மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

30.5.12

Astrology யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?

Doubts: கேள்வி பதில் பகுதி 19

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பத்தொன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.76
செந்தில் குமார்

Respected sir,
Sir I having one doubt kindly clear my doubt: planets : 27 Avasthas
In a day each planet does 27 avasthas. But i want to know how it can be calculated
like waking, seeing sleeping But i know it is calculated by using agasu something like that.
If you answer this question it would be great . I will we very happy
I am waiting your reply
Regards
Senthil.

நாம் இன்னும் ப்ளஸ் டூ வையே தாண்டவில்லை. அதற்குள் நீங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடத்தைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?

கிரக அவஸ்தை (condition of Planets) என்பது, கிரக வக்கிரம், கிரக யுத்தம் போன்று ஒரு தனிப்பட்ட கிரக நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் பலன்களையும் குறிக்கக்கூடிய பாடம்!.

உதாரணத்திற்கு Shayanadi Avasthasல் இருக்கும் கேது, சிலராசிகளில் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும். சில ராசிகளில், நோய் நொடிகளால் ஜாதகனை இருப்புச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துவிடும்.
அதைத் துள்ளியமாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் அந்த கிரக அவஸ்தைகள் பயன்படும்.

1.Jagradadi Avasthas, 2 Baladi Avasthas, 3 Lajjitadi Avasthas, 4 Deeptadi Avasthas, 5 Shayanadi Avasthas என்று கிரக அவஸ்தைகள் பலவகைப்படும். அதிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் படித்தால் தலை சுற்றல், வாந்தி, பேதி எல்லாம் வரும் (அதாவது புதிதாகப் படிப்பவர்களுக்கு)

சொல்லப்போனால், அது மேலான மேல் நிலைப் பாடம். 40 அல்லது 50 பக்கங்களுக்கு மேல் அதைப் பற்றி எழுதலாம். இப்போது நேரமில்லை. அதோடு நமது லெவலுக்கு அது தேவையுமில்லை. ஆகவே பொறுத்திருங்கள். பின்னால் சமயம் வரும்போது அது பற்றி எழுதுகிறேன்.
-------------------------------------------
email.No.77
கார்மேக ராஜா

ஐயா!
கேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால்:

1.கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா! கேந்திராதிபத்திய தோஷம் எத்தனையாண்டுகள் நீடிக்கும்?

ஒரு நன்மையளிக்கும் கிரகம், கேந்திர அதிபதியாகிவிடும் நிலையில், நன்மையளிக்கும் கிரகமாக இல்லாமல் தன் நிலை மாறிவிடுவார். சுக்கிரன், குரு, புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு இத்தன்மை
உண்டு. ஒரு சுபக்கிரகம் இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியாகும் நிலையில் மிகவும் தீயவர் ஆகிவிடுவார். அதைத்தான் கேந்திராதிபத்திய தோஷம் என்பார்கள். தோஷத்திற்கு உள்ளாகும் கிரகத்தின் தசா/புத்தி காலம்வரை அந்த தோஷம் நீடிக்கும்!
When a naturally benefic planet becomes the lord of a Kendra, it does not remain benefic but turns a malefic. Venus, Jupiter, mercury and waxing moon get afflicted with this Dosha in that order. When a naturally benefic planet becomes the lord of a two Kendras, it turns out to be very malefic and gets afflicted with what is known as Kendra Adhipati Dosha. If this planet is lord of the ascendant as well it will be rendered neutral and will not be a malefic as ascendant lord can never be malefic for the native. However its overall effects will depend upon its position in the horoscope.A natural benefic becoming the lord of two Kendras is possible only in four ascendants; Gemini, Virgo, Sagittarius and Pisces. In case Gemini and Virgo, mercury, the ascendant lord turns out to be a neutral while Jupiter becomes a malefic planet. In case of Sagittarius and Pisces, Jupiter becomes neutral and mercury is a malefic.However Kendra Adhipati Dosha is neutralized if the planet afflicted with it is posited in the Kendra of which it is the lord. For example, if Jupiter in Gemini is posited in the 7th house, it becomes free from this Dosha.

2.மற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்லக் கேட்கிறேன். நிஜமா ஐயா?

கணவனால் மனைவிக்கு (வீட்டுக்குப்) பலன் இருக்காது. எதிர்த்த வீட்டுக்காரிக்குத்தான் பலன் என்று சொல்வதைப்போல உங்களது கூற்று. First benefit will come from the placement of a planet to the house where he is placed.

யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா? நீங்களே சொல்லுங்கள்:-))))
------------------------------------------------
email.No.78
சந்திரசேகரம் சஞ்சீவ்காந்த்!

vanakkam sir
ragu, kethu pontra shadowy planets i ean mattra kirakankaludan serthu mukkiyathuvam tarukirarkal? athu eppothu nadaimurayil vantathu? ean avatrayum sertharkal? please itharku sariyana pathilai sollavum. what about ragu,ketu? why astrologists give them important?

நவக்கிரகங்கள் என்பது காலம் காலமாக உள்ளது ராசா! ராகு & கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள் ஆயிற்றே - அவற்றை எப்படிச் சேர்க்கலாம்? ஏன் சேர்த்தார்கள்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்வது? அதுவும் நீங்கள் கேட்கும் விதத்தில் சரியாக எப்படிப் பதில் சொல்வது?

நல்ல வேளை ஜோதிடத்தை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கினார்கள்? உருவாக்குவதற்கு அவர்களுக்கு என்னென்ன தகுதி இருந்தது? அதைக் காலம் காலமாக மக்கள் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் கேட்காமல் விட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

உச்ச நீதி மன்றத்தில் ஒரு ரிட் போட்டால், சரியான பதில் கிடைக்கலாம்! ஜோதிடத்தில் பாண்டித்யம் உள்ளவர்கள் யாராவது உதவிக்கு வந்து பதில் சொல்லலாம். என் அறிவிற்குத் தெரியவில்லை ராசா!:-)))))
------------------------------------------------------------
email.No.79
R.பிரபு

Dear Sir,

Doubt 1: For example, for Thanusu Lagna mars is paavathi pathi for 5th and 12th house. Sani is paavathi pathi for 2nd and 3rd house. If they are jointly in 8th place, can we say it is Vibareetha Raja Yogam? Both the planets having one good house and another bad house. Sorry sir. In my previous email it was written as Neesa Banga Raja Yogam.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் (Vibareetha Raja Yogam) உண்டாகும். நீங்கள் சொல்லும் அமைப்பிற்கு விபரீத ராஜ யோகம் உண்டு. அதற்கான பலன்களை அவர்கள் தங்கள் தசா/புத்திகளில் தருவார்கள்!

Doubt 2: If the paavathi pathis of 9th and 10th place are jointly in 6,8 or 12 th place, is it Tharma Karmathi Pathi Yogam?


ஒன்பதாம் அதிபதி பத்தாம் வீட்டிலும், பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலும் மாறி அமர்வதுதான் முதல் நிலை தர்மகர்மாதிபதி யோகம்! மற்ற அமைப்பெல்லாம் (அதாவது அந்த அதிபதிகள் இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் வேறு வீடுகளில் அமர்ந்திருப்பது) அதற்கு அடுத்த நிலைதான். 6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் அந்த யோகம் கடைசி நிலைக்கு வந்துவிடும். அதிகப் பயன் இல்லை. First Prize, Second Prize, Third Prize, Consolation Prize என்று பரிசுகளில் பலநிலைகள் உள்ளன இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual exchange (பரிவர்த்தனை), or mutual aspect, that planetary combination is called as Dharma Karma Adhipati Yoga.
----------------------------------------------
email.No.80
ஆதிராஜ்

வணக்கம் அய்யா,

செவ்வாய் பற்றி விளக்கத்தில் ஒரு சந்தேகம் அய்யா, செவ்வாய் ஒரு லக்னத்திற்கு யோககாரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்னதுக்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில்)பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு பலன் தரும் .அது 2 ம் வீடாக இருப்பின் அந்த ஜாதகன் செல்வம் ஈட்டுவதில் செவ்வாய் சிறப்பு செய்வாரா?
நன்றி வணக்கம்...

குழப்புகிறீர்களே சுவாமி! ஒரு லக்கினம் என்று சொல்லி விடுகதை போடாமல், என்ன லக்கினம் என்று சொல்லுங்கள். அத்துடன் செவ்வாய் எங்கே இருந்து உச்ச வீட்டைப் பார்க்கிறார் என்பதையும் சொல்லுங்கள்.

எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள். அன்பு மிகுதியால், உங்கள் தோளில் சாய்ந்துகொள்ளும் மனைவியும், உங்களைக் கட்டித் தழுவி, உங்கள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சும் குழந்தையும் அரிய செல்வங்கள்தான். அது கிடைக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்! அவைதான் உண்மையான செல்வம்! உண்மையான சொத்து!

பணம் வருவது மட்டும்தான் யோகமா? அதற்கு யோககாரனைப் பார்க்காமல், 2ஆம் மற்றும் 11ஆம் அதிபதிகளையும், அந்த வீடுகளையும் பாருங்கள்..

அத்தோடு ஈட்டும் செல்வத்தை அனுபவிப்பதற்கு உரிய கிரகங்கள் ஜாதகத்தில் ஒழுங்காக இருக்கிறார்களா என்றும் பாருங்கள்.(சம்பாதித்த பணத்தைக் கொஞ்சமேனும் நாமும் அனுபவிக்காமல் முழுதாக வைத்துவிட்டு, வைகுண்டம் போவதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள்?):-))))))
---------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி:
Failure is the opportunity to begin again, more intelligently.
 ------------------------------------------------------------------------

32 comments:

திருவாரூர் சரவணன் said...

கேள்வி பதில் மீள்பதிவு படித்தேன் ஐயா.

எல்லாரும் சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்கும் அளவுக்கு கிரக நிலை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று சொல்லியிருப்பது நன்கு புரிகிறது. பணம் வருவது மட்டும் யோகமல்ல. 2, 11ஆம் வீட்டு அதிபதிகளையும் அந்த வீடுகளையும் பாருங்கள் என்று சொல்லியிருப்பது சரிதான்.

எனக்கு தெரிந்த ஒருவரின் குடும்பமே வெளியே சொல்லிக்கொள்ளும்படியான வழியில்தான் பணம் சம்பாதித்தார்கள். நாமெல்லாம் உழைத்ததற்கு கிடைக்கவேண்டிய கூலியே ஒழுங்காக கிடைப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு எந்தெந்த வழியில் எல்லாம் வருகிறது என்று நினைப்பேன்.

ஆனால் அந்த குடும்பத்தினர் இப்போது வேறு வேறு காரணங்களால் சுமார் 8 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள்.

இதுவும் கிரக நிலை ஆதிக்கம் என்று புரிகிறது.

kmr.krishnan said...

கேள்வி பதில் மீள்பதிவு படித்துப் பயன் அடைந்தேன்.நன்றி ஐயா!

செவ்வாய் கடகம் சிம்மத்திற்கு யோககாரகன்.கட‌கத்திற்கு அவர் 10க்கு அதிபதி. குரு ஆறுக்கும் 9க்கும் உடையவர்.9க்கு உடைய குரு 7 மகரத்தில் அமர்ந்து நீசம் அடைந்து, 12 மிதுனத்தில் அம்ர்ந்த செவ்வாயின் சிறப்பு எட்டாம் பார்வையைப் பெறுகிறார்.ஆக 10ம் அதிபனின் பார்வை 9ம் அதிபதி குரு பெற்றது ஓரளவு எனக்கு தர்ம சிந்தனைகளை அளித்துள்ளது என்று தோன்றுகிறது.ஆனால் 9ல் ராகு! நாத்திகன் என்று பார்த்தவர்கள் எல்லாம் கூறிவிடுவார்கள்.ஆனால் நான் அப்படியில்லையே!

வேப்பிலை said...

...////kmr.krishnan said...
நாத்திகன் என்று பார்த்தவர்கள் எல்லாம் கூறிவிடுவார்கள்.ஆனால் நான் அப்படியில்லையே!///

நாத்திகன் என்று யாருமே இல்லை..
கருப்புச் சட்டைக் காரர்கள் கூட நாத்திகர்கள் இல்லை என்பதனை உறுதியாக சொல்ல முடியும்..

மூட நம்பிக்கைகள் அவர்களிடமும் உண்டு.. (நம்மைவிட) அதிகமாகவும் உண்டு

"கல்லுக்கு மாலையிடுது ஒரு கூட்டம்
கல்லறைக்கு மாலையிடுது இன்னொரு கூட்டம்"

என்ற எமது கவிதை வரிகள் சில சலசல்ப்பை ஏற்படுத்திய நிகழ்வினை நினைவு கூர்கிறோம்..

பகுத்தறிவுக்கு விளக்கம் தெரியாத பலர் இன்னமும் பகுத்தறிவு பாசறை என்ற போர்வையில் வாழ்வை கடத்துகின்றனர்..

எண்ணையை சூடாக்கி அதில் கடுகை போட்டால் என்னாகும்..?

சூடாக்கிய வெறும் சட்டியில் எள்ளையும் கொள்ளையும் போட்டால் என்னாகும்?

இந்த பாடலினை
இங்கு சுழல விடுகிறோம்

கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே

கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான் - அதைக்

கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னையிழந்தான்

எல்லோர்க்கும் நல்லவன் தன்னையிழந்தான்
(மனதை தொடும் வரிகள்)

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி

அத்தனை உண்மைக்கும்
அவன் சாட்சி - மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
(மனதை தோன்டும் வரிகள்)

சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி

உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் - இது

krishnar said...

///சுக்கிரன், குரு, புதன், தேய்பிறைச் சந்திரன்......///

////....waxing moon get....///

வளர்பிறைச் சந்திரன் என்றிருக்க வேண்டும்.

thanusu said...

கூடுதல் சொந்த வேலைகள் காரனமாக வகுப்புக்கு வந்தும் பின்னூட்டங்கள் எதையும் இடுவதில்லை. இன்னும் ஒரு வாரத்துக்கு இதே நிலமை எனக்கு தொடரும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து வரும் பொன்மொழிகளும் மனதை ஈர்க்கின்றன.

மீள் பதிவாய் படித்தாலும் நேரலை பார்ப்பது போலவே உள்ளது.

//////ஒருசுபக்கிரகம் இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியாகி இன்னுமொரு கேந்திரத்தில் இருந்தால் தீயவராகி விடுவார்,//////

உதரனமாக தனுசு மீன லக்னத்துக்கு குரு இரண்டு கேந்திரங்களுக்கு அதிபத்யாகிறார். லக்னாதிபதியும் அவரே என்பதால் ஏதும் விலக்கு இருக்கிறதா.

தனுசு லக்னத்துக்கு நான்கில் ஆட்சியில் இருந்தால் தோஷமாகுமா. லக்னாதிபதியும் அவரே ஆவதால் தோஷம் நீங்குமா.

மேலும் மீன லக்னத்துக்கு 1,10 இடத்து அதிபதி அவர் 7 இல் இருந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்திருந்தாலும் தோஷம் இருக்குமா.

இரண்டு துஷ்ட இஸ்தான அதிபதி ஒரு துர் ஸ்தானத்தில் இருந்தால் விபரீத ராஜ யோகமா அல்லது ஒரு துர் ஸ்தான அதிபதி இன்னும் ஒரு துர் ஸ்தாந்த்தில் இருந்தாலும் விபரீத ராஜ யோகமா.

உதாரனமாக ரிஷப லக்னத்துக்கு சந்திரன் 12 இல் இருந்தால் விரீத ராஜயோகம் ஆகுமா.

kannan Seetha Raman said...

வாத்தியார் ஐயா !.

ஒரு முக்கியமான கேள்வி ?

அது வேறு ஒன்றும் இல்லை! என்னில் இருந்து என்னுடைய ஆச்சி! முத்தட்சி ! பூட்டி ! முதல் அனைவரும் ஜாதகம் படித்த காரணம். தனக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி , வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டத்தால் என்ன காரணம் என்று அறிய வேண்டி படித்தவவர்களே ஆகும் . இந்த வரீசையில் தாத்தா, எனது அப்பா, மற்றும் அவருடன் ஜனித்த இரண்டு சித்தப்பாவும் அடங்கும்.

நிற்க!

தாங்கள் என்ன காரணம் கொண்டு ஜோதிடம் படித்திர்கள் வாத்தியார் ஐயா!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
இன்றைய பழமொழி தோல்வியை

தழுவியர்களுக்கெல்லாம் வெற்றி.

குடும்பசெல்வம் நன்றாக அமைந்தால்
அதுவே பெரும்செல்வம்

இன்றைய கேள்விபதில்அருமையானது

நன்றி.

Anonymous said...

Respected Sir,
I'm having some issues with my Internet connection. So, using cellphone to read and write. Sorry to say that I do not know how to type in Tamil using cellphone yet. I enjoyed the post, especially your reply for question number 80 and the post's picture that supports the reply. It is true, we realize it only after exposed to the loss, however, that time it will be too late though. After that our perspective towards life will be changed forever. Thanks for the post.

Ravi said...

கிரகங்கள் - Planets - இவை இரண்டும் வேறு. - கிரகங்கள் - கிரகிக்கும் தன்மை உடையது - இவற்றில் கிரகங்கள், உப கிரகங்கள் , நிழல் கிரகங்கள் என்று வகை படுத்தி உள்ளனர் - அனைத்து கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு - ஆனால் அனைத்து "Planets" க்கு ஈர்ப்பு சக்தி கிடையாது - இது பற்றிய குறிப்புகள் - முருகக்கடவுளின் சரித்திரத்தில் காணலாம் - பத்மாசுரன் தனது சகோதரர்களுக்கு பலவகை பட்ட "Planets" - ஆயிரக்கணக்கில் தந்தான் - இவற்றில் பலவற்றில் ஈர்ப்பு சக்தி இல்லை என்று கூறப்பட்டு உள்ளது -
எவ்வாறு கிரகங்கள் ஈர்ப்பு சக்தி உடையது என்று தைகள் வினவினால் - உதாரணம் - சந்திரன் - பவுர்ணமி மற்றும் அம்மாவாசை அன்று அலைகள் அதிகமாக இருக்கும் - நமது உடலில் -"நீர்" மிகுதியாக உள்ளது - சந்திரனால் கடலில் உள்ள நீரில் மாற்றங்களை கொண்டு வர முடிகிறது - அதேபோல் நமது உடலில் உள்ள நீரிலும் அதன் தாக்கம் தெரியும் - இதனை வேறு விதமாகவும் விளக்கலாம் - ஆறு டம்ளர் "நீர்" அருந்தி விட்டு பேசும் போது உள்ள வித்தியாசம் சாதரணமாக பேசும் போது இல்லை - மனதில் உள்ளத்தான் வாசகமாக பேச முடியும் - அதனால் "சந்திரனை" மனோகாரகன் என்று கூறுகின்றனர் -

ஒன்பது கிரகங்கள், உப கிரந்கங்கள் அனைத்தும் இத்தகைய தொடர்புகள் கொண்டது. இந்த ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நமது பூமியில் இந்த ஒன்பது கிரகங்களில் மிக அதிகம்.

Ravi said...

கிரகங்கள் - Planets - இவை இரண்டும் வேறு. - கிரகங்கள் - கிரகிக்கும் தன்மை உடையது - இவற்றில் கிரகங்கள், உப கிரகங்கள் , நிழல் கிரகங்கள் என்று வகை படுத்தி உள்ளனர் - அனைத்து கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு - ஆனால் அனைத்து "Planets" க்கு ஈர்ப்பு சக்தி கிடையாது - இது பற்றிய குறிப்புகள் - முருகக்கடவுளின் சரித்திரத்தில் காணலாம் - பத்மாசுரன் தனது சகோதரர்களுக்கு பலவகை பட்ட "Planets" - ஆயிரக்கணக்கில் தந்தான் - இவற்றில் பலவற்றில் ஈர்ப்பு சக்தி இல்லை என்று கூறப்பட்டு உள்ளது -
எவ்வாறு கிரகங்கள் ஈர்ப்பு சக்தி உடையது என்று தைகள் வினவினால் - உதாரணம் - சந்திரன் - பவுர்ணமி மற்றும் அம்மாவாசை அன்று அலைகள் அதிகமாக இருக்கும் - நமது உடலில் -"நீர்" மிகுதியாக உள்ளது - சந்திரனால் கடலில் உள்ள நீரில் மாற்றங்களை கொண்டு வர முடிகிறது - அதேபோல் நமது உடலில் உள்ள நீரிலும் அதன் தாக்கம் தெரியும் - இதனை வேறு விதமாகவும் விளக்கலாம் - ஆறு டம்ளர் "நீர்" அருந்தி விட்டு பேசும் போது உள்ள வித்தியாசம் சாதரணமாக பேசும் போது இல்லை - மனதில் உள்ளத்தான் வாசகமாக பேச முடியும் - அதனால் "சந்திரனை" மனோகாரகன் என்று கூறுகின்றனர் -

ஒன்பது கிரகங்கள், உப கிரந்கங்கள் அனைத்தும் இத்தகைய தொடர்புகள் கொண்டது. இந்த ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நமது பூமியில் இந்த ஒன்பது கிரகங்களில் மிக அதிகம்.

Ravi said...

ராகு - கேது - இவை இரண்டும் - நிரந்தரம் கிடையாது - சில ஆயிரம் வருடங்களுக்கு இவை இருக்கும் - சாப விமோசனத்திற்கு பின் - இவை மறையும் - அப்பொழுது சூரிய - சந்திர கிரகணங்கள் இருக்காது - இதை தற்கால அறிவியல் முறைப்படியும் கூறி உள்ளனர் - சில ஆயிரம் வருடங்களுக்கு பின் கிரகணங்கள் இருக்காது - பிரபஞ்சந்தில் நமது வாழ்க்கை காலம் விட்டில் பூச்சி போன்று மிக மிக சிறியது - இத காலத்தை கொண்டு இதனை ஆராய்ந்து, பின்பு தான் ஒப்புக்கொள்வோம் என்பது சரியான முறை அன்று.

Rathinavel.C said...

////உதரனமாக தனுசு மீன லக்னத்துக்கு குரு இரண்டு கேந்திரங்களுக்கு அதிபத்யாகிறார். லக்னாதிபதியும் அவரே என்பதால் ஏதும் விலக்கு இருக்கிறதா.///

For me Guru is laganthipathi as well as 4th house lord,in 11th house with 4 others(sani,bhudan,sukran and suriyan),but in pagai vedu... What will be the results....


Ananth,whats your view on this.


Thanks
Rathinavel.C

seenivasan said...

Dear sir,
Please forgive as I am not able to write in tamil due to my lap top is official one.
understood kendra Adthipatya dosam for dhansu,Meena is from mercury if it occupies in 7th house (10 th case in case of Dhansu lagnam) and vice versa for Muthunam & kannya with GURU.
But for kadaga lagnam , how Sukran occupying in 4th house ie thulam --how it will be taken as malva yogam or kendriya athipatya dosam ?

sundari said...

1.Jagradadi Avasthas, 2 Baladi Avasthas, 3 Lajjitadi Avasthas, 4 Deeptadi Avasthas, 5 Shayanadi Avasthas என்று கிரக அவஸ்தைகள் பலவகைப்படும். அதிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் படித்தால் தலை சுற்றல், வாந்தி, பேதி எல்லாம் வரும் (அதாவது புதிதாகப் படிப்பவர்களுக்கு)//
அப்பா கடவுளே இது என்னப்பா சோதனை வாத்தியார் ரீல் போடறாரு
இல்ல வராது வாத்தியாருக்குத்தான் நேரமில்லை
வணக்கம் சார்.

பழனி-சித்தர்கள் said...

ஐம்பது வருடங்களுக்கு முந்திய
ஜாதகத்தில் எல்லாம்,
கிரக அவஸ்தா, கிரக மண்டலம், கிரக சமயம், போன்ற
நுட்ப கணிதங்கள்
அனைத்தும் குறிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் பொருளாதாரம் மட்டுமே சார்ந்து இயங்ககூடிய இந்த உலகில்,
மனிதர்களின் சுருங்கி மனதை போல்,
ஜாதகமும்,
ராசி நவாம்சம் என்று சுருங்கி போய்விட்டது.
இதில் கொடுமை என்னவென்றால் சில ஜோதிடர்கள்
நவாம்ச சக்கரத்தை கூட கண்டு கொள்ளமால்
வெறும் ராசி மட்டும் பார்த்து கண்ணை
முடிக்கொண்டு பலன் சொல்கிறார்கள்.
எல்லாம் கலிகாலம்.
சாப்பிடும் சாப்பாடு தான் விஷமாகிவிட்டது.
தற்பொழுது சாஸ்திரங்களையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஓம் சரவணபவ நம

பழனி-சித்தர்கள் said...
This comment has been removed by the author.
வேப்பிலை said...

///Bhogar said...
தற்பொழுது சாஸ்திரங்களையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.///

உண்மை உண்மை...

அதை விட முக்கியமாக
தான் சொல்வதே சாத்திரம் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்...

தான் செய்வதினை சாத்திரத்தில் தேடி எடுத்து இது சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்பவர்கள் அநீதிமான்கள்

சாத்திரத்தில் உள்ளபடி வாழ்க்கையினை நடத்துபவர் இருப்பவர் எண்ணிக்கையில் குறைவு

தோழர் புவனேஷ்வர் மற்றும்
தோழி பார்வதியாரின் கருத்துக்களுக்கு

நாளைய பின் ஊட்டத்தில் சொல்கிறோம்..

வணக்கங்களுடன்
வழக்கமான வாழ்த்துக்களுடன்

Subbiah Veerappan said...

/////Blogger சரண் said...
கேள்வி பதில் மீள்பதிவு படித்தேன் ஐயா.
எல்லாரும் சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்கும் அளவுக்கு கிரக நிலை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று
சொல்லியிருப்பது நன்கு புரிகிறது. பணம் வருவது மட்டும் யோகமல்ல. 2, 11ஆம் வீட்டு அதிபதிகளையும் அந்த வீடுகளையும்
பாருங்கள் என்று சொல்லியிருப்பது சரிதான்.
எனக்கு தெரிந்த ஒருவரின் குடும்பமே வெளியே சொல்லிக்கொள்ளும்படியான வழியில்தான் பணம் சம்பாதித்தார்கள்.
நாமெல்லாம் உழைத்ததற்கு கிடைக்கவேண்டிய கூலியே ஒழுங்காக கிடைப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு எந்தெந்த
வழியில் எல்லாம் வருகிறது என்று நினைப்பேன்.
ஆனால் அந்த குடும்பத்தினர் இப்போது வேறு வேறு காரணங்களால் சுமார் 8 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு
நிற்கிறார்கள்.
இதுவும் கிரக நிலை ஆதிக்கம் என்று புரிகிறது.//////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
கேள்வி பதில் மீள்பதிவு படித்துப் பயன் அடைந்தேன்.நன்றி ஐயா!
செவ்வாய் கடகம் சிம்மத்திற்கு யோககாரகன்.கட‌கத்திற்கு அவர் 10க்கு அதிபதி. குரு ஆறுக்கும் 9க்கும் உடையவர்.9க்கு உடைய குரு 7 மகரத்தில் அமர்ந்து நீசம் அடைந்து, 12 மிதுனத்தில் அம்ர்ந்த செவ்வாயின் சிறப்பு எட்டாம் பார்வையைப் பெறுகிறார்.ஆக 10ம் அதிபனின் பார்வை 9ம் அதிபதி குரு பெற்றது ஓரளவு எனக்கு தர்ம சிந்தனைகளை அளித்துள்ளது என்று தோன்றுகிறது.ஆனால் 9ல் ராகு! நாத்திகன் என்று பார்த்தவர்கள் எல்லாம் கூறிவிடுவார்கள்.ஆனால் நான் அப்படியில்லையே!//////

மற்றவர்களின் நினைப்பிற்கெல்லாம் ஏன் கவலைப் படுகிறீர்கள்? விட்டுத் தள்ளுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger அய்யர் said...
...////kmr.krishnan said...
நாத்திகன் என்று பார்த்தவர்கள் எல்லாம் கூறிவிடுவார்கள்.ஆனால் நான் அப்படியில்லையே!///
நாத்திகன் என்று யாருமே இல்லை..
கருப்புச் சட்டைக் காரர்கள் கூட நாத்திகர்கள் இல்லை என்பதனை உறுதியாக சொல்ல முடியும்..
மூட நம்பிக்கைகள் அவர்களிடமும் உண்டு.. (நம்மைவிட) அதிகமாகவும் உண்டு
"கல்லுக்கு மாலையிடுது ஒரு கூட்டம்
கல்லறைக்கு மாலையிடுது இன்னொரு கூட்டம்"
என்ற எமது கவிதை வரிகள் சில சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வினை நினைவு கூர்கிறோம்..
பகுத்தறிவுக்கு விளக்கம் தெரியாத பலர் இன்னமும் பகுத்தறிவு பாசறை என்ற போர்வையில் வாழ்வை கடத்துகின்றனர்..
எண்ணையை சூடாக்கி அதில் கடுகை போட்டால் என்னாகும்..?
சூடாக்கிய வெறும் சட்டியில் எள்ளையும் கொள்ளையும் போட்டால் என்னாகும்?/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

Subbiah Veerappan said...

////Blogger krishnar said...
///சுக்கிரன், குரு, புதன், தேய்பிறைச் சந்திரன்......///
////....waxing moon get....///
வளர்பிறைச் சந்திரன் என்றிருக்க வேண்டும்./////

கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை. சரிசெய்துவிட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger thanusu said...
கூடுதல் சொந்த வேலைகள் காரனமாக வகுப்புக்கு வந்தும் பின்னூட்டங்கள் எதையும் இடுவதில்லை. இன்னும் ஒரு
வாரத்துக்கு இதே நிலமை எனக்கு தொடரும் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து வரும் பொன்மொழிகளும் மனதை ஈர்க்கின்றன.
மீள் பதிவாய் படித்தாலும் நேரலை பார்ப்பது போலவே உள்ளது.
//////ஒருசுபக்கிரகம் இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியாகி இன்னுமொரு கேந்திரத்தில் இருந்தால் தீயவராகி விடுவார்,//////
உதரனமாக தனுசு மீன லக்னத்துக்கு குரு இரண்டு கேந்திரங்களுக்கு அதிபத்யாகிறார். லக்னாதிபதியும் அவரே என்பதால்
ஏதும் விலக்கு இருக்கிறதா.
தனுசு லக்னத்துக்கு நான்கில் ஆட்சியில் இருந்தால் தோஷமாகுமா. லக்னாதிபதியும் அவரே ஆவதால் தோஷம் நீங்குமா.
மேலும் மீன லக்னத்துக்கு 1,10 இடத்து அதிபதி அவர் 7 இல் இருந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்திருந்தாலும்
தோஷம் இருக்குமா.//////

குரு முதல் நிலை சுபக்கிரகம். அவரால் பெரிய தோஷங்கள் ஏற்படாது. கவலையை விடுங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இரண்டு துஷ்ட இஸ்தான அதிபதி ஒரு துர் ஸ்தானத்தில் இருந்தால் விபரீத ராஜ யோகமா அல்லது ஒரு துர் ஸ்தான அதிபதி
இன்னும் ஒரு துர் ஸ்தாந்த்தில் இருந்தாலும் விபரீத ராஜ யோகமா.
உதாரனமாக ரிஷப லக்னத்துக்கு சந்திரன் 12 இல் இருந்தால் விரீத ராஜயோகம் ஆகுமா.//////

விபரீத ராஜ யோகம் பாடத்தை மீண்டும் படியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Subbiah Veerappan said...

/////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயா !.
ஒரு முக்கியமான கேள்வி ?
அது வேறு ஒன்றும் இல்லை! என்னில் இருந்து என்னுடைய ஆச்சி! முத்தட்சி ! பூட்டி ! முதல் அனைவரும் ஜாதகம் படித்த
காரணம். தனக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி , வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டத்தால் என்ன காரணம் என்று அறிய வேண்டி படித்தவவர்களே ஆகும் . இந்த வரீசையில் தாத்தா, எனது அப்பா, மற்றும் அவருடன் ஜனித்த இரண்டு சித்தப்பாவும் அடங்கும்.
நிற்க!
தாங்கள் என்ன காரணம் கொண்டு ஜோதிடம் படித்திர்கள் வாத்தியார் ஐயா!/////

என்னுடைய போதாத நேரம் படித்தேன் சுவாமி!:-)))))
உண்மையான காரணம். என் தந்தையின் நண்பர்களில் சிலர் ஜோதிட வல்லுனர்கள். அவர்களைப் பார்த்துத்தான் எனக்கு ஜோதிடத்தில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது! முட்டி மோதி, போராடிக் கற்றுக்கொண்டேன்.

Subbiah Veerappan said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
இன்றைய பழமொழி தோல்வியை
தழுவியர்களுக்கெல்லாம் வெற்றி.
குடும்பசெல்வம் நன்றாக அமைந்தால்
அதுவே பெரும்செல்வம்
இன்றைய கேள்விபதில்அருமையானது
நன்றி./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////OpenID Themozhi said...
Respected Sir,
I'm having some issues with my Internet connection. So, using cellphone to read and write. Sorry to say that I do not know how to type in Tamil using cellphone yet. I enjoyed the post, especially your reply for question number 80 and the post's picture that supports the reply. It is true, we realize it only after exposed to the loss, however, that time it will be too
late though. After that our perspective towards life will be changed forever. Thanks for the post./////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Ravi said...
கிரகங்கள் - Planets - இவை இரண்டும் வேறு. - கிரகங்கள் - கிரகிக்கும் தன்மை உடையது - இவற்றில் கிரகங்கள், உப
கிரகங்கள் , நிழல் கிரகங்கள் என்று வகை படுத்தி உள்ளனர் - அனைத்து கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு - ஆனால்
அனைத்து "Planets" க்கு ஈர்ப்பு சக்தி கிடையாது - இது பற்றிய குறிப்புகள் - முருகக்கடவுளின் சரித்திரத்தில் காணலாம் -
பத்மாசுரன் தனது சகோதரர்களுக்கு பலவகை பட்ட "Planets" - ஆயிரக்கணக்கில் தந்தான் - இவற்றில் பலவற்றில் ஈர்ப்பு
சக்தி இல்லை என்று கூறப்பட்டு உள்ளது -
எவ்வாறு கிரகங்கள் ஈர்ப்பு சக்தி உடையது என்று தைகள் வினவினால் - உதாரணம் - சந்திரன் - பவுர்ணமி மற்றும்
அம்மாவாசை அன்று அலைகள் அதிகமாக இருக்கும் - நமது உடலில் -"நீர்" மிகுதியாக உள்ளது - சந்திரனால் கடலில் உள்ள நீரில் மாற்றங்களை கொண்டு வர முடிகிறது - அதேபோல் நமது உடலில் உள்ள நீரிலும் அதன் தாக்கம் தெரியும் -
இதனை வேறு விதமாகவும் விளக்கலாம் - ஆறு டம்ளர் "நீர்" அருந்தி விட்டு பேசும் போது உள்ள வித்தியாசம் சாதரணமாக
பேசும் போது இல்லை - மனதில் உள்ளத்தான் வாசகமாக பேச முடியும் - அதனால் "சந்திரனை" மனோகாரகன் என்று
கூறுகின்றனர் -
ஒன்பது கிரகங்கள், உப கிரந்கங்கள் அனைத்தும் இத்தகைய தொடர்புகள் கொண்டது. இந்த ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நமது பூமியில் இந்த ஒன்பது கிரகங்களில் மிக அதிகம்.//////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

Subbiah Veerappan said...

/////Blogger Ravi said...
ராகு - கேது - இவை இரண்டும் - நிரந்தரம் கிடையாது - சில ஆயிரம் வருடங்களுக்கு இவை இருக்கும் - சாப
விமோசனத்திற்கு பின் - இவை மறையும் - அப்பொழுது சூரிய - சந்திர கிரகணங்கள் இருக்காது - இதை தற்கால அறிவியல்
முறைப்படியும் கூறி உள்ளனர் - சில ஆயிரம் வருடங்களுக்கு பின் கிரகணங்கள் இருக்காது - பிரபஞ்சந்தில் நமது வாழ்க்கை
காலம் விட்டில் பூச்சி போன்று மிக மிக சிறியது - இத காலத்தை கொண்டு இதனை ஆராய்ந்து, பின்பு தான் ஒப்புக்கொள்வோம் என்பது சரியான முறை அன்று./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger Rathinavel.C said...
////உதரனமாக தனுசு மீன லக்னத்துக்கு குரு இரண்டு கேந்திரங்களுக்கு அதிபத்யாகிறார். லக்னாதிபதியும் அவரே
என்பதால் ஏதும் விலக்கு இருக்கிறதா.///
For me Guru is laganthipathi as well as 4th house lord,in 11th house with 4 others(sani,bhudan,sukran and suriyan),but in
pagai vedu... What will be the results....
Ananth,whats your view on this.
Thanks
Rathinavel.C//////

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவரால் அதிக தொல்லைகள் இருக்காது. நான்கு கிரகங்களுடன் கிரக யுத்தத்தில் இருப்பதால் பலன் சொல்வது கடினம்!

Subbiah Veerappan said...

//////Blogger seenivasan said...
Dear sir,
Please forgive as I am not able to write in tamil due to my lap top is official one.
understood kendra Adthipatya dosam for dhansu,Meena is from mercury if it occupies in 7th house (10 th case in case of
Dhansu lagnam) and vice versa for Muthunam & kannya with GURU.
But for kadaga lagnam , how Sukran occupying in 4th house ie thulam --how it will be taken as malva yogam or kendriya
athipatya dosam ?/////

இரண்டிற்கும் உரிய பலன்கள் இருக்கும்!

Subbiah Veerappan said...

/////Blogger sundari said...
1.Jagradadi Avasthas, 2 Baladi Avasthas, 3 Lajjitadi Avasthas, 4 Deeptadi Avasthas, 5 Shayanadi Avasthas என்று கிரக
அவஸ்தைகள் பலவகைப்படும். அதிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் படித்தால் தலை சுற்றல், வாந்தி, பேதி எல்லாம்
வரும் (அதாவது புதிதாகப் படிப்பவர்களுக்கு)//
அப்பா கடவுளே இது என்னப்பா சோதனை வாத்தியார் ரீல் போடறாரு
இல்ல வராது வாத்தியாருக்குத்தான் நேரமில்லை
வணக்கம் சார்./////

வராது எனறால் மகிழ்ச்சிதான். நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்!

Subbiah Veerappan said...

//////Blogger Bhogar said...
ஐம்பது வருடங்களுக்கு முந்திய ஜாதகத்தில் எல்லாம், கிரக அவஸ்தா, கிரக மண்டலம், கிரக சமயம், போன்ற
நுட்ப கணிதங்கள் அனைத்தும் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் பொருளாதாரம் மட்டுமே சார்ந்து இயங்ககூடிய இந்த
உலகில், மனிதர்களின் சுருங்கி மனதை போல், ஜாதகமும், ராசி நவாம்சம் என்று சுருங்கி போய்விட்டது.
இதில் கொடுமை என்னவென்றால் சில ஜோதிடர்கள் நவாம்ச சக்கரத்தை கூட கண்டு கொள்ளமால்
வெறும் ராசி மட்டும் பார்த்து கண்ணை முடிக்கொண்டு பலன் சொல்கிறார்கள்.
எல்லாம் கலிகாலம். சாப்பிடும் சாப்பாடு தான் விஷமாகிவிட்டது. தற்பொழுது சாஸ்திரங்களையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.
ஓம் சரவணபவ நம/////

அவர்களுக்கும் நேரமின்மை இருக்காதா என்ன?

Subbiah Veerappan said...

/////Blogger அய்யர் said...
///Bhogar said...
தற்பொழுது சாஸ்திரங்களையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.///
உண்மை உண்மை...
அதை விட முக்கியமாக
தான் சொல்வதே சாத்திரம் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்...
தான் செய்வதினை சாத்திரத்தில் தேடி எடுத்து இது சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்பவர்கள் அநீதிமான்கள்
சாத்திரத்தில் உள்ளபடி வாழ்க்கையினை நடத்துபவர் இருப்பவர் எண்ணிக்கையில் குறைவு
தோழர் புவனேஷ்வர் மற்றும்
தோழி பார்வதியாரின் கருத்துக்களுக்கு
நாளைய பின் ஊட்டத்தில் சொல்கிறோம்..
வணக்கங்களுடன்
வழக்கமான வாழ்த்துக்களுடன்/////

நல்லது. வந்து சொல்லுங்கள் சுவாமி!