மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.1.10

Doubt: யாருடைய ஆதிக்கம் செல்லும்?

படகு கவிழாது. ஆசாமிக்கு ஆயுள்காரகன் உச்சமாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யாருடைய ஆதிக்கம் செல்லும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 17

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினேழு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.67
முருகன் அடிமை சரவணன்

மரியாதைக்குரிய வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
இரண்டு சந்தேகங்கள். கேட்கலாமா?

1.அதாவது,என் ஜாதகத்தில்,மீன லக்னம் நான்கில் செவ்வாய் ஐந்தில் சூரியன் ராகு ஆறில் புதன்ஏழில் குரு சுக்கிரன் சனி பதினொன்றில் சந்திரன் கேது சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருந்தால் சூரிய கிரகணத்தில் பிறந்ததாக அர்த்தம் என்று எதிலோ படித்த ஞாபகம். ஆனால் என் ஜாதகத்தில் சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் இணைந்திருக்கிறது. இது என்ன வகை என்று சொல்லுங்களேன்?

உடல்காரகன் சூரியனுடன் ராகுவும், மனகாரகன் சந்திரனுடன் கேதுவும் சேர்ந்திருப்பது நல்ல வகையாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது:-))))))

ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு:
1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)

2.ஒரு ஜாதகன் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்கமா அல்லது பெண்ணாதிக்கமா என்பதைக் கண்டறிய வாய்ப்பிருக்கிறதா?
நன்றியுடன்,
முருகன் அடிமை சரவணன்

அது அமையும் மனைவியைப் பொறுத்து உள்ளது. பெண் சகிப்புத்தன்மை உடையவர் என்றால் ஆணாதிக்கத்தைப் பொறுத்துக்கொள்வார். இல்லையென்றால், ஆதிக்கம் செய்பவர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று உதை வாங்க வேண்டியதிருக்கும்.

ஜாதகத்தில் லக்கினத்தைவிட 7ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். இல்லை என்றால் நீங்கள் நல்ல கணவனாக இருக்க வேண்டியதுதான். புரிந்ததா?
----------------------------------------------------
email.No.68
S.குமார். ஈரோடு.

ஐயா,
கேள்வி கேட்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.
எனது கேள்விகள் .
1) பொது தொண்டு செய்யும் எண்ணம் யார் யாருக்கெல்லாம் அமையும்? 2) லக்ன அதிபதியும் , 5 ம் இட அதிபதியும் கேந்தரத்தில் இருந்தால் இந்த அமைப்பு உண்டா?

பொதுத்தொண்டில் இரண்டுவகைகள் உள்ளன. பணத்தைச் செலவழித்துச் செய்யும் தொண்டுகள். பணம் இல்லாமல் உடல் உழைப்பை வைத்துச் செய்யப்படும் தொண்டுகள். இரண்டிற்குமே முதலில் நல்ல மனம் வேண்டும். அதற்கு ஜாதகத்தில் மனகாரகன் சந்திரனும், ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். அத்துடன் கர்மகாரகன் சனியும் நன்றாக இருப்பவர்கள் உடல் உழைப்பால் பொதுத் தொண்டுகளைச் செய்வார்கள்.

பணத்தை வைத்து பல தர்மங்களைச் செய்வதற்கு, 1, 5, 9ஆம் வீடுகளும் அதன் அதிபதிகளும் நன்றாக இருக்க வேண்டும்! அப்படி அமைப்புள்ள ஜாதகங்கள் தர்ம ஜாதகம் எனப்படும்!
-------------------------------------
email.No.69
கோபி கார்த்திகேயன், வடினார், குஜராத்

MY DOUBTS:
1) 6,8,12 VEEDUGALIN ADHIBHADHIGAL ENGU SENDRU AMARNDHALUM NANMAI ILLAI OK.
SURIYAN CHANDHIRAN ai THAVIRA SEVVAI, SUKRAN, BHUDHAN, GURU, & SANI KU THALA 2U VEEDUGAL ALLAVA. 6,8,12 VEEDUGAL INDHA 5 GRAHANGALIL 1 in VEEDAGA IRUNDHU MATRORU VEEDU NANMAI PAYAKUM VEEDAGA IRUNDHAL ENNA PALAN KIDAIKUM AYYA..

EXAMPLE: FOR MIDHUNA LAGNAM SUKRAN, 5TH (POORVAPUNYA) & 12TH (LOSS) VEETIN ADHIBHADHI APDI IRUKA AVAR ENGU SENDRU AMARNDHALUM THEEMAI ENDRUM NANMAI ENDRUN KOORA MUDIYADHU ALLAVA? MIXED RESULT KIDAIKUMA? NANMAI MATTUMAE KIDAIKA VAENDUM ENDRAL AVAR 5 il AATCHI PERA VAENDUMA?

கலவையான பலன்கள் கிடைக்கும்! உங்கள் மொழியில் சொன்னால் Mixed Results

2) 6,8,12 AGIYA VEEDUGAL MARAIVIDANGAL OK. ANGU SUBHA GRAHANGAL AMARAKOODADHU OK. AMARNDHAL NANMAI ku MARAGA THEEMAI PAYAKUM ALLAVA. ANDHA MARAIVIDANGALIL ASUBHA GRAHANGAL AMARNDHAL THEEMAI IRATIPPU (DOUBLE) AGUMA?

ஆமாம். அதன் வலிமையைப் பொறுத்து அளவு வேறுபடும்!

3) 8il SEVVAI AMARNDHAL MATHIMA VAYADHILAEYAE SIVANADI SAERA NAERIDUM ENDRU KOORI IRUNDHEERGAL. 8 am VEETIN ADHIBHADHI UCHCAM PETRALO, 8 il SEVVAI UCHCHAM PETRALO MAERKOORIYA PALAN ADIPATTU POGUMA? ILLAI ADHAI VIDA SERIOUS MATTER AAGIVIDUMA AYYA.

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் இன்னும் எழுதவில்லை. இதெல்லாம் அதில் வரும். பொறுத்திருங்கள்!
--------------------------------------------
email.70
செந்தில்குமார் செல்வராஜன்

ஐயா வணக்கம்
Thanks for Question & Answer Part,
Q1. When you published printed books ( Astrology Subject)?

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிவரும். அச்சாகி வந்தவுடன் முறையான அறிவிப்பு பதிவில் வெளிவரும். பொறுத்திருங்கள்!

Q2. தாங்கள், பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார். என்று கூறியுள்ளிர்கள். In விருச்சக லக்கினத்திற்கு tenth house சிம்ம லக்னம் [27]. இங்கு சூரியன் [7] மற்றும் சனி [6]. இங்கு சூரியன் உச்சம் பெற்று இருந்தாலும் , துன்பங்கள் ஏற்படுமா? in second house Guru[6] also atchi.

பொதுவிதியை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். எந்தகிரகமும் உச்சமாகியும், அதிக பரல்களுடனும் இருந்தால், விதிவிலக்கு உண்டு. லக்கின அதிபதி அதிபதி செவ்வாய் எங்கே இருக்கிறார்? அவர் முக்கியமில்லையா? இங்கு சூரியன் என்றால் எங்கே? நீங்கள் சொல்லியுள்ளபடி சூரியன் சிம்மத்தில் இருக்கிறார் என்றால், அவர் அங்கே எப்படி உச்சம் பெறுவார்? சூரியன் உச்சமாவது மேஷத்தில் அல்லவா? என்ன குழப்பம். சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டாமா?

Q3. Please Explain - Ragu Dasu - செவ்வாய் புத்தியில் சுய தொழில் தொடங்கலாமா?

பணம் இல்லாத சுய தொழில் என்றால் எப்போது வேண்டுமென்றாலும் துவங்கலாம். பண முதலீட்டுடன் சுய தொழில் என்றால், ராகு தசையில் வேண்டாம்!

Q4. in rasi chart - Guru[5] & chandran [7] in first house - ரிஷபம் [32] but here guru is enemy, இந்த ஜாதகருக்கு guru dasa நல்லபடியாக இருக்குமா?

குரு ஐந்து பரல்களுடன் இருப்பதால் குரு தசை நன்மைகளை உடையதாக இருக்கும்! அத்துடன் ரிஷபத்தில் சந்திரன் உச்சம். அவருடைய புத்தியும் நன்மைகளை உடையதாக இருக்கும்!
-------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

38 comments:

  1. குருவே !!!

    அதிகாலை பொழுது வணக்கம்.

    மாதா,பிதா விற்க்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள குருவே!

    தாங்கள் பதில் கூறி உள்ளத்தில் E - மெயில் எண் 68 க்கு

    இந்தவகை ஜாதக அமைப்பு உள்ள ஜாதகனை(2 அமைப்பும் சேர்ந்த)பற்றி ஐயா! கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும் அடியேனின் அன்பு வேண்டுகோள்!

    பொதுத்தொண்டில் இரண்டுவகைகள்

    1. பணத்தைச் செலவழித்துச் செய்யும் தொண்டுகள்.

    2.பணம் இல்லாமல் உடல்உழைப்பை வைத்துச் செய்யப்படும் தொண்டுகள்.

    இரண்டிற்குமே முதலில் நல்ல மனம் வேண்டும்.
    அதற்கு ஜாதகத்தில் மனகாரகன் சந்திரனும், ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். அத்துடன் கர்மகாரகன் சனியும் நன்றாக இருப்பவர்கள் உடல் உழைப்பால் பொதுத் தொண்டுகளைச் செய்வார்கள்.

    பணத்தை வைத்து பல தர்மங்களைச் செய்வதற்கு, 1, 5, 9ஆம் வீடுகளும் அதன் அதிபதிகளும் நன்றாக இருக்க வேண்டும்! அப்படி அமைப்புள்ள ஜாதகங்கள் தர்ம ஜாதகம் எனப்படும்!

    ReplyDelete
  2. இனிய காலை வணங்கம் சார்,

    யாருடைய ஆதிக்கம் செல்லும்? எனக்கும் ஏலாம்(30) வீடு பரல்கள் லக்னத்தை(27) விட கூட. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!!!!

    நன்றி
    தனுஜா

    ReplyDelete
  3. விருச்சிக ராசி ( அனுஷ நக்ஷத்திரம்) துலா லக்னத்தில் பிறந்த ஒரு மூதாட்டிக்கு தற்பொழுது சந்திர தசை புதன் புக்தி நடக்கிறது.
    சனி 8ல் ( ரிஷபம்), குரு 9ல் (மிதுனம்) , சூரியன், சனி, ராகு 11ல் (சிம்மம்), செவ்வாய், புதன் 12ல் (கன்னி) யிலும் கும்பத்தில் கேதுவும்
    விருச்சிகத்தில் சந்திரனும் உள்ளன. பிறந்த தேதி : 16:09:1942 காலை 9 மணி. இடம்: குடந்தை.

    10க்குடைய சந்திரன் 2 ல் நீசமாக இருப்பதுடன், விரயாதிபன் ஆன புதன் புக்தியும் நடக்கிறது.
    மன உளைச்சல்களால் ( panic, anxiety disorders ) பெரிதும் சிரமப்படுகிறார்.
    மருந்துகள் அவ்வளவு பலன் தரவில்லை. பரிகாரங்கள் ஏதேனும் பயன் தருமா ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. மரியாதைக்குரிய வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
    எனது கேள்வியை வெளியிட்டு அதற்கு சிறந்த முறையில் பதில் அளித்தமைக்காக என் மனமார்ந்த நன்றிகளை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றியுடன்,
    முருகன் அடிமை சரவணன்

    ReplyDelete
  5. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////kannan said...
    குருவே !!! அதிகாலை பொழுது வணக்கம்.
    மாதா,பிதா விற்க்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள குருவே!
    தாங்கள் பதில் கூறி உள்ளத்தில் E - மெயில் எண் 68 க்கு இந்தவகை ஜாதக அமைப்பு உள்ள ஜாதகனை(2 அமைப்பும் சேர்ந்த)பற்றி ஐயா! கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும் அடியேனின் அன்பு வேண்டுகோள்!//////

    இரண்டு அமைப்புக்களும் சேர்ந்து இருக்காது! Good Health இருந்தால் wealth இருக்காது; wealth இருந்தால் Good Health இருக்காது. அப்படித்தான் இதுவும்!

    ReplyDelete
  7. ////Thanuja said...
    இனிய காலை வணங்கம் சார்,
    யாருடைய ஆதிக்கம் செல்லும்? எனக்கும் ஏழாம்(30) வீடு பரல்கள் லக்னத்தை(27) விட கூட. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!!!!
    நன்றி
    தனுஜா/////

    அதெல்லாம் பயப்படாதீர்கள். முதல் மூன்று வருடம் சிதம்பரம் நடராஜர் ஆட்சி. அதற்குப் பிறகு மதுரை மீனாட்சி ஆட்சிதான் (கடைசிவரைக்கும்):-)))))

    ReplyDelete
  8. ////sury said...
    விருச்சிக ராசி ( அனுஷ நக்ஷத்திரம்) துலா லக்னத்தில் பிறந்த ஒரு மூதாட்டிக்கு தற்பொழுது சந்திர தசை புதன் புக்தி நடக்கிறது. சனி 8ல் ( ரிஷபம்), குரு 9ல் (மிதுனம்) , சூரியன், சனி, ராகு 11ல் (சிம்மம்), செவ்வாய், புதன் 12ல் (கன்னி) யிலும் கும்பத்தில் கேதுவும் விருச்சிகத்தில் சந்திரனும் உள்ளன. பிறந்த தேதி : 16:09:1942 காலை 9 மணி. இடம்: குடந்தை. 10க்குடைய சந்திரன் 2 ல் நீசமாக இருப்பதுடன், விரயாதிபன் ஆன புதன் புக்தியும் நடக்கிறது. மன உளைச்சல்களால் ( panic, anxiety disorders ) பெரிதும் சிரமப்படுகிறார்.
    மருந்துகள் அவ்வளவு பலன் தரவில்லை. பரிகாரங்கள் ஏதேனும் பயன் தருமா ?
    சுப்பு ரத்தினம்.//////

    இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம். ஒளவையார் அருளிய விநாயகர் அகவலைப் படிக்கச்சொல்லுங்கள்.
    அல்லது கந்த சஷ்டிக்கவசத்தைப் படிக்கச்சொல்லுங்கள். தினமும் இரண்டு முறை. காலையிலும், மாலையிலும். மன அமைதி கிடைக்கும்

    ReplyDelete
  9. Nan thirumanam ana uravinargal silar Jathagathai Parthen...Athil 1 Jodiku Kanavan,Manaivi 2 perukumey 7am Idathai vida Lagnathil Paralkal athigam..Appidi irunthal palan enna ayya?

    ReplyDelete
  10. Good After noon sir,
    Thanks for the answers given email.no 64 dated 21.1.2010. Kindly excuse sir, to send a belated thanks. Because I have also out of station for the past two days.
    Answer for question no 2 - I agree with you sir.(Satisfactory).
    Answer for question no 1 - I need some clarification sir. This question I asked from "Pulipani Siddhar song". It has been mentioned that "No exaltation power, the native will live on this earth in a poverty line(Dharithira nilai)".
    A caution is metioned in that song:
    To tell before,see the strength of the houses 2,4 and 12.
    What is your view sir?
    I once again thak you for giving the answer.
    Still I am waiting for your reply for the two more mails on doubt which I have already sent.
    Thank you sir,
    J.SENDHIL

    ReplyDelete
  11. வணக்கம் அய்யா ,

    கேள்வி பதில் பிரமாதம் ,,,,,
    நன்றி ...

    ReplyDelete
  12. பதில்கள் நல்ல தெளிவு. பல ஜாதகங்களைப் பார்த்த அனுபவத்தில் ஒன்று தெரிகிறது.ராசிக் காட்டத்தில் நீச‌ம் பெற்ற கிரஹத்திற்கு சுய வர்க பரல் 5க்குக் குறையாமல் இருக்கிறது.உச்சம் பெற்றதற்கு 2,3 என்று குறைந்து விடுகிறது.
    இது என்ன மாயமோ

    ReplyDelete
  13. அன்பு அய்யாவுக்கு வணக்கம் ,
    கேள்விகளுக்கு பதில்கள் மிக அருமை.
    வாழ்க வளமுடன்
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  14. /////Strider said...
    Nan thirumanam ana uravinargal silar Jathagathai Parthen...Athil 1 Jodiku Kanavan,Manaivi 2 perukumey 7am Idathai vida Lagnathil Paralkal athigam..Appidi irunthal palan enna ayya?/////

    அப்படி இருந்தால், இருவரும் ஒருவருக்கொருவர் சரி பண்ணிக்கொண்டு போய் விடுவார்கள்!

    ReplyDelete
  15. /////dhilse said...
    Good After noon sir,
    Thanks for the answers given email.no 64 dated 21.1.2010. Kindly excuse sir, to send a belated thanks. Because I have also out of station for the past two days.
    Answer for question no 2 - I agree with you sir.(Satisfactory).
    Answer for question no 1 - I need some clarification sir. This question I asked from "Pulipani Siddhar song". It has been mentioned that "No exaltation power, the native will live on this earth in a poverty line(Dharithira nilai)".
    A caution is metioned in that song:
    To tell before,see the strength of the houses 2,4 and 12.
    What is your view sir?
    I once again thak you for giving the answer.
    Still I am waiting for your reply for the two more mails on doubt which I have already sent.
    Thank you sir,
    J.SENDHIL/////

    நானும் படித்திருக்கிறேன்.புலிப்பாணியின் பாடல்கள் எல்லாம் பொதுப்பலன்களைக் குறிக்கும்! அதை வைத்துக் கொண்டு குழம்பாதீர்கள்!

    ReplyDelete
  16. ////astroadhi said... வணக்கம் அய்யா ,
    கேள்வி பதில் பிரமாதம் ,,,,,
    நன்றி ...///

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  17. /////kmr.krishnan said...
    பதில்கள் நல்ல தெளிவு. பல ஜாதகங்களைப் பார்த்த அனுபவத்தில் ஒன்று தெரிகிறது.ராசிக் காட்டத்தில் நீச‌ம் பெற்ற கிரஹத்திற்கு சுய வர்க பரல் 5க்குக் குறையாமல் இருக்கிறது.உச்சம் பெற்றதற்கு 2,3 என்று குறைந்து விடுகிறது.
    இது என்ன மாயமோ//////

    ஒரு கிரகம் உச்சமோ அல்லது நீசமோ, ஜாதகத்தில் அதன் வேறு அமைப்புக்களையும் வைத்து பலன்கள்/பரல்கள் இருப்பதால், அந்த நிலைமை உண்டாகும் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  18. ////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம் ,
    கேள்விகளுக்கு பதில்கள் மிக அருமை.
    வாழ்க வளமுடன்
    அன்புடன் ஜீவா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  19. ஐயா!

    தாங்கள் பதில் அளிக்கும் அழகே! தனி அழகுதான்!

    (E - மெயில் எண் 68 க்கு)
    இரண்டு அமைப்புக்களும் சேர்ந்து இருக்காது! Good Health இருந்தால் wealth இருக்காது; wealth இருந்தால் Good Health இருக்காது. அப்படித்தான் இதுவும்!

    நடைமுறை வாழ்க்கைக்கும் 100 % பொருந்தும் பதில்.

    எனது 8th & 9th Std கணித ஆசிரியை திருமதி வள்ளியம்மாள் அவர்கள். (அம்மையார் போல் கிடைக்க அரிது)

    தேர்வுகள் (Exam) வைத்து, பின்னர் விடைகளை திருத்த மாணவர்கள் ஆகிய எங்களிடமே தருவார்கள்.

    சரியான விடை எழுத்து பலகையில் (Blackboard) இருக்கும்.

    ஒரு தத்துவத்தை ( Logic) சொல்லித்தந்தார்கள். அதாவது

    1 . நீ தவறு செய்து இருந்தால் அந்த தவறை, உனது கையாலே!!! நீயே திருத்திக்கொள்ள உனக்கு ஒரு அறிய வாய்ப்பு .

    2. நீ என்னை ஏமாற்றலாம் என்று நினைக்காதே! நீ உன்னைத்தான் முதலில் ஏமாற்றி (கொல்) கின்றாய்.

    முக்கியமாக

    3.நீ யார்!
    நீ எங்கு உள்ளாய்,
    உனது தகுதி எந்த அளவில் உள்ளது
    நீ இன்னும்என்னசெய்ய வேண்டும்
    நீ இன்னும் என்ன செய்தால், உண்மையான பதிலை(விடையை) அடையலாம் என்பார்கள் ஐயா!

    4. மற்றவர்கள் தவறு செய்தார்கள் என்று உனது ஆள்காட்டி விரலை அவர்களை நோக்கி நீட்டும் முன்னர்,

    நீ சரியாக உள்ளாயா என்று உனது ஆள்காட்டி விரலை உன்னை நோக்கி நீட்டிபார் என்பார்கள் எனது திருமதி அம்மையார் அவர்கள்.

    இங்கும் (வாத்தியாரின் வகுப்பு அறையில்) அடியேன், ஐயா கூறும் பதிலில் எந்த அளவுக்கு அடியேனுக்கு பொருந்துகின்றது என்பதனை சரிபார்த்துக்கொண்டு தான் வருகின்றேன் ஐயா!

    அதனால்தான் சந்தேகம் கூட கேட்பது, ஐயா பெரும்தகையே!!!

    ReplyDelete
  20. சார், எனக்கு இப்ப சனி தச இருக்கு, அவர் பதினோராம் வீட்டுக்கும், பணண்டாம் வீட்டுக்கும் அதிபதி....முதல் ஒன்பது அரை வருஷம் எல்லாம் சூப்பர் போனது, ஆனால் அடுத்த கட்டம் எனக்கு லாஸ்.. என்ன தான் நல்ல புத்தியும் அந்தரவும் இருந்தல்லும், சின்ன விசைதுகும் நிறைய பயப்பிட நான். கொஞ்சம் கஷ்டம் தான் becoz the 12th house is 12th to lagna.......so it will try to lose confidence and being saturn house, ... it is more intensive...just wanted to tell this my experience...

    Thanks
    Thanuja

    ReplyDelete
  21. Good morning Sir and present for the today lession

    ReplyDelete
  22. Good Evening, i am present for today class sir..

    ReplyDelete
  23. intha 4 amsangalum kalantha jathagam unda?

    udaranamaga 1,5,2,10,3,11,8,12 ahiya intha veedukal mathum valuvaga irunthal intha 4 amsamum antha manitar idam kalanthu irukatha?? avaru irukathu enral adhu enn?

    pothuvaga niyanam enbatharku 5,9,12 ahiya veedukal thaan enru sila jothidarkal kooru kirarkal idhu sariya? avaru sari illai enral adan karanam? 4,8 veedu niyanathuku evaru samantha pattathu?

    neengal 2,11, ahiya veedukalai dhanam enru mundaya postkalai kooru ullirkal.apadi 2,11 veedukal thaan thanam enral 2,6,10 ahiya veedukalai thana jathagam enru kooruvathu enn???

    ReplyDelete
  24. வணக்கம் சார்
    தங்களின் பாடம் மிகவும் நனறாக இருந்தது. ரொம்ப நன்றி ஐயா.
    சில பொன் மொழிகள்.
    1. அந்த ஆறு என்ன?.
    வெற்றி பெற் விரும்புகிறவர்கள். "என்ன? எங்கே? எப்போது? ஏன்? எப்படி? எதற்காக? என்னும் ஆறு முதலாளிகளிடம் தங்கள் பிரச்சினைகளை வைத்தால் பதில் கிடைக்கும்.

    2. தூய்மையான இதயம் கொண்டவர்கள் யாருடைய நம்பிக்கையையும் குலைக்கமாட்டார்கள்.

    3.கோழையால் யாரையும் மன்னிக்க முடியாது. நெஞ்சுறுதி கொண்ட்வர்களே மன்னிக்கும் மாபொரும் குணத்தையும் பெற்றிருப்பார்கள்.(மன்னிப்பவனே வீரன்)

    4. ஏதாவது ஒர் இலட்சியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள் அந்த நம்பிக்கை அறிவுபூர்வமானதாகயிருக்கட்டும்.(நம்பிக்கையின் சக்தி)

    சுந்தரி

    ReplyDelete
  25. ஐயா வணக்கம்,
    அந்தரம் எனறால் என்ன சார்
    தசா தெரியும், புத்தி தெரியும் அந்தரம் தெரியவில்லை
    எடுத்துகாட்டு
    சுக்கிர திசையில் சந்திர புத்தி ஒரு வருஷம் எட்டு மாதங்கள் என்றால்
    சுக்கிர திசை = திசை
    சந்திர புத்தி ஒரு வருடம் =புத்தி
    எட்டு மாதங்கள் (அந்தரமா )
    தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
    சுந்தரி

    ReplyDelete
  26. kannan said...
    ஐயா!
    தாங்கள் பதில் அளிக்கும் அழகே! தனி அழகுதான்!
    (E - மெயில் எண் 68 க்கு)
    இரண்டு அமைப்புக்களும் சேர்ந்து இருக்காது! Good Health இருந்தால் wealth இருக்காது; wealth இருந்தால் Good Health இருக்காது. அப்படித்தான் இதுவும்!
    நடைமுறை வாழ்க்கைக்கும் 100 % பொருந்தும் பதில்.
    இங்கும் (வாத்தியாரின் வகுப்பு அறையில்) அடியேன், ஐயா கூறும் பதிலில் எந்த அளவுக்கு அடியேனுக்கு பொருந்துகின்றது என்பதனை சரிபார்த்துக்கொண்டு தான் வருகின்றேன் ஐயா!
    அதனால்தான் சந்தேகம் கூட கேட்பது, ஐயா பெரும்தகையே!!!////

    நல்லது நன்றி முருகா!

    ReplyDelete
  27. ///Thanuja said...
    சார், எனக்கு இப்ப சனி தசை இருக்கு, அவர் பதினோராம் வீட்டுக்கும், பன்னிரெண்டாம் வீட்டுக்கும் அதிபதி....முதல் ஒன்பது அரை வருஷம் எல்லாம் சூப்பராகப் போனது, ஆனால் அடுத்த கட்டம் எனக்கு லாஸ்.. என்ன தான் நல்ல புத்தியும் அந்தரமும் இருந்தாலும், சின்ன விஷயத்திற்கும் நிறைய பயப்பிட்டேன் நான். கொஞ்சம் கஷ்டம் தான் becoz the 12th house is 12th to lagna.......so it will try to lose confidence and being saturn house, ... it is more intensive...just wanted to tell this my experience...
    Thanks
    Thanuja/////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. /////NARESH said...
    Good Session sir!

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  29. /////Ram said...
    Good morning Sir and present for the today lession////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  30. /////Anbu said...
    Good Evening, i am present for today class sir..////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  31. ////Griffin Auditions said...
    ///// intha 4 amsangalum kalantha jathagam unda?
    udaranamaga 1,5,2,10,3,11,8,12 ahiya intha veedukal mathum valuvaga irunthal intha 4 amsamum antha manitar idam kalanthu irukatha?? avaru irukathu enral adhu enn?////

    இந்த நான்கு அம்சங்களும் கலந்த என்பதைவிட, இந்த 4 அம்சத்திலும் (வகைகளில்) சேராத ஜாதகங்கள்தான் அதிகமாக இருக்கும்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    pothuvaga niyanam enbatharku 5,9,12 ahiya veedukal thaan enru sila jothidarkal kooru kirarkal idhu sariya? avaru sari illai enral adan karanam? 4,8 veedu niyanathuku evaru samantha pattathu?

    நீங்கள் சொல்வது புரியவில்லை. தெளிவாகச் சொல்லுங்கள்! நியனம் என்றால் என்ன?

    ///// neengal 2,11, ahiya veedukalai dhanam enru mundaya postkalai kooru ullirkal.apadi 2,11 veedukal thaan thanam enral 2,6,10 ahiya veedukalai thana jathagam enru kooruvathu enn???////

    2,6,10 ஆகிய வீடுகள் முறையே House of finance, House of servants, House of profession ஆகியவற்றிற்கான வீடு அது மூன்றும் சிறப்பாக அமையப்பெற்ற ஜாதகன்தான் தொழில் செய்து பெரும் பொருள் ஈட்டுவான். இங்கே தனம் எனபது சம்பாதிப்பதைக் குறிக்கும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..

    ReplyDelete
  32. ////sundari said...
    வணக்கம் சார்
    தங்களின் பாடம் மிகவும் நனறாக இருந்தது. ரொம்ப நன்றி ஐயா.
    சில பொன் மொழிகள்.
    1. அந்த ஆறு என்ன?.
    வெற்றி பெற் விரும்புகிறவர்கள். "என்ன? எங்கே? எப்போது? ஏன்? எப்படி? எதற்காக? என்னும் ஆறு முதலாளிகளிடம் தங்கள் பிரச்சினைகளை வைத்தால் பதில் கிடைக்கும்.
    2. தூய்மையான இதயம் கொண்டவர்கள் யாருடைய நம்பிக்கையையும் குலைக்கமாட்டார்கள்.
    3.கோழையால் யாரையும் மன்னிக்க முடியாது. நெஞ்சுறுதி கொண்ட்வர்களே மன்னிக்கும் மாபொரும் குணத்தையும் பெற்றிருப்பார்கள்.(மன்னிப்பவனே வீரன்)
    4. ஏதாவது ஒர் இலட்சியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள் அந்த நம்பிக்கை அறிவுபூர்வமானதாகயிருக்கட்டும்.(நம்பிக்கையின் சக்தி)
    சுந்தரி/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. ////sundari said...
    ஐயா வணக்கம், அந்தரம் எனறால் என்ன சார்? தசா தெரியும், புத்தி தெரியும் அந்தரம் தெரியவில்லை
    எடுத்துகாட்டு சுக்கிர திசையில் சந்திர புத்தி ஒரு வருஷம் எட்டு மாதங்கள் என்றால்
    சுக்கிர திசை = திசை சந்திர புத்தி ஒரு வருடம் =புத்தி எட்டு மாதங்கள் (அந்தரமா )
    தயவு செய்து சொல்லுங்கள் ஐயா. சுந்தரி//////

    அந்தரம் என்பது புத்தியின் உட்பிரிவு. 25 ரூபாயில் பஞ்சாங்கம் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் எல்லாம் இருக்கும்!

    ReplyDelete
  34. எனது கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு மிக நன்றி ஐயா .

    Kumar.S

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்,

    அதிகாலை பொழுது வணக்கம் ஐயா

    தங்களின் பாடம் மிகவும் நன்றாக உள்ளது.

    என்னுடைய பிறந்த தேதி: 22.03.1983,பிறந்த நேரம் : 06:54 am, பிறந்த இடம் : சேலம்
    என் ஜாதகத்தில் மீன லக்கினம்ஒன்றில் சூரியன் புதன்செவ்வாய், இரண்டில் சுக்கிரன், நான்கில்சந்திரன் ராகு, எட்டில் சனிவக்கிரம், ஒன்பதில்குரு, பத்தில்கேது உள்ளது.

    இப்பொழுது சனி திசை சனி புத்தி நடக்கிறது,என் ஜாதகத்தில் சனி (துலாத்தில்) எட்டில் (உச்சம் பெற்று வக்ரம் கதில் உள்ளது) செவ்வாயின் எட்டாம்பார்வையாக சனியை பார்க்கிறார்.. எட்டுக்கு உடையவன் சுக்கிரன் ஏழாம் பார்வையாக சனியை பார்த்தால் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? அவர் தன்சொந்த வீட்டை பார்பதால் சதானபலம் பெற்று ஏதேனும் பிரச்சனை உள்ளதா?


    வீடு வாங்கபோராடி கொண்டிருக்கிறேன்..ஐயா..ஏதேனும்தீர்வு இருந்தால் சொல்ல்லுங்கள் ஐயா....

    சுயதொழில் அமையுமா? அப்படி அமைந்தால்என்ன மாதிரியான தொழில்உகந்தது ?

    மிகவும் நன்றி!!!

    வாழ்கபல்லாண்டு தொடர்க உங்கள் தொண்டு!!!

    ReplyDelete
  36. வாழ்கபல்லாண்டு தொடர்க உங்கள் தொண்டு!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com