மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.5.12

Astrology மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு!

----------------------------------------------------------------
Doubt: மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு!

Doubts: கேள்வி பதில் பகுதி ஏழு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஏழு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.28
செல்லபிரசாத் ராமசாமி

அன்புள்ள அய்யா,
என்னுடைய சந்தேகங்கள்

1.கிரகங்கள் ஆதிபத்தியத்தியத்தை கொண்டுதானே நன்மையோ தீமையோ செய்வார்கள்? பின் ஏன் சுபர், பாபர் என்று பிரிக்கப்பட்டுள்ளது?

வாத்தியார்கள் எல்லோருமே பாடம்தானே நடத்துவார்கள். அவர்களை ஏன் வகுப்பு ஆசிரியர், தமிழாசிரியர், கணக்கு வாத்தியார், உடற்கல்வி வாத்தியார், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பிரித்துள்ளார்கள்? மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே? படித்த அறிவாளி, படிக்காத முட்டாள், செல்வந்தன், ஏழை, அப்பாவி, கேடி (பேட்டை தாதா) என்று ஏன் பிரித்துச் சொல்கிறார்கள்? அப்படித்தான் இதுவும்!

2.நவாம்சத்தில் லக்னம் ஆணுக்கு ஆண் ராசியிலும் பெண்ணுக்கு பெண் ராசியிலும்தான் அமையும் என்பது உண்மையா?

இருக்கிற குழப்பம் போதும். நீங்கள் வேறு புதிதாக எதையாவது கேட்டு வைக்காதீர்கள்.

3.துல்லியமான கணிப்புகளுக்கு வாக்ய பஞ்சாங்கம் சிறந்ததா? திருக்கணித பஞ்சாங்கம் சிறந்ததா? திருகணித பஞ்சாங்கம் சிறந்தது எனில் பண்டைய காலங்களில் எப்படி கணித்தார்கள்?

பண்டைய காலங்களில் கணிதமே இல்லையா? என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?

1. இந்தியக் கணிதவியலின் வரலாற்றைப் பற்றிய பல செய்திகள் இந்தத் தளத்தில் உள்ளன. படித்துப் பாருங்கள் 2. 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணித மேதை ஆர்யபட்டரைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே! Aryabhata (IAST: Āryabhaṭa; Sanskrit: आर्यभट) (476–550 CE) was the first in the line of great mathematician-astronomers from the classical age of Indian mathematics and Indian astronomy. His most famous works are the Aryabhatiya (499 CE, when he was 23 years old) and the Arya-siddhanta.

சரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்

4.பாக்ய ஸ்தானத்தில் அதிக பரல்களையும், தொழில் மற்றும் லாப ஸ்தானத்தில் குறைந்த பரல்களையும் பெற்ற ஜாதகன் அனைத்து பாக்யங்களையும் அனுபவிக்க முடியுமா?

உழைக்காமல் அனுபவிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் இல்லையா? உழைக்காமல் அனுபவிக்க , 3, 7, 11ஆம் வீடுகள் நன்றாக இருக்க வேண்டும்.அந்த அமைப்பிற்குப் பெயர் காம ஜாதகம். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் தேடிப்படியுங்கள்

5.சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சரியாக ஜாதகம் கணிக்க முடியுமா? முடியும் எனில் மனிதனே குழந்தையின் லக்னத்தை மாற்ற முடியுமே?

அதைத்தானே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கேட்கிறார்கள். தாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வரவேண்டுமா/ அல்லது கிழிக்காமல் வரவேண்டுமா? என்பதையும் கால தேவனே நிர்ணயிக்கிறான். ஆகவே கிழித்துக் கொண்டு வந்து தரையில் விழும் நேரம் அல்லது மருத்துவர் கையில் தவழத்து வங்கும் நேரமே அக்குழந்தையின் பிறந்த நேரம்.

6. கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற சுப கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமா?

கனமழை என்றால் அனைவருக்கும் அது மழைதான். குடை, ரெயின் கோட் போட்டிருப்பவன் சற்றுப் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் மழையின் பாதிப்பில் இருந்து அவன் தப்பிக்க முடியாது. நனைய வேண்டிய இடங்கள் நனையும்!

7. ஓரு வீட்டில் அதிக பரல்களை உடைய கிரகத்திற்குதான் (அது நீசமாகியிருந்தாலும்) அதிக வலிமை உள்ளதா?

ஆமாம். இல்லாவிட்டால் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு என்ன அர்த்தம்?

அன்புடன்
செல்லபிரசாத் ராமசாமி
----------------------------------------------------
email No.29
பிரியா பிரதீப்

கேள்வி பதில்களுக்கு நன்றி ஐயா,

1. நீசம் நீசம் என்று சொல்கிறார்களே ! இந்த நீசம் ஆன கிரகத்திற்கு tonic ஏதாவது குடுத்து strong ஆக்க முடியுமா?

அப்படி ஆக்க முடிந்தால்? ஆகா, நினைக்கவே குஷியாக இருக்கிறது!

வாருங்கள், கற்பனை செய்து பார்ப்போம். கற்பனைக்கென்ன காசா - பண்மா?
ஆகவே செய்து பார்ப்போம்!

337 டானிக்கைப்போல 999 டானிக் ஒன்றை உருவாக்கி அத்தனை கிரகங்களுக்கும் கொடுத்து விடலாம்.
அத்தனை கிரகங்களையுமே உச்சமாக்கி விடலாம். எந்த கிரகத்திற்கும் சொந்த வீடு கிடையாது. அனைத்து ராசிகளுமே பொதுவானது என்று சொல்லி விடலாம்.அவர்களுக்குள் நிலவும் பகையைப் போக்கி அனைவருக்கும் நட்பு உறவை உண்டாக்கி விடலாம். அத்தனை கிரகங்களையும் ஒரே சுற்றுப்பாதையில் ஓட விட்டுக் கோள்சாரத்தை இல்லாமல் செய்து விடலாம். கிரகங்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கி விடலாம்.
அதனால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. இந்தியாவில் இருக்கும் அத்தனை பெண்களுமே அனுஷ்கா சர்மாவைப் போல அழகாக இருப்பார்கள். ஆண்கள் அத்தனை பேர்களும் அஜீத்தை போல அழகாக இருப்பார்கள். பெண் பார்க்கும் வேலை, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் மிச்சம்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.ஜாதி எல்லாம் ஒழிந்து விடும் யாரும் வயல்களில் வேலை செய்ய வேண்டாம். பயிர்கள் தானாகவே விளையும். வீட்டில் கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும். யாரும் பள்ளிக்கூடம் போக வேண்டாம். பிறக்கும்போதே 4 மொழிகள், 25 தொழில் நுட்பக்கல்விகளுடன் குழந்தைகள் பிறக்கும். 25 வயதிற்கு மேல் யாருக்கும் வயது ஏறாது. அனைவரும் இளமையுடன் இருப்பார்கள். யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் மோதல் இருக்காது. காதல் மட்டுமே இருக்கும். நோய்களே இருக்காது. பிரசவத்திற்கு மட்டுமே மருத்துவமனைகள் இருக்கும். பிரசவங்கள் அனைத்தும் 100% சுகப் பிரசவமாகவே இருக்கும். அரசியலில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கட்சிகளே இருக்காது. பிரதமர் பதவிக்குக்கூட கெஞ்சி ஆள் பிடிக்க வேண்டியதாயிருக்கும். மொத்ததில், கதை, மற்றும் சஸ்பென்ஸ், திருப்பமுள்ள சம்பவங்கள் இல்லாத படம் (டாக்குமென்ட்டரி படம்) போல வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா சொல்லுங்கள் - முயற்சி செய்வோம்!

2. தசாபுத்தி பத்தி கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் . எனக்கு ஜாதகம் வைத்து சொன்னது புரியவில்லை ...(bhuthan is not helping me to understand). எத்தனை பரல் இருந்தால் தசா காலத்தில் எவ்வளவு நல்லது ? எந்த வீட்டில் இருந்தால் எப்படி என்று ...(கேள்வி சின்னப் பிள்ளைத் தனமாகக் இருந்தால் மனிக்கவும்) விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் கதை போல் இருக்கிறது அன்டு சொல்லிவிடாதீர்கள் (ஹி ஹி ஹி)

ஜாதகத்தை வைத்துச் சொன்னபோதே புரியவில்லை என்றால், இப்போது சொன்னால் மட்டும் புரியவா போகிறது? புரிந்து என்ன ஆகப்போகிறது. ஆகவே விட்டு விடுங்கள்! (ஹி ஹி ஹி)

3. 23ல் வேலை கிடைக்கும் 25ல் வெளிநாடு போவா, 50ல் வீடு வாங்குவான். கடன் எந்த வயதில் தீரும் etc... என்று சொல்றாங்களே ? அது தசாவச்சு எப்படி பார்க்கிறது ஐயா ? கேள்விகள் பல மனதில் எழுந்தாலும் , அசிரியர் நேரமும் , என்னும் இரண்டு தடவை படித்தால் புரியும் என்பதால் போதும் ஐயா...

இரண்டு முறை படித்தால் புரியும் என்று நீங்களே சொல்கிறீர்கள். பேசாமல் இரண்டுமுறை அல்லது நான்கு முறைகள் பாடங்களைப் படியுங்கள். அப்போதும் புரியாவிட்டால், அடுத்த கேள்வி பதில் செஷனுக்கு வந்து கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகச் சொல்லித் தருகிறேன். இப்பொது என்னை விட்டு விடுங்கள் சகோதரி! (என் நேரம் சரியாக இல்லை!)

thanks a lot
Priya

நல்ல கேள்விகளாகக் கேட்டு என்னை சிந்திக்க வைத்ததற்கு நானும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!:-)))
-----------------------------------------
email No.30
சுரேந்திரன் சங்கர்

அன்புள்ள ஆசானே,

1. கோசார ரீதியில் கிரக பலாபலன்- ராசியிலிருந்து கணகிட்டு பார்க்கணுமா (Numbering from chandran) or லக்னத்திலிருந்து கணக்கிட்டுப் பார்க்கணுமா ?
உதாரணத்திற்கு தற்பொது குரு கும்பத்தில், சந்திரனுக்கு 11ல் இருக்க நல்ல பலனை தருவார், அதே, ரிஷப லக்னத்திலிருந்து குரு 10ல் இருக்கிறார் நல்லதொரு பலனை தரமாட்டார், SO in this scenario how do we conclude கிரக பலாபலன் (குரு/சனி transit) ? ராசியை வைத்து பலன் சொல்வது சரியா ? லக்னத்திலிருந்து குரு/கிரக postion- பலன் சரியானது ?

விடிய விடிய ராமாயணம் கேட்டவன், விடிந்தவுடன் சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா!. அந்தக் கதையாக இருக்கிறது உங்கள் கேள்வி. 300 பாடங்கள் நடத்தி இருக்கிறேன். அதைப் படித்து விட்டு அல்லது படிக்காமல் இந்தக் கேள்வியைக் கேட்கும் உங்களை நினைத்தால், பாடம் நடத்திய எனக்கு வருத்தமாக உள்ளது.

கோள்சாரப் பலனை சந்திரன் இருக்கும் ராசியில் இருந்துதான் பார்க்க வேண்டும் சாமி! இது மறக்காமல் இருக்க 100 முறை imposition எழுதுங்கள்

2. மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனை - EXAMPLE 3ல் சனி - 6ல்செவ்வாய், ரிஷப லக்னம் தைன்ய பரிவர்த்தனை ” பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பது. அப்படி இருந்தால், பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் அடிபட்டுப்போகும்! உங்கள் மொழியில் சொன்னால், காயப்பட்டு, படுத்துக் கொண்டு விடும்” என்று எழதியிருந்திர்கள்
so above example who is hurted ? and which house is got hurted ? இப்படி பட்ட மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனையில் ஒரு கிரகம் யோககாரகனாக இருந்தால் பலாபலன் எப்படி ? what is over all effect of above exchange?

பாடத்தை எழுதிய நான்தான் முதலில் அடிபட்டுப்போனேன். பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் என்றால், 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதிகளாக இல்லாத கிரகம் என்னும் பொருள் அதில் உள்ளது உங்களுக்கு ஏன் தெரியவில்லை? பரிவர்த்தனைப் பாடத்தை மீண்டும் படியுங்கள்
---------------------------------
email No.31
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

1.மாந்தி ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவிற்கு முக்கியமானது ?

மாந்தியைப் பற்றி மின்னஞ்சல் எண் 17ற்குப் பதில் அளித்துள்ளேன். அதைப்படித்துப் பாருங்கள்

2.மாந்தி லாபஸ்தானத்தில் மற்ற கிரகங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்?

மாந்தி தீய கிரகம். அதனுடன் மற்ற கிரகங்கள் சேராமல் இருப்பது உத்தமம். சேர்ந்து இருந்தால், தீயவனுடன் சேர்ந்த பலனை அனுபவிக்க வேண்டியதுதான்!

மு அருள்
-----------------------------------------------------
(தொடரும்)
வாழ்க வளமுடன்!
அன்புடன்
வாத்தியார்

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19 comments:

  1. பாடத்திற்கு முன்னர் ஒரு
    படம் வருமே... இப்போதில்லையே...

    கம்
    தேகம்
    சந்தேகம்
    என வரும் கேள்விகள்...
    எடுத்து தரும் பதில்களை...
    javascript:void(0)
    படித்துக் கொண்டு வருகிறோம்
    படித்துக் கொள்வதற்காக..

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம் ,

    அருமையான பதில்கள்,

    என் மகனுக்கு வயது 26 வேலையை
    பற்றி
    சிம்மம் லக்கணம் 27 பரல் 6

    மீனம் ராசி 32 " 6
    3 கேது 30 "
    4 சனி 26 " 4
    5 செவ்வாய் 27 " 2
    6 36 "
    7 குரு 25 "
    8 சந்திரன் 32 "
    9 ராகு 22 "
    10 சூரியன், புதன் 28 " 5,3
    11 சுக்கிரன் 26 " 5
    12 26 "

    அவன் வெளிநாடு செல்ல வேண்டும்
    என்று கேட்கிறான்

    குருவே என்னை மன்னிக்கவும்

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம் ,

    அருமையான பதில்கள்,

    என் மகனுக்கு வயது 26 வேலையை
    பற்றி
    சிம்மம் லக்கணம் 27 பரல் 6

    மீனம் ராசி 32 " 6
    3 கேது 30 "
    4 சனி 26 " 4
    5 செவ்வாய் 27 " 2
    6 36 "
    7 குரு 25 "
    8 சந்திரன் 32 "
    9 ராகு 22 "
    10 சூரியன், புதன் 28 " 5,3
    11 சுக்கிரன் 26 " 5
    12 26 "

    அவன் வெளிநாடு செல்ல வேண்டும்
    என்று கேட்கிறான்

    குருவே என்னை மன்னிக்கவும்

    ReplyDelete
  4. /*1.கிரகங்கள் ஆதிபத்தியத்தியத்தை கொண்டுதானே நன்மையோ தீமையோ செய்வார்கள்? பின் ஏன் சுபர், பாபர் என்று பிரிக்கப்பட்டுள்ளது?

    வாத்தியார்கள் எல்லோருமே பாடம்தானே நடத்துவார்கள். அவர்களை ஏன் வகுப்பு ஆசிரியர், தமிழாசிரியர், கணக்கு வாத்தியார், உடற்கல்வி வாத்தியார், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பிரித்துள்ளார்கள்? மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே? படித்த அறிவாளி, படிக்காத முட்டாள், செல்வந்தன், ஏழை, அப்பாவி, கேடி (பேட்டை தாதா) என்று ஏன் பிரித்துச் சொல்கிறார்கள்? அப்படித்தான் இதுவும்!
    */

    ஆசிரியரே, மேலுள்ள (முதலாவது )வினாவுக்கு தங்கள் பதில் எனக்கு புரிந்து கொள்ளும்படியாக இல்லை. தயவு செய்து மேலதிக விளக்கம் தரவும். சுப, அசுப கிரகங்களின் ஆதிபத்திய பலன்கள் எவ்வாறு வேறுபாடும் என்று ஒரு விளக்கம் தேவை. எங்களை தெளிவடைய வைக்க தங்களால் தான் முடியும் என்று நம்புகிறேன்.
    உதாரணமாக குரு லக்கினதிபதியாக இருப்பதற்கும் சனிஸ்வரன் லக்கினாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்கள் ஆதிபத்திய பலன்களில் எவ்வாறு பாகுபாடு காட்டுவார்கள் ஜாதகனுக்கு?

    ReplyDelete
  5. // மாந்தி தீய கிரகம்,அதனுடன் மற்ற கிரகங்கள் சேராமல் இருப்பது உத்தமம்.சேர்ந்து இருந்தால் தீயவனுடன் சேர்ந்த பலனை அனுபவிக்க வேண்டியதுதான்///

    மொத்தத்தில் மாந்தி இருக்கும் இடமும் சேரும் கிரகமும் சாந்தி தராதோ.

    ReplyDelete
  6. arumayana kelvi pathil enathu kelviyum idam pertullathu patri magilchi asiriyarukku nandri

    ReplyDelete
  7. 1. நீசம் நீசம் என்று சொல்கிறார்களே ! இந்த நீசம் ஆன கிரகத்திற்கு tonic ஏதாவது குடுத்து strong ஆக்க முடியுமா?

    அப்படி ஆக்க முடிந்தால்? ஆகா, நினைக்கவே குஷியாக இருக்கிறது!

    வாருங்கள், கற்பனை செய்து பார்ப்போம். கற்பனைக்கென்ன காசா - பண்மா?
    ஆகவே செய்து பார்ப்போம்!

    337 டானிக்கைப்போல 999 டானிக் ஒன்றை உருவாக்கி அத்தனை கிரகங்களுக்கும் கொடுத்து விடலாம். அத்தனை கிரகங்களையுமே உச்சமாக்கி விடலாம். எந்த கிரகத்திற்கும் சொந்த வீடு கிடையாது. அனைத்து ராசிகளுமே பொதுவானது என்று சொல்லி விடலாம்.அவர்களுக்குள் நிலவும் பகையைப் போக்கி அனைவருக்கும் நட்பு உறவை உண்டாக்கி விடலாம். அத்தனை கிரகங்களையும் ஒரே சுற்றுப்பாதையில் ஓட விட்டுக் கோள்சாரத்தை இல்லாமல் செய்து விடலாம். கிரகங்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கி விடலாம்.
    அதனால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. இந்தியாவில் இருக்கும் அத்தனை பெண்களுமே அனுஷ்கா சர்மாவைப் போல அழகாக இருப்பார்கள். ஆண்கள் அத்தனை பேர்களும் அஜீத்தை போல அழகாக இருப்பார்கள். பெண் பார்க்கும் வேலை, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் மிச்சம்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.ஜாதி எல்லாம் ஒழிந்து விடும் யாரும் வயல்களில் வேலை செய்ய வேண்டாம். பயிர்கள் தானாகவே விளையும். வீட்டில் கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும். யாரும் பள்ளிக்கூடம் போக வேண்டாம். பிறக்கும்போதே 4 மொழிகள், 25 தொழில் நுட்பக்கல்விகளுடன் குழந்தைகள் பிறக்கும். 25 வயதிற்கு மேல் யாருக்கும் வயது ஏறாது. அனைவரும் இளமையுடன் இருப்பார்கள். யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் மோதல் இருக்காது. காதல் மட்டுமே இருக்கும். நோய்களே இருக்காது. பிரசவத்திற்கு மட்டுமே மருத்துவமனைகள் இருக்கும். பிரசவங்கள் அனைத்தும் 100% சுகப் பிரசவமாகவே இருக்கும். அரசியலில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கட்சிகளே இருக்காது. பிரதமர் பதவிக்குக்கூட கெஞ்சி ஆள் பிடிக்க வேண்டியதாயிருக்கும். மொத்ததில், கதை, மற்றும் சஸ்பென்ஸ், திருப்பமுள்ள சம்பவங்கள் இல்லாத படம் (டாக்குமென்ட்டரி படம்) போல வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா சொல்லுங்கள் - முயற்சி செய்வோம்!

    அருமையான கற்பனை. சொர்க்கம் எப்படி இருக்கும் என்று நான் இவ்வளவு நாளாக இப்படி தான் கற்பனை செய்திருந்தேன்.

    ReplyDelete
  8. //கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும்.//

    பின் எதைத் தோண்டினால் தண்ணிர் கிடைக்கும் வாத்தியாரே.

    //குரு லக்கினதிபதியாக இருப்பதற்கும் சனிஸ்வரன் லக்கினாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்கள் ஆதிபத்திய பலன்களில் எவ்வாறு பாகுபாடு காட்டுவார்கள் ஜாதகனுக்கு?//

    இதற்கு பதில் சொல்வதானால் பின்னூட்டத்தில் முடியாது. தனி பாடமாகதான் சொல்ல வேண்டும். வாத்தியார் இதற்கு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    சந்திர காவியம் என்னும் ஜோதிட நூலுக்கு உரை எழுதும் போது அதன் உரை ஆசிரியர் சொன்னது. சுப கிரகங்கள் நன்மை செய்வதானாலும் தீமை செய்வதானாலும் மிதமாக செய்வார்கள். பாப கிரகங்கள் நன்மை செய்வதானால் அதிக நன்மையும் தீமை செய்வதானால் அதிக தீமையும் செய்வார்கள். இது அவருடைய கருத்து. இது சரியாக இருக்கிறதா என்று அவரவர் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்

    சிவாஜியில் ஒரு பன்ஸ் டயலாக் வரும் சும்மா பேரை கேட்டாலே அதிருதில்ல என்பதனை ஞாபகத்திற்கு கொண்டு வரும் அளவிற்கு தங்களுடைய பதில் இருந்தது .

    குறிப்பிட்டு கூறுவதாக இருந்தால் ஒரு இடத்தில மிகவும் சரியாக.

    ReplyDelete
  10. ஐயா, உண்மையில் இந்தப் பாடங்களைப் படித்ததாக என் குறிப்பில் குறித்து வைத்திருக்கிறேன்.
    ஆனால், நீங்கள் கலாய்ப்பாக எழுதும் பதில்களைப் பார்த்தால் மட்டுமே... அந்தப் பதில்கள் பதிவைப் படித்ததை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதாவது பாடங்கள் மறந்துவிட்டது, நகைச்சுவை மட்டுமே நினைவில் தங்கி உள்ளது ...ஹி.ஹி.ஹீ ....

    ReplyDelete
  11. Blogger அய்யர் said...
    பாடத்திற்கு முன்னர் ஒரு
    படம் வருமே... இப்போதில்லையே...
    கம்
    தேகம்
    சந்தேகம்
    என வரும் கேள்விகள்...
    எடுத்து தரும் பதில்களை...
    javascript:void(0)
    படித்துக் கொண்டு வருகிறோம்
    படித்துக் கொள்வதற்காக../////

    நீங்கள் தகுதியான படங்களை அனுப்பி வையுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  12. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம் ,
    அருமையான பதில்கள்,
    என் மகனுக்கு வயது 26 வேலையை பற்றி
    சிம்மம் லக்கணம் 27 பரல் 6
    மீனம் ராசி 32 " 6
    3 கேது 30 "
    4 சனி 26 " 4
    5 செவ்வாய் 27 " 2
    6 36 "
    7 குரு 25 "
    8 சந்திரன் 32 "
    9 ராகு 22 "
    10 சூரியன், புதன் 28 " 5,3
    11 சுக்கிரன் 26 " 5
    12 26 "
    அவன் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்கிறான்
    குருவே என்னை மன்னிக்கவும்////

    வெளி நாடு செல்வதற்கு ஒன்பதாம் வீடூ நன்றாக இருக்க வேண்டும். அங்கே ராகு அமர்ந்துள்ளார். லக்கினாதிபதி சூரியன் 10ல், லக்கினத்தின்மேல் குருவின் பார்வை. கடும முய்ற்சி செய்தால், செல்லலாம்!

    ReplyDelete
  13. //////Blogger Raja said...
    /*1.கிரகங்கள் ஆதிபத்தியத்தியத்தை கொண்டுதானே நன்மையோ தீமையோ செய்வார்கள்? பின் ஏன் சுபர், பாபர் என்று பிரிக்கப்பட்டுள்ளது?
    வாத்தியார்கள் எல்லோருமே பாடம்தானே நடத்துவார்கள். அவர்களை ஏன் வகுப்பு ஆசிரியர், தமிழாசிரியர், கணக்கு வாத்தியார், உடற்கல்வி வாத்தியார், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பிரித்துள்ளார்கள்? மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே? படித்த அறிவாளி, படிக்காத முட்டாள், செல்வந்தன், ஏழை, அப்பாவி, கேடி (பேட்டை தாதா) என்று ஏன் பிரித்துச் சொல்கிறார்கள்? அப்படித்தான் இதுவும்!
    */
    ஆசிரியரே, மேலுள்ள (முதலாவது )வினாவுக்கு தங்கள் பதில் எனக்கு புரிந்து கொள்ளும்படியாக இல்லை. தயவு செய்து மேலதிக விளக்கம் தரவும். சுப, அசுப கிரகங்களின் ஆதிபத்திய பலன்கள் எவ்வாறு வேறுபாடும் என்று ஒரு விளக்கம் தேவை. எங்களை தெளிவடைய வைக்க தங்களால் தான் முடியும் என்று நம்புகிறேன்.
    உதாரணமாக குரு லக்கினதிபதியாக இருப்பதற்கும் சனிஸ்வரன் லக்கினாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்கள் ஆதிபத்திய பலன்களில் எவ்வாறு பாகுபாடு காட்டுவார்கள் ஜாதகனுக்கு?/////

    லக்கினாதிபதிகள் தங்கள் வேலைகளைக் கச்சிதமாகச் செய்வார்கள். அவர்கள் சென்று அமரும் இடங்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்!
    சுபக்கிரகம், பாபக்கிரகம் என்பது வேறு கணக்கு, சுபக்கிரகங்கள் தங்கத்தைப் போன்றவை. பாபக்கிரகங்கள் இரும்பு அல்லது பித்தளையைப் போன்றவை. ஒரு டன் தங்கம் மற்றும் ஒரு டன் இரும்பு ஆகிய இரண்டில் ஒன்றை உங்களுக்கு வழங்குவதாக இருக்கும்போது, நீங்கள் எதைக் கேட்டுப்பெற்றுக் கொள்வீர்கள்? எதனால் உங்களுக்குப் ப்யன் அதிகம்? நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete
  14. Blogger thanusu said...
    // மாந்தி தீய கிரகம்,அதனுடன் மற்ற கிரகங்கள் சேராமல் இருப்பது உத்தமம்.சேர்ந்து இருந்தால் தீயவனுடன் சேர்ந்த பலனை அனுபவிக்க வேண்டியதுதான்///
    மொத்தத்தில் மாந்தி இருக்கும் இடமும் சேரும் கிரகமும் சாந்தி தராதோ./////

    ஆமாம்!

    ReplyDelete
  15. Blogger arul said...
    arumayana kelvi pathil enathu kelviyum idam pertullathu patri magilchi asiriyarukku nandri////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Raja said...
    1. நீசம் நீசம் என்று சொல்கிறார்களே ! இந்த நீசம் ஆன கிரகத்திற்கு tonic ஏதாவது குடுத்து strong ஆக்க முடியுமா?
    அப்படி ஆக்க முடிந்தால்? ஆகா, நினைக்கவே குஷியாக இருக்கிறது!
    வாருங்கள், கற்பனை செய்து பார்ப்போம். கற்பனைக்கென்ன காசா - பண்மா?
    ஆகவே செய்து பார்ப்போம்!
    337 டானிக்கைப்போல 999 டானிக் ஒன்றை உருவாக்கி அத்தனை கிரகங்களுக்கும் கொடுத்து விடலாம். அத்தனை கிரகங்களையுமே உச்சமாக்கி விடலாம். எந்த கிரகத்திற்கும் சொந்த வீடு கிடையாது. அனைத்து ராசிகளுமே பொதுவானது என்று சொல்லி விடலாம்.அவர்களுக்குள் நிலவும் பகையைப் போக்கி அனைவருக்கும் நட்பு உறவை உண்டாக்கி விடலாம். அத்தனை கிரகங்களையும் ஒரே சுற்றுப்பாதையில் ஓட விட்டுக் கோள்சாரத்தை இல்லாமல் செய்து விடலாம். கிரகங்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கி விடலாம்.
    அதனால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. இந்தியாவில் இருக்கும் அத்தனை பெண்களுமே அனுஷ்கா சர்மாவைப் போல அழகாக இருப்பார்கள். ஆண்கள் அத்தனை பேர்களும் அஜீத்தை போல அழகாக இருப்பார்கள். பெண் பார்க்கும் வேலை, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் மிச்சம்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.ஜாதி எல்லாம் ஒழிந்து விடும் யாரும் வயல்களில் வேலை செய்ய வேண்டாம். பயிர்கள் தானாகவே விளையும். வீட்டில் கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும். யாரும் பள்ளிக்கூடம் போக வேண்டாம். பிறக்கும்போதே 4 மொழிகள், 25 தொழில் நுட்பக்கல்விகளுடன் குழந்தைகள் பிறக்கும். 25 வயதிற்கு மேல் யாருக்கும் வயது ஏறாது. அனைவரும் இளமையுடன் இருப்பார்கள். யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் மோதல் இருக்காது. காதல் மட்டுமே இருக்கும். நோய்களே இருக்காது. பிரசவத்திற்கு மட்டுமே மருத்துவமனைகள் இருக்கும். பிரசவங்கள் அனைத்தும் 100% சுகப் பிரசவமாகவே இருக்கும். அரசியலில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கட்சிகளே இருக்காது. பிரதமர் பதவிக்குக்கூட கெஞ்சி ஆள் பிடிக்க வேண்டியதாயிருக்கும். மொத்ததில், கதை, மற்றும் சஸ்பென்ஸ், திருப்பமுள்ள சம்பவங்கள் இல்லாத படம் (டாக்குமென்ட்டரி படம்) போல வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா சொல்லுங்கள் - முயற்சி செய்வோம்!
    அருமையான கற்பனை. சொர்க்கம் எப்படி இருக்கும் என்று நான் இவ்வளவு நாளாக இப்படி தான் கற்பனை செய்திருந்தேன்.////

    உங்களுடைய சொர்க்கக் கனவு நிறைவேறட்டும். பழநியப்பன் அருள்வாராக!

    ReplyDelete
  17. ///Blogger ananth said...
    //கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும்.//
    பின் எதைத் தோண்டினால் தண்ணிர் கிடைக்கும் வாத்தியாரே./////

    மாதம் மூன்றுமுறை தவறாமல் மழை பெய்யும். எல்லா ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் வேண்டிய அளவு தண்ணீர் இருக்கும். சுத்திகரிக்கப்ப்பெற்ற நீரை இரண்டு இஞ்ச் பைப்பில் அரசாங்கமே அனைவருக்கும் வழங்கும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    //குரு லக்கினதிபதியாக இருப்பதற்கும் சனிஸ்வரன் லக்கினாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்கள் ஆதிபத்திய பலன்களில் எவ்வாறு பாகுபாடு காட்டுவார்கள் ஜாதகனுக்கு?//
    இதற்கு பதில் சொல்வதானால் பின்னூட்டத்தில் முடியாது. தனி பாடமாகதான் சொல்ல வேண்டும். வாத்தியார் இதற்கு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
    சந்திர காவியம் என்னும் ஜோதிட நூலுக்கு உரை எழுதும் போது அதன் உரை ஆசிரியர் சொன்னது. சுப கிரகங்கள் நன்மை செய்வதானாலும் தீமை செய்வதானாலும் மிதமாக செய்வார்கள். பாப கிரகங்கள் நன்மை செய்வதானால் அதிக நன்மையும் தீமை செய்வதானால் அதிக தீமையும் செய்வார்கள். இது அவருடைய கருத்து. இது சரியாக இருக்கிறதா என்று அவரவர் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்.////

    ஆமாம். உண்மை!
    >>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  18. ////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்
    சிவாஜியில் ஒரு பஞ்ச் டயலாக் வரும் சும்மா பேரை கேட்டாலே அதிருதில்ல என்பதனை ஞாபகத்திற்கு கொண்டு வரும் அளவிற்கு தங்களுடைய பதில் இருந்தது .
    குறிப்பிட்டு கூறுவதாக இருந்தால் ஒரு இடத்தில மிகவும் சரியாக.////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  19. ////Blogger தேமொழி said...
    ஐயா, உண்மையில் இந்தப் பாடங்களைப் படித்ததாக என் குறிப்பில் குறித்து வைத்திருக்கிறேன்.
    ஆனால், நீங்கள் கலாய்ப்பாக எழுதும் பதில்களைப் பார்த்தால் மட்டுமே... அந்தப் பதில்கள் பதிவைப் படித்ததை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதாவது பாடங்கள் மறந்துவிட்டது, நகைச்சுவை மட்டுமே நினைவில் தங்கி உள்ளது ...ஹி.ஹி.ஹீ ..../////

    அட்லீஸ்ட் நகைச்சுவையாவது தங்குகிறதே - அதற்குத்தான் நகைச்சுவை! நல்ல நினைவாற்றல் இருப்பவர்கள் மட்டுமே - அதுவும் பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பதன் மூலமே அவர்கள் மனதில் பாடங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com