மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.5.12

Devotional வருவது வரட்டும் ; நடப்பது நடக்கட்டும்!


Devotional வருவது வரட்டும் ; நடப்பது நடக்கட்டும்!

முருகன் பாமாலை
பாடலைப் பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
=================================

எனக்கென்ன முருகா வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே

இங்கு வருபவை எல்லாம் நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே

தருபவை தானே அதனாலே

(எனக்கென்ன முருகா ... )

நடக்கட்டும் குமரா உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு

என்னை படைத்தவன் உன்னை மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு

(எனக்கென்ன முருகா ... )

ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல்

நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல்

(எனக்கென்ன முருகா ... )

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே

தருபவை தானே அதனாலே.வருவது வரட்டும்

============================================
இன்றைய பொன்மொழி: 

வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான்.- பெர்ஸியஸ்.

வாழ்க வளமுடன்!

22 comments:

பூர்ணா said...

ஐயா அவர்களுக்கு வணக்கம். முருகன் பாமாலை மிக அருமை.

ஜகன்னாத ஹோரா-வில் அயனாம்ச முறையை வாக்கிய பஞ்சாங்க படி(ராமன் அயனாம்சம்) மாற்றி பார்த்ததில் குரு மே 11 அன்றே பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. திருக்கணித முறைப்படி(சித்திரபக்ஷ அயனாம்சம்) பார்த்ததில் மே 17 அன்று காலை பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. அது மட்டும் இல்லாமல் திருக்கணித முறைப்படி சனி பகவான் மே 16 அன்று வக்கிர நிலையில் கன்னி ராசிக்கு சென்று விட்டதாக காட்டுகிறது. இது சரி தானா அல்லது மென் பொருளில் குறையா என்பதை தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்

வேதனையாளர்களுக்கு பொன்மொழி
ஓர் டானிக்கு.அருமையனநேரத்தில் (குரு பெயரிசி அற்றவர்களுக்கு }

முருகன் அருள் வந்தது

நன்றி

Pandian said...

உள்ளேன் அய்யா...

Bhogar said...

முருகனின் அருளால்,என்னுடைய
வாழ்வில் அனேக அற்புதங்கள்
நடந்து இருக்கிறது.இப்பொழுதும்
நடந்து கொண்டு இருக்கிறது.

கர்மவினையின் கொடுமை
தாங்காமுடியாமல்,
பல நாட்கள் பழனியிலே
தங்கி,முருகனிடம்
கண்ணிர் விட்டு கதறி
உள்ளேன்.

முருகனின் அருள் எந்த அளவிற்கு உண்மையோ.
அந்த அளவிற்கு முற்பிறவி
கர்மவினைகளும் உண்மை.
இந்த பிறவியில் புதிதாக
தீய கர்மாக்கள் சேர்க்காமல்
இருக்க கந்தன் திருவடி
துணை புரியும்.

ஓம் சரவணபவ நம

தேமொழி said...

"இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே வருவது வரட்டும்"

இந்த மனப் பக்குவம் வருவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே ஐயா, நன்றி

தேமொழி said...

இன்றைய பொன்மொழி:
வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான்.- பெர்ஸியஸ்.

உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
வரிகள் - பா.விஜய்

அய்யர் said...

முருகா..
முருகா..

அய்யர் said...

///தேமொழி said...
இந்த மனப் பக்குவம் வருவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே///

நம்பிக்கை கொள்ள வேண்டும்

அய்யர் said...

///Bhogar said...
இந்த பிறவியில் புதிதாக
தீய கர்மாக்கள் சேர்க்காமல்
இருக்க கந்தன் திருவடி
துணை புரியும்.///

ஆகாமியம் சேரக்கூடாது என விரும்புகிறீர்கள்..

சத்திநிபாதத்தில் தோய்ந்து
முத்தி நிலையிலே முன்னேற வாழ்த்துக்கள்..

sriganeshh said...

@ஆசிரியருக்கு

வணக்கம். இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நல்லதாக அமைய திருச்செந்தூரான் அருளை வேண்டுகிறேன்.

நடப்பவைகளை காணும் போது இந்தியா பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்று தோன்றுகிறது. பிரான்ஸ் ஏற்கெனவே இடதுசாரிகளின் பக்கம். க்ரீஸ் அதைத் தொடரும் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின் சென்றால் யூரோ கரன்ஸி உடையும் அல்லது மறைவதற்கு ஆன வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் நமது நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

நான் படித்தவரையில் இது எல்லாம் 1931 வருடம் நடந்தவைகள் போல் தோன்றுகிறது.

என்னுடைய வேண்டுகோள்
1. இந்தியா பொருளாதாரத்தின் நிலைமை எப்படி இருக்கும்...?
2. 1931 வருடத்தின் நிகழ்வுகளை அதாவது எப்படி சமாளித்தார்கள் என்று கட்டுரை எழுதினால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

@Blogger பூர்ணா
// ஜகன்னாத ஹோரா-வில் அயனாம்ச முறையை வாக்கிய பஞ்சாங்க படி(ராமன் அயனாம்சம்) மாற்றி பார்த்ததில் //

as far as i know, jhoro software don't have provision for vakkiya panchanga ayanamsa...
If you want vakkiya panchanga calculations you need to use other software. You can try at http://astroseva.com/vakya_panchangam.htm

தேமொழி said...

///sriganeshh said...
...1931 வருடத்தின் நிகழ்வுகளை அதாவது எப்படி சமாளித்தார்கள் என்று கட்டுரை எழுதினால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.///

Sir, Do you think the history repeats itself economy wise?‎
Then we have an example of social experiments done by others. We have to implement them (without repeating the mistakes, of course)...it is time for a "New Deal"
http://en.wikipedia.org/wiki/New_Deal

கலையரசி said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
குரு இருப்பாருக்கு சனி விடுவதில்லை
சனி இருப்பாருக்கு குரு விடுவதில்லை
சனியும் குருவும் இருப்பாருக்கு
தசானாதனும் தசாபுத்தியும் அமைவதில்லை
எல்லாம் அமைந்தவனுக்கு
இவுல்லகில் இடமும் இல்லை
ஒன்றும் இல்லாதவனுக்கு
தெய்வத்தை தவிர அவன் மனதில் ஏதுமில்லை.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை ...!
Kalai Seattle

SP.VR. SUBBAIYA said...

////Blogger பூர்ணா said...
ஐயா அவர்களுக்கு வணக்கம். முருகன் பாமாலை மிக அருமை.
ஜகன்னாத ஹோரா-வில் அயனாம்ச முறையை வாக்கிய பஞ்சாங்க படி(ராமன் அயனாம்சம்) மாற்றி பார்த்ததில் குரு மே 11 அன்றே பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. திருக்கணித முறைப்படி(சித்திரபக்ஷ அயனாம்சம்) பார்த்ததில் மே 17 அன்று காலை பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. அது மட்டும் இல்லாமல் திருக்கணித முறைப்படி சனி பகவான் மே 16 அன்று வக்கிர நிலையில் கன்னி ராசிக்கு சென்று விட்டதாக காட்டுகிறது. இது சரி தானா அல்லது மென் பொருளில் குறையா என்பதை தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.////

வாக்கியம் தொன்மையானது. முனிவர்கள் கணித்தது. திருக்கணிதம் பின்னால் உருவாக்கப்பெற்றது (Based on mathematical calculations) அவ்விரண்டிற்கும் இரண்டு பாகைகள் வித்தியாசம். அதனால் இரண்டையும் ஒன்றாகப் பயன் படுத்தினால் குழப்பம் உண்டாகும். முன் பதிவுகளில் விவரமாக எழுதியுள்ளேன். அதை எல்லாம் நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. சித்த வைத்தியம். அலோபதி வைத்தியம் போல. ஏதாவது ஒன்றைப் பயன் படுத்துங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
வேதனையாளர்களுக்கு பொன்மொழி
ஓர் டானிக்கு.அருமையானநேரத்தில் (குரு பெயர்ச்சி அற்றவர்களுக்கு }
முருகன் அருள் வந்தது
நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Pandian said...
உள்ளேன் அய்யா.../////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhogar said...
முருகனின் அருளால்,என்னுடைய வாழ்வில் அனேக அற்புதங்கள் நடந்து இருக்கிறது.இப்பொழுதும் நடந்து கொண்டு இருக்கிறது.
கர்மவினையின் கொடுமை தாங்காமுடியாமல்,பல நாட்கள் பழனியிலே தங்கி,முருகனிடம் கண்ணிர் விட்டு கதறி உள்ளேன்.
முருகனின் அருள் எந்த அளவிற்கு உண்மையோ.அந்த அளவிற்கு முற்பிறவி கர்மவினைகளும் உண்மை.
இந்த பிறவியில் புதிதாக தீய கர்மாக்கள் சேர்க்காமல் இருக்க கந்தன் திருவடி துணை புரியும்.ஓம் சரவணபவ நம////

நல்லது.உங்களின் கருத்து / அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
"இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே வருவது வரட்டும்"
இந்த மனப் பக்குவம் வருவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே ஐயா, நன்றி/////

இன்பத்தில் துள்ளாமலும், துன்பத்தில் துவளாமலும் இருகக்க கற்றுக்கொண்டால் போதும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger தேமொழி said...
இன்றைய பொன்மொழி:
வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான்.- பெர்ஸியஸ்.
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
வரிகள் - பா.விஜய்/////

நல்லது பாடல் வரிகளுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
முருகா..
முருகா..////

கந்தா போற்றி, கடம்பா போற்றி, கதிர்வேலா போற்றி!

SP.VR. SUBBAIYA said...

Blogger sriganeshh said...
@ஆசிரியருக்கு
வணக்கம். இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நல்லதாக அமைய திருச்செந்தூரான் அருளை வேண்டுகிறேன்.
நடப்பவைகளை காணும் போது இந்தியா பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்று தோன்றுகிறது. பிரான்ஸ் ஏற்கெனவே இடதுசாரிகளின் பக்கம். க்ரீஸ் அதைத் தொடரும் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின் சென்றால் யூரோ கரன்ஸி உடையும் அல்லது மறைவதற்கு ஆன வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் நமது நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
நான் படித்தவரையில் இது எல்லாம் 1931 வருடம் நடந்தவைகள் போல் தோன்றுகிறது.
என்னுடைய வேண்டுகோள்
1. இந்தியா பொருளாதாரத்தின் நிலைமை எப்படி இருக்கும்...?
2. 1931 வருடத்தின் நிகழ்வுகளை அதாவது எப்படி சமாளித்தார்கள் என்று கட்டுரை எழுதினால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்./////

இந்தியா பல மகான்கள் வாழ்ந்த ஆன்மீக பூமி. பெரிய சரிவுகள் வராமல் இறைவன் பார்த்துக்கொள்வார். நம்பிக்கையோடு இருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger கலையரசி said...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
குரு இருப்பாருக்கு சனி விடுவதில்லை
சனி இருப்பாருக்கு குரு விடுவதில்லை
சனியும் குருவும் இருப்பாருக்கு
தசானாதனும் தசாபுத்தியும் அமைவதில்லை
எல்லாம் அமைந்தவனுக்கு
இவுல்லகில் இடமும் இல்லை
ஒன்றும் இல்லாதவனுக்கு
தெய்வத்தை தவிர அவன் மனதில் ஏதுமில்லை.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை ...!
Kalai Seattle////

காலம் ஒருநாள் மாறும் - உன
கவலைகள் யாவும் தீரும்!
- கவியரசர் கண்ணதாசன்

sriganeshh said...

//தேமொழி said...
Sir, Do you think the history repeats itself economy wise?‎
Then we have an example of social experiments done by others. We have to implement them (without repeating the mistakes, of course)...it is time for a "New Deal"
http://en.wikipedia.org/wiki/New_Deal //

I believe your question is intended for the teacher..
anyway thanks for the link. Hopefully politicians raise to the occasion and do some good.