மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

3.5.12

Astrology பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!


-----------------------------------------------------------------
Doubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!

Doubts: கேள்வி பதில் பகுதி ஒன்பது!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.36
சுந்தரி பரமசிவம்

1. மாந்திக்கு வர்கோத்தமம் உண்டு என்றால் அதன் செயல்பாடு என்ன?

தமிழ்நாட்டில் பல ஜோதிடர்கள் மாந்தியை ஆட்டத்திற்கு சேர்த்துக் கொள்வதில்லை! அதில் அவருக்கு பெளலிங் சான்ஸ் பத்து ஓவர்களுக்கு மேல் (அதாவது வர்கோத்தம சான்ஸ்) இருக்கிறதா என்று தெரியவில்லை!
உங்கள் சந்தோஷத்திற்காக இருப்பதாக வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? கள்குடித்த குரங்கின் ஆட்டம்தான்! பெளன்சராக வந்து விழுகும். ஹெல் மட்டை யும் மீறி மண்டையில் அடிபடும் வாய்ப்பு ஜாதகனுக்கு அப்போது கிடைக்கலாம்!

2.புனர்பூ தோஷம் என்பது சந்திரன் சனியின் சேர்க்கை இது எப்பொழுதும் துன்பத்தை தான் கொடுக்குமா? கடமையை செய்யக் கடும் போராட்டத்தை கொடுப்பதுடன் தள்ளி தள்ளி வைத்து விடுகிறதே? இதன் தாக்கம் லக்கனத்திற்கு ஏற்றார்ப் போல மாறுபடுமா?

முதலில் புனர்பூ தோஷம் என்பது என்னவென்று பார்ப்போம்

சந்திரனுக்கும், சனிக்கும் ஜாதகத்தில் உள்ள தொடர்பு (குறிப்பாக சேர்க்கை அல்லது பரிவர்த்தனை) திருமணவாழ்வில் பல சிரமங்களை/துன்பங்களை உண்டாக்கும். தலைவலி, பய உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவையும் அதன் உப விளைவுகள்தான்

(Connection between Saturn and Moon is known as Punarphoo Dosham. Whenever Saturn has got any connection what-so-even with Moon, there will be some obstacle or impediment, not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of the marriage. This connection between Moon and Saturn causes delay)

இந்த அமைப்பில் சூரியன் உள்ளே நுழைந்தால் (அந்த இரண்டு கிரகங்களுடன் சூரியன் இருந்ததாலும், அல்லது அவைகளைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும்) புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.

connection of Sun with the Punarphoo causing planets (Saturn and Moon) results in cancellation of Punarphoo. Precisely speaking, cancellation takes place due to following conditions:

1. Sat or Moon or both in association with Sun in one sign (could involve even two houses)
2. Sat or Moon in the star of Sun
3. Sun is in a star, lord of which is near either Moon or Saturn.
4. Sun is in the star of either Moon or Sat
5. Any planet near the Moon or Saturn, but is posited in the star of Sun
6. Sat or Moon is in the sub-sub of Sun

3.சிம்ம லக்கனகாரர்களுக்கு சந்திரன் 12ஆம் அதிபதி சனி 6 ஆம் அதிபதி இவர்கள் இருவரும் சேர்ந்து மீனத்தில் 8ல் விற்றிருந்தால் அவை புனர்பூ தோஷத்தில் சேருகிறதா அல்லது விபரித ராஜயோகத்தில் சேருகிறதா? விபரித ராஜயோகம் புனர்பூ தோஷத்தினால் செயலிழந்து விடுகிறாதா? அப்படி செயல் இழக்க வில்லையென்றால் சந்திர மகா தசை/சனி மகாதசையில் விபரீத ராஜயோகத்தைப் பெற முடியுமா?

ஒரு படத்தில் நாகேஷ் சொல்வார்: ”மேலாக ஊற்றினால் ரசம். கலக்கி ஊற்றினால் சாம்பார்” ஒரு அமைப்பில் யோகமும், தோஷமும் கலந்த பலன் எனும் போது இரண்டுமே இருக்கும். ஒரு ஜாதகத்திற்கு 36 விதமான பலன்கள் உண்டு. திருமண வாழ்க்கை என்பது அதில் ஒன்று. கணவன்/மனைவி என்பது இரண்டு. அதில் கிடைக்கும் இன்பம்/துன்பம் என்பது மூன்று. அந்த மூன்றை மட்டும்தான் புனர்பூ கையில் எடுத்துக்கொள்ளூம். அந்த மூன்றைத்தவிர மீதம் 33 இருக்கிறதே அதில் வேறு ஒரு மூன்றை வி.ரா. யோகம் கையில் எடுத்துக் கொள்ளும். அதற்கான நன்மைகளைச் செய்யும்.

ஆகவே குழப்பிக்கொள்ளாதீர்கள். பாட்டியாலா சுடிதார் வேறு, காஞ்சிபுரம் பட்டுச் சேலை வேறு. இரண்டும் ஆடைகளே! ஆனால் இரண்டையும் ஒன்றாக உடுத்திக்கொள்ள முடியாது. விளக்கம் போதுமா சகோதரி?
---------------------------------------------------------
email No.37
ஆர். கதிரவன்

1. செய்கின்ற வேலைக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை... எப்படி இது...?(மருத்துவம் சம்பந்தமாக படித்துவிட்டு கணிணியில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் நிறையபேர்)

அதைத்தான் கிரகக் கோளாறு என்பார்கள் (கிளி போன்ற மனைவி இருக்கும் போது, குரங்கு போன்ற தொடுப்புடன் அலைபவர்களைப் பார்த்திருக் கிறீர்களா? அந்தக் கணக்கில் இது வரும்) அதை வைத்துப் பத்துப் பக்கங்கள் கட்டுரை எழுதலாம். இப்போது நேரம் இல்லை. முடிந்தால் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்

2. ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா? புதனின் ஆதிபத்தியம் வேண்டும் என்று சொல்லி விடாதீர்கள்...(சில ஜோதிடர்கள் சொல்வதனால் கேட்கிறேன்)

கூட்டு, அவியல், பொரியல் என்று சமையலில் காய்களின் எண்ணிக்கையும் அளவும் வேறு படுவதைப் போல, இதிலும் வேறுபாடு உண்டு. புதன் நன்றாக இருந்தால் கற்றுக் கொள்ளலாம். புதனும் குருவும் நன்றாக இருந்தால் கற்றுக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். அவர்கள் இருவரோடு, சனி அல்லது பத்தாம் இடத்து அதிபதியும் கலக்கலாக இருந்தால் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்யலாம். செய்து காசு பார்க்க வேண்டுமென்றால் அந்த அமைப்புடன், 2 & 11ஆம் வீடுகளும் நன்றாக இருக்க வேண்டும்.

என்ன தலை சுற்றுகிறதா?
தலை சுற்றாமல் இருக்க 3 & 6ஆம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருக்க வேண்டும்:-))))


3. கேது திசை எல்லாருக்குமே ஞானத்தை மட்டுமே தருமா?(அனுபவித்துத்தான் ஆகவேண்டும். தீய பலன்கள் மட்டுமே என்கின்றனர்.)

மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததைப்போல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் எப்படி புத்தி வரும்? எப்படி அடிபட்டாலும் திருந்தாத ஞான சூன்யங்கள் பல உள்ளன. அவர்களுக்குக் கடைசி வரையில் ஞானம் வராது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரமடைந்திருப்பவர்களுக்கு, குறிப்பாகப் புதன் கெட்டிருப்பவர்களுக்குப் புத்தி வராது. புத்தி இருந்தால் அல்லவா ஞானம்?

4. வாழ்க்கையின் இறுதியில் வரும் சுக்ரதிசை மட்டுமே நன்மைகளை அளிக்குமா? (சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு நானே உதாரணம்)

இறுதிக் காலத்தில் சுக்கிரதசை வந்து என்ன பயன் சொல்லுங்கள்? 20 - 30ற்குள் ஸ்டார்ட்டாகி 40 - 50 க்குள் முடிந்து பலன்கள் கிடைத்தால்தானே ஜாதகன் அவற்றை அனுபவிக்க முடியும்? ஒரு பெண்ணிற்கு எப்போது திருமணம் செய்வது - 55 வயதிற்குப் பிறகா? அதுபோலத்தான் சுக்கிரதசைப் பலன்களும்!

5. அஷ்டவர்க்கங்களினால் சரியான பலன்களை அறிவிக்கமுடியாது என்கிறார் என் நண்பர் ஒருவர் (ஜோதிடர்) அப்படியா?

எதைவைத்துச் சரியான பலனைச் சொல்ல முடியும் என்று அவரிடமே கேளுங்கள். கேட்டு அடுத்த மின்னஞ்சலில் சொல்லுங்கள். நம் வகுப்பறை மாணவர்களுக்கு அது பயனளிக்குமா என்று பார்ப்போம்!
-------------------------------------------------------------------
email No.38
அருள் நிதி

வணக்கம் ஐயா,

எனது சந்தேகங்கள்...

1.கோள்சாரத்தின் பலன் அறிய லக்னத்தை கணக்கில் எடுக்காமல் சந்திரராசியை கணக்கில் எடுப்பது ஏன்?

கோள்சாரம் என்பது இன்றையத் தேதியில் வானில் கிரகங்கள் இருக்கும் நிலைமையைக் காட்டுவது!. சந்திரன் எண்ணிக்கையில் ஒருவர். லக்கினங்கள் பன்னிரெண்டு. எதைவைத்துக் கணக்கிடுவது சுலபமாக இருக்கும் நீங்களே சொல்லுங்கள். கோள்சாரத்தில் Man of the match award எப்போதும் சந்திரனுக்குத்தான். மற்றவர்கள் எல்லாம் (லக்கினங்கள் எல்லாம்) டீம் மேட்ஸ். பரிசுத்தொகையை அல்லது கிடைக்கும் Champagnes பாட்டிலைப் பங்கு வைத்துக்கொள்வார்கள். அவ்வளவுதான்!

2.சனிப்பெயர்ச்சி பற்றி சொல்லும் போது சில மாணவர்களின் பின்னூட்டங்களுக்கு அவர்களின் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தை வைத்து பலன் சொல்லி இருந்தீர்கள்...ஆனால் பொதுவாக ராசியை வைத்தும் பலன் சொல்லி இருந்தீர்கள்...இதில் எது சரியான கணிப்பை சொல்லும்?

அஷ்டமச்சனி, ஏழரைச் சனி போன்ற அவஸ்தைகளுக்கு ராசியைவைத்துப் பலனைப் பார்க்க வேண்டும். தசா/புத்திகளுக்கு லக்கினத்தில் இருந்து அவர் எந்த வீட்டிற்கு அதிபதி எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்துப் பலனைப் பார்க்க வேண்டும். துணியின் நீள அகலத்தை ஸ்கேலால் அளக்கிறோம். தண்ணீரை லிட்டரால் அளக்கிறோம். அதுபோலத்தான் இதுவும். ஒரே அளவுமுறை எனபது கிடையாது!

3.பிறந்த நேர திருத்தம் என்பது என்ன?கணினி மென் பொருள் இதை செய்யுமா?

நாட்டின் பொது நேரமும் (Standard Time) அந்த நாட்டில் ஜாதகன் பிறந்த ஊரின் நேரமும் மாறுபடும். நீங்கள் கேட்கும் நேர திருத்தம் அதுவாக இருந்தால், அதைக் கணினி மென் பொருள் செய்து கொள்ளும். கவலை வேண்டாம்!
---------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++

41 comments:

கலையரசி said...

ஹைய்யா இன்னைக்கு நாந்தான் முதலில் வந்துள்ளேன். உங்கள் வகுப்பறை அமெரிக்காவில் உள்ள வகுப்பறை போல் சமத்துவமாக இருக்கிறது. பல தரப்பட்ட துறைகளில் இருந்து crash course, hands on கற்று கொள்ள மாணவர்கள் வருவார்களே அதுபோல். இங்கு பின்னூட்டங்களில் வரும் கருத்துகளும் ஒரு conference room effect
கொடுகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் எழுப்பி , பதில் தேடும் ஆர்வம் is really good. And Im enjoying the same.

சுக்கர திசை வாழ்கையின் நடு பகுதியில் வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். திருமணம் , குழந்தை , பணம் லௌவதீக வாழக்கை வாழலாம். முன் வந்த கேது ஞானம் தந்து இருப்பார். ஆதலால் கொஞ்சம் நம்பலாம். என் கணவருக்கு கேது திசை நடந்து கொண்டு உள்ளது. திரும்பிய திசையெல்லாம் வாழ்கை பாடம் தான். கொஞ்சம் பொறுங்கள் சுக்ரன் வந்து கொண்டே இருக்கிறான் என்று , தணிந்த நேரங்களில் ஆறுதல் சொல்லுவதுண்டு. (அவருக்கு பத்தாம் இடத்து சுக்ரன் பதினொன்றில் , சுய வர்க்க பரல் 7 SAV 37) ஆனால் அவர் அதை அனுபவிக்கும் நிலையை கடந்தே உள்ளார். அர்தாம்ஷ்ட சனி வேறு , கொடையை பிடித்து கொண்டு போனாலும் நம் மேல் விழும் சாரலில் தப்பிக முடியாதல்லவா ? கடவுளை கெட்டியாக பிடித்துகொண்டு வாழ்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளோம்.

வேப்பிலை said...

கலை... உறக்கத்தை
கலைத்து விட்டு வந்ததால் முதலிலா

காரை நன்றாக விரைவகஓட்டி வந்ததால்
கலையிலேயே வந்த விட்டீர்களா..

முதல் வரிசை மாணவர்களுள்
முக்கியமாக உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி

///இங்கு பின்னூட்டங்களில் வரும் கருத்துகளும் ஒரு conference room effect
கொடுகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் எழுப்பி , பதில் தேடும் ஆர்வம் is really good. And Im enjoying the same.///

இந்த மன நிலை அநேகமாக
இங்கு வரும் அனைவரும் இருக்கும்

சிங்கைச் செல்வர் இது பற்றி
சிறப்பாக இன்னமும் சொல்லுவார்

நெஞசாற வாழ்த்தி
உளமாற பாரட்டுகிறோம்..

உங்களுக்காக இந்த பாடலினை சுழல விடுகிறோம்
உங்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறோம்

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

உலகம் தெரியவில்லை…
உலகம் தெரியவில்லை

ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை

மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி…

அந்த மயக்கத்திலே பாடுதே
ஊஞ்சல் ஆடி.

வாசல் ஒன்றிருக்கும்….
வாசல் ஒன்றிருக்கும்

ஆசை கொண்ட நெஞ்சம் தனில்
வழி இரண்டிருக்கும்

கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி..
(படம் குங்குமம்.. இசை கேவிம)

வேப்பிலை said...
This comment has been removed by the author.
வேப்பிலை said...

புதன் சூரியனுடன் சேர்ந்து விட்டால்...
குறி சொல்ல உட்கார்ந்துவிடுவாரோ

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
இன்றைய கேள்வி பதில்கள் மிகவும் அற்புதமானது
புதனும் கேதும் லக்கினத்தில்(மேஷத்தில்)
குரு பார்வை இல்லை
புதனும் கேதும்அம்சத்தில் (மிதுனததில்)
குரு பார்வை உண்டு

எனக்கு இதில் மிகுந்த ஆர்வம
இதற்க்கு குரு அருள் வேண்டும்
அது தாங்கள் தான்

cvraghu said...

Today the questions and answers were good. I think by Birth time rectification the questioner means correcting the time noted/given by your parents based on your life events (marriage, job, child etc).

கலையரசி said...

அய்யாவுக்கு வணக்கம். தங்கள் பாடலுக்கு மிகவும் நன்றி. சியாட்டல் நேரம் இந்திய நேரத்துக்கு 11.30 மணி நேரம் வித்தியாசம். அதனால் பெரும்பாலும் மதியம கொஞ்சம் நேரம் கிடைத்தால் நமது வகுப்பறையில் உட்கார்ந்து விடுவேன். இன்று எனது இரண்டு குழந்தைகளும் மதியம் நன்றாக தூங்கியதால் பின்னூட்டம் எழுதுவதற்கும் நேரம் கிடைத்தது. இல்லையென்றால் இரவு கண்விழித்து தட்டச்சு செய்வேன். இன்னும் விரைவாக தட்டச்சு செய்ய வரவில்லை. என்ன செய்வது நான் கொஞ்சம் எல்லாத்துலயும் லேட்தான். இன்று கணவருடன் டிரைவிங் சென்று வந்தேன். பாஸ் மார்க்(நாற்பது) கொண்டுதுள்ளார். அனால் நான் என்பது சதவீதம் எடுத்தால் தான் பரிட்சையில் பாஸ் செய்ய முடியும் .

Kite said...

புதன் சூரியனுடன் சேர்ந்து விட்டால்...
குறி சொல்ல உட்கார்ந்துவிடுவாரோ//

புத ஆதித்ய யோகம் கேந்திரங்களிலோ, திரிகோண இடங்களிலோ அமைந்தால் படிப்பில் ஆர்வமுடைவராக, கணிதம், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவராக இருக்கிறார்கள். என் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கிறது. சூரிய புத்தியில்தான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன். அதே போல் சனி தசையிலும் பல பேர் ஜோதிடம் படிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.

Kite said...

வாழ்க்கையின் இறுதியில் வரும் சுக்ரதிசை மட்டுமே நன்மைகளை அளிக்குமா? (சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு நானே உதாரணம்)//

சுக்கிர தசை வாழ்க்கையின் எந்த பகுதியில் வந்தாலும் ஜாதகத்தில் சுக்கிரனின் ஆதிபத்தியம், பலம் ஆகியவற்றைப் பொறுத்தே பலனளிக்கும். ஆறாம் அதிபதியாக சுக்கிரன் வந்தால் இருபது வருடம் நோய், கடன், எதிரிகளோடு போராட நேரிடலாம். ஆதலால் பொத்தாம் பொதுவாக சுக்கிர திசை அனைவருக்கும் நன்மையளிக்கும் என்று கூறி விட முடியாது.

நல்ல ஆதிபத்தியம் மற்றும் பலம் உள்ள சுக்கிரனின் தசை வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் வந்தால் வாழ்க்கை வசதிகள் நன்றாகவும் கடைசி காலம் இனிமையாகவும் இருக்கும். 10-30வயதிற்குள் வந்தால் காதல் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக ஏற்படலாம். வாழ்க்கை வசதிகளும் நன்றாக இருக்கும்.

நல்ல ஆதிபத்தியம் மற்றும் பலம் உள்ள சுக்கிர தசை 32-52 வயதிற்குள் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று கருதுகிறேன்.

Kite said...

கேது திசை எல்லாருக்குமே ஞானத்தை மட்டுமே தருமா?(அனுபவித்துத்தான் ஆகவேண்டும். தீய பலன்கள் மட்டுமே என்கின்றனர்.)//

ராகு கேது பற்றி பொதுவாக தவறான அபிப்ராயமே நிலவுகிறது. ராகுவும், கேதுவும் தாங்கள் அமரும் இடத்தின் அதிபதியின் பலன்களைக் கொடுப்பார்கள் என்று
சொல்லப்படுகிறது. உதாரணமாக மிதுன லக்ன ஜாதகத்தில் கேது துலாமிலோ, ரிஷபத்திலோ இருந்தால் சுக்கிரனின் ஐந்து,
பன்னிரண்டாம் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். கேதுவின் பலத்தைப் பொறுத்து குழந்தை, அறிவு ஆகிய ஐந்தாம் இட
பலன்களும் பன்னிரண்டாம் இட விரயங்கள் சுப விரயங்களாகவும் இருக்கும்.

மேலும் ராகு சனி போலவும் கேது செவ்வாய் போலவும் பலன் கொடுப்பார்கள். ஒரு ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் நன்றாக அமைந்திருந்தால் ராகு, கேதுவும் நல்ல பலன்களைக் கொடுப்பார்கள்.

கேதுவைக் குரு பார்த்தால் கேதுவால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறைந்து பணக்காராகும் யோகம் ஏற்படுகிறது.

ஆறு, பன்னிரண்டு, எட்டில் அமரும் ராகு, கேது நிறைய பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். ஆறில் ராகு இருந்தால் ராகு புத்தியின்போது அம்மை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கேதுவால் இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுவாக கேதுவால் ஏற்படக் கூடிய
நோய்களுக்கான காரணங்களை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதை மூன்று முறை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

thanusu said...

கலையரசி said...இங்கு பின்னூட்டங்களில் வரும் கருத்துகளும் ஒரு conference room ......

உண்மைதான் கலை எனக்கும வகுப்பறையை போல பின்னூட்ட பகுதியும் ஒரு வகுப்பரையாகவே பல விஷயங்களை அறியவைத்துள்ளது .

Kite said...

மருத்துவம் சம்பந்தமாக படித்துவிட்டு கணிணியில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் நிறையபேர்//

படிப்பு நான்காம் இடம். தொழில் பத்தாம் இடம். நான்காம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களில் வலிமையான கிரகம் தொடர்பான படிப்பும், பத்தாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களில் வலிமையான கிரகம் தொடர்பான வேலையும் அமையும்.

வேப்பிலை said...

Jagannath said...
////ஆறு, பன்னிரண்டு, எட்டில் அமரும் ராகு, கேது நிறைய பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். ஆறில் ராகு இருந்தால் ராகு புத்தியின்போது அம்மை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ///

எட்டில் என குறிப்பாக சொல்லுங்கள்
எட்டுக்கும் கேதுக்கும் எட்டா துரம்

Kite said...

அஷ்டவர்க்கங்களினால் சரியான பலன்களை அறிவிக்கமுடியாது என்கிறார் என் நண்பர் ஒருவர் (ஜோதிடர்) அப்படியா?//

அஷ்டகவர்க்கம் பராசரர் சோதிடம் எளிமையாகப் பார்ப்பதற்காக நமக்களித்த முறை. கலியுகத்தில் மக்களின் அவசர வாழ்க்கையில் இது போன்ற முறைதான் சரியாக இருக்கும் என்கிறார் அவர்.

பொதுவாக அஷ்டகவர்க்கம் ஆயுள் சம்பந்தமான விவரங்களில் சரியான முடிவைத் தருவதில்லை. கோள் சாரம் அலச மிகவும் உதவியாக இருக்கும்.

பராசரர் இந்திய ஜோதிட சாத்திரங்கள் பலவற்றை இயற்றியவர் மற்றும் வேத வியாசரின் தந்தை. காரணமில்லாமல் அவர் ஒரு முறையை உருவாக்கி இருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ளவும்.

arul said...

nice post

kmr.krishnan said...

புனர்பூ தோஷம் பற்றிய பதில் அருமை ஐயா! அதனைக்கேட்ட சுந்தரி அவர்களை நீண்ட நாட்களாக வகுப்பறைறயில் காணவில்லையே!

ஜகன்னாத் நல்ல அலசல்களைத் தந்து இருக்கிறார். பாராட்டுக்கள்.
என் மின் அஞ்சல் முகவரி:

kmrk1949@gmail.com

ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள் ஜகன்னாத். சில சுவாரஸ்யமான ஜாதகங்களைப் பற்றிப் பேசுவோம்.நன்றி!

mystocks said...

sir one doubt but i dont know shall i ask here. so sorry.
my ques is
maanthi is son of sani. then if maanthi is in kumba laknam, then how can we take this. laknathibathi in laknam or a bad grakam in lagnam

seethalrajan said...

குருவிற்கு வணக்கம்
ந‌ட்ச‌த்திர சார‌த்தின் ப‌ல‌ன் என்ன? உங்கள் பின்னுட்டங்களுக்கு மிக்க நன்றி.

Subbiah Veerappan said...

Blogger கலையரசி said...
ஹைய்யா இன்னைக்கு நான்தான் முதலில் வந்துள்ளேன். உங்கள் வகுப்பறை அமெரிக்காவில் உள்ள வகுப்பறை போல் சமத்துவமாக இருக்கிறது. பல தரப்பட்ட துறைகளில் இருந்து crash course, hands on கற்று கொள்ள மாணவர்கள் வருவார்களே அதுபோல். இங்கு பின்னூட்டங்களில் வரும் கருத்துகளும் ஒரு conference room effect
கொடுக்கிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் எழுப்பி , பதில் தேடும் ஆர்வம் is really good. And Im enjoying the same.////

பாராட்டிற்கு நன்றி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///சுக்கர திசை வாழ்கையின் நடு பகுதியில் வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். திருமணம் , குழந்தை , பணம் லௌவதீக வாழக்கை வாழலாம். முன் வந்த கேது ஞானம் தந்து இருப்பார். ஆதலால் கொஞ்சம் நம்பலாம். என் கணவருக்கு கேது திசை நடந்து கொண்டு உள்ளது. திரும்பிய திசையெல்லாம் வாழ்கை பாடம் தான். கொஞ்சம் பொறுங்கள் சுக்ரன் வந்து கொண்டே இருக்கிறான் என்று , தணிந்த நேரங்களில் ஆறுதல் சொல்லுவதுண்டு. (அவருக்கு பத்தாம் இடத்து சுக்ரன் பதினொன்றில் , சுய வர்க்க பரல் 7 SAV 37) ஆனால் அவர் அதை அனுபவிக்கும் நிலையை கடந்தே உள்ளார். அர்தாம்ஷ்ட சனி வேறு , கொடையை பிடித்து கொண்டு போனாலும் நம் மேல் விழும் சாரலில் தப்பிக முடியாதல்லவா ? கடவுளை கெட்டியாக பிடித்துகொண்டு வாழ்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளோம்./////

தசா மாறும்போது, ஸ்விட்ச் போட்டதுபோல எல்லாம் மாறிவிடும். பொறுத்திருங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Subbiah Veerappan said...

////Blogger அய்யர் said...
கலை... உறக்கத்தை
கலைத்து விட்டு வந்ததால் முதலிலா
காரை நன்றாக விரைவகஓட்டி வந்ததால்
கலையிலேயே வந்த விட்டீர்களா..
முதல் வரிசை மாணவர்களுள்
முக்கியமாக உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி
///இங்கு பின்னூட்டங்களில் வரும் கருத்துகளும் ஒரு conference room effect
கொடுகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் எழுப்பி , பதில் தேடும் ஆர்வம் is really good. And Im enjoying the same.///
இந்த மன நிலை அநேகமாக
இங்கு வரும் அனைவரும் இருக்கும்
சிங்கைச் செல்வர் இது பற்றி
சிறப்பாக இன்னமும் சொல்லுவார்
நெஞசாற வாழ்த்தி
உளமாற பாரட்டுகிறோம்..
உங்களுக்காக இந்த பாடலினை சுழல விடுகிறோம்
உங்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறோம்////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

Subbiah Veerappan said...

/////Blogger அய்யர் said...
புதன் சூரியனுடன் சேர்ந்து விட்டால்...
குறி சொல்ல உட்கார்ந்துவிடுவாரோ////

அப்படி உட்கார்ந்தால் நல்லதுதானே!

Subbiah Veerappan said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
இன்றைய கேள்வி பதில்கள் மிகவும் அற்புதமானது
புதனும் கேதும் லக்கினத்தில்(மேஷத்தில்)
குரு பார்வை இல்லை
புதனும் கேதும்அம்சத்தில் (மிதுனததில்)
குரு பார்வை உண்டு
எனக்கு இதில் மிகுந்த ஆர்வம
இதற்க்கு குரு அருள் வேண்டும்
அது தாங்கள் தான்////

எல்லோருக்கும் குரு காலதேவன்தான்! அவனைப் பிராத்தனை செய்யுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger cvraghu said...
Today the questions and answers were good. I think by Birth time rectification the questioner means correcting the time noted/given by your parents based on your life events (marriage, job, child etc).////

செய்யலாம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப்போன்றது அது!

Subbiah Veerappan said...

/////Blogger கலையரசி said...
அய்யாவுக்கு வணக்கம். தங்கள் பாடலுக்கு மிகவும் நன்றி. சியாட்டல் நேரம் இந்திய நேரத்துக்கு 11.30 மணி நேரம் வித்தியாசம். அதனால் பெரும்பாலும் மதியம கொஞ்சம் நேரம் கிடைத்தால் நமது வகுப்பறையில் உட்கார்ந்து விடுவேன். இன்று எனது இரண்டு குழந்தைகளும் மதியம் நன்றாக தூங்கியதால் பின்னூட்டம் எழுதுவதற்கும் நேரம் கிடைத்தது. இல்லையென்றால் இரவு கண்விழித்து தட்டச்சு செய்வேன். இன்னும் விரைவாக தட்டச்சு செய்ய வரவில்லை. என்ன செய்வது நான் கொஞ்சம் எல்லாத்துலயும் லேட்தான். இன்று கணவருடன் டிரைவிங் சென்று வந்தேன். பாஸ் மார்க்(நாற்பது) கொண்டுதுள்ளார். அனால் நான் எண்பது சதவீதம் எடுத்தால் தான் பரிட்சையில் பாஸ் செய்ய முடியும் /////

தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் அது சாத்தியப்படும். செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

///Blogger Jagannath said...
புதன் சூரியனுடன் சேர்ந்து விட்டால்...
குறி சொல்ல உட்கார்ந்துவிடுவாரோ//
புத ஆதித்ய யோகம் கேந்திரங்களிலோ, திரிகோண இடங்களிலோ அமைந்தால் படிப்பில் ஆர்வமுடைவராக, கணிதம், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவராக இருக்கிறார்கள். என் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கிறது. சூரிய புத்தியில்தான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன். அதே போல் சனி தசையிலும் பல பேர் ஜோதிடம் படிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.////

தீய கிரகங்களின் மகா திசைகளில் அடி வாங்கியவர்கள் பலரும் ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள்!

Subbiah Veerappan said...

////Blogger Jagannath said...
வாழ்க்கையின் இறுதியில் வரும் சுக்ரதிசை மட்டுமே நன்மைகளை அளிக்குமா? (சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு நானே உதாரணம்)//
சுக்கிர தசை வாழ்க்கையின் எந்த பகுதியில் வந்தாலும் ஜாதகத்தில் சுக்கிரனின் ஆதிபத்தியம், பலம் ஆகியவற்றைப் பொறுத்தே பலனளிக்கும். ஆறாம் அதிபதியாக சுக்கிரன் வந்தால் இருபது வருடம் நோய், கடன், எதிரிகளோடு போராட நேரிடலாம். ஆதலால் பொத்தாம் பொதுவாக சுக்கிர திசை அனைவருக்கும் நன்மையளிக்கும் என்று கூறி விட முடியாது.
நல்ல ஆதிபத்தியம் மற்றும் பலம் உள்ள சுக்கிரனின் தசை வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் வந்தால் வாழ்க்கை வசதிகள் நன்றாகவும் கடைசி காலம் இனிமையாகவும் இருக்கும். 10-30வயதிற்குள் வந்தால் காதல் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக ஏற்படலாம். வாழ்க்கை வசதிகளும் நன்றாக இருக்கும்.
நல்ல ஆதிபத்தியம் மற்றும் பலம் உள்ள சுக்கிர தசை 32-52 வயதிற்குள் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று கருதுகிறேன்./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Jagannath said...
கேது திசை எல்லாருக்குமே ஞானத்தை மட்டுமே தருமா?( அனுபவித்துத்தான் ஆகவேண்டும். தீய பலன்கள் மட்டுமே என்கின்றனர்.)//
ராகு கேது பற்றி பொதுவாக தவறான அபிப்ராயமே நிலவுகிறது. ராகுவும், கேதுவும் தாங்கள் அமரும் இடத்தின் அதிபதியின் பலன்களைக் கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக மிதுன லக்ன ஜாதகத்தில் கேது துலாமிலோ, ரிஷபத்திலோ இருந்தால் சுக்கிரனின் ஐந்து, பன்னிரண்டாம் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். கேதுவின் பலத்தைப் பொறுத்து குழந்தை, அறிவு ஆகிய ஐந்தாம் இட
பலன்களும் பன்னிரண்டாம் இட விரயங்கள் சுப விரயங்களாகவும் இருக்கும்.
மேலும் ராகு சனி போலவும் கேது செவ்வாய் போலவும் பலன் கொடுப்பார்கள். ஒரு ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் நன்றாக அமைந்திருந்தால் ராகு, கேதுவும் நல்ல பலன்களைக் கொடுப்பார்கள்.
கேதுவைக் குரு பார்த்தால் கேதுவால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறைந்து பணக்காராகும் யோகம் ஏற்படுகிறது.
ஆறு, பன்னிரண்டு, எட்டில் அமரும் ராகு, கேது நிறைய பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். ஆறில் ராகு இருந்தால் ராகு புத்தியின்போது அம்மை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கேதுவால் இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுவாக கேதுவால் ஏற்படக் கூடிய
நோய்களுக்கான காரணங்களை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதை மூன்று முறை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Jagannath said...
மருத்துவம் சம்பந்தமாக படித்துவிட்டு கணிணியில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் நிறையபேர்//
படிப்பு நான்காம் இடம். தொழில் பத்தாம் இடம். நான்காம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களில் வலிமையான கிரகம் தொடர்பான படிப்பும், பத்தாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களில் வலிமையான கிரகம் தொடர்பான வேலையும் அமையும்.////

உண்மைதான்! நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Jagannath said...
அஷ்டவர்க்கங்களினால் சரியான பலன்களை அறிவிக்கமுடியாது என்கிறார் என் நண்பர் ஒருவர் (ஜோதிடர்) அப்படியா?//
அஷ்டகவர்க்கம் பராசரர் சோதிடம் எளிமையாகப் பார்ப்பதற்காக நமக்களித்த முறை. கலியுகத்தில் மக்களின் அவசர வாழ்க்கையில் இது போன்ற முறைதான் சரியாக இருக்கும் என்கிறார் அவர்.
பொதுவாக அஷ்டகவர்க்கம் ஆயுள் சம்பந்தமான விவரங்களில் சரியான முடிவைத் தருவதில்லை. கோள் சாரம் அலச மிகவும் உதவியாக இருக்கும்.
பராசரர் இந்திய ஜோதிட சாத்திரங்கள் பலவற்றை இயற்றியவர் மற்றும் வேத வியாசரின் தந்தை. காரணமில்லாமல் அவர் ஒரு முறையை உருவாக்கி இருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ளவும்.////

அஷ்டகவர்க்கத்தில் சனியின் சுற்றை வைத்து மரணத்தை அறியலாம். அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. அதை எழுதினால், பலரும் தங்கள் ஜாதகத்தைப் பார்த்துவிட்டுப் பயம் கொள்ளத் துவங்கிவிடுவார்கள். அதை எழுதாமல் இருப்பதே உத்தமம்! அதனால் இதுவரை அதை எழுதவில்லை!

Subbiah Veerappan said...

////Blogger arul said...
nice post////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
புனர்பூ தோஷம் பற்றிய பதில் அருமை ஐயா! அதனைக்கேட்ட சுந்தரி அவர்களை நீண்ட நாட்களாக வகுப்பறைறயில் காணவில்லையே!
ஜகன்னாத் நல்ல அலசல்களைத் தந்து இருக்கிறார். பாராட்டுக்கள்.
என் மின் அஞ்சல் முகவரி:
kmrk1949@gmail.com
ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள் ஜகன்னாத். சில சுவாரஸ்யமான ஜாதகங்களைப் பற்றிப் பேசுவோம்.நன்றி!////

ஆகா, பேசுங்கள். நீங்கள் பேசினால் சுவாரசியத்திற்குக் குறைச்சல் இருக்குமா என்ன?

Subbiah Veerappan said...

////Blogger mystocks said...
sir one doubt but i dont know shall i ask here. so sorry.
my ques is
maanthi is son of sani. then if maanthi is in kumba laknam, then how can we take this. laknathibathi in laknam or a bad grakam in lagnam////

என்ன குழப்பம்? கும்பலக்கினத்திற்கு அதிபதி சனிதான்! பொதுவாக மாந்தி லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல!

Subbiah Veerappan said...

////Blogger seethalrajan said...
குருவிற்கு வணக்கம்
ந‌ட்ச‌த்திர சார‌த்தின் ப‌ல‌ன் என்ன? உங்கள் பின்னுட்டங்களுக்கு மிக்க நன்றி.////

பாடமாக எழுத வேண்டிய மேட்டர். பின்னால் எழுதுகிறேன். பொறுத்திருங்கள். தற்சமயம் நேரமில்லை!

Kite said...

கோள்சாரத்தின் பலன் அறிய லக்னத்தை கணக்கில் எடுக்காமல் சந்திரராசியை கணக்கில் எடுப்பது ஏன்?//

சந்திரனை அடிப்படையாகக் கொண்டுதான் திதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிக அருகில் இருப்பதால் மனிதர்களின் மனம் மற்றும் வாழ்க்கையை தீர்மானிப்பதில் சந்திரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

லக்னம் என்பது உடல்.

வராஹமிஹிரர் " ஒருவன் 32 வயது வரை உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். அதனால் 32 வயது வரை லக்னத்தை அடிப்படையாக வைத்து பலன் சொல்ல வேண்டும்" என்கிறார்.

மேலும் " 32 வயதிலிருந்து 64 வயது வரை மனதிற்கு முக்கியத்துவம் கொடுப்பான். அதனால் அந்த வயதில் இருப்பவர்களுக்கு சந்திரனை லக்னமாக வைத்து கணிக்கும் பலன்கள் பெரும்பாலும் பொருந்தும்" என்கிறார்.

"64 வயதிற்கு மேல் ஆத்மா முக்கியத்துவம் பெறுவதால் ஆத்மகாரகன் சூரியனை லக்னமாக வைத்துப் பலன் சொல்வது சரியாக இருக்கும்" என்கிறார்.

இது அனுபவத்தில் எப்படி ஒத்து
வருகிறது என்று வாத்தியார் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.

Kite said...

@Mr.KMRK

அலுவலக கம்ப்யூட்டரில் ப்ளாக் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மெயில் அனுமதிக்கப்படுவதில்லை. நான் உங்களை சனிக்கிழமை தொடர்பு கொள்கிறேன் சார்.

sundari said...

புனர்பூ தோஷம் பற்றிய பதில் அருமை ஐயா! அதனைக்கேட்ட சுந்தரி அவர்களை நீண்ட நாட்களாக வகுப்பறைறயில் காணவில்லையே!//
அண்ணா நான் ப்டிக்கிறேன்MSC(IT) எனக்கு அடுத்த மாதம் தேர்வு தினசரி நான் வகுப்புக்கு
வந்துவிடுவேன் பின்னூட்டமிட மாட்டேன் நான்
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி நல்லாயிருக்கிறிங்களா அண்ணி நல்லாயிருக்கிறாங்களா அமச புவனா நல்லாயிருக்கிறாங்களா

ஜே.எஸ்.டி. said...

Ref: Q# 36.2
செவ்வாய் தோஷம், புனர்பூ தோஷம் என்றெல்லாம் கவலைப் படுபவர்களுக்கு ....
திருமணம் தள்ளிக் கொண்டே போனாலும், தடை பட்டு போனாலும் கவலை வேண்டாம்....
இதையெல்லாம் ஈடு கட்ட பிறகு நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இது நான் அனுபவத்தில் கண்ட பாடம்.
இரண்டும் உள்ள என் கணவருக்கு ஒரு நல்ல வாழ்கை துணை அமைந்திருப்பதில் இருந்தே இதை நான் தெரிந்து கொண்டேன்.

அருமையான விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் நிறைந்த பதிவு, வாத்தியாருக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

Subbiah Veerappan said...

Blogger Jagannath said...
கோள்சாரத்தின் பலன் அறிய லக்னத்தை கணக்கில் எடுக்காமல் சந்திரராசியை கணக்கில் எடுப்பது ஏன்?//
சந்திரனை அடிப்படையாகக் கொண்டுதான் திதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிக அருகில் இருப்பதால் மனிதர்களின் மனம் மற்றும் வாழ்க்கையை தீர்மானிப்பதில் சந்திரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
லக்னம் என்பது உடல்.
வராஹமிஹிரர் " ஒருவன் 32 வயது வரை உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். அதனால் 32 வயது வரை லக்னத்தை அடிப்படையாக வைத்து பலன் சொல்ல வேண்டும்" என்கிறார்.
மேலும் " 32 வயதிலிருந்து 64 வயது வரை மனதிற்கு முக்கியத்துவம் கொடுப்பான். அதனால் அந்த வயதில் இருப்பவர்களுக்கு சந்திரனை லக்னமாக வைத்து கணிக்கும் பலன்கள் பெரும்பாலும் பொருந்தும்" என்கிறார்.
"64 வயதிற்கு மேல் ஆத்மா முக்கியத்துவம் பெறுவதால் ஆத்மகாரகன் சூரியனை லக்னமாக வைத்துப் பலன் சொல்வது சரியாக இருக்கும்" என்கிறார்.
இது அனுபவத்தில் எப்படி ஒத்து
வருகிறது என்று வாத்தியார் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்./////

பிறப்பும் லக்கினத்தை வைத்துத்தான் இறப்பும் லக்கினத்தை வைத்துத்தான்! ஆகவே எந்த வயதானாலும் லக்கினத்தை வைத்துப் பலன் பார்ப்பதுதான் முறையானது. லக்கினம், சந்திர லக்கினம், சூரிய லக்கினம் என்று பிரித்துப் பலன் பார்த்தால் மூன்று பெண்டாட்டிக்காரன் கதையாகிவிடும்!

Subbiah Veerappan said...

///Blogger sundari said...
புனர்பூ தோஷம் பற்றிய பதில் அருமை ஐயா! அதனைக்கேட்ட சுந்தரி அவர்களை நீண்ட நாட்களாக வகுப்பறைறயில் காணவில்லையே!//
அண்ணா நான் ப்டிக்கிறேன்MSC(IT) எனக்கு அடுத்த மாதம் தேர்வு தினசரி நான் வகுப்புக்கு
வந்துவிடுவேன் பின்னூட்டமிட மாட்டேன் நான்
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி நல்லாயிருக்கிறிங்களா அண்ணி நல்லாயிருக்கிறாங்களா அமச புவனா நல்லாயிருக்கிறாங்களா///

வாரம் ஒருமுறையாவது பின்னூட்டமிடுங்கள். பின்னூட்டங்கள் மூலமாகத்தான் நீங்கள் கண்டுகொள்ளப்படுகிறீர்கள்

Subbiah Veerappan said...

////Blogger தேமொழி said...
Ref: Q# 36.2
செவ்வாய் தோஷம், புனர்பூ தோஷம் என்றெல்லாம் கவலைப் படுபவர்களுக்கு ....
திருமணம் தள்ளிக் கொண்டே போனாலும், தடை பட்டு போனாலும் கவலை வேண்டாம்....
இதையெல்லாம் ஈடு கட்ட பிறகு நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இது நான் அனுபவத்தில் கண்ட பாடம்.
இரண்டும் உள்ள என் கணவருக்கு ஒரு நல்ல வாழ்கை துணை அமைந்திருப்பதில் இருந்தே இதை நான் தெரிந்து கொண்டேன்.
அருமையான விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் நிறைந்த பதிவு, வாத்தியாருக்கும் வாசகர்களுக்கும் நன்றி./////

ஆமாம்! கஷ்டங்களுக்கு நஷ்ட ஈடு (கூடவே) வழங்கப்பெற்றிருக்கும். அதை உணராமல் கவலைப் படாதீர்கள்!

Nattu said...

////Blogger Jagannath said...
வாழ்க்கையின் இறுதியில் வரும் சுக்ரதிசை மட்டுமே நன்மைகளை அளிக்குமா? (சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு நானே உதாரணம்)//
சுக்கிர தசை வாழ்க்கையின் எந்த பகுதியில் வந்தாலும் ஜாதகத்தில் சுக்கிரனின் ஆதிபத்தியம், பலம் ஆகியவற்றைப் பொறுத்தே பலனளிக்கும். ஆறாம் அதிபதியாக சுக்கிரன் வந்தால் இருபது வருடம் நோய், கடன், எதிரிகளோடு போராட நேரிடலாம். ஆதலால் பொத்தாம் பொதுவாக சுக்கிர திசை அனைவருக்கும் நன்மையளிக்கும் என்று கூறி விட முடியாது.
நல்ல ஆதிபத்தியம் மற்றும் பலம் உள்ள சுக்கிரனின் தசை வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் வந்தால் வாழ்க்கை வசதிகள் நன்றாகவும் கடைசி காலம் இனிமையாகவும் இருக்கும். 10-30வயதிற்குள் வந்தால் காதல் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக ஏற்படலாம். வாழ்க்கை வசதிகளும் நன்றாக இருக்கும்.
நல்ல ஆதிபத்தியம் மற்றும் பலம் உள்ள சுக்கிர தசை 32-52 வயதிற்குள் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று கருதுகிறேன்./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!//

இது உண்மைதான்...எனக்கு லக்ன நாதன் சுக்ரன் மற்றும் 6 இடத்திற்கு அதிபதி, இருப்பது 4 இடம் பகை வீட்டில், எனக்கு 8 வயதிலேயே சுக்ர திசை ஆரம்பித்துவிட்டது..28 வயது வரை...வாத்தியார் சொல்வது போல் வாழ்க்கையில் எந்த பக்கம் திரும்பினாலும் தொங்க விட்டு அடி தான். ஏன்டா வாழ்கிறோம் என்ற நிலையை பல சமயங்களில் கொடுத்து விட்டது.