மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.4.10

எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து!

...........................................................................................................................
எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து!

கடவுளால் படைக்கப்பெற்ற மனித உடம்பிற்கு இன்று பலவிதமான டாக்டர்கள் இருக்கிறார்கள். மூளைக்கு ஒரு மருத்துவர். கண்ணிற்கு ஒரு மருத்துவர். பல்லிற்கு ஒரு மருத்துவர். காது, மூக்கு, தொண்டைக்கு ஒருவர் என்று உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விஷேச மருத்துவர் இருக்கிறார்.

மருத்துவத்துறை அத்தனை விரிவடைந்து விட்டது. அதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். அதே போல மனிதனின் நோய்களும் பலவிதமாக விரிவடைந்து விட்டன. சரக்கடிப்பதில் இருந்து, சந்தில் சிந்து பாடுவதுவரை மனிதனின் வக்கிர விவகாரங்களும் விரிவடைந்துவிட்டன.

ஒரு காலத்தில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பு, இவை அத்தனை பிரிவுகளூக்கும் ஒரு மருத்துவர் தனியாக நின்று வைத்தியம் செய்திருக்கிறார். அவர் பெயர் டாக்டர் ரங்காச்சாரி. சென்னை அரசு வைத்தியக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிலை உள்ளது. அடுத்தமுறை அங்கே சென்றால், அதைப் பாருங்கள்.

இது பற்றி சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் ஒருமுறை தனது சொற்பொழிவில் இப்படிச் சொன்னார்:

”கடவுளால் உருவாக்கப்பெற்ற இந்த உடம்பிற்கு இன்று பல டாக்டர்கள் இருக்கிறார்கள். எமன் வந்தால் பிராணன் மட்டும் போகும். டாக்டர் வந்தால் பிராணனுடன், பணமும் சேர்ந்து போகும்!”

"For a body manifested by God we are having a society of doctors. If yama comes, only the prana will go.If a doctor comes, prana and money will go!"

நிலைமை இவ்வாறு இருக்க, எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து எனபது எப்படி சாத்தியம்?

அன்று சாத்தியப்பட்டிருக்கிறது. காலம் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்பதால், அதைக் காணும் வாய்ப்பு உங்களுக்கும், எனக்கும் இல்லாமல் போய்விட்டது.

ஆமாம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவர் இருந்தார். அதுவும் அடர்ந்த காட்டில் இருந்தார். 4448 அரியவகை மூலிகைகள் அக்காட்டில் இருந்தனவாம். அத்தனை மூலிகைகளும் அவருக்குப் பரீட்சயமானவை.

அந்த மூலிகைகளை வைத்து அவர் ஒரு பொது மருந்து தாயாரித்தாராம்.

பிற்காலத்தில் மக்கள் எல்லாம் பலவிதமான நோய்களால் அவதிப்படப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தவர் அதற்குத் தன்னாலான தீர்வாக ஒரு பொது மருந்தை உண்டாக்க நினைத்தாராம்.

முதலில் மூலிகைகளால் ஒன்பது வகையான விஷங்களைத் (Poison) தயாரித்தாராம். பிறகு அந்த ஒன்பதுவகை விஷங்களையும் சில குறிப்பிட்ட அளவுகளில் ஒன்றோடு ஒன்றாகச் சேர்த்துக் கடைசியில் மொத்தமாக அவற்றை ஒரே விஷமாக மாற்றி சர்வரோக நிவாரணியாக மாற்றினாராம்.

பிறகு நீராக இருந்த மருந்தைக் கெட்டிப் படுத்தி மூன்றடி உயரச் சிலை வடிவில் வடிவமைத்தாராம். அதன், அதாவது சிலையின் தலை மீது பாலை ஊற்றினால், அது வடிந்து, சிலையில் கால் பகுதிக்கு வரும்போது மருந்தாகி விடும். அதில் ஒரு ஸ்பூன் அளவு அல்லது ஒரு கரண்டி அளவு சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகிவிடுமாம்.

பால் என்று இல்லை, பழங்களைக் கரைத்து ஊற்றினாலும், சிலை மீது வடிந்து கீழே வரும்போது அது மருந்தாகிவிடுமாம்.

மருந்து வேண்டும் எனும்போது பாலை ஊற்றி மருந்தாக்கிக் கொள்ளலாம். சிலை அப்படியே இருக்கும்.

மருந்தை அரைக்கும் இயந்திரங்கள், காய்ச்சும் இயந்திரங்கள், வடிகட்டும் இயந்திரங்கள், கெட்டியாகச் செய்யும் இயந்திரங்கள் எதுவும் இன்றி அவர் அதை எப்படிச் செய்தார் என்பது ஆச்சரியமான விஷயம்.

அவர் சித்தர் என்பதால் - அதாவது சித்திகள் நிறைந்தவர் என்பதால் அவருக்கு இது சாத்தியம் ஆகியிருக்கலாம். தமிழ் நாடறிந்த 18 சித்தர்களில் அவரும் ஒருவர்.

அவருடைய பெயரை இப்போது சொல்கிறேன். உங்களில் பலருக்கு அவருடைய பெயர் தெரிந்த பெயராக அல்லது அறிந்த பெயராக இருக்கலாம்.

அறியாதவர்களுக்கு? அதற்கு கவலைப்பட வேண்டாம். விக்கி மகராஜாவிற்கு அவரைத் தெரியும். விக்கி மகராஜாவும், கூகுள் ஆண்டவரும் சொன்னால் போதும் நமக்கு! நம்புவோம்! ஆகவே அதையும் பிடித்து வைத்திருக்கிறேன். பதிவின் கடைசியில் அந்த விவரங்கள் உள்ளன.

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். அவருடைய பெயர் போகர்!

அவர் செய்த சிலைக்கும் பெயர் உண்டு. அந்தச் சிலையின் தண்டபாணி. நவபாஷாணத்தில் ( made out of 9 poisons) செய்யப்பெற்ற சிலை அது!

ஆமாம் கையில் தண்டத்துடன் (தடியுடன்) பழநிமலை மீது இருக்கிறானே தண்டபாணி - அவன்தான் அவர் வடிவமைத்த சிலை.

பழத்திற்காக முருகன் வந்து நின்றுபோன மலையின்மீது, அவனுக்காக ஒரு சிலையைச் செய்து, அங்கே வைத்தவரும் போகர்தான். போகர் அவனுடைய பக்தர்.

இன்று தமிழ் நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வந்துபோகும் பழநிக் கோவிலின் ஸ்தாபகரும் அவர்தான்.

.........................................................................................................................
காலம் காலமாகத் தண்டபாணி மீது பாலையும், பஞ்சாமிர்தத்தையும் ஊற்றி மருந்தை எடுத்து மக்களுக்குக் கொடுத்துவந்தவர்கள், பிற்காலத்தில் அழுத்தித் தேய்த்து அதிகமாக எடுத்து, அந்தச் சிலையையே பலவீனமடையச் செய்துவிட்டார்கள். பக்தர்கள் சிலர் போட்ட கேஸில், அரசு சிலைக்கு அபிசேகம் செய்வதைத் தடை செய்து விட்டது. இப்பொது வேறு ஒரு கற்சிலையை அந்த சிலைக்கு முன்னால் வைத்து, அதற்குத்தான் அபிஷேகம் செய்கிறார்கள்.

போகர் நாடறிந்த சித்தர். பல சித்திகளை உடையவராக விளங்கியவர். அவருடைய குருவின் பெயரைக் கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம், அவருடைய குருவின் பெயர் காலங்கி நாதர். அந்தக் காலங்கி நாதர் சீன மண்ணில் பிறந்து, தமிழ் மண்ணில் குடியேறி, வாழ்ந்து, மறைந்தவர். அவரும் ஒரு சித்தர். தன் வாழ்நாளின் பெரும்பகுதிய அவர் தமிழ் மண்ணில் கழித்ததால், அவரும் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்றார்.

அவரின் பிரதான சீடரின் பெயரைக் கேட்டால் மற்றுமொறு ஆச்சரியம் ஏற்படும். ஆமாம், அவர் பெயர் புலிப்பாணி.

அரிய ஜோதிட நூலை நமக்குத் தந்துவிட்டுப்போனாரே அதே புலிப்பாணிதான் அவர்.

நாம் யமாஹா, பல்சர் வண்டிகளில் பயணிப்பதைபோல, அவர் அன்றையத் தேதியில், தான் இருந்த அடர்ந்த வனப் பகுதியில் புலிகளின் மீதுதான் பயணிப்பாராம். அதனால்தான் அவருக்குப் புலிப்பாணி என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு.(இதற்குப் புகைப்படச் சான்று கேட்காதீர்கள். இல்லை...கிடைக்காது!)



போகர் வாழ்ந்த காலத்தில் புலிப்பாணி இளைஞன். அவரைப் போகர், பாலகன் என்றுதான் அழைப்பாராம்.

இந்தச் செய்திகள் எல்லாம், சப்தகாண்டம்’ எனும் நூலில் ஆவணப்படுத்தப் பெற்றுள்ளதாம்.

Bogar anticipating that in due course of period, human beings will suffer from large number of disease. As an expert in medicine he used 4448 rare herbs and made 9 poisonous medicine, mixing these 9 poisons into one needs great knowledege and skill, to make a Master Medicine ( One medicine to cure all disease ). என்ற செய்திதான் இக்கட்டுரையின் முக்கியமான செய்தி. அதை மனதில் கொள்ளுங்கள்.

இதே மருந்தைப் பற்றித் திருமூலர் எழுதிய திருமந்திர நூலிலும் தகவல்கள் உள்ளதாம். ஆயுர்வேதத்தின் தந்தை என்று புகழ்பெற்ற அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் தான் திருமூலர் தனது நூலில் அது பற்றி எழுதியுள்ளாராம்.

Bogar mixed the 9 poisons ( Nava Bashanam ) and made the Master Medicine in the form of Lord Murugan which is currently worshiped at Palani Murugan temple. There is a place near Palani Hill called Thanasiappan Temple which is the place were Bogar mixed the Nava Bashanam and made the Murugan idol.

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். உங்களின் பொறுமை கருதியும், கட்டுரையின் நீளம் கருதியும் இத்துடன் நிறைவு செய்கிறேன். மேலதிகத் தகவல் வேண்டுவோர், இங்கே உள்ள சுட்டியைக் (Link URL) கிளிக்கிப் படித்துக் கொள்ளலாம்

போகர் கடைசியில் என்னவானார் என்னும் சுவாரசியமான செய்தி அக்கட்டுரையில் உள்ளது.

இன்னும் அதிகப்படியான தகவல்கள் வேண்டுவோர் இதையும் க்ளிக்கிப் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

44 comments:

  1. Dear sir

    Very excellant. I am very happy to know this informations about Lord Murugan

    with bestwishes
    R.Ravichandran

    ReplyDelete
  2. போகர் மற்றும் புலிப்பாணி பற்றிய தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையான செய்திகள்!
    மிக்க நன்றி! யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!
    அனைத்துலகமும் அவனுள் அடக்கம் அவனே அணுவிலும் அணுவாய் அவ்வணுவை ஆயிரமாய் அருத்ததன் அளவாய் இருப்பவன் அப்படி இருக்கையில் அவன், போகர், புலிப்பாணி போன்றோரின் குருவை இமயத்திற்கு வடக்கே படைத்தது தெற்கே அனுப்பியதன் காரணம் அவனன்றி வேராறிவர். இதுபோன்ற செய்திகள் வானத்தில் பறந்துக்கொண்டு பூமியை பார்க்கச் செய்கிறது. நன்றிகள் குருவே.

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ஞானப் பழத்திற்காக முருகன் வந்து நின்ற பழனி மலையில், அவனுக்காக நவபாஷாணத்தில்செய்யப்பெற்ற தண்டபாணி சிலையை வடிவமைத்து அங்கே வைத்தவரும், பழநிக் கோவிலின் ஸ்தாபகரும் ஆன போகர்,

    இன்றும் ஜோதிடத்திற்கு வழிகாட்டியாக உள்ள ஜோதிட நூலை நமக்குத் தந்துவிட்டுப்போன புலிப்பாணி.
    இவர்களின் குரு காலங்கி நாதர்
    மற்றும் திருமந்திர நூலினை நமக்கு அளித்த திருமூலர்-----

    பதினெட்டு சித்தர்களில் நான்கு சித்தர்களைப் பற்றியக் குறிப்புகளை தங்களுக்கே உள்ள சொல்லாற்றலோடு சிறப்பாக அளித்துள்ளீர்கள்.
    நன்றி!
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-04-13

    ReplyDelete
  5. Good morning Sir.
    Thanks a lot for the informations and links!

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்..

    போகர் மற்றும் புலிப்பாணி சித்தர் பற்றிய தகவலுக்கு நன்றி அய்யா.........

    ReplyDelete
  7. மிகவும் உபயோகமான தகவல். நவபாஷாணம் என்று முன்பே தெரிந்திருந்தாலும், அப்படி என்றால் என்ன என்று இன்றுதான் தெரிந்தது. இதுவரை பழனி போனதில்லை. எப்போது முருகன் கூப்பிடுகிறார் என்று பார்க்கலாம்.

    ReplyDelete
  8. தகவல்கள் அருமை போகர் பற்றி தெரியும் ஆனால் தங்கள் தளம் வாயிலாக மற்றவர்களை பற்றியும் தெரிந்துகொண்டேன் மிக்க சந்தோஷம் என்னை தங்களுக்கு நினைவைருக்கிறதா வாத்தியாரே?

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  9. /////R.Ravichandran said...
    Dear sir
    Very excellant. I am very happy to know this informations about Lord Murugan
    with bestwishes
    R.Ravichandran/////

    என்ன எழுதவைப்பவனே அவன்தான். எல்லாப் பாராட்டுக்களுக்கும் அவனுக்கே உரியவை!

    ReplyDelete
  10. ////SP Sanjay said...
    போகர் மற்றும் புலிப்பாணி பற்றிய தகவலுக்கு நன்றி!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையான செய்திகள்!
    மிக்க நன்றி! யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!
    அனைத்துலகமும் அவனுள் அடக்கம் அவனே அணுவிலும் அணுவாய் அவ்வணுவை ஆயிரமாய் அருத்ததன் அளவாய் இருப்பவன் அப்படி இருக்கையில் அவன், போகர், புலிப்பாணி போன்றோரின் குருவை இமயத்திற்கு வடக்கே படைத்தது தெற்கே அனுப்பியதன் காரணம் அவனன்றி வேராறிவர். இதுபோன்ற செய்திகள் வானத்தில் பறந்துக்கொண்டு பூமியை பார்க்கச் செய்கிறது. நன்றிகள் குருவே.

    நல்லது நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஞானப் பழத்திற்காக முருகன் வந்து நின்ற பழனி மலையில், அவனுக்காக நவபாஷாணத்தில்செய்யப்பெற்ற தண்டபாணி சிலையை வடிவமைத்து அங்கே வைத்தவரும், பழநிக் கோவிலின் ஸ்தாபகரும் ஆன போகர்,
    இன்றும் ஜோதிடத்திற்கு வழிகாட்டியாக உள்ள ஜோதிட நூலை நமக்குத் தந்துவிட்டுப்போன புலிப்பாணி.
    இவர்களின் குரு காலங்கி நாதர்
    மற்றும் திருமந்திர நூலினை நமக்கு அளித்த திருமூலர்-----
    பதினெட்டு சித்தர்களில் நான்கு சித்தர்களைப் பற்றியக் குறிப்புகளை தங்களுக்கே உள்ள சொல்லாற்றலோடு சிறப்பாக அளித்துள்ளீர்கள்.
    நன்றி!
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.
    வணக்கம்.///////

    நல்லது நன்றி தக்ஷிணாமூர்த்தி!

    ReplyDelete
  13. //////Dr.Vidhya said...
    Good morning Sir.
    Thanks a lot for the informations and links!/////

    நன்றி டாக்டர்!

    ReplyDelete
  14. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்..
    போகர் மற்றும் புலிப்பாணி சித்தர் பற்றிய தகவலுக்கு நன்றி அய்யா........./////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Uma said...
    மிகவும் உபயோகமான தகவல். நவபாஷாணம் என்று முன்பே தெரிந்திருந்தாலும், அப்படி என்றால் என்ன என்று இன்றுதான் தெரிந்தது. இதுவரை பழனி போனதில்லை. எப்போது முருகன் கூப்பிடுகிறார் என்று பார்க்கலாம்./////

    சீக்கிரம் கூப்பிடுவார். சென்று வாருங்கள்!.

    ReplyDelete
  16. ///////ஜிஎஸ்ஆர் said...
    தகவல்கள் அருமை போகர் பற்றி தெரியும் ஆனால் தங்கள் தளம் வாயிலாக மற்றவர்களை பற்றியும் தெரிந்துகொண்டேன் மிக்க சந்தோஷம் என்னை தங்களுக்கு நினைவைருக்கிறதா வாத்தியாரே?
    என்றும் அன்புடன்
    ஞானசேகர்///////

    உண்மையைச் சொன்னால், நினைவில் இல்லை! நீங்கள் நினைவுபடுத்துங்கள். நன்றி!

    ReplyDelete
  17. இதற்கும் vijay TV ல் வந்த கொமடிக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா ;).
    http://www.tubetamil.com/view_video.php?viewkey=eff0da111dd90376b439&page=1&viewtype=&category= .
    உண்மையான விளக்கத்திற்கு நன்றி..

    ReplyDelete
  18. Dear sir,
    Thank you very much for your good informations.

    ReplyDelete
  19. ////Cool Boy said...
    அருமை///////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Emmanuel Arul Gobinath said...
    இதற்கும் vijay TV ல் வந்த கொமடிக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா ;).
    http://www.tubetamil.com/view_video.php?viewkey=eff0da111dd90376b439&page=1&viewtype=&category= .
    உண்மையான விளக்கத்திற்கு நன்றி../////

    என்ன சொல்லவருகிறீர்கள் கோபிநாத்? தெளிவாகச் சொல்லுங்கள். எதைக் காமெடி என்கிறீர்கள்? எதை உண்மையான விளக்கம் என்கிறீர்கள்? நாட்டில் பல கிராக்குகள், கிராக்கிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தொலைக்காட்சிக்காரர்கள் படம் பிடித்துப்போடுவார்கள். டிராபிக் ரேட்டிங் கவலை அவர்களுக்கு. எனக்கு எந்தக் கவலையும் இல்லை! எனக்குப் பிடித்த விஷயங்களை மட்டுமே எழுதுகிறேன். தெரிந்த விஷயங்கலை மட்டுமே எழுதுகிறேன். இப்படிக் கொக்கி போட்டு எழுதாதீர்கள். இதற்குப் பதில் சொல்லவெல்லாம் எனக்கு நேரமில்லை!
    அதை மனதில் வைத்துக்கொண்டு இனிப் பின்னூட்டமிடுங்கள்!

    ReplyDelete
  21. போகர் சீனர் என்று கேள்விபட்டுள்ளேன், இரண்டு வாரம் முன்பு பழனி சென்றேன்,பால் குடம் ஏந்தி மலையேறி ஸ்ரீ தண்டபாணி அருளும் போகரின் அருளும்(அவர் சமாதியில்) பெற்று மகிழ்ச்சிவுடன் திரும்பினேன்.

    ReplyDelete
  22. நல்ல தகவல்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. தகவலுக்கு நன்றி ஆசானே

    ReplyDelete
  24. ///////CJeevanantham said...
    Dear sir,
    Thank you very much for your good information.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////மதி said...
    போகர் சீனர் என்று கேள்விபட்டுள்ளேன், இரண்டு வாரம் முன்பு பழனி சென்றேன்,பால் குடம் ஏந்தி மலையேறி ஸ்ரீ தண்டபாணி அருளும் போகரின் அருளும்(அவர் சமாதியில்) பெற்று மகிழ்ச்சிவுடன் திரும்பினேன்.////

    நல்லது. நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  26. /////venkat said...
    நல்ல தகவல்
    வாழ்த்துக்கள்//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////புருனோ Bruno said...
    தகவலுக்கு நன்றி ஆசானே/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  28. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.தகவல் அருமை நன்றி அய்யா

    ReplyDelete
  29. Good evening sir,
    Nice lesson Thanks for ur today lesson sir.

    HAPPY TAMIL NEW YEAR TO U AND UR FAMILY MEMBERS sir.

    HAPPY TAMIL NEW YEAR TO MY DEAREST CLASS ROOM BROTHERS AND SISTERS.

    lovingly,
    sundari.p

    ReplyDelete
  30. //என்ன சொல்லவருகிறீர்கள் கோபிநாத்? தெளிவாகச் சொல்லுங்கள்//
    மன்னிக்கவும் சற்று குளப்பமாக எழுதிவிட்டேன். vijay tv இல் (இந்த வாராமாக தான் இருக்க வேண்டும்) வந்த ஒரு நிகழ்ச்சியில்(கதை அல்ல நிஜம்) தானே போகர் என்று ஒரு அம்மா சொன்னார். அவவிடம் என்ன ஒன்பது நவபாஷாணம் என்று கேட்க மழுப்பி அது ரகசியம் என்றா.. அதே நிகழ்ச்சியில் இன்னொருவர் அவர் தான் இலங்கை பிரச்சனையை தீர்த்த்தாக கூறினார் . அந்த link ஜ பார்த்தீர்கள் என்றால் புரியும் எதை காமடி என்றேன் என்று..... நீங்கள் போகரை பற்றிய குறிப்பு அவருடைய பெருமையை விளக்குவதாய் இருந்த்து. புதுவருட வாழ்த்துக்கள் ஜயா !! மேலும் இந்த வகுப்பறை பல ஆண்டுகள் நிலைக்க இறைவனை பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  31. //கடவுளால் உருவாக்கப்பெற்ற இந்த உடம்பிற்கு இன்று பல டாக்டர்கள் இருக்கிறார்கள். எமன் வந்தால் பிராணன் மட்டும் போகும். டாக்டர் வந்தால் பிராணனுடன், பணமும் சேர்ந்து போகும்//

    தலைவலி/பல்வலி அல்லது வேறு ஏதாவது பிராணன் போகும் அளவுக்கு வலி வந்திருந்தால் நிச்சயம் அவர் இப்படி தத்துவம் பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டார் அல்லது சத்தம் போடாமல் டாக்டரைப் பார்க்க ஓடியிருப்பார்.

    நிற்க, நவபாசாணத்தைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நவபாசாணத்தை ஒரு மையமாக வைத்து மர்ம தேசம் என்னும் மர்ம தொடர் நாடகத்தை, (பாசாண சிலை இல்லை பாசாண லிங்கம் என்று சொல்லி கதை) ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

    ReplyDelete
  32. Dear Sir,

    I am really nice to see info about 18 Sidhas on your blogger sir.

    Do you have any idea/info about "Shiva Vakkiyar", requesting you to add about him in future Or guide me to learn about him.

    ReplyDelete
  33. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  34. ஐயா பழனி க்கு பட்டபதவி அளித்து உள்ளீர்கள்

    இன்றைய கால கட்டத்தில் மருத்துர்களை மட்டுமே நம்பி உள்ள அதிக பட்ச மக்களின் நம்பிக்கை சிறிது திசை திரும்ப வேண்டும் ,,,,, பழனி மட்டுமல்ல மற்ற இடங்களிலும் உள்ள சித்தர்கள் பகுத்து தொகுத்த நூல்கள் மருத்து ரீதியான மூலிகை பொருட்கள் ......ஆழ்ந்த தவ நிலை கோட்பாடுகள் இவைகளை நம் தினசரி வாழ்வில் சிறு பகுதி பின் பற்றினாலே நீண்ட ஆயூளையும் நிறைய அனுபவங்களையும் அடுத்த தலைமுறை க்கு விட்டு சொல்வோம்
    வாழ்க புத்தாண்டு வளர்க நம் எண்ணங்கள் சித்ரம் covai

    ReplyDelete
  35. /////rajesh said...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.தகவல் அருமை நன்றி அய்யா/////

    நல்லது. நன்றி! உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. ////sundari said...
    Good evening sir,
    Nice lesson Thanks for ur today lesson sir.
    HAPPY TAMIL NEW YEAR TO U AND UR FAMILY MEMBERS sir.
    HAPPY TAMIL NEW YEAR TO MY DEAREST CLASS ROOM BROTHERS AND SISTERS.
    lovingly,
    sundari.p/////

    நல்லது. நன்றி! உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  37. /////Emmanuel Arul Gobinath said...
    //என்ன சொல்லவருகிறீர்கள் கோபிநாத்? தெளிவாகச் சொல்லுங்கள்//
    மன்னிக்கவும் சற்று குழப்பமாக எழுதிவிட்டேன். vijay tv இல் (இந்த வாராமாக தான் இருக்க வேண்டும்) வந்த

    ஒரு நிகழ்ச்சியில்(கதை அல்ல நிஜம்) தானே போகர் என்று ஒரு அம்மா சொன்னார். அவவிடம் என்ன ஒன்பது

    நவபாஷாணம் என்று கேட்க மழுப்பி அது ரகசியம் என்றா.. அதே நிகழ்ச்சியில் இன்னொருவர் அவர் தான்

    இலங்கை பிரச்சனையை தீர்த்த்தாக கூறினார் . அந்த link ஜ பார்த்தீர்கள் என்றால் புரியும் எதை காமடி என்றேன்

    என்று..... நீங்கள் போகரை பற்றிய குறிப்பு அவருடைய பெருமையை விளக்குவதாய் இருந்தது. புதுவருட

    வாழ்த்துக்கள் ஜயா !! மேலும் இந்த வகுப்பறை பல ஆண்டுகள் நிலைக்க இறைவனை பிராத்திக்கிறேன்../////

    நல்லது. நன்றி கோபினாத்! உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. /////ananth said...
    //கடவுளால் உருவாக்கப்பெற்ற இந்த உடம்பிற்கு இன்று பல டாக்டர்கள் இருக்கிறார்கள். எமன் வந்தால்

    பிராணன் மட்டும் போகும். டாக்டர் வந்தால் பிராணனுடன், பணமும் சேர்ந்து போகும்//
    தலைவலி/பல்வலி அல்லது வேறு ஏதாவது பிராணன் போகும் அளவுக்கு வலி வந்திருந்தால் நிச்சயம் அவர்

    இப்படி தத்துவம் பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டார் அல்லது சத்தம் போடாமல் டாக்டரைப் பார்க்க

    ஓடியிருப்பார்.
    நிற்க, நவபாசாணத்தைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட

    நவபாசாணத்தை ஒரு மையமாக வைத்து மர்ம தேசம் என்னும் மர்ம தொடர் நாடகத்தை, (பாசாண சிலை இல்லை

    பாசாண லிங்கம் என்று சொல்லி கதை) ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.////

    என்ன ஆனந்த் - உடனே சாமியாருக்கு சாபம் கொடுத்துவிட்டீர்கள்? நான் அதை இங்கே நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன். டாக்டர்களும், pain killer களும் இல்லாமல் இன்றைய வாழ்க்கை (பாதி மக்களுக்கு) ஏது?

    ReplyDelete
  39. ///Sabarinathan TA said...
    Dear Sir,
    I am really nice to see info about 18 Sidhas on your blogger sir.
    Do you have any idea/info about "Shiva Vakkiyar", requesting you to add about him in future Or guide me

    to learn about him./////

    சிவவாக்கியர் பற்றி எனது பதிவுலக நண்பர் திரு.ஞானவெட்டியான் அவர்கள் பதிவு ஒன்றில்

    எழுதிக்கொண்டிருக்கிறாரே சாமி! அதன் சுட்டியைக் கிழே கொடுத்துள்ளேன்:
    http://siththan.com/

    ReplyDelete
  40. /////www.bogy.in said...
    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
    அன்புடன்
    www.bogy.in////

    நல்லது. நன்றி நண்பரே! உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. /////Ramachandran said...
    ஐயா பழனிக்கு பட்டபதவி அளித்து உள்ளீர்கள்
    இன்றைய கால கட்டத்தில் மருத்துர்களை மட்டுமே நம்பி உள்ள அதிக பட்ச மக்களின் நம்பிக்கை சிறிது திசை திரும்ப வேண்டும் ,,,,, பழனி மட்டுமல்ல மற்ற இடங்களிலும் உள்ள சித்தர்கள் பகுத்து தொகுத்த நூல்கள்
    மருத்து ரீதியான மூலிகை பொருட்கள் ......ஆழ்ந்த தவ நிலை கோட்பாடுகள் இவைகளை நம் தினசரி வாழ்வில் சிறு பகுதி பின் பற்றினாலே நீண்ட ஆயூளையும் நிறைய அனுபவங்களையும் அடுத்த தலைமுறைக்கு விட்டு சொல்வோம்
    வாழ்க புத்தாண்டு வளர்க நம் எண்ணங்கள்
    சித்ரம் covai/////

    பழநி அப்பனுக்கு பட்டம் நான் கொடுக்கவில்லை சாமி! நம் தமிழ்மக்கள் கொடுத்துள்ளார்கள் சாமி. இல்லையென்றால் தமிழ் நாட்டில் அதிக அளவில் மக்கள் கூடும் இடம் அவனுடைய மலை ஒன்றே என்று எப்படியாகும்?. அதை அறியாதவரா நீங்கள்!

    ReplyDelete
  42. http://en.wikipedia.org/wiki/Bhogar
    இந்த லிங்கைக் க்ளிக்கிப் பார்த்ததில் போகர் ஒரு கோல்ட்ஸ்மித் என்பது முதல் வரியிலேயே தெரிகிறது..alchemist என்று ஒரு வகையினர் ரசவாதம் என்று பாதரசத்தை சில மூலிகைகளின் உதவியுடன் குறிப்பிட்ட முறைகளின் படி தங்கமாக்கும் வித்தையை முயற்சிக்கும் பணியினை ஆர்வ மேலீட்டில் செய்துவந்தனர்.. Number Element Valence

    79 Gold +1, (+2), +3
    80 Mercury +1, +2

    chemical elements ordered by increasing atomic number. இந்த Number அந்த வகை அட்டோமிக் நம்பரே. நவீன வேதியல் ஆராய்ச்சிகளின் விளைவாக அட்டோமிக் நம்பர் அளவிலே அடுத்தடுத்ததாக வகைப்படுத்தப்பட்ட இரண்டு தனிமங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் இந்த Mercury யின் அட்டோமிக் நம்பர் ஒன்று குறையுமானால் அது Gold ஆக மாறிவிடுகிறது என்பதைக் கவனிக்கவும்.
    ஏதோ ஒரு வகையிலே பாதரசத்தை தங்கமாக்கும் இந்த பழைய ஆராய்ச்சி புது periodic table உடன் ஒத்து வருவது குறிப்பிடத்தக்கது..மூலிகை மட்டுமல்லாது மனித உடலில் குறைகின்ற உலோகத்தை கைகொண்டு நோயை தீர்க்கும் ஆராய்ச்சி முறை இந்த பழைய வகை சித்த மருத்துவத்தில் மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்...அல்லோபதி முறையிலே விடைகாண முடியாத பல மனித அவலங்களுக்குத் தீர்வுகளை தனக்குள்ளே கொண்டிருக்கும் இந்த சித்த மருத்துவத்தை இன்னும் சரியான கோணத்தில் ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது..

    ReplyDelete
  43. ///minorwall said...
    http://en.wikipedia.org/wiki/Bhogar
    இந்த லிங்கைக் க்ளிக்கிப் பார்த்ததில் போகர் ஒரு கோல்ட்ஸ்மித் என்பது முதல் வரியிலேயே தெரிகிறது..alchemist என்று ஒரு வகையினர் ரசவாதம் என்று பாதரசத்தை சில மூலிகைகளின் உதவியுடன் குறிப்பிட்ட முறைகளின் படி தங்கமாக்கும் வித்தையை முயற்சிக்கும் பணியினை ஆர்வ மேலீட்டில் செய்துவந்தனர்.. Number Element
    79 Gold +1, (+2), +3
    80 Mercury +1, +2
    chemical elements ordered by increasing atomic number. இந்த Number அந்த வகை அட்டோமிக் நம்பரே. நவீன வேதியல் ஆராய்ச்சிகளின் விளைவாக அட்டோமிக் நம்பர் அளவிலே அடுத்தடுத்ததாக வகைப்படுத்தப்பட்ட இரண்டு தனிமங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் இந்த Mercury யின் அட்டோமிக் நம்பர் ஒன்று குறையுமானால் அது Gold ஆக மாறிவிடுகிறது என்பதைக் கவனிக்கவும்.
    ஏதோ ஒரு வகையிலே பாதரசத்தை தங்கமாக்கும் இந்த பழைய ஆராய்ச்சி புது periodic table உடன் ஒத்து வருவது குறிப்பிடத்தக்கது..மூலிகை மட்டுமல்லாது மனித உடலில் குறைகின்ற உலோகத்தை கைகொண்டு நோயை தீர்க்கும் ஆராய்ச்சி முறை இந்த பழைய வகை சித்த மருத்துவத்தில் மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்...அல்லோபதி முறையிலே விடைகாண முடியாத பல மனித அவலங்களுக்குத் தீர்வுகளை தனக்குள்ளே கொண்டிருக்கும் இந்த சித்த மருத்துவத்தை இன்னும் சரியான கோணத்தில் ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது..//////

    சித்த மருத்துவத்தை இன்னும் சரியான கோணத்தில் ஆராய்ச்சி செய்ய மக்களுக்கும் சித்தம் இல்லை. அரசிற்கும் சித்தம் இல்லை! அதுதான் உண்மை மைனர். உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com