மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.2.11

துணையின்றித் தனித்து நிற்கும் மரம்!

பஹ்ரெய்னில் ஒரு அதிசய மரம்!
++++++++++++++++++++++++++++++
Tree of Life, Bahrain

ஜெபெல் துக்கான் (Jebel Dukhan) என்னும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர்கள் தூரத்தில் இந்த மரம் உள்ளது. 400 ஆண்டுகளாக உள்ளது. பஹ்ரெய்னுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தைப் பார்த்துச் செல்வதற்குத் தவறுவதில்லை.

கம்பீரமாக நிற்கும் இந்த மரத்தின் சிறப்பு, ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாத அத்துவானப் பாலைவனத்தில் இது உள்ளது. இத்தனை ஆண்டுகாலமாக தாக்குப் பிடித்து நிற்கும் அந்த மரத்தின் மர்மம்தான் அதை வரலாறாகவும் ஆக்கியுள்ளது.

எல்லாம் இறைச் செயல் என்பதைத் தவிர வேறென்னத்தைச் சொல்வது? மரம் வைத்தவன் தண்ணீர் கொடுப்பான் என்பது இந்த மரத்திற்கு 100 சதவிகிதம் பொருந்தும்!

நமது வகுப்பறை மாணவர் கண்ணன் அங்கேதான் உள்ளார். அவர் பார்த்தாரா என்று தெரியவில்லை. பின்னூட்டத்தில் சொல்வார்

இந்த மரத்தின் பெயர்: (Sharajat-al-Hayat (mesquite tree)

பாலைவனத்தின் மத்திய பகுதியில் இந்த மரம் உள்ளது. 25 அடிகள் உயரமுள்ள மணற்குன்றின் மேல் உள்ளது. மரத்தின் இன்றைய உயரம் 32 அடிகள். மிகக் கொடிய வறண்ட வெப்ப நிலை சூழ்ந்த இந்தப் பிரதேசத்தில், தன்னிச்சையாக வளர்ந்து இன்று தலை நிமிர்ந்து நிற்பது ஒரு அதிசயம்தான்!

மரத்திற்கு எப்படி தண்ணீர் கிடைக்கிறது என்பது பெரிய மர்மமுடிச்சு. இன்றுவரை அதற்கு விடை கிடைக்க வில்லை. தாவர வல்லுனர்களைக் கேட்டால், இம்மரத்தின் வேர்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் பரவிச் சென்று எங்கிருந்தாவது நீரைப் பிடித்துக்கொண்டு வரலாம் என்பார்கள். துவக்கத்தில் எதைவைத்துப் பரவியது?. எதைவைத்து வாழ்ந்தது? எதைவைத்து நீண்டது? என்றால் அவர்களால் பதில் சொல்ல இயலாது!

இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ‘நீர்க் கடவுளின்’ அருளாசியோடு தோன்றிய மரம் இது என்பார்கள்

(The tree's source of water is mystery. Plant scientist may say that its roots go very deep and wide to get water from the reserves of sweet springs kilometers away. The Bedouins believe that Enki, the mythical God of water, had showered its blessing.The pictures below have captions from a poem)

படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலதிகத் தகவல்கள்:
What Is a Mesquite Tree?

The mesquite tree is one of the most common trees of the southwestern United States and parts of Mexico. It is a member of the legume family of plants which includes peanuts, alfalfa, clover, and beans. Perfectly adapted for its dry environment, the mesquite is a hardy tree. Here is the lowdown on the mesquite tree.
     
The mesquite grows in the northern parts of Mexico including the Chihuahuan Desert, which is a mountainous desert region that is on the US-Mexico border. The mesquite thrives from its Mexican range all the way through Texas and up into the southwestern portions of Kansas. It extends from the Sonoran Desert in southern California to southwestern Utah. Most of the places that you will find mesquite trees in have a low annual rainfall.
     
Mesquite trees have a long taproot that they use to locate enough moisture to keep them alive. This feature allows them to survive through droughts. There are recorded instances of taproots of the mesquite tree reaching a depth of almost 200 feet down into the soil. The roots of the mesquite can regenerate if the tree is chopped off above, making the mesquite one tough tree to get rid of. Ranchers feel that the mesquite sucks water from the land that could be used for livestock and farming, making it unpopular with those individuals.

The benefits of the mesquite tree far outweigh any perceived shortcomings. The wood is very hard and it is used in making furniture and tool handles. The flowers from the mesquite species provide bees with nectar to produce honey. They grow rapidly and are a shade source for animals. The bean pods they produce can be turned into flour and used for baking. Animals can eat the fruit; coyotes survive almost exclusively on mesquite pods during the winter months. Mesquite wood used for firewood burns slowly and generates great heat; it is used to barbecue food in the southwest and lends a distinct flavor to whatever is cooked over it.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


Tree of life, Bahrain, road sign

Tree of life, Bahrain, phone lines.

Tree of Life, Bahrain

Tree of Life, Bahrain, close-up


Graffiti on the Tree of Life, Bahrain

Tree of life, bahrain

Watching desert from under the Tree of Life.

Tree of Life, Bahrain stands alone.

Evening comes to the Tree of Life, Bahrain.


Tree of Life and the setting Sun.

Tree of Life, Bahrain at sunset.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. இறைவனது பேராற்றலை தெய்வச்சேக்கிழார் பெருமான் - பெரியபுராணத்தில்,

    யார்க்கும் முன்னவனே முன் நின்றால்
    முடியாதா பொருள் உளதோ ?

    என கேள்வி எழுப்பி அவன் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்று
    பதில் தந்திருப்பார் ...

    அதுபோலவே எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் இறைவனது ஆற்றலை விளக்குவதாக ஒரு பாடல் வரும்,

    விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனையும் உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்ததோர் நச்சு மாமரம் ஆயினும்
    கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே ( திருச்சதகம் - 100 )

    என்று அருளியிருப்பதால் இறைவன்
    எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எஙகு வேண்டுமானாலும் உருவாக்குவான் என்பதை உணரமுடிகிறது,

    GOD IS GREAT ...

    கண்ணன் ஜி ,,
    கிளம்புங்க கிளம்புங்க அந்த ஜெபல் துக்கானுக்கு - அங்கே போய் அந்த மரத்துக்கு பக்கத்துலே நின்று ஒரு போட்டோ எடுத்து வகுப்பறை கண்மனிகளுக்கு ஒரு Latest Photo
    அனுப்புங்க ,,

    ReplyDelete
  2. கல்லுக்குள் தேரைக்கும் கடவுள் படியளப்பார் என்பது இது தான்

    ReplyDelete
  3. வாத்தி ஐயா!

    வணக்கம்.

    சக தோழர் சகாக்களே அனைவருக்கும் வணக்கம்

    யாம் தற்பொழுது வசிக்கும் பூமி கத்தார் ஆகும். இது தாங்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ள பஹ்ரைன்க்கு
    அருகில் உள்ள நாடு தான்.

    யாமோ இது வரை பக்ரைன்னுக்கு சென்று வந்தது இல்லை, மேலும் இந்த மரத்தை பற்றி கேள்வி பட்டது இல்லை .

    தங்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டாக சென்று வர இந்த தருணம் சரியாக இல்லை .

    அனைவரும் உலக செய்திகளை பார்ப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

    இதற்க்கு மேலே பஹ்ரைன்னை பற்றி வகுப்பறையில் எழுதுவது சரியாக இருக்காது என்பதனால் இத்துடன் கருத்துகளை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன் .

    ReplyDelete
  4. ஐயா

    பெரியவர் நடராஜன் அவர்கள் கூறியது போல, இறைவனின் திரு விளையாடலில் இதுவும் ஒரு அங்கமோ என்னவோ

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்
    உண்மையில் இது அதிசயம் !
    நான் பார்த்துள்ளேன் சுற்றிலும் பாலைவனம் நடுவில் ஒரே ஒரு பெரிய மரம்
    தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்காது
    கடவுள் உருவாக்கிய அதிசயம்
    கடவுளுக்கு நன்றி !!!!!!!!!!
    இதை இனையதளம் மூலம் வெளிட்ட வாத்தியாருக்கு நன்றி ...................
    அன்புடன் மாணவன்
    ரமேஷ்..........

    ReplyDelete
  6. எடப்பாடி சிவம் said...
    இறைவனது பேராற்றலை தெய்வச்சேக்கிழார் பெருமான் - பெரியபுராணத்தில்,
    யார்க்கும் முன்னவனே முன் நின்றால்
    முடியாதா பொருள் உளதோ ?
    என கேள்வி எழுப்பி அவன் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்று
    பதில் தந்திருப்பார் ...
    அதுபோலவே எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் இறைவனது ஆற்றலை விளக்குவதாக ஒரு பாடல் வரும்,
    விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனையும் உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்ததோர் நச்சு மாமரம் ஆயினும்
    கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே ( திருச்சதகம் - 100 )
    என்று அருளியிருப்பதால் இறைவன்
    எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எஙகு வேண்டுமானாலும் உருவாக்குவான் என்பதை உணரமுடிகிறது,
    GOD IS GREAT ...
    கண்ணன் ஜி ,,
    கிளம்புங்க கிளம்புங்க அந்த ஜெபல் துக்கானுக்கு - அங்கே போய் அந்த மரத்துக்கு பக்கத்துலே நின்று ஒரு போட்டோ எடுத்து வகுப்பறை கண்மனிகளுக்கு ஒரு Latest Photo
    அனுப்புங்க ,,//////

    நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், விளக்கத்திற்கும் நன்றி எடப்பாடியாரே!

    ReplyDelete
  7. //////நடராஜன் said...
    கல்லுக்குள் தேரைக்கும் கடவுள் படியளப்பார் என்பது இதுதான்////

    உண்மைதான் கடவுள் கருணை மிக்கவர்! எல்லா ஜீவராசிகளுக்கும் படியளப்பவர் அவர்தான்!

    ReplyDelete
  8. kannan said...
    வாத்தி ஐயா!
    வணக்கம்.
    சக தோழர் சகாக்களே அனைவருக்கும் வணக்கம்
    யாம் தற்பொழுது வசிக்கும் பூமி கத்தார் ஆகும். இது தாங்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ள பஹ்ரைன்க்கு
    அருகில் உள்ள நாடு தான்.
    யாமோ இது வரை பக்ரைன்னுக்கு சென்று வந்தது இல்லை, மேலும் இந்த மரத்தை பற்றி கேள்வி பட்டது இல்லை .
    தங்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டாக சென்று வர இந்த தருணம் சரியாக இல்லை .
    அனைவரும் உலக செய்திகளை பார்ப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
    இதற்கு மேலே பஹ்ரைன்னை பற்றி வகுப்பறையில் எழுதுவது சரியாக இருக்காது என்பதனால் இத்துடன் கருத்துகளை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன் /////

    உங்களின் விளக்கத்திற்கு நன்றி கண்ணன்!.

    ReplyDelete
  9. ///kannan said...
    ஐயா
    பெரியவர் நடராஜன் அவர்கள் கூறியது போல, இறைவனின் திரு விளையாடலில் இதுவும் ஒரு அங்கமோ என்னவோ////

    என்னவோ அல்ல! உண்மை அதுதான். உண்மைதான் கடவுள் கருணை மிக்கவர்! எல்லா ஜீவராசிகளுக்கும் படியளப்பவர் அவர்தான்!

    ReplyDelete
  10. ////Ramesh said...
    ஐயா வணக்கம்
    உண்மையில் இது அதிசயம் !
    நான் பார்த்துள்ளேன் சுற்றிலும் பாலைவனம் நடுவில் ஒரே ஒரு பெரிய மரம்
    தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்காது
    கடவுள் உருவாக்கிய அதிசயம்
    கடவுளுக்கு நன்றி !!!!!!!!!!
    இதை இனையதளம் மூலம் வெளிட்ட வாத்தியாருக்கு நன்றி ...................
    அன்புடன் மாணவன்
    ரமேஷ்..........////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. அதிசய மரமும்... அதன் படங்களும் அருமை...
    அதிசயத்திலும் அதிசயமான ஆண்டவன்
    படைப்புகளில் இதுவும் ஒரு அதிசயம்.
    நன்றி.

    ReplyDelete
  12. சார்! அம்மரத்தை பார்த்துவிட்டு என் மகள்...
    பாவம் அந்த மரம்... யாரோ விட்ட சாபத்தால்
    400 வருடமாக அங்கு நிற்கும் போலிருக்கிறது என்கிறாள்..
    இந்தக் காலக் குழந்தைகளின் சிந்தனை வேறாக இருக்கிறது பாருங்கள்...

    ReplyDelete
  13. இறைவன் அருளீருந்தால் எங்கும் தனித்து வாழலாம்.

    ReplyDelete
  14. 2 வது படத்தில் இருப்பவை எலெக்ட்ரிகல் கம்பஙகள்,அவை டெலிபோன் கம்பஙகள் அல்ல.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com