மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.5.12

மைனரின் கடிதம்

மைனரின் கடிதம்

நம் வகுப்பறை மாணவர் ஜப்பான் மைனரின் கடிதம், அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அப்படியே பதிவில் இடப்பெறுகிறது. வலையில் ஏற்றப்பெற்றுள்ளது.

அவருடைய கருத்துக்கள் வாத்தியாருக்கு உடன் பட்டுள்ளதா என்று யாரும் கேட்க வேண்டாம். வகுப்பறையில் இன்றையத் தேதியில் 3225 உறுப்பினர்கள் உள்ளார்கள். மாணவர்கள் என்ற முறையில், அவர்கள அனைவருமே வாத்தியாருக்கு சமமானவர்கள்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும் வாத்தியாரின் மனதில் இடமுண்டு. மனதில் இடம் கொடுத்து விட்டபின்பு, கருத்து வேறுபாடுகளுக்கெல்லாம் நோ சான்ஸ்!

அதை கருத்தில் கொண்டு கடிதத்தைப் படியுங்கள்.

கடவுளைப் பற்றி வாத்தியாரின் சொந்தக் கருத்துக்கள் பதிவில் முன்பே எழுதப் பெற்றுள்ளது. தேடிப் பிடித்துப் படியுங்கள். தேட முடிய்ாதவர்கள், கேளுங்கள், சுட்டியைத் தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
Over to Minor's Letter
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 விவாதத்துக்கு தீர்வா?

சமீபத்திலே ஸ்ரீ உவே கருணாகராச்சாரியார்  சுவாமி என்ற ஒருவரின் ஆன்மிகப்பிரசங்கத்தைக் நெட்டிலே டிவியிலே  பார்த்தபடி கேட்டோம்.. அம்பரீஷன் மகள் ஸ்ரீமதி மேல் மோகம் கொண்டு  நாரதர், பர்வதர் இருவரும் நாராயணனை நாடி சுயம்வரத்தின் போது எதிராளியின் முகம் ஸ்ரீமதிக்கு கரடி,குரங்காக்கி தெரிய வேண்டும் என்று ஒருவருக்கொருவர் தெரியாமலே எதிராளிகளைக் கவிழ்ப்பதாக எண்ணி வரம் கேட்க இருவரையும் அப்படியே ஆக்கிவிட்டு நடுவிலே புகுந்து நாராயணன் ஸ்ரீமதியைத் தனதாக்கிக் கொண்டான் என்கிற ஒரு கதையை சொன்னார்.. அதன் மூலம் சில நன்னெறிகளையும்   சொன்னார்.. பிசிறில்லாத, மிகத் தெளிவான, அற்புதமான கவர்ந்திழுக்கக் கூடிய, வசீகரமான பேச்சாளுமை அவருக்கு இருந்ததாக உணர்ந்தேன்.. அவர் சுவாரஸ்யமாக சொன்ன விதம் அந்தக் கதையை முழுவதும் கேட்டு ரசிக்க வைத்தது..அவரைப் போன்ற ஆட்கள் ஆன்மிகப் பிரச்சாரம் செய்தால் என்னைப் போன்ற ஆட்களும் கூட சேனல் மாற்றாமல், டிவி யை ஆஃப் பண்ணாமல், இடக்கு மடக்காகக் குறுக்குக் கேள்வி கேட்காமல், சத்தமின்றி, அமைதியாக அவர் சொல்ல வந்த கருத்தை மனதிலே உள்வாங்கிக்கொள்ள முடியும்..இதுதான் அவரின் பிரசங்க நோக்கத்துக்குக் கிடைத்த அதிகபட்ச வெற்றியாக இருக்கமுடியும்..

ஏனெனில் ஒருவரின் பேச்சைக் கேட்கும் போதோ,கருத்தைப் படிக்கும் போதோ இடரும் எண்ணங்களில் எப்போதும் போல பலவும் இருந்தாலும் சொல்ல வந்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேட்பது என்கிற அடிப்படைப் பண்பு நம்மில் பலருக்கும் இயல்பான குணமாக இருப்பதால் அந்த அடிப்படையிலே அமைதி காக்கும் தன்மை என்னைப் போன்ற ஆட்களிடம் இருக்கும்..

ஆனால் எதிர் தரப்பை வாதத்திற்கு இழுக்கும் விதமாக எந்த வார்த்தையை யாவது குதர்க்கமாகப் பேசி, மறைபொருளாக புரியாத பழைய செய்யுள் வரிகளில் ஏதாவதொன்றைச் சொல்லி,கட்சி கட்டி, நிஜவாழ்வில் சந்திக்கும் பிரபலங்களை வாழ்த்தியோ, அவதூறாகப் பேசியோ தனது கருத்துக்கு ஆதரவு(?) சேர்க்கும் விதத்திலே கருத்தைச் சொல்ல எத்தனிப்பவரின் முயற்சி என்பது சொல்ல வந்த கருத்துக்கு ஆதரவு/வலு சேர்ப்பதாக அமையாது. .மாறாக கேட்பவரை எரிச்சலூட்டி, எதிர்மாறான சிந்தனையிலே தள்ளி, இண்டு இடுக்குகளை ஆராய்ந்து எதிரான நிலைப்பாட்டுக்குரிய கருத்தாய்வின் வழியிலான மனப்போக்கைத் தூண்டி விதண்டாவாதத்திற்கே இழுத்துச் செல்லும்..

எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எடுத்துக் கொண்டு வாதாட முடியும்..இரு தரப்புக்களுக்குமே அந்தந்தத் தரப்புக்கான தார்மீக அடிப்படையிலான நியாயங்கள் இருக்கும்..விவாதத்தின் போது ஒரு தரப்பு வாதத்தின் வலுவான நிலைஎடுத்து, சரியான பாயின்ட் எடுத்து எதிர் தரப்பு பதில் சொல்லத் திணறுவது என்பது ஒரு நிலை..  நீயா நானா நிகழ்ச்சியிலே கோபி அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் போய் எதிர்ப் பக்கமாக உட்கார்ந்து விடுவது இது போன்ற சமயங்களில்தான்..

 டிவி நிகழ்ச்சிகள் ஒரு சுவாரஸ்யத்துக்காக, பொழுதுபோக்காக அமைகிற விதத்திலேதான் விவாத களங்களும், பட்டிமன்றங்களும் இறுதி முடிவுகளும் இருக்கும்..மிக ஆழமான சிந்தனை தோய்ந்த கருத்துக்களைப் பட்டியலிடும் பாரதி பாஸ்கரின் பேச்சு கூட ராஜாவின் இடக்கான, இலாவகமான பேச்சிலே அந்தளவு ஆழமான கருத்தே இல்லாத சமயத்திலே கூட கலகலப்பும் கைதட்டலுமாக சபையே அதிர்ந்து போக, பாயிண்ட்டுகளை அள்ளிக் குவித்துவிடுவார் ராஜா..இந்த களேபரத்திலே விவாதப் பொருளோ, தீர்ப்போ முக்கியத்துவம் பெறுவதில்லை..பார்வையாளர்கள் மனதிலும் நிற்பதில்லை..அந்தக் கணங்களிலே பேச்சின் போக்கை பொறுத்தே எதிராளிகளின் விவாதப் போக்கும்  தொடர, சுவாரஸ்யமான காமெடி, பன்ச் டைலாக் என்று விவாதப் பொருளுக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்களைக் கூடப் பேசிக் கைதட்டல் பெற்று விவாதங்கள் முடிந்து விடுவதைக் காண்கிறோம்..பொழுதுபோக்குவது மட்டுமே குறியாகிப் போய் விடுவதாலேதான் நமக்கு இது பெரிதாக, உறுத்தலாகப் படுவதில்லை..

மாறாகக் கொஞ்சம் சீரியஸாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து ஒரு கட்டுரை வடிவிலே எழுத முற்பட்டால் அதனை எங்கே ஆரம்பிப்பது,எங்கே முடிப்பது என்று பல விஷயங்களைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது..உதாரணத்துக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற தலைப்பை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதே நம்பிக்கை சார்ந்த விஷயம்..யாருமே நேரில் பார்த்தது இல்லை..அதனால் concrete வடிவத்தில் அப்படியொரு வஸ்து இல்லை என்பதே முடிவாக இருக்க முடியும்..

எடுத்த எடுப்பிலேயே முடிவுக்கு வந்துவிட்டால் இதுகாறும் மானுட சமுதாயத்தினரிடையே பேசப்பட்டு,எழுதப்பட்டு வந்திருக்கும் இந்த விஷயம் குறித்த கருத்துரைகள் எதற்குமே எந்தப் பதிலுமே விமர்சனமுமே இல்லாமல் முடிவான ஒரு கருத்தைத் தீர்மானிப்பதாகத்தான் அது இருக்க முடியும்..அதனால் சில பகுதிகள் குறித்த தற்சமயம் என் மனதில் தோன்றுகிற எனது பார்வையையும் பதிவிட விரும்புகிறேன்..

யாருமே நேரில் பார்த்தது இல்லை என்ற வாதத்தை முன்னெடுத்தால் ஹஜ் பயணம் செய்து மெக்கா போகும் மனிதனுக்கு கடவுள் காட்சி தருகிறாரா?இல்லை மானசரோவர் புனிதப் பயணம் செல்வோருக்கு தரிசனம் தருகிறாரா?கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பதினெட்டு படி ஏறி பம்பைக்குப் படையெடுக்கும் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாரா?இல்லை பெத்லஹெமுக்கே போய் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று சிலுவையிட்டு வணங்கும் ஆட்களுக்கு காட்சி தருகிறாரா?

இப்படி “எங்கும் எப்போதும் இருக்கிறார்..தூணிலே, துரும்பிலே அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருள்” என்று சொல்லப்படும் ஒரு வஸ்துவை மத ரீதியிலே உருவம் கொண்டு வழிபட்டுப் பிரார்த்திப்போருக்கும் அவர் காட்சி தருவதில்லை..உருவமே அற்று அருவமாக இருக்கிறார் என்று சொல்வோருக்கும் அவர் புலனாவதில்லை. .அடிப்படையே விளங்காத புதிராகிப் போகிறது..உருவம்,உருவம் அற்ற என்று வெவ்வேறு வகைகளில் வழக்கிலே இருந்து வரும் கடவுளர்கள் நேரில் வந்து தெளிவுபடுத்தாதவரையிலே   கடவுளை அறிந்தேன் / புரிந்தேன்/ தெரிந்தேன்/ உணர்ந்தேன் என்கிற விஷயமெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வழிகளோ என்னும் கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை..

கடவுள் என்கிற மாயையான நம்பிக்கையின் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட மதங்கள் அந்த மதங்களை முன்னெடுத்து நடத்திச் செல்வோரால் அவை தோற்றுவிக்கப்பட்ட நோக்கங்கள் எதுவோ அதைத் தவிர்த்து வேறெல்லா சிறுமைத் தனங்களுக்கும் ஆட்கொள்ளப்பட்டு எங்கெங்கோ தடம் புரண்டு மண்ணாசைக்கும்,பெண்ணாசைக்குமாய் கேவலமான பாதையை நோக்கிப் பயணித்திருக்கும் இந்த கால ஓட்டத்திலே மனித குலத்துக்கே அச்சுறுத்த லாய் தீவிரவாதமாய்த் தலையெடுத்து நிற்கும் பேராபத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது இந்தக் காலகட்டம்..

இந்த கடவுளுக்கான தேடுதலில் வழிவகை செய்யப்பட்ட மதங்களை அடிப்படையாக வைத்தே உலக அரசியலையும் இயக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மத தீவிரவாதம் வழி செய்துவிட்டிருக்கிறது.. மனிதனின் கடவுள் பற்றிய இந்தத் தேடல், இந்தப் பரிணாமத்தை எட்டி இருக்கும் இந்தக் காலகட்டத்திலே கடவுள் பற்றிய எனது பதிவு ஒரு சாத்வீகத் தீர்வை மனித வாழ்வுக்கு, எதிர்காலத் தலைமுறைக்கு என்று தெரிவிப்பதாக அமைதல் முக்கியம் என்று நினைக்கிறேன்..

இயற்கையைக் கடவுள் என்ற வார்த்தைகளிலே கட்டிப் போட்டு கலவரம் செய்யும் மனிதன் இயற்கையை இயற்கையாகவே பார்த்தல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்துகிறேன்..அதனால்  "எதையாவது" அல்லது "யாரையாவது" கடவுள் அல்லது தெய்வம் அல்லது இறைவன் அல்லது ஆண்டவன் என்று தானாக ஒரு கற்பிதம் செய்துகொண்டு அதனை கட்டிக் கொண்டு ஏன் அழ வேண்டும்?

(பக்திப்பாடல்கள்,ஸ்துதிகள்,ஸ்தோத்திரங்கள்,நாமாவளிகள் என்று மந்திர உச்சரிப்பு என்று புலம்பல்களைத்தான் குறிப்பிடுகிறேன்.) போகாத ஊருக்கான இந்தத் தேடலையே நிறுத்திவிட்டால்தான் என்ன மூழ்கிவிடப் போகிறது? புரியாத,அறியாத,தெரியாத,உணராத எவ்வளவோ புதிர்களை வாழ்க்கை நமக்கு அளித்திருக்கிறது..

அவற்றை விளங்கிக்கொள்ள விஞ்ஞானம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.. வாழ்வளித்திருக்கிறது..இருக்கின்ற வாழ்வை நிம்மதியாகக் கழிக்க, இயற்கை நமக்கு விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள, சுற்றியுள்ள சுகங்களை அனுபவிக்க, மதமாச்சரியங்கள் இல்லாத உண்மையான ஆரோக்கிய உலகை படைக்க என்று நமக்கு இருக்கும் பொறுப்புகள் அதிகம்..

அதை விடுத்து நான் கடவுளை புரிந்து கொண்டேன்அறிந்துகொண்டேன்/ தெரிந்துகொண்டேன் /உணர்ந்துகொண்டேன் என்கிற வகையிலான பேச்சுக்கள் தனது நேரடி வாழ்வாதாரத்துக்கான, அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான கருப்பொருளாக அமைந்த ஒரு விஷயத்தை மறுப்பது அல்லது விட்டு விலகிச் செல்வது என்பது சுயநலத்துக்கு எதிரானது என்பது தெளிவாகவே தெரிந்திருந்தும் சூழ்நிலைக் கைதியாகிப் போன காரணத்தால் எடுக்கக் கூடிய நிலைப்பாடாக இருக்கலாம்..

எப்படியும் கடவுள் என்று ஒருவர் இருந்தே ஆகவேண்டும்,பொழுதுபோக்க வசதியாக இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் மதங்களில் தனித் தனிப் பிரிவுகளைத் தவிர்த்துவிட்டு 'ஒன்றே குலம்..ஒருவனே தேவன்' என்று உலக சமுதாயத்துக்கான ஒரு பொதுக் கடவுளை ஏற்படுத்தி விடலாம்....எந்த உருவத்தை சிபாரிசு செய்யலாம் என்பதை கடவுள் விரும்பிகள் தான் முடிவு செய்ய வேண்டும்..தயவு செய்து எனது போட்டோவைக் கேட்டு மெயில் அனுப்பவேண்டாம்.நன்றி..
- நெப்போலியன் ஞானப் பிரகாசம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!

73 comments:

  1. உய்.....உய்.....உய்.....
    (சீழ்கை அடிச்சேன்)
    நெப்போலியன் (ஞானப்ரகாசம் மைனரின் தந்தை பெயர் அல்லவா?) கோல் கொண்டு வந்தாலும் வந்தாரு, சிலம்ப எடுத்திட்டு வந்து ஊடு கட்டி சிலம்பாட்டம் ஆடிட்டாரு. இவருடைய ஞானமும் பிரகாசம்தான். கோர்வையாக சொல்லிவிட்டார்.

    ///ஒருவரின் பேச்சைக் கேட்கும் போதோ,கருத்தைப் படிக்கும் போதோ இடரும் எண்ணங்களில் எப்போதும் போல பலவும் இருந்தாலும் சொல்ல வந்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேட்பது என்கிற அடிப்படைப் பண்பு நம்மில் பலருக்கும் இயல்பான குணமாக இருப்பதால் அந்த அடிப்படையிலே அமைதி காக்கும் தன்மை என்னைப் போன்ற ஆட்களிடம் இருக்கும்..///

    இந்த வரிகள் என் கருத்துடன் உடன்படுகிறது. ....well said.... மைனருக்கு வாக்களித்துவிட்டேன்.

    வாத்தியாரின் கொள்கையும் இதில் ஒத்திருக்கிறதே ....

    ////மாணவர்கள் என்ற முறையில், அவர்கள அனைவருமே வாத்தியாருக்கு சமமானவர்கள்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும் வாத்தியாரின் மனதில் இடமுண்டு. மனதில் இடம் கொடுத்து விட்டபின்பு, கருத்து வேறுபாடுகளுக்கெல்லாம் நோ சான்ஸ்!///

    அப்படியே பிரசுரித்த வாத்தியாருக்கும் பெரிய சல்யூட். நன்றி ஐயா.

    ReplyDelete
  2. ஐயா, வகுப்பில விசில் அடிச்சதுக்காக நீங்கள் சொல்லாம நானே பெஞ்சு மேல ஏறி நின்னுக்கிட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. கொஞ்சம் பனி நிமித்தம் வெளியூர் வரை போயிருந்தேன் ஆகவே பத்து நாட்களாக வகுப்பறைக்கு வந்தும் பின்னூட்டம் ஏதும் போட முடியவில்லை .

    முதலில்- பாண்டியனுக்கு திருமண வாழ்த்துக்கள்.

    இரண்டாவது-16-05-12 உலக ஆசிரியர் தினம் -வாத்தியாருக்கு குரு தின வாழ்த்துக்கள் .

    குரு பெயர்ச்சி- நமக்கு ஆறில், வரும்போதே சளி ஜலதொஷத்தொடு வந்துள்ளார்.

    மைனர் சார்,
    கடவுள் ஒருவன் .இதுதான் அனைத்து மதங்களும் சொல்கிறது .அப்படி எனில் அனைத்து மதங்களுக்கும் கடவுள் ஒருவன் தானே . ஒரே அரிசிதான் , சமையலின் வகையைப் பொறுத்து உணவின் பெயர் மாறுகிறது.கஞ்சி, சாதம், பொங்கல், நெய்சோறு,பிரியாணி.

    அதேப போன்று துணி ஒன்று தான் தைக்கப்படும் மாடலைப் பொறுத்து ,பாட்டியாலா ,சுடிதார், புடவை , பேன்ட், சட்டை,டி-சார்டட் இன்னும் பல,

    ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.அப்படி என்றால் ஆடை அணிந்த மனிதன் முழு மனிதன் .ஆடைதான் மனிதனை முழுமை ஆக்குகிறது.

    கடவுள் இல்லாத மனிதன் அரைமனிதன் கடவுளை அணிந்துக்கொண்டவன் முழுமனிதன்.யாரும் முழு மனிதனாக இருக்கவே விரும்புகிறார்கள்.


    நிர்வாணமாக இருக்க யாரும் விரும்பவில்லை காட்டுவாசி உட்பட. கடவுள் இன்றி யாரும் வாழா விரும்பவில்லை ,

    ////எந்த உருவத்தை சிபாரிசு செய்யலாம் ///// எனக்கு பேன்ட், டி ஷர்ட் பிடித்திருக்கிறது.

    தாங்களின் வாதம் எனக்கு பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  4. பெருமதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மைனர் அவர்களே,

    தங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். தங்கள் கடிதத்தில் எல்லாவற்றையும் மீறி, என்னைக் கவர்ந்த அம்சங்கள்.

    1. எதிர்க் கருத்துக்கள் கூறுவோர் எதிரிகள் என எண்ணாதது.

    2.மனதில் பட்டதை நேர்மையாக, எதிராளிகளைக் காயப்படுத்தாமல் சொல்வது.

    3. சொந்தக் கருத்தை எடுத்துவைக்கும் அதே நேரத்தில், எதிர்த்தரப்பு நியாயங்களையும் கருத்தில் கொள்வது. (திரு. உ.வே. கருணாகராச்சாரியாரின் உரைக்குத் தங்கள் விமரிசனங்களைச் சொல்கிறேன்.)

    4. முக்கியமாக,

    //ஏனெனில் ஒருவரின் பேச்சைக் கேட்கும் போதோ,கருத்தைப் படிக்கும் போதோ இடரும் எண்ணங்களில் எப்போதும் போல பலவும் இருந்தாலும் சொல்ல வந்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேட்பது என்கிற அடிப்படைப் பண்பு நம்மில் பலருக்கும் இயல்பான குணமாக இருப்பதால் அந்த அடிப்படையிலே அமைதி காக்கும் தன்மை என்னைப் போன்ற ஆட்களிடம் இருக்கும்..//

    நிச்சயமான உண்மை. அமைதி காப்பதாலேயே, ஒருவர் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்று ஆகாது. அமைதி காப்பதால் ஒருவர் பலவீனப்பட்டு விட்டார் என்று அர்த்தமும் இல்லை.

    கருத்துக்களுக்குத் தான் மோதல் என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு, அழகாகத் தங்கள் தரப்பை எடுத்து வைத்திருக்கிறீர்கள். வரிக்குவரி பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து குறை சொல்வது என்று இல்லாமல், நேர்மையாக, தங்கள் கருத்துக்களைச் சொன்னதற்கு மிக்க நன்றி.

    மாறுபட்ட கருத்துக்களைச் எப்படிச் சொல்வது என்பது ஒரு கலை. அது
    பண்பாளர்களுக்கு மட்டுமே கைவரும். தங்களது உயர்ந்த பண்புக்கு ஒரு ராயல்
    சல்யூட். மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் தங்களைப் போன்ற பண்பாளர்களோடு இருக்கும் வாய்ப்பைத் தந்தமைக்கு வகுப்பறைக்கும் வாத்தியாருக்கும் நன்றி. தன்னுடைய வலைப்பூவில், மாற்றுக்கருத்தைச் சொல்லும் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்த வாத்தியார் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

    ReplyDelete
  5. மைனரின் கடிதத்தை அப்படியே பிரசுரித்த வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.
    //பிசிறில்லாத, மிகத் தெளிவான, அற்புதமான கவர்ந்திழுக்கக் கூடிய, வசீகரமான//
    எழுத்து ஆளுமை உங்களுக்கு இருந்ததாக நான் உணர்கிறேன். என்னதான் மைனர் சொல்ல வருகிறார் என்று ஒரே மூச்சாக
    படித்தேன். உங்களின் கருத்தை தெரிந்து கொண்டேன். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
    அனால் நிறைய இடத்தில எனக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு அதே நேரம் உங்களின் பல கேள்விக்கும் எனக்கு தெரிந்த பதில்களும் உண்டு.
    (குடும்பமே நாத்திக வாதிகள். எல்லாம் திருமணமும் சுயமரியாதை திருமனகள்தான் எங்கள் வீட்டில்.(இரண்டை தவிர ) ஏன் தாலி கூட கட்டி கொள்ளாத
    திருமணம் கூட இந்த தலைமுறையில் நடந்து உள்ளது. )ஆனால் எல்லாம் தெரிந்த வாத்தியார் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து , அதை பதிவாக போட்டுள்ளதை பார்த்து நல்ல குருவாக அய்யாவையும் , நல்ல சிஷ்யனாக உங்களையும் , சக மாணவியாக தள்ளி நின்று ரசிக்கிறேன்.
    வாழ்க ஜனநாயகம் , எங்கள் வகுப்பறை உள்ளும்.கலை சியாட்டில்.

    ReplyDelete
  6. ஆசிரியருக்கு மிக்க நன்றி..
    நான் ஆசிரியருக்கு எழுதிய மெயிலிலே இப்படி எழுத நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது குறித்து விளக்கி, பிரசுரிக்கத் தகுதியானது என்றால் பிரசுரியுங்கள்..இல்லாவிடில் மெயிலிலே பதிலாக தனிப்பட்ட முறையிலே அன்புக்குரிய எதிர்கட்சிக்காரருக்கு அனுப்பிவைத்து விடுகிறேன் என்றே குறிப்பிடிருந்தேன்..'பிரசுரிக்க வாய்ப்பில்லை; ஒருவேளை அப்படியே வந்தாலும் கூட வாரமலரிலே வரலாம்' என்றுதான் நினைத்திருந்தேன்..
    காலையில் வகுப்புக்கு வந்தால் கிரேட் ஷாக்..
    வழக்கம் போல வாத்தியார் போட்டுத் தாக்கிவிட்டார்..வலையேற்றிவிட்டார்..கருத்துக்களை முறையாக எடுத்து வைத்தால் மாற்றுக்கருத்தாக இருந்தாலும் ஆசிரியர் முறையாக முன்னுரிமை தந்தே முதல் நாளிலே வெளியிடுவார் என்று வெளிப்படுத்திக் காட்டிவிட்டார்..அவரின் பெருந்தன்மைக்கு நன்றி..

    ReplyDelete
  7. 1." உருவாய் அருவாய் " எனச்சொல்லி
    அவன் மனிதகுலத்திற்கு, உருவாய், அருவாய் வேறுபட்டும், அதே பொழுது உருவாயும், அருவாயும் (உம் விகுதி காண்க) உரு,அரு இரண்டும் நீக்கமற கலந்ததாயும் உள்ளான் என்ற கருத்தை முன் வைத்து, உலகத்தே அன்று முதல் இன்று வரை உள்ள தோன்றிய எல்லா மத சார்புடையோரின் கடவுளைப் பார்க்கும், காணும், கேட்கும், உணரும் அணுகுமுறைகளின் மையக்கருத்திலும் இடம் பெற்றுள்ளான்.

    2. " உளதாய் இலதாய் " எனும்பொழுதோ, " இருக்கிறான் "என்பவருக்கு இருப்பது போலவும், "இல்லை" என்பவர்க்கு இல்லாதது போலவும் புலனாகிறான் என்பதும் புரியவே செய்கிறது. ஆத்திகமும் நாத்திகமும் பேசும் இருவருமே இவ்விரு சொற்களில் அடங்குவர் என்பதும் வெள்ளிடை மலை.

    3. கருவாய் .. எதைப் பற்றிபேசினாலும் அதன் உள்ளே இருக்கும் மூலக்கூறு அவன்.

    4. அவனது வெளிப்பாடு உணரகையில் காண்கையில் " ஒளியாய் "
    அவனது வேகத்தை செயல்பாட்டை உணர்கையில் " கதியாய் " ( கதி = பல பொருள் உண்டாயினும் இயங்கும் செயலிக்கும் திறன் வேகம் ) .

    சொல்லிக்கொண்டே போகலாம்.
    எங்கும் நீக்கமற நிறைந்திருக்குமவன் உலகத்தே உள்ள அனைத்து மக்களின் மன நிலையிலும் எப்பொழுதும் எஞ்ஞான்றும் பரிணமித்து இருப்பது மட்டுமல்ல, அவனது சிந்தையிலேயே நிறுத்தவும் செய்கிறான் . ( இல்லை, இருக்கிறான் என்ற சர்ச்சையிலே இல்லை என ஈடுபடுத்துகிறான்.)

    நண்பர் மைனர் ஞானப்பிரகாசம் அவர்களின் எழுத்து, நடை என்னைக் கவர்கிறது. அவரது நேர்மை (தன் எண்ணங்களை அப்படியே எடுத்துச்சொல்லும் ப்ணபும் அடங்கும்) என்னை ஈர்க்கிறது.

    என் நண்பர்களில் பலர் நாத்திகவாதிகள். ஆயினும் அவர்களின் ஒழுக்கம் (ethics) நட்புக்கு அவர்கள் ஈந்த கௌரவம், தன்னலமற்ற பல செயல்கள்,
    எனது ஆத்திக நண்பர்கள் செயல்பாட்டினை விட மதிப்புக்கு உகந்ததாகவும்
    போற்றப்படுவதாகவும் இருந்தது. இருக்கிறது. ethics வேறு. personal ethics இன்னமும் வேறு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் எனப்பேசப்பட்டது இந்த ஆத்திகப் போர்வையில் இருப்போரைப் பற்றிதானோ என நான் நினைத்தது உண்டு. அன்னையை விரட்டி அடித்தவன் அன்னதானம் செய்த கதை போல.

    ஆக,
    எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    மைனர் ஸார் ! நீங்கள் உண்மையிலே ஒரு மேஜர்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  8. மைனர்வாலின் கடிதத்திற்கும் கருத்திற்கும் பாராட்டோ
    மௌனமோ சாதிக்க தேவையில்லை

    நகுதற்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண்
    மேற்சென்று இடித்தற்பொருட்டு.

    என்ற வள்ளுவ வாய்மொழியிலே
    எதை எப்படி சொல்ல வேண்டுமோ

    அதை அப்படி சொல்வதில்
    அய்யருக்கும் மகிழ்ச்சியே..

    அடுத்த பின் ஊட்டத்தில்
    அந்த விளக்கங்கள்..

    ReplyDelete
  9. மைனரின் கட்டுரைக்கு ஏதோ ஒரு வகையில் என் முநதைய பதிவில் காணப்ப‌ட்ட வாசகங்கள் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. (இல்லாமலும் இருக்கலாம்)

    மைனரின் மொழி ஆற்றலும், 'மார்ஷல்லிங் ஆஃப் ஆர்க்யுமெண்டஸ்'(கோர்வையாகக் கருத்துக்களை எடுத்து இயம்புதல்)
    ஆகியவை நன்கு வெளிப்படுத்தியுள்ள பதிவு. அவருடைய மொழி ஆற்றல் பாராட்டுக்குரியது.மனமாறப் பாராட்டுகிறேன்.

    எதிர் தரப்பினைக் கூறும் போது சவால் எல்லாம் விடாமல் அழகாகாக் கூறிய பெருந்தன்மைக்கு ஒரு 'சல்யூட்'

    தற்சமயம் ஒரு கருத்தினை மட்டும் சொல்லி விட்டு விவாதம் போகும் தன்மையைப் பொருத்து என் விளக்கங்களைப் பின்னர் மேல் எடுப்பேன்.

    'ஒன்றே குலம் ஒருவனே தேவனும்' என்று கூறிய திருமூலரும் கூட பூசை ஆராதனை போன்றவற்றின் தேவையைக் குறைத்துப் பேசவில்லை.

    இந்த 'ஒன்று மட்டும்தான்' என்ற கொள்கை உடையவர்களால்தான் இன்று
    உலகமெங்கும் குளறுபடிகள். "நாங்கள் காட்டும் வழி மட்டுமே ஒரே வழி,அதனைக் கைக் கொள்ளாவிட்டால் நீங்கள் நரகத்தில் தள்ளப்படுவீர்கள். பல வழிகளைக் கைக் கொள்ளும் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவூட்ட கடவுள் எங்களை மட்டும் தான் நியமித்து இருக்கிறார்.
    அதுவே வெள்ளை மனிதனின் பளு" என்று கிளம்பி உலகையே அடிமை கொண்டது.அப்படி அடிமையாக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவிற்குத்தான் முதல் இடம். இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொண்டு விடுதலை பெற்றது. அப்படி விடுதலை பெற்ற இந்தியர்கள் பல தெய்வ வழிபாடு செய்தவர்களே.
    விடுதலைக்கான நேரம் வந்தபோது,போராட்டம் வந்தபோது "எந்தெய்வம் தன் தெய்வம்' என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமை அடைந்தார்கள். இங்கே மக்கள் இயல்பாக ஒற்றுமை உணர்வு உடையவர்கள்.
    கருத்து/தத்துவ‌ வேற்றுமை என்பது இங்கே ஆரோக்கியமானதுதானே தவிர அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வது அல்ல.

    அரசியல் கலந்தாலே சண்டைக்கு வழியாகிறது.

    நல்லது மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  10. ஜப்பான் மைனரின் கட்டுரை ஒரு எதார்த்தமான மனிதனின் என்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட நானும் மைனரின் எண்ணங்களோடு ஒத்துப் போகிறேன். கடவுள் தத்துவம் என்பது மனிதன் தனது பரிணாம வளர்ச்சியில் தன்னால் புரிந்து கொள்ள முடியாத சில அற்புதங்களைப் பார்த்து உருவாக்கிய தத்துவப் படைப்பு. மிகப் பழமையான ருக் வேதம் இயற்கையைக் குறிப்பாக சூரியன், காற்று, மழை, இடி, மின்னல் போன்றவற்றை இவை ஏன், எப்படி என்பதைக் கண்டு அறியாத நிலையில் அவற்றை மனிதச் செயல்களுக்கு அப்பாற்பட்டவைகளாக நினைத்து அவற்றை வழிபட்டான். யஜுர் வேதம் இறைவனை நினைந்து வழிபடவும் அதற்கான சடங்குகளையும் குறிப்பது; சாம வேதம் இசையால் இறைவனை வழிபடுவது; அதர்வண வேதம்தான் வேறு பல மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளை உருவாக்க அல்லது அழிக்கப் பயன்படுத்தும் வழியாகப் பயன்பட்டது. ஒருவன் முதுநிலை பட்டம் படித்து, முனைவர் ஆய்வும் செய்து விடுகிறான். மற்றொரு சிறுவன் அரிச்சுவடி படிக்கத் தொடங்குகிறான். முனைவருக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை சிறுவனுக்குச் சொன்னால் புரியாது ஆகையால் அவனுக்கு அரிச்சுவடியில் தொடங்குகிறார்கள். அந்த அரிச்சுவடிதான் கல்வியின் முழுமை என அவன் நினைத்துக் கொண்டால் எத்தனை பேதமையோ, அத்தனை பேதமை முனைவர் அந்த அரிச்சுவடி பையன் தன்னைப் போல் புரியும் தன்மையில் இல்லையே என வருந்துவதும். முதலில் கடவுள் என்றால் அது நம் சக்திக்கு மீறிய ஒரு அபூர்வ சக்தி என்பதைப் புரிய வைக்க உருவங்களை உண்டு பண்ணினார்கள். அவற்றை மனிதன் உருவாக்கியதால் மனித உருவத்தில் கடவுள் சிலைகளை உருவாக்கினான். ஒரு மிருகத்துக்குப் பகுத்தறிவு இருந்தால் அதுவும் கடவுள் உருவங்களை மிருகங்களைப் போலத்தான் உருவாக்கும். இந்த அரிச்சுவடியிலிருந்து சற்று மேலெழுந்து பரம்பொருள் பற்றிப் படிப்படியாக அறிந்து கொள்கிறான். அப்படி அறிந்து கொண்டவனுக்கு இந்த சிலாவழிபாடு தேவையில்லாமல் ஞான மார்க்கம் உதவுகிறது. மகாகவி பாரதி இறைவன் யார் அவன் எங்கிருக்கிறான் என்பதை எங்கும் எதிலும் இருப்பவன் என விளக்குகையில் ஓரிடத்தில் சொல்லுகிறான்: "கேளப்பா சீடனே! கழுதையொன்றை, கீழான பன்றியினை, தேளைப் பார்த்து, தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி, சங்கரா சங்கரா என்று தொழுதல் வேண்டும்" என்கிறான். என்ன பொருள். உலகில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நம்மை மீறிய ஒரு சக்தியால் படைக்கப்பட்டது. ஜீவராசிகள் அனைத்தும் அவன் படைப்பு. அந்த சக்தியே பரம்பொருள். அதனை அவரவர் எந்தப் பெயர் கொண்டு வணங்கினாலும், கடவுள் என்றாலும், ஈசன் என்றாலும், ஒன்றே. இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டால் உலகில் உள்ள எல்லா ஜீவன்களிலும், ஜடப் பொருள்களிலும் மறைந்திருக்கும் சக்திதான் பரம்பொருள் என்பது புலப்படும். அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளத்தான் ஆலயங்கள், மற்ற மத வழிபாடுகள். உள்ளுணர்வு இதனைப் புரிந்து கொண்டால், தெருவிலுள்ள எல்லைக் கல்கூட தெருவில் திரியும் மாடுகள்கூட நமக்குக் கடவுளாகத் தெரியலாம். ஜப்பான் மைனர் தூண்டிவிட்ட இந்த சிந்தனை மனிதனின் ஆழ்மனதில் பதியுமானால் உலகில் நிலவும் பல தொல்லைகள் நீங்கி மனிதன் சுகமாக வாழமுடியும் என்பது திண்ணம். கடவுளைப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது, உணர்ந்தேன், புரிந்து கொண்டேன் என்று சொல்லலாம். அப்படிச் சொல்பவன் விவேகி. ஜப்பான் மைனர் ஒரு விவேகி.

    ReplyDelete
  11. ஐயாவிற்கு வணக்கம்!

    முழுமையான ஆத்திகனும்,முழுமையான நாத்திகனும்,இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை அல்லது வாழ்ந்திருக்கவில்லை!

    உலக இயக்கங்களைக் கண்டு பிரமித்த மனிதன் அவைகள் "சக்தி'யால் இயக்கப்படுவதாக உறுதியாக நம்பினான்! மனிதனால் முடியாததை, கண்ணுக்குத் தெரியாத சக்தியே, உருவாக்கி இயக்குவதாக எண்ணினான்!அந்த சக்தியின் பிரமிப்பில் ஆழ்ந்து அதை வணங்கத் துவங்கினான்!

    உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள், அவர்கள் உணர்ந்த வகையில்,தங்கள் பழக்கவழக்கம் சார்ந்த வகையில் , சக்தி'யை வழிபடத் துவங்கினர்..பிறகு பரப்பினர்..!

    பிறகு வந்ததே பெரியது,சிறியது போராட்டம்!மதத்தின் பெயரால் வந்திருந்தாலும் அவைகள் ஆதிக்க,அதிகாரப் போராட்டமே!

    உணர்வுகளை நம் முன்னோர் கல்லிலும்,சொல்லிலும் வடித்தே சென்றுள்ளனர்!பாரங்களை இறக்கி வைக்கும் சுமைதாங்கிக் கற்களாக இருந்துவிட்டுச் செல்லட்டும் அந்த உணர்வுகள்!

    ReplyDelete
  12. குருவிற்கு வணக்கம்,

    உள்ளேன் ஜயா
    நன்றி

    ReplyDelete
  13. தீர்மானங்களும் தீர்வுகளும்
    திருத்தப்பட வேண்டும்

    மைனர் வால் அவர்கள் குறிப்பிடும்
    அம்பரீஷன், அய்யப்பன்
    ஹஜ் மானசரோவர் பெத்லஹேம் மற்றும் பம்பை பயணங்கள் தான் கடவுளை வெளிப்படுத்தும் செயல் என்றால் (மெதுவாக சிரித்துக் கொள்கிறோம்)

    ///உதாரணத்துக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற தலைப்பை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால்///

    முதலில் யாரை அல்லது எதை கடவுள் என்று தெரியாதவரை

    கண் இல்லாத ஒருவர் கறுப்பு பூனையை இருட்டு அறையிலே அது இல்லாத போது தேடினாற் போல் ஆகும்

    ///கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதே நம்பிக்கை சார்ந்த விஷயம்.///

    நம்பிக்கையே சிலருக்கு கடவுளாக இருக்கலாம்..

    அது சரி.. கடவுள் வேறு இறைவன் வேறு தெயவம் வேறு ஆண்டவன் வேறு. அல்லவா

    ///யாருமே நேரில் பார்த்தது இல்லை..அதனால் concrete வடிவத்தில் அப்படியொரு வஸ்து இல்லை என்பதே முடிவாக இருக்க முடியும்.. ///

    கடவுள் என்பது ஒரு பொருள் என முடிவு செய்து விட்டீர்களா..-? (என்ன மைனர்வால் நீங்களுமா இப்படி,,?)

    நம்பிக்கை தான் ஒருவருக்கு கடவுள் என்றால் அந்த நம்பிக்கையை காட்ட அல்லது பார்க்க முடியும் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்..

    ////என்று சொல்லப்படும் ஒரு வஸ்துவை...////

    வஸ்து என்று தீர்மானித்து விட்டால் ....??

    ///மத ரீதியிலே உருவம் கொண்டு வழிபட்டுப் பிரார்த்திப்போருக்கும் வழக்கிலே இருந்து வரும் கடவுளர்கள் நேரில் வந்து தெளிவுபடுத்தாதவரையிலே ///

    வழக்கில் உள்ளவை என தெளிவாக சொன்னதால் ஒரு சபாஷ்..

    இந்த வழக்கில் உள்ளவை தவறு என்பதை தானே அய்யர் சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பல போராட்டங்களுக்கு நடுவே (பலரிடமும் வேறு மாதியான பெயர்களை துணிந்து வாங்கிக் கொண்டபடியே.. - மைனர்வால் அவர்களே... தாங்கள் அறியாததா,,,?.

    அதனால் தானே அய்யர் சொல்வது மற்றவர்களுக்கு புரியவில்லை என வரிசை கட்டி நிற்கின்றனர்..

    ///கடவுளை அறிந்தேன் / புரிந்தேன்/ தெரிந்தேன்/ உணர்ந்தேன் என்கிற விஷயமெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வழிகளோ என்னும் கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை..///

    முற்றிலும் உண்மை...
    அதை விளக்கவே இத்தனை முயற்சியும் போராட்டமும்..

    (தொடர்கிறது)

    ReplyDelete
  14. தொடர்ச்சி...

    ///கடவுள் என்கிற மாயையான நம்பிக்கையின் பொருட்டு ///

    கடவுள் என்று எதை அல்லது யாரை சொல்கிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லாத வரையில் மாயை என்ற இந்த சொல்லுக்கும் கருத்திற்கும் "கறுப்பு" கொடி காட்டுகிறோம்..

    "சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் "
    என்பது சித்தியார் வாக்கு


    ///மனித குலத்துக்கே அச்சுறுத்த லாய் தீவிரவாதமாய்த் தலையெடுத்து நிற்கும் பேராபத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது இந்தக் காலகட்டம்.. ///

    இதைத்தான் நம்ம ஊரு தலைவர் சொன்னாரு "காவி தீவிரவாதம்" என்று

    ////இந்த கடவுளுக்கான தேடுதலில்///

    (கடவுள் யாரென்றே தெரியாத போது) கடவுளை யாரைய்யா தேட சொன்னார்கள்... (வேறு வேலையே... இல்லையா,,-?)

    ////இந்தக் காலகட்டத்திலே கடவுள் பற்றிய எனது பதிவு ஒரு சாத்வீகத் தீர்வை மனித வாழ்வுக்கு, எதிர்காலத் தலைமுறைக்கு என்று தெரிவிப்பதாக அமைதல் முக்கியம் என்று நினைக்கிறேன்..///

    அதைத்தான் அய்யரும் இது நாள் வரையில் சொல்லி இருக்கிறார் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் வருகிறார்... boarding pass கிடைக்கும் வரையில் சொல்லுவார்..

    அதை புரிந்த கொள்ளாத மக்கள்
    கடவுள் இறைவன் தெய்வம் ஆண்டவன் இவை எல்லாம் ஒன்று என்றும்

    பார்த்தேன் பேசினேன் என குறி கோரும் கோழைத் தனத்தையும்
    எதிர்த்தே

    அறிவது வேறு தெரிவது வேறு புரிவது வேறு உணர்வது வேறு என விளக்கம் தந்து கொண்டு இருப்பதாலே

    அய்யர் வரிக்கு வரி "குற்றம்" கண்டுபிடிக்கும் கீரனாக இருக்கிறார் என நம் வகுப்பில் பலர் சொல்லியதை நீவிரும் அறிவீர் தானே மைனர் வால் அவர்களே..

    ///இயற்கையைக் கடவுள் என்ற வார்த்தைகளிலே கட்டிப் போட்டு கலவரம் செய்யும் மனிதன் ///

    கல்லை கடவுள் என்று முன்னர் சொன்ன நீவிர் இப்போ இயற்கையை கடவுள் என்கிறீர்..

    கடவுள் பற்றிய உமது கருத்தில் தெளிவு இருப்பதாக எமக்கு புரியவில்லை..


    ///தானாக ஒரு கற்பிதம் செய்துகொண்டு அதனை கட்டிக் கொண்டு ஏன் அழ வேண்டும்?//

    அதைத்தான் அய்யரும் கேட்கிறார்..
    எதை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் அல்லது புரிந்ததை மறைக்கின்றனர் என்பது தான் புரியவில்லை..


    ///'ஒன்றே குலம்..ஒருவனே தேவன்' என்று உலக சமுதாயத்துக்கான ஒரு பொதுக் கடவுளை ஏற்படுத்தி விடலாம்.....///

    இப்போ கடவுள் இருக்கட்டும் என்று சொல்கிறீர்கள்..(முன்னுக்கு பின் முரனாக இருக்கிறது என எடுத்துக் கொள்ளவில்லை)

    அது சரி
    இதனை ஏற்கனவே செய்து உள்ளனரே..
    அதை ஏன் நான் ஏற்க வேண்டும் என்பதினால் தானே நீங்கள் சொன்ன இத்தனை கடவுளர்கள்.. வாழ்வாதரா போக்குகள் மண் பொன் ஆசைகள் அரசியல் சூழ்நிலை கைதிகள் என பலப் பல..

    கல்லை கடவுள் என்பாரும் உண்டு
    காதலே கடவுள் என்பாரும் உண்டு


    ///.எந்த உருவத்தை சிபாரிசு செய்யலாம் என்பதை கடவுள் விரும்பிகள் தான் முடிவு செய்ய வேண்டும்..///

    ஆக கடவுளுக்கு உருவம் தர
    உங்களுக்கு விருப்பம் தான்..

    அப்படியானால் அதுவே தவறு என்பது தான் அய்யரின் கருத்து..

    மொத்தத்தில் உங்கள் கடிதம் தீர்வை சொல்லவில்லை என்றாலும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்..

    வழக்கம் போல் சுழன்று வரும் பாடல் அடுத்த பின் ஊட்டத்தில்

    ///தயவு செய்து எனது போட்டோவைக் கேட்டு மெயில் அனுப்பவேண்டாம்.///

    ஆமாம்.. ஆமாம்..
    இல்லையென்னால் உங்களை கடவுளாக்கிவிடுவார்கள்..

    ReplyDelete
  15. இன்றைய வகுப்பிற்கு
    சுழன்று வரும் பாடல்...
    (கவைத்து ரசித்து கேட்டு மகிழுங்கள்)



    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி

    எங்கெங்கோ அலைகின்றார்
    ஞானத் தங்கமே

    அவர் ஏதும் அறியாரடி
    ஞானத் தங்கமே

    உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்

    ஊருக்குப் பகையாவான்
    ஞானத் தங்கமே

    அவன் ஊழ்வினை
    என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்

    கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே

    அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே …. ஞானத் தங்கமே

    பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு…

    தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே

    அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே

    ReplyDelete
  16. ////////தேமொழி said...
    உய்.....உய்.....உய்.....
    (சீழ்கை அடிச்சேன்)
    நெப்போலியன் (ஞானப்ரகாசம் மைனரின் தந்தை பெயர் அல்லவா?) கோல் கொண்டு வந்தாலும் வந்தாரு, சிலம்ப எடுத்திட்டு வந்து ஊடு கட்டி சிலம்பாட்டம் ஆடிட்டாரு. இவருடைய ஞானமும் பிரகாசம்தான். கோர்வையாக சொல்லிவிட்டார்.well said.... மைனருக்கு வாக்களித்துவிட்டேன். ///////

    விமர்சனத்துக்கு நன்றி..விசிலுக்கும் நன்றி..

    இந்த பணமுடிப்பு..அது இதெல்லாம் கிடையாதா?வெறும் விசிலோட வுட்டுட்டீங்களே?

    ReplyDelete
  17. உஷ் ...ரகசியம்... சத்தமா சொல்லக்கூடாது ......
    உங்க ஸ்விஸ் வங்கி கணக்கில் போட்டாகி விட்டது.

    ReplyDelete
  18. //////////thanusu said...
    ////தாங்களின் வாதம் எனக்கு பிடித்திருக்கிறது.///////

    வாதமே செய்யவில்லை என்று வாதம் செய்ய விரும்பவில்லை..நன்றி தனுசு...

    //////ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.அப்படி என்றால் ஆடை அணிந்த மனிதன் முழு மனிதன் .ஆடைதான் மனிதனை முழுமை ஆக்குகிறது.
    கடவுள் இல்லாத மனிதன் அரைமனிதன் கடவுளை அணிந்துக்கொண்டவன் முழுமனிதன்.யாரும் முழு மனிதனாக இருக்கவே விரும்புகிறார்கள். /////

    தினம் தினம் காலையிலும் மாலையிலும் இரவிலும் சிறுது நேரம் மனிதன் ஆடையவிழ்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது..

    ஜப்பானில் வெந்நீர் ஊற்றுக்களில் ஆடையுடன் நுழையவே முடியாது..அனுமதியே கிடையாது..கடுங்குளிர் காலங்களில் இங்கே நுழையும் ஆட்கள் ஏழெட்டு மணி நேரங்களை அப்படியே கடத்துவது வழக்கம்.. (அதனாலேயே கூச்சப்பட்டு கொண்டு அந்த அனுபவங்களை இழந்திருக்கிறேன்..)

    இந்தக் கணங்களில் மனிதன் அரை மனிதனாகிவிடுகிறானா என்ன?

    தவிர ஒரே டிரஸ் போட்டாலும் போரடிக்கும்..
    ஒரு சேன்ஜ் வேணும்ன்னு தோணுவது இயற்கை..
    நீங்க FTV பாக்குறதில்லையோ?...

    சரி..ஃபோர்மல் டிரஸ் எக்ஸ்பெக்ட் பண்ற ஆளுங்க நீங்க சொல்ற இந்த டிரஸ் கோடுலே கம்பெனிக்குள்ளே கூட வுட மாட்டாங்க..

    அதுனாலே இந்த டிரெஸ்ஸை மாத்திடுங்க..
    அதாவுது டிரஸ் உதாரணத்தை மாத்திடுங்க..

    எப்படியோ உங்கள் விருப்பத்துக்கு, நம்பிக்கைக்கு உகந்தவராக, துரோகம் செய்யாதவராக அந்தக் கடவுள் நடந்துகொண்டால் சரிதான்..

    ReplyDelete
  19. //////Parvathy Ramachandran said...
    பெருமதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மைனர் அவர்களே,

    தங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.//////

    "தங்கள் கடிதத்தில் எல்லாவற்றையும் மீறி, என்னைக் கவர்ந்த அம்சங்கள்."என்று பட்டியலிட்டு விளக்கி எழுதி விமர்சித்தமைக்கு நன்றி..சகோதரி..


    ///////Parvathy Ramachandran said...
    மாறுபட்ட கருத்துக்களைச் எப்படிச் சொல்வது என்பது ஒரு கலை. அது பண்பாளர்களுக்கு மட்டுமே கைவரும். தங்களது உயர்ந்த பண்புக்கு ஒரு ராயல்
    சல்யூட். மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் தங்களைப் போன்ற பண்பாளர்களோடு இருக்கும் வாய்ப்பைத் தந்தமைக்கு வகுப்பறைக்கும் வாத்தியாருக்கும் நன்றி.//////

    ஆஹா..இப்படியெல்லாம் தூக்கி மேல ஏத்திவுட வேணாம்..அப்புறமா ஒரு சந்தர்ப்பத்துலே பொட்டுன்னு கீழே போட்டு உடைக்கவும் வேணாம்..

    தங்கள் மதிப்பீட்டுக்கு நன்றி..

    ReplyDelete
  20. மாணிக்க வாசகர் அழகாக சொன்னார் அவனருளாளே அவன் தாழ்வணங்கி. அவனருள் இருந்தால் தான் அவனை பற்றி நினைப்பே வரும். சிலருக்கு முன்னால் வரும்,சிலருக்கு பின்னால் வரும். உண்டு என்பார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை யாரோ ஒரு சித்தர் சொன்னது.

    ReplyDelete
  21. /////கலையரசி said...
    மைனரின் கடிதத்தை அப்படியே பிரசுரித்த வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.
    //பிசிறில்லாத, மிகத் தெளிவான, அற்புதமான கவர்ந்திழுக்கக் கூடிய, வசீகரமான//
    எழுத்து ஆளுமை உங்களுக்கு இருந்ததாக நான் உணர்கிறேன். என்னதான் மைனர் சொல்ல வருகிறார் என்று ஒரே மூச்சாக
    படித்தேன். உங்களின் கருத்தை தெரிந்து கொண்டேன். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை./////////

    படித்துப் பாராட்டியதற்கு நன்றி கலையரசி அவர்களே..தசாவதாரம் பட வசனம் போல வேண்டுதல் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னுதான் எல்லோரும் நினைக்கிறோம்..அப்படி ஒரு அம்சம் இல்லைங்குறதுதானே பிரச்சினையே..

    அப்புறம் ஏன் வீணா இதைக் கட்டிக்கிட்டு அழவேண்டும் என்ற ஆதங்கம்தான் இந்த சின்ன(?) லெட்டர்..

    //////அனால் நிறைய இடத்தில எனக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு அதே நேரம் உங்களின் பல கேள்விக்கும் எனக்கு தெரிந்த பதில்களும் உண்டு.///////

    பதில்களை, முரண்பாடுகளை பதிவாக்கி ஆசிரியருக்கு எழுதி அனுப்புங்கள்..

    ReplyDelete
  22. ஒருவர் தன்னுடைய பின்னூட்டத்தில் அவருக்கு நாத்திகர்களே அதிகம் பேர் நண்பர்கள் என்றும், அவர்கள் ஆத்திக நண்பர்களைக் காட்டிலும் மேல் என்றும் சொல்லுகிறார். நல்லவனாக இருப்பதில் ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன? இரு பிரிவிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. இதை பொது நியதியாக எடுத்துக் கொள்ள முடியாது. சில ஆத்திகர்கள் தங்கள் பூஜை புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு சமயச் சின்னங்களைப் பளிச்சென்று இட்டுக் கொண்டு பணி செய்யும் இடத்துக்குப் பல மணி நேரம் காலதாமதாக வருவார்கள். இது நல்ல ஆத்திகம் அல்ல. அது போலவே நாத்திகர் என்பதால் எதையும், எவரையும் இழிவாகப் பேசும் உரிமை இருப்பதாக எண்ணி நடந்து கொள்வார்கள். குறிப்பாக நாத்திக வாதம் பேசுவோர் தங்களுக்கு ஏற்ற இயக்கத்துக்கு பணம் வசூலிக்கும் போது அந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வார்கள். ஆனால் அதே நபர்கள் வேறு சிலர் கோயிலுக்கு என்று வசூலுக்கு வரும்போது, இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை தரமுடியாது என்பர். நாத்திகர் தங்கள் இயக்கத்துக்கு வசூல் செய்யும் போது மற்றவர் இதே பதிலைச் சொன்னால் அவருக்கு எல்லா வழிகளிலும் தீமை செய்வர். இவைகள் எல்லாம் நான் பணியாற்றிய இடத்தில் கண்டு மனம் நொந்தவை. ஆத்திகனோ, நாத்திகனோ, மனச்சாட்சியோடு தன்னுடைய நம்பிக்கைகளில் உறுதியும், அதே நேரம் நேர்மையாகவும், மனச்சாட்சிக்குப் பயந்தும், பிறருக்கு இடையூறு செய்யாமலும் இருந்தால் போதும் அத்தகையவன் இந்த இரு பிரிவினரிலும் மேலானவன்

    தாய், தந்தை, மகன் எனும் உறவெல்லாம் அவரவர் நடந்து கொள்ளும் விதம் பற்றியது. இந்த உறவுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவு கோலாக இருக்க முடியாது. அவரவருடைய சொந்த அனுபவத்துக் கேற்ப இவர்களை நல்ல விதமாக அல்லது வேறு வகையில் வைத்திருப்பது அவரவர் சொந்த விருப்பம். இதையெல்லாம் பொதுவிதியாக வைத்துக் கொள்ள முடியாது. அப்படி இருப்பவன் அன்னதானம் செய்யக்கூடாது என்பது இல்லை. நீதிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியில் கொடுக்கப்படுவது இல்லை. கொலை என்பதற்கு ஒரே தண்டனையா இருக்கிறது. திட்டமிட்டுக் கொலைக்கு ஒரு தண்டனை. சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை செய்தால் அதற்கு வேறு தண்டனை. எதிர்பாராமல் நடந்த கொலைக்கு மன்னிப்பு கூட உண்டு. ஆகையால் சில விதிகள் பொது விதிகள் அல்ல. நாத்திக ஆத்திக வாதம் பேசுவோர் இரு தரப்பாருமே நேர்மைக்கு மாறாக நடந்து கொள்ளாமல் இருத்தலே
    முழு முதல் கடமை ஆகும். வெளியில் வேஷமும், உள்ளுக்குள் விஷமும் கொண்டிருப்பதுதான் தவறு. இதை ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்லுவேன்.

    ReplyDelete
  23. //ஆஹா..இப்படியெல்லாம் தூக்கி மேல ஏத்திவுட வேணாம்..அப்புறமா ஒரு சந்தர்ப்பத்துலே பொட்டுன்னு கீழே போட்டு உடைக்கவும் வேணாம்.//

    நான் ஒருபோதும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அப்படிச் செய்ததாக நினைவில்லை. ஒவ்வொரு முறையும், உங்களது கருத்தை விமரிசிக்கும் முன்னால், தங்கள் மீது என் மதிப்பைத் தெரிவித்தே துவங்கியிருக்கிறேன்.
    'பெருமதிப்பிற்குரிய' என்ற வார்த்தையை உளமாரவே பயன்படுத்துகிறேன்.
    'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது' நமக்கு ஒத்து வராத விஷயம். இப்போதும் தங்கள் கருத்துக்களில் தான் எனக்கு மாறுபாடு என்று தெளிவாகச் சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன். அதனால், தங்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்புக் குறைந்ததாக அர்த்தமில்லை. எனது பின்னூட்டத்தைப் புறக்கணிக்காது பதில் கூறிய மேன்மைக்கு நன்றி.

    ReplyDelete
  24. /////////sury said...
    நண்பர் மைனர் ஞானப்பிரகாசம் அவர்களின் எழுத்து, நடை என்னைக் கவர்கிறது. அவரது நேர்மை (தன் எண்ணங்களை அப்படியே எடுத்துச்சொல்லும் ப்ணபும் அடங்கும்) என்னை ஈர்க்கிறது.

    என் நண்பர்களில் பலர் நாத்திகவாதிகள். ஆயினும் அவர்களின் ஒழுக்கம் (ethics) நட்புக்கு அவர்கள் ஈந்த கௌரவம், தன்னலமற்ற பல செயல்கள்,
    எனது ஆத்திக நண்பர்கள் செயல்பாட்டினை விட மதிப்புக்கு உகந்ததாகவும்
    போற்றப்படுவதாகவும் இருந்தது. இருக்கிறது. ethics வேறு. personal ethics இன்னமும் வேறு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் எனப்பேசப்பட்டது இந்த ஆத்திகப் போர்வையில் இருப்போரைப் பற்றிதானோ என நான் நினைத்தது உண்டு. அன்னையை விரட்டி அடித்தவன் அன்னதானம் செய்த கதை போல.

    ஆக,
    எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    மைனர் ஸார் ! நீங்கள் உண்மையிலே ஒரு மேஜர்.

    சுப்பு ரத்தினம்.////////

    எனது எழுத்து பற்றி தங்களின் வெளிப்படையான பாராட்டுக்கும்,

    பண்புள்ள நாத்திகவாதிகளை கவுரவித்து விமர்சித்தமைக்கும் மிக்க நன்றி சுப்புரத்தினம் சார்..

    /////////எங்கும் நீக்கமற நிறைந்திருக்குமவன் உலகத்தே உள்ள அனைத்து மக்களின் மன நிலையிலும் எப்பொழுதும் எஞ்ஞான்றும் பரிணமித்து இருப்பது மட்டுமல்ல, அவனது சிந்தையிலேயே நிறுத்தவும் செய்கிறான் . ( இல்லை, இருக்கிறான் என்ற சர்ச்சையிலே இல்லை என ஈடுபடுத்துகிறான்.) //////////

    இன்றைய பொழுதை இப்படி கருத்துப் பரிமாற்றங்களிலே கழிக்க வகை செய்தவனும் அவனே.(கடவுள் subject)
    அந்த வகையில் இல்லையென்று சொல்ல முடியாதுதான்..

    ReplyDelete
  25. //////////தேமொழி said...
    உஷ் ...ரகசியம்... சத்தமா சொல்லக்கூடாது ......
    உங்க ஸ்விஸ் வங்கி கணக்கில் போட்டாகி விட்டது.//////////

    அடப்பாவமே..இந்த நேரத்துலே கொண்டுபோய் அங்கே போட்டுருக்கீங்களே..

    எல்லாத்தையும் இந்திய அரசு நாட்டுடைமையாக்கி அள்ளிக்கிட்டுப் போகப் போகுதாமே?

    ReplyDelete
  26. /////////Parvathy Ramachandran said...
    //ஆஹா..இப்படியெல்லாம் தூக்கி மேல ஏத்திவுட வேணாம்..அப்புறமா ஒரு சந்தர்ப்பத்துலே பொட்டுன்னு கீழே போட்டு உடைக்கவும் வேணாம்.//

    நான் ஒருபோதும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அப்படிச் செய்ததாக நினைவில்லை. ஒவ்வொரு முறையும், உங்களது கருத்தை விமரிசிக்கும் முன்னால், தங்கள் மீது என் மதிப்பைத் தெரிவித்தே துவங்கியிருக்கிறேன்.
    'பெருமதிப்பிற்குரிய' என்ற வார்த்தையை உளமாரவே பயன்படுத்துகிறேன்.
    'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது' நமக்கு ஒத்து வராத விஷயம். இப்போதும் தங்கள் கருத்துக்களில் தான் எனக்கு மாறுபாடு என்று தெளிவாகச் சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன். அதனால், தங்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்புக் குறைந்ததாக அர்த்தமில்லை. எனது பின்னூட்டத்தைப் புறக்கணிக்காது பதில் கூறிய மேன்மைக்கு நன்றி./////////

    மிக்க நன்றி..சகோதரி..

    ReplyDelete
  27. those who need some clarifications about existence of god can read books written by agathiar naadi teller sri hanumathdasan.

    ReplyDelete
  28. Thanjavooraan said...
    ///நல்லவனாக இருப்பதில் ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன? இரு பிரிவிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. இதை பொது நியதியாக எடுத்துக் கொள்ள முடியாது.....///

    ஆஹா....

    ///ஆத்திகனோ, நாத்திகனோ, மனச்சாட்சியோடு தன்னுடைய நம்பிக்கைகளில் உறுதியும், அதே நேரம் நேர்மையாகவும், மனச்சாட்சிக்குப் பயந்தும், பிறருக்கு இடையூறு செய்யாமலும் இருந்தால் போதும் அத்தகையவன் இந்த இரு பிரிவினரிலும் மேலானவன்......////

    ஆஹா....ஆஹா....

    ///நாத்திக ஆத்திக வாதம் பேசுவோர் இரு தரப்பாருமே நேர்மைக்கு மாறாக நடந்து கொள்ளாமல் இருத்தலே முழு முதல் கடமை ஆகும். வெளியில் வேஷமும், உள்ளுக்குள் விஷமும் கொண்டிருப்பதுதான் தவறு......////

    ஓஹோ...ஆஹஹா ...மாற்றுக் கருத்துக்கே இடமில்லை

    ReplyDelete
  29. ////////////kmr.krishnan said...
    மைனரின் கட்டுரைக்கு ஏதோ ஒரு வகையில் என் முநதைய பதிவில் காணப்ப‌ட்ட வாசகங்கள் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. (இல்லாமலும் இருக்கலாம்)///////
    (இல்லாமலும் இருக்கலாம்) இதுதான் சரி..
    /////மைனரின் மொழி ஆற்றலும், 'மார்ஷல்லிங் ஆஃப் ஆர்க்யுமெண்டஸ்'(கோர்வையாகக் கருத்துக்களை எடுத்து இயம்புதல்)
    ஆகியவை நன்கு வெளிப்படுத்தியுள்ள பதிவு. அவருடைய மொழி ஆற்றல் பாராட்டுக்குரியது.மனமாறப் பாராட்டுகிறேன்.////////

    எதிர் தரப்பினைக் கூறும் போது சவால் எல்லாம் விடாமல் அழகாகாக் கூறிய பெருந்தன்மைக்கு ஒரு 'சல்யூட்'//////////

    KMRKசாருக்கு வணக்கம்..எழுத்தைப் பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு தவறாமல் வாரம் ஒரு படைப்பென தொடர்ந்து எழுதிவரும் வகுப்பறை சீனியர் வாசகர் தாங்கள்..

    எனது எழுத்துநடை பற்றிய விமர்சனம்,பாராட்டு ஊக்கத்தைத் தருகிறது..மிக்க நன்றி..

    பதிலளிக்கும் முகமாகத்தான் எனது தற்போதைய மனநிலையின் பிரதிபலிப்பை எழுதினேன்..நேற்று இரவு நேற்றைய பின்னூட்டங்களைப் படித்த பிறகு அய்யர் கொடுத்த உளத் தூண்டுதலில் எங்கே ஆரம்பிப்பது..எங்கே முடிப்பது என்றில்லாமல் மனம்போன போக்கிலே ஆரம்பித்து ஒரு வழியாக முடித்து அனுப்பி வைத்தேன்..

    /////தற்சமயம் ஒரு கருத்தினை மட்டும் சொல்லி விட்டு விவாதம் போகும் தன்மையைப் பொருத்து என் விளக்கங்களைப் பின்னர் மேல் எடுப்பேன்.////////

    விவாதம் என்ற அளவிலே தொடர நிறைய அளவிலே முகாந்திரம் உள்ள விஷயமானாலும் தொடர சித்தமில்லை..

    அவரவர் விருப்பத்துக்கு,நடத்தைக்கு உரிய பலனை அவரவரே அனுபவிக்க முடியும்..

    தனக்குள்ளேயோ,எங்கேயோ - இல்லாத ஒரு பொருளைத் தேடும்போது அனுபவித்து உணர்ந்து தெளிதலே நல்ல வழி..

    பாதிவழி கடந்தபின்னர் சென்றவழி தவறானதாகிப் போனதே என்ற வருத்தமும் தவறான வழியைத் தேர்ந்தேடுத்தவரையே சாரும்..

    அவரவர் வாழ்க்கை..அவரவர் செலவழிக்கும் நேரம் ..அவரவர் விருப்பம்..அவரவர் கையில்..தங்கள் கருத்துப் பதிவுக்கு மீண்டும்.. நன்றி..

    ReplyDelete
  30. ///////Thanjavooraan said...
    ஜப்பான் மைனரின் கட்டுரை ஒரு எதார்த்தமான மனிதனின் என்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட நானும் மைனரின் எண்ணங்களோடு ஒத்துப் போகிறேன். ////

    எதார்த்த மனநிலையை எடுத்துரைத்த அய்யா அவர்களுக்கு நன்றி..

    //////ஜப்பான் மைனர் தூண்டிவிட்ட இந்த சிந்தனை மனிதனின் ஆழ்மனதில் பதியுமானால் உலகில் நிலவும் பல தொல்லைகள் நீங்கி மனிதன் சுகமாக வாழமுடியும் என்பது திண்ணம். கடவுளைப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது, உணர்ந்தேன், புரிந்து கொண்டேன் என்று சொல்லலாம். அப்படிச் சொல்பவன் விவேகி. ஜப்பான் மைனர் ஒரு விவேகி.///////

    எனக்குப் புரியாத விஷயங்கள் இன்னும் எவ்வளவோ..நீண்ட விளக்கத்துக்கு நன்றி அய்யா...

    ReplyDelete
  31. Thanjavooraan said...
    //உள்ளுணர்வு இதனைப் புரிந்து கொண்டால், தெருவிலுள்ள எல்லைக் கல்கூட தெருவில் திரியும் மாடுகள்கூட நமக்குக் கடவுளாகத் தெரியலாம். ஜப்பான் மைனர் தூண்டிவிட்ட இந்த சிந்தனை மனிதனின் ஆழ்மனதில் பதியுமானால் உலகில் நிலவும் பல தொல்லைகள் நீங்கி மனிதன் சுகமாக வாழமுடியும் என்பது திண்ணம்//.

    //நாத்திக ஆத்திக வாதம் பேசுவோர் இரு தரப்பாருமே நேர்மைக்கு மாறாக நடந்து கொள்ளாமல் இருத்தலே முழு முதல் கடமை ஆகும்//

    தங்களது கருத்துக்கள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் அல்ல. கோடி, கோடி பெறும். சகோதரி தேமொழி சொன்னது போல், மாற்றுக் கருத்துக்களுக்கு இடமே இல்லை.

    ReplyDelete
  32. /////////ரமேஷ் வெங்கடபதி said...
    முழுமையான ஆத்திகனும்,முழுமையான நாத்திகனும்,இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை அல்லது வாழ்ந்திருக்கவில்லை!//////////

    தங்களின் கருத்தை ஏற்கிறேன்..

    அனுபவ ரீதியிலேதான் கடவுளை உணர முடியும் என்கிற போது அந்த அனுபவம் அவரவருக்கு மட்டுமே தெரியும்..வெப்பமும் குளிரும் போல என்று கொள்ளலாமா எனத் தோன்றுகிறது..
    மனிதரனைவருக்கும் பொதுவிலான ஒரு விஷயமாக ஏற்று செயல்பட வாய்ப்பு இல்லை..
    அதனாலேதான் சுயஅனுபவங்கள் மனிதனின் சிதனையிலே எண்ணமாக ஆக்கிரமித்து அவனிடமிருந்து எந்த வகையிலாவது வெளிப்படும்போது மனிதனை நாத்திகனாகவும்,ஆத்திகனகவும் மாற்றிக்காட்டுகின்றன..

    அதனாலேதான் நீங்கள் சொன்னபடி பிறப்பிலிருந்தே நாத்திகனாக ஒருவன் பிறக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை ஆதரிக்கிறேன்..

    'கடவுள் அம்சம் இருக்கிறது' என்ற அழகான கற்பனைதான் ஆத்திகம் என்றால் அந்தக் கற்பனை இல்லாதவன் நாத்திகவாதியாகிறான்..காலப் போக்கிலே இருவருக்குள்ளும் சுய அனுபவங்கள் மாற்றங்களை உண்டு பண்ணும்போது அவர்கள் அப்படி அறியப்படுகிறார்கள்..எனவே உங்கள் வரி முழுக்க பொருந்திப் போகிறது..

    ReplyDelete
  33. ///////Thanjavooraan said...
    ஒருவர் தன்னுடைய பின்னூட்டத்தில் அவருக்கு நாத்திகர்களே அதிகம் பேர் நண்பர்கள் என்றும், அவர்கள் ஆத்திக நண்பர்களைக் காட்டிலும் மேல் என்றும் சொல்லுகிறார். நல்லவனாக இருப்பதில் ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன? இரு பிரிவிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு.////////////

    இந்தியாவிலே லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும்' என்ற தாரக மந்திரத்திலே ஊறிப் போன என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்..குங்குமப் பொட்டு வைத்திருக்கும் அலுவலக அதிகாரிகளை அணுகி எளிதில் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்பார்..அவரின் அனுபவம் அந்தக் கருத்தாக்கத்துக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது..

    தலை முழுக்க ருத்திராட்சம் கட்டிக் கொண்டும், தங்க சிம்மாசனங்களுக்கு அடித்துக் கொண்டு பட்டாபிஷேகம் நடத்திக் கொண்டும் துறவறத்தைக் கேலிப் பொருளாக்கும் மனிதர்கள் வாழும் காலகட்டத்திலே "நல்லவனாக இருப்பதில் ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன?" என்று தனிமனித ஒழுக்கம் பற்றிய தங்களின் கருத்துப் பதிவு சிறப்பானது..

    ReplyDelete
  34. அய்யர் said.../////////__________________________________________________///////////

    பின்னூட்டமிட்டு கருத்துக்களை
    வழக்கம் போல் தெரிவித்த விசுவநாதன் அய்யருக்கு நன்றி..

    ReplyDelete
  35. //எனது ஆத்திக நண்பர்கள் செயல்பாட்டினை விட மதிப்புக்கு உகந்ததாகவும்
    போற்றப்படுவதாகவும் இருந்தது. இருக்கிறது. ethics வேறு. personal ethics இன்னமும் வேறு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் எனப்பேசப்பட்டது இந்த ஆத்திகப் போர்வையில் இருப்போரைப் பற்றிதானோ என நான் நினைத்தது உண்டு. அன்னையை விரட்டி அடித்தவன் அன்னதானம் செய்த கதை போல. //

    ஆத்திகம் பேசுவோன் கட்டாயமாக அவன் கூறும் பாதையை/தர்மங்களை நியாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பாப்பு ஏனையோரிடம் உண்டு.ஆத்திகவாதி பிறாரால் நன்கு கண்காணிக்கப்படுகிறான்.

    நாத்திகவாதி சமூகத்தில் பழகும் போது கெளரவ‌மாக நட்ந்து கொண்டுவிட்டால் போதுமானது. மற்றபடி அவனுடைய தனிமனித ஒழுக்கம் முன்னப்பின்ன இருந்தாலும் "அவருக்குத்தான் உங்களுடைய நடைமுறை சாஸ்திர,சம்பிரதாயங்களில் நம்பிக்கைகிடையாது.
    எனவே அவரை விமர்சிக்காதே'என்று ஒரு சலுகை கிடைத்துவிடுகிறது.

    ஆத்திக வாதி சிறிது தவறினாலும் "திருநீறு பூசிக்கொண்டு இப்படியா செய்வது?
    திருமண் தரித்தா இப்படி செய்வது? உனக்கெல்லாம் எதுக்கய்யா சாமி பூதம் எல்லாம்?"என்று விமர்சனம் கிளம்பிவிடும். ஒன்று அந்த நபர் நாஸ்திகனாக மாறிக் கொள்ள வேண்டும் அல்லது தன்னுடைய பலவீனங்களில் இருந்து விடுபடவேண்டும்.ஆத்திகன் அதிகமாக பூதஞ்சி,ருத்ராட்சப்பூனை என்ற பெயர் எடுப்பான். நாத்திகனுக்கு அந்த அவப்பெயர் கிடைக்காது.

    ஹிப்பாக்ரசி சிறிதும் இல்லாதவன் தான் தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்றால் இங்கே ஒரு நற்செயலும் நடைபெறாது.பாவ நிவர்த்தியாகச் செய்யும் நற்செயல்களால் பயன் ஏழைகளுக்குக் கிட்டினால் எனக்குச் சம்மதமே.

    ReplyDelete
  36. ///நாத்திகவாதி சமூகத்தில் பழகும் போது கெளரவ‌மாக நட்ந்து கொண்டுவிட்டால் போதுமானது. மற்றபடி அவனுடைய தனிமனித ஒழுக்கம் முன்னப்பின்ன இருந்தாலும் "அவருக்குத்தான் உங்களுடைய நடைமுறை சாஸ்திர,சம்பிரதாயங்களில் நம்பிக்கைகிடையாது.
    எனவே அவரை விமர்சிக்காதே'என்று ஒரு சலுகை கிடைத்துவிடுகிறது.///

    இல்லை, முற்றிலும் தவறான கருத்து.
    ஒருவர் இப்படி இருப்பதுதான் உயர்ந்த வாழ்க்கை என மற்றவர்களுக்கு போதித்தால், தான் போதிப்பது போல அவர் நடக்க வேண்டும் என்பது மனிதர்களின் எதிபார்ப்பு.

    தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்று நடந்து கொள்பர்கள் யாராக இருந்தாலும் மக்கள் வசை பாடுவதில் எந்த சலுகையும் தந்ததில்லை, தரவும் மாட்டார்கள்.

    நீ படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? என்று தவறமல் கேட்பார்கள்.
    நல்லொழுக்கத்தை போதிப்பவர்களிடம், நல்லொழுக்கம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு.

    நித்யானந்தத்தையும் மக்கள் திட்டுவார்கள், வயதான காலத்தில் இளவயது பெண்ணை மணந்த பெரியாரை விட்டும் பிரிந்து போய் புதுக்கட்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. உண்மையில் அவர்கள் நடத்தை தனிப்பட்ட பிரச்னை. யாருக்கும் அவர்கள் நடவடிக்கை என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்ற கேள்விகள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஆனால், போதித்தால் நீ முதலில் நடந்து காட்டு என்று தவறாமல் அறிவுறுத்தப் படும். யாருக்கும் சலுகை கொடுத்ததில்லை.

    ReplyDelete
  37. நமக்கு ஒண்ணுமே புரியல பாஸ்...

    ரொம்ப ஹைலெவல் சுப்ஜெக்ட்-ஆ இருக்கு...

    ReplyDelete
  38. இந்த சதுரகிரி-ல இன்னும் 18 சித்தர்கள் சுத்திகிட்டு இருக்குகாங்கலமே உண்மையா ?

    ReplyDelete
  39. //இளவயது பெண்ணை மணந்த பெரியாரை விட்டும் பிரிந்து போய் புதுக்கட்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. //

    இந்த விவாதம் திசை மாறிப்போய் விடுமோ என்ற அச்சத்திலேயே கூறுகிறேன்.

    அரசியலில் ஈடுபட்டு பதவிக‌ளை அடைய வேண்டும் என்று பெரியாருடன் இருந்த இளையவர்கள் ஆவல் கொண்டுவிட்டனர்.பெரியாரோ தன்னுடைய இயக்கம் ஓர் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமுதாய இயக்கமாகவே தொடர வேண்டும் என்றே கருதினார்.எனவே அவரை விட்டுப் பிரிவதற்கு ஒரு காரணம்
    வேண்டுமே என்று கருதிய போது, வந்து சேர்ந்தது அவருடைய திருமணப் பிரச்சனை.இன்னும் முக்கியமாக அவர் இளம் பெண்ணைத் திருமணம் செய்ததை விட, அவருடைய அரசியல்/சமுதாய‌ எதிரியான(ஆனால் நெருங்கிய நண்பரான) பார்ப்பன‌ ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டுத் திருமணம் செய்தது ஒரு பிரச்சனை ஆக்கப்பட்டது. அவர் செய்த பொருந்தாத் திருமணம் பற்றி அதிகம் பேசப்படவில்லை.பின்னர் அது மறந்தே போனது. அவருக்கு 1967க்குப்பின்னர் மீண்டும் 'ராஜரிஷி' பதவி கிடைத்தது.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. //நீ படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? என்று தவறமல் கேட்பார்கள்.நல்லொழுக்கத்தை போதிப்பவர்களிடம், நல்லொழுக்கம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு.
    நித்யானந்தத்தையும் மக்கள் திட்டுவார்கள்,//

    நான் என் பின்னூட்டத்திலும் போதிப்பவர்களைப் பற்றிக் கூறவில்லை. பொதுவாக வெளிப்பார்வைக்கு ஆத்திகத் தோற்றம் உடையவர்கள் கூட சிறிது வழுவினாலும் உடனிருப்பவர்கள் விமர்சிப்பார்கள். அப்போது அவருடைய ஆத்திகத் தன்மை கேள்வி கேட்கப்படும். நாத்திகர்களுக்கு அப்படியல்ல என்பதுதான் என் பின்னூட்டத்தின் பொருள்.

    நித்யானந்தாவை ஆதரிக்கும் ஒரு குழுவும் உள்ளது.தெய்வமாக வழிபடவும் ஒரு
    சாரார் தயார்.பிறரிடமிருந்து மாறுபட்ட எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும்
    ஆவலில் நித்யானந்தத்தின் செயல்களுக்கு ஆதரவு வியாக்யானம் கொடுப்பவர்களும் உண்டு.(நான் அந்தக் குழுவில் இல்லை. ஹிஹிஹி)

    ReplyDelete
  42. /// இந்த சதுரகிரி-ல இன்னும் 18
    சித்தர்கள்
    சுத்திகிட்டு இருக்குகாங்கலமே உண்மையா ? ///

    சித்தர்கள் சதுரகிரி மலை,
    கொல்லிமலை,இமயமலையில் தான்
    வாழ வேண்டும்,என்கின்ற
    பிரபஞ்ச கட்டாயம்
    எதுவுமில்லை.
    அவர்கள் நம்மோடு கூட
    வாழலாம்.அவர்களை
    உணர்வதற்கான
    'உள்ளோளி' நம்மில்
    பலருக்கு இருப்பதில்லை.
    இந்தியாவின் ஆன்மிக
    செல்வங்கள்,போலி
    ஆன்மிகவாதிகளாலும்,போலி
    மதவாதிகளாலும்,சிறிது
    சிறிதாக,அழிந்து கொண்டு
    வருகிறது என்பது
    வேதனைபட வேண்டிய
    விசயமாகும்.
    இதற்காக நாம் அனைவரும்
    பொறுப்பு ஏற்க வேண்டும்.

    ReplyDelete
  43. Dear Minor,

    Though I am not in line with your thoughts , I like the way you presented your points....

    ///ஏனெனில் ஒருவரின் பேச்சைக் கேட்கும் போதோ,கருத்தைப் படிக்கும் போதோ இடரும் எண்ணங்களில் எப்போதும் போல பலவும் இருந்தாலும் சொல்ல வந்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேட்பது என்கிற அடிப்படைப் பண்பு நம்மில் பலருக்கும் இயல்பான குணமாக இருப்பதால் அந்த அடிப்படையிலே அமைதி காக்கும் தன்மை என்னைப் போன்ற ஆட்களிடம் இருக்கும்..////////

    Regards
    Ramadu.

    ReplyDelete
  44. Dear Minor,

    Though I am not in line with your thoughts , I like the way you presented your points....

    ///ஏனெனில் ஒருவரின் பேச்சைக் கேட்கும் போதோ,கருத்தைப் படிக்கும் போதோ இடரும் எண்ணங்களில் எப்போதும் போல பலவும் இருந்தாலும் சொல்ல வந்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேட்பது என்கிற அடிப்படைப் பண்பு நம்மில் பலருக்கும் இயல்பான குணமாக இருப்பதால் அந்த அடிப்படையிலே அமைதி காக்கும் தன்மை என்னைப் போன்ற ஆட்களிடம் இருக்கும்..////////

    Regards
    Ramadu.

    ReplyDelete
  45. ////// Pandian said...
    நமக்கு ஒண்ணுமே புரியல பாஸ்...

    ரொம்ப ஹைலெவல் சுப்ஜெக்ட்-ஆ இருக்கு...

    இந்த சதுரகிரி-ல இன்னும் 18 சித்தர்கள் சுத்திகிட்டு இருக்குகாங்கலமே உண்மையா ?///////

    பாண்டியன்,

    நீங்க இந்த நேரத்துலே சதுரகிரி மலை பத்தியெல்லாம் ஆர்வம் காட்டுறது நல்லதாப் படலே..
    சங்கரி மேல மட்டும் ஆர்வத்தைக் காமிச்சாப் போதும்..கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு ஆகுற வேலையைப் பாருங்க..
    இதுதான் இன்னிக்கு நான் சொல்லியிருக்குற சுப்ஜெக்ட்டே(?)..ச்சே..உங்க பாணியே வருது.. சப்ஜெக்ட்டே..

    ReplyDelete
  46. /////////rajesh said...
    மாணிக்க வாசகர் அழகாக சொன்னார் அவனருளாளே அவன் தாழ்வணங்கி. அவனருள் இருந்தால் தான் அவனை பற்றி நினைப்பே வரும். சிலருக்கு முன்னால் வரும்,சிலருக்கு பின்னால் வரும். உண்டு என்பார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை யாரோ ஒரு சித்தர் சொன்னது.///////////

    எவனோ எப்பிடியோ போறான்..நாம நம்ம பிழைப்பைப் பார்ப்போம்..இதத்தான் நான் சொல்ல வந்தது..

    ReplyDelete
  47. ////////arul said...
    those who need some clarifications about existence of god can read books written by agathiar naadi teller sri hanumathdasan.//////

    Thanks for ur reference.I think this may be useful for whom having thirst to have a reading experience of god.
    தெரிதல்/அறிதல்/புரிதல் வகை அனுபவத்துக்கு உதவியாக இருக்கலாம்..

    ReplyDelete
  48. ////////kmr.krishnan said...நித்யானந்தாவை ஆதரிக்கும் ஒரு குழுவும் உள்ளது.தெய்வமாக வழிபடவும் ஒரு
    சாரார் தயார்.பிறரிடமிருந்து மாறுபட்ட எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும்
    ஆவலில் நித்யானந்தத்தின் செயல்களுக்கு ஆதரவு வியாக்யானம் கொடுப்பவர்களும் உண்டு.(நான் அந்தக் குழுவில் இல்லை. ஹிஹிஹி)///////

    'இந்து மதத்துக்கு எதிரான சதி இது' என்று எதிராளிகள் பற்றி அறிக்கையெல்லாம் வுட்டுருக்காரே பரமஹம்ச நித்தியானந்தர்..

    "நான் அந்தக் குழுவில் இல்லை"ன்னு நீங்க சொல்றீங்க.. அப்போ நீஙக இந்துமதத்துக்கு எதிரான ஆளாகிடப் போறீங்க..பார்த்து சார்..

    ReplyDelete
  49. ///////RAMADU Family said...
    Dear Minor,

    Though I am not in line with your thoughts , I like the way you presented your points....

    ///ஏனெனில் ஒருவரின் பேச்சைக் கேட்கும் போதோ,கருத்தைப் படிக்கும் போதோ இடரும் எண்ணங்களில் எப்போதும் போல பலவும் இருந்தாலும் சொல்ல வந்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேட்பது என்கிற அடிப்படைப் பண்பு நம்மில் பலருக்கும் இயல்பான குணமாக இருப்பதால் அந்த அடிப்படையிலே அமைதி காக்கும் தன்மை என்னைப் போன்ற ஆட்களிடம் இருக்கும்..////////

    Regards
    Ramadu./////////

    Thanks for your appreciation dear RAMADU.

    ReplyDelete
  50. minorwall said...
    ///////எவனோ எப்பிடியோ போறான்..நாம நம்ம பிழைப்பைப் பார்ப்போம்..இதத்தான் நான் சொல்ல வந்தது..///

    இதைத் தான் நாமும் சொல்வது..
    தவம் செய்வார் தம் கருமம் செய்வார்

    இதை சாதனமாக்கி காசு சம்பாதிப்பதுடன் மற்றவர்களையும் சேம்பேறிகள் (சோம்பேறி என எழுத துணைகால் எழுத்து போட கூட சோம்பலாம்) திருந்த வேண்டுமென்றால் மக்களுக்கு அறிவுள்ள விழிப்புணர்வு (திரும்பவும் சொல்கிறோம்...) "அறிவுள்ள விழிப்புணர்வு" தேவை..

    காலம் கணியும் என்றே
    காத்திருப்போம்..உறுதியான நம்பிக்கையுடன்

    ReplyDelete
  51. நம்ம கோவியார் வருவார் என
    இது வரையில் பார்த்திருந்தோம்..

    போர்டுல யாரப்பா அங்கே..
    கோவியாருக்கு போனை போட்டு தகவல் சொல்லங்க..

    ReplyDelete
  52. //"நான் அந்தக் குழுவில் இல்லை"ன்னு நீங்க சொல்றீங்க.. அப்போ நீஙக இந்துமதத்துக்கு எதிரான ஆளாகிடப் போறீங்க..பார்த்து சார்..//
    http://www.tamilhindu.com 2 மே 2012
    "மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்
    - தஞ்சை வெ.கோபாலன் " என்ற பதிவில் போய் பின்னூட்டம் இட்டு நீங்கள் சொன்ன 'மாதுரி'இந்து மதத் துரோகி பட்டம் வாங்கி வந்துவிட்டேன்.ஜயேந்திரர் பக்தர்களும், நித்யா பக்தர்களும் என்மீது செருப்பு வீசாததுதான் பாக்கி.

    ReplyDelete
  53. சங்கரி மேல மட்டும் ஆர்வத்தைக் காமிச்சாப் போதும்..////

    சங்கரி நம்ம சொத்து மாம்ஸ்...

    இதுதான் இன்னிக்கு நான் சொல்லியிருக்குற சுப்ஜெக்ட்டே(?)..ச்சே..உங்க பாணியே வருது.. சப்ஜெக்ட்டே..//////////

    வந்துருச்சா...ஆவ்....

    விடுங்க பாஸ்...இதெல்லாம் நமுக்கு புதுசா...நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி...இப்ப கேக்கவ வேணும்...

    ReplyDelete
  54. அடுத்து நம்ம பார்வதி அக்காவின் கட்டுரை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்...

    also what i am surprised is how come a person interested is astrology is so much against the beleif in existence of god r the ultimate power ????????....

    ReplyDelete
  55. படைப்புன்னு ஒன்னு இருந்த படைப்பளின்னு ஒருத்தர் இருந்து தான ஆகணும் ??????...

    Sounds very simple logic for me...

    ReplyDelete
  56. ////// Pandian said...
    also what i am surprised is how come a person interested is astrology is so much against the beleif in existence of god r the ultimate power ????????....////////

    இந்தக் கேள்வியை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்தேன்..வானிலே ஒன்பது கிரகங்கள் சுற்றி வருவது நிஜம்..முன்னோர்கள் அதனைக் கணித்திருப்பதுவும் துல்லியம் என்று நிகழ்கால ஆராய்ச்சியாளர்கள் வழங்கியிருக்கும் சான்றிதழ்களும் நிஜம்..வாழ்க்கையிலே பலருக்கும் தாமாகவே தீர்வு காணமுடியாத புறக்காரணிகளின் தாக்கத்தினால் உண்டான பலவித பிரச்சினைகள் இருப்பதுவும் நிஜம்..கோள்களின் தாக்கம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று பலரும் சொல்லிக்கொண்டிருபதுவும் நிஜம்..

    அதிலே உண்மைகள் இருக்குமா என்று ஆராய ஆர்வம் வந்தது இயற்கையானது..

    நிஜமாக இல்லாத ஒரு கற்பிதப் பொருளை,
    இதுவரையிலே யாருமே எப்படியிருக்கும் என்றே அறியாத / புரியாத / தெரியாத / உணராத கடவுள் என்கிற ஒரு விஷயத்தை,
    கண் இல்லாத ஒருவர் கறுப்பு பூனையை இருட்டு அறையிலே அது இல்லாத போது தேடினாற் போல் ஆகும் அந்த நிலையிலேதான் தேடும் மனிதனின் நிலை கருத்திலே கொள்ளப்படும் என்று எல்லாம் தெரிந்ததாகச் சொல்லும் ஆன்மீகவாதிகளே பறைசாற்றும் ஒரு விஷயத்தைப் பற்றிய வீண் ஆராய்ச்சியிலே காலத்தைக் கழிக்க முடியாது என்பதையே எனது கடிதத்திலே கூறியிருந்தேன்..

    This is the real reason why I am going against the beleif in existence of god r the ultimate power..

    ReplyDelete
  57. /////// Pandian said...
    படைப்புன்னு ஒன்னு இருந்த படைப்பளின்னு ஒருத்தர் இருந்து தான ஆகணும் ??????...

    Sounds very simple logic for me...////////

    விஞ்ஞானம் இதுவரையிலே படைப்பு பற்றிய முதல் உயிரின் செல் உருவானது பற்றியும், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி எங்கிருந்து எப்படித் தோன்றியது என்றும் கொடுத்திருக்கும் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை படித்துக் கடந்துதான் நாமெல்லோருமே பள்ளிப் பருவங்களைக் கடந்திருக்கமுடியும்..எனவே திரும்ப ஒரு முறை அரிச்சுவடியிலிருந்து பாடம் நடத்தவேண்டிய/படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    It is very simple..

    ReplyDelete
  58. minorwall said...
    ////நிஜமாக இல்லாத ஒரு கற்பிதப் பொருளை,
    இதுவரையிலே யாருமே எப்படியிருக்கும் என்றே அறியாத / புரியாத / தெரியாத / உணராத கடவுள் என்கிற ஒரு விஷயத்தை,
    கண் இல்லாத ஒருவர் கறுப்பு பூனையை இருட்டு அறையிலே அது இல்லாத போது தேடினாற் போல் ஆகும் ///

    கடவுளை பொருள் என்று சொல்லும் முடிவுக்கு வந்தது எப்படி சரியாகும் மைனர்வால் ,,,?


    ///எல்லாம் தெரிந்ததாகச் சொல்லும் ஆன்மீகவாதிகளே ///

    மன்னிக்க..
    நீங்கள் குறிப்பிடும் ஆன்மிகவாதிகள் என்பது சரியல்ல என்பது அய்யரின் கருத்து.. அவர்களை மத வாதிகள் என குறிப்பிடலாம்..

    ஆன்மிகம் என்பது மதங்களை கடந்தது அல்லவா..

    இது புரியாமல் பலரும் ஆன்மிக கட்டுரை என்பார் அதில் ஒரு மதத்தை பற்றியே எழுதுவார்.. எடுத்துச் சொன்னால் அய்யர் சொல்வது புரியவில்லை எல்லோருக்கும் புரியும் படி சொல்லுங்கள் என்பார்..
    சரி தானே மைனர்வால்..

    ///This is the real reason why I am going against the beleif in existence of god r the ultimate power..///

    இதற்கான விளக்கத்தை உண்மையிலேயே தாங்கள் அறிய விரும்பினால் "ஆம்" என்று ஒரு பதில் சொல்லுங்கள்....

    நீங்கள் அறிந்து உணரும் படி ஒரு சந்தர்ப்பத்தை தருகிறோம்..
    (கட்டாயமும் இல்லை அவசியமும் இல்லை.. முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையில் தான்)

    நம்ம சிங்கை செல்வர் இந்த பதிவினை பார்த்திருந்தால் அவர் வேறு விதமாக சொல்லி யிருப்பார்... ங்ம்மமம்

    ReplyDelete
  59. ////எனவே திரும்ப ஒரு முறை அரிச்சுவடியிலிருந்து பாடம் நடத்தவேண்டிய/படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.///

    தவறுகள் தொடங்கியதே அங்கு தான்...
    அதை தவறு என்று புரிந்து கொள்ள மீண்டும் படிக்க வேண்டும் என்பதே உண்மை..

    என்ன பாண்டியா.....
    படிக்கலாமா....?

    ReplyDelete
  60. ///"நல்லவனாக இருப்பதில் ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன?" என்று தனிமனித ஒழுக்கம் பற்றிய தங்களின் கருத்துப் பதிவு சிறப்பானது..///

    நல்லவன் என்று எந்த பொருளில் சொல்கி.றீர்கள்... புரியவில்லையே..

    ஒழுக்கம் எனப்படுவது யாதெனில்
    என விளக்கம் யாரும் தரவில்லையே..

    பொதுவான பொருளில் வைத்து உயர்வான சொற்களை கையாளுதல் விளக்குதல் சரியல்ல..

    இது அய்யரின் கருத்து..

    ReplyDelete
  61. ///தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்று நடந்து கொள்பர்கள் யாராக இருந்தாலும் மக்கள் வசை பாடுவதில் எந்த சலுகையும் தந்ததில்லை, தரவும் மாட்டார்கள்.///

    அது சரி தேமொழியாரே..
    அதைத்தானே குடும்பங்களிலும், அலுவலகங்களிலும், பொது வாழ்க்கையிலும் செய்து கொண்டு இருக்கின்றனர்..

    மீறி கேட்டால் அவர்கள் odd man out
    ஒத்துப் போனால் ஜால்ரா..
    விளக்கம் சொல்ல முயன்றால் அவன் (யாருக்கும்) புரியாதவன்...!!

    இது தானே இன்றைய சூழல்
    சொல்லுங்கள் தோழியாரே...

    ReplyDelete
  62. /////அய்யர் said...
    minorwall said...
    ////நிஜமாக இல்லாத ஒரு கற்பிதப் பொருளை,
    இதுவரையிலே யாருமே எப்படியிருக்கும் என்றே அறியாத / புரியாத / தெரியாத / உணராத கடவுள் என்கிற ஒரு விஷயத்தை,
    கண் இல்லாத ஒருவர் கறுப்பு பூனையை இருட்டு அறையிலே அது இல்லாத போது தேடினாற் போல் ஆகும் ///

    கடவுளை பொருள் என்று சொல்லும் முடிவுக்கு வந்தது எப்படி சரியாகும் மைனர்வால் ,,,?//////

    "'எதை' கடவுள் என்று சொல்கிறீர்?' "என்று அக்ரிணையில் ஆரம்பித்து வைத்ததே நீங்கதானே அய்யர்வாள்.?

    ReplyDelete
  63. /////அய்யர் said... //This is the real reason why I am going against the beleif in existence of god r the ultimate power..///
    இதற்கான விளக்கத்தை உண்மையிலேயே தாங்கள் அறிய விரும்பினால் "ஆம்" என்று ஒரு பதில் சொல்லுங்கள்....
    நீங்கள் அறிந்து உணரும் படி ஒரு சந்தர்ப்பத்தை தருகிறோம்..
    (கட்டாயமும் இல்லை அவசியமும் இல்லை.. முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையில் தான்)///

    the ultimate power..க்கு distributership எடுத்திருக்கிறீர் என்பதை இதுவரையில் சொல்லவே இல்லியே..?

    'ஆம்'

    ReplyDelete
  64. minorwall said...
    ///the ultimate power..க்கு distributership எடுத்திருக்கிறீர் என்பதை இதுவரையில் சொல்லவே இல்லியே..?

    'ஆம்'///

    உங்கள் "ஆம்"க்கு சபாஷ்...
    distributorship என்று சொல்ல நினைத்த உங்களுக்கு production unit என்று சொல்ல வரலையே...

    முதல் நிலை 25 மே (வெள்ளிக்கிழமை)

    இன்னமும் 2 நிகழ்வுகளை பின்னர் தருகிறோம்..

    அதன் பிறகு பகிர்ந்து கொள்ளுங்கள் விரும்பினால்...

    ReplyDelete
  65. ///அய்யர் said...
    இது தானே இன்றைய சூழல்
    சொல்லுங்கள் தோழியாரே... ///

    ஐயா, உங்களுக்கு கடிதமாக எழுதிவிட்டேன், மின்னஞ்சலைப் பார்க்கவும்

    ReplyDelete
  66. தேமொழி said...
    ///ஐயா, உங்களுக்கு கடிதமாக எழுதிவிட்டேன், மின்னஞ்சலைப் பார்க்கவும்////

    உள்ளபடியே பாராட்டுகிறோம்
    உங்கள் முயற்சிக்கு நன்றிகள்..

    நீண்ட கடிதமாயிருந்தாலும்
    நிறைய தகவல்கள் தந்தன

    உணர்வுகளை புரிந்து கொண்டு
    உறவுக்கு கை கொடுக்கும் எண்ணத்திற்கு
    வாழ்த்துக்கள்..

    பதில் கதை மற்றும்
    பாடலுடன் ரிப்ளே தந்து விட்டோம்

    வளமான வாழ்த்துக்கள்
    வழக்கம் போல் அள்ளித் தருகிறோம்

    ReplyDelete
  67. முதலில் பண்பு பிறழாமல் எழுதப்பட்ட ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்!

    யாருமே நேரில் பார்த்தது இல்லை..அதனால் concrete வடிவத்தில் அப்படியொரு வஸ்து இல்லை என்பதே முடிவாக இருக்க முடியும்.. //

    கடவுளை நேரில் பார்த்ததாக யாராவது சொல்லியிருந்தாலும் / சொன்னாலும் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் அதை நம்பப்போவதில்லை. அப்படியிருக்க இதை நிரூபிப்பது கடினம் (இதே கருத்தை வைத்து நான் எழுத ஆரம்பித்த ஆக்கம் பாதியில் கிடப்பில் இருக்கிறது, விரைவில் முடித்து அனுப்புகிறேன்).

    எதையுமே மறுத்துச் சொல்லுமுன், அதைப்பற்றிய குறைந்தபட்ச ஆராய்ச்சியாவது செய்யவேண்டும். கடவுளை மறுப்பவர்கள் அவை எதையும் செய்வதில்லை. கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பது இருக்கட்டும், கடவுள் இல்லை என்று முடிவிற்கு வந்தவர்கள் அதை நிரூபிக்க எதுவும் முயற்சிகள் எடுத்துள்ளார்களா?

    உண்மையில் கடவுளை உணர்ந்தவர்கள் அதை ஒரு பெருமையாகக்கருதி தண்டோரா போட்டு சொல்லமாட்டார்கள் என்பதே என் கருத்து. தனக்குள்ளேயே ஆழ்ந்து விடுவார்கள். அப்படிப் பெருமையடித்துக்கொண்டு கூட்டம் சேர்ப்பவர்கள் டுபாக்கூர் ஆசாமிகள் என்பதால் நான் அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது. வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது எல்லாம் மேஜிக் மன்னர்கள் செய்வது. அவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. அப்படிப்பட்டவர்களை ஆன்மீகவாதிகள் என்று ஏற்றி விடுவது யார் தவறு? இதில் உடல், தலை என தங்கத்தால் அலங்கரித்துக்கொண்டு பட்டாபிஷேகம் நடத்திக்கொண்டு திரியும் நித்தியும் அடக்கம்.

    போகாத ஊருக்கான இந்தத் தேடலையே நிறுத்திவிட்டால்தான் என்ன மூழ்கிவிடப் போகிறது? //

    இதுவும் ஒருவகையில் உங்களின் கருத்துத் திணிப்புதான். அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு. அது சரியோ தவறோ, பலன்களும் அவர்களுக்கே எனும்போது இந்த இரண்டு பிரிவினருமே ஒரு புரிந்துணர்வுடன் பழகுவதே நன்மை பயக்கும்.

    'ஒன்றே குலம்..ஒருவனே தேவன்' என்று உலக சமுதாயத்துக்கான ஒரு பொதுக் கடவுளை ஏற்படுத்தி விடலாம்....//

    ஏற்கனவே புதிது புதிதாக கடவுள்களை வரித்துக்கொண்டு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி, கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் என ஏகத்திற்கும் களைகட்டி இருக்கிறது.
    தயவு செய்து எனது போட்டோவைக் கேட்டு மெயில் அனுப்பவேண்டாம்.நன்றி..//
    இதுல இப்படி ஓர் ஆசையா?

    ReplyDelete
  68. ஹிப்பாக்ரசி சிறிதும் இல்லாதவன் தான் தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்றால் இங்கே ஒரு நற்செயலும் நடைபெறாது.பாவ நிவர்த்தியாகச் செய்யும் நற்செயல்களால் பயன் ஏழைகளுக்குக் கிட்டினால் எனக்குச் சம்மதமே.//

    பதினைந்து நாட்களுக்கு முன் கணவரின் நெருங்கிய உறவினர் காலமானார். அவர் உடல்நலமில்லாமல் படுக்கையில் சில காலம் இருந்தபோது சரியாக யாரும் கவனிக்கவில்லை, 'எங்க அப்பா எனக்கு என்ன சொத்து வைத்திருக்கிறார், நான் ஏன் ஆஸ்பத்திரிக்குச் செலவு செய்யணும்' எனக்கேட்ட பையன், அதையே வழிமொழிந்த மருமகள். உறவினர்கள் அனைவரும் மனம் பொறுக்காமல் அவர் இப்படிக் கஷ்டப்படாம சீக்கிரம் போய்ச் சேர்ந்தால் நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தனர் (என் கணவர் உட்பட). இப்போது காலமானபின் செய்த காரியங்களில் நிறைய பணம் செலவழித்து (பசு மாடு தானம் உட்பட) செய்த பையன் வேதம் படித்த ஒரு சாஸ்திரிகள். இங்கேயும் இதை நற்செயலாகப் பார்க்கிறீர்களா?

    ReplyDelete
  69. 'ஆம்'//

    மைனர், 25 ஆம் தேதி என்ன நடந்ததுன்னு தெரியலேன்னா என் தலை சுக்குநூறா வெடிச்சுடும், அதனால மின்னஞ்சலிலாவது தெரியப்படுத்திவிடவும்!!!

    ReplyDelete
  70. ///Uma said...இதே கருத்தை வைத்து நான் எழுத ஆரம்பித்த ஆக்கம் பாதியில் கிடப்பில் இருக்கிறது, விரைவில் முடித்து அனுப்புகிறேன்////

    உமா, நீங்க இப்படி கிடப்பில போட்டு வசிருக்கிரதையே பட்டியல் போட்டு ஓர் பதிவா போடுங்களேன். அந்த அளவுக்கு இருக்கும் போலிருக்கிறது.

    ReplyDelete
  71. அன்புக்குரிய உமா அவர்களுக்கு,

    தங்களின் விமர்சனம் கண்டு இந்தப் பதிவு பூரிப்படைந்து, பூரணத்துவமும் அடைந்து விட்டது..

    25th ஸ்பெஷல் வில் பி definitely சென்ட் டு யுவர் notification ..
    தேங்க்ஸ்..

    ReplyDelete
  72. உமா, நீங்க இப்படி கிடப்பில போட்டு வசிருக்கிரதையே பட்டியல் போட்டு ஓர் பதிவா போடுங்களேன். அந்த அளவுக்கு இருக்கும் போலிருக்கிறது.//

    தேமொழி, இதை இப்போதுதான் கவனித்தேன், அத ஏன் கேட்கறீங்க? ஆர்வக்கோளாறில் எழுத ஆரம்பித்துவிட்டு முடிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதுக்குன்னு பப்ளிக்ல பட்டியல் போட்டா நம்ம இமேஜ் என்னாகுறது?

    ReplyDelete
  73. தங்களின் விமர்சனம் கண்டு இந்தப் பதிவு பூரிப்படைந்து, பூரணத்துவமும் அடைந்து விட்டது..//

    ???????????!!!!!!!!!!!!!!!!!!!

    25th ஸ்பெஷல் வில் பி definitely சென்ட் டு யுவர் notification ..//

    மைனர் இன்னிக்கு தேதி 26 இன்னிக்கே எனக்கு தெரிஞ்சாகணும்!!! இல்லேன்னா ராத்திரி தூக்கம் வராது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com