மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.1.10

Doubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 21

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்தொன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.82
R.விஜய். ஈரோடு

ஐயா கேள்வி பதில் பதிவிற்கு நன்றி..
ஷட் பலனின்படி புதன் பலஹீனமாக உள்ளது.. புதனின் அருளை பெற என்ன வழிகள்? புதனுகென்று சிறப்பு வழிபாடு ஏதேனும் உள்ளதா?
நன்றி,
vijay,Erode.

புதன் என்று இல்லை, எந்தக் கிரகம் வலிமை இழந்து இருந்தாலும், நன்மைபெற கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
அதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்த சுவாமிகள் அருளினார். அந்தப் பாடலுக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது
---------------------------------------------------------------------
email.No.83
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

1.கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலத்தையும் திரும்ப சேர்ந்து வாழும் காலத்தையும் எவ்வாறு கண்டறிவது?

இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில் (அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள் டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின் தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது மன உளைச்சல் காரணமாக
ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும்.

2.தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது ஆக இருந்தால் நல்ல தசை புத்தியை எவ்வாறு அட்டவணை இல்லாமல் சுலபமாக கண்டறிவது?

குழப்புகிறீர்களே சுவாமி! தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது என்று சொல்லிவிட்டு, நல்ல தசை என்று எதைக் கேட்கிறீர்கள்? சுலபமாகக் கண்டறிவதற்கு ஒருவழிதான் உள்ளது. உள்ளூரில் நல்ல ஜோதிடராகப்
பார்த்துக் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்
--------------------------------------------------------
email.No.84
அருள் முருகன்

Sir

Generally speaking for a person with dhanus lagna having guru and mandhi in lagnam, sani in 11'th house, will the person be egoistic, get angry for silly reasons, expect lots of respect(than normal human being) eventhough he may be a very honest, kind and principled person due to sani's aspect(paarvai) on lagnam ?
with regards,
Arul Murugan

சனி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தாலே குணக் கேட்டைக் கொடுப்பான்.
------------------------------------------------------------------
email.No.85
சு.தேவராஜன்

ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்கு ஒரு ஐயம்.

1. எனது நண்பன் ஜாதகத்தில் திருக்கணித முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய்.வாக்கிய முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி குரு.இவர்கள் இருவரும் ராகுவுடன் சேர்ந்து சிம்ம வீட்டில் இருகின்றார்கள்.சிம்ம வீட்டை கேது பார்க்கிறான் . மகரம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறான். இந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெறுமா?.மனைவி எப்படி அமையும். அவர் மீன ராசி. எனக்கு விளக்கம் கூறுங்கள் ஐயா.
உங்கள் அன்பு மாணவன்
சு.தேவராஜன்

”இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளையும் இடது, வலது என்று பூட்டாமல், ஒரு பக்கமாகவே கட்டியிருக்கிறார்கள். இரண்டும் சம வலிமையுள்ள மாடுகள் அல்ல. இரண்டில் ஒன்று மாடு, மற்றொன்று
கன்றுக்குட்டி. வண்டியில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரத்திற்கு அச்சாணி இல்லை. மாட்டிற்குத் தீவனம் வைத்து இரண்டு நாட்களாகிறது. கன்றுக்குட்டியின் பசியளவு தெரியவில்லை. வண்டியோட்டி புது ரெக்ரூட். வண்டியில் அமரும் இடமெல்லாம் ஆட்டம் கண்டதால் கயிறுபோட்டுக் கட்டப்பட்டுள்ளது. பயணத்தின் தூரம் 100 கிலோ மீட்டர். பயணம் எப்படி இருக்கும்? எப்போது ஊருக்குப் போய்ச் சேருவோம்?” என்று கேட்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி.

திருமணத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள முறைப்படி ஜாதகத்தை அலச வேண்டும். அதற்கு முழு ஜாதகம் வேண்டும். அல்லது முழுப் பிறப்பு விவரங்கள் வேண்டும்.

ஜாதகன் 32 வயதைத் தாண்டியவன் என்றால், ஏன் அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் அவன் தகுதியும் தெரிய வேண்டும் (அதையும் ஜாதகத்தில் அலசலாமே என்றால், ஜாதகத்தின் 12 வீடுகளையும்
அலச வேண்டும். அதற்கு ஜோதிடருக்கு நேரம் இருக்காது. அதனால், அதற்கு உரிய கதைச் சுருக்கத்தை நாம்தான் அவரிடம் கொடுக்க வேண்டும்)

அஜீத் போன்ற தோற்றத்தையும், அண்ணா நகரில் பெரிய பங்களாவையும், முதுகலைப் பட்டத்தையும், மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானத்தையும் உடைய ஜாதகன், அனுஷ்கா சர்மா போன்ற பெண்ணைத் தேடி மணந்து
கொள்ளலாம். தி.நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் இளைஞன், தன் தகுதிக்குக் காந்திமதி போன்ற பெண்ணைத்தான் தேடவேண்டும். எல்லா அம்சமும் பொருந்திய மனைவி கிடைக்க ஜாதகனுக்குத் தகுதி வேண்டாமா?.

லக்கினத்தை விட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், விரும்பியபடி மனைவி அமைவாள். அது மூன்றும் இல்லாவிட்டால் கிடைக்கிற பெண்ண மணந்து கொண்டு, மனதையும் தேற்றிக் கொண்டு, வருகிறவளுக்கு அல்லது கிடைக்கிறவளுக்குத் தகுதியான கணவனாக நாம்தான் இருக்கவேண்டும்! புரிகிறதா நண்பரே?
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

33 comments:

  1. டி நகரில் இடம் கிடைத்தால் சொல்லுஙகள். நான் பெட்டிக்கடை வைக்கிறேன்.
    பிளாட் பாரக்கடைக்காரர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1000 சம்பதிக்கிறார்கள்.புட்டிரெட்டிப்பட்டியில் பெட்டிக்கடை வைத்தார் போல என்பதே சரியாக இருக்கும்.சாஸ்திரா மாண‌வர் தஞ்சையில் உள்ளவரா? அப்படியென்றால்
    எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள், அய்யா!

    ReplyDelete
  2. Really appreciate your efforts in doing this noble work.

    Thank you, keep up your good work.

    ReplyDelete
  3. //////இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளையும் இடது, வலது என்று பூட்டாமல், ஒரு பக்கமாகவே கட்டியிருக்கிறார்கள். இரண்டும் சம வலிமையுள்ள மாடுகள் அல்ல. இரண்டில் ஒன்று மாடு, மற்றொன்று
    கன்றுக்குட்டி. வண்டியில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரத்திற்கு அச்சாணி இல்லை. மாட்டிற்குத் தீவனம் வைத்து இரண்டு நாட்களாகிறது. கன்றுக்குட்டியின் பசியளவு தெரியவில்லை. வண்டியோட்டி புது ரெக்ரூட். வண்டியில் அமரும் இடமெல்லாம் ஆட்டம் கண்டதால் கயிறுபோட்டுக் கட்டப்பட்டுள்ளது. பயணத்தின் தூரம் 100 கிலோ மீட்டர். பயணம் எப்படி இருக்கும்? எப்போது ஊருக்குப் போய்ச் சேருவோம்////

    உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு. :-)

    ReplyDelete
  4. கலியுக நக்கீரரே!!!

    பொன்காலைப் பொழுது! முதற்கண் வணக்கம்!

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே!
    குற்றம், குற்றமே!!!

    இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது!

    பற்கள் (சுயவர்க்கப்பரல்கள்) இருந்தால் கரும்பு கடித்து சாப்பிடுக !

    பற்கள் (சுயவர்க்கப்பரல்கள்) இல்லை என்றால் கரும்பு சாரை குடிக்க சொல்லுகின்றீர்கள்!

    (உண்மையில் கரும்பின் சுவையோ!!!!!!!!!!!
    கடித்து சாப்பிடுவதில் தானே உள்ளது,

    கலியுக நக்கீரரே!!!

    ReplyDelete
  5. தந்தையே (Dad)!!!

    (E - mail.No.85)

    ஒருபக்கம் பார்த்தல், மாயகண்ணனே!
    ( இராம அவதாரத்தில் ) 14 வருடம் வனவாசம் செல்ல நேர்ந்தது !

    மறுபக்கம் பார்த்தல்,மாயகண்ணனே! உடன் இருந்தும் கூட பஞ்சபாண்டவர்கள்
    14 வருடம் வனவாசம் செல்ல நேர்ந்தது!

    ஆகையால்! வாங்கிவந்த (வரம்) உண்மையான நிலைமை என்னவோ இவ்வாறு இருக்க,

    மானிட ஜென்மம் ஆகிய அடியேன்!

    (எ,காட்டுக்கு கூட மற்றவரை எனது கூட சேர்க்க or சொல்ல விரும்ப வில்லை)

    மட்டும் என்ன விதி விளக்கா என்ன?

    இப்படி எல்லாம்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்! வேறு என்ன செய்ய முடியும் dad!!!!1

    ஹா!! ஹா!!! ஹிய்!! ஹீய்!!!

    ReplyDelete
  6. வணக்கம்

    அனுஷ்கா சர்மா, நிறைய இடங்களில் வருகின்றாரே????

    சும்மா விளையாட்டுக்குதான்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. email.No.84
    அருள் முருகன்

    Sir

    Generally speaking for a person with dhanus lagna having guru and mandhi in lagnam, sani in 11'th house, will the person be egoistic, get angry for silly reasons, expect lots of respect(than normal human being) eventhough he may be a very honest, kind and principled person due to sani's aspect(paarvai) on lagnam ?
    with regards,
    Arul Murugan

    சனி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தாலே குணக் கேட்டைக் கொடுப்பான்.
    ------------------------------------------------------------------

    Hello Sir, In the above statment if mandhi is not in lagna what would be the effect ? its always better to have sani in 11th position (from earlier classroom leason), for dhaus lagna, 11 position Sani is ucham.. So still the person will have problem with attitude due to sani aspect ?

    ReplyDelete
  8. /////kmr.krishnan said...
    டி நகரில் இடம் கிடைத்தால் சொல்லுஙகள். நான் பெட்டிக்கடை வைக்கிறேன்.
    பிளாட் பாரக்கடைக்காரர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1000 சம்பதிக்கிறார்கள்.புட்டிரெட்டிப்பட்டியில் பெட்டிக்கடை வைத்தார் போல என்பதே சரியாக இருக்கும்.சாஸ்திரா மாண‌வர் தஞ்சையில் உள்ளவரா? அப்படியென்றால் எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள், அய்யா!/////

    அவர் மதுரைக்காரர். அஞ்சல்வழியில் கற்றுக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். நீங்களே இடம் கிடைத்தால் என்று சொல்லி, அதன் சிரமத்தைச் சொல்லிவிட்டீர்கள். பாண்டி பஜார்,உஸ்மான் ரோடு, பனகல் பார்க் போன்ற பகுதிக் கடைகளுக்குத்தான் நீங்கள் சொல்லும் வருமானம் வரும். தி.நகரின் மற்ற வீதிகளில் உள்ள பெட்டிக்கடைகளை நினைத்துப்பாருங்கள். அத்துடன் காலை 6 மணி முதல் இரவு பத்துவரை கடையில் உட்கார வேண்டிய அவலத்தையும் நினைத்துப் பாருங்கள். உதவிக்கு யாரை வைத்தாலும் பணம் களவுபோகும் அபாயம் உள்ளது அந்தத்தொழில். எத்தனை லட்சம் வந்தாலும் நம் இருவருக்கும் அதெல்லாம் சரிப்படாது கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////KK said...
    Really appreciate your efforts in doing this noble work.
    Thank you, keep up your good work.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  10. /////karmegaraja said...
    //////இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளையும் இடது, வலது என்று பூட்டாமல், ஒரு பக்கமாகவே கட்டியிருக்கிறார்கள். இரண்டும் சம வலிமையுள்ள மாடுகள் அல்ல. இரண்டில் ஒன்று மாடு, மற்றொன்று
    கன்றுக்குட்டி. வண்டியில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரத்திற்கு அச்சாணி இல்லை. மாட்டிற்குத் தீவனம் வைத்து இரண்டு நாட்களாகிறது. கன்றுக்குட்டியின் பசியளவு தெரியவில்லை. வண்டியோட்டி புது ரெக்ரூட். வண்டியில் அமரும் இடமெல்லாம் ஆட்டம் கண்டதால் கயிறுபோட்டுக் கட்டப்பட்டுள்ளது. பயணத்தின் தூரம் 100 கிலோ மீட்டர். பயணம் எப்படி இருக்கும்? எப்போது ஊருக்குப் போய்ச் சேருவோம்////
    உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு. :-)//////

    இணையத்தில் கும்மி அடிப்பவர்களின் சராசரி வயது 32. அவர்கள் வயதிற்கு நானும் இறங்காவிட்டால், இங்கே நான் எப்படி குப்பை கொட்ட முடியும்?:-)))))

    ReplyDelete
  11. /////kannan said...
    கலியுக நக்கீரரே!!!
    பொன்காலைப் பொழுது! முதற்கண் வணக்கம்!
    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே!
    குற்றம், குற்றமே!!!
    இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது!
    பற்கள் (சுயவர்க்கப்பரல்கள்) இருந்தால் கரும்பு கடித்து சாப்பிடுக !
    பற்கள் (சுயவர்க்கப்பரல்கள்) இல்லை என்றால் கரும்பு சாரை குடிக்க சொல்லுகின்றீர்கள்!
    (உண்மையில் கரும்பின் சுவையோ!!!!!!!!!!!
    கடித்து சாப்பிடுவதில் தானே உள்ளது,
    கலியுக நக்கீரரே!!!/////

    உங்கள் வயதில் நானும் கடித்துச் சாப்பிட்டவன்தான்! இப்போது முடியாது. பற்கள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  12. ////Alasiam G said...
    Present sir...////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  13. ////kannan said...
    தந்தையே (Dad)!!!
    (E - mail.No.85)
    ஒருபக்கம் பார்த்தல், மாயகண்ணனே!
    ( இராம அவதாரத்தில் ) 14 வருடம் வனவாசம் செல்ல நேர்ந்தது !
    மறுபக்கம் பார்த்தல்,மாயகண்ணனே! உடன் இருந்தும் கூட பஞ்சபாண்டவர்கள்
    14 வருடம் வனவாசம் செல்ல நேர்ந்தது!
    ஆகையால்! வாங்கிவந்த (வரம்) உண்மையான நிலைமை என்னவோ இவ்வாறு இருக்க,
    மானிட ஜென்மம் ஆகிய அடியேன்!
    (எ,காட்டுக்கு கூட மற்றவரை எனது கூட சேர்க்க or சொல்ல விரும்ப வில்லை)
    மட்டும் என்ன விதி விலக்கா என்ன?
    இப்படி எல்லாம்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்! வேறு என்ன செய்ய முடியும் dad!!!!1
    ஹா!! ஹா!!! ஹிய்!! ஹீய்!!!//////

    (அந்தக்) காட்டுக்குப் போவது, உங்களுக்கே உங்கள் கையில் இல்லை. சனீஷ்வரனின் அலவலகத்தில் இருந்து விசா கிடைக்க வேண்டும். புரிகிறதா?

    ReplyDelete
  14. Success said...
    வணக்கம்
    அனுஷ்கா சர்மா, நிறைய இடங்களில் வருகின்றாரே????
    சும்மா விளையாட்டுக்குதான்..
    வாழ்க வளமுடன்//////

    தேவிகாவையும், சரோஜாதேவியையும் தலைப்பில்போட எனக்கு ஆசைதான். போட்டால் பதிவை நானே எழுதி, நானே படிக்க வேண்டியதாக இருக்கும்!

    ReplyDelete
  15. dhana said...
    email.No.84
    அருள் முருகன்
    Sir
    Generally speaking for a person with dhanus lagna having guru and mandhi in lagnam, sani in 11'th house, will the person be egoistic, get angry for silly reasons, expect lots of respect(than normal human being) eventhough he may be a very honest, kind and principled person due to sani's aspect(paarvai) on lagnam ?
    with regards,
    Arul Murugan
    சனி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தாலே குணக் கேட்டைக் கொடுப்பான்.
    ------------------------------------------------------------------
    Hello Sir, In the above statment if mandhi is not in lagna what would be the effect ? its always better to have sani in 11th position (from earlier classroom leason), for dhaus lagna, 11 position Sani is ucham.. So still the person will have problem with attitude due to sani aspect ?//////

    அவ்வாறு இருந்தால், மாந்தியின் வேலையை சனி கையில் எடுத்துக்கொள்வார்.
    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. பட்டாலும் மற்றவர்கள் மற்றவர்களே!

    ReplyDelete
  16. ஐயா வணக்கம்

    கேள்வி பதில் பகுதி சூப்பராக உள்ளது. மாணவர்கள் ரொம்ப நுணுக்கமான கேள்விகளும் கேட்கிறார்கள், அதே சமயம் தங்கள் பொறுமையை சோதிக்கும் கேள்விகளும் கேட்கிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் தங்களின் பதில் சுவாரசியமாகவும், உபயோகமாகவும் உள்ளது.

    100 கி மீ பயணம் - மாட்டு வண்டியில் ...!!!!!! - இந்த காலத்தில் மாட்டு வண்டி பிரயாணம் என்பதே சிரமம். அதுவும் நீங்கள் சொன்ன வண்டியில் பிரயாணம் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

    2 லட்சம் வருமானம் அல்லது தி. நகரில் பெட்டிக்கடை அல்லது நம்ம kmr. சொன்னது போல புட்டிரெட்டிபட்டியில் பெட்டிக்கடை எல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இந்த குணம் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அதிகமாக ஆசைப்பட்டால் (அனுஷ்கா சர்மா) எதுவும் திருப்பதியாக இருக்காது.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கோளறு பதிகத்திற்கு தாங்கள் கொடுத்த சுட்டியில் click செய்தால் ஒன்றையும் காணோமே. ஏதோ கோளாறாகி விட்டது என்று நினைக்கிறேன்.

    அனுஷ்கா சர்மாவைப் போன்ற பெண் என்றால் எப்படி. நாள் முழுவதும் மேக்கப்போடு இருப்பவரோ. மேக்கப்பை கலைத்து விட்டால் காண சகிக்காது.

    நான் படித்தது. பொதுவாக (அதாவது பொது பலன்) நவாம்ச லக்கினத்திற்கு 7ம் வீடு குருவின் வீடாகவோ வேறு சுபகிரகத்தின் வீடாகவோ இருந்தால் கணவனுக்கு கட்டுப் பட்ட மனைவி அல்லது குடும்பத்திற்கு ஏற்ற குத்து விளக்கு. இல்லாவிட்டால் கணவன்தான் மனைவிக்கு கட்டுப்பட வேண்டும்.

    ReplyDelete
  18. T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    கேள்வி பதில் பகுதி சூப்பராக உள்ளது. மாணவர்கள் ரொம்ப நுணுக்கமான கேள்விகளும் கேட்கிறார்கள், அதே சமயம் தங்கள் பொறுமையை சோதிக்கும் கேள்விகளும் கேட்கிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் தங்களின் பதில் சுவாரசியமாகவும், உபயோகமாகவும் உள்ளது.
    100 கி மீ பயணம் - மாட்டு வண்டியில் ...!!!!!! - இந்த காலத்தில் மாட்டு வண்டி பிரயாணம் என்பதே சிரமம். அதுவும் நீங்கள் சொன்ன வண்டியில் பிரயாணம் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.
    2 லட்சம் வருமானம் அல்லது தி. நகரில் பெட்டிக்கடை அல்லது நம்ம kmr. சொன்னது போல புட்டிரெட்டிபட்டியில் பெட்டிக்கடை எல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இந்த குணம் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அதிகமாக ஆசைப்பட்டால் (அனுஷ்கா சர்மா) எதுவும் திருப்பதியாக இருக்காது.
    நன்றி
    வாழ்த்துக்கள்/////

    உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  19. /////ananth said...
    கோளறு பதிகத்திற்கு தாங்கள் கொடுத்த சுட்டியில் click செய்தால் ஒன்றையும் காணோமே. ஏதோ கோளாறாகி விட்டது என்று நினைக்கிறேன்./////

    கோளறு திருப்பதிகம் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்

    1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
    சனி பாம்பு இரண்டும் உடனே
    ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
    எருது ஏறி ஏழை உடனே
    பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்
    உளமே புகுந்த அதனால்
    ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்
    உடனாய நாள்கள் அவைதாம்
    அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேன்
    முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி
    திசை தெய்வம் ஆன பலவும்
    அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
    மறை ஓதும் எங்கள் பரமன்
    நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்
    கொடுநோய்கள் ஆன பலவும்
    அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
    விடை ஏறும் நங்கள் பரமன்
    துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும்
    மிகையான பூதம் அவையும்
    அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர்
    மடவாள் தனோடும் உடனாய்
    நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்
    உளமே புகுந்த அதனால்
    கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல்
    கொடு நாகமோடு கரடி
    ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
    விடையேறு செல்வன் அடைவு ஆர்
    ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த
    மடவாள் தனோடும் உடனாய்
    வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்
    உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்
    பசு ஏறும் எங்கள் பரமன்
    சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
    வருவகாலமான பலவும்
    அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு
    குணம் ஆய வேட விகிர்தன்
    மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
    உளமே புகுந்த அதனால்
    புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
    வளர் செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
    மறைஞான ஞானமுனிவன்
    தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே.

    ReplyDelete
  20. /////ananth said...
    அனுஷ்கா சர்மாவைப் போன்ற பெண் என்றால் எப்படி. நாள் முழுவதும் மேக்கப்போடு இருப்பவரோ. மேக்கப்பை கலைத்து விட்டால் காண சகிக்காது./////

    ஒரு நகைச்சுவைக்காகச் சொல்வது அது! ஒரு பெண்ணின் உண்மையான அழகு அவளது தன்மையான குணத்தில் இருக்கிறது. புற அழகிற்கு இரண்டாவது இடம்!

    /////நான் படித்தது. பொதுவாக (அதாவது பொதுப் பலன்) நவாம்ச லக்கினத்திற்கு 7ம் வீடு குருவின் வீடாகவோ வேறு சுபகிரகத்தின் வீடாகவோ இருந்தால் கணவனுக்கு கட்டுப் பட்ட மனைவி அல்லது குடும்பத்திற்கு ஏற்ற குத்து விளக்கு. இல்லாவிட்டால் கணவன்தான் மனைவிக்கு கட்டுப்பட வேண்டும்.//////

    எழில் சுபக்கிரகம் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். கட்டுப்படுவது என்பது இருவருக்கும் உள்ள அனுசரிப்பினால் ஏற்படுவது.

    ReplyDelete
  21. Platform Shop owner has to give some % to Police and Criminals also in chennai :)

    For Dhanus and Miduna Lakniam, the 7th house is Benefic Lord House Only but the lords (Guru and Pudhan) are not friends. So in this case, good placement of sukiran should help right ?

    You have mentioned that if 7th house has more parals then one can get good wife..

    Also, if 7th house has more parals then wife will have upper hand right ? So that means, Madurai Meenakshi aatchi only :)

    thanks
    Rajan

    ReplyDelete
  22. Dear Sir,
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  23. //ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்
    உடனாய நாள்கள் அவைதாம்//

    9) ஆயில்யம், 1) ஆசுவினி, 7) புனர்பூசம், 18) கேட்டை, 6) திருவாதிரை போன்ற நட்சத்திரங்களைத்தான் நாள்கள் என்று குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

    //புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே//

    புத்த மற்றும் சமண மதத்தவரை வாதிட்டு வீழ்த்தும் அளவுக்கு அண்ணல் இறையனாரின் திருநீறு சிறப்பும், திடமும் கொண்டது.

    இறுதியில் அடியார்கள் வானில் அரசாள்வர் என்று தம்மீதே ஆணையிட்டு சொல்கிறார். உண்மையில் அற்புதமான ஆழ்ந்த கருத்துகள் கொண்டதுதான் இந்த பதிகம். இதை இங்கே அறிய கொடுத்ததற்கு நன்றி ஆசிரியரே.

    ReplyDelete
  24. ///Rajan said...
    Platform Shop owner has to give some % to Police and Criminals also in chennai :)
    For Dhanus and Miduna Lakniam, the 7th house is Benefic Lord House Only but the lords (Guru and Pudhan) are not friends. So in this case, good placement of sukiran should help right?
    You have mentioned that if 7th house has more parals then one can get good wife..
    Also, if 7th house has more parals then wife will have upper hand right ? So that means, Madurai Meenakshi aatchi only :)
    thanks
    Rajan/////

    நீங்கள் சொல்லும் இரண்டு கருத்துக்களுமே சரிதான்! நன்றி!

    ReplyDelete
  25. ///arumuga nainar said...
    Dear Sir,
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
    Rgds
    Nainar//////

    நன்றி நைனா(ர்)! உங்களை நீண்ட நாட்களாகக் காணோமே (அதாவது பின்னூட்டங்கள் வழியாக)

    ReplyDelete
  26. //////ananth said...
    //ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்
    உடனாய நாள்கள் அவைதாம்//
    9) ஆயில்யம், 1) ஆசுவினி, 7) புனர்பூசம், 18) கேட்டை, 6) திருவாதிரை போன்ற நட்சத்திரங்களைத்தான் நாள்கள் என்று குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
    //புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே//
    புத்த மற்றும் சமண மதத்தவரை வாதிட்டு வீழ்த்தும் அளவுக்கு அண்ணல் இறையனாரின் திருநீறு சிறப்பும், திடமும் கொண்டது.
    இறுதியில் அடியார்கள் வானில் அரசாள்வர் என்று தம்மீதே ஆணையிட்டு சொல்கிறார். உண்மையில் அற்புதமான ஆழ்ந்த கருத்துகள் கொண்டதுதான் இந்த பதிகம். இதை இங்கே அறிய கொடுத்ததற்கு நன்றி ஆசிரியரே.///////

    திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியன பெற்றது, அரவு தீண்டி இறந்த வணிகனை உயிர் பெற்று எழச் செய்தது, திருமறைக் காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கோயில் திருக்கதவை அப்பர் திறக்கப் பாடியதைத் தொடர்ந்து மீண்டும் அடைக்கப்பாடியது, பாண்டியனின் வெப்புநோய் விலகத் திருநீற்றுப்பதிகம் அருளியது, மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது, பாலையை நெய்தலாக்கிப்பின் மருதமாக்கியது ஆகிய அற்புதத் திருப்பதிகங்களைப் பாடிப் புகழ்பெற்றவர்.

    பாண்டியனின் வெப்புநோய் (leucoderma - skin disorder) இந்தக் கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்தமையால் முற்றிலும் நீங்கியதாகவும், அதற்குப் பரிசாக மன்னன், நாவுக்கரசருக்கு, மதுரையில் ஆதினம் அமைக்க இடமும் பொருளும் கொடுத்தான் என்பது உபரிச்செய்தி. அந்த ஆதின மடம் மதுரையில் இன்றும் உள்ளது.

    ReplyDelete
  27. வேலை பழு காரணமாக்க கொஞ்சம் நாள் எதுவும் சொல்ல முடிய வில்லை . வகுப்புக்கு வந்து படித்து விட்டு போவேன் .

    ReplyDelete
  28. Good evening sir,
    Thanks for ur today lesson sir. All the answers are very very nice.
    appa, what a most beautiful clss room, super class room sir.
    sundari

    ReplyDelete
  29. /////NARESH said...
    Good Evening Sir!////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  30. ////Priya said...
    வேலை பழு காரணமாக்க கொஞ்சம் நாள் எதுவும் சொல்ல முடிய வில்லை . வகுப்புக்கு வந்து படித்து விட்டு போவேன்.////

    அதனால் என்ன? பரவாயில்லை! நேரம் கிடைக்கும்போது படியுங்கள்! நன்றி!

    ReplyDelete
  31. /////sundari said...
    Good evening sir,
    Thanks for ur today lesson sir. All the answers are very very nice.
    appa, what a most beautiful class room, super class room sir.
    sundari//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com