மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.5.12

Astrology பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?

===========================================
Doubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?

Doubts: கேள்வி பதில் பகுதி பத்து!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பத்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
---------------------------------------------------
email No.39
S. உமா

வணக்கம் சார்,

கேள்வி பதில் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது. நிறைய கேள்விகள் முன்னர் கேட்க நினைத்து, தொந்தரவாக இருக்குமோ என நினைத்து கேட்காமல் விட்டிருக்கிறேன்.

1. ஒரு கேள்விக்கான விடையில், மாந்தி மற்ற கிரஹங்களின் பார்வையை ஏற்காது எனக் கூறியுள்ளீர்கள். அப்படி என்றால் குரு பார்வை இருந்தாலும் மாந்தி இருக்கும் இடத்திற்கான பலனை அனுபவித்துதான் தீரவேண்டும் இல்லையா?

ஆமாம்! அவர் இருக்கும் வீட்டின் மூன்று காரகத்துவங்களில் ஒன்றுதான் கெட்டிருக்கும்! அதையும் பார்க்க வேண்டும்!

2. மகர லக்னத்திற்கு சூரியன் 8ம் இட அதிபதி. நவாம்சத்தில் அவர் சுக்கிரனு டன் சேர்ந்து 7 ல் இருந்தால், அதாவது 8 க்கு 12ல் இருந்தால், அவரால் தீமை இல்லை என்று எடுத்துகொள்வதா?

அவர் எட்டாம் இட அதிபதி. (Owner of a malefic house for Magara Lagna) அவர் எங்கே சென்று அமர்ந்தாலும், அமர்ந்த இடத்திற்குத் தீமைதான்.

3. ராகு சனியைப் போல செயல்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். கும்பத்தில் ராகு இருந்தால், சனி அங்கே உச்சம் / ஆட்சி பெற்றுள்ளார் என்று அர்த்தமா? அதை நன்மை என்று எடுத்துகொள்வதா?

அதெப்படி அம்மணி? அப்பா மாதிரி செயல்படுவார் என்பதற்காக, அவர் அப்பா ஆக முடியுமா? ராகுவிற்கு எங்கேயும் ஆட்சி கிடையாது. விருச்சிகத்தில் மட்டும்தான் உச்சம் பெறுவார்!

4. லக்னத்தில் சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார் என்று கூறியுள்ளீர் கள். அவர் லக்ன அதிபதியாக இருந்தால்?

மகர லக்கினம் மற்றும் கும்ப லக்கிங்களுக்கு சனி அதிபதி. அவர் அதிபதியாகி விடுவதால், தனக்குத்தானே (ஜாதகனுக்கு) சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக்கொள்வார்!

5. ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்வதாக இருந்தால், செவ்வாய் நீச்சமாக இருந்தாலும் செய்யலாமா? செவ்வாய் பூமி காரகன் என்பதால் கேட்கிறேன்.

செவ்வாய் நீசமடைந்திருந்தால், இடம் வாங்கி வைத்திருந்து பின்னால் காசு பார்க்கலாம் என்பது நடக்காது. வாங்கி வைத்த இடத்திற்கு ஏதாவது வில்லங்கம் வந்து சேரலாம். நான்காம் அதிபதியையும் கவனியுங்கள்.
அவர் நன்றாக இருந்தால், செய்யலாம். ஆனால் அதற்கு பதினொன்றாம் அதிபதியும் துணை வரவேண்டும். எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று சம்பந்தப்பட்டவை.
As the 11th lord is in the 4th, the native accumulates via estates, produce of the earth and rentals.The technical and mechanical expertise given by Mars also calls for builders, designers, surgeons, engineers and professional dealing in real estate.

6. 11 அதிபதி செவ் 8 ல், கேதுவுடன் சேர்ந்து, அதாவது டபுள் செவ்வாய் சேர்ந்து ஓர் இடத்தில் (நவாம்சத்தில்) ஆனால் குருவின் 5 ம் பார்வை. குருவின் பார்வை எந்த அளவு இந்த அமைப்பில் தீய பலனை குறைக்கும்?

பார்வை என்பது மந்திரக்கோலாகச் செயல்பட்டு மொத்தத் தீமையையும் குறைத்து அப்படியே நன்மையாக மாற்றித் தராது.தீமை குறையும். ஆனாலும் தொடரும். எட்டாம் இடத்தில் அமர்ந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

7.இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. மீண்டும் எழுதுகிறேன். ஆலாசியம் அவர்கள் கூறியது போல், வாரம் 2 நாள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் என் போன்ற அரைகுறை ஜோதிடர்கள் முழுமையடைய உதவும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். பிறகு முடிவு எடுக்கலாம்!

Thanks & regards,
S. UMA
-------------------------------------------
email No.40
SP. கருப்பையா

அய்யா வணக்கம்.

1. நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன் நன்மையா? தீமையா?.

நீசபங்க ராஜ யோகத்தைப் பற்றிக்கேட்கிறீர்களா? 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால் பலன்கள் குறைந்துவிடும்.

2.மேலும் 6,8, 12 ல் பரல்கள் < 30 இருந்தால் அதன் பலன் நன்மையா? தீமையா?.

6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) அங்கே பரல்கள் அதிகமாக இருப்பதால் நன்மை என்று எப்படிச் சொல்ல முடியும். ஒரே ஒரு நன்மை உண்டு. அதிகப் பரல்கள், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்!

இப்படிக்கு
SP.karuppiah
KKDI
............................................................................
email No. 41
சுரேந்திரன் சங்கர்

அன்புள்ள ஆசானே,

01. கோணாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அது யோகத்தில் வருமா ?

குழப்பியிருக்கிறீர்களே சாமி! கோணாதிபதி எதற்காகக் கேந்திரத்தில் இருக்க வேண்டும்? கோணாதிபதியாகி விட்டவரை யார் அங்கே அனுப்பி வைத்தார்கள்? கோணாதிபதி எனும் பதவி கிடைத்த பிறகு, பெட்டி
படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு அதைவிடக் கீழான பதவிக்கு அவர் எப்படிப் போவார்? இதையெல்லாம் யோசித்தீர்களா?

சரி, உங்கள் கேள்வியைச் சற்றுப் புரியும்படியாகக் கேட்போம்: லக்கினத்திற்கு 5, 9ற்கு உரிய கிரகம் 4, 7, 10ஆம் இடங்களில் அமர்ந்தால் என்ன யோகம்? அதாவது திரிகோணங்களுக்கு உரிய கிரகம் கேந்திரங்களில் அமர்ந்திருக்கும் நிலைமை!
5, 9ல் அமர்ந்தால் திரிகோண யோகம்.
4,7,10ல் அமர்ந்தால் கேந்திர யோகம்.
அததற்கு உரிய பலன் கிடைக்கும்.
பலன்களுக்குப் பழைய பாடங்களைப் படியுங்கள். மீண்டும் அதை இங்கே மொத்தமாக எழுதுவது உசிதமாக இருக்காது!

கோணத்தில் இருந்து தொலைக்காமல் கேந்திரத்திற்குப்போனதால், கோணத்துப் பலனையும் கேட்டு வாங்க முடியுமா என்றால், முடியாது! சின்ன மாமன் வீட்டில் வாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச்
சொத்துக்கள் கிடைக்காது! எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது!
இப்போது அர்த்தமாகியதா சாமி?

02. அப்படி கோணாதிபதி கேந்திரத்தில் இருந்து, கேந்திரம் பகை விடாகவோ/ நீச்ச விடாக இருந்தால் எதேனும் பலன் உண்டாகுமோ ?

சின்ன மாமன் வீடு நீச வீடாக இருந்தால், அங்கே செல்லும் பெண், கடைசி வரை பற்றுப் பாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டு மனதையும் தேற்றிக்கொண்டு சின்ன மாமா வீட்டில் இருக்க வேண்டியதுதான்.
ஒன்றும் பிரயோஜனமில்லை! பகை வீடாக இருந்தால் கொஞ்சம் பரவாயில்லை. சின்ன மாமா வீட்டில் அந்த வேலைக்கெல்லாம் ஆள் வைத்திருப்பார்கள். இருந்தாலும் நிலைமை சுமார்தான்!
------------------------------------------------------
email No. 42
அருள்ராஜ் விக்டர்

ஐயா
பாடங்களோ அருமை. கேள்வி‍‍ பதில்களோ மிக மிக அருமை.

1. ஒரு சிறு சந்தேக‌ம். குரு சுப‌ கிர‌க‌ம். ஆனால் ப‌கை வீட்டினில் (ரிசபம் 8 ஆம் வீடூ) இருக்கும்போது ஜாத‌க‌னுக்கு தீமை செய்வாரா அல்ல‌து ந‌ன்மை குறைவாக‌ செய்வாரா ? மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் ? குரு த‌சை எப்ப‌டி
இருக்கும்? நன்றி ஐயா
விக்ட‌ர்

குரு முதல்தர சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும், எந்த இடத்தைப் பார்த்ததாலும் நன்மையையே செய்வார். ஜாதகத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் பாத்திரத்தைவைத்து (சமையல் செய்யும் பாத்திரமல்ல)
அதற்குத் தகுந்த சீன்களில் மட்டும் வந்து போவார். ராஜபார்ட் என்றால் அதற்குத் தகுந்தது மாதிரி. தமாத்துண்டு ரோல் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். எட்டாம் வீடு அல்லது
12ஆம் வீடுகளில் அமர்ந்திருக்கும் குரு அவருடைய தசாபுத்தி பெரிய பலன்களைத் தரமாட்டார். ஆனால் அவருடைய மகாதசையில் வரும் வேறு கிரகங்களின் புத்தி, அதன் நாதர்களைவைத்துப் பலன்களைத்தரும்!
ஆகவே அதையும் பார்க்க வேண்டும். குறுக்கு வழி மற்றும் ஒருவரிக் கதையெல்லாம் ஜோதிடத்தில் கிடையாது!
-----------------------------------
(தொடரும்)

 இன்றைய பொன்மொழி!

Beautiful things Are not Always Good
But Good things are Always Beautiful!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

53 comments:

sundari said...

present sir
Good evening sir,

ananth said...

//மேலும் 6,8, 12 ல் பரல்கள் < 30 இருந்தால் அதன் பலன் நன்மையா? தீமையா?.//

ஒரு வீட்டில் 30 மேற்பட்ட பரல்கள் இருந்தால் அதற்குரிய பலன் உண்டு. எந்த மாதிரியான பலன் என்பது அது எந்த வீடு என்பதைப் பொருந்தது.

kmr.krishnan said...

மீள் பதிவைப் படித்துப் பயனுற்றேன்

kmr.krishnan said...
This comment has been removed by the author.
Parvathy Ramachandran said...

மிக நல்ல மீள்பதிவு. நன்றி.

தேமொழி said...

ஐயா என் மகளின் நான்காம் அதிபதி சுக்கிரன், பதினொன்றின் அதிபதியும் சுக்கிரனே, அத்துடன் ரிஷபத்தில் ஆட்சி. செவ்வாய் ஏழில், மகரத்தில் உச்சம். சிறு வயதில் ஜோசியம் பார்த்தபொழுது இந்தப் பெண் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அசையா சொத்துக்கள் தானே சேரும் என்று ஒரு ஜோசியர் சொன்னார். அவர் ஜோசியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், ஆனால் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் சொன்னதன் அர்த்தம் உங்கள் பாடங்கள் படிப்பாதால் புரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் அவள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று. மீள் பதிவிற்கு நன்றி. முன்பு படித்ததைவிட இப்பொழுது மேலும் கொஞ்சம் புரிகிறது தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால்.

கலையரசி said...

நலம் .இன்றும் கேள்வி பதில் பழைய பாடங்களுக்கு ஒரு self-checklist போல் அமைந்து உள்ளது.என் தம்பிக்கு செவ்வாய் லக்னத்தில் நீசம் (கடகம்) , பதினொன்றில் ராகு நீசம் (ரிஷபம்). இரண்டில் சுக்ரன் வக்கிரம்.(சூரியன் , புதனுடன்) வீடோ , நிலமோ எதுவும் அமைய வில்லை. அதுபோல் திருமணமும் தள்ளி கொண்டே செல்கிறது.
அவனுடைய ஜாதகத்தின் சிறப்பு(?) , சூரியன் (இரண்டாம் இடம் ) ஆட்சி. சனி நான்கில் உச்சம் .கேது ஐந்தில் உச்சம்.(குருவுடன்) .சந்திரன் மறைந்து ஆறாம் இடத்தில.
அம்சத்தில் லக்னத்தில் கேது (கும்பம்) , எழில் ராகுவுடன் புதன். at 2 செவ்வாய். at 4 சுக்ரன்.at 9 குரு ,at 10 சனி , at 11 சூரியனும் சந்திரனும்.
நீசம் பெற்ற செவ்வாயோ என்னவோ தெரியவில்லை , நான்கு வயதில் காலில் சிறு ஊனத்தை ஏற்படுத்தி விட்டார் ஊசியினால். இன்றும் திருமணத்திற்கும் அதுவும் ஒரு தடை.

அதுபோல் அவனுக்கு படிப்பில் இருந்து , வேலை வரை எல்லாமே மெதுவாகத்தான். (சனி உச்ச பெற்றதனால் என்று நினைக்கிறன் ).ஆனால் engineering முடித்து ஒரு MNC -ல் வேலையில் உள்ளான். இரண்டுமே லேட்தான். எந்த ஜோதிடத்தில் பார்த்தாலும் நல்ல மனைவி அமைவாள் என்றே சொல்கிறார்கள். ஆனால் இன்னும் அமைந்த பாடில்லை. செவ்வாய் விரதம் இருக்க ஆரம்பித்து .நான்காவது வாரம் இது. மிகவும் நம்பிக்கையுடன் அம்மாவும் , தம்பியும் இருந்து வருகிறார்கள். அய்யா அவர்கள் ஒருமுறை பதிவில் சொல்லி இருந்ததை வீட்டில் சொன்னேன்.

இப்படி பட்டவர்கள் தொழில் செய்யவும் , சொத்து வாங்கவும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் வாங்கினால் தப்பிக்கலாமா ? இல்லை இந்த ஜென்மத்தில் இதுதான் ப்ராப்தம் என்று இருக்க வேண்டுமா?

ஜி ஆலாசியம் said...

திரும்ப திரும்ப படிக்கும்போது இன்னும்
திருத்தமும் திருப்பமும் தருகிறது.

நன்றிகள் ஐயா!

eswari sekar said...

present sir

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்

பாடங்களை கற்று கொடுத்து

கேள்விகளுக்கு பதில்கொடுத்து

புரியாததை புரிவைபதற்கு வழி கொடுத்து
இந்த மீள பதிவுகள் பயன் கொடுத்து எல்லோருக்கும் பயன் கொடுக்கும் வைக்யில் கொடுத்து
நன்றி குருவே நன்றி

thanusu said...

மீள் பதிவு என் போன்றோருக்கு பலவிஷயங்களை மெது மெதுவாக நன்றாக புரியவைக்கிறது.

உமாவின் ரியல் எஸ்டேட் பிசினஸ் பற்றிய கேள்வி ,நானும் கேட்கவேண்டும் என்று நினைதிருந்தேன்.

நான் ஒரு குறிப்பிட்ட அளவு ஷேர் சேர்ந்து நன்பருடன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன். அதனை பெரிதாக்க வெண்டும் என்ற என்னத்தில் நானே 75 சதவீதம் ஷேர் போட்டு என் மகளின் பெயரில் செய்யலாம் என்று நினைக்கிறேன்

என் மகளுக்கு தனுசு லக்னம், லக்னாதிபதியும்,நாங்காமிடத்து அதிபதியுமான குரு மூன்றில், நாங்கில் சனி (குரு-சனி,பரிவர்த்தனை) செவ்வாய் பத்தில், பத்தம் இடத்து அதிபதி லக்னத்தில்,அவருடன் ஒன்பதாம் இடத்து அதிபதியும் செர்ந்தே இருக்கிறார்.லாபாதிபதி சுக்ரன் இரண்டில்.சந்திரன் ஒன்பதில்.

நடப்பது குரு பார்க்க (கஜ கேசரி யோகம்) சந்த்ர திசை.

இந்த நிலையில் அய்யா சொன்ன செவ்வாய், நான்காம் இடம்-அதிபதி, பதினொராம் இடம்-அதிபதி ,இவருக்கு பொருந்தி வருகிறதா செய்யலாமா.

seethalrajan said...

கேள்வி பதில் பதிவிற்கு மிக்க நன்றி. ஐயா துலா லக்னத்திற்கு முதல்தர பாதகாதிபதி சூரிய பகவான் அவர் 12ம் அதிபதி புதனுடன் 8ம் இடத்தில் இருபது நன்மையை தருமா? (ஒரு துஷ்டன் மற்றொரு துஷ்டனுடன் மறைந்து இருபது)சுக்கிரன் 9ல்.

நன்றி.

arul said...

kelvi pathil paguthi miga arumai

SP.VR. SUBBAIYA said...

////Blogger sundari said...
present sir
Good evening sir,////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ananth said...
//மேலும் 6,8, 12 ல் பரல்கள் < 30 இருந்தால் அதன் பலன் நன்மையா? தீமையா?.//
ஒரு வீட்டில் 30 மேற்பட்ட பரல்கள் இருந்தால் அதற்குரிய பலன் உண்டு. எந்த மாதிரியான பலன் என்பது அது எந்த வீடு என்பதைப் பொருந்தது.////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger kmr.krishnan said...
மீள் பதிவைப் படித்துப் பயனுற்றேன்////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Parvathy Ramachandran said...
மிக நல்ல மீள்பதிவு. நன்றி.////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger தேமொழி said...
ஐயா என் மகளின் நான்காம் அதிபதி சுக்கிரன், பதினொன்றின் அதிபதியும் சுக்கிரனே, அத்துடன் ரிஷபத்தில் ஆட்சி. செவ்வாய் ஏழில், மகரத்தில் உச்சம். சிறு வயதில் ஜோசியம் பார்த்தபொழுது இந்தப் பெண் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அசையா சொத்துக்கள் தானே சேரும் என்று ஒரு ஜோசியர் சொன்னார். அவர் ஜோசியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், ஆனால் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் சொன்னதன் அர்த்தம் உங்கள் பாடங்கள் படிப்பாதால் புரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் அவள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று. மீள் பதிவிற்கு நன்றி. முன்பு படித்ததைவிட இப்பொழுது மேலும் கொஞ்சம் புரிகிறது தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால்.////

நல்லது. தொடர்ந்து படியுங்கள். ஜோதிடத்தை ஒரு கை பார்த்துவிடலாம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger கலையரசி said...
நலம் .இன்றும் கேள்வி பதில் பழைய பாடங்களுக்கு ஒரு self-checklist போல் அமைந்து உள்ளது.என் தம்பிக்கு செவ்வாய் லக்னத்தில் நீசம் (கடகம்) , பதினொன்றில் ராகு நீசம் (ரிஷபம்). இரண்டில் சுக்ரன் வக்கிரம்.(சூரியன் , புதனுடன்) வீடோ , நிலமோ எதுவும் அமைய வில்லை. அதுபோல் திருமணமும் தள்ளி கொண்டே செல்கிறது.
அவனுடைய ஜாதகத்தின் சிறப்பு(?) , சூரியன் (இரண்டாம் இடம் ) ஆட்சி. சனி நான்கில் உச்சம் .கேது ஐந்தில் உச்சம்.(குருவுடன்) .சந்திரன் மறைந்து ஆறாம் இடத்தில.
அம்சத்தில் லக்னத்தில் கேது (கும்பம்) , எழில் ராகுவுடன் புதன். at 2 செவ்வாய். at 4 சுக்ரன்.at 9 குரு ,at 10 சனி , at 11 சூரியனும் சந்திரனும்.
நீசம் பெற்ற செவ்வாயோ என்னவோ தெரியவில்லை , நான்கு வயதில் காலில் சிறு ஊனத்தை ஏற்படுத்தி விட்டார் ஊசியினால். இன்றும் திருமணத்திற்கும் அதுவும் ஒரு தடை.
அதுபோல் அவனுக்கு படிப்பில் இருந்து , வேலை வரை எல்லாமே மெதுவாகத்தான். (சனி உச்ச பெற்றதனால் என்று நினைக்கிறன் ).ஆனால் engineering முடித்து ஒரு MNC -ல் வேலையில் உள்ளான். இரண்டுமே லேட்தான். எந்த ஜோதிடத்தில் பார்த்தாலும் நல்ல மனைவி அமைவாள் என்றே சொல்கிறார்கள். ஆனால் இன்னும் அமைந்த பாடில்லை. செவ்வாய் விரதம் இருக்க ஆரம்பித்து .நான்காவது வாரம் இது. மிகவும் நம்பிக்கையுடன் அம்மாவும் , தம்பியும் இருந்து வருகிறார்கள். அய்யா அவர்கள் ஒருமுறை பதிவில் சொல்லி இருந்ததை வீட்டில் சொன்னேன்./////

செவ்வாய் விரத்தத்தைத் நம்பிக்கையோடு தொடர்ந்து அனுஷ்டிக்கவும். பழநிஅப்பன் கைகொடுப்பார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger ஜி ஆலாசியம் said...
திரும்ப திரும்ப படிக்கும்போது இன்னும்
திருத்தமும் திருப்பமும் தருகிறது.
நன்றிகள் ஐயா!/////

படிக்க விருப்பமும் தருகிறதா? அதுதான் முக்கியம்!

SP.VR. SUBBAIYA said...

Blogger eswari sekar said...
present sir

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
பாடங்களை கற்று கொடுத்து,கேள்விகளுக்கு பதில்கொடுத்து,புரியாததை புரிவைபதற்கு வழி கொடுத்து
இந்த மீள பதிவுகள் பயன் கொடுத்து எல்லோருக்கும் பயன் கொடுக்கும் வகையில் கொடுப்பதற்கு நன்றி குருவே நன்றி////

நல்லது. நன்றி சீடரே!!

SP.VR. SUBBAIYA said...

Blogger thanusu said...
மீள் பதிவு என் போன்றோருக்கு பலவிஷயங்களை மெது மெதுவாக நன்றாக புரியவைக்கிறது.
உமாவின் ரியல் எஸ்டேட் பிசினஸ் பற்றிய கேள்வி ,நானும் கேட்கவேண்டும் என்று நினைதிருந்தேன்.
நான் ஒரு குறிப்பிட்ட அளவு ஷேர் சேர்ந்து நன்பருடன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன். அதனை பெரிதாக்க வெண்டும் என்ற என்னத்தில் நானே 75 சதவீதம் ஷேர் போட்டு என் மகளின் பெயரில் செய்யலாம் என்று நினைக்கிறேன்
என் மகளுக்கு தனுசு லக்னம், லக்னாதிபதியும்,நாங்காமிடத்து அதிபதியுமான குரு மூன்றில், நாங்கில் சனி (குரு-சனி,பரிவர்த்தனை) செவ்வாய் பத்தில், பத்தம் இடத்து அதிபதி லக்னத்தில்,அவருடன் ஒன்பதாம் இடத்து அதிபதியும் செர்ந்தே இருக்கிறார்.லாபாதிபதி சுக்ரன் இரண்டில்.சந்திரன் ஒன்பதில்.
நடப்பது குரு பார்க்க (கஜ கேசரி யோகம்) சந்த்ர திசை.
இந்த நிலையில் அய்யா சொன்ன செவ்வாய், நான்காம் இடம்-அதிபதி, பதினொராம் இடம்-அதிபதி ,இவருக்கு பொருந்தி வருகிறதா செய்யலாமா./////

உங்களுக்கு பதினொன்றாம் இடத்தில் 30 பரல்களுக்கு மேல் இருந்து, லக்கினாதிபதி தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுக்கு மேல் இருந்து, நல்ல தசா புத்தி நடந்தால் செய்யலாம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger seethalrajan said...
கேள்வி பதில் பதிவிற்கு மிக்க நன்றி. ஐயா துலா லக்னத்திற்கு முதல்தர பாதகாதிபதி சூரிய பகவான் அவர் 12ம் அதிபதி புதனுடன் 8ம் இடத்தில் இருபது நன்மையை தருமா? (ஒரு துஷ்டன் மற்றொரு துஷ்டனுடன் மறைந்து இருபது)சுக்கிரன் 9ல்.
நன்றி./////

நம்பியாரும், வீரப்பாவும் ஒன்று சேர்ந்தால் (சேர்ந்து ஓளிந்திருந்து வந்தாலும்) நாயகன் கழுத்தில் மாலை போடுவார்களா? அல்லது கத்தியை வைப்பார்களா?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
kelvi pathil paguthi miga arumai////

நல்லது. நன்றி நண்பரே!

Jagannath said...

ஒரு கிரகம் பகை வீட்டில் இருப்பதை விட நீசத்தில் இருப்பது பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீசத்துக்காவது பங்கம் இருக்கிறது. பகைக்கு பங்கமே இல்லையே. :)

Jagannath said...

ஒரு கிரகம் நன்மை செய்யுமா, தீமை செய்யுமா என்பதற்கு லக்ன அடிப்படையில் பார்த்து விட்டு பின் அதன் இயற்கை குணம் அடிப்படையில் பார்ப்பது சரியாக வருகிறது.

உதாரணமாக குரு சுப கிரகம். அவர் கேந்திர ஆதிபத்தியம் பெற்றால் அவர் அதிகாரம் பெற்ற கேந்திரங்கள் நல்ல பலன்களைத் தருவதில்லை. ஆனால் மற்ற விடயங்களில் நன்மை செய்வார். அதே போல் ஆறு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டாம் ஆதிபத்தியம் பெற்றாலும் சம்பந்தப்பட்ட தீய பலன்களைத் தருவார். ஆனால் மற்ற விடயங்களில் நன்மை செய்வார்.

இதுவே சூரியனை எடுத்துக் கொண்டால் அவர் தீமை தரும் கிரகம். அவர் ஏழாம் ஆதிபத்தியம் (கேந்திரம்) பெற்றால் திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்கள் நன்றாக இருக்கும். ஆனால் மற்ற பலன்களில் தீமையே அதிகமாக இருக்கும்.ஐந்தாம் ஆதிபத்தியம் பெற்றால் குழந்தை, அறிவு சம்பந்தப்பட்ட விடயங்களைத் தவிர மற்ற விடயங்களில் தீய பலன்கள் இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால் ஜாதகத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர மற்ற விடயங்களில் கிரகங்கள் தங்கள் இயற்கைத் தன்மைப் படியே செயல்படுகின்றன.

Jagannath said...

ஆனால் எந்த கிரகம் எந்த ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அதன் பலத்தைப் பொறுத்துதான் பலன் வருகிறது.

முக்கியமாக பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டாமல் இருக்க வேண்டும். பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டும் கிரகத்தின் பாப பலம் அதிகமாகி விடுகிறது. உதாரணமாக சூரியன் ஏழாம் அதிபதியாக ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தால் சூரியனின் தீய பலம் அதிகமாகி திருமணம் இழுத்தடிக்கும்.

இதற்கும் ஒரு விதி விலக்கு உள்ளது. ஏழாம் அதிபதி சூரியன் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஏழாம் இடம் இரு புறமும் சூரியனும் , செவ்வாயும் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்த அமைப்பில் சூரியன் ஏழாம் அதிபதியாக இருப்பதால் பாப கர்த்தாரி யோகத்திலிருந்து விலக்கு பெறுகிறது.

மேலும் எட்டாம், ஆறாம் அதிபதியுடன் தொடர்புடைய கிரகங்கள் சில தீய பலன்களைத் தருகின்றன.

பன்னிரண்டாம் அதிபதி ஐந்து, ஒன்பது அதிபதிகளுடன் சேர்ந்தால் சுப விரயங்களையும் ஆறு, எட்டு, பதினொன்றாம் அதிபதிகளுடன் சேர்ந்தால் தீய விரயங்களையும் உருவாக்குகிறார்.

seethalrajan said...

ஐயா துலா லக்னத்திற்கு முதல்தர பாதகாதிபதி சூரிய பகவான் அவர் 12ம் அதிபதி புதனுடன் 8ம் இடத்தில் இருப்பது. பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மகிழ்ச்சி
அடையலாமா?
நன்றி.

Jagannath said...

ராகு சனியைப் போல செயல்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். கும்பத்தில் ராகு இருந்தால், சனி அங்கே உச்சம் / ஆட்சி பெற்றுள்ளார் என்று அர்த்தமா? அதை நன்மை என்று எடுத்துகொள்வதா?//

ராகுதான் சனி போல் செயல்படுவார். சனி ராகு போல் செயல்படுவதில்லை. சனி ஒரு ஜாதகனுக்கு நன்மை செய்யும் விதத்தில் அமைந்திருந்தால் ராகுவும் பலமுள்ள இடத்தில் அமர்ந்திருந்தால் நன்மை செய்வார். ராகு பகை வீட்டிலோ, நீசத்திலோ இருந்தால் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாதது போல்தான்.

Jagannath said...

மகர லக்கினம் மற்றும் கும்ப லக்கிங்களுக்கு சனி அதிபதி. அவர் அதிபதியாகி விடுவதால், தனக்குத்தானே (ஜாதகனுக்கு) சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக்கொள்வார்!//

சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக் கொள்வார். ஆனால் செயல்பாடு மந்தமாகத்தான் இருக்கும். அதுவும் கும்பம் மகரத்தை விட மந்தமானது. மேஷ லக்னம் மற்றும் விருச்சிக லக்னம் உடையவர்கள் செவ்வாயின் இயல்புக்கு ஏற்றபடி வேகமான செயல்பாடுகள் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.

Jagannath said...

ஒரு சிறு சந்தேக‌ம். குரு சுப‌ கிர‌க‌ம். ஆனால் ப‌கை வீட்டினில் (ரிசபம் 8 ஆம் வீடூ) இருக்கும்போது ஜாத‌க‌னுக்கு தீமை செய்வாரா அல்ல‌து ந‌ன்மை குறைவாக‌ செய்வாரா ? மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் ? குரு த‌சை எப்ப‌டி
இருக்கும்? //

நல்ல இடங்களுக்கான ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள், இயற்கையான சுப கிரகங்கள் பகை, நீச வீட்டில் இருந்தால் நன்மைகள் குறையும். நட்பு வீட்டில் இருந்தால் மிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் முழுமையான நல்ல பலன்கள் கிடைக்கும். உச்சத்தில் இருந்தால் இரு மடங்காக நல்லது நடக்கும்.

தீய இடங்களுக்கான ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள், இயற்கையான தீய கிரகங்கள் பகை, நீச வீட்டில் இருந்தால் தீமைகள் மிக அதிகமாக இருக்கும். நட்பு வீட்டில் இருந்தால் மிதமான தீய பலன்கள் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் தீய பலன்கள் மிகக் குறைவாக இருக்கும். உச்சத்தில் இருந்தால் தீய பலன்கள் இருக்காது.

ஆனால் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இருந்தால் பலன்கள் மாறுபடும். உதாரணமாக நல்ல ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் ஆறில் உச்சத்தில் இருந்தால் சுக்கிர தசா/புத்தியின்போது நோய் ஏற்படலாம். ஆனால் வெகு விரைவில் குணமாகி விடும். இதுவே நீசம், பகை வீட்டில் இருந்தால் நோய் பாதிப்புகள் அதிகமாகவும் குணமாக நாட்கள் அதிகமாகவும் ஆகலாம்.

இதுவே எட்டாம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் ஐந்தில் நீசம், பகை வீட்டில் இருந்தால் சுக்கிர தசா/புத்தியின்போது குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். சரியாகவும் நாளாகும். ஆனால் இதுவே உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் குறைவாகவும் சீக்கிரம் சரியாகும் விதத்திலும் இருக்கும்.

Jagannath said...

அனைவருக்கும் ஒரு கேள்வி. இதற்கு அனுபவ ரீதியான பதில் தேவை. சூரியன் நீசமாக இருப்பவர்கள் யாருக்காவது சிறு வயதிலிருந்தே கண், எலும்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறதா?

Uma said...

அசத்துகிறீர்கள் ஜகன்னாத், தங்களின் மேலதிக விபரங்களுக்கு நன்றிகள் பல!

கலையரசி said...

@jagannath

அனைவருக்கும் ஒரு கேள்வி. இதற்கு அனுபவ ரீதியான பதில் தேவை. சூரியன் நீசமாக இருப்பவர்கள் யாருக்காவது சிறு வயதிலிருந்தே கண், எலும்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறதா?

எனக்கு சூரியன்(ஒன்பதில்) நீசம். பத்து வயதில் ௯குரு திசை முடியும் தருவாயில்)இருந்து கண் கண்ணாடி அணிகிறேன். சனி திசை ராகு புத்தியில் கண் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் எபோழுதும் கண் சமந்தமான பிரச்னை இருந்து கொண்டேதான் இருக்கிறது. like dry eyes now , watery eyes(when wearing lens)

Pandian said...

அனைவருக்கும் ஒரு கேள்வி. இதற்கு அனுபவ ரீதியான பதில் தேவை. சூரியன் நீசமாக இருப்பவர்கள் யாருக்காவது சிறு வயதிலிருந்தே கண், எலும்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறதா?/////////////

இரண்டாம் வீட்டின் அமைப்பை வைத்து வலது கண்னுக்கும் -பன்னிரெண்டாம் வீட்டின் அமைப்பை வைத்து இடது கண்னுக்கும் பலன் கூறாலாம்...

Pandian said...

எனக்கு சூரியன்(ஒன்பதில்) நீசம். பத்து வயதில் ௯குரு திசை முடியும் தருவாயில்)இருந்து கண் கண்ணாடி அணிகிறேன். சனி திசை ராகு புத்தியில் கண் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் எபோழுதும் கண் சமந்தமான பிரச்னை இருந்து கொண்டேதான் இருக்கிறது. like dry eyes now , watery eyes(when wearing lens)///////////

சூரியன் நீசமானால் கண்களில் கோளறு உண்டாகும் என்பது நிச்சயமாக புதிய தகவல்...நன்றி

ஒரு வீட்டில் 30 மேற்பட்ட பரல்கள் இருந்தால் அதற்குரிய பலன் உண்டு. எந்த மாதிரியான பலன் என்பது அது எந்த வீடு என்பதைப் பொருந்தது.///////////

ஆனந்த் அண்ணா...கிளாஸ்க்கு ரொம்ப நாள் லீவ் விட்டுடீங்க...ஒரு சிறிய பதிவு விரைவில் போடவும்...

Pandian said...

ஒரு கிரகம் பகை வீட்டில் இருப்பதை விட நீசத்தில் இருப்பது பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீசத்துக்காவது பங்கம் இருக்கிறது. பகைக்கு பங்கமே இல்லையே. :)///////////

நீச்சபங்க ராஜயோகம் எனபது - நீசனுடன் ஒரு உச்ச கிரகம் சேர்ந்து அவை சந்திர கேந்திரதிலோ அல்லது லக்ன கேந்திரதிலோ இருந்தால் தான் முழமையான நீச்சபங்க ராஜயோகம்....இதில் 25%, 50% எல்லாம் கணக்கில் வராது...

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jagannath said...
ஒரு கிரகம் பகை வீட்டில் இருப்பதை விட நீசத்தில் இருப்பது பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீசத்துக்காவது பங்கம் இருக்கிறது. பகைக்கு பங்கமே இல்லையே. :)/////

எப்படி இருந்தாலும் குறை குறைதான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jagannath said...
ஒரு கிரகம் நன்மை செய்யுமா, தீமை செய்யுமா என்பதற்கு லக்ன அடிப்படையில் பார்த்து விட்டு பின் அதன் இயற்கை குணம் அடிப்படையில் பார்ப்பது சரியாக வருகிறது.
உதாரணமாக குரு சுப கிரகம். அவர் கேந்திர ஆதிபத்தியம் பெற்றால் அவர் அதிகாரம் பெற்ற கேந்திரங்கள் நல்ல பலன்களைத் தருவதில்லை. ஆனால் மற்ற விடயங்களில் நன்மை செய்வார். அதே போல் ஆறு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டாம் ஆதிபத்தியம் பெற்றாலும் சம்பந்தப்பட்ட தீய பலன்களைத் தருவார். ஆனால் மற்ற விடயங்களில் நன்மை செய்வார்.
இதுவே சூரியனை எடுத்துக் கொண்டால் அவர் தீமை தரும் கிரகம். அவர் ஏழாம் ஆதிபத்தியம் (கேந்திரம்) பெற்றால் திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்கள் நன்றாக இருக்கும். ஆனால் மற்ற பலன்களில் தீமையே அதிகமாக இருக்கும்.ஐந்தாம் ஆதிபத்தியம் பெற்றால் குழந்தை, அறிவு சம்பந்தப்பட்ட விடயங்களைத் தவிர மற்ற விடயங்களில் தீய பலன்கள் இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் ஜாதகத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர மற்ற விடயங்களில் கிரகங்கள் தங்கள் இயற்கைத் தன்மைப் படியே செயல்படுகின்றன./////

அதுதானே இயற்கை!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Jagannath said...
ஆனால் எந்த கிரகம் எந்த ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அதன் பலத்தைப் பொறுத்துதான் பலன் வருகிறது.
முக்கியமாக பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டாமல் இருக்க வேண்டும். பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டும் கிரகத்தின் பாப பலம் அதிகமாகி விடுகிறது. உதாரணமாக சூரியன் ஏழாம் அதிபதியாக ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தால் சூரியனின் தீய பலம் அதிகமாகி திருமணம் இழுத்தடிக்கும்.
இதற்கும் ஒரு விதி விலக்கு உள்ளது. ஏழாம் அதிபதி சூரியன் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஏழாம் இடம் இரு புறமும் சூரியனும் , செவ்வாயும் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்த அமைப்பில் சூரியன் ஏழாம் அதிபதியாக இருப்பதால் பாப கர்த்தாரி யோகத்திலிருந்து விலக்கு பெறுகிறது.
மேலும் எட்டாம், ஆறாம் அதிபதியுடன் தொடர்புடைய கிரகங்கள் சில தீய பலன்களைத் தருகின்றன.
பன்னிரண்டாம் அதிபதி ஐந்து, ஒன்பது அதிபதிகளுடன் சேர்ந்தால் சுப விரயங்களையும் ஆறு, எட்டு, பதினொன்றாம் அதிபதிகளுடன் சேர்ந்தால் தீய விரயங்களையும் உருவாக்குகிறார்./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger seethalrajan said...
ஐயா துலா லக்னத்திற்கு முதல்தர பாதகாதிபதி சூரிய பகவான் அவர் 12ம் அதிபதி புதனுடன் 8ம் இடத்தில் இருப்பது. பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மகிழ்ச்சி அடையலாமா?
நன்றி./////

ஆகா, மகிழ்ச்சியோடு இருங்கள். அம்பத்தூரில்தானே இருக்கிறீர்கள். திரும்பிய பக்கமெல்லாம் எலுமிச்சை மரங்கள். தினமும் 4 பழங்களாவது பறித்து ஜூஸ் போட்டு சாப்பிட்டுவிட்டு ஆனந்தமாக இருங்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Jagannath said...
ராகு சனியைப் போல செயல்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். கும்பத்தில் ராகு இருந்தால், சனி அங்கே உச்சம் / ஆட்சி பெற்றுள்ளார் என்று அர்த்தமா? அதை நன்மை என்று எடுத்துகொள்வதா?//
ராகுதான் சனி போல் செயல்படுவார். சனி ராகு போல் செயல்படுவதில்லை. சனி ஒரு ஜாதகனுக்கு நன்மை செய்யும் விதத்தில் அமைந்திருந்தால் ராகுவும் பலமுள்ள இடத்தில் அமர்ந்திருந்தால் நன்மை செய்வார். ராகு பகை வீட்டிலோ, நீசத்திலோ இருந்தால் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாதது போல்தான்./////

அப்பா ஸ்தானம் என்பத்ற்காக, அப்பாவாக ஆக முடியாது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jagannath said...
மகர லக்கினம் மற்றும் கும்ப லக்கிங்களுக்கு சனி அதிபதி. அவர் அதிபதியாகி விடுவதால், தனக்குத்தானே (ஜாதகனுக்கு) சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக்கொள்வார்!//
சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக் கொள்வார். ஆனால் செயல்பாடு மந்தமாகத்தான் இருக்கும். அதுவும் கும்பம் மகரத்தை விட மந்தமானது. மேஷ லக்னம் மற்றும் விருச்சிக லக்னம் உடையவர்கள் செவ்வாயின் இயல்புக்கு ஏற்றபடி வேகமான செயல்பாடுகள் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது./////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jagannath said...
ஒரு சிறு சந்தேக‌ம். குரு சுப‌ கிர‌க‌ம். ஆனால் ப‌கை வீட்டினில் (ரிசபம் 8 ஆம் வீடூ) இருக்கும்போது ஜாத‌க‌னுக்கு தீமை செய்வாரா அல்ல‌து ந‌ன்மை குறைவாக‌ செய்வாரா ? மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் ? குரு த‌சை எப்ப‌டி
இருக்கும்? //
நல்ல இடங்களுக்கான ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள், இயற்கையான சுப கிரகங்கள் பகை, நீச வீட்டில் இருந்தால் நன்மைகள் குறையும். நட்பு வீட்டில் இருந்தால் மிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் முழுமையான நல்ல பலன்கள் கிடைக்கும். உச்சத்தில் இருந்தால் இரு மடங்காக நல்லது நடக்கும்.
தீய இடங்களுக்கான ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள், இயற்கையான தீய கிரகங்கள் பகை, நீச வீட்டில் இருந்தால் தீமைகள் மிக அதிகமாக இருக்கும். நட்பு வீட்டில் இருந்தால் மிதமான தீய பலன்கள் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் தீய பலன்கள் மிகக் குறைவாக இருக்கும். உச்சத்தில் இருந்தால் தீய பலன்கள் இருக்காது.
ஆனால் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இருந்தால் பலன்கள் மாறுபடும். உதாரணமாக நல்ல ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் ஆறில் உச்சத்தில் இருந்தால் சுக்கிர தசா/புத்தியின்போது நோய் ஏற்படலாம். ஆனால் வெகு விரைவில் குணமாகி விடும். இதுவே நீசம், பகை வீட்டில் இருந்தால் நோய் பாதிப்புகள் அதிகமாகவும் குணமாக நாட்கள் அதிகமாகவும் ஆகலாம்.
இதுவே எட்டாம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் ஐந்தில் நீசம், பகை வீட்டில் இருந்தால் சுக்கிர தசா/புத்தியின்போது குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். சரியாகவும் நாளாகும். ஆனால் இதுவே உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் குறைவாகவும் சீக்கிரம் சரியாகும் விதத்திலும் இருக்கும்./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger கலையரசி said...
@jagannath
அனைவருக்கும் ஒரு கேள்வி. இதற்கு அனுபவ ரீதியான பதில் தேவை. சூரியன் நீசமாக இருப்பவர்கள் யாருக்காவது சிறு வயதிலிருந்தே கண், எலும்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறதா?
எனக்கு சூரியன்(ஒன்பதில்) நீசம். பத்து வயதில் குரு திசை முடியும் தருவாயில்)இருந்து கண் கண்ணாடி அணிகிறேன். சனி திசை ராகு புத்தியில் கண் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் எபோழுதும் கண் சமந்தமான பிரச்னை இருந்து கொண்டேதான் இருக்கிறது. like dry eyes now , watery eyes(when wearing lens)////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

தேமொழி said...

///Jagannath said... அனைவருக்கும் ஒரு கேள்வி. இதற்கு அனுபவ ரீதியான பதில் தேவை. சூரியன் நீசமாக இருப்பவர்கள் யாருக்காவது சிறு வயதிலிருந்தே கண், எலும்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறதா?///

நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெகநாத்.

என் அப்பாவிற்கும், தங்கைக்கும் சூரியன் நீசம். அப்பாவிற்கு ஒன்பதாம் இடம், காரகனே நீசமாகிப்போனார். (கும்ப லக்கினம் மகா சுறுசுறுப்பு)

தங்கைக்கு பன்னிரண்டில் சூரியன் நீசம் உடனிருப்பது புதன்.

இருவருக்கும் பிறந்ததில் இருந்தே இருப்பது என்று குறிப்பிடும்படி எந்த ஒரு நோயோ உடற்குறையோ இருந்ததில்லை.

ஆனால் இரண்டு பேருக்கும் மூக்குமேல் கோபம் வரும்

Pandian said...

அய்யா வகுப்பறை என்றும் போல் இன்றும் அருமை!!!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நீச ராகு தசையில் அடி எடுத்து வைக்க போகும் என்னை மிரள வைத்து விட்டீர்கள்...

அது சரி ராகு திசையில் தீய பலன்கள் மட்டும் தான் நடை பெருமா அல்லது முக்தி கிடைக்க ஏதேனும் உதவி புரிவாரா உயர் திரு ராகு பகவான்...

Maaya kanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

E-Mail No = 39

கேள்வி பதில் no= 4 க்கு வாத்தியார் ஐயா கூறிய பதில் : " நூற்றிற்கு ட்ரில்லியன் மடங்கு உண்மை . ஏனெனில் யாம் கும்ப இலக்கண காரன் ஏனெனில் என்னுடன் ஜனித்த 6 உடன்பிறப்புகளில் யாம் தான் ஏன் எங்களுடைய மொத்த குடும்ப நபர்கள் சுமார் 50 டு 60 பேர்களில் அடியவன் தான் பரங்கர சுறுசுறுப்பு என்று இன்று வரை யாம் வேலை செய்யும் இடத்தில கூட கூறுவார்கள் பயங்கரமான
சுறுசுறுப்பு என்று , அதனால் தான் என்னை இன்றுவரை வேலையில் வைத்து உள்ளார்கள் ஐயா!