மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.1.10

Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?

Doubts: கேள்வி பதில் பகுதி 19

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பத்தொன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.76
செந்தில் குமார்

Respected sir,
Sir I having one doubt kindly clear my doubt: planets : 27 Avasthas
In a day each planet does 27 avasthas. But i want to know how it can be calculated
like waking, seeing sleeping But i know it is calculated by using agasu something like that.
If you answer this question it would be great . I will we very happy
I am waiting your reply
Regards
Senthil.

நாம் இன்னும் ப்ளஸ் டூ வையே தாண்டவில்லை. அதற்குள் நீங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடத்தைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?

கிரக அவஸ்தை (condition of Planets) என்பது, கிரக வக்கிரம், கிரக யுத்தம் போன்று ஒரு தனிப்பட்ட கிரக நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் பலன்களையும் குறிக்கக்கூடிய பாடம்!.

உதாரணத்திற்கு Shayanadi Avasthasல் இருக்கும் கேது, சிலராசிகளில் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும். சில ராசிகளில், நோய் நொடிகளால் ஜாதகனை இருப்புச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துவிடும்.
அதைத் துள்ளியமாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் அந்த கிரக அவஸ்தைகள் பயன்படும்.

1.Jagradadi Avasthas, 2 Baladi Avasthas, 3 Lajjitadi Avasthas, 4 Deeptadi Avasthas, 5 Shayanadi Avasthas என்று கிரக அவஸ்தைகள் பலவகைப்படும். அதிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் படித்தால் தலை சுற்றல், வாந்தி, பேதி எல்லாம் வரும் (அதாவது புதிதாகப் படிப்பவர்களுக்கு)

சொல்லப்போனால், அது மேலான மேல் நிலைப் பாடம். 40 அல்லது 50 பக்கங்களுக்கு மேல் அதைப் பற்றி எழுதலாம். இப்போது நேரமில்லை. அதோடு நமது லெவலுக்கு அது தேவையுமில்லை. ஆகவே பொறுத்திருங்கள். பின்னால் சமயம் வரும்போது அது பற்றி எழுதுகிறேன்.
-------------------------------------------
email.No.77
கார்மேக ராஜா

ஐயா!
கேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால்:

1.கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா! கேந்திராதிபத்திய தோஷம் எத்தனையாண்டுகள் நீடிக்கும்?

ஒரு நன்மையளிக்கும் கிரகம், கேந்திர அதிபதியாகிவிடும் நிலையில், நன்மையளிக்கும் கிரகமாக இல்லாமல் தன் நிலை மாறிவிடுவார். சுக்கிரன், குரு, புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு இத்தன்மை
உண்டு. ஒரு சுபக்கிரகம் இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியாகும் நிலையில் மிகவும் தீயவர் ஆகிவிடுவார். அதைத்தான் கேந்திராதிபத்திய தோஷம் என்பார்கள். தோஷத்திற்கு உள்ளாகும் கிரகத்தின் தசா/புத்தி காலம்வரை அந்த தோஷம் நீடிக்கும்!
When a naturally benefic planet becomes the lord of a Kendra, it does not remain benefic but turns a malefic. Venus, Jupiter, mercury and waxing moon get afflicted with this Dosha in that order. When a naturally benefic planet becomes the lord of a two Kendras, it turns out to be very malefic and gets afflicted with what is known as Kendra Adhipati Dosha. If this planet is lord of the ascendant as well it will be rendered neutral and will not be a malefic as ascendant lord can never be malefic for the native. However its overall effects will depend upon its position in the horoscope.A natural benefic becoming the lord of two Kendras is possible only in four ascendants; Gemini, Virgo, Sagittarius and Pisces. In case Gemini and Virgo, mercury, the ascendant lord turns out to be a neutral while Jupiter becomes a malefic planet. In case ofSagittarius and Pisces, Jupiter becomes neutral and mercury is a malefic.However Kendra Adhipati Dosha is neutralized if the planet afflicted with it is posited in the Kendra of which it is the lord. For example, if Jupiter in Gemini is posited in the 7th house, it becomes free from this Dosha.

2.மற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்லக் கேட்கிறேன். நிஜமா ஐயா?

கணவனால் மனைவிக்கு (வீட்டுக்குப்) பலன் இருக்காது. எதிர்த்த வீட்டுக்காரிக்குத்தான் பலன் என்று சொல்வதைப்போல உங்களது கூற்று. First benefit will come from the placement of a planet to the house where he is placed.

யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா? நீங்களே சொல்லுங்கள்:-))))
------------------------------------------------
email.No.78
சந்திரசேகரம் சஞ்சீவ்காந்த்!

vanakkam sir
ragu, kethu pontra shadowy planets i ean mattra kirakankaludan serthu mukkiyathuvam tarukirarkal? athu eppothu nadaimurayil vantathu? ean avatrayum sertharkal? please itharku sariyana pathilai sollavum.
what about ragu,ketu? why astrologists give them important?

நவக்கிரகங்கள் என்பது காலம் காலமாக உள்ளது ராசா! ராகு & கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள் ஆயிற்றே - அவற்றை எப்படிச் சேர்க்கலாம்? ஏன் சேர்த்தார்கள்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்வது? அதுவும் நீங்கள் கேட்கும் விதத்தில் சரியாக எப்படிப் பதில் சொல்வது?

நல்ல வேளை ஜோதிடத்தை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கினார்கள்? உருவாக்குவதற்கு அவர்களுக்கு என்னென்ன தகுதி இருந்தது? அதைக் காலம் காலமாக மக்கள் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் கேட்காமல் விட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

உச்ச நீதி மன்றத்தில் ஒரு ரிட் போட்டால், சரியான பதில் கிடைக்கலாம்! ஜோதிடத்தில் பாண்டித்யம் உள்ளவர்கள் யாராவது உதவிக்கு வந்து பதில் சொல்லலாம். என் அறிவிற்குத் தெரியவில்லை ராசா!:-)))))
------------------------------------------------------------
email.No.79
R.பிரபு

Dear Sir,

Doubt 1: For example, for Thanusu Lagna mars is paavathi pathi for 5th and 12th house. Sani is paavathi pathi for 2nd and 3rd house. If they are jointly in 8th place, can we say it is Vibareetha Raja Yogam? Both the planets having one good house and another bad house. Sorry sir. In my previous email it was written as Neesa Banga Raja Yogam.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் (Vibareetha Raja Yogam) உண்டாகும். நீங்கள் சொல்லும் அமைப்பிற்கு விபரீத ராஜ யோகம் உண்டு. அதற்கான பலன்களை அவர்கள் தங்கள் தசா/புத்திகளில் தருவார்கள்!

Doubt 2: If the paavathi pathis of 9th and 10th place are jointly in 6,8 or 12 th place, is it Tharma Karmathi Pathi Yogam?


ஒன்பதாம் அதிபதி பத்தாம் வீட்டிலும், பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலும் மாறி அமர்வதுதான் முதல் நிலை தர்மகர்மாதிபதி யோகம்! மற்ற அமைப்பெல்லாம் (அதாவது அந்த அதிபதிகள் இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் வேறு வீடுகளில் அமர்ந்திருப்பது) அதற்கு அடுத்த நிலைதான். 6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் அந்த யோகம் கடைசி நிலைக்கு வந்துவிடும். அதிகப் பயன் இல்லை. First Prize, Second Prize, Third Prize, Consolation Prize என்று பரிசுகளில் பலநிலைகள் உள்ளன இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual exchange (பரிவர்த்தனை), or mutual aspect, that planetary combination is called as Dharma Karma Adhipati Yoga.
----------------------------------------------
email.No.80
ஆதிராஜ்

வணக்கம் அய்யா,

செவ்வாய் பற்றி விளக்கத்தில் ஒரு சந்தேகம் அய்யா, செவ்வாய் ஒரு லக்னத்திற்கு யோககாரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்னதுக்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில்)பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு பலன் தரும் .அது 2 ம் வீடாக இருப்பின் அந்த ஜாதகன் செல்வம் ஈட்டுவதில் செவ்வாய் சிறப்பு செய்வாரா?
நன்றி வணக்கம்...

குழப்புகிறீர்களே சுவாமி! ஒரு லக்கினம் என்று சொல்லி விடுகதை போடாமல், என்ன லக்கினம் என்று சொல்லுங்கள். அத்துடன் செவ்வாய் எங்கே இருந்து உச்ச வீட்டைப் பார்க்கிறார் என்பதையும் சொல்லுங்கள்.

எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள். அன்பு மிகுதியால், உங்கள் தோளில் சாய்ந்துகொள்ளும் மனைவியும், உங்களைக் கட்டித் தழுவி, உங்கள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சும் குழந்தையும் அரிய செல்வங்கள்தான். அது கிடைக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்! அவைதான் உண்மையான செல்வம்! உண்மையான சொத்து!

பணம் வருவது மட்டும்தான் யோகமா? அதற்கு யோககாரனைப் பார்க்காமல், 2ஆம் மற்றும் 11ஆம் அதிபதிகளையும், அந்த வீடுகளையும் பாருங்கள்..

அத்தோடு ஈட்டும் செல்வத்தை அனுபவிப்பதற்கு உரிய கிரகங்கள் ஜாதகத்தில் ஒழுங்காக இருக்கிறார்களா என்றும் பாருங்கள்.(சம்பாதித்த பணத்தைக் கொஞ்சமேனும் நாமும் அனுபவிக்காமல் முழுதாக வைத்துவிட்டு, வைகுண்டம் போவதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள்?):-))))))
---------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

43 comments:

  1. "The other man's wife is always beautiful"
    என்பது பழமொழி.தூரத்துப்பச்சை க்ண்ணுக்குக் குளுமை. கிட்டப்போனால் முட்டப்பகை.

    கேந்திராதிபத்ய தோஷத்தை உதாரணத்தோடு சொல்லியிருக்கலாம்.தமிழ் வழக்கப்படி இன்னும் 12 ராசிகளை மனப்பாடமாகப் பெயர் சொல்லக்கூடியவர்கள் மிக‌க்குறைந்த‌ எண்ணீக்கையில் இருப்பார்க‌ள் என்று தோன்றுகிற‌து. ஜெமினி பிஸ்ச‌ஸ் என்று போட்டுத்தாக்கினால்...? உங்கள் சிற‌ப்பே எளிமை,இனிமை,தெளிவு,அன்பு,கனிவு என்னும் போது கொஞ்சம்
    பாதை மாறினாலும் பளிச்செனத் தெரிகிறது.‌

    ReplyDelete
  2. ஐயா!!!

    கும்பிடுதினங்கோ!

    ஏலே!

    {எம்தேவி! ஆண்டாள் நாச்சியார்!!!
    திருப்பாவை நோன்பு இருக்கும் போது
    (மாயகண்ணனை நினைத்து)தோழிகளை (எல்லே இளங்கிளியே!) பவழ செவ்வாயால் அழைத்த, பவள வாய்ச்சொல் ஐயா!!! }

    ஏலே! ஏ!! மகராஜா!!!

    யாருலே! அங்கே,

    நாட்டாமை ஐயா!
    16 பட்டி தொட்டிக்கு எல்லாம் சரியான தீர்ப்பை வழங்கி,
    வழங்கி கலைத்து போய் உள்ளாக , அவகளுக்கு அந்த உரியில்
    உள்ள மோரை கொண்டுவாலே!!! சீக்கிரமாக
    (E - Mail No 76, 78 )


    நாட்டாமை ஐயா!!!

    E - Mail No 80 க்கு இப்படி எல்லாம்
    தீர்ப்பு வழங்குவது கொஞ்சம் கூட நல்லது இல்லைங்கோ !
    ஆமாம்,சொல்லிபுட்டோனுங்கோ !! !

    இந்த கண்ணனுக்கும் ஒரு ராதா கிடைப்பாளா என்று
    வழிமேல் விழி வைத்து, பார்த்து! பார்த்து! கண்ணாடி போடும் அளவுக்கு ஆளாகி உள்ளபோது!.

    எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள்.

    அன்பு மிகுதியால், உங்கள் தோளில் சாய்ந்துகொள்ளும் மனைவியும்!!!,

    உங்களைக் கட்டித் தழுவி, உங்கள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சும் குழந்தையும் அரிய!!!
    செல்வங்கள்தான்.

    அது கிடைக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்! அவைதான் உண்மையான செல்வம்! உண்மையான சொத்து!

    பணம் வருவது மட்டும்தான் யோகமா? அதற்கு யோககாரனைப் பார்க்காமல், 2ஆம் மற்றும் 11ஆம் அதிபதிகளையும், அந்த வீடுகளையும் பாருங்கள்..

    அத்தோடு ஈட்டும் செல்வத்தை அனுபவிப்பதற்கு உரிய கிரகங்கள் ஜாதகத்தில் ஒழுங்காக இருக்கிறார்களா என்றும் பாருங்கள்.(சம்பாதித்த பணத்தைக் கொஞ்சமேனும் நாமும் அனுபவிக்காமல் முழுதாக வைத்துவிட்டு, வைகுண்டம் போவதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள்?)

    ReplyDelete
  3. MY ANSWER TO THE ONE WHO ASKED ABOUT AVASTHA.He has asked in my blog also.

    TO SEARCH ENGINES
    -----------------THE very fact you talk about avasthas means that you are a master of other subjects of astrology. From whatever source you have read about avasthas, they would not have left it by just mentionng the names.They would have explained it in a detailed or abridged way. If you share your knowledge instead of trying to test our knowledge, every one will be benefitted.

    http://www.scribd.com/doc/16601831/Avasthas-of-Planets

    This source may help you.Please read that and tell us also.Sharing of knowledge is welcome. Show of "one up than you" may please be avoided.
    "I know I don't want you to tell you"attitude of yesteryears has to be eschewed.Good luck.
    ps:I have read your same question in classroomm 2007, and astrologytree.net

    Monday, January 25, 2010

    http://parppu.blogspot.com

    ReplyDelete
  4. //Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?//

    இஞ்ச் டேப் இருந்தால் அளந்து பார்த்து சொல்லிவிடலாம்.
    :)

    ReplyDelete
  5. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////kmr.krishnan said...
    "The other man's wife is always beautiful"
    என்பது பழமொழி.தூரத்துப்பச்சை க்ண்ணுக்குக் குளுமை. கிட்டப்போனால் முட்டப்பகை.
    கேந்திராதிபத்ய தோஷத்தை உதாரணத்தோடு சொல்லியிருக்கலாம்.தமிழ் வழக்கப்படி இன்னும் 12 ராசிகளை மனப்பாடமாகப் பெயர் சொல்லக்கூடியவர்கள் மிக‌க்குறைந்த‌ எண்ணீக்கையில் இருப்பார்க‌ள் என்று தோன்றுகிற‌து. ஜெமினி பிஸ்ச‌ஸ் என்று போட்டுத்தாக்கினால்...? உங்கள் சிற‌ப்பே எளிமை,இனிமை,தெளிவு,அன்பு,கனிவு என்னும் போது கொஞ்சம் பாதை மாறினாலும் பளிச்செனத் தெரிகிறது.‌

    ஜெமினி பிஸ்ச‌ஸ்’ என்று எதைச் சொல்கிறீர்கள் சார்? தலைப்பில் உள்ள படத்தையா? மாற்றிவிட்டேன். இப்போது பாருங்கள். நன்றி! கேந்திராதிபத்ய தோஷத்தை தனிக் கட்டுரையாக எழுதிவிடுகிறேன். அனைவருக்கும் பயன் படட்டும்!

    ReplyDelete
  7. ////kannan said...
    ஐயா!!!
    கும்பிடுதினங்கோ! ஏலே!
    {எம்தேவி! ஆண்டாள் நாச்சியார்!!!
    திருப்பாவை நோன்பு இருக்கும் போது
    (மாயகண்ணனை நினைத்து)தோழிகளை (எல்லே இளங்கிளியே!) பவழ செவ்வாயால் அழைத்த, பவள வாய்ச்சொல் ஐயா!!! }
    ஏலே! ஏ!! மகராஜா!!!
    யாருலே! அங்கே,
    நாட்டாமை ஐயா!
    16 பட்டி தொட்டிக்கு எல்லாம் சரியான தீர்ப்பை வழங்கி,
    வழங்கி கலைத்து போய் உள்ளாக , அவகளுக்கு அந்த உரியில்
    உள்ள மோரை கொண்டுவாலே!!! சீக்கிரமாக
    (E - Mail No 76, 78 )
    நாட்டாமை ஐயா!!!
    E - Mail No 80 க்கு இப்படி எல்லாம்
    தீர்ப்பு வழங்குவது கொஞ்சம் கூட நல்லது இல்லைங்கோ !
    ஆமாம்,சொல்லிபுட்டோனுங்கோ !! !
    இந்த கண்ணனுக்கும் ஒரு ராதா கிடைப்பாளா என்று
    வழிமேல் விழி வைத்து, பார்த்து! பார்த்து! கண்ணாடி போடும் அளவுக்கு ஆளாகி உள்ளபோது!.///////

    கவலை எதற்கு ராசா? கண்ணாடி போட்ட ராதை கிடைக்காமலா போய்விடுவார்? தேடிப்பிடித்து விடுவோம்!

    ReplyDelete
  8. /////kmr.krishnan said...
    MY ANSWER TO THE ONE WHO ASKED ABOUT AVASTHA.He has asked in my blog also.
    TO SEARCH ENGINES
    -----------------THE very fact you talk about avasthas means that you are a master of other subjects of astrology. From whatever source you have read about avasthas, they would not have left it by just mentionng the names.They would have explained it in a detailed or abridged way. If you share your knowledge instead of trying to test our knowledge, every one will be benefitted.
    http://www.scribd.com/doc/16601831/Avasthas-of-Planets
    This source may help you.Please read that and tell us also.Sharing of knowledge is welcome. Show of "one up than you" may please be avoided.
    "I know I don't want you to tell you"attitude of yesteryears has to be eschewed.Good luck.
    ps:I have read your same question in classroomm 2007, and astrologytree.net
    http://parppu.blogspot.com/////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////கோவி.கண்ணன் said...
    //Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?//
    இஞ்ச் டேப் இருந்தால் அளந்து பார்த்து சொல்லிவிடலாம். :)/////

    உசத்தி என்பதற்கு உயரம் என்று பொருளா? எந்த ஊரில்? நாகையிலா? சிங்கையிலா?

    ReplyDelete
  10. காலை வணக்கம். email.80.கான பதில் சூப்பர் வாத்தியார் டச்.

    ReplyDelete
  11. /////DHANA said...
    காலை வணக்கம். email.80.கான பதில் சூப்பர் வாத்தியார் டச்.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  12. அய்யா இனிய காலை வணக்கம்.

    என் கேள்வி கொக்கி கேள்வி ஆக அமைய கூடாது என்பதற்க்காக தான் அய்யா பொதுவாக கேட்டேன்.,,,,'எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள்'
    என்று கூறீஉள்ளீர்கள் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது பொய்யா மொழி
    அல்லவா .....
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  13. Good Morning Sir!

    The way you answered is really appreciative.

    ReplyDelete
  14. பதில் as usual very informative மிக்க நன்றி.

    ஓரு சந்தேகம் ஆசானே,
    ரிஷப லக்னம், 4ல் சுக்ரன் சிம்மதில் (பகை)looks like கேந்திராதிபத்ய தோஷம். இந்த அமைப்புக்கு சுக்ரன் சுளுக்கெடுத்துவிடுவாரா?

    9ல் இருக்கும் நீச்ச குருவால் இந்த லக்னகாரருக்கு 5ம் பார்வையால் எதேனும் பலன்/தோஷ நிவர்த்தி என்று சொல்லமுடியுமா ? ஆசானே

    ReplyDelete
  15. Dear sir,

    Present today class.

    Have one doubt sir. If 12 house god placed in 8th house, and aspect by lord of 6 th house from 2nd house. That is the case somehow 12/8/6 houses involved. Is this scenario will come under vibareetha raja youga? else what is the effect of this scenario sir...

    The word you says about wife and children is 100% true. Very good advice to the youngsters like me. thanks a lot.

    ReplyDelete
  16. Good Morning sir,
    Nice question and answer session sir.
    Happy Republic Day.
    Best Regards,
    J.SENDHIL

    ReplyDelete
  17. astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    என் கேள்வி கொக்கி கேள்வி ஆக அமைய கூடாது என்பதற்க்காக தான் அய்யா பொதுவாக கேட்டேன்.,,,,'எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள்'
    என்று கூறீஉள்ளீர்கள் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது பொய்யா மொழி அல்லவா .....
    நன்றி வணக்கம்/////

    நானும் பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் என்ற பதத்துடன் அந்தப் பத்தியைத் துவங்கியிருப்பதைக் கவனியுங்கள். தேவைக்குப் பொருள் தேடுவது வேறு.ஆசைக்குப் பொருள் தேடுவது வேறு.

    ’யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்” குறள் எண் 341

    அதே பொய்யாமொழிப் புலவர் தான் இதையும் கூறியுள்ளார்.
    (ஒருவன் எந்தெந்தப் பொருள்களிருந்து பற்றை நீங்கினானோ, அந்தப் பொருட்களால் அவன் துன்பம் அடையமாட்டானாம்!)

    ReplyDelete
  18. //////NARESH said...
    Good Morning Sir!
    The way you answered is really appreciative./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  19. /////சிங்கைசூரி said...
    பதில் as usual very informative மிக்க நன்றி.
    ஓரு சந்தேகம் ஆசானே,
    ரிஷப லக்னம், 4ல் சுக்ரன் சிம்மதில் (பகை)looks like கேந்திராதிபத்ய தோஷம். இந்த அமைப்புக்கு சுக்ரன் சுளுக்கெடுத்துவிடுவாரா?
    9ல் இருக்கும் நீச்ச குருவால் இந்த லக்னகாரருக்கு 5ம் பார்வையால் எதேனும் பலன்/தோஷ நிவர்த்தி என்று சொல்லமுடியுமா ? ஆசானே/////

    சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல்களும் நிறைய வருகின்றன. பின்னூட்டங்களும் நிறைய வருகின்றன. அவற்றிற்கெல்லாம் ஜாதகம் இல்லாமல் ஒப்புக்காக பதில் சொல்ல மனமும் இல்லை.
    முழுமையான ஜாதகம் (அஷ்டகவர்க்கம், மாந்தியின் நிலைப்பாடு ஆகியவையும் உள்ளது) அல்லது முழுமையான பிறப்பு விவரம் (Date of birth, time of birth and place of birth) ஆகியவற்றைக் கேட்டுவாங்கிப் பதில் சொல்ல நேரமுமில்லை. ஆகவே அவற்றைத் தவிர்க்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட ஜாதகங்களுக்காக ஒரு session ஐ எனது ஜோதிட நூல்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு வேலைகள் முடிந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளேன். முறையான அறிவிப்பு பின்னால் வரும் அனைவரும் பொறுத்திருக்கவும்!

    ReplyDelete
  20. /////Anbu said...
    Dear sir,
    Present today class.
    Have one doubt sir. If 12 house god placed in 8th house, and aspect by lord of 6 th house from 2nd house. That is the case somehow 12/8/6 houses involved. Is this scenario will come under vibareetha raja youga? else what is the effect of this scenario sir...////

    ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருப்பதுதான் விபரீத ராஜ யோகம். நீங்கள் சொல்லும் அமைப்பு அல்ல!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    The word you says about wife and children is 100% true. Very good advice to the youngsters like me. thanks a lot./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  21. ////dhilse said...
    Good Morning sir,
    Nice question and answer session sir.
    Happy Republic Day.
    Best Regards,
    J.SENDHIL////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  22. பண்டைய ஜோதிட நூலான வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகத்தில் 7 கிரகங்களுக்குத்தான் இடமளிக்கப் பட்டிருக்கிறது. ராகு கேதுக்களைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை. அவர் காலத்தில் ராகு கேதுக்கள் கிரக அந்தஸ்தைப் பெறவில்லையா அல்லது அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை. ராகு கேதுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத ஜோதிடர்களும் இன்றைய கால கட்டத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  23. காலை வணக்கம்.....
    சும்மா நசுணு இருந்தாது கடைசி கேள்விக்கு பதில் ....

    அன்புடன்
    ரத்தினவேல்

    ReplyDelete
  24. /////ananth said...
    பண்டைய ஜோதிட நூலான வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகத்தில் 7 கிரகங்களுக்குத்தான் இடமளிக்கப் பட்டிருக்கிறது. ராகு கேதுக்களைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை. அவர் காலத்தில் ராகு கேதுக்கள் கிரக அந்தஸ்தைப் பெறவில்லையா அல்லது அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை. ராகு கேதுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத ஜோதிடர்களும் இன்றைய கால கட்டத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.//////

    தமிழில், புராதண ஜோதிட நூல்களான ‘புலிப்பாணி ஜோதிடம்’, அகத்தியரின் ‘ குமாரசுவாமியம்’ போன்ற நூல்களில் எல்லாம் ராகுவும், கேதுவும் உள்ளன. நம்மைப் பொறுத்தவரை, அவைகள் இடைச் சொருகல் அல்ல!
    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  25. /////Alasiam G said...
    Present Sir.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  26. //////Rathinavel.C said...
    காலை வணக்கம்.....
    சும்மா நச்சுணு இருந்தது கடைசிக் கேள்விக்குப் பதில் ....
    அன்புடன்
    ரத்தினவேல்/////

    நல்லது.நன்றி ரத்தினவேல்!

    ReplyDelete
  27. திரு கிருஷ்னன் கொடுத்த கிரக அவஸ்தைகளுக்கான சுட்டியை பலன்களைப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். கணிக்கும் வேளையை இப்போதுள்ள மென் பொருள்கள் செய்து விடுகின்றன. உதாரணம் ஜகந்நாத ஹோரா. அது இந்த 5 வகையான அவஸ்தைகளையும் அதன் உட் பிரிவுகளும் தனித் தனியாக கணித்து காட்டுகிறது.

    ReplyDelete
  28. Vaathiyariya,

    Thanks for your responses today.

    Guru gets the Kendra Adhipati Dosa for Miduna Lakinam as being the lord of 7th and 10th (double dosham)

    Normally, Compared to other Graghas like sukiran, pudhan and moon the effect of Guru should be less as being the No:1 Benefic in nature? or Guru is also not an exceptional to this dosham ?.

    If Guru in miduna Laknam itself and aspects his own house (as 7th place ) still this dosam exists ?

    As vaathiyar replied that there will be a dedicated posting on this, it is better to wait for that one to know more

    Thanks
    Rajan

    ReplyDelete
  29. அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    பணக்காரனாக இருந்தால் மட்டும் போதாது
    அதை அனுபவிக்கும் யோகமும் வேண்டும்
    என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், மிக்க நன்றி
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  30. ஆனந்த் அண்ணா .

    உதாரணம் ஜகந்நாத ஹோரா. அது இந்த 5 வகையான அவஸ்தைகளையும் அதன் உட் பிரிவுகளும் தனித் தனியாக கணித்து காட்டுகிறது.

    இந்த ஆப்சன் க்கு எப்படி போகிறது தெரியலை அண்ணா அத சொல்லுங்க ஜாகநாத ஹோர ல எனக்கு கிடைகவில்லை .....

    ReplyDelete
  31. சார் வணக்கம,
    ஐயா இன்று பாடம் நன்றாக இருந்தது தங்கள் பதிலாளிக்கும் நடையே தனிப்பட்ட‌
    நடைதான் தங்கள் அளிக்கும் உதாரணம் நல்ல நெற்றி அடி மாதரியும் நகைச்சுவையாகவுமிருந்தது. ரொம்ப சிரிப்பாயிருக்கிறாது அந்த கிருஷ்ணன் சகோதரரும் ம்ற்ற ச்கோதரர்களும் ரொம்பநல்ல் தங்களின் பொன்னா நேரங்களை
    செலவிட்டு நல்ல பின்னோட்டங்களை இடுகின்றார்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத்தெரிவித்து கொள்கிறேன். ஐயா தங்கள் ஜாதக சம்மந்தமான பின்னேர்ட்டங்களை ஜாதக புத்தகத்தில் சேர்த்து விடுங்கள்.
    சுந்தரி

    ReplyDelete
  32. பொன்மொழிகள்:
    1. நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதே,நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழியாகும்.
    2.நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள், தாமதமின்றி உடனே
    நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
    3. தன்னம்பிக்கை,துணிச்சல்,தெளிவு இந்த முன்றும்தான் ஒருவனை எப்போதும்
    காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.
    4.களங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்(அஞ்சத நெஞ்சம் வேண்டும்).
    5.அன்பின் நேக்கம் உடைமையில் உரிமை கோருவதல்ல, அன்பு உன்னையே
    காணிக்கையாகத்த‌ருவதுதான் அன்பு கொள்வதின் பொருளாகும்.

    ReplyDelete
  33. Hi Dear Brother Alosiam,
    How r u how is ur health. u told us like this i returned back to homefrom sabarimala(ayyappan temple).
    i got cold fever. Now how is ur health. Take care ur health Did u consult doctor. Did u take medicine.
    WISH U SPEEDY RECOVERY DEAR BROTHER.
    sundari.p

    ReplyDelete
  34. //////ananth said...
    திரு கிருஷ்ணன் கொடுத்த கிரக அவஸ்தைகளுக்கான சுட்டியை பலன்களைப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். கணிக்கும் வேலையை இப்போதுள்ள மென்பொருள்கள் செய்து விடுகின்றன. உதாரணம் ஜகந்நாத ஹோரா. அது இந்த 5 வகையான அவஸ்தைகளையும் அதன் உட் பிரிவுகளும் தனித் தனியாக கணித்து காட்டுகிறது./////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  35. /////Rajan said...
    Vaathiyariya,
    Thanks for your responses today.
    Guru gets the Kendra Adhipati Dosa for Miduna Lakinam as being the lord of 7th and 10th (double dosham) Normally, Compared to other Graghas like sukiran, pudhan and moon the effect of Guru should be less as being the No:1 Benefic in nature? or Guru is also not an exceptional to this dosham ?.
    If Guru in miduna Laknam itself and aspects his own house (as 7th place ) still this dosam exists ?
    As vaathiyar replied that there will be a dedicated posting on this, it is better to wait for that one to know more
    Thanks
    Rajan/////

    குரு தோஷம் அடைந்ததற்கான பலன்களைச் செய்ய மாட்டார் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? பிறகு அவர் தோஷம் அடைந்ததற்கான அர்த்தம் என்ன?

    ReplyDelete
  36. /////ஜீவா said..////
    அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    பணக்காரனாக இருந்தால் மட்டும் போதாது
    அதை அனுபவிக்கும் யோகமும் வேண்டும்
    என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், மிக்க நன்றி
    அன்புடன் ஜீவா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  37. /////astroadhi said...
    ஆனந்த் அண்ணா .
    உதாரணம் ஜகந்நாத ஹோரா. அது இந்த 5 வகையான அவஸ்தைகளையும் அதன் உட் பிரிவுகளும் தனித் தனியாக கணித்து காட்டுகிறது. இந்த ஆப்சன் க்கு எப்படி போகிறது தெரியலை அண்ணா அதைச் சொல்லுங்க ஜாகநாத ஹோராவில் எனக்கு கிடைக்கவில்லை .....//////

    நான் ஜகந்நாத ஹோராவை உபயோகிப்பதில்லை. அதோடு அதில் தேடிப்பார்த்து உங்களுக்குப் பதில் சொல்வதற்குத் தற்சமயம் நேரம் இல்லை. நண்பர் ஆனந்த் உங்களுக்கு உதவுவார். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  38. ///sundari said...
    சார் வணக்கம,
    ஐயா இன்று பாடம் நன்றாக இருந்தது தங்கள் பதிலாளிக்கும் நடையே தனிப்பட்ட‌ நடைதான் தங்கள் அளிக்கும் உதாரணம் நல்ல நெற்றி அடி மாதரியும் நகைச்சுவையாகவுமிருந்தது. ரொம்ப சிரிப்பாயிருக்கிறாது அந்த கிருஷ்ணன் சகோதரரும் மற்ற சகோதரர்களும் ரொம்பநல்ல் தங்களின் பொன்னா நேரங்களை
    செலவிட்டு நல்ல பின்னோட்டங்களை இடுகின்றார்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத்தெரிவித்து கொள்கிறேன். ஐயா தங்கள் ஜாதக சம்மந்தமான பின்னேர்ட்டங்களை ஜாதக புத்தகத்தில் சேர்த்து விடுங்கள்.
    சுந்தரி////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  39. ////sundari said...
    பொன்மொழிகள்:
    1. நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதே,நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழியாகும்.
    2.நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள், தாமதமின்றி உடனே
    நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
    3. தன்னம்பிக்கை,துணிச்சல்,தெளிவு இந்த முன்றும்தான் ஒருவனை எப்போதும்
    காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.
    4.கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்(அஞ்சாத நெஞ்சம் வேண்டும்).
    5.அன்பின் நேக்கம் உடைமையில் உரிமை கோருவதல்ல, அன்பு உன்னையே
    காணிக்கையாகத்த‌ருவதுதான் அன்பு கொள்வதின் பொருளாகும்./////

    உங்கள் பொன்மொழிகளுக்கு நன்றி!

    ReplyDelete
  40. Dear sir,
    Thanks for a very big confusion clarification, i.e. about Vakiya panchangam calculation or Thiru kanitha panchangam calculations.
    now i tried with jagannatha Hora site, in that in preferences - ayanamsa there is an option whether it is lahri or raman, after changing that to raman still my original chart is getting differed. ( in my original chart lagna - Mesham, 4th house in katakam - mars is placed and in 10th house - Magaram - sani is placed, even after changing into raman ayanamsa in Jagannath - mars have gone to Mithunam - 3rd place and Sani is shifted to 11th house Kumbam, in other soft ware which is calculated accordng to Lahri / Thiru kanitham,it also shows the same Sani in 11th house Kumbam and Mars is in 3rd house Mithunam). please explain what all changes / procedures to be followed for getting correct as per Vakiya panchangam calculations (Raman's). or will it not be possible with Jagannath Hora. also guide us whether we have to do it with some other software / site.
    Thanks- Sakthi Ganesh.

    ReplyDelete
  41. Sakthi Ganesh said...
    Dear sir,
    Thanks for a very big confusion clarification, i.e. about Vakiya panchangam calculation or Thiru kanitha panchangam calculations.
    now i tried with jagannatha Hora site, in that in preferences - ayanamsa there is an option whether it is lahri or raman, after changing that to raman still my original chart is getting differed. ( in my original chart lagna - Mesham, 4th house in katakam - mars is placed and in 10th house - Magaram - sani is placed, even after changing into raman ayanamsa in Jagannath - mars have gone to Mithunam - 3rd place and Sani is shifted to 11th house Kumbam, in other soft ware which is calculated accordng to Lahri / Thiru kanitham,it also shows the same Sani in 11th house Kumbam and Mars is in 3rd house Mithunam). please explain what all changes / procedures to be followed for getting correct as per Vakiya panchangam calculations (Raman's). or will it not be possible with Jagannath Hora. also guide us whether we have to do it with some other software / site.
    Thanks- Sakthi Ganesh.////

    You can download and use the software given by our classroom student Karur Thiagarajan for which the URL link is available in the bottom of the blog

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com