மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.2.11

Astrological Lessons புத்தியும் ஆற்றலும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrological Lessons புத்தியும் ஆற்றலும்!
தசா புத்திப்பலன்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்து வருகிறோம். நானும் தொடர்ந்து  எழுதிவருகிறேன். நீங்களும் படித்துவருகிறீர்கள்.

முதலில் புத்தி நாதன் புதனின் திசையைக் கையில் எடுத்துக்
கொண்டேன்.  புதன் திசையில் கேது புத்தி எப்படி இருக்கும் என்று
பார்த்தோம். பதிலுக்கு கேது திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும்
என்றும் பார்த்தோம்.

அதுபோல, புதன் திசையில் சுக்கிர புத்தியும், சுக்கிர திசையில் புதன்
புத்தியும், புதன் திசையில் சூரிய புத்தியும்,  சூரிய திசையில் புதன்
புத்தியும் எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம். அடுத்து புதன்
திசையில் சந்திரபுத்தியையும், பதிலுக்கு சந்திர திசையில் புதன்
புத்தியையும் பார்த்தோம்.

இன்று அதே புதன் திசையில் செவ்வாய் புத்தி எப்படி இருக்கும் என்றும், பதிலுக்கு செவ்வாய் திசையில் புதன்  புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்ப்போம்.

இரண்டின் கால அளவு:
புதன் திசையில் செவ்வாய் புத்தி = 17 X 7 = 119 = 11 மாதங்கள், 27 நாட்கள்
செவ்வாய் திசையில் புதன் புத்தி =  7 x 17 = 119 = 11 மாதங்கள், 27 நாட்கள்

(சூத்திரப்படி பெருக்கி வந்த முதல் இரண்டு எண்களும் மாதங்களைக் குறிக்கும், கடைசியில் உள்ள எண்ணை மூன்றால் பெருக்க வருவது நாட்களாகும்)

புதனின் வீடு இரண்டும் - மிதுனமும், கன்னியும் செவ்வாய்க்குப்
பகை வீடுகளாகும். அதே நேரத்தில் செவ்வாயின் இரண்டு வீடுகளும் - அதாவது மேஷமும், விருச்சிகமும், புதனுக்கு நட்பும் அல்லாத
பகையும் அல்லாத சமவீடுகளாகும்.

ஆற்றல் இருப்பவனுக்கு, புத்தி பகையாகத் தெரிகிறது. ஆனால் புத்தி இருப்பவன் ஆற்றலைப் பகையாக  நினைப்பதில்லை!

இவ்விரண்டு கிரகங்களின் தசா புத்திகள் ஜாதகனுக்கு நன்மை அளிக்காது. அதைத் தெளிவு படுத்தும் பாடலைக் கொடுத்துள்ளேன். பாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் எழுதவில்லை. படித்துப் பயன் பெறுக!

சேரலாம் புதன் திசையில் செவ்வாய்புத்தி
செயமில்லாத மாதம் பதினொன்றாகும்
தேறலாம் நாளதுவும் இருபத்தேழில்
தெரிவையர்கள் தன்னாலே கிரந்தியது நோவாம்
மாறலாம் சத்துருவால் மயக்கமுடன் பேயும்
மனதான சகோதரமும் அதனால்சேதம்
பாரலாம் பலநிதியுங்கெடுதிகாணும்
பணமுடைய பூமிமுதல் பலனுந்தீதாம்!

காணவே சேய் திசையில் புதனார் புத்தி
கணக்கான நாளதுவும் மாதம் பதினொன்று
பூணவே நாளதுவும் மூணொன்பதாகும்
பூட்டான அதன்பலனை புகழக்கேளு
பேணவே ஓடிவந்த பிரமியமும்
பெரிதான நீரழிவும் பிறன்கேடு பண்ணும்
தோணவே தோகையரும் வியாதியாவாள்
தொடுத்ததொரு காரியங்கள் பொல்லாப்பாமே

(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

9 comments:

  1. பாடத்திற்கு நன்றி.

    ஆற்றல் இருப்பவனுக்கு, புத்தி பகையாகத் தெரிகிறது. ஆனால் புத்தி இருப்பவன் ஆற்றலைப் பகையாக நினைப்பதில்லை!//
    இது சூபெர்ப். எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

    ReplyDelete
  2. ஆற்றல் இருப்பவனுக்கு, புத்தி பகையாகத் தெரிகிறது. ஆனால் புத்தி இருப்பவன் ஆற்றலைப் பகையாக நினைப்பதில்லை!

    புதன் + செவ்வாயை நினைச்சுதத்தான் அன்னிக்கு அவங்க பாடுனாங்களோ ?

    அன்னிக்கு பட்டுக்கோட்டையார் பாடலை அந்த வாத்தியார் படத்துலே சூப்பரா பாடினார் ,,

    இன்னிக்கு புலிப்பாணியார் பாடலை
    வகுப்பறை வாத்தியார் சூப்பரா
    விளக்கியிருக்கீறீர்கள் ,,

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
    உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
    காலம் தரும் பயிற்சி

    ஆகா ! எவ்வளவு பொருத்தமான
    பாடலை தேர்வு செய்திருக்கிறீர்கள் ,,

    வணக்கங்கள் வாத்தியாரே !

    ReplyDelete
  3. Dear sir,

    Thanks for your great efforts, if possible why u can try for the explanation for various tamil astrology poems in the book format. which will really help for readers as well as the tamil language

    ReplyDelete
  4. Dear Sir

    Arumai Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. அன்புள்ள ஐயா,

    அருமையான பதிவு .. எனக்கென்று எழுதியதை போன்று உள்ளது :)

    எனக்கு கடந்த ஏழு மாத காலமாக செவ்வாய் தசையில் புதன் புத்தி நடக்கிறது .. ஒரு வகையில் (புதிய வேலை) மகிழ்ச்சி என்றால் .. மற்றொரு வகையில் (Job Satisfaction) அது இல்லை ... so neutral என்று எடுத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
  6. எதாவுது ஒரு வரியை quote பண்ணலாமுன்னு தேடி கமென்ட் அடிக்க டைப் பண்ணிட்டு ஏற்கனவே வந்துருக்குற கமெண்ட்டைப் படிச்சுப் பார்த்தா அதே வரியைப் பத்தி ஏற்கனவே சில பேரு Cashew nut போலே கமென்ட் அடிச்சுருக்காங்க..வேற வழியில்லாமே இன்னிக்கு நான் ரிபீட் வுட வேண்டியதாப் போச்சு..

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்.

    எனது சிறிய வயதில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரின் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற சொற்பொழிவில் கேட்டவை.

    அதாவது இந்த ஜென்மம் ஆனது ஆத்ம பலம் பெரும் பொருட்டு ஜனிக்க பட்டது.

    ஜன்மத்தின் முக்கியமான குறிக்கோளே பிரவான்மை என்னும் வரம் கிடைக்கவே.

    அதாவது மோட்சம் அடைய வேண்டி
    நமது பாதையும் பயணமும் இருக்க வேண்டும் என்பது ஆகும்.

    கழிந்த ஜென்மத்தில் உடலால் செய்த பாவத்தை உடலாலும்,

    மனத்தால் செய்த பாவத்தை மனதாலும்

    கண்ணால் செய்த பாவத்தை கண்ணாலும்

    செவியால் செய்த பாவத்தை செவியாலும்.

    நம்பிக்கை துரோகத்தால் செய்த பாவத்தை நம்பிக்கை துரோகத்தாலும்

    இன்னும் என்ன என்ன உண்டோ அனைதீர்க்கும் அனைத்தின் வழியாக அனுபவித்தே தீர வேண்டும் என்பது தான்

    நியாயம், தர்மம், சத்தியம் நமது இந்து மதத்தின் தாரக மந்திரமும் கூட.

    நாம் கஷ்ட படும் பொழுது தன்மேலும் மற்றவரின் மேலும் கோபமோ, வேகம், எரிச்சல், ஆதங்கம் என அனைத்தும் பட்டு ஒன்றும் ஆக போவது ஒன்றும் இல்லை.

    வரும் பொழுது வாங்கி வந்த பாவ அழுக்கை அனுபவித்து தான் போகவேண்டும்.

    அனுபவிக்காமல் போனால் மீண்டும் பிறந்து அனுபவிக்க வேண்டிய வரும்.

    அழுக்கு ஆக்கிய ஆத்ம துணியை
    ( கருமம் என்னும் ) நன்கு துவைத்து அலுக்க நீக்க தான் பிறந்து உள்ளோமே தவிர தப்பிக்க இல்லை.

    இறைவனின் சட்ட திட்டம் அனைத்தும் நன்கு புரிந்தும் மனது கடந்து அலை பாய்வது என்று நிற்குமோ அன்று அனைவரும் ஞானிகளே என்பது.

    ReplyDelete
  8. வேற வழியில்லாமே இன்னிக்கு நான் ரிபீட் //

    என்ன சொல்றீங்க? மீசைல மண் ஒட்டலியா? சரி சரி நம்பிட்டோமில்ல.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com