மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

28.5.12

Astrology யாருடைய ஆதிக்கம் செல்லும்?


படகு கவிழாது. ஆசாமிக்கு ஆயுள்காரகன் உச்சமாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யாருடைய ஆதிக்கம் செல்லும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 17

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினேழு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.67
முருகன் அடிமை சரவணன்

மரியாதைக்குரிய வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
இரண்டு சந்தேகங்கள். கேட்கலாமா?

1.அதாவது,என் ஜாதகத்தில்,மீன லக்னம் நான்கில் செவ்வாய் ஐந்தில் சூரியன் ராகு ஆறில் புதன்ஏழில் குரு சுக்கிரன் சனி பதினொன்றில் சந்திரன் கேது சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருந்தால் சூரிய கிரகணத்தில் பிறந்ததாக அர்த்தம் என்று எதிலோ படித்த ஞாபகம். ஆனால் என் ஜாதகத்தில் சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் இணைந்திருக்கிறது. இது என்ன வகை என்று சொல்லுங்களேன்?

உடல்காரகன் சூரியனுடன் ராகுவும், மனகாரகன் சந்திரனுடன் கேதுவும் சேர்ந்திருப்பது நல்ல வகையாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது:-))))))

ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு:
1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)

2.ஒரு ஜாதகன் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்கமா அல்லது பெண்ணாதிக்கமா என்பதைக் கண்டறிய வாய்ப்பிருக்கிறதா?
நன்றியுடன்,
முருகன் அடிமை சரவணன்

அது அமையும் மனைவியைப் பொறுத்து உள்ளது. பெண் சகிப்புத்தன்மை உடையவர் என்றால் ஆணாதிக்கத்தைப் பொறுத்துக்கொள்வார். இல்லையென்றால், ஆதிக்கம் செய்பவர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று உதை வாங்க வேண்டியதிருக்கும்.

ஜாதகத்தில் லக்கினத்தைவிட 7ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். இல்லை என்றால் நீங்கள் நல்ல கணவனாக இருக்க வேண்டியதுதான். புரிந்ததா?
----------------------------------------------------
email.No.68
S.குமார். ஈரோடு.

ஐயா,
கேள்வி கேட்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.
எனது கேள்விகள் .
1) பொது தொண்டு செய்யும் எண்ணம் யார் யாருக்கெல்லாம் அமையும்? 2) லக்ன அதிபதியும் , 5 ம் இட அதிபதியும் கேந்தரத்தில் இருந்தால் இந்த அமைப்பு உண்டா?

பொதுத்தொண்டில் இரண்டுவகைகள் உள்ளன. பணத்தைச் செலவழித்துச் செய்யும் தொண்டுகள். பணம் இல்லாமல் உடல் உழைப்பை வைத்துச் செய்யப்படும் தொண்டுகள். இரண்டிற்குமே முதலில் நல்ல மனம் வேண்டும். அதற்கு ஜாதகத்தில் மனகாரகன் சந்திரனும், ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். அத்துடன் கர்மகாரகன் சனியும் நன்றாக இருப்பவர்கள் உடல் உழைப்பால் பொதுத் தொண்டுகளைச் செய்வார்கள்.

பணத்தை வைத்து பல தர்மங்களைச் செய்வதற்கு, 1, 5, 9ஆம் வீடுகளும் அதன் அதிபதிகளும் நன்றாக இருக்க வேண்டும்! அப்படி அமைப்புள்ள ஜாதகங்கள் தர்ம ஜாதகம் எனப்படும்!
-------------------------------------
email.No.69
கோபி கார்த்திகேயன், வடினார், குஜராத்

MY DOUBTS:
1) 6,8,12 VEEDUGALIN ADHIBHADHIGAL ENGU SENDRU AMARNDHALUM NANMAI ILLAI OK.
SURIYAN CHANDHIRAN ai THAVIRA SEVVAI, SUKRAN, BHUDHAN, GURU, & SANI KU THALA 2U VEEDUGAL ALLAVA. 6,8,12 VEEDUGAL INDHA 5 GRAHANGALIL 1 in VEEDAGA IRUNDHU MATRORU VEEDU NANMAI PAYAKUM VEEDAGA IRUNDHAL ENNA PALAN KIDAIKUM AYYA..

EXAMPLE: FOR MIDHUNA LAGNAM SUKRAN, 5TH (POORVAPUNYA) & 12TH (LOSS) VEETIN ADHIBHADHI APDI IRUKA AVAR ENGU SENDRU AMARNDHALUM THEEMAI ENDRUM NANMAI ENDRUN KOORA MUDIYADHU ALLAVA? MIXED RESULT KIDAIKUMA? NANMAI MATTUMAE KIDAIKA VAENDUM ENDRAL AVAR 5 il AATCHI PERA VAENDUMA?

கலவையான பலன்கள் கிடைக்கும்! உங்கள் மொழியில் சொன்னால் Mixed Results

2) 6,8,12 AGIYA VEEDUGAL MARAIVIDANGAL OK. ANGU SUBHA GRAHANGAL AMARAKOODADHU OK. AMARNDHAL NANMAI ku MARAGA THEEMAI PAYAKUM ALLAVA. ANDHA MARAIVIDANGALIL ASUBHA GRAHANGAL AMARNDHAL THEEMAI IRATIPPU (DOUBLE) AGUMA?

ஆமாம். அதன் வலிமையைப் பொறுத்து அளவு வேறுபடும்!

3) 8il SEVVAI AMARNDHAL MATHIMA VAYADHILAEYAE SIVANADI SAERA NAERIDUM ENDRU KOORI IRUNDHEERGAL. 8 am VEETIN ADHIBHADHI UCHCAM PETRALO, 8 il SEVVAI UCHCHAM PETRALO MAERKOORIYA PALAN ADIPATTU POGUMA? ILLAI ADHAI VIDA SERIOUS MATTER AAGIVIDUMA AYYA.

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் இன்னும் எழுதவில்லை. இதெல்லாம் அதில் வரும். பொறுத்திருங்கள்!
--------------------------------------------
email.70
செந்தில்குமார் செல்வராஜன்

ஐயா வணக்கம்
Thanks for Question & Answer Part,
Q1. When you published printed books ( Astrology Subject)?

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிவரும். அச்சாகி வந்தவுடன் முறையான அறிவிப்பு பதிவில் வெளிவரும். பொறுத்திருங்கள்!

Q2. தாங்கள், பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார். என்று கூறியுள்ளிர்கள். In விருச்சக லக்கினத்திற்கு tenth house சிம்ம லக்னம் [27]. இங்கு சூரியன் [7] மற்றும் சனி [6]. இங்கு சூரியன் உச்சம் பெற்று இருந்தாலும் , துன்பங்கள் ஏற்படுமா? in second house Guru[6] also atchi.

பொதுவிதியை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். எந்தகிரகமும் உச்சமாகியும், அதிக பரல்களுடனும் இருந்தால், விதிவிலக்கு உண்டு. லக்கின அதிபதி அதிபதி செவ்வாய் எங்கே இருக்கிறார்? அவர் முக்கியமில்லையா? இங்கு சூரியன் என்றால் எங்கே? நீங்கள் சொல்லியுள்ளபடி சூரியன் சிம்மத்தில் இருக்கிறார் என்றால், அவர் அங்கே எப்படி உச்சம் பெறுவார்? சூரியன் உச்சமாவது மேஷத்தில் அல்லவா? என்ன குழப்பம். சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டாமா?

Q3. Please Explain - Ragu Dasu - செவ்வாய் புத்தியில் சுய தொழில் தொடங்கலாமா?

பணம் இல்லாத சுய தொழில் என்றால் எப்போது வேண்டுமென்றாலும் துவங்கலாம். பண முதலீட்டுடன் சுய தொழில் என்றால், ராகு தசையில் வேண்டாம்!

Q4. in rasi chart - Guru[5] & chandran [7] in first house - ரிஷபம் [32] but here guru is enemy, இந்த ஜாதகருக்கு guru dasa நல்லபடியாக இருக்குமா?

குரு ஐந்து பரல்களுடன் இருப்பதால் குரு தசை நன்மைகளை உடையதாக இருக்கும்! அத்துடன் ரிஷபத்தில் சந்திரன் உச்சம். அவருடைய புத்தியும் நன்மைகளை உடையதாக இருக்கும்!
-------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி
Genius does what it must and talent does what it can.
--------------------------------------------------------
 
வாழ்க வளமுடன்!


21 comments:

eswari sekar said...

nanthan first vankam sir

kmr.krishnan said...

மீள்பதிவு கேள்வி பதில் படித்துப் பயன் அடைந்தேன்.நன்றி ஐயா!

வீட்டில் பெண் ஆதிக்கமா ஆண் ஆதிக்கமா என்ற கேள்விக்குஒரு ஆலோசனை:
எந்த ஜாதகத்தில் சனி செவ்வாய் ஏழாம் இட‌த்து அதிபதியாக இருக்கிறதோ அந்த ஜாதகருக்கு துணைவர் அதிகாரம் வாய்ந்தவராக இருப்பர். கடகம்.சிம்மம்,ரிஷபம்,தனுசு லக்கினக்காரார்களுக்குத் துணைவராக அமைபவர்
வீட்டு நிர்வாகத்தைத் தான் எடுத்துக்கொண்டு அதிகாரம் செலுத்துவார்.

Unknown said...

என் மனைவிக்கு கடக லக்னம். இல்லத்தரசியாக அவர் தன் கடமைகளை நன்றாகதான் செய்கிறார். ஆயினும் எல்லா அதிகாரமும் என் கையில்தான் இருக்கிறது. (Male chauvinism?) நானாக விட்டுக் கொடுத்தாலும் அவர் எதையும் தன் கையில் எடுத்துக் கொள்வதில்லை.

Unknown said...

ராகு அல்லது கேதுவுடன் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் ஒரு குறிப்பிட்ட பாகையில் இருந்தால் அன்று சூரிய கிரணகமாக இருக்கும். ஒருவர் ராகுவுடனும், இன்னொருவர் கேதுவுடனும் 7க்கு 7ஆக இருந்தால அன்று நிச்சயம் சந்திர கிரகணம். ஒவ்வொரு கிரகணத்தின் போதும் சூரியன், சந்திரன், ராகு, கேது இவர்களின் ராசி சஞ்சாரத்தில் மேல் சொன்ன ஒற்றுமையிருக்கும்.

krishnar said...

வணக்கம்.
இலங்கையில் இரு மாதங்கள் தங்கி மீண்டும் வந்துள்ளேன்.
இனித்தான் உங்கள் கட்டுரைகளைப் படிக்கவேண்டும்.

I have read some Answers in Ilankai.

Krishnar

ஜே.எஸ்.டி. said...

ஐயா, எனக்கும் என் கணவர் இருவருக்குமே லக்கினதைவிடஏழாம் இடத்தில் பரல்கள் குறைவு. அதனால் எங்கள் வீடு மதுரையோ சிதம்பரமோ இல்லை போலிருக்கிறது. ஒருவேளை சகிப்புத் தன்மையுடன் யார் நல்ல துணையாக இருப்பது என்று ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம் போலிருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் என்று வைத்துக் கொள்கிறேன், பாடத்திற்கு நன்றி ஐயா.

வேப்பிலை said...

Attendance marked..!!

திருவாரூர் சரவணன் said...

ஆசிரியருக்கு வணக்கம்.

பணம் போட்டு சுய தொழில் தொடங்குவது என்றால் ராகுதசையில் தொடங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

நான் ராகுதசை, புதன் புத்தியில் சொந்தப்பணம் இல்லாமல் கடன் வாங்கிய பணத்தை வைத்து தொழில் தொடங்கி உள்ளேன்.

அதுதான் தொழில் நடத்துவதில் எக்கச்சக்க பொருள் விரயம் ஆகிக்கொண்டிருக்கிறதோ. (கடை தொடங்கும்போது இருந்த கடன் அப்படியே இருக்கிறது. ஆனால் தொழில் தொடங்கி 4 மாதத்தில் ஒரு கம்ப்யூட்டர் இரண்டாக உயர்ந்துள்ளது. இது மட்டும்தான் லாபம் என்று வைத்துக்கொள்ள வேண்டுமோ என்னவோ.

ஜே.எஸ்.டி. said...

கிரகணங்களைப் பற்றி ஆனந்த் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்தும்....
அத்துடன் ராகு கேது ஆகியவை பூமியின் நிழல் கிரகங்கள் என்பதையும் கருத்தில் கொண்டு எனக்குத் தோன்றியது ...
என்னைப் பொருத்தவரை ராகுவும் கேதுவும் பூமியின் எதிர் எதிர் பக்கங்களைக் குறிக்கிறது, அதனால்தான் சிறிதும் பாகை வித்தியாசமின்றி நேர்கோட்டில் இருக்கிறது என்று ஒரு மாதிரி புரிந்து கொண்டிருக்கிறேன். ராகு கேது இந்திய சோதிடத்தில் புவியின் நிலையைக் குறிக்கலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது. அதனாலேயே நாம் அதன் மீது இருந்து கொண்டு ராகு கேது எங்கிருக்கிறது என்று விண்வெளியில் காட்ட முடியாமல் இருக்கிறோம் போலிருக்கிறது. புவியின் நிலையை மற்ற கோள்களுடன் இணைத்து ராகு கேது மூலம் அதன் இயக்கத்தை கணக்கிட வகை செய்திருப்பதால் அது மிகவும் வியக்கத்தக்க, புத்திசாலித்தனமான முறையாக எனக்குத் தோன்றுகிறது. இதைப் பற்றி மேலும் மற்றவர்களுக்கு உள்ள கருத்தையும் அறிய விரும்புகிறேன்.

நான் தொடர்ந்து ஜகன்னாத ஹோராவில் கிரகண நிகழ்வுகளைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சியில் கிடைத்ததை கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

ஜே.எஸ்.டி. said...

Lunar eclipse:
A lunar eclipse occurs when the Moon passes behind the Earth so that the Earth blocks the Sun's rays from striking the Moon. This can occur only when the Sun, Earth, and Moon are aligned exactly, or very closely so, with the "Earth in the middle". Hence, a lunar eclipse can only occur the night of a full moon.

Please check this link for next lunar eclipse details....
http://en.wikipedia.org/wiki/June_2012_lunar_eclipse
This will be a partial eclipse visible at Moonrise
See visibility map (60 degree E Longitude (in between P4 and U4)

Oncoming Lunar Eclipse - it is a Partial Eclipse
Enter this data on Jahanatha Hora to see the planets positions...
Date: June 4, 2012
Time: 1:38:16
Time Zone: 5:30:00 (East of GMT)
Place: 80 E 17' 00, 13 N 05' 00"
Madras, India

*Ascending node = Rahu

you will get the following info:
Moon-GK 10 Sc 44' 41.14
Rahu-PK 10 Sc 44' 41.16
Ketu 10 Ta 44' 41.16

(note that Moon and Rahu with same Sc)
____________________________________________________________

Previous Lunar Eclipse - it was a Total Eclipse
Enter this data on Jahanatha Hora to see the planets positions...
Date: December 10, 2011
Time: 12:12:40
Time Zone: 5:30:00 (East of GMT)
Place: 80 E 17' 00, 13 N 05' 00"
Madras, India

*Descending node = Ketu

you will get the following info:
Moon-BK 20 Ta 06' 03.63"
Rahu-PK 20 Sc 06' 03.62"
Ketu 20 Ta 06' 03.62"

(note that Moon and Ketu with same Ta)

ஜே.எஸ்.டி. said...

Solar eclipse:
A Solar eclipse occurs when the Moon passes between the Sun and the Earth, and the Moon fully or partially blocks the Sun. This can happen only during a new moon, when the Sun and the Moon are in conjunction as seen from Earth. That is "Moon in the middle"Next solar eclipse is on November 13, 2012 as per
http://en.wikipedia.org/wiki/Solar_eclipse_of_November_13,_2012

This will be a total eclipse, Ascending node (Rahu with Sun)
Enter this data on Jahanatha Hora to see the planets positions...
BUT THIS DOES NOT MATCH....
Actual match is
Date: November 18, 2012
Time: 2:31:55
Time Zone: 5:30:00 (East of GMT)
Place: 80 E 17' 00, 13 N 05' 00"
Madras, India

Sun - PK 1 Sc 53' 35.51"
Rahu - Ak 1 Sc 53' 35.27"
Ketu 1 Ta 53' 35.27"
(note that Sun and Rahu with same Sc)
If someone knows the reason for this discrepancy...please explain


_______________________________
எனவே இது போன்ற ராகு, கேது, சூரியன், சந்திரன், பாகை தகவல்களை வைத்து தாங்கள் பிறந்த நேரத்தில் சூரிய சந்திர கிரகணங்களும் இருந்ததா என அறிய வாய்ப்புள்ளது

ஜே.எஸ்.டி. said...

http://en.wikipedia.org/wiki/Ascending_node

info. from wikipedia:
An orbital node is one of the two points where an orbit crosses a plane of reference to which it is inclined. An orbit which is contained in the plane of reference (called non-inclined) has no nodes.

The symbol of the ascending node is ☊ (Unicode: U+260A, ☊), and the symbol of the descending node is ☋(Unicode: U+260B, ☋). In medieval and early modern times the ascending and descending nodes were called the dragon's head and dragon's tail, respectively. These terms originally referred to the times when the moon crossed the apparent path of the sun in the sky.

Subbiah Veerappan said...

////Blogger eswari sekar said...
nanthan first vankam sir////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
மீள்பதிவு கேள்வி பதில் படித்துப் பயன் அடைந்தேன்.நன்றி ஐயா!
வீட்டில் பெண் ஆதிக்கமா ஆண் ஆதிக்கமா என்ற கேள்விக்குஒரு ஆலோசனை:
எந்த ஜாதகத்தில் சனி செவ்வாய் ஏழாம் இட‌த்து அதிபதியாக இருக்கிறதோ அந்த ஜாதகருக்கு துணைவர் அதிகாரம் வாய்ந்தவராக இருப்பர். கடகம்.சிம்மம்,ரிஷபம்,தனுசு லக்கினக்காரார்களுக்குத் துணைவராக அமைபவர்
வீட்டு நிர்வாகத்தைத் தான் எடுத்துக்கொண்டு அதிகாரம் செலுத்துவார்./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger ananth said...
என் மனைவிக்கு கடக லக்னம். இல்லத்தரசியாக அவர் தன் கடமைகளை நன்றாகதான் செய்கிறார். ஆயினும் எல்லா அதிகாரமும் என் கையில்தான் இருக்கிறது. (Male chauvinism?) நானாக விட்டுக் கொடுத்தாலும் அவர் எதையும் தன் கையில் எடுத்துக் கொள்வதில்லை./////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

/////Blogger ananth said...
ராகு அல்லது கேதுவுடன் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் ஒரு குறிப்பிட்ட பாகையில் இருந்தால் அன்று சூரிய கிரணகமாக இருக்கும். ஒருவர் ராகுவுடனும், இன்னொருவர் கேதுவுடனும் 7க்கு 7ஆக இருந்தால அன்று நிச்சயம் சந்திர கிரகணம். ஒவ்வொரு கிரகணத்தின் போதும் சூரியன், சந்திரன், ராகு, கேது இவர்களின் ராசி சஞ்சாரத்தில் மேல் சொன்ன ஒற்றுமையிருக்கும்.//////

தகவலுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger krishnar said...
வணக்கம்.
இலங்கையில் இரு மாதங்கள் தங்கி மீண்டும் வந்துள்ளேன்.
இனித்தான் உங்கள் கட்டுரைகளைப் படிக்கவேண்டும்.
I have read some Answers in Ilankai.
Krishnar/////

நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger தேமொழி said...
ஐயா, எனக்கும் என் கணவர் இருவருக்குமே லக்கினதைவிடஏழாம் இடத்தில் பரல்கள் குறைவு. அதனால் எங்கள் வீடு மதுரையோ சிதம்பரமோ இல்லை போலிருக்கிறது. ஒருவேளை சகிப்புத் தன்மையுடன் யார் நல்ல துணையாக இருப்பது என்று ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம் போலிருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் என்று வைத்துக் கொள்கிறேன், பாடத்திற்கு நன்றி ஐயா./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger அய்யர் said...
Attendance marked..!!////

நல்லது. நன்றி விசுவநாதன்!

Subbiah Veerappan said...

/////Blogger சரண் said..ஆசிரியருக்கு வணக்கம்.
பணம் போட்டு சுய தொழில் தொடங்குவது என்றால் ராகுதசையில் தொடங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நான் ராகுதசை, புதன் புத்தியில் சொந்தப்பணம் இல்லாமல் கடன் வாங்கிய பணத்தை வைத்து தொழில் தொடங்கி உள்ளேன்.
அதுதான் தொழில் நடத்துவதில் எக்கச்சக்க பொருள் விரயம் ஆகிக்கொண்டிருக்கிறதோ. (கடை தொடங்கும்போது இருந்த கடன் அப்படியே இருக்கிறது. ஆனால் தொழில் தொடங்கி 4 மாதத்தில் ஒரு கம்ப்யூட்டர் இரண்டாக உயர்ந்துள்ளது. இது மட்டும்தான் லாபம் என்று வைத்துக்கொள்ள வேண்டுமோ என்னவோ./////

எச்சரிக்கையாக இருங்கள். அவ்வளவுதான்!

Subbiah Veerappan said...

/////Blogger தேமொழி said...
கிரகணங்களைப் பற்றி ஆனந்த் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்தும்....
அத்துடன் ராகு கேது ஆகியவை பூமியின் நிழல் கிரகங்கள் என்பதையும் கருத்தில் கொண்டு எனக்குத் தோன்றியது ...
என்னைப் பொருத்தவரை ராகுவும் கேதுவும் பூமியின் எதிர் எதிர் பக்கங்களைக் குறிக்கிறது, அதனால்தான் சிறிதும் பாகை வித்தியாசமின்றி நேர்கோட்டில் இருக்கிறது என்று ஒரு மாதிரி புரிந்து கொண்டிருக்கிறேன். ராகு கேது இந்திய சோதிடத்தில் புவியின் நிலையைக் குறிக்கலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது. அதனாலேயே நாம் அதன் மீது இருந்து கொண்டு ராகு கேது எங்கிருக்கிறது என்று விண்வெளியில் காட்ட முடியாமல் இருக்கிறோம் போலிருக்கிறது. புவியின் நிலையை மற்ற கோள்களுடன் இணைத்து ராகு கேது மூலம் அதன் இயக்கத்தை கணக்கிட வகை செய்திருப்பதால் அது மிகவும் வியக்கத்தக்க, புத்திசாலித்தனமான முறையாக எனக்குத் தோன்றுகிறது. இதைப் பற்றி மேலும் மற்றவர்களுக்கு உள்ள கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
நான் தொடர்ந்து ஜகன்னாத ஹோராவில் கிரகண நிகழ்வுகளைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சியில் கிடைத்ததை கீழே பகிர்ந்து கொள்கிறேன்./////

கிரகண நிகழ்வுகளைப் பற்றிய உங்களது மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரி!