மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.11.11

பறவையால் கிடைத்த பாடம்

தில்லான மோகனாமபாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த  சமயம் (1968 ஆம் ஆண்டு), படப்பிடிப்பு  அரங்கிற்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், ஏ.பி.என் இன் அனுமதியோடு படப்பிடிப்பு நடப்பதை ஒரு சில நிமிடக் காட்சிகளாகப் படமெடுத்திருக்கிறார். அதை உங்கள் பார்வைக்குக் கீழே கொடுத்துள்ளேன்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
----------------------------------------------------------------------------------
பறவையால் கிடைத்த பாடம்
-----------------------------------------------
பறவை ஒன்று தாழப்பபறந்து கொண்டிருந்தது. அதீதமான குளிர்காலம். குளிரைத் தாக்குப்பிடிக்காத பறவை, ஒரு பெரிய சமவெளியில், தரையில் விழுந்துவிட்டது.

அதே சமயம் அந்தப் பக்கமாக வந்த பசுமாடு ஒன்று சாணமிட அது பறவையை மூழ்கடிக்கும் அளவிற்கு இருந்தது. ஆனாலும் பறவை தலையைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்து, தனது உயிரைத் தக்க வைத்துக்கொண்டது.

மாட்டுச் சாணம் சற்று சூடாக இருந்ததால், பறவைக்கு அது இதமாக இருந்தது. குளிர் போன இடம் தெரியவில்லை.

மிக்க மகிழ்ச்சியடைந்த பறவை, குரல் கொடுத்து..லல..லல்லல்லா....என்று பாடத்துவங்கியது.

அதுதான் போதாத நேரம் என்பது!

அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த பூனை ஒன்று, பறவையின் குரல் கேட்டுத் தேடத்துவங்கி, பறவை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டது.

அப்புறம்?

அப்புறம் என்ன, சாணத்தைக் கிளறி, பறவையை ஒரே அமுக்காக அமுக்கித் தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டுவிட்டது.

கதையில் இரண்டு திருப்பங்கள் பாருங்கள்.

வாழ்க்கையும் அப்படித்தான்.

1. உங்கள் மீது சாணமிடுபவர்கள் எல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல
2. சாணத்தில் இருந்து உங்களை விடுவிப்பவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் அல்ல!
3. சாணத்தில் (சிக்கலில்) மாட்டிக்கொண்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிங்கள்!
---------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு! மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்.
--------------------------------------------
பூமிக்குப் பகையானேன்; தனிமைக்குத் துணையானேன்!
------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து 7 நாட்கள் வகுப்பறையில் பாடம் நடந்துள்ளது. வாத்தியார் தன் சொந்த வேலையாக 2 நாட்கள் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு 1.12.2011 வியாழக்கிழமையன்று நடைபெறும்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

15 comments:

  1. Super .Both the video and the translated article. Thank you,

    ReplyDelete
  2. "உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை! - வரிசையில் முதலிடம் வகிக்கும் தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் காட்சிகள் கண்களுக்கும் மனதிற்கும் இதம்!
    என்ன, ஒரு திறமை மிக்க கலைஞர்கள்! கலைத்தன்மை வாய்ந்த இயக்குநர்! தமிழகம் பெற்ற பாக்கியம்!

    ReplyDelete
  3. உண்மையில் அதிசயம் தான் இந்தக் காண் ஒளியைக் காண்பது...
    பறவையின் கதை...
    நுணலும் தன வாயால் கெடும் என்னும் பழமொழியை நினைவுப் படுத்தினாலும்...
    பறவையால் கிடைத்தப் பாடம் நன்று...

    வியாழன் வரை காத்திருப்போம்.
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. அய்யா வணக்கம்
    சாணத்தில் ( சிக்கலில் ) மாட்டிகோடு இருக்கும்போது வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்ற வார்த்தை நிச்யமான (நிதர்சனமான )உண்மை . நன்றி அய்யா

    ReplyDelete
  5. ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை, மீண்டும் விடுமுறை ? சரி, ஒரு இரண்டு நாள்தானே எப்படியாவது தாக்குப் பிடித்து விடுகிறேன். ஐயா, நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நீங்கள் நினைப்பதை (மீள்பதிவுகளாக இருந்தாலும் கூட) தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வலையேற ஏற்பாடு செய்து போகலாமே.

    இன்றைய பதிவின் காணொளி அறியக்கிடைக்காத அரிய கருவூலம், அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. வாழ்க்கையின் பாடம் கூறிடும் பதிவும், படமும் நெஞ்சில் அகலாதவை. நன்றி ஐயா.

    ReplyDelete
  6. Ayya,

    Very good life quotes about Good, Bad, Ugly....

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  7. மகாகவி பாரதியார் நண்பர்களுக்கு ஒரு கதை சொன்னார். அதாவது ஒருவன் தன் நண்பர் ஒருவருடன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு காட்டுவழியில் சென்றான். திருடர்கள் வழிமறித்தார்கள். கூட வந்த நண்பன் மரத்தில் ஏறி மறைந்து கொண்டான். இவனுக்கு மரமேறத் தெரியாது. ஆகையால் கீழே மரக்கட்டை போல உணர்வற்றுக் கிடப்பவன் போல படுத்துக் கொண்டான். திருட்ர்கள் இவனைப் பார்த்து ஏதோ கட்டை கிடக்கிறது என்றார்கள். இவன் சும்மாயிருக்க வேண்டியதுதானே? ஆமாம், உங்க ஊர்லே கட்டைதான் மடியில் ரூபாயைக் கட்டிக்கொண்டு படுத்திருக்குமோ? என்றான். அவ்வளவுதான், மடியிலிருந்த பணமும் போச்சு, அவர்கள் கொடுத்த தர்ம அடியும் வாங்கியாச்சு. வாயை வைத்துக் கொண்டு சும்மா யிருக்காதவர்களுக்கு இப்படியும் ஒரு தண்டனை. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. தஞ்சாவூர் பெரியவர் சொன்ன கதையின் இன்னொரு 'வெர்ஷன்'

    ஒரு தன வணிகர்(நகரத்தார்) வட்டி வசூல் செய்ய 'டவுனு'க்குப் போனார்.
    வசூல் முடியும் போது இருட்டிவிட்டது. ஊர் திரும்பும் வழியில் பெரிய காடு. கள்ளர் பயம். அதனால் தனக்கு துணைக்கு ஒரு பயில்வானைத் தேடினார்.பயில்வான் போலத் தோற்றமுள்ள ஆள் கிடைத்தான். அவனுக்கு இரவு போஜனம் செய்வித்து, கையில் ஒரு வெள்ளி நாணயம் கொடுத்து தன் ஊர் வரைக்கும் துணைக்கு வரவேண்டும் என்று பேசிக்கொண்டு பயணம் கிளம்பினார்.

    செட்டியார் பெருந் தொகையை மடியில் கட்டி இருக்கிறார். தடியன் மடியில் ஒரு வெள்ளிக் காசு மட்டும் உள்ளது.

    காட்டின் நடுவில் வரும் போது சலசலப்புக் கேட்டது. கள்ளர் வருகிறார்கள் என்று தெரிந்த செட்டியார் அங்கே உள்ள ஒரு பெரிய மர பொந்துக்குள் மறைந்து கொண்டார்.தடியனுக்கு உண்ட மயக்கத்தால் தூக்கம் வந்து விட்டது. பாதையிலேயே படுத்துவிட்டான்.

    கள்ளர்கள் அவன் அருகில் வந்து விட்டு ஏதோ பிணம் கிடக்கிறது என்று விலகிச் சென்றனர்.கடைசியாக வந்த திருடன் பிணத்தின் வசம் ஏதாவது கிடைக்குமா என்று மடியைத் துழாவினான். ஒரு வெள்ளிக்காசு கிடைத்தது.அதனைத் தீவட்டி வெளிச்சத்தில் பார்த்து விட்டு 'சீ! செல்லாத காசு' என்று சொன்னான்.

    நமது முட்டாள் தடியனுக்கு கோவம் வந்துவிட்டது. "என்ன சொன்னாய்? காசு செல்லாதா?அதோ அந்த மர பொந்துக்குள் இருக்கிறாரெ அந்த செட்டியார்தான் கொடுத்தார். அவரையே கேளு! காசு செல்லுமா செல்லாதா என்று" என்றான் புரண்டு படுத்தபடி!"

    செட்டியாரைப் பிடித்தார்கள். அவர் மடியில் இருந்த பணம் போச்சு.

    "செல்லும் செல்லாததற்கு செட்டியாரைக் கேளு" என்ற பழமொழி வந்த கதை இது.

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிக்கடி சொல்லும் கதை இது.

    ReplyDelete
  9. alaipaindamanam amadiyutradu paravayal kidaitha paadam

    ReplyDelete
  10. thillana mohanambal behind the scene was shooted by louis malle, an Italian cinemotographer. this clippings were taken from "the panthom of india" - a wonderful movie about india. dont miss it!

    ReplyDelete
  11. நன்றி பரமார்த்த குரு அவர்களே. தாங்கள் சொல்லிய படி லூயிஸ்மால்லே வின்
    டாகுமென்டரியை யூ ட்யூபில் பார்த்தேன். சாதி முறை பற்றிய 10 நிமிடங்கள் 3 பாகம் நல்ல தெளிவான முறையில் எடுக்கப்ப‌ட்டுள்ளது.கலாக்ஷேத்ர, தேர்த் திருவிழாவும் நன்றாக‌ எடுத்துள்ளார். இந்த 1 மணி 30 நிமிடம் தவிர வேறு ஏதாகிலும் உள்ளதா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com