++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு?
Doubts: கேள்வி பதில் பகுதி பன்னிரெண்டு!
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பன்னிரெண்டு!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------
email No.47
email No.
C.சுப்பையா
ஐயா வணக்கம்,
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். என்பதற்கேற்ப கற்றுகொடுக்கும் தாங்கள் இறைவன் தான் என்பதில் நான் ஒரு ஆசிரியரின் மகனாக இதை எழுதுவதில் முழு மகிழ்ச்சி.எனக்கு ஏற்பட்டுள்ள ஒரு சில சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.
அடடா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்களே!:-)))) இறைவன் ரேஞ்சிற்கு என்னை உயர்த்தி, அண்டாப் பாலில் அழுத்திவிடாதீர்கள். நானும் உங்களைப் போல சாதாரண மனிதன்தான்.நான் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!
1. சூரிய உதயத்திற்கு முன் பிறந்தவர்களுக்கு முற்காலத்தில் பெரியவர்கள் எழுதிகொடுத்த ஜாதகங்களோடு, தாங்கள் வழங்கியுள்ள மென்பொருள்களில் நட்சத்திர வேறுபாடு வருவதை தவிர்க்க தங்களின் ஆலோசனை வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்.
வெள்ளைக்காரனுக்கு இரவு 12 மணிக்கு அடுத்த நாள் துவங்கிவிடும். நமக்கு சூரிய உதயத்திற்குப் பிறகுதான் நாள் துவங்கும். இரவு 12 மணிக்குப் பிறகு, அதிகாலை சூரிய உதயத்திற்குள் (அதாவது 5.50AM to 6:35 AM) சுமார் 6மணி நேரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றைய சூரிய உதயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஜாதகத்தை எழுதுவார்கள்.
சித்திரை மாதம் சூரிய உதயம் 5:55, மாசி மாதம் சூரிய உதயம் 6:39 - இடையில் சூரிய உதயம் ஒவ்வொரு மாதமும் ஒரு நேரத்தில் - இந்த நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இருக்கும். சூரிய உதய அட்டவணை வகுப்பறைக் கிடங்கில் உள்ளது
அப்படி எழுதும்போது அவர்கள் விரோதி வருடம் மார்கழி மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 2:00 மணி என்று எழுதிக் கூடவே 8/9.1.2010 2:00 AM என்றும் எழுதியிருப்பார்கள். அப்படி எழுதாவிட்டால் - அதாவது 8/9 என்று எழுதாவிட்டால் சிக்கல்தான். 7/8 ஆ, அல்லது 8/9 என்று ஜாதகன் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாயிருக்கும். அதைச் சரிபார்க்க அவன் பிறந்த வருடத்திய பஞ்சாங்கம் வேண்டும். அதாவது ஜாதகன் 1984ஆம் வருடம் பிறந்திருந்தால் அந்த வருடப் பஞ்சாங்கம் வேண்டும்.
நமது வகுப்பறை மாணவர்களுக்கு அந்தப் பிரச்சினை வராது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பங்சாங்கம் உள்ளது. அதாவது 1926ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை உள்ள காலத்திற்கான வாக்கியப் பங்சாங்கங்கள் உள்ளது. தமிழ்த்தேதியையும் நேரத்தையும் நீங்கள் எழுதினால், அதற்குச் சரியான ஆங்கிலத் தேதியை நான் தருகிறேன் (இலவசமாக)
விளக்கம் போதுமா அன்பரே?
-------------------------------------------
email No.48
சுனிதா நர்த்தகி
அன்புள்ள ஐயா
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........
கேள்வி 1 :
செவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா?. இரு வீட்டின் பரல் 30 - க்கும் அதிகமாக இருந்தாலுமா?
அதிபதி நீசமடைந்திருக்கும்போது, அந்த வீட்டிற்கு 30 பரல்கள் எப்படிக் கிடைத்தது என்று யோசித்தீர்களா?
இப்படி வைத்து யோசித்துப்பருங்கள்: குடும்பத்தலைவர் வேலை வெட்டியில்லாத ஆசாமி. ஆனால் குடும்பத்திற்கு கோவை ரேஸ் கோர்ஸில் ஒரு ஏக்கரில் பங்களா இருக்கிறது. அவனாசி ரோட்டில் இரண்டு பெரிய வளாகங்கள் (மேன்சன்கள்) இருக்கின்றன!. மாதம் 4 லட்ச ரூபாய் வாடகை வருகிறது. கூடலூரில் 100 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது. தலைவர் சோம்பேறி. அதனால் எஸ்டேட்டை லீசிற்கு விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு 20 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது சொல்லுங்கள். அந்தக் குடும்பம் செளகரியமாக இருக்குமா? இருக்காதா?
அப்படி, அதிபதி நீசமானாலும், 4ஆம் வீட்டில் மேல் விழும் நல்ல பார்வைகளால், அதற்கு வேறு தீய கிரகங்களின் உபத்திரவம் எதுவும் இல்லாத சூழ்நிலையில்தான் அந்த 30 பரல்கள் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட 4ஆம் வீட்டை உடைய ஜாதகன் வசதிமிக்கவனாக இருப்பான். குடும்பத் தலைவனுக்கு 4ஆம் அதிபதி நீசமடைந்திருந்தபோதும் பரல்கள் அதிகமாக உள்ள வீடுகளின் பலன்கள் நன்மை உடையதாக இருக்கும். ஆகவே ஜாதகன், நீசனைக் கடாசிவிட்டு வீட்டின் அமைப்பைவைத்து சொத்தை வாங்கலாம்.
இல்லையென்றால் அதிக பரல்களுக்கு என்ன அர்த்தம் சகோதரி?
கேள்வி 2 :
குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும் என்பதன் அர்த்தம்? 5 வயதில் குழந்தைக்கு சுக்கிர திசை வந்தால் பெற்றவர்களுக்கு ஆபத்தா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு
உங்கள் மாணவி
குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.
இந்த அமைப்பையும் மீறி, சுக்கிரதிசையின் அழும்பையும் மீறி, சில குழந்தைகள், ஜாதகத்தில் வித்தியாகாரகன் புதன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நன்றாகப் படித்துத் தேர்ந்துவிடும்! அதுதான் ஜாதகப் பலனின் அதிசயம்!
-------------------------------------------
email No.49
ரமேஷ் வேலுச்சாமி
Sir,
For
Real Estate, [lord of 4 th & 11 th ] the karaka Mars is in the
6th house[vagram] with guru parvai with less than 3 parals and in
navamsa guru and mars are in parivartna. if so, is mars become powerful
? and will give good results in real estate.
நான்காம் வீடுதான் பூமி, மனைகளுக்கு உரிய இடம். அந்த வீடு நன்றாக இருந்தாலும் சரி அல்லது பதினொன்றாம் வீட்டு அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தாலும் சரி ரியல் எஸ்டேட் பிஸினெஸிற்கு உரிய அமைப்பு அது. அதுபோல 10ஆம் இடத்து அதிபதி 5ஆம் வீட்டில் அம்ர்ந்து பதினொன்றாம் வீட்டைப் பார்த்தாலும், ரியல் எஸ்டேட் பிஸினெஸில் வெற்றி கிடைக்கும்!
4 & 11ஆம் இடத்து அதிபதி 6ல் மறைந்துவிட்டதால் வாய்ப்புக் குறைவு. அம்சத்தில் அவர் பரிவர்த்தனையாகி உள்ளதைமட்டும் பார்க்காமல், அவர் அம்சத்தில் உச்சமாக இருக்கிறாரா அல்லது நீசமாகி இருக்கிறாரா அல்லது ஆட்சி பலத்துடன் பரிவர்த்தனையாகி இருக்கிறாரா என்று பாருங்கள்
இன்று எல்லோருக்குமே குறுகிய காலத்தில் அதீதமான பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளது. ரியல் எஸ்ட்டேட் எனப்படும் இடம் வாங்கி விற்பது, கட்டிடங்கள் கட்டி விற்றுக் காசு பண்னும் தொழிலில் அனைவருக்குமே ஒரு கண் உள்ளது. எல்லோரும் அதில் வரும் வருமானத்தைத்தான் பார்க்கிறார்களோ ஒழிய, அதில் உள்ள பிரச்சினைகளை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. அதில் நுழைந்து பார்த்த பிறகுதான் பிரச்சினைகள் பூதாகரமாகத் தெரியும்.
முன்பே பலமுறை எழுதியுள்ளேன். பணம் அதிகமாகக் கையில் சேர்வதற்குச் ஜாதகத்தில் 2ஆம் வீடும், 11ஆம் வீடும் அதி முக்கியம். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு தண்ணிர் கொட்டும் குழாய். அது இரண்டும் இல்லாமல் தண்ணீரைப் பிடித்து வைக்க முடியாது. தண்ணீரைத் திறந்துவிடும் ஆசாமி வேண்டுமே. பத்தாம் வீட்டு அதிபதியும், கர்மகாரகன் சனியும் சேர்ந்துதான் அல்லது அந்த இருவரில் ஒருவர்தான் அந்த வேலையைச் செய்வார்கள்.அவர்கள்தான் தண்ணீரைத் திறந்துவிடும் ஆசாமிகள். சரி, எந்த ஆற்றில் இருந்து அல்லது எந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர்வரும்? அதை அறியச் செய்வதுதான் மற்ற வீடுகளின் வேலை!
ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் பூர்வீகச் சொத்து என்னும் அணையில் இருந்து பணம் வரும். ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும். ஆறாம் வீடு நன்றாக இருந்தால், தீயவழி (தாதா வேலைகள், கஞ்சாக் கடத்தல் வேலைகள் போன்ற இன்னபிற தவறான வேலைகள்) என்னும் அணையில் இருந்து பணம் வரும். 4ஆம் வீடு நன்றாக இருந்தால் ரியல் எஸ்டேட் என்னும் அணையில் இருந்து பணம் வரும்.
அணைகளை மட்டும் மனதில் வாங்கிக் கொண்டு, சார் எனக்குப் பணம் வரவில்லையே என்று கேட்காதீர்கள். அதற்கு முன் எழுதியுள்ள பகுதியையும் மனதில் வாங்கிக்கொண்டு பாருங்கள்.
Areas in which money can be earned, level of accumulation, instant financial gains and windfalls, level of rise, positive and negative period in the coming times என்று பலவிஷயங்கள் உள்ளன. ஒரு கிரகத்தின் உச்ச நீசத்தை வைத்து மட்டும் அல்லது பரிவர்த்தனையை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.
சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். காரகன் செவ்வாயை மட்டும் வைத்துக் கதை எழுதப்பார்க்கிறீர்களே? மேலே குறிப்பிட்டுள்ள மற்ற விஷயங்களையும் பாருங்கள்! எல்லாவற்றையும் அலசுங்கள்
மொத்த ஜாதகத்தையும் அலச வேண்டும். ஏன் அலச வேண்டும்? உங்களுடைய சொந்தப் பணம் எதுவுமில்லாமல் ரியல் எஸ்டேட் பிஸினசில் நீங்கள் நுழைவது சாத்தியமில்லை. அதனால் அலச வேண்டும்.
வெறும் கையால் முழம் போடும் திறமையுள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் பிரச்சினை இல்லை. ரியல் எஸ்ட்டேட் வியாபாரத்தில் கமிஷன் அடிப்படையில் நீங்கள் வேலை செய்யலாம். கல்லை எறிவோம்; மாங்காய் விழுந்தால் விழுகட்டும். விழாவிட்டால் கல்லிற்குப் பஞ்சமா என்னும் மனதைரியம்தான் மட்டும் அதற்குப் போதும்!
வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு? அதற்குச் ஜாதகத்தையே பார்க்க வேண்டாம்!:-)))))
-------------------------------------------
email No.50
லெட்சுமணன், சென்னை
அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்,
இது நமக்கு நாமே திசா புத்தி பலனை அறிந்து கொள்ளும் குறுக்கு வழி பற்றிய கேள்வி:
மேஷ லக்னம்,
நாலில் ராகுவும் குருவும். நாலில் 31 பரல்,
குருவின் சுய பரல் 5 , சந்திரனின் சுய பரல் 4 , சனியின் சுய பரல் 3
ராகு திசைக்கு சனியின் அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா,
ராகு நின்ற வீட்டு அதிபதி சந்திரன் அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா,
ராகுவோடு குரு சேர்ந்து இருக்கிறாரே ஆகையால் குரு அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா? ரகுவின் சுய பரல் எது?ராகு திசையின் ஒவ்வொரு புத்தியின் பலனை நமக்கு நாமே தெரிந்துகொள்ள அந்த அந்த கிரகங்கள் இருக்கும் வீட்டில் உள்ள பரல்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் அல்லவா? சற்று விளக்கமாக சொல்லவும்
=Lakshmanan
ராகுவிற்கு சொந்த வீடும் கிடையாது. பரல்களும் கிடையாது. ஆகவே ராகுவிற்குப் பரல்களை வைத்துப் பலனை அறிய முடியாது. ராகு திசையில் அடுத்தடுத்து வரும் புத்திகளை வைத்துத்தான் பலன்களை அறிய முடியும்.
பொதுவாக ராகு மகா தசை 80% ஜாதகர்களுக்கு மகிழ்ச்சியைத்தராது. நன்மைகள் அதிகமாக இருக்காது. தொல்லைகளே மிகுந்து இருக்கும். படுத்தி எடுக்கும். ஒரேயடியாக படித்தி எடுக்குமா என்றால். அப்படி இருக்காது. 18 வருடங்கள் தொடர்ந்து தொல்லைகள் என்றால் ஜாதகன் நொடிந்து போய் விடமாட்டானா? அதனால் இடையிடைய வரும் வேறு கிரகங்களின் புத்திகளில் ஜாதகன் சற்று பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ராகுதசை 18 ஆண்டுகளில் செய்யும் கெடுதல்களை கேது 7 ஆண்டுகளில் கொடுத்து விடுவார்.
ராகு தசை ராகு புத்தி - 2 ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்கள்
ராகு தசை கேது புத்தி - 1 ஆண்டு 18 நாட்கள்
ராகு தசை சூரிய புத்தி - 10 மாதங்கள் 24 நாட்கள்
ராகு தசை சந்திர புத்தி - 1 ஆண்டு 6 மாதங்கள்
ராகு தசை செவ்வாய் புத்தி - 1 ஆண்டு 18 நாட்கள்
ஆக மொத்தம் 7 ஆண்டுகள் 2 மாதங்கள் 13 நாட்கள்
கேடான பலன்கள் அதிகமாக இருக்கும்
ராகு தசை குரு புத்தி - 2 ஆண்டுகள் 4 மாதங்கள் 24 நாட்கள்
ராகு தசை சனி புத்தி - 2 ஆண்டுகள் 10 மாதங்கள் 6 நாட்கள்
ராகு தசை சுக்கிர புத்தி - 3 ஆண்டுகள்
ராகு தசை புதன் புத்தி - 2 ஆண்டுகள் 6 மாதங்கள் 18 நாட்கள்
ஆக மொத்தம் 10 ஆண்டுகள் 9 மாதங்கள் 18 நாட்கள்
ஒரளவிற்கு நன்மையான பலன்கள் இருக்கும்
பரணி, பூரம், பூராடம் (சுக்கிரனின் நட்சத்திரங்கள்)
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் (சூரியனின் நட்சத்திரங்கள்)
ரோகிணி, அஸ்தம், திருவோணம் (சந்திரனின் நட்சத்திரங்கள்)
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் (செவ்வாயின் நட்சத்திரங்கள்)
திருவாதிரை, சுவாதி, சதயம் (ராகுவின் நட்சத்திரங்கள்)
ஆக மொத்தம் 15 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகு தசையைச் சந்திக்க நேரிடும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி (புதனின் நட்சத்திரங்கள்)
அசுவினி, மகம், மூலம் (கேதுவின் நட்சத்திரங்கள்)
ஆக மொத்தம் 12 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேது தசையைச் சந்திக்க நேரிடும்
சிலர் தங்களின் வயது காரணமாக இரண்டு (அதாவது ராகு & கேது) தசைகளையுமே சந்திக்க நேரிடும். அப்படிச் சந்திக்க நேரிடாதவர்களுக்குக் கூட ஒவ்வொரு கிரகத்தின் மகாதசையிலும் ராகு & கேதுவின் புத்திகளைச் சந்திக்க நேரிடும்.
மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்கு நட்பு ராசிகளாகும்.விருச்சிகம் உச்ச இடம். ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது
மேஷம், கடகம், சிம்மம், மகரம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்குப் பகையான இடங்களாகும். ரிஷபம் நீச இடமாகும். ஜாதகத்தில் இந்த 5 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கும்.
இவை அத்தனையும் பொதுப்பலன்கள். புத்தி நாதர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் 5ம் அதற்கும் மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், கெடுதல்கள் வெகுவாகக் குறைந்துவிடும் இவை அத்தனையையும் அலசித்தான் பலனைப் பார்க்க வேண்டும்.
குறுக்கு வழி?
தசா நாதனும், புத்திநாதனும் (அவற்றிற்கு உரிய கிரகங்கள்) ஜாதகத்தில் ஒருவருக்கொருவர், 6/8 பொஸிசனில் (நிலைமையில்) அல்லது 1/12 பொஸிசனில் (நிலைமையில்) இருப்பது நன்மையைத் தராது. இது அத்தனை தசா/புத்திகளுக்கும் பொருந்தும்!
விளக்கம் போதுமா நண்பரே?
-------------------------------------------
இன்றைய பொன்மொழி!
Never Miss the First Opportunity, Because the Second Opportunity
Will be Much More Difficult than First!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
present sir,
ReplyDeletevanakkam
ஐயா, வணக்கம்
ReplyDeleteபுதன் லக்கினத்தில் குரு 8ல் இருந்தால் குரு சுயபரல்கள் 5 உள்ளது புத தசை குரு புத்தி நன்றாக இருக்குமா?
ஐயா வெகு நாட்களுக்கு பிறகு எழுதும் இந்த மாணவனை ஞாபகம் உள்ளதா?
தங்கள் கேள்வி பதில்கள் பகுதி மிகவும் சூப்பர்
ReplyDelete/ / / / பலவிஷயங்கள் உள்ளன.
ReplyDeleteஒரு
கிரகத்தின் உச்ச
நீசத்தை வைத்து மட்டும்
அல்லது பரிவர்த்தனையை மட்டும்
வைத்து எதையும்
முடிவு செய்ய முடியாது
/ / / /
உண்மை தான்!
பன்னிரெண்டு பாவங்கள்,
ஒன்பது
கிரகங்கள் இருபத்தி எழு
நட்ச்சதிரங்கள், என்று கூட்டு
விளைவுகளை உள்
அடக்கியதே
ஜோதிடமாகும்.
தனிபட்ட முறையில், ஒரு
கிரகமோ அல்லது, ஒரு
பாவமோ, பலன் தர
முடியாது.
இதையும் தாண்டி
கர்மவினைகள்
என்று ஒன்று உள்ளது.
அதுவே
அனைத்து ஆத்மாக்களின்
ஆதிமூலமாகும்.
ஓம் சரவணபவ நம
//ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும்.//
ReplyDeleteWorking partner என்பதோடு life partnerக்கும் 7ம் வீடுதான். கணவன்/மனைவி அல்லது இவர்களுடன் தொடர்புடைய உறவுகள் என்னும் அணையில் இருந்தும் என்று சேர்த்துக் கொள்ளலாம்.
VANKAM PRESENT SIR
ReplyDelete//Blogger SCS SUNDAR said...
ReplyDeleteஐயா, வணக்கம்
புதன் லக்கினத்தில் குரு 8ல் இருந்தால் குரு சுயபரல்கள் 5 உள்ளது புத தசை குரு புத்தி நன்றாக இருக்குமா?
ஐயா வெகு நாட்களுக்கு பிறகு எழுதும் இந்த மாணவனை ஞாபகம் உள்ளதா?//
எனக்கு கூடுதுறையார் என்கிற ஞாபகம் இருக்கிறது. இல்லாவிட்டால் என் ஜாதகத்தில் மிகவும் பலவீனமாக இருக்கும் புதனைதான் குறை சொல்ல வேண்டும்.
நேற்று நான் ரியல் எஸ்டேட் பற்றி கேட்டதற்கு எனக்காகவே வந்த பதில்போல் இருந்தது இன்றைய பதிவு.
ReplyDeleteராகுவைப் பற்றியும் நிறைய விளக்கம். இந்த பகுதிகளை முன்பே சில முறை படித்திருந்தாலும், மீண்டும் படிக்கும் போது அதற்கு மற்றவர்கள் கொடுக்கும் கருத்துக்கள் மூலம் இன்னும் ஸ்வாரஸ்யம் கூடுகிறது.
//////பொதுவாக ராகு மகா திசை 80% ஜாதகர்களுக்கு ,மகிஷ்சியை தராது, நன்மைகள் அதிகம் செய்யாது./////
ReplyDeleteராகு திசையை நான் கடந்து வந்ததால் சொல்கிறென். எனக்கு ராகு பத்தில்(பூச நட்சதிர காலில்-கடகம்) இருந்து, சூரியனுடன் இருக்க திசை நடந்தது. அந்த பதினெட்டு ஆண்டுகளில் எனக்கு ஏறுமுகமாகவே இருந்தது. என்னை ஆளாக்கியது ராகு திசையே.
//ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும்.//
ReplyDeleteananth said...Working partner என்பதோடு life partnerக்கும் 7ம் வீடுதான். கணவன்/மனைவி அல்லது இவர்களுடன் தொடர்புடைய உறவுகள் என்னும் அணையில் இருந்தும் என்று சேர்த்துக் கொள்ளலாம்.
பல தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குதல் மூலம் வரும் பணத்திற்கு எந்த இடம்,எந்த கிரகம் செய்கிறது அய்யா.
11 க்கு உடையவன் 8 இல் இருந்தால் சொந்த தொழில் ஆகாது என்பது உண்மையா ? 11 க்கு உடையவனே 12 க்கும் உடையவனாகி 8 இல் இருந்தால் எப்படி கொள்வது ? சொந்த தொழிலா இல்லை அடிமை தொழிலா என்பதை எப்படி கண்டுபிடிப்பது.
ReplyDelete////Blogger arul said...
ReplyDeletenice post/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger sundari said..
ReplyDeletepresent sir,
vanakkam/////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
/////Blogger SCS SUNDAR said...
ReplyDeleteஐயா, வணக்கம்
புதன் லக்கினத்தில் குரு 8ல் இருந்தால் குரு சுயபரல்கள் 5 உள்ளது புத தசை குரு புத்தி நன்றாக இருக்குமா?
ஐயா வெகு நாட்களுக்கு பிறகு எழுதும் இந்த மாணவனை ஞாபகம் உள்ளதா?/////
28.6.2008ல் ஜோதிடப் பாடங்களை வகைப் ப்டுத்திக்கொடுத்ததை (http://scssundar.blogspot.in/2008/06/blog-post.html) மறக்க முடியுமா சுந்தர்? நீங்கள்தான் முன்பு (பவானி) கூடுதுறையில் இருந்து அடிக்கடி தொலைபேசியில் பேசுவீர்கள். அதற்குப் பிறகு தொழில் நிமித்தமாக கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றவர் எங்களை எல்லாம் மறந்து விட்டீர்கள். நாங்கள் மறக்கவில்லை! பழநிஅப்பன் அருளால் நல்ல நினைவாற்றல் உண்டு.
எதையும் மறப்பதற்கில்லை! நோ சான்ஸ்!
குரு திசையில் புதன் திசை இடமாற்றத்தைக் கொடுக்கும். அது தொழிலாக இருக்கலாம் அல்லது வசிக்கும் ஊராக இருக்கலாம்! ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்!
////Blogger SCS SUNDAR said...
ReplyDeleteதங்கள் கேள்வி பதில்கள் பகுதி மிகவும் சூப்பர்////
அதைவிட இந்தக் கேள்வி, பதில் பகுதி உங்களை மீண்டும் வகுப்பறைக்குள் இழுத்து வந்ததுதான் சூப்பர்!
////Blogger Bhogar said...
ReplyDelete/ / / / பலவிஷயங்கள் உள்ளன.
ஒரு கிரகத்தின் உச்ச நீசத்தை வைத்து மட்டும்
அல்லது பரிவர்த்தனையை மட்டும் வைத்து எதையும்
முடிவு செய்ய முடியாது
/ / / /
உண்மை தான்!
பன்னிரெண்டு பாவங்கள், ஒன்பது கிரகங்கள் இருபத்தி எழு
நட்ச்சதிரங்கள், என்று கூட்டு விளைவுகளை உள்
அடக்கியதே ஜோதிடமாகும்.
தனிபட்ட முறையில், ஒரு கிரகமோ அல்லது, ஒரு
பாவமோ, பலன் தர முடியாது.
இதையும் தாண்டி கர்மவினைகள்
என்று ஒன்று உள்ளது.அதுவே
அனைத்து ஆத்மாக்களின் ஆதிமூலமாகும்.
ஓம் சரவணபவ நம/////
பூர்வ புண்ணியத்தை விட்டு விட்டீர்களே!
////Blogger ananth said...
ReplyDelete//ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும்.//
Working partner என்பதோடு life partnerக்கும் 7ம் வீடுதான். கணவன்/மனைவி அல்லது இவர்களுடன் தொடர்புடைய உறவுகள் என்னும்
அணையில் இருந்தும் என்று சேர்த்துக் கொள்ளலாம்./////
உண்மைதான். ஆனந்தமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்!
////Blogger eswari sekar said...
ReplyDeleteVANKAM PRESENT SIR/////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
///Blogger ananth said...
ReplyDelete//Blogger SCS SUNDAR said...
ஐயா, வணக்கம்
புதன் லக்கினத்தில் குரு 8ல் இருந்தால் குரு சுயபரல்கள் 5 உள்ளது புத தசை குரு புத்தி நன்றாக இருக்குமா?
ஐயா வெகு நாட்களுக்கு பிறகு எழுதும் இந்த மாணவனை ஞாபகம் உள்ளதா?//
எனக்கு கூடுதுறையார் என்கிற ஞாபகம் இருக்கிறது. இல்லாவிட்டால் என் ஜாதகத்தில் மிகவும் பலவீனமாக இருக்கும் புதனைதான் குறை
சொல்ல வேண்டும்./////
நீங்கள் கணக்காய்வாளர். புதன் எப்படி பலவீனமாக இருக்கும் சொல்லுங்கள் ஆனந்த்!
////Blogger thanusu said...
ReplyDeleteநேற்று நான் ரியல் எஸ்டேட் பற்றி கேட்டதற்கு எனக்காகவே வந்த பதில்போல் இருந்தது இன்றைய பதிவு.
ராகுவைப் பற்றியும் நிறைய விளக்கம். இந்த பகுதிகளை முன்பே சில முறை படித்திருந்தாலும், மீண்டும் படிக்கும் போது அதற்கு மற்றவர்கள் கொடுக்கும் கருத்துக்கள் மூலம் இன்னும் ஸ்வாரஸ்யம் கூடுகிறது.////
சுவாரசியம் இல்லை என்றால் படிக்க முடியாது. நானே படிக்க மாட்டேன்!
////Blogger thanusu said...
ReplyDelete//////பொதுவாக ராகு மகா திசை 80% ஜாதகர்களுக்கு ,மகிஷ்சியை தராது, நன்மைகள் அதிகம் செய்யாது./////
ராகு திசையை நான் கடந்து வந்ததால் சொல்கிறென். எனக்கு ராகு பத்தில்(பூச நட்சதிர காலில்-கடகம்) இருந்து, சூரியனுடன் இருக்க திசை நடந்தது. அந்த பதினெட்டு ஆண்டுகளில் எனக்கு ஏறுமுகமாகவே இருந்தது. என்னை ஆளாக்கியது ராகு திசையே./////
சிலரை ராகு தூக்கிக் கொண்டு போய் உச்சத்தில் உட்காரவைப்பான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கையில் அது நடந்தது. 1952ல் பராசக்தி படம் வெளியானபோது அவருக்கு ராகு திசை ஆரம்பம். 18 ஆண்டுகள் - அதாவது 1970ஆம் ஆண்டுவரை பல வேற்றிப் படங்களை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ராகுதிசைதான்!
/////Blogger thanusu said...
ReplyDelete//ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும்.//
ananth said...Working partner என்பதோடு life partnerக்கும் 7ம் வீடுதான். கணவன்/மனைவி அல்லது இவர்களுடன் தொடர்புடைய
உறவுகள் என்னும் அணையில் இருந்தும் என்று சேர்த்துக் கொள்ளலாம்.
பல தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குதல் மூலம் வரும் பணத்திற்கு எந்த இடம்,எந்த கிரகம் செய்கிறது அய்யா./////
2ஆம் வீடு பணம். 6ஆம் வீடு வேலைக்காரர்கள். 10ஆம் வீடு தொழில். இம்மூன்றும் நன்றாக அமையப்பெற்ற ஜாதகன்,பல தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குதல் மூலம் ஏகத்தும் பணம் சம்பாதிப்பான்! அதற்குத் தன ஜாதகம் என்று பெயர்! முன்பே எழுதியுள்ளேன்!
////Blogger Mahudees said...
ReplyDelete11 க்கு உடையவன் 8 இல் இருந்தால் சொந்த தொழில் ஆகாது என்பது உண்மையா ? 11 க்கு உடையவனே 12 க்கும் உடையவனாகி 8 இல் இருந்தால் எப்படி கொள்வது ? சொந்த தொழிலா இல்லை அடிமை தொழிலா என்பதை எப்படி கண்டுபிடிப்பது.////
பத்தாம் அதிபதி 12ல் அமர்ந்தால் வேலைக்குத்தான் செல்ல வேண்டும்! அல்லது 8ல் அமர்ந்தாலும் சொந்தத் தொழில் ஆகாது. அப்படியே செய்தாலும் கமிஷன் அடிப்படையில் - அதாவது சொந்த முத்லீடு இன்றி சுய தொழில் செய்யலாம்!
கூடுதுறையார் மீண்டும் வகுப்பறைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteமுடிந்தால் அவரது பழைய பணியான வகுப்பறைப் பாடங்களை மீதம் உள்ளவற்றையும் வகைப்படுத்தி அவருடைய வலைப்பூவை அப்டேட் செய்து கொடுக்க எல்லா மாணவர்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.காபி பேஸ்ட் செய்ய முடியாமல் 'நோ ரைட் க்ளிக்' பூட்டுப் போட வேண்டும்.இவையெல்லாம் நடக்க ஆண்டவன் அருள், சுந்தரின் நேரமும் உழைப்பும், ஐயாவின் அனுமதி மூன்றும் வேன்டும்.
என்ன அய்யா இது. விருசிகத்தில் உச்சம் என்றால் ரிஷபத்தில் நீசம். ராகும் கேதுவும் என்றுமே சேராத பங்காளிகள். சரி நட்பு வீட்டுக்கு போகலாம் என்றால் நேரதிரே பகை வீடு. மிதுனமும் தனுசில் இருந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம் என்று தோனுகிறது. என் தம்பி ஜாதகத்தில் கேது (ஐந்தாம் இடத்து குருவுடன்) உச்ச வீட்டில் ஆனால் பரல்களோ வெறும் பதினெட்டு. ராகுவோ பதினொன்றாம் வீட்டில் ரிஷபத்தில் நீசமாக இருந்தாலும் சுபர்கள் அவரை பார்பதினால் சூப்பர் ராஜாவாக 41 மதிப்பெண் பெற்று பன்னிரண்டு வீடுகளில் முதல் மார்க் வாங்கி முதல் இடத்தில இருக்கிறார். என்ன சொல்வது? அவனுக்கு ராகு புத்தி புதன் திசை. ஒன்றும் பெரிதாக (அவனளவில்) நடக்கவில்லை. அதேபோல் மிக மோசமும் என்றும் இல்லை. அவன் திருமணம் என்ற பெரிய விஷயம் உள்ளது. அப்போதான் ராகு என்ன செய்கிறார் என்று தெரியும்.
ReplyDeleteஅருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDelete//ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது//
என் ஜாதகத்தில் ராகுபகவான் உச்சம். ஆனால் ஒவ்வொரு திசையிலும் ராகு புத்தி வரும்போது, தலைவர் ஆட்டோவில் அல்ல, டெம்போவில் ஆள் கூட்டிவந்து "உதைத்திருவிழா" நடத்துகிறார். நீசனாயிருந்தாலும் ஞானகாரகன் கேதுபகவானின் அருட்பெருங்கருணை மழையெனப்பொழிவதால் பக்தியின் துணைகொண்டு கடந்து வருகிறேன். எனக்கு கேதுதிசை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
//நீங்கள் கணக்காய்வாளர். புதன் எப்படி பலவீனமாக இருக்கும் சொல்லுங்கள் ஆனந்த்!//
ReplyDeleteபலவீனம் என்றது அவரின் ஷட்பலம் (% strength) 100%ம் குறைவாக 94% என்று இருப்பதைச் சொன்னேன். இருப்புனும் சுய பரல் 7 அதனைச் சமன் செய்து விட்டது. என் ஜாதகத்தில் சில இழப்புகளும், அதற்குத் தகுந்த இழப்பீடுகளும் இருக்கின்றன.
//ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது//
ReplyDeleteஜாதகர் எனும் சொல்லும் போது ஆண் ,பெண் சமமாகிறார்கள். ராகு,கேதுவை பொறுத்தவரை ஆண்,பெண்,ஆகியோருக்கு சம பலன் கொடுக்குமா.
ராகு,கேது ஏழாம் இடம்,எட்டாம் இடம் இருக்கும் போது , பெண்ணுக்கு மட்டும் பலன் மாறுமா அல்லது ஆணுக்கும் அதே பலனை கொடுக்குமா அய்யா.
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteவெறும் கையில் முழம் முடியாது
என்ற பழமொழிக்கு ஏற்ப ஜாதகத்தில்
2 விடு மற்றும் 11விடு நன்ற இருக்கவேண்டும், இருந்தால்தான் ஆண்ட
குண்டங்களில் தண்ணீர் பிடிக்கமுடியும்
அருமையான கருத்துகள் நமது குருவிடம் நிறைவேள்ளன அதை நமக்கு வழங்கிள்ளார்
நன்றி குருவே
///SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteகுரு திசையில் புதன் திசை இடமாற்றத்தைக் கொடுக்கும். அது தொழிலாக இருக்கலாம் அல்லது வசிக்கும் ஊராக இருக்கலாம்! ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ///
குரு திசை புதன் புத்தி முடியப்போகும் தறுவாயில் எனக்கு இடமாற்றம் நிகழ்ந்தது, ஆனால் அந்த மாற்றம் கனவிலோ கற்பனையிலோ நினைக்காத மாற்றமாக இருந்தது. வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. நினைத்துப் பார்த்தால் அந்த இரண்டு ஆண்டுகள்தான் நான் வாழ்வில் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, கவலைகளற்று இருந்திருப்பேன் எனத் தோன்றுகிறது.
கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்
விழுந்த எண்ணங்களின் தடங்கள் இருக்கின்றன
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
(பாடல் வரிகள் கடன் வாங்கியது)
பொன்மொழியும் நன்றாக இருக்கிறது, ஆனால் முதல் வாய்ப்பிற்கே ததிங்கினத்தோம் என்றால்?
அய்யா வகுப்பறை என்றும் போல் இன்றும் அருமை!!!
ReplyDeleteஇன்னும் இரண்டு ஆண்டுகளில் நீச ராகு தசையில் அடி எடுத்து வைக்க போகும் என்னை மிரள வைத்து விட்டீர்கள்...
அது சரி ராகு திசையில் தீய பலன்கள் மட்டும் தான் நடை பெருமா அல்லது முக்தி கிடைக்க ஏதேனும் உதவி புரிவாரா உயர் திரு ராகு பகவான்...
Parvathy Ramachandran said...
ReplyDeleteஎன் ஜாதகத்தில் ராகுபகவான் உச்சம். ஆனால் ஒவ்வொரு திசையிலும் ராகு புத்தி வரும்போது, தலைவர் ஆட்டோவில் அல்ல, டெம்போவில் ஆள் கூட்டிவந்து "உதைத்திருவிழா" நடத்துகிறார். நீசனாயிருந்தாலும் ஞானகாரகன் கேதுபகவானின் அருட்பெருங்கருணை மழையெனப்பொழிவதால் பக்தியின் துணைகொண்டு கடந்து வருகிறேன். எனக்கு கேதுதிசை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.//////////
என் ஜாதகத்தில் கேது பகவான் உச்சம் (ராகு நீசம்), தங்களின் மனிதன் தேய்வமகலாம் படைப்பு எனது என்ன ஓட்டங்களை மிகவும் மாறச்செய்துவிட்டது... நன்றி நன்றி...
ராகு திசை ஒருவருக்கு நன்மை
ReplyDeleteசெய்யுமா,அல்லது தீமை செய்யுமா
என்பதை தெரிந்து கொள்வதற்க்கு,
ஒரு எளிய வழி இருக்கிறது.
அதாவது ராகு இருக்கும் வீட்டின்
அதிபதி தன் வீட்டையே,(ராகுவை)
பார்க்க வேண்டும்.அல்லது ராகுவோடு
சேர்ந்து இருக்க வேண்டும்.
இப்படி இருந்தால்,பெரும்பாலும்
ராகு திசை நன்மையே செய்கிறது.
ஓம் சரவணபவ நம
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteகூடுதுறையார் மீண்டும் வகுப்பறைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
முடிந்தால் அவரது பழைய பணியான வகுப்பறைப் பாடங்களை மீதம் உள்ளவற்றையும் வகைப்படுத்தி அவருடைய வலைப்பூவை அப்டேட் செய்து கொடுக்க எல்லா மாணவர்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.காபி பேஸ்ட் செய்ய முடியாமல் 'நோ ரைட் க்ளிக்' பூட்டுப் போட வேண்டும்.இவையெல்லாம் நடக்க ஆண்டவன் அருள், சுந்தரின் நேரமும் உழைப்பும், ஐயாவின் அனுமதி மூன்றும் வேன்டும்./////
இது திறந்தவெளி வகுப்பு. என் அனுமதி தேவையில்லை. நீங்கள் கூட அதைச் செய்யலாம்!
/////Blogger கலையரசி said...
ReplyDeleteஎன்ன அய்யா இது. விருசிகத்தில் உச்சம் என்றால் ரிஷபத்தில் நீசம். ராகும் கேதுவும் என்றுமே சேராத பங்காளிகள். சரி நட்பு வீட்டுக்கு போகலாம் என்றால் நேரதிரே பகை வீடு. மிதுனமும் தனுசில் இருந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம் என்று தோனுகிறது. என் தம்பி ஜாதகத்தில் கேது (ஐந்தாம் இடத்து குருவுடன்) உச்ச வீட்டில் ஆனால் பரல்களோ வெறும் பதினெட்டு. ராகுவோ பதினொன்றாம் வீட்டில் ரிஷபத்தில் நீசமாக இருந்தாலும் சுபர்கள் அவரை பார்பதினால் சூப்பர் ராஜாவாக 41 மதிப்பெண் பெற்று பன்னிரண்டு வீடுகளில் முதல் மார்க் வாங்கி முதல் இடத்தில இருக்கிறார். என்ன சொல்வது? அவனுக்கு ராகு புத்தி புதன் திசை. ஒன்றும் பெரிதாக (அவனளவில்) நடக்கவில்லை. அதேபோல் மிக மோசமும் என்றும் இல்லை. அவன் திருமணம் என்ற பெரிய விஷயம் உள்ளது. அப்போதான் ராகு என்ன செய்கிறார் என்று தெரியும்/////.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு நல்ல பெண்ணாகப் பாருங்கள். திருமணம் முடிந்துவிடும்!
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteஅருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி.
//ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது//
என் ஜாதகத்தில் ராகுபகவான் உச்சம். ஆனால் ஒவ்வொரு திசையிலும் ராகு புத்தி வரும்போது, தலைவர் ஆட்டோவில் அல்ல, டெம்போவில் ஆள் கூட்டிவந்து "உதைத்திருவிழா" நடத்துகிறார். நீசனாயிருந்தாலும் ஞானகாரகன் கேதுபகவானின் அருட்பெருங்கருணை மழையெனப்பொழிவதால் பக்தியின் துணைகொண்டு கடந்து வருகிறேன். எனக்கு கேதுதிசை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை./////
ஒரு தலைவன் (இறைவன்) இருக்கிறான் மயங்காதே! என்று துணிவுடன் இருங்கள்!
////Blogger ananth said...
ReplyDelete//நீங்கள் கணக்காய்வாளர். புதன் எப்படி பலவீனமாக இருக்கும் சொல்லுங்கள் ஆனந்த்!//
பலவீனம் என்றது அவரின் ஷட்பலம் (% strength) 100%ம் குறைவாக 94% என்று இருப்பதைச் சொன்னேன். இருப்புனும் சுய பரல் 7 அதனைச் சமன் செய்து விட்டது. என் ஜாதகத்தில் சில இழப்புகளும், அதற்குத் தகுந்த இழப்பீடுகளும் இருக்கின்றன.////
அதானே! இழப்புகளுக்கு இழப்பீடுகள் இல்லை என்றால் 337 கணக்கு சரியாக வராதே சுவாமி!
////Blogger thanusu said...
ReplyDelete//ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது//
ஜாதகர் எனும் சொல்லும் போது ஆண் ,பெண் சமமாகிறார்கள். ராகு,கேதுவை பொறுத்தவரை ஆண்,பெண்,ஆகியோருக்கு சம பலன் கொடுக்குமா.
ராகு,கேது ஏழாம் இடம்,எட்டாம் இடம் இருக்கும் போது , பெண்ணுக்கு மட்டும் பலன் மாறுமா அல்லது ஆணுக்கும் அதே பலனை கொடுக்குமா அய்யா./////
கிரகங்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லை. அனைவரும் சமம்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
வெறும் கையில் முழம் முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஜாதகத்தில் 2 விடு மற்றும் 11விடு நன்றாக் இருக்கவேண்டும், இருந்தால்தான் அண்டா, குண்டாக்களில் தண்ணீர் பிடிக்கமுடியும்
அருமையான கருத்துகள் நமது குருவிடம் நிறையவேயுள்ளன அதை நமக்கு வழங்கிள்ளார்
நன்றி குருவே////
செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். நம்மைப் படைத்த இறைவன் நமமைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையும் வேண்டும்!
////Blogger தேமொழி said...
ReplyDelete///SP.VR. SUBBAIYA said...
குரு திசையில் புதன் திசை இடமாற்றத்தைக் கொடுக்கும். அது தொழிலாக இருக்கலாம் அல்லது வசிக்கும் ஊராக இருக்கலாம்! ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ///
குரு திசை புதன் புத்தி முடியப்போகும் தறுவாயில் எனக்கு இடமாற்றம் நிகழ்ந்தது, ஆனால் அந்த மாற்றம் கனவிலோ கற்பனையிலோ நினைக்காத மாற்றமாக இருந்தது. வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. நினைத்துப் பார்த்தால் அந்த இரண்டு ஆண்டுகள்தான் நான் வாழ்வில் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, கவலைகளற்று இருந்திருப்பேன் எனத் தோன்றுகிறது.
கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்
விழுந்த எண்ணங்களின் தடங்கள் இருக்கின்றன
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
(பாடல் வரிகள் கடன் வாங்கியது)
பொன்மொழியும் நன்றாக இருக்கிறது, ஆனால் முதல் வாய்ப்பிற்கே ததிங்கினத்தோம் என்றால்?/////
இல்லை நிறைய வாய்ப்புக்களை இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளார். அதை நீங்கள் முறையாகவும் பயன் படுத்திக்கொண்டுள்ளீர்கள். என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கே சொல்ல முடியாது. தனி மின்னஞ்சலில் வாருங்கள்
////Blogger Pandian said...
ReplyDeleteஅய்யா வகுப்பறை என்றும் போல் இன்றும் அருமை!!!
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நீச ராகு தசையில் அடி எடுத்து வைக்க போகும் என்னை மிரள வைத்து விட்டீர்கள்...
அது சரி ராகு திசையில் தீய பலன்கள் மட்டும் தான் நடை பெருமா அல்லது முக்தி கிடைக்க ஏதேனும் உதவி புரிவாரா உயர் திரு ராகு பகவான்.../////
உங்களுக்கு என்ன வயதாகிறது? அதற்குள் எதற்கு முக்தி?
கீழ்க்கண்ட பாடலை தினமும் 10 முறை பாராயணம் செய்யுங்கள் (படியுங்கள்)
"சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து விட்ட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை (சின்ன சின்ன ஆசை) "
"மல்லிகைப்பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை
கார் குழலில் உலகைக் கட்டி விட ஆசை"
"சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை. " (சின்ன சின்ன ஆசை)
////Blogger Bhogar said...
ReplyDeleteராகு திசை ஒருவருக்கு நன்மை செய்யுமா,அல்லது தீமை செய்யுமா என்பதை தெரிந்து கொள்வதற்க்கு,ஒரு எளிய வழி இருக்கிறது.
அதாவது ராகு இருக்கும் வீட்டின் அதிபதி தன் வீட்டையே,(ராகுவை) பார்க்க வேண்டும்.அல்லது ராகுவோடு
சேர்ந்து இருக்க வேண்டும். இப்படி இருந்தால்,பெரும்பாலும் ராகு திசை நன்மையே செய்கிறது.
ஓம் சரவணபவ நம////
அது எளிய வழி அல்ல! பெரும்பாலும் என்னும் சொல்லைப்போட்டு தப்பித்துக்கொண்டுவிட்டீர்கள்!
//எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு நல்ல பெண்ணாகப் பாருங்கள். திருமணம் முடிந்துவிடும்!//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் அய்யா. படித்த பெண் , ஜாதகம் ஒத்து வந்தால் போதும் என்று நினைக்கிறோம். நாங்கள் பார்த்தால் போதும் என்று வரும வரன் ஜாதகம் ஒத்து வரவில்லை. (முக்கியமாக தாலி பொருத்தம் அமையவில்லை). இரு வீட்டார் சார்பில் பார்க்கும் பொழுது எல்லாம் தகைந்து வரும் வேளையில் ஏதோ உறவுகளால் களைந்து விடுகிறது. இப்படியே நான்கு ஐந்து இடங்கள் தட்டிவிட்டது. வருடமும் இரண்டு ஆகி விட்டது. தம்பிக்கு என்று தனியாக ஜாதகம் பார்க்கும் பொழுது , கல்யான யோகம் இருக்கிறது என்றே சொல்லுகிறார்கள். திக்கு தெரியாமல் இருக்கிறோம் அய்யா.
ஆனால் தம்பிக்கு என்று பார்க்க போய் இப்போ உறவுகளில் இரண்டு பெண்களுக்கு திருமணம் என்னால் முடிந்து உள்ளது. அந்த வகையில் எனக்கு மிக பெரிய சந்தோசம்.
ReplyDeleteஅதனால் துணிந்து என் வரையில் நன்றாக தெரிந்தவர்களுக்கு வரன் பற்றிய சிபாரிசுகளை செய்து கொண்டு இருக்றேன்.
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteமிகவும் சரியாக கூறி உள்ளீர்கள் ஐயா! என்னுடைய ஜாதகமும் நிச பங்க ராஜ யோக ஜாதகம் தான் முட்டி மோதி எப்படியோ MBA வரை பாஸ் ஆகிவிட்டு Phd செய்யலாம் என்று இருக்கின்றேன் ஐயா!.
மேலும் 57 வயதில் வரும் ராகு திசையை கூறி இப்பமே வயிற்ரை கலக்குகின்றிகளே ஐயா! இது நியமா ஐயா ?
ஐயா...இன்றைய கேள்விகளுக்கு நீண்ட விளக்கங்கள். மிகவும் உபயோகமான தகவல்கள்...மிக்க நன்றி...
ReplyDelete