மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.4.10

உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?

-----------------------------------------------------------------------
உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?

எண் ஏழு!

ஏழாம் எண் கேதுவிற்கு உரியது. சிந்தனையாளர்களுக்கும், தத்துவஞானி களுக்கும் உரியது.

கேது ஆன்ம மலர்ச்சிக்கு உரிய கிரகமாகும். அதன்காரணமாக இந்த எண்காரர்கள், ஆன்மீக சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். தான் யார், தன் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதைபற்றி எல்லாம் தெரிந்துகொள்ளும் முனைப்பாடு இருக்கும்.

எண் ஏழு எல்லா எண்களையும்விட ஆத்மார்ந்தமானது. ஆத்ம உணர்வு கொண்டது. ஆத்ம திருப்தியைத் தேடிப்பிடிக்கும் சக்தியை உடையது. ஏழாம் எண்காரர்கள் எதையும் தேடிப்பிடித்து, அறிந்து தெளியக் கூடியவர்கள்.

ஆராய்ந்தறியும் மனப்பான்மை கொண்டவர்கள். அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள். குறிப்பிட்ட செயலில் தன்முனைப்போடு செயலாற்றுபவர்களாக இருப்பார்கள். விஞ்ஞானபூர்வமாக எதையும் அனுகுபவர்களாக இருப்பார்கள். ஒருமுறைக்கு இருமுறை எதையும் சிந்தித்துத் செயல்படுபவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மற்றவர்களுக்குப் புதிரானவர்களாக இருப்பார்கள்.

உண்மையை விரும்புவர்களாக, உண்மையைத் தேடுபவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள். ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்

இந்த எண்ணில் பிறந்த கலைஞர்கள், தங்கள் கனவுகளையும் எண்ணங்களையும், கவிதை அல்லது நாடக வடிவில் வெளிப்படுத்துவார்கள். எதையும் உன்னிப்பாகக் கவனிப்பதும், ஆராய்வதும் அவர்களுடன் பிறந்த இயற்கைக் குணமாகும்.
அதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே ஒரு உந்துசக்தி உடன் இருக்கும் (intuitive power). அந்த உந்துதலின் காரணமாக இந்த எண்ணில் பிறந்த சிலர்,மந்திர தந்திர சாஸ்திரங்கள், மாயாஜாலங்கள் போன்றவற்றில் ஈடுபாடு
கொண்டவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஜோதிடத்தில் அதீதமான ஆர்வம்/ஞானம் இருக்கும்.

அத்தகைய அதீத ஆற்றல்களால், இந்த எண்காரர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்குவார்கள். சிலருக்கு அத்திறமைகளை வைத்துப் பெரும் பொருள்/செல்வம் சேரும்.

ஏழாம் எண்காரர்கள் பழகுவதற்கு மென்மையானவர்கள். இனிமையானவர்கள். அதன் காரணமாக அவர்களைச் சுற்றி உள்ளவர்கள், தங்களுடைய ரகசியங் களையும், உணர்வுகளையும், அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

இந்த எண்காரர்கள் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், (ஓவியம், நடனம், நடிப்பு மற்றும்) இசைக்கலைஞர்களாகவும் பரிணமளிப்பார்கள்.அதாவது அந்தத் துறைகளுக்குச் சென்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

இந்த எண்காரர்கள் இயற்கையை இரசிப்பார்கள். அமைதியையும், நிம்மதியையும் அதிகம் விரும்புவார்கள். இன்னும் சொல்லப்போனால் அவற்றைப் போற்றுவார்கள்.

தங்களைச் சுற்றிப் பலர் வலம் வரும் வாய்ப்பு இருக்கும்போதும், அல்லது சூழ்நிலை இருந்தாலும், ஏழாம் எண்காரர்கள் தனிமை விரும்பிகள். தனிமையில் பணியாற்றும்போது சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

career choices: Scientist, religious leader, philosopher, scholar, preacher, sage, teacher, inventor, researcher.

மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவது இந்த எண்காரர்களுக்குச் சிரமமான விஷயம். தனிமை நல்லதுதான். ஆனால் தனிமைப்பட்டுப் போய்விடக்கூடாது. அதை இந்த எண்காரர்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
Intimacy might be difficult for them. Some of them can be cynical, selfish, egocentric,
withdrawn, aloof, lonely, overly reserved and suspicions. They should be careful not to
become too inward and isolated.

தங்களுக்கு உள்ள பொதுக்குணங்களால், இந்த எண்காரர்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல இந்த எண் உலகியல் வாழ்க்கைக்கு ஒத்துவராத எண்ணாகும்.
Number seven Can be a curse for worldly life. திருமண வாழ்வில் கசப்பு உண்டாகலாம். எந்த வயதில் வேண்டுமென்றாலும் உண்டாகலாம். ஆகவே இந்த எண்காரர்கள் அவற்றில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்

நட்பு எண்கள்: 8, 6, 5
பகையான எண்கள்: 1, 2, 9
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை
நவரத்தினக்கல்: வைடூரியம் (Cat's eye)


----------------------------------------------------------
உரிய தொழில்கள்: கலைஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையளர்கள், திரைப்படத்தயாரிப்பாளர்கள்.
திருமணம் மற்றும் தொழிலுக்கு இசைந்து வரக்கூடிய எண்கள்: 3, 6, 7

நமது வகுப்பறையில் எத்தனை ஞானிகள் அல்லது ஞானிகளாகப் போகிறவர்கள் இருக்கிறீர்கள்? ஏழாம் எண்ணிற்கு உரியவர்கள் இருக்கிறீர்கள்? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போங்கள்

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

62 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஏழாம் எண் பற்றியப் பாடத்திற்கு நன்றி.
    ஜாதகத்தில் சிம்மத்தில் (ஒன்பதில்) அமர்ந்த கேதுவும்,
    இதுபோன்ற குணாதிசயங்களை தருமா?
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ஏழாம் எண்ணுக்கு உரியவர்களுக்கான

    பலன்கள்,குணாதிசயம்,நவரத்தினம் மற்றும் விளக்கமான விவரங்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி!

    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி


    2010-04-05

    ReplyDelete
  3. ஐயா, காலை வணக்கம்

    என்னுடைய பிறந்த நாள்: 21-03-1972
    பிறந்த நாளின்படி எண் 3, ஆனால் விதி எண்(கூட்டு) எண் 7(25). இதில் நான் எந்த எண்ணுக்குறியவன். நீங்கள் சொல்லும்படியாக எனக்கும் ஆன்மீக சம்பந்தமான எண்ணங்கள் அடிக்கடி எழும். 7-ம் எண்ணுக்குரிய பலன்களே பெரும்பாலும் எனக்கு சரியாக வெருகிறது. 3-ம் எண்ணுக்குரிய பல பலன்களும் பொருந்துகின்றன.

    நன்றிகளுடன்
    தி. லெட்சுமணன்

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம்....

    அய்யா ஞான காரகன் பற்றிய விளக்கம் சிறப்பாக உள்ளது .......

    ReplyDelete
  5. I am one of the seventh persons. Thank U for your kind advise . (don't get lonliness ).

    ReplyDelete
  6. early morning . first website is ur blog . that is our class . . naan nyani alla .. ( naan mahaan alla ) hahah....

    ReplyDelete
  7. My number is 7 and your comments
    are matching for me :)

    ReplyDelete
  8. Good morning sir,
    Thanks for ur today lesson sir. Nice lesson. Thanks for ur valuable service sir.
    sundari.p

    ReplyDelete
  9. Dear Sir,

    Good morning ,

    i am SPkaruppiah My DOB 20-10-1984
    then my NO is 2 and 7.


    thanks

    ReplyDelete
  10. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஏழாம் எண் பற்றியப் பாடத்திற்கு நன்றி.
    ஜாதகத்தில் சிம்மத்தில் (ஒன்பதில்) அமர்ந்த கேதுவும்,
    இதுபோன்ற குணாதிசயங்களை தருமா?
    நன்றிகள் குருவே!//////

    நீங்கள் புதுக்கோட்டைக்காரர் அல்லவா? உங்களுக்கு இயற்கையாகவே ஞானம் இருக்குமே ஸ்வாமி:-)))))

    ReplyDelete
  11. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஏழாம் எண்ணுக்கு உரியவர்களுக்கான பலன்கள்,குணாதிசயம்,நவரத்தினம் மற்றும் விளக்கமான விவரங்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //////Lakshmanan said...
    ஐயா, காலை வணக்கம்
    என்னுடைய பிறந்த நாள்: 21-03-1972
    பிறந்த நாளின்படி எண் 3, ஆனால் விதி எண்(கூட்டு) எண் 7(25). இதில் நான் எந்த எண்ணுக்குறியவன். நீங்கள் சொல்லும்படியாக எனக்கும் ஆன்மீக சம்பந்தமான எண்ணங்கள் அடிக்கடி எழும். 7-ம் எண்ணுக்குரிய பலன்களே பெரும்பாலும் எனக்கு சரியாக வெருகிறது. 3-ம் எண்ணுக்குரிய பல பலன்களும் பொருந்துகின்றன.
    நன்றிகளுடன்
    தி. லெட்சுமணன்//////

    3தான் உங்களுடைய லக்கி எண்ணாகும். 7ஆம் எண் விதி எண்ணாகும்!

    ReplyDelete
  13. ஏழாம் நம்பரில் எனக்குத் தெரிந்த சில பிரபலங்கள் கமலஹாசன், விஜயகாந்த், பாக்கியராஜ் போன்றவர்கள். இவர்கள் மூவருக்குள் சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமைகள் ஏதாவது உங்களுக்குத் தெரிகிறதா?

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  14. /////Blogger astroadhi said...
    இனிய காலை வணக்கம்....
    அய்யா ஞான காரகன் பற்றிய விளக்கம் சிறப்பாக உள்ளது ////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////SUBBIAH said...
    I am one of the seventh persons. Thank U for your kind advise . (don't get lonliness )./////

    நல்லது நன்றி!

    ReplyDelete
  16. /////ms torrent said...
    early morning . first website is ur blog . that is our class . . naan nyani alla .. ( naan mahaan alla ) hahah..../////

    இப்போது இல்லை என்றால் என்ன? எதிர்காலத்தில் ஆகலாம்!:-))))

    ReplyDelete
  17. /////Blogger Sankar said...
    My number is 7 and your comments
    are matching for me :)////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////sundari said...
    Good morning sir,
    Thanks for ur today lesson sir. Nice lesson. Thanks for ur valuable service sir.
    sundari.p//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  19. My son DOB is 16-12-1988. So his no is 7 and 9. பத்தில் சிம்மத்தில் கேது. வர்கோத்தமும் கூட

    ReplyDelete
  20. //////KKK said...
    Dear Sir,
    Good morning ,
    i am SPkaruppiah My DOB 20-10-1984
    then my NO is 2 and 7.
    thanks//////

    2தான் உங்களுடைய லக்கி எண்ணாகும். 7ஆம் எண் விதி எண்ணாகும்!

    ReplyDelete
  21. Vanakam sir,

    நான் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தனான் நீங்க எப்ப நம்பர் செவென் பற்றி எல்லுதிவீங்க சார் என்று ....
    திருமண வாழ்க்கை நம்பர் செவென் நிறைய பேருக்கு பிரச்னை வந்திருக்கு, but why sir this problem, jathakathil seventh house and seventh lord is good then will it be ok? நான் வந்து ஏழுக்கு நாலு ...hope my number four and chart helps me with my marriage. Ennudaya peyarai entha numberila vacha nallam...becoz for number seven if the name is good match then they will have good life....I heard...

    Thanks
    Thanuja

    ReplyDelete
  22. Sir my DOB is also 7, most of the comments is matching, thanks

    ReplyDelete
  23. //உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?//

    :)

    எல்லோரையும் நித்தியின் சீடர்கள் என்று பிடித்துக் கொடுக்க திட்டமா ?

    அவ்வ்வ்

    ReplyDelete
  24. my date of birth : 16-03-1982

    date Yain : 7
    vethe Yain : 3

    kathu - 7-m yedam.

    ReplyDelete
  25. அசுவனி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். (கேதுவின் நட்சத்திரங்கள்) ஏனென்றால் நான் மூல நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆனால் பிறந்த தேதி 28 பெரும்பாலான குணாதிசயங்கள் பொருந்தி வருகிறது. அதனால் தான் இந்த ஐயப்பாடு.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. /////Jawahar said...
    ஏழாம் நம்பரில் எனக்குத் தெரிந்த சில பிரபலங்கள் கமலஹாசன், விஜயகாந்த், பாக்கியராஜ் போன்றவர்கள். இவர்கள் மூவருக்குள் சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமைகள் ஏதாவது உங்களுக்குத் தெரிகிறதா?
    http://kgjawarlal.wordpress.com//////

    மூவருமே ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களோடு பழகியவர்கள். மனைவியாக்கிக்கொண்டவர்கள். மனைவியைப்போல நடத்தியவர்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. நீங்கள் எதைச் சொல்ல வ்ருகிறீர்கள்?

    ReplyDelete
  27. /////Sekar said...
    My son DOB is 16-12-1988. So his no is 7 and 9. பத்தில் சிம்மத்தில் கேது. வர்கோத்தமும் கூட/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  28. /////Thanuja said...
    Vanakam sir,
    நான் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் நீங்க எப்ப நம்பர் செவென் பற்றி எல்லுதிவீங்க சார் என்று ....
    திருமண வாழ்க்கை நம்பர் செவென் நிறைய பேருக்கு பிரச்னை வந்திருக்கு, but why sir this problem, jathakathil seventh house and seventh lord is good then will it be ok? நான் வந்து ஏழுக்கு நாலு ...hope my number four and chart helps me with my marriage. Ennudaya peyarai entha numberila vacha nallam...becoz for number seven if the name is good match then they will have good life....I heard...
    Thanks
    Thanuja//////

    தனி மின்னஞ்சலில் எழுதுங்கள் சகோதரி. பார்த்துச் சொல்கிறேன்!

    ReplyDelete
  29. /////Loga said...
    Sir my DOB is also 7, most of the comments is matching, thanks/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////கோவி.கண்ணன் said...
    //உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?// :) எல்லோரையும் நித்தியின் சீடர்கள் என்று பிடித்துக் கொடுக்க திட்டமா?
    அவ்வ்வ்/////

    மாட்டிவிட்டு எனக்கென்னாகப் போகிறது? என்னுடைய பதிவுகளைப் படிக்க அவர்கள் வேண்டாமா? ஏன் உங்களுக்கு இந்த நல்ல எண்ணம்?:-))))))

    ReplyDelete
  31. /////sowri said...
    My DOB is 02.03.1973!//////

    உங்களுடைய லக்கி எண் 2 விதிஎண் 7

    ReplyDelete
  32. ////raj said...
    my date of birth : 16-03-1982
    date Yain : 7
    vethe Yain : 3
    kathu - 7-m yedam.////

    ஞானியாகும் வாய்ப்பு அல்லது ஞானம் பெறும் வாய்ப்பு உங்களுக்குப் பிரகாசமாக இருக்கிறது:-))))

    ReplyDelete
  33. /////T K Arumugam said...
    அசுவனி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். (கேதுவின் நட்சத்திரங்கள்) ஏனென்றால் நான் மூல நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆனால் பிறந்த தேதி 28 பெரும்பாலான குணாதிசயங்கள் பொருந்தி வருகிறது. அதனால் தான் இந்த ஐயப்பாடு.
    நன்றி
    வாழ்த்துக்கள்///////

    கேதுவின் நட்சத்திரக்காரர்களுக்கும் இந்தக் குணாதிசயங்கள் பொருந்தும் நண்பரே!

    ReplyDelete
  34. வாத்தியார் ஐயா!

    உங்களுக்கு இருந்தாலும் தைரியம் அதிகம் தான், இப்படி பதில் தருவதிற்கு.



    /////Jawahar said...
    ஏழாம் நம்பரில் எனக்குத் தெரிந்த சில பிரபலங்கள் கமலஹாசன், விஜயகாந்த், பாக்கியராஜ் போன்றவர்கள். இவர்கள் மூவருக்குள் சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமைகள் ஏதாவது உங்களுக்குத் தெரிகிறதா?
    http://kgjawarlal.wordpress.com//////

    மூவருமே ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களோடு பழகியவர்கள். மனைவியாக்கிக்கொண்டவர்கள். மனைவியைப்போல நடத்தியவர்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. நீங்கள் எதைச் சொல்ல வ்ருகிறீர்கள்?

    Monday, April 05, 2010 3:27:00 PM

    ReplyDelete
  35. 7ம் ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்தது என்றும் லௌகீக வாழ்க்கைக்கு அவ்வளவு ஏற்றதல்ல என்று நானும் முன்பு படித்திருக்கிறேன். எனது சித்தப்பா ஒருவர் 25ம் தேதி பிறந்தவர். இரண்டு திருமணம் புரிந்தவர். அவ்வளவு மகிழ்ச்சிகரமான அல்லது அவர் விரும்பிய படி திருமண வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அடுத்து என் பிறந்த எண்ணன 8ஐ எதிர்பார்க்கிறேன்.

    நிற்க, நண்பர் கோவி.கண்ணன் அவர்களை ஞானம், ஞானி என்பவற்றை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  36. ////raj said...
    my date of birth : 16-03-1982
    date Yain : 7
    vethe Yain : 3
    kathu - 7-m yedam.////
    //// SP.VR. SUBBAIYA said...
    ஞானியாகும் வாய்ப்பு அல்லது ஞானம் பெறும் வாய்ப்பு உங்களுக்குப் பிரகாசமாக இருக்கிறது:-))))
    ////

    Thingal vaku palekaittum.

    ReplyDelete
  37. அன்புடன் வணக்கம்
    இந்த எண் ஆட்கள் இருக்கிறார்களே ஐயோ சொல்லி முடியாது பக்கத்தில் இருந்து பார்க்க தெரியும் ஞானி மாதிரி பேசுவாங்க ??? ஆனா உள்ளே பார்த்தா ????

    ReplyDelete
  38. அன்பான வாத்தியாருக்கு மேற்கூறிய அனைத்தும் எனக்கு சரியாக பொருந்துகிறது மேலும் கடைசியாக கூறிய திருமண பிரச்சினை வரை
    அப்படியானால் இந்த என்னுக்கூரியவன் நான்தானோ சரி பார்ப்போம் கடவுளின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. நன்றி

    ReplyDelete
  39. dear sir, date of birth 16-07-1973 kadaga lagnam and magara rasi uthrada natchathram name s.jayaprakash, yes i am confused mind. wokring in oil and gas field facing unhappy in my work and my juniors very easily forward me even i am good in knowledge. i have change my name or what thanks.

    ReplyDelete
  40. dear sir, thanks for this lesson. my name s.jayaprakash date of birth 16-07-1973 and kadaga lagnam, magara rasi, uthrada natchathiram kethu in 12 th house. yes you are conrrect i have confused mind, working in oil and gas field, i like to stay alone, how i can explain even i have good knowledge in my job, i unable to get benifits like others. if i correct my name i can get positive results. pls tell me sir.

    ReplyDelete
  41. Dear Vaadhyar Appachi:
    My daughter's DOB is 07-08-1981. Both the lucky number and "vidhi" number are 7. She is intelligent, pious and hard working. But seems to be unlucky at least so far.

    ReplyDelete
  42. ////kannan said...
    வாத்தியார் ஐயா!
    உங்களுக்கு இருந்தாலும் தைரியம் அதிகம் தான், இப்படி பதில் தருவதிற்கு.
    /////Jawahar said...
    ஏழாம் நம்பரில் எனக்குத் தெரிந்த சில பிரபலங்கள் கமலஹாசன், விஜயகாந்த், பாக்கியராஜ் போன்றவர்கள். இவர்கள் மூவருக்குள் சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமைகள் ஏதாவது உங்களுக்குத் தெரிகிறதா?
    http://kgjawarlal.wordpress.com//////
    மூவருமே ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களோடு பழகியவர்கள். மனைவியாக்கிக்கொண்டவர்கள். மனைவியைப்போல நடத்தியவர்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்?////

    நான் சாதாரணமாகத்தான் பதில் சொல்லியுள்ளேண். அதில் தைரியத்திற்கோ அல்லது நக்கலுக்கோ இடமில்லை!

    ReplyDelete
  43. /////raj said...
    ////raj said...
    my date of birth : 16-03-1982
    date Yain : 7
    vethe Yain : 3
    kathu - 7-m yedam.////
    //// SP.VR. SUBBAIYA said...
    ஞானியாகும் வாய்ப்பு அல்லது ஞானம் பெறும் வாய்ப்பு உங்களுக்குப் பிரகாசமாக இருக்கிறது:-))))
    ////
    Thingal vaku palekaittum.////

    பலிக்கும்!

    ReplyDelete
  44. /////ananth said...
    7ம் ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்தது என்றும் லௌகீக வாழ்க்கைக்கு அவ்வளவு ஏற்றதல்ல என்று நானும் முன்பு படித்திருக்கிறேன். எனது சித்தப்பா ஒருவர் 25ம் தேதி பிறந்தவர். இரண்டு திருமணம் புரிந்தவர். அவ்வளவு மகிழ்ச்சிகரமான அல்லது அவர் விரும்பிய படி திருமண வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அடுத்து என் பிறந்த எண்ணன 8ஐ எதிர்பார்க்கிறேன்.
    நிற்க, நண்பர் கோவி.கண்ணன் அவர்களை ஞானம், ஞானி என்பவற்றை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.////

    அடுத்தது எட்டாம் எண்ணிற்கு உரிய பாடம்

    ReplyDelete
  45. /////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    இந்த எண் ஆட்கள் இருக்கிறார்களே ஐயோ சொல்லி முடியாது பக்கத்தில் இருந்து பார்க்க தெரியும் ஞானி மாதிரி பேசுவாங்க ??? ஆனா உள்ளே பார்த்தா ????///////

    அது மனிதனின் பொதுக்குணம்!

    ReplyDelete
  46. /////geekayvee said...
    அன்பான வாத்தியாருக்கு மேற்கூறிய அனைத்தும் எனக்கு சரியாக பொருந்துகிறது மேலும் கடைசியாக கூறிய திருமண பிரச்சினை வரை அப்படியானால் இந்த எண்ணுகுரியவன் நான்தானோ சரி பார்ப்போம் கடவுளின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. நன்றி////

    நல்லது நன்றி நண்பரே1

    ReplyDelete
  47. jpmeera said...
    dear sir, date of birth 16-07-1973 kadaga lagnam and magara rasi uthrada natchathram name s.jayaprakash, yes i am confused mind. wokring in oil and gas field facing unhappy in my work and my juniors very easily forward me even i am good in knowledge. i have change my name or what thanks.

    பெயரை ஏழாம் எண் வரும்படியாக மாற்றிக்கொள்ளலாம். அது ஒரளவிற்குத்தான் பயன் தரும். ஜாதகப்படிதான் பலன்கள் கிடைக்கும். நல்ல திசை வரும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதுவரை இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
    He will give you standing power!

    ReplyDelete
  48. //////jpmeera said...
    dear sir, thanks for this lesson. my name s.jayaprakash date of birth 16-07-1973 and kadaga lagnam, magara rasi, uthrada natchathiram kethu in 12 th house. yes you are conrrect i have confused mind, working in oil and gas field, i like to stay alone, how i can explain even i have good knowledge in my job, i unable to get benifits like others. if i correct my name i can get positive results. pls tell me sir.//////

    பெயரை ஏழாம் எண் வரும்படியாக மாற்றிக்கொள்ளலாம். அது ஒரளவிற்குத்தான் பயன் தரும். ஜாதகப்படிதான் பலன்கள் கிடைக்கும். நல்ல திசை வரும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதுவரை இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
    He will give you standing power!

    ReplyDelete
  49. அன்பு அய்யாவுக்கு வணக்கம், எண் ஏழு பற்றிய பாடமும்,ஞானகாரகன் கேது பகவானை பற்றிய பாடமும் மிகவும் சிறப்பாக இருந்தது,
    ராகத்தின் சுரங்கள் ஏழை போல, படிக்க, படிக்க ஆவலாக இருந்தது,
    கேது ஜாதகத்தில் கெட்டு போனால் குழந்தை பாக்கியம் இருக்காதா?
    எனக்கு ஜாதகதில் கேது குருவோடு ஒன்பதான் இடத்தில் சேர்ந்து இருக்கிறார்-(கன்னியில்), எனக்கு எதிலும் பிடித்தம் இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன், தங்களின் கருத்தை சொல்லவும்.
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  50. அன்புள்ள அய்யா,

    வணக்கம். நான் படித்த எண் கணிதப்படி 7ஆம் எண்ணிற்க்கு 2ஆம் எண் மிக நல்ல நண்பன். எதிரி அல்ல. நடைமுறையிலும் பார்த்திருக்கிறேன். கேது செவ்வாயை போன்றது என்பதை அறிந்திருப்பீர்கள்.

    சரி, ஒரு நெடு நாளைய சந்தேகம். உலகலாவிய இன்பங்களை, போகங்களை அனுபவிக்க வகை செய்யும் சுக்கிர திசை, ஏன் ஞானகாரகனான கேது திசைக்கு பிறகு வருவதாக அமைந்துள்ளது ? சுக்கிர திசையில் ஆண்டு, அனுபவித்து, அதன் பிறகு ஏற்படும் வெறுமை, விரக்தியில், ஞானத்தேடல் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள செய்வதுதானே லாஜிக் ? அல்லது கேது திசையில் ஒரளவு பக்குவப்படுத்திவிட்டு, பிறகு சுக்கிர திசையை ஒரு சமனிலையோடு கடக்க இறைவன் வகுத்த பாதையா அது ?

    எனக்கு தற்சமயம் கேது திசை முடியும் தருவாயில் (1.9.2010இல் முடிகிறது). பிறப்பு : சிம்ம லக்கனம், இரண்டில் கேது, குரு மற்றும் செவ்வாய். அதனால் வாக்குவாதம், குதர்க்கம் அதிகம். ஆன்மீக நாட்டமும் தான். (ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்தவன், இன்று சுத்த சைவமாகி, ஜோதிடம் கற்க்கும் அளவிற்க்கு மாற்றம் !) இணையத்திலும் ’தோழர்களோடு’ சண்டைகள், வெட்டி விவாதங்கள் அதிகம். :)) சுக்கிர திசை (ஆறில், திருவோணத்தில், சூரியன்/ புதன் தனுசில், மீனத்தில் வக்கிர சனி மற்றும் ராகு, பிறந்த நட்ச்சத்திரம் அனுசம்) ஆரம்பித்த பின் இந்த ’அரசியல்’ சண்டைகள், சூடான விவாதங்களை விட்டு விட்டு காதல் கவிதை, அழகியல், romantic short stories என்று ஜாலியாக மாற வாய்ப்பு உள்ளதா ? அப்படி தான் என்று பட்சி சொல்கிறது !! (நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அவரை போல ‘கவிதை’ எழுதுவேனா ? அவருக்கு சுக்கிரன் ’அருமையாக’ உள்ளது. எனக்குதான் ஆறில் மறைந்து சதி செய்துவிட்டான். ஹூம் ) ’கலைசேவை’ செய்ய வாய்ப்பு பற்றி ? சென்னையில் ஒரு நாடக குழுவினருடன் (பரிக்‌ஷா) நல்ல நட்பு. அவர்களுடன் சேர்ந்து நாடக கலைக்கு ’சேவை’ செய்ய வாய்ப்புண்டா ? முதல்ல டப்பு போதிய அளவு இருந்தால் தான் இதெல்லாம்..

    ReplyDelete
  51. /////Who Am I said...
    Dear Vaadhyar Appachi:
    My daughter's DOB is 07-08-1981. Both the lucky number and "vidhi" number are 7. She is intelligent, pious and hard working. But seems to be unlucky at least so far.////

    பின்யோக ஜாதகமாக இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete
  52. ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், எண் ஏழு பற்றிய பாடமும்,ஞானகாரகன் கேது பகவானை பற்றிய பாடமும் மிகவும் சிறப்பாக இருந்தது,
    ராகத்தின் சுரங்கள் ஏழைப் போல, படிக்க, படிக்க ஆவலாக இருந்தது,
    கேது ஜாதகத்தில் கெட்டு போனால் குழந்தை பாக்கியம் இருக்காதா?
    எனக்கு ஜாதகதில் கேது குருவோடு ஒன்பதான் இடத்தில் சேர்ந்து இருக்கிறார்-(கன்னியில்), எனக்கு எதிலும் பிடித்தம் இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன், தங்களின் கருத்தை சொல்லவும்.
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா/////

    குழந்தைப்பாக்கியத்திற்கு உரியவர்கள் : குருபகவானும், ஐந்தாம் அதிபதியும் ஆவார்கள். நீங்கள் சொல்வதுபோல கேது அல்ல!

    ReplyDelete
  53. //////K.R.அதியமான் said...
    அன்புள்ள அய்யா,
    வணக்கம். நான் படித்த எண் கணிதப்படி 7ஆம் எண்ணிற்க்கு 2ஆம் எண் மிக நல்ல நண்பன். எதிரி அல்ல. நடைமுறையிலும் பார்த்திருக்கிறேன். கேது செவ்வாயை போன்றது என்பதை அறிந்திருப்பீர்கள்./////////

    செவ்வாய்க்கு உரிய எண் 9 அல்லவா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////சரி, ஒரு நெடு நாளைய சந்தேகம். உலகலாவிய இன்பங்களை, போகங்களை அனுபவிக்க வகை செய்யும் சுக்கிர திசை, ஏன் ஞானகாரகனான கேது திசைக்கு பிறகு வருவதாக அமைந்துள்ளது ? சுக்கிர திசையில் ஆண்டு, அனுபவித்து, அதன் பிறகு ஏற்படும் வெறுமை, விரக்தியில், ஞானத்தேடல் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள செய்வதுதானே லாஜிக் ? அல்லது கேது திசையில் ஒரளவு பக்குவப்படுத்திவிட்டு, பிறகு சுக்கிர திசையை ஒரு சமனிலையோடு கடக்க இறைவன் வகுத்த பாதையா அது ?///////

    ஆமாம். அதே நியதிப்படிதான், ராகு திசைக்குப்பிறகே, குரு திசை வருகிறது
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////எனக்கு தற்சமயம் கேது திசை முடியும் தருவாயில் (1.9.2010இல் முடிகிறது). பிறப்பு : சிம்ம லக்கனம், இரண்டில் கேது, குரு மற்றும் செவ்வாய். அதனால் வாக்குவாதம், குதர்க்கம் அதிகம். ஆன்மீக நாட்டமும் தான். (ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்தவன், இன்று சுத்த சைவமாகி, ஜோதிடம் கற்க்கும் அளவிற்க்கு மாற்றம் !) இணையத்திலும் ’தோழர்களோடு’ சண்டைகள், வெட்டி விவாதங்கள் அதிகம். :)) சுக்கிர திசை (ஆறில், திருவோணத்தில், சூரியன்/ புதன் தனுசில், மீனத்தில் வக்கிர சனி மற்றும் ராகு, பிறந்த நட்ச்சத்திரம் அனுசம்) ஆரம்பித்த பின் இந்த ’அரசியல்’ சண்டைகள், சூடான விவாதங்களை விட்டு விட்டு காதல் கவிதை, அழகியல், romantic short stories என்று ஜாலியாக மாற வாய்ப்பு உள்ளதா ? அப்படி தான் என்று பட்சி சொல்கிறது !! (நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அவரை போல ‘கவிதை’ எழுதுவேனா ? அவருக்கு சுக்கிரன் ’அருமையாக’ உள்ளது. எனக்குதான் ஆறில் மறைந்து சதி செய்துவிட்டான். ஹூம் ) ’கலைசேவை’ செய்ய வாய்ப்பு பற்றி ? சென்னையில் ஒரு நாடக குழுவினருடன் (பரிக்‌ஷா) நல்ல நட்பு. அவர்களுடன் சேர்ந்து நாடக கலைக்கு ’சேவை’ செய்ய வாய்ப்புண்டா ? முதல்ல டப்பு போதிய அளவு இருந்தால் தான் இதெல்லாம்..//////

    ஜாதகத்தில் சுக்கிரன் எங்கே இருக்கிறார் என்று சொல்லவில்லையே நீங்கள். உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை எழுதுங்கள். அஷ்டகவர்க்கப் பரல்களைப் பார்த்து, வரும் மகாதிசையில் உங்கள் அபிலாஷைகள் நிறைவேறுமா என்று சொல்கிறேன் (எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com)

    ReplyDelete
  54. ஏழாம் எண்ணுக்கு உரியவர்களுக்கான
    பலன்கள்,குணாதிசயம்,நவரத்தினம் மற்றும் விளக்கமான விவரங்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி!

    என்னுடைய பிறந்த நாள்: 16-05-1979

    ReplyDelete
  55. மிகவும் அருமை ஆனால்
    cats eye மற்றும் கோமேதகம்
    இரண்டையும் நன்றாக ஜாதகத்தை ஆராய்ந்து அணிந்து கொள்ளவும்.
    முடிந்த வரை அணியாமல் இருப்பது நல்லது
    திரு V.K.CHOUDHRY அவர்கள் எழுதிய நூல்களை பார்க்கவும்.
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  56. ////dubai saravanan said...
    ஏழாம் எண்ணுக்கு உரியவர்களுக்கான
    பலன்கள்,குணாதிசயம்,நவரத்தினம் மற்றும் விளக்கமான விவரங்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி!
    என்னுடைய பிறந்த நாள்: 16-05-1979////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. ////இனியன் பாலாஜி said...
    மிகவும் அருமை ஆனால் cats eye மற்றும் கோமேதகம்இரண்டையும் நன்றாக ஜாதகத்தை ஆராய்ந்து அணிந்து கொள்ளவும். முடிந்த வரை அணியாமல் இருப்பது நல்லது
    திரு V.K.CHOUDHRY அவர்கள் எழுதிய நூல்களை பார்க்கவும்.
    இனியன் பாலாஜி//////

    வாங்கிப் பரிசோதனை செய்து பார்த்து, திருப்தியாக இருந்தால், பிறகு அணிந்து கொள்ளலாம்!

    ReplyDelete
  58. 16.03.1984...

    அப்படி என்றால் நான் ஞானி தானே??? :)))
    நான் குட்டி நித்தியானந்தா ஆக முடியுமா சார்???

    ReplyDelete
  59. /////VIKNESHWARAN said...
    16.03.1984...
    அப்படி என்றால் நான் ஞானி தானே??? :)))
    நான் குட்டி நித்தியானந்தா ஆக முடியுமா சார்???////

    நீங்கள் நீங்களாகவே இருந்தால் போதும்! அதுதான் உங்களுக்கு நல்லது!:-)))

    ReplyDelete
  60. my b'day went y'day(7th April)... :)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com