மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.2.11

Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!

சனீஷ்வரன் எவ்வளவு பெரிய ஆள்? அவரை எப்படி சட்டைப் பைக்குள் வைக்க முடியும்?

புறங்கால்களைச் சரியாகக் கழுவாமல் தன் கோவிலுக்குள் நுழைந்தவனை சனீஷ்வரன் ஆட்டிவைத்த கதை எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட சனீஷ்வரன் எங்கே வேண்டுமென்றாலும் நுழைந்து அமர்ந்து கொள்வார்.

ஆனால் சட்டைப் பைக்குள் அல்லது உங்கள் மணிபர்சில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து அமரவைப்பது  நீங்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

புரியும்படியாகச் சொல்லவா?

கடன் அட்டை என்னும் குட்டி சனீஷ்வரனைத்தான் அப்படிச் சொல்கிறேன்.

கடன் அட்டைக்கு என்ன விளக்கம்?

கீழே கொடுத்துள்ளேன்.

A credit card is a small plastic card issued to users as a system of payment. It allows its holder to buy goods and services based on the holder's promise to pay for these goods and services. The issuer of the card creates a revolving account and grants a line of credit to the consumer (or the user) from which the user can borrow money for payment to a merchant or as a cash advance to the user.

எனக்குத் தெரிந்து கடன் அட்டை வைத்திருக்கும் மனிதர்களில் 90% பேர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தகாத  பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டவன் போல விழி பிதுங்க முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களால், அந்தப் பெண்ணை உதறவும் முடியாது. அவளை வைத்துக்கொண்டு தீனி போடவும் முடியாது.

உங்களில் எத்தனை பேர்கள் அப்படி மாட்டிக் கொண்டு முழிக்கின்றீர்கள் என்று தெரியாது.

இதை விழி பிதுங்க முழித்துக்கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் எழுதவில்லை. இதுவரை மாட்டிக்கொள்ளாதவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த
வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு
பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப்
பிரச்சினையும் வராது.

கடன் அட்டையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். கட்டுரையின் நீளம் கருதி  இரண்டொரு வரிகளில் மட்டும் எழுதுகிறேன்.

1. கடன் அட்டையைப் பெற்றுக் கொள்வது சுலபம். நீங்கள் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் போதும்.  அதற்கான சான்றிதழைக் கொடுத்தால் போதும்.

2. ஆண்டுக்கு ஆண்டு உங்களுக்குப் பணம் கிடைக்கும் வரம்பை ஏற்றிக் கொண்டே இருப்பார்கள்.

3. சிரங்கு வந்தவனுக்கு, சொறிவது இன்பமாக இருக்கும். அதுபோல கார்டைக் கையில் வைத்திருப்பவனுக்கு  அதைப் பயன் படுத்துவது சுகமாக இருக்கும். கடன் சுமை அதிகமாகி மாட்டிக் கொண்டு விழிக்கும்போதுதான்  அவஸ்தையாக இருக்கும். மீண்டு வரவே முடியாது. சிக்கிக்கொண்டு விடுவான்.

4. வட்டிவிகிதம் 3% (மாதத்திற்கு) ஆண்டிற்கு 42% அளவில் இருக்கும். அந்த அளவு வட்டி விகிதம் வேறு  எங்கேயும் கிடையாது (கந்து வட்டிக்காரனிடம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் மீட்டர் வட்டிக்காரனிடம் இருக்கும்) உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை  நினைவில் வையுங்கள்.

5. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், அட்டை மூலம் செலவழித்த அல்லது வாங்கிய கடன் ஐம்பதாயிரம் என்று  வைத்துக் கொண்டால், அந்தப் பணம் இரண்டாண்டு காலத்தில் வட்டியுடன் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய்  கடனாகி விடும். செட்டி தூங்கினாலும், வட்டி தூங்காது என்பார்கள். கடன் அட்டையின் வட்டி புற்று நோயைப்  (cancer) போன்றது. கவனிக்காமல் விட்டால் உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் பரவத்துவங்கிவிடும். வளரத்து  வங்கிவிடும்.

6. அட்டைக்கான காப்பீட்டுத்தொகை, விபத்தில் அட்டைவைத்திருப்பவன் இறந்துபோனால்,  தங்கள் பணம்  பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான காப்பீட்டுத்தொகை, அதற்கான பிரிமியம் என்று மாதா மாதம் ரூ.75:00ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். அத்துடன் சேவை வரியாக 10.30% சேர்ந்து கொள்ளும்.

7. உங்கள் கடன் தொகையுடன் மேலே உள்ள அத்தனை கருமங்களையும் ஒன்றாகக் கூட்டிப் போட்டு, வரும்  தொகையில்  5% மட்டும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும்  என்பார்கள்.
அங்கேதான் சிக்கல்.கடன் சுமை கூடுவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். அதாவது உங்களின் தகாத உறவுக்காரிக்கு வயிற்றில்
குழந்தை  உண்டாவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். தெரிந்த
பிறகு கூடுதலாகப் பிரசவச் செலவு, பிறந்த குழந்தையை வளர்க்கும்
செலவு  என்று அவள் உங்களை மேலும் படுத்தி எடுப்பாள்.

8. ஒவ்வொரு மாதமும்18ஆம் தேதி உங்களுக்கு செலுத்த வேண்டிய
கடன் பட்டியலை முறையாக அனுப்பி  விடுவார்கள். அதில்
குறிப்பிட்டுள்ள தொகையை நீங்கள் அதற்கடுத்த மாதம் 11ஆம்
தேதிக்குள் செலுத்தவேண்டும். மறந்து விட்டாலோ அல்லது செலுத்தத் தவறினாலோ அபராதமாக சுமார் ரூ.250:00 உங்கள் கணக்கில்  ஏறிவிடும்.

9. ஒருவன் அவனுக்கு சிரம திசை ஆரம்பிக்கும்போதுதான் கடன்
அட்டையை வாங்கிப் பையில் வைப்பான். 17 ஆண்டுகளோ அல்லது
19 ஆண்டுகளோ என்று சிரம திசை முடிந்தாலும், இந்தக் குட்டிச் சனி
மட்டும்  விலகாது.

10. கடன் அட்டை வைத்திருப்பவர்கள், அதனால் ஏற்படும் கடன்
சுமையை, அந்தந்த மாதமே தவணையன்று  முழுமையாகச் செலுத்தி எப்போதுமே கடன் அளவை ஜீரோ இருப்பில் வைத்திருப்பது மட்டுமே புத்திசாலித்தனமாகும். இல்லை என்றால் சிக்கல்தான்

இங்கே எந்த அட்டையையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
பொதுவாக உள்ள பிரச்சினைகளைத்தால்  சொல்லியிருக்கிறேன்.
அதை மனதில் கொள்க!

சரி, மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வருவது எப்படி?
அதற்கு வழி உண்டா?

உண்டு!

அதை இங்கே சொல்ல முடியாது. தெரிந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் மின்னஞ்சல் மூலம் வாருங்கள்.  உங்களுக்கு என்னாலான யோசனையைச் சொல்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

30 comments:

  1. இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை ஐயா!நன்றி!

    ReplyDelete
  2. சனிஸ்வரன் யாருக்கும் நல்லதே செய்வ்தில்லயா?

    ReplyDelete
  3. ஐயா,
    மரண யோகம், அமிர்த யோகதிற்க்கு அடுத்து சித்த யோகம் பற்றி சொல்லுவீர்கள் என நினைத்திருந்தேன். ஆனால் குச்சனூரானைப் பற்றி அருமையாக எழுதிவிட்டீர்கள்!. எனக்கும் வழி முறை விளக்கங்களை அனுப்பவும்! ‍ஜாவா

    ReplyDelete
  4. Naan kadantha 6 aandukalaaga credir card use seikiren.
    ore murai late fess 150Rs thandem koduthen.
    Matrapadi yenakku yentha prachanaiyum varavillai.

    Every tenth naan credit card bill katti viduven. mobilil remaninder vaiththullen... to pay the money.

    ReplyDelete
  5. நான் 6 வருடங்களாக கடன் அட்டை பயன் படுத்துகிறேன். ஒரு பிரச்சனை இல்லை. yenaakku 2 ம் இடத்தில் 31 பரல்கள். ஒரே முறை late fees 150 rs கட்டினேன்...

    ReplyDelete
  6. Good Very Good...Corporate People must see this..

    உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த
    வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு
    பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப்
    பிரச்சினையும் வராது.

    God Bless

    ReplyDelete
  7. கடன் அட்டையை பற்றி தங்களின் பதிவு அருமை.

    ஆனால் பாருங்கள் என்னுடைய போதாத நேரம் போல....
    சென்ற வாரம்தான் கடன் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இருக்கிறேன். :))))))

    ஏதேனும் அவசர தேவைக்காக இருக்கறதும் என்று அலுவலக நண்பர்கள் கூறியதை
    தொடர்ந்து எல்லாரும் (20 பேர் ) விண்ணப்பித்து இருக்கிறோம். அடுத்த வாரம் அட்டை வந்துவிடும்.

    உங்களது பதிவை படித்தபின் பயம் கிளம்பி விட்டது ஐயா.....

    கடன் அட்டையை தவிர்த்து விடலாமா என்று யோசிக்கிறேன் -யோசிக்கிறோம் :))))))))

    ReplyDelete
  8. Dear Sir

    Thanks Sir. Passed 8 Years in Software Industry .... ...I dont have any credit card.

    90% it is not good.

    Thanks

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  9. உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை நினைவில் வையுங்கள்.

    ஐயா, இது எப்பவும் 3.5% தான். 6% இல்லை. நம்ம காசுக்கு மதிப்பு அவ்வளவுதான்.

    SBI- SAVINGS BANK DEPOSITS


    RATE OF INTEREST : 3.50% p.a.

    ReplyDelete
  10. உங்கள் பதிவின் 10வது பாயின்ட் தான் சூப்பர் . .

    (குட்டி)சனீஷ்வரனை negative கோணத்தில் மட்டும் பார்ப்பது சரியல்ல..

    மகர ராசிக்கும் ரிஷப ராசிக்கும் சனி யோக காரகன் . .

    முறையாக பயன்படுத்தாத எதுவும் முடிவில் பாழ் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

    முறையாக சரியானபடி குடும்பம் நடத்தாமல் இருந்தால்

    கட்டிய மனைவியாகவே இருந்தாலும்

    சட்டப்படி விவாகரத்துக்கு தயாராக இருப்பாள் அல்லது சட்டவிரோதமாக வேறு உறவு வைத்திருப்பாள்..

    வகுப்பு மாணவர்களின் இளசுகளுக்கு பிடிக்கும் படி சொல்லிலும் உங்கள் பாணியில் சொல்லிவிட்டேனா..?

    ReplyDelete
  11. வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்

    http://meenakam.com/topsites

    http://meenagam.org

    ReplyDelete
  12. waiting for prabhala and siddha yogam...........

    ReplyDelete
  13. ////kmr.krishnan said...
    இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை ஐயா!நன்றி!////

    இளைஞர்களுக்கு மட்டும்தானா? மத்திய வயதினரும் பதிவிற்கு வந்து போகின்றார்களே கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. /////arthanari said...
    சனிஸ்வரன் யாருக்கும் நல்லதே செய்வ்தில்லயா?//////

    ஏன் செய்வதில்லை. அவர் Hero cum villain. அவர் கர்மகாரகன். (He is the authority for our profession) நமது ஆயுள்காரகனும் அவர்தான்

    ReplyDelete
  15. /////Jawa said...
    ஐயா,
    மரண யோகம், அமிர்த யோகதிற்க்கு அடுத்து சித்த யோகம் பற்றி சொல்லுவீர்கள் என நினைத்திருந்தேன். ஆனால் குச்சனூரானைப் பற்றி அருமையாக எழுதிவிட்டீர்கள்!. எனக்கும் வழி முறை விளக்கங்களை அனுப்பவும்! ‍ஜாவா////

    யோசித்தீர்ர்களா? உங்களுடைய மின்னஞ்சல் முகவரி எனக்கு எப்படித் தெரியும்?

    ReplyDelete
  16. /////CJeevanantham said...
    Dear Sir,
    Thank you for your kind advice.////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  17. /////Prabu said...
    Naan kadantha 6 aandukalaaga credir card use seikiren.
    ore murai late fess 150Rs thandem koduthen.
    Matrapadi yenakku yentha prachanaiyum varavillai.
    Every tenth naan credit card bill katti viduven. mobilil remaninder vaiththullen... to pay the money.////

    நீங்கள் சமர்த்து! வாழ்க உங்கள் சாதுர்யம்!

    ReplyDelete
  18. /////Prabu said...
    நான் 6 வருடங்களாக கடன் அட்டை பயன் படுத்துகிறேன். ஒரு பிரச்சனை இல்லை. yenaakku 2 ம் இடத்தில் 31 பரல்கள். ஒரே முறை late fees 150 rs கட்டினேன்...////

    நீங்கள் சமர்த்து! வாழ்க உங்கள் சாதுர்யம்!

    ReplyDelete
  19. /////Success said...
    Good Very Good...Corporate People must see this..
    உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த
    வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப்
    பிரச்சினையும் வராது.
    God Bless//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. தமிழ்மணி said...
    கடன் அட்டையை பற்றி தங்களின் பதிவு அருமை.
    ஆனால் பாருங்கள் என்னுடைய போதாத நேரம் போல....
    சென்ற வாரம்தான் கடன் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இருக்கிறேன். :))))))
    ஏதேனும் அவசர தேவைக்காக இருக்கறதும் என்று அலுவலக நண்பர்கள் கூறியதை
    தொடர்ந்து எல்லாரும் (20 பேர் ) விண்ணப்பித்து இருக்கிறோம். அடுத்த வாரம் அட்டை வந்துவிடும்.
    உங்களது பதிவை படித்தபின் பயம் கிளம்பி விட்டது ஐயா.....
    கடன் அட்டையை தவிர்த்து விடலாமா என்று யோசிக்கிறேன் -யோசிக்கிறோம் :))))))))

    நண்பர் பிரபுவின் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு, பிறகு முடிவு செய்யுங்கள்!

    ReplyDelete
  21. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Thanks Sir. Passed 8 Years in Software Industry .... ...I dont have any credit card.
    90% it is not good.
    Thanks
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  22. /////Sai said...
    உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை நினைவில் வையுங்கள்.
    ஐயா, இது எப்பவும் 3.5% தான். 6% இல்லை. நம்ம காசுக்கு மதிப்பு அவ்வளவுதான்.
    SBI- SAVINGS BANK DEPOSITS
    RATE OF INTEREST : 3.50% p.a./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  23. ////iyer said...
    உங்கள் பதிவின் 10வது பாயின்ட் தான் சூப்பர் .
    (குட்டி)சனீஷ்வரனை negative கோணத்தில் மட்டும் பார்ப்பது சரியல்ல..
    மகர ராசிக்கும் ரிஷப ராசிக்கும் சனி யோக காரகன் .
    முறையாக பயன்படுத்தாத எதுவும் முடிவில் பாழ் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
    முறையாக சரியானபடி குடும்பம் நடத்தாமல் இருந்தால்
    கட்டிய மனைவியாகவே இருந்தாலும்
    சட்டப்படி விவாகரத்துக்கு தயாராக இருப்பாள் அல்லது சட்டவிரோதமாக வேறு உறவு வைத்திருப்பாள்..
    வகுப்பு மாணவர்களின் இளசுகளுக்கு பிடிக்கும் படி சொல்லிலும் உங்கள் பாணியில் சொல்லிவிட்டேனா..?/////

    உங்களுக்கு சொல்லியா தரவேண்டும் விஸ்வநாதன்?

    ReplyDelete
  24. /////News said...
    வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்
    http://meenakam.com/topsites
    http://meenagam.org////

    எழுதுவதை நன்றாக எழுதுங்கள்; எல்லோரும் இணைவார்கள்!

    ReplyDelete
  25. ////bottle said...
    waiting for prabhala and siddha yogam...........////

    பின்னால் வரும் நண்பரே!

    ReplyDelete
  26. /////venkat said...
    பதிவு அருமை.////

    நல்லது. நன்றி வெங்கட்!

    ReplyDelete
  27. ஒரு பிரபல வங்கி நாங்கள் கேட்காமலே
    கடன் அட்டை அனுப்பி வைத்துவிட்டது.
    நாங்கள் அட்டையில் கையெழுத்துப்
    போடாத நிலையிலேயே சர்வீஸ் சார்ஜ்,
    மற்றும் பல சார்ஜ் போட்டு பில் வந்தது.
    போனில் உடனடியாக கூப்பிட்டுக்
    கேட்டால் சரியான பதில் இல்லை.
    பில் தொகையை உடனடியாகக் கட்டிவிட்டு தலைமை அலுவலகத்திற்குப்
    பேசச்சொன்னார்கள்.கார்டை நெடுக்கு
    வாட்டில் வெட்டி அனுப்பிய பிறகும்
    லேட் பீஸ் ம்ற்ற பீஸ் போட்டுஅனுப்பினார்கள்.
    நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லீகலாக கேஸ் போடுவோம் என்று
    நாங்கள் சொன்னதால் சமாதனமாகப்
    போகிறோம் 5ஆயிரம் கட்டுங்கள்
    என்றார்கள். வயிற்றெரிச்சலுட்ன் நாங்கள் கேட்காத, கையெழுத்தும் போடாத கார்டுக்கு பணம் அழுதோம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com