ்த்துகள். புத்தம் சரணம் கச்சாமி////
நல்லது. நன்றி ஆனந்த்!
////Blogger அய்யர் said...
ReplyDeleteபதிவிற்கேற்ற பொன்மொழிகள்..
படித்து மகிழ வைத்தது
இது ரசிகர்களுக்கு..
இப்படித்தான் பாடலில் உள்ள
பொருள் நோக்கத்தை உணராமல் சிலர்
பொருந்தாத வரிகளை (தனக்கென) வைத்து வருந்துவர்
அதுமட்டுமன்றி எழுதியவரையும்
அவதுராக பேசுவர்/எழுதுவர்/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
வாழ்கையில் கடைபிடிப்பதற்கு தகுந்த வழியில் இன்றைய பொன் மொழியும்
கண்ணதாசனின் பாடல் ஒன்று காலத்திற்கும்,காதலுக்கும்
இன்றைய கலை மலர் அருமையானது
நன்றி////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!!
////Blogger thanusu said...
ReplyDeleteநல்லதொரு பொன்மொழி , பாடலுக்கு ஏற்றார் போல் உள்ள பொன்மொழி.
மன உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது நாம்
சில நேரங்களில் ஊமையாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் குருடனாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் செயவிடனாய் இருக்க வேண்டும் .என்ற கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறோம்./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!!
////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா,
முன்பே பதிவில் படித்த
ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே ....
இருந்தாலும் மீண்டும் படிப்பது சுவையே...நன்றி.
தமிழ்த்திரைகளில் வெற்றிகரமாக...தேவதாசில்(1953) ஆரம்பித்து....
அறுபது ஆண்டுகளாக காதல் தோல்வி என்று அடுத்த காட்சியிலேயே
ஆண்கள் குடித்து "உலகே மாயம்" பாடுகிறார்கள்..
ஏனோ "எங்கிருந்தாலும் வாழ்க" அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை.
காதல் தோல்வியினால் ஒரு பெண்ணாவது கள்ளுக்கடைக்கு ஓடியதாக தகவல் உண்டா?
ஏதோ ஒரு அழுவாச்சி பாடல் மட்டும்தான் பாடுகிறார்கள், அதற்கு கூட பொறுக்காமல் "இது நியாயமா?" என்று கவிஞரிடம் சண்டைக்குப் போயிருக்கிறார்கள் நம் மக்கள்.
இந்த வரிசையில் சமீபத்தில் வந்த பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகள்..
ஆம்பிளை எல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளை எல்லாம் தீவிரவாதி .....
பெண்ணுக்கு தாஜ்மஹால் கட்டி வச்சான்டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா? ...
பொன்மொழியையும் முன்பே படத்துடன் போட்டிருந்தீர்கள், அருமையானது என சேமித்து வைத்திருக்கிறேன், அதற்கும் நன்றி//////
சேமித்து வைக்கும் பழக்கம் வாழ்க! பலர் படித்ததை அடுத்த நாளே மறந்து விடுவார்கள்:-(((
////Blogger தேமொழி said...
ReplyDelete///சில நேரங்களில் ஊமையாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் குருடனாய் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் செயவிடனாய் இருக்க வேண்டும்///
சுருக்கமாக சொல்வதென்றால் குரங்குகளைப் பின்பற்ற வேண்டும்./////
குரங்கின் சுறுசுறுப்பும், குறும்பும், சேட்டைகளும் நமக்கெல்லாம் வருமா?
////Blogger கவிதை காதலன் - மணிகண்டவேல் said...
ReplyDeleteஅற்புதமான வரிகள். அசர வைக்கும் எழுத்து...
நட்புடன்
கவிதை காதலன்////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger கலையரசி said...
ReplyDeleteஅருமையான வரிகள். கண்ணதாசன் உணர்ந்து நமக்கு உணர்த்திய உண்மைகள்.
எனக்கு அவரிடம் பிடித்தது "அறிவுரை சொல்ல கூடிய தகுதிகள் அனைத்தும் என்னிடம் உள்ளது. எப்படி ஒரு மனிதன் வாழகூடதோ அப்படி வாழ்ந்தவன் நான் " அர்த்தமுள்ள இந்து மத்தில் முகப்பில் எழுதி இருப்பார். இன்றைய தேதிக்கு "தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணுடா " என்கிறது ஒரு புது பாடல். மிக பிரபலமான பாடல் தெரிந்தவர் சொல்லலாம். இன்னொரு clue ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.
சோகத்திலும் , காதலிலும் கண்ணதாசன் கூட இருந்தால் அந்த தனிமையே இனிமையாகும். மனம் லேசாகும். He has attempted and tested his life to give us a message and philosophy. கண்ணதாசன் ஜாதக அலசல் ஞ்பாகம் வருகிறது./////
நல்லது. நன்றி சகோதரி!
////Blogger sadan raj said...
ReplyDeleteபாடலில் வரும் பெண் மட்டுமா உறங்கவில்லை,பாடலை எழுதியவரும் இயற்கையில் உறங்கினாலும் தன் பாடல் வரிகளால் நம் உள்ளங்களிலே உறங்காமல் வீற்றிருக்கிறார்.அதுதான் கவியரசர். அருமையான பாடலை தந்த ஆசிரியருக்கு நன்றிகள் பல.பொன்மொழிகள் அனைத்தும் சூப்பர்.////
நல்லது. நன்றி சதன்ராஜ்!!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா!
உள்ளேன் ஐயா!////
தங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!
////Blogger Bhogar said...
ReplyDeleteஇன்றைய பொன்மொழி!
உங்களின் சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் துக்கம்
உங்களின் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் அன்பு
உங்களின் மெளனத்திற்குப் பின்னால் இருக்கும் காரணம்
ஆகிய மூன்றையும் உணர்பவர்களின் மேல் நீங்கள்
நம்பிக்கை வையுங்கள் அவர்கள்தான் உங்களுடைய
உண்மையான நண்பர்கள் அல்லது உறவினர்கள்!
உண்மைதான். நல்ல தந்தை நல்ல தாய் நல்ல மனைவி நல்ல குழந்தைகள்
போன்றவைகள் அமைய வேண்டும் என்றால் முன்ஜென்மத்தில் நாம்
அதற்கான கர்மாக்களை செய்து இருக்க வேண்டும்
Om Saravanabavaya Nama////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
" என் தாயும் தந்தையும் இருந்திருந்தால் எனக்கு தரணியில் இந்த நிலைமை வருமோ ஐயா" !
என்ற " பாபநாச சிவனின் "! பாடல் என்று நினைக்கின்றேன் . இந்த பாடலை ஐயாவிடம் கேட்டு சுமார் இரண்டு வருடம் ஆக போகின்றது . ஐயா இந்த பாடலை தருகின்றேன் என்று கூறி சுமார் இரண்டு வருடம் அக போகுது . ஐயா விற்கு உள்ள வேலை பளு காரணமாக தராமல் போகி இருக்கலாம் . குறிப்பாக தஞ்சை பெரியவர் மற்றும் முத்து கிருஷ்ணன் சார் க்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு . ஏனெனில் இந்த பாடலை கொத்த மங்களம் சுப்புலஷ்மி அவர்கர்கள் பாடினால் உருகாத கள் நெஞ்சம் கூட கண்ணிர் வடிக்கும் என்று கேட்டது மாதியான ஞாபக சக்தி. நன்றி!.////
உங்களின் மேலான தாய்,தந்தைப் பாசம் வாழ்க!
////Blogger sundari said...
ReplyDeleteசித்தர குப்தா,
இன்று சித்திரா பொளர்ணமி வாத்தியார் ஐயா எனது வகுப்பறை சகோதர சகோதரிகள் எல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ செய்தா பாவததையெல்லாம் குறைத்து எழுதிக்கொள், ஆனால் அவர்கள் செய்த புண்ணிய்த்தை ரொம்ப அதிகமா கூட்டி எழுதிகொள் எனக்கும்/////
சித்திரகுப்தா, சுந்தரி அக்கா சொல்வதற்காக, அப்படி தகாத வேலையை எல்லாம் செய்ய வேண்டாம். உள்ளதை உள்ளபடியே எழுது!
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteஅன்பார்ந்த ஐயா, தாமதத்திற்கு மன்னிக்கவும். மிக அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை./////
நல்லது. நன்றி சகோதரி!
Blogger kmr.krishnan said...
ReplyDeleteதிரைப்படப்பாடல்கள் எல்லாம் அந்தச் சூழல்களுக்காகாச்சொல்லப்படுபவை என்பதை அதனைச்சுட்டுபவர்கள் புரிந்துகொண்டால் சரி.
கோபத்திற்குப்பின்னால் இருக்கும் அன்பைப் புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.
பொன்மொழிக்கும் ஆக்கத்திற்கும் நன்று ஐயா!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!