மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.10

கண்ணதாசனும் தில்லைக்கூத்தனும்!



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனும் தில்லைக்கூத்தனும்!

பஞ்ச பூதங்களின் வடிவாக நிற்கும் தில்லைக் கூத்தனைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் பல பாடல்களைச் சிறப்பாக எழுதியுயுள்ளார். அவற்றில் இரண்டு பாடல்களை உங்கள் பார்வைக்காக இன்று கொடுத்துள்ளேன்.
------------------------------
"ஆதிசிவன் தாள் பணிந்து அருள்பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே!

(ஆதிசக்தி )

வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீரும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே -
அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே!

(ஆதிசக்தி )

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா - அந்த
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா - அதைப்
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா..."

(ஆதிசக்தி )

படம்: திருவருட் செல்வர் (வருடம் 1967)
------------------------------------------------
மேலும் ஒரு பாடல் - இந்தப் பாடல் ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல். ஆமாம்! இயக்குனர் திரு.ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கு கவியரசர் எழுதிக் கொடுத்த சிறந்த பாடல்களில் ஒன்று!

"வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா!
முன்னோர்க்கும் முன்னவா! மூண்ட கதை சொல்லவா!

(வெள்ளிமலை)

அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் எங்கள் அடைக்கல மல்லவா?
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!

(வெள்ளிமலை)

வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன!
சேனை அசுரர் குல ஜெயக்கொடிதான் சொல்வதென்ன!
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயக்கரம் நீட்டு! உன அருள் வடிவைக் காட்டு!"

(வெள்ளிமலை)

படம் - கந்தன் கருணை - வருடம் 1967

இந்தப் பாடல் திருமதி எஸ்.வரலெட்சுமி அவர்கள் தன்னுடைய கணீர்க் குரலால், உணர்வுபூர்வமாகப் பாடி கவியரசரின் வரிகளாலும் படத்தில் இடம் பெற்ற காட்சி அமைப்புக்களாலும், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிய பாடல் என்றால் அது மிகையல்ல!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

27 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஐயா கண்ணதாசனாரின் இப்பாடல்கள்
    அனைத்தும் ஞானசம்பந்தரின் திருவாசகத்தினோடு
    ஒப்பிட உளதிங்கே பல கூறு!
    அதற்கிங்கே சான்றுகள் பல நூறு!
    அதை இங்கே உரைப்பது என் பேறு!

    ஆதிசிவனின் தாழ்பணிந்து அருள் பெறுவோமே.....(கண்ண)

    "நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"...(ஞானசம்பந்தர்)

    "வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே"......(கண்ண)

    "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" .....(ஞான)

    "அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோம்"......(கண்ண)

    "அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்"
    (அன்பிருந்தால் மட்டுமே தொண்டுமணம் வரும் இதுவே கவிஞரின் எண்ணமாகும்)
    இப்படி கூறிக்கொண்டே போகலாம்.....
    நன்றிகள் குருவே!!

    ReplyDelete
  2. வாத்தியாரே..

    வெள்ளிமலை மன்னாவா பாடலோ வரலட்சுமியின் கணீர் குரலுக்காகவே கேட்டுக் கொண்டேயிருக்கலாம்..!

    ReplyDelete
  3. அன்புள்ள வாத்தியார்,

    நல்ல வரிகள் அய்யா. இரண்டாம் படலை அதிகமாக கேட்டுள்ளேன்.

    நன்றி
    சரவணா
    கோவை

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கவியரசர் கண்ணதாசன் பாடல்களைச் சிறப்பாக

    கொடுத்துள்ளீர்கள்.இரண்டும் அவரவர் மனதிலும்

    நீங்காத இடம் பெற்றவைகள்.


    நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-29

    ReplyDelete
  5. one small doubt. for dulam lagnam. sukran is placed in rishabam. he is the lagnathipathi as well as 8th lord. and he is aatchi. will he be benefic or malefic or mixed?

    2. also what about if he is vakra in that place?

    ReplyDelete
  6. also sir. there are many astrologers who say. for a marriage matching.

    adhavadu oru paiyanin jadhagathil 2,7,8 aagiya veedugal endha grahamum illamal suthamaga irundhal. ade pondru suthamaga ulla penin jadhagathai than match seiyavendum endru koorugindraargal. idhu endha alavuku porundhum .

    ReplyDelete
  7. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஐயா கண்ணதாசனாரின் இப்பாடல்கள் அனைத்தும் ஞானசம்பந்தரின் திருவாசகத்தினோடு
    ஒப்பிட உளதிங்கே பல கூறு!அதற்கிங்கே சான்றுகள் பல நூறு!
    அதை இங்கே உரைப்பது என் பேறு! ஆதிசிவனின் தாழ்பணிந்து அருள் பெறுவோமே.....(கண்ண)
    "நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"...(ஞானசம்பந்தர்)
    "வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே"......(கண்ண)
    "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" .....(ஞான)
    "அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோம்"......(கண்ண)
    "அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்"
    (அன்பிருந்தால் மட்டுமே தொண்டுமணம் வரும் இதுவே கவிஞரின் எண்ணமாகும்)
    இப்படி கூறிக்கொண்டே போகலாம்.....
    நன்றிகள் குருவே!!//////

    உங்களுக்கு தேவாரத்திலும், திருவாசகத்திலும் ஈடுபாடு இருப்பது ஆச்சரியமல்ல. அதைப் படிக்க நேரமிருப்பதுதான் ஆச்சரியம். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    வெள்ளிமலை மன்னாவா பாடலோ வரலட்சுமியின் கணீர் குரலுக்காகவே கேட்டுக் கொண்டேயிருக்கலாம்..!/////

    ஆமாம். ஊனாதானா, சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  9. /////Saravana said...
    அன்புள்ள வாத்தியார்,
    நல்ல வரிகள் அய்யா. இரண்டாம் பாடலை அதிகமாக கேட்டுள்ளேன்.
    நன்றி
    சரவணா
    கோவை/////

    அடடே, இதையெல்லாம கேட்பதற்கு உங்களுக்கு எரமிருக்கிறதா? அதுதான் வியப்பு சரவணன்!

    ReplyDelete
  10. ///V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,கவியரசர் கண்ணதாசன் பாடல்களைச் சிறப்பாக
    கொடுத்துள்ளீர்கள்.இரண்டும் அவரவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றவைகள்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Jack Sparrow said...
    one small doubt. for dulam lagnam. sukran is placed in rishabam. he is the lagnathipathi as well as 8th lord. and he is aatchi. will he be benefic or malefic or mixed?
    2. also what about if he is vakra in that place?//////

    லக்கின அதிபதி மேல் எதற்கு சந்தேகம்? ஜாதகனுக்கு அவர் நன்மைகளையே செய்யக் கடைமைப் பட்டவர். வக்கிரமாக இருப்பதால் தாமதமாகச் செய்வார். அவ்வளவுதான்!

    ReplyDelete
  12. ////Jack Sparrow said...
    also sir. there are many astrologers who say. for a marriage matching.
    adhavadu oru paiyanin jadhagathil 2,7,8 aagiya veedugal endha grahamum illamal suthamaga irundhal. ade pondru suthamaga ulla penin jadhagathai than match seiyavendum endru koorugindraargal. idhu endha alavuku porundhum .////

    இது அடிப்படை விஷயம். சுத்த ஜாதகத்திற்கு சுத்தஜாகத்தைத்தான் பொருத்திச் செய்ய வேண்டும்!

    ReplyDelete
  13. ஆசிரியர் அய்யாவுக்கு இனிய வணக்கம். கண்ணதாசன் பற்றி எழுதியது நன்றாக இருந்தது. ஆனால் கண்ணதாசன் காலத்தால் அழிக்கமுடியாத கவிஞர் அவரைப்பற்றி எழுத ஆயிரம் பேர் எழுதுவார்கள் அதனால் நீங்கள் புதுமையாக எழுதவும். உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது புதுமை உதாரணத்திற்க்கு நீங்கள் எழுதிய போகர் புலிப்பாணி இதுபோன்று எழுதுங்கள் இந்த விசயங்கள் யாரும் எழுதியது இல்லை. இந்த விசயங்கள் நீங்கள் எழுதும் போது மிகவும் அருமையாக உள்ளது. தகவல்கள் அனைத்தும் முதன்முதலில் காண்பது போல் உள்ளன.

    சிறிய சந்தேகம்!

    குருபகவான் ஜல ராசிக்கு செல்வதால் சுனாமி வருமா?
    அல்லது கடலில் மாற்றம் ஏற்படுமா?
    இப்பொழுது செல்லபோகிறாறே!


    நன்றி.

    அன்புடன் ராஜேஷ்

    ReplyDelete
  14. அருமை வாத்தியாரே!.

    கண்ணதாசனுக்கு தாசன் என பட்டமே கொடுக்கலாம் போல!

    ReplyDelete
  15. Ananda K Coomaraswamy (1877-1947) the late curator of Indian art at the Boston Museum of Fine Arts, was unexcelled in his knowledge of the art of the Orient, and unmatched in his understanding of Indian culture, language, religion and philosophy. Praising this grand achievement of art, he writes:

    "This conception itself is a synthesis of science, religion and art. In the night of Brahma, Nature is inert, and cannot dance till Shiva wills it. He rises from His rapture, and dancing sends through inert matter pushing waves of awakening sound, and lo! matter also dances appearing as a glory round about Him. This is poetry; but nonetheless, science.
    The late astrophysicist, Carl Sagan (1934-1996) in his book, Cosmos, asserts that the Dance of Nataraja (Tandava) signifies the cycle of evolution and destruction of the cosmic universe (Big Bang Theory). "It is the clearest image of the activity of God which any art or religion can boast of." Modern physics has shown that the rhythm of creation and destruction is not only manifest in the turn of the seasons and in the birth and death of all living creatures, but also the very essence of inorganic matter. For modern physicists, then, Shiva's dance is the dance of subatomic matter. Hundreds of years ago, Indian artist created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. Today, physicist have used the most advanced technology to portray the pattern of the cosmic dance. Thus, the metaphor of the cosmic dance unifies, ancient religious art and modern physics.

    He further says: " The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed."
    Fritjof Capra (1939 - ) Austrian-born famous theoretical high-energy physicist and ecologist wrote:

    "Modern physics has thus revealed that every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction. The dance of Shiva is the dancing universe, the ceaseless flow of energy going through an infinite variety of patterns that melt into one another’’.For the modern physicists, then Shiva’s dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomenon. Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our times, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance."

    ReplyDelete
  16. எனக்கு முதலாவதை விட இரண்டாவது பாடல்தான் அதிகம் பிடிக்கும். அல்லது என்னை அதிகம் கவர்ந்தது. அதற்கு வரலட்சுமி அவர்களின் கணீர் குரலும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்ற வகைப் பாடல்களை விட பக்திப் பாடல்கள் என்னை அதிகம் கவர்கிறது. எங்கள் நாட்டு வானொலியில் அதிகாலை 5 மணிக்கு பக்தி பாடல்களை 1 மணி நேரத்திற்கு ஒலி பரப்புவார்கள். அதை கேட்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். அதைக் கேட்ட பிறகுதான் மற்ற வேலைகளெல்லாம். பல வருட காலமாகவே அதிகாலையில் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அது விடுமுறை நாளாக இருந்தாலும் கூட.

    ReplyDelete
  17. //குருபகவான் ஜல ராசிக்கு செல்வதால் சுனாமி வருமா?
    அல்லது கடலில் மாற்றம் ஏற்படுமா?//

    நில ராசிக்கு சென்றால் நில நடுக்கம் ஏற்படுமா காற்று ராசிக்கு சென்றால் புயல் வீசுமா அக்கினி ராசிக்கு சென்றால் ஊரே பற்றி எரியுமா என்று கேட்காமல் விட்டீர்களே அது வரையில் நம் வாத்தியார் தப்பித்தார்.

    ReplyDelete
  18. /////rajesh said...
    ஆசிரியர் அய்யாவுக்கு இனிய வணக்கம். கண்ணதாசன் பற்றி எழுதியது நன்றாக இருந்தது. ஆனால் கண்ணதாசன் காலத்தால் அழிக்கமுடியாத கவிஞர் அவரைப்பற்றி எழுத ஆயிரம் பேர் எழுதுவார்கள் அதனால் நீங்கள் புதுமையாக எழுதவும். உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது புதுமை உதாரணத்திற்க்கு நீங்கள் எழுதிய போகர் புலிப்பாணி இதுபோன்று எழுதுங்கள் இந்த விசயங்கள் யாரும் எழுதியது இல்லை. இந்த விசயங்கள் நீங்கள் எழுதும் போது மிகவும் அருமையாக உள்ளது. தகவல்கள் அனைத்தும் முதன்முதலில் காண்பது போல் உள்ளன.///////

    கவியரசரின் ஆத்மார்ந்தமான ரசிகன். மற்றவர்களைவிட எனது நடையில் சற்று வித்தியாசமாகத் தரமுடியும். அத்துடன், பதிவுகளில் வெறும் ஜோதிடத்தை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தால் போரடிக்காதா? அதனால் வாரத்தில்3 நாட்களுக்கு ஜோதிடம். மீதமுள்ள நாட்களில் மற்ற சுவாரசியமான விஷயங்கள்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////சிறிய சந்தேகம்!
    குருபகவான் ஜல ராசிக்கு செல்வதால் சுனாமி வருமா?
    அல்லது கடலில் மாற்றம் ஏற்படுமா?
    இப்பொழுது செல்லபோகிறாரே!
    நன்றி.
    அன்புடன் ராஜேஷ்//////

    எதற்குக் கவலை? குருவைவிட பன்மடங்கு சக்திவாய்ந்தவர் இருக்கிறார். அவரின் பெயர்: இறைவன். அவர் பார்த்துக்கொள்வார். வீண் கவலையை விட்டொழியுங்கள்!

    ReplyDelete
  19. ////sagotharan said...
    அருமை வாத்தியாரே!.
    கண்ணதாசனுக்கு தாசன் என பட்டமே கொடுக்கலாம் போல!///////

    பட்டம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், நான் அவருடைய தாசன்தான்!

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா!

    அர்த்தனாரீஸ்வரா
    இது என்ன சோதனை!

    நமசிவாயம் வாழ்க
    நாதன்தாழ் வாழ்க
    **********************
    வெந்த வெந்நீர் அணிந்து விருசூல் திகள் மார்பில்
    நல்ல பந்தனைவெம் விரலால் ஒருபாகம்
    அமந்தருளி கொந்தனைவெம் பொடிசூல் கொடிமாட
    சென்கூரில் நின்ற அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே!

    எழுத்து பிழைக்கு மன்னிக்கவெம்!

    ReplyDelete
  21. எனக்கு பதில் அளித்தற்க்கு நன்றி அய்யா

    ReplyDelete
  22. //////kmr.krishnan said...
    Ananda K Coomaraswamy (1877-1947) the late curator of Indian art at the Boston Museum of Fine Arts, was unexcelled in his knowledge of the art of the Orient, and unmatched in his understanding of Indian culture, language, religion and philosophy. Praising this grand achievement of art, he writes:

    "This conception itself is a synthesis of science, religion and art. In the night of Brahma, Nature is inert, and cannot dance till Shiva wills it. He rises from His rapture, and dancing sends through inert matter pushing waves of awakening sound, and lo! matter also dances appearing as a glory round about Him. This is poetry; but nonetheless, science.
    The late astrophysicist, Carl Sagan (1934-1996) in his book, Cosmos, asserts that the Dance of Nataraja (Tandava) signifies the cycle of evolution and destruction of the cosmic universe (Big Bang Theory). "It is the clearest image of the activity of God which any art or religion can boast of." Modern physics has shown that the rhythm of creation and destruction is not only manifest in the turn of the seasons and in the birth and death of all living creatures, but also the very essence of inorganic matter. For modern physicists, then, Shiva's dance is the dance of subatomic matter. Hundreds of years ago, Indian artist created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. Today, physicist have used the most advanced technology to portray the pattern of the cosmic dance. Thus, the metaphor of the cosmic dance unifies, ancient religious art and modern physics.

    He further says: " The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed."
    Fritjof Capra (1939 - ) Austrian-born famous theoretical high-energy physicist and ecologist wrote:

    "Modern physics has thus revealed that every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction. The dance of Shiva is the dancing universe, the ceaseless flow of energy going through an infinite variety of patterns that melt into one another’’.For the modern physicists, then Shiva’s dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomenon. Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our times, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance."//////

    அரிய தகவல்களுக்கும் உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கே.எம்.ஆர்.கே சார்!

    ReplyDelete
  23. /////ananth said...
    எனக்கு முதலாவதை விட இரண்டாவது பாடல்தான் அதிகம் பிடிக்கும். அல்லது என்னை அதிகம் கவர்ந்தது. அதற்கு வரலட்சுமி அவர்களின் கணீர் குரலும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்ற வகைப் பாடல்களை விட பக்திப் பாடல்கள் என்னை அதிகம் கவர்கிறது. எங்கள் நாட்டு வானொலியில் அதிகாலை 5 மணிக்கு பக்தி பாடல்களை 1 மணி நேரத்திற்கு ஒலி பரப்புவார்கள். அதை கேட்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். அதைக் கேட்ட பிறகுதான் மற்ற வேலைகளெல்லாம். பல வருட காலமாகவே அதிகாலையில் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அது விடுமுறை நாளாக இருந்தாலும் கூட.//////

    நல்ல தகவல். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  24. ///ananth said...
    //குருபகவான் ஜல ராசிக்கு செல்வதால் சுனாமி வருமா?
    அல்லது கடலில் மாற்றம் ஏற்படுமா?//
    நில ராசிக்கு சென்றால் நில நடுக்கம் ஏற்படுமா காற்று ராசிக்கு சென்றால் புயல் வீசுமா அக்கினி ராசிக்கு சென்றால் ஊரே பற்றி எரியுமா என்று கேட்காமல் விட்டீர்களே அது வரையில் நம் வாத்தியார் தப்பித்தார்.////

    அவருடைய ஆதங்கம் அவருக்கு! maturity level and thinking level ஒவ்வொருக்கும் வேறுபடுமல்லவா மிஸ்டர் ஆனந்த்! தப்பிக்க நினைக்க மாட்டேன். எல்லோருடைய சந்தேகங்களையும் வரவேற்கிறேன்!:-)))

    ReplyDelete
  25. kannan said...
    வணக்கம் ஐயா!
    அர்த்தனாரீஸ்வரா இது என்ன சோதனை!
    நமசிவாயம் வாழ்க
    நாதன்தாழ் வாழ்க
    **********************
    வெந்த வெந்நீர் அணிந்து விருசூல் திகள் மார்பில்
    நல்ல பந்தனைவெம் விரலால் ஒருபாகம்
    அமந்தருளி கொந்தனைவெம் பொடிசூல் கொடிமாட
    சென்கூரில் நின்ற அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே!
    எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்!////////

    நல்லது. நன்றி குமரா!

    ReplyDelete
  26. வெள்ளிமலை மன்னவா!
    வேதம் நீ அல்லவா!
    முன்னோர்க்கும் முன்னவா!
    மூண்ட கதை சொல்லவா!

    Sollungangal aiya. Ketpom.

    ReplyDelete
  27. Rajkumar said...
    வெள்ளிமலை மன்னவா!
    வேதம் நீ அல்லவா!
    முன்னோர்க்கும் முன்னவா!
    மூண்ட கதை சொல்லவா!
    Sollungangal aiya. Ketpom.////

    மூண்டகதை என்று கவியரசர் எதைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லையே சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com