மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.4.10

ஜோதிடத்தின் முதல் பாடம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தின் முதல் பாடம்!

"அதுஇருந்தா இதுஇல்லே
இதுஇருந்தா அதுஇல்லே
அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கிங்கே இடமில்லே!"
- கவியரசர் கண்ணதாசன்
------------------------------------
ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.

ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ அல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.

ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!

எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!

எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது: எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!

ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும் ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச் சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.

இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு, கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக் காரனுக்கு இருக்காது.

இறைவனின் படைப்பு அப்படி!

உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும்.இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்

அதற்கு உதாரணம்: ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!

கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார்,”கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!”

நான் சொன்னேன், “கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!”

பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.

மன்மோகன் சிங்கிற்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.
முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன் அவருடைய வாகன ஓட்டிதான்!
பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்!

இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக நடந்து தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும். ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.

பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும் அவர்களுடைய \உ தவியாளர்களுக்கு நான்காம் வீடும் நன்றாக இருக்கும்.

உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை; உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!

அனைவரும் சமம்! அதை மனதில் வையுங்கள்!
-------------------------------------------------
ஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும். ஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில் வைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

ஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து வையுங்கள்.எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில் சொல்ல வேண்டும்

உடனே அதைச் செய்யுங்கள்.

லக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதற்க்குக் காரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

எனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது மனப்பாடம் செய்து வையுங்கள்.மூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்!

செய்வீர்களா? முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

39 comments:

  1. Sir,

    1.Viruchiga Lagnam in 12th Place Sani and sevvai, is it vibaritha Lagnam.

    2. Is the same article published before

    ReplyDelete
  2. //பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும் அவர்களுடைய \உ தவியாளர்களுக்கு நான்காம் வீடும் நன்றாக இருக்கும்.

    பிரபலங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் அல்லது ஐந்தாம் இடத்திற்குரிய அதிபதி
    லகனாதிபதி, அல்லது லக்னத்தோடு சம்பந்தப்பட்டிருந்தால் இன்னமும் விசேடம் என்கிறார்களே ?
    அப்படியா ?

    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம் தோஹா. ( கடார்)

    ReplyDelete
  3. i know my horoscope... neengal ithai palamurai solli ulleergal. athanal ennudaiya jadakathai mananam seithu vaithu ullaen.

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா
    நான் எப்பொழுது உங்கள் மாணவி (2008) ஆனேனோ அப்பொழுதே என் ஜாதகம் எனக்கு அத்துப்படி.
    அது ஏன் மூன்று நாட்களுக்குள் மனப்பாடம் செய்ய வேண்டும்?

    இப்படிக்கு
    உங்கள் மாணவி

    ReplyDelete
  5. எனக்கு எனது குடும்பத்தில் நான், எனது மனைவி, எனது குழந்தைகள், என் அம்மா, என் ஓரிரண்டு சகோதரர்கள்
    ஜாதகம் அத்துபடி. ஆனால், ராசி சக்கரம் மட்டும்தான். மற்றபடி, அம்சம், பாவம், அஷ்டவர்கம் இதெல்லாம்
    கேட்டால் நான் அம்பேல்.
    நிற்க.
    ஒருவர் பாஸிடிவ் ஆக பின்னூட்டம் இடும்பொழுது அது டானிக் மட்டுமல்ல, ஒரு ஸ்டெராய்டு மாதிரி கூட
    செயல்படுகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மையே. ஆனால், அதே சமயம், அந்த ஸ்டெராய்டின் வேகம்
    அதிகமாகும்பொழுது , தாம் ரொம்ப பாபுலர் ஆகிவிட்டோம் என்ற எண்ணம் ஒரு தினுசான ஆணவத்தின்
    எல்லைக்குக் கொண்டுபோய், எது வேண்டுமானாலும் எழுதவும் தூண்டுகிறது .
    அந்த ஸ்டெராய்டின் கெடுதல்களையும் நன்கே உணர்ந்து,
    பின்னூட்டம் இடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இருக்கும்
    கருத்தினை உள்வாங்கி, நல்ல பதில் தருவது உங்களது நல் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

    தன்னலமில்லாது , தொண்டு மனப்பான்மையுடன் செயல்படும் உங்களுடைய பணி என்றென்றும் தொடரட்டும்.

    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம் தோஹா. ( கடார்)

    ReplyDelete
  6. ஞாபகம் இருக்கு..அனைத்து கிரகங்கள் அதன் நட்சத்திரங்களுடன்....

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு வணக்கம்,
    புதியதோர் தொடக்கம் வகுப்பரையிலி னிவரும்
    புத்தம் புதிய விளக்கம்.
    லட்சணம் கூறும் கட்டங்கள் பன்னிரெண்டு
    அதைப் பாரபட்சம் இன்றி விளக்கம் கூறும்
    பாடம் மிக உண்டு .
    வந்து செல்வோர் பலவுண்டு - ஆம்
    வகுப்பறை வந்து செல்வோர் பலவுண்டு அதில்
    வம்பு வளர்ப்போரும் சில உண்டு.
    வம்பு தும்பு எதைக் கண்டு(ம்) ;
    வாத்தியார் துவளாத மனம் கண்டு
    வாயடைத்து நிற்பார் பல உண்டு - எனினும்,
    நானும் அவரின் துணிவுக் கண்டு
    எப்படி இது சாத்தியம் என்று(ம்) வியந்ததுண்டு!
    வாழிய! வாழிய!! வாழியவே!! என்று
    வாழ்த்தி வணங்குவேன் மிக நன்று.

    ReplyDelete
  8. sir,

    ஜனன ஜாதகத்தில் வக்ரமாக இருக்கும் கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரம் அடையும்போது நிச்சயம் நல்ல பலன்களே நடக்கும்!

    Is this true

    ReplyDelete
  9. Sir,

    1.Viruchiga Lagnam, in 12th Place Sani and sevvai, is it vibaritha rajayogam

    2. Is the same article published before

    ReplyDelete
  10. Yes,

    remembered family members(4) horoscope details

    ReplyDelete
  11. அய்யா இந்த பாடம் ஏற்கானவே படித்த பாடம் அல்லவா ? மீண்டும் பின்னோக்கி செல்கிறோமோ?

    அன்புடன்
    கர்ண இரத்தினவேல்

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு வணக்கம்
    i send my birth date and time and plase to your mail sir . when ever i have time i read your lession sir , please send me about my business dream
    by
    mahesh.t

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    தாங்கள் தெரிவித்துள்ளவாறு எனது ஜாதகத்தை முன்பே மனப்பாடம் செய்து வைத்து விட்டேன்.எப்பொழுது கேட்டாலும் தயக்கமின்றிப் பதில் சொல்வேன்.

    நன்றி!

    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-20

    ReplyDelete
  14. அன்பு அய்யா,
    ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. தங்களின் இந்த பதிவை ஏற்கனவே படித்த ஞாபகம் வருதே.. ஏன் இப்படி மறுபதிவு?

    ReplyDelete
  15. enakku ennodaiya jadagam manapadam....saturday night full tightil ketallum sola moodiume ..:))..hehehe

    ReplyDelete
  16. \\அவன் எதற்குக் காரகன் \\ இது தான் தெரியமாட்டிக்குது. எந்தந்த கிரகம் எதற்கு காரகன்?

    கொஞ்சம் சொன்னங்கின்னா \விளகுனிங்கன்னா நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  17. /////Loga said...
    Sir,
    1.Viruchiga Lagnam in 12th Place Sani and sevvai, is it vibaritha Lagnam.
    2. Is the same article published before/////

    மின்னஞ்சல் வகுப்பில் படித்திருப்பீர்கள்.மின்னஞ்சல் வகுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 700 மட்டுமே. ஆனால் வகுப்பறையின் வருகைப்பதிவேட்டில் சுமார் 1,437 பேர்கள் உள்ளதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது சரிபாதிப்பேர்களுக்கு இந்தப் பாடங்கள் தெரியாது. அதோடு புதிதாக வருகிறவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்!

    ReplyDelete
  18. /////sury said...
    //பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும் அவர்களுடைய \உ தவியாளர்களுக்கு நான்காம் வீடும் நன்றாக இருக்கும். பிரபலங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் அல்லது ஐந்தாம் இடத்திற்குரிய அதிபதி லக்னாதிபதி, அல்லது லக்னத்தோடு சம்பந்தப்பட்டிருந்தால் இன்னமும் விசேடம் என்கிறார்களே ?
    அப்படியா ?
    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம் தோஹா.( கடார்)////////

    அந்த அமைப்பு பிரபலங்களுக்கு என்றில்லை, அப்படி இருப்பவர்கள் அனைவருக்குமே நன்மைதான்!

    ReplyDelete
  19. //////உங்கள் மாணவி said...
    அன்புள்ள ஐயா
    நான் எப்பொழுது உங்கள் மாணவி (2008) ஆனேனோ அப்பொழுதே என் ஜாதகம் எனக்கு அத்துப்படி.
    அது ஏன் மூன்று நாட்களுக்குள் மனப்பாடம் செய்ய வேண்டும்?
    இப்படிக்கு
    உங்கள் மாணவி/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////govind said...
    i know my horoscope... neengal ithai palamurai solli ulleergal. athanal ennudaiya jadakathai mananam seithu vaithu ullaen.//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  21. //////sury said...
    எனக்கு எனது குடும்பத்தில் நான், எனது மனைவி, எனது குழந்தைகள், என் அம்மா, என் ஓரிரண்டு சகோதரர்கள் ஜாதகம் அத்துபடி. ஆனால், ராசி சக்கரம் மட்டும்தான். மற்றபடி, அம்சம், பாவம், அஷ்டவர்கம் இதெல்லாம் கேட்டால் நான் அம்பேல்.
    நிற்க.
    ஒருவர் பாஸிடிவ் ஆக பின்னூட்டம் இடும்பொழுது அது டானிக் மட்டுமல்ல, ஒரு ஸ்டெராய்டு மாதிரி கூட
    செயல்படுகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மையே. ஆனால், அதே சமயம், அந்த ஸ்டெராய்டின் வேகம்
    அதிகமாகும்பொழுது , தாம் ரொம்ப பாபுலர் ஆகிவிட்டோம் என்ற எண்ணம் ஒரு தினுசான ஆணவத்தின்
    எல்லைக்குக் கொண்டுபோய், எது வேண்டுமானாலும் எழுதவும் தூண்டுகிறது .
    அந்த ஸ்டெராய்டின் கெடுதல்களையும் நன்கே உணர்ந்து,
    பின்னூட்டம் இடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இருக்கும்
    கருத்தினை உள்வாங்கி, நல்ல பதில் தருவது உங்களது நல் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.
    தன்னலமில்லாது , தொண்டு மனப்பான்மையுடன் செயல்படும் உங்களுடைய பணி என்றென்றும் தொடரட்டும்.
    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம் தோஹா. ( கடார்)/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி

    ReplyDelete
  22. ////மதி said...
    ஞாபகம் இருக்கு..அனைத்து கிரகங்கள் அதன் நட்சத்திரங்களுடன்..../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம், புதியதோர் தொடக்கம் வகுப்பரையிலி னிவரும்
    புத்தம் புதிய விளக்கம். லட்சணம் கூறும் கட்டங்கள் பன்னிரெண்டு
    அதைப் பாரபட்சம் இன்றி விளக்கம் கூறும் பாடம் மிக உண்டு .
    வந்து செல்வோர் பலவுண்டு - ஆம் வகுப்பறை வந்து செல்வோர் பலவுண்டு அதில்
    வம்பு வளர்ப்போரும் சில உண்டு. வம்பு தும்பு எதைக் கண்டு(ம்) ;
    வாத்தியார் துவளாத மனம் கண்டு வாயடைத்து நிற்பார் பல உண்டு - எனினும்,
    நானும் அவரின் துணிவுக் கண்டு எப்படி இது சாத்தியம் என்று(ம்) வியந்ததுண்டு!
    வாழிய! வாழிய!! வாழியவே!! என்று
    வாழ்த்தி வணங்குவேன் மிக நன்று./////

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. ////T K Arumugam said...
    i can/////

    நல்லது. நன்றி. சொர்க்கபூமிக்காரரே!!

    ReplyDelete
  25. /////krishna said...
    sir,
    ஜனன ஜாதகத்தில் வக்ரமாக இருக்கும் கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரம் அடையும்போது நிச்சயம் நல்ல பலன்களே நடக்கும்!
    Is this true//////

    நீங்கள் சொல்லும் செய்தி புதிதாக உள்ளது.!

    ReplyDelete
  26. ////KULIR NILA said...
    Ok Sir/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////VKC said...
    Yes,
    remembered family members(4) horoscope details////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Rathinavel.C said...
    அய்யா இந்த பாடம் ஏற்கானவே படித்த பாடம் அல்லவா ? மீண்டும் பின்னோக்கி செல்கிறோமோ?
    அன்புடன்
    கர்ண இரத்தினவேல்/////

    எங்கே படித்தீர்கள்? மின்னஞ்சல் வகுப்பில் படித்திருப்பீர்கள்.மின்னஞ்சல் வகுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 700 மட்டுமே. ஆனால் வகுப்பறையின் வருகைப்பதிவேட்டில் சுமார் 1,437 பேர்கள் உள்ளதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது சரிபாதிப்பேர்களுக்கு இந்தப் பாடங்கள் தெரியாது. அதோடு புதிதாக வருகிறவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்!

    ReplyDelete
  29. ////மகேஷ் ராஜ் said...
    ஆசிரியருக்கு வணக்கம்
    i send my birth date and time and plase to your mail sir . when ever i have time i read your lession sir , please send me about my business dream
    by
    mahesh.t/////

    தற்சமயம் நேரம் இல்லை. பிறகு பார்க்கலாம்!

    ReplyDelete
  30. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    தாங்கள் தெரிவித்துள்ளவாறு எனது ஜாதகத்தை முன்பே மனப்பாடம் செய்து வைத்து விட்டேன்.எப்பொழுது கேட்டாலும் தயக்கமின்றிப் பதில் சொல்வேன்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  31. /////Nareshkumar said...
    சரி ஐயா!!!!!!!!!!!!!!!!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  32. ///////minorwall said...
    அன்பு அய்யா,
    ஞாபகம் வருதே.. ஞாபகம்வருதே.. தங்களின் இந்த பதிவை ஏற்கனவே படித்த ஞாபகம் வருதே.. ஏன் இப்படி மறுபதிவு?/////

    இந்தப் பாடங்கள் மின்னஞ்சல் வகுப்பில் நடத்தப்பெற்றது. இது மட்டுமல்ல! அடுத்துவரவுள்ள 10 பாடங்களும் மின்னஞ்சல் வகுப்பில் வந்தவைதான். மறு ஒலிபரப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள் மைனர். மின்னஞ்சல் வகுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 700 மட்டுமே. ஆனால் வகுப்பறையின் வருகைப்பதிவேட்டில் சுமார் 1,437 பேர்கள் உள்ளதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது சரிபாதிப்பேர்களுக்கு இந்தப் பாடங்கள் தெரியாது. அதோடு புதிதாக வருகிறவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்!

    ReplyDelete
  33. /////ms torrent said...
    enakku ennodaiya jadagam manapadam....saturday night full tightil ketallum sola moodiume ..:))..hehehe///////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  34. குறும்பன் said...
    \\அவன் எதற்குக் காரகன் \\ இது தான் தெரியமாட்டிக்குது. எந்தந்த கிரகம் எதற்கு காரகன்?
    கொஞ்சம் சொன்னங்கின்னா \விளக்குனிங்கன்னா நல்லாயிருக்கும்.

    சூரியன்: உடல்காரகன், தந்தைக்குக் காரகன்
    சந்திரன்: மனகாரகன், தாய்க்குக்காரகன்
    சனி: ஆயுள் காரகன், கர்மகாரகன் (authority for work)
    புதன்: வித்யாகாரகன் (கல்வி மற்றும் வித்தைகளுக்குக் காரகன்)
    சுக்கிரன்: களத்திரகாரகன் (authority for marriage)
    குரு: தனகாரகன், குழந்தை பாக்கியத்துக்குக்காரகன்.
    பழைய பாடங்களில் இன்னும் விவரமாக உள்ளது. படித்துப்பாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  35. anbin vaathiyar avargaluku.. thangalin pani sirapudan ulladu... melum nalla pala vilakangaludan thangalin pani thodaratum...

    Thangalin paadangali paditha piragu enakum jodidam sambandamaga pala vidayam therindu kolla vendumenra aaval adigarithu ulladu... veru sila noolgalum naan vaangi padithean..thangalin padivu migavum payanulladaga erunadu.

    maanavan
    Ramanesh

    ReplyDelete
  36. ////ramanes said...
    anbin vaathiyar avargaluku.. thangalin pani sirapudan ulladu... melum nalla pala vilakangaludan thangalin pani thodaratum...
    Thangalin paadangali paditha piragu enakum jodidam sambandamaga pala vidayam therindu kolla vendumenra aaval adigarithu ulladu... veru sila noolgalum naan vaangi padithean..thangalin padivu migavum payanulladaga erunadu.
    maanavan
    Ramanesh////

    நல்லது. நன்றி ரமனேஷ்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com