மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.5.12

Devotional கோவிலுக்குப் பொருள் என்னடா?

Devotional கோவிலுக்குப் பொருள் என்னடா?

முருகன் பாமாலை!

காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா!

(காவலுக்கு)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா!

(காவலுக்கு)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!

(காவலுக்கு)

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

(காவலுக்கு)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!

(காவலுக்கு)

படம்: மனிதனும் தெய்வமாகலாம்
பாடியவர்:  சீர்காழி கோவிந்தராஜன்
படலாக்கம்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி

 எல்லோர் மேலும் மதிப்பு வையுங்கள்
நல்லவர்கள் மகிழ்ச்சியைக் கொடுப்பார்கள்
மோசமானவர்கள் அனுபவத்தைக் கொடுப்பார்கள் 
அதி மோசமானவர்கள் பாடம் கற்பிப்பார்கள்
மேன்மை மிக்கவர்கள் இனிய நினைவுகளைக் கொடுப்பார்கள் 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

25 comments:

  1. இன்றைய பொழுதை பக்தி பரவசத்துடன் தொடங்குகிறோம். பாடல் நன்று. பொன்மொழி இதற்கு குறைந்ததல்ல. அதுவும் நன்று.

    ReplyDelete
  2. நல்ல பாடல் ஐயா,
    இதே பாடல் மெட்டில் எங்கள் பள்ளியில்

    "வேலுண்டு வினை தீர்க்க
    மயிலுண்டு வழி காட்ட
    கோவிலுக்கு சென்றேனடி - குமரன்
    கொலுவிருக்க கண்டேனடி"
    என்று ஒரு இறைவணக்கப் பாடலைப் பாடுவார்கள் என்பதாக ஞாபகம்.

    திரைப் படத்தில் அதே மெட்டினில் அமைதிருந்தார் குன்னக்குடி என்று நினைகிறேன்.
    எது முதலில் வந்தது என்று சரியாக நினைவில்லை.
    இந்தப் பாடல் ஒரு நல்ல தாலாட்டுப் பாடலாக இறுதியில் மாறிவிடும்.
    பாடலின் முழு வரிகளும் கீழே உள்ளது.

    *******************
    காவலுக்கு வேலுண்டு
    ஆடலுக்கு மயிலுண்டு
    கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
    நீயிருக்கும் இடம்தானடா!
    (காவலுக்கு)

    நதிகளிலும் மலர்களிலும்
    நடந்துவரும் தென்றலிலும்
    உன்முகம் கண்டேனடா - எங்கும்
    சண்முகம் நின்றானடா!

    ஓம் முருகா என்றவுடன்
    உருகுதடா உள்ளமெல்லாம்
    ஒருகணம் சொன்னேனடா - அங்கே
    சரவணன் வந்தானடா!
    (காவலுக்கு)

    தெய்வயாணை தேடிவந்தாளோ விழி வண்டோடு
    கந்தனுன்னைக் காண வந்தாளோ
    தெய்வயாணை தேடிவந்தாளோ விழி வண்டோடு
    கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
    பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

    ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
    குறமகள் வருவதில் முதல் மகள் கோபம் கொண்டாளே
    ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
    குறமகள் வருவதில் முதல் மகள் கோபம் கொண்டாளே

    இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா
    சோதனை எனக்கு வைத்தாயே - இரு பெண்ணாலே
    வேதனை உனக்கு வைத்தாயே
    என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே

    ஆறு கார்த்திகை பெண்களிடம்
    வளர்ந்தாய் முருகா தாலேலோ
    ஆறு கார்த்திகை பெண்களிடம்
    வளர்ந்தாய் முருகா தாலேலோ
    அழகிய தாமரை மலர்களிலே
    தவழ்ந்தாய் குமரா தாலேலோ
    தாலேலோ நீ தாலேலோ
    தாலேலோ நீ தாலேலோ

    ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
    பாடுவதும் வள்ளி அல்லடா - என் கந்தையா
    ஏழையுடன் பள்ளி கொள்ளடா!

    திருப்பாதம் நான் தாங்க தாலேலோ
    இந்தப் புவியாவும் நீ தாங்க தாலேலோ
    கந்தையா வேலையா தாலேலோ
    என் கந்தையா முருகையா தாலேலோ
    நீ தாலேலோ நீ தாலேலோ
    *******************

    இப்பாடலில் "தெய்வயாணை தேடிவந்தாளோ ......என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே" பகுதியை நீக்கியிருதால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியதுமுண்டு.

    தமிழில்தான் கடவுளை அன்புடன்(?) "வாடா போடா" என்றும் "வாடி போடி" என்றும் அழைபார்களோ?
    "சொல்லடி அபிராமி" மற்றொரு உதாரணம்.
    பாடலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. குருவிக்கு வணக்கம்

    இன்று பக்தியுடன் காலை பாடம்

    முருகன் அடிமை

    நன்றி குருவே

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உள்ளேன் அய்யா. நிறைய நேரம் ஆகிவிட்டதால் , நான் attendence கொடுத்துவிட்டு தூங்க செல்கிறேன்.
    Seattle kalai

    ReplyDelete
  6. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

    ReplyDelete
  7. தேமொழி said...
    ///தமிழில்தான் கடவுளை அன்புடன்(?) "வாடா போடா" என்றும் "வாடி போடி" என்றும் அழைபார்களோ?///

    நண்பர்களை அப்படித்தானே அழைப்போம்
    நாம் ஆண்டவனை நண்பர்களாக

    பாவிப்பதும் அவன் நம்மை
    பாசமுள்ள அன்பர்களாய் நேசிப்பதும்

    இந்து மதத்தில் மட்டுமே
    இஸ்லாத்திலோ மற்ற மதத்திலோ இல்லை

    தங்களுக்கு தெரியாததா?
    தனியாக யாராவது சொல்லனுமா என்ன?

    ReplyDelete
  8. வாத்தியார் அண்ணா வணக்கம்,
    நான் பக்திப்பாடலை பாடிவிட்டேன் மிகவும் நன்றாகயிருந்தது.

    ReplyDelete
  9. நல்ல பாடலை அளித்தமைக்கு நன்றி ஐயா!

    'எங்கெங்கு காணினும் சக்தியடா 'என்பார் பாரதி. இங்கே அதுவே முருகன் ஆகிறார். அவ்வளவுதான்.

    ReplyDelete
  10. ///அய்யர் said...
    நாம் ஆண்டவனை நண்பர்களாக
    பாவிப்பதும் அவன் நம்மை
    பாசமுள்ள அன்பர்களாய் நேசிப்பதும்
    இந்து மதத்தில் மட்டுமே///

    இல்லை... நான் அடுத்த மதங்களை நினைக்கவில்லை ஐயா...
    கன்னட, தெலுகு, மலையாள, ஹிந்தி, சமஸ்கிரதம், பெங்காளி, ஒரிய என்று பிற மொழிகளை நினைத்தேன்.
    எனக்கு தமிழர்கள் மரியாதை தருவதற்காக மொழியில் ஒரு வழியை உருவாக்கி (ஹிந்தியில் ஜி) அதே போல மரியாதைக் குறைவாகவும் அடுத்தவர்களை அழைக்க வழி செய்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

    ஆங்கிலத்தில் இந்த மரியாதை, மரியாதைக்குறைவு போன்ற பாகுபாடு இல்லை அல்லவா? அரசியும் "அவள்" தான், வேலைக்காரியும் "அவள்" தான். நாமோ திருடன் என்றால் "அவன்" என்றும் அதையே செய்யும் அரசியல்வாதியை "அவர்" என்றும் அழைக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  11. தேமொழி said...
    ///எனக்கு தமிழர்கள் மரியாதை தருவதற்காக மொழியில் ஒரு வழியை உருவாக்கி (ஹிந்தியில் ஜி) அதே போல மரியாதைக் குறைவாகவும் அடுத்தவர்களை அழைக்க வழி செய்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ////

    தமிழிற்கு சங்கம் அமைத்தவன் அவனல்லவா...
    தங்கமான மொழி தமிழேயன்றி வேறில்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா தேமொழியாரே

    மரியாதை என வேறுபடுத்தும் போது
    நாம் அன்னியமாக இருக்கிறோமேயன்றி அனன்யமாக இருப்பதில்லையல்லவா?

    மரியாதை என்பது வார்த்தைகளில் இல்லை உணர்வுகளில் உள்ளது
    என்பது அய்யரின் கருத்து..

    ReplyDelete
  12. /////Blogger ananth said...
    இன்றைய பொழுதை பக்தி பரவசத்துடன் தொடங்குகிறோம். பாடல் நன்று. பொன்மொழி இதற்கு குறைந்ததல்ல. அதுவும் நன்று.////

    இன்றைய பதிவு உங்களுடைய பின்னூட்டத்துடன் துவங்கிச் சிறக்கிறது.நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  13. ////Blogger அய்யர் said...
    முருகா சரணம்../////

    கந்தா போற்றி!
    கடம்பா போற்றி!
    கதிர்வேலா போற்றி!

    ReplyDelete
  14. Blogger தேமொழி said...
    நல்ல பாடல் ஐயா,
    இதே பாடல் மெட்டில் எங்கள் பள்ளியில்
    "வேலுண்டு வினை தீர்க்க
    மயிலுண்டு வழி காட்ட
    கோவிலுக்கு சென்றேனடி - குமரன்
    கொலுவிருக்க கண்டேனடி"
    என்று ஒரு இறைவணக்கப் பாடலைப் பாடுவார்கள் என்பதாக ஞாபகம்.
    திரைப் படத்தில் அதே மெட்டினில் அமைதிருந்தார் குன்னக்குடி என்று நினைகிறேன்.
    எது முதலில் வந்தது என்று சரியாக நினைவில்லை.
    இந்தப் பாடல் ஒரு நல்ல தாலாட்டுப் பாடலாக இறுதியில் மாறிவிடும்.
    பாடலின் முழு வரிகளும் கீழே உள்ளது.
    *******************
    காவலுக்கு வேலுண்டு
    ஆடலுக்கு மயிலுண்டு
    கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
    நீயிருக்கும் இடம்தானடா!
    (காவலுக்கு)
    நதிகளிலும் மலர்களிலும்
    நடந்துவரும் தென்றலிலும்
    உன்முகம் கண்டேனடா - எங்கும்
    சண்முகம் நின்றானடா!
    ஓம் முருகா என்றவுடன்
    உருகுதடா உள்ளமெல்லாம்
    ஒருகணம் சொன்னேனடா - அங்கே
    சரவணன் வந்தானடா!
    (காவலுக்கு)
    தெய்வயாணை தேடிவந்தாளோ விழி வண்டோடு
    கந்தனுன்னைக் காண வந்தாளோ
    தெய்வயாணை தேடிவந்தாளோ விழி வண்டோடு
    கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
    பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
    ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
    குறமகள் வருவதில் முதல் மகள் கோபம் கொண்டாளே
    ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
    குறமகள் வருவதில் முதல் மகள் கோபம் கொண்டாளே
    இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா
    சோதனை எனக்கு வைத்தாயே - இரு பெண்ணாலே
    வேதனை உனக்கு வைத்தாயே
    என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே
    ஆறு கார்த்திகை பெண்களிடம்
    வளர்ந்தாய் முருகா தாலேலோ
    ஆறு கார்த்திகை பெண்களிடம்
    வளர்ந்தாய் முருகா தாலேலோ
    அழகிய தாமரை மலர்களிலே
    தவழ்ந்தாய் குமரா தாலேலோ
    தாலேலோ நீ தாலேலோ
    தாலேலோ நீ தாலேலோ
    ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
    பாடுவதும் வள்ளி அல்லடா - என் கந்தையா
    ஏழையுடன் பள்ளி கொள்ளடா!
    திருப்பாதம் நான் தாங்க தாலேலோ
    இந்தப் புவியாவும் நீ தாங்க தாலேலோ
    கந்தையா வேலையா தாலேலோ
    என் கந்தையா முருகையா தாலேலோ
    நீ தாலேலோ நீ தாலேலோ
    *******************
    இப்பாடலில் "தெய்வயாணை தேடிவந்தாளோ ......என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே" பகுதியை நீக்கியிருதால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியதுமுண்டு.
    தமிழில்தான் கடவுளை அன்புடன்(?) "வாடா போடா" என்றும் "வாடி போடி" என்றும் அழைபார்களோ?
    "சொல்லடி அபிராமி" மற்றொரு உதாரணம்.
    பாடலுக்கு நன்றி.//////

    ம்ற்றமொழிப் பாடல்கள் தெரியாததனால் இத்ற்குச் சரியான் பதிலைச் சொல்ல முடியவில்லை!
    பழநிஅப்பனை நான் நண்பன் என்றுதான் சொல்லுவேன். மின்னஞ்சல் முகவரியும் கைபேசியும் இல்லாத நண்பன் என்று சொல்லுவேன்!

    ReplyDelete
  15. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    இன்று பக்தியுடன் காலை பாடம்
    முருகன் அடிமை
    நன்றி குருவே/////

    நல்லது வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  16. ////Blogger eswari sekar said...
    enrya pon mozhi super////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. /////Blogger கலையரசி said...
    உள்ளேன் அய்யா. நிறைய நேரம் ஆகிவிட்டதால் , நான் attendence கொடுத்துவிட்டு தூங்கச் செல்கிறேன்.
    Seattle kalai////

    தூக்கம் கண்களைத் த்ழுவட்டுமே
    அமைதி நெஞ்சினில் நிலவட்டுமே!

    ReplyDelete
  18. ////Blogger Bhogar said...
    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ/////

    கந்தா போற்றி! கடம்பா போற்றி! கதிர்வேலா போற்றி!கார்த்திகேயா போற்றி!

    ReplyDelete
  19. /////Blogger அய்யர் said...
    தேமொழி said...
    ///தமிழில்தான் கடவுளை அன்புடன்(?) "வாடா போடா" என்றும் "வாடி போடி" என்றும் அழைபார்களோ?///
    நண்பர்களை அப்படித்தானே அழைப்போம்
    நாம் ஆண்டவனை நண்பர்களாக
    பாவிப்பதும் அவன் நம்மை
    பாசமுள்ள அன்பர்களாய் நேசிப்பதும்
    இந்து மதத்தில் மட்டுமே
    இஸ்லாத்திலோ மற்ற மதத்திலோ இல்லை
    தங்களுக்கு தெரியாததா?
    தனியாக யாராவது சொல்லனுமா என்ன?/////

    உண்மைதான்.பழநிஅப்பனை நான் நண்பன் என்றுதான் சொல்லுவேன். மின்னஞ்சல் முகவரியும் கைபேசியும் இல்லாத நண்பன் என்று சொல்லுவேன்!
    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  20. ////Blogger sundari said...
    வாத்தியார் அண்ணா வணக்கம்,
    நான் பக்திப்பாடலை பாடிவிட்டேன் மிகவும் நன்றாகயிருந்தது./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. ////Blogger kmr.krishnan said...
    நல்ல பாடலை அளித்தமைக்கு நன்றி ஐயா!
    'எங்கெங்கு காணினும் சக்தியடா 'என்பார் பாரதி. இங்கே அதுவே முருகன் ஆகிறார். அவ்வளவுதான்./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  22. ////Blogger தேமொழி said...
    ///அய்யர் said...
    நாம் ஆண்டவனை நண்பர்களாக
    பாவிப்பதும் அவன் நம்மை
    பாசமுள்ள அன்பர்களாய் நேசிப்பதும்
    இந்து மதத்தில் மட்டுமே///
    இல்லை... நான் அடுத்த மதங்களை நினைக்கவில்லை ஐயா...
    கன்னட, தெலுகு, மலையாள, ஹிந்தி, சமஸ்கிரதம், பெங்காளி, ஒரிய என்று பிற மொழிகளை நினைத்தேன்.
    எனக்கு தமிழர்கள் மரியாதை தருவதற்காக மொழியில் ஒரு வழியை உருவாக்கி (ஹிந்தியில் ஜி) அதே போல மரியாதைக் குறைவாகவும் அடுத்தவர்களை அழைக்க வழி செய்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.
    ஆங்கிலத்தில் இந்த மரியாதை, மரியாதைக்குறைவு போன்ற பாகுபாடு இல்லை அல்லவா? அரசியும் "அவள்" தான், வேலைக்காரியும் "அவள்" தான். நாமோ திருடன் என்றால் "அவன்" என்றும் அதையே செய்யும் அரசியல்வாதியை "அவர்" என்றும் அழைக்க வேண்டியுள்ளது./////

    அதுதான் தமிழின் சொல் வளமை! நாம் சித்தப்பா, தாய் மாமா என்று உற்வுகளைத் தனிதனி பெயர்களில் அழைப்போம். ஆங்கிலத்தில் இரண்டிற்கும் uncle என்னும் ஒரே சொல்!

    ReplyDelete
  23. Blogger அய்யர் said...
    தேமொழி said...
    ///எனக்கு தமிழர்கள் மரியாதை தருவதற்காக மொழியில் ஒரு வழியை உருவாக்கி (ஹிந்தியில் ஜி) அதே போல மரியாதைக் குறைவாகவும் அடுத்தவர்களை அழைக்க வழி செய்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ////
    தமிழிற்கு சங்கம் அமைத்தவன் அவனல்லவா...
    தங்கமான மொழி தமிழேயன்றி வேறில்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா தேமொழியாரே
    மரியாதை என வேறுபடுத்தும் போது
    நாம் அன்னியமாக இருக்கிறோமேயன்றி அனன்யமாக இருப்பதில்லையல்லவா?
    மரியாதை என்பது வார்த்தைகளில் இல்லை உணர்வுகளில் உள்ளது
    என்பது அய்யரின் கருத்து../////

    உண்மைதான். நன்றி விசுவநாதன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com