மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.1.10

Doubt: எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா?

ஆண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன! அடுத்து என்ன?
பார்ட்டிதான்! அதுதான் நடக்கிறது!
---------------------------------------------------------------------
நாங்களும் பாடல்களை ரிமிக்ஸ் செய்வோம்ல!

Jhonny Johnny Remixed
Johny Johny
Yes Papa
Pvt Company
Yes Papa
Any Motivation
No Papa
Many Tension
Yes Papa
Do u Sleep well
No Papa
Onsite Opportunity
No papa
Increment
Ha ha ha
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா?

Doubts: கேள்வி பதில் பகுதி 14

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.55
அருள் நிதி

வணக்கம் ஐயா...

எனது சந்தேகங்கள்...

1.ஒரு கிரகத்தின் தசையில் மற்றொரு கிரகத்தின் புத்தியில் பலன்கள் அந்த கிரகங்கள் குறிக்கின்ற இடங்களுக்கு தகுந்தாற் போலவும்,அவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பு ( 6/8 position,1/12 position,niserkiga,temproral relationship) பொருத்தும் அமையும் என்பது உங்கள் பாடங்களின் மூலம் நான் புரிந்துள்ளேன்.சுய தசை சுய புத்தியில் பலன்கள் எதைப் பொருத்து அமையும்???

A.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி கஷ்டங்களைக் கொடுக்கும். துன்பமான சூழலைக் கொடுக்கும்/அனுபவிக்க நேரிடும். (During the main period of a Functional Malefic, the sub period of a Functional Malefic will cause sufferings)

B.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு நல்ல கிரகத்தின் புத்தி நன்மைகளைக் கொடுக்கும் (During the main period of a Functional Malefic the sub period of a strong Functional Benefic will bestow good results)

C.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஜாதகத்தில் வலிமை இல்லாத ஒரு நல்ல கிரகத்தின் புத்தி நன்மைகளைக் கொடுக்கும் என்று ஜாதகன் நம்பிக்கை மட்டுமே கொள்ளலாம். ஆனால் உண்மையில் நன்மை எதையும் தராது. (During the main period of a Functional Malefic the sub period of a weak functional benefic will give only hopes which may not get fulfilled)

D. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் புத்தி நன்மைகளை வாரி வழங்கும்.ஜாதகன் அண்டாக்களில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்! (During the main period of a Functional Benefic the sub period of a strong Functional Benefic will bestow very good results)

E. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஜாதகத்தில் வலிமை இல்லாத ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் புத்தி சராசரி பலன்களைக் கொடுக்கும் (During the main period of a Functional Benefic, the sub period of a weak Functional Benefic will bestow average results with mishaps during unfavorable transit influences)

F. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி சராசரி பலன்களைக் கொடுக்கும். சிலர் அவ்வப்பொது சிறு சிறு துன்பங்களை அனுபவிக்க நேரிடும். (During the main period of a Functional During the main period of a Functional Benefic, the sub period of a Functional Malefic will cause mild sufferings)

G.நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி ஒரு (அந்த தீய கிரகம் வலிமை இழந்த வேறு கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருக்கும் நிலையில்)அதிகக் கஷ்டங்களை ஜாதகன் அனுபவிக்க நேரிடும். ( During the main period of a Functional Benefic, the sub periods of a Functional Malefic (if involved in close conjunction or aspect with weak planets) will cause grave concerns and/or tragic happenings.

H.தனது சுய புத்தியில் கிரகங்கள், பெரிய அளவில் தனக்குத்தானே (அதாவது ஜாதகனுக்கு) எதையும் செய்து கொள்ளாது. இது பொதுப்பலன். சுய புத்தி முடிந்தவுடன், மேற்கூறிய முறையில் பலன்கள் நடைபெறும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2.சிலர் எப்போது படுத்தாலும் உடனே தூங்கி விடுவார்கள்...சிலர் தூக்கம் இன்மையால் அவதிபடுகிறார்கள்...இதற்கு ஜாதகத்தில் எந்த இடம் காரணம் வகிக்கிறது? எனக்கு தெரிந்த ஜாதகங்களில் லக்னாதிபதி 12ல் உள்ள சிலர் நன்றாக தூங்குகின்றனர்.லக்னம் தன்னைப் பற்றி குறிப்பதால் தன்னை மறக்கும் நிலைக்கு(தூக்கம்) 12ம் இடத்தை இடத்தை எடுத்துக் கொள்ளலாமா?இது சரியா??ஏதாவது கிரகம் இதனுடன் சம்பந்தபடுகிறதா???

12ஆம் வீட்டை அயன சயன போக பாக்கிய வீடு என்பார்கள். அந்த விட்டின் அதிபதி நன்றாக இருக்கும் ஜாதகனுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாக்கியம் இருக்கும்!

3.அந்தரத்தின் நாட்களை கணிக்க குறுக்கு வழி சொல்லவும்...Ex. குரு தசை,ராகு புத்தி,புதன் அந்தரம்?

எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா? கடைகளில் 25 ரூபாய்க்குப் பஞ்சாங்கம் கிடைக்கும். ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் எல்லாவற்றிற்கும் குறுக்கு வழி இருக்கிறது!

4.நாம் உண்ணும் உணவை குறிக்கும் இடம் இரண்டாம் இடம்...சிலர் சாப்பாட்டு ராமனாக இருக்கிறார்கள்...சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிடைத்ததை சாப்பிடுகிறார்கள்...சிலர் அசைவப் பிரியர்கள்...சிலர் சைவம்...இதற்கு காரணம் என்ன??? கிரகங்களுக்கு பிடித்த சுவைகள் என்ன???

நல்ல வேளை கிரகங்களுக்குப் பிடித்த நடிகைகளைக் கேட்காமல் விட்டீர்கள். சுந்தரி பாய், பண்டரிபாய், காந்திமதி, கண்ணாம்பா மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டுவந்தால் கிரகங்களுக்குப் பிடிக்குமா? அல்லது
நமீதா, நயன்தாரா மாதிரி Two Piece டிரெஸ்ஸில் வந்தால் கிரகங்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்காமல் விட்டுவிட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

தனிப்பட்ட செயல்கள், குணங்களுக்கெல்லாம் லக்கினமும், லக்கின அதிபதியும், அவருடன் சேரும் கிரகங்களும், அவர் பெறுகின்ற பார்வைகளும்தான் காரணம். லக்கின அதிபதியுடன், சுக்கிரன், சனி, ராகு போன்ற கிரகங்கள் கை கோர்க்கும்போது, நீங்கள் சொல்கின்ற சுவையெல்லாம்....சாப்பாடு, பெண்களை மோப்பம் முடிப்பது முதல் மோகம் கொள்வதுவரை, தண்ணியடிப்பது (குழாயில் அல்ல) ரேசுக்குப் போவது, சீட்டாடுவது, பஃப்பிற்குப் போவது கப்பிற்குப் போவது என்று ஜாதகன் விதம் விதமான ஆட்டங்களில் நாட்டங்களை உடையவனாக இருப்பான்.

5.சில ஆலயங்களில் நவகிரகங்களின் திசைகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்...சில ஆலயங்களில் 2 வரிசைகளில்(மேல், கீழ்) வைத்துள்ளனர்...குழம்பிவிடுகிறோம்...தான்சானியாவில் உள்ள கோவில்களில் அவ்வாறுதான் உள்ளது...இங்குள்ள பெரும்பான்மையோரின் கேள்வி இது...அவர்களின் வாகனங்களை வைத்து அடையாளம் காண்பது எவ்வாறு??? உதவுங்கள்...

தான்சானியாவில் உங்களைக் கோவில்கட்டி கிரகங்களை வைக்க விட்டதே பெரிய காரியம். அதற்காக சந்தோஷப்படுங்கள். இணையத்தில் பார்த்தால் கிரகங்கள், தங்கள் வாகனங்களுடன் இருப்பது தெரியும், அதைக் குறிப்பெடுத்து, போர்டில் எழுதி நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிலில் வைக்கச் சொல்லுங்கள். அனைவருக்கும் அது உபயோகமாக இருக்கும்!

நன்றியுடன்,
அருள்நிதி
-------------------------------------------
email.No.56
G.ஆலாசியம்

Dear Sir,
I am sorry. My previous mail had some spelling mistakes.Kindly please ignore that mail and below is the corrected one. Thanks and regards,Alasiam G.
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.
"நான் எழுத்துருவை சரியாக அனுப்பாமல் தங்களின் வைரமான நேரத்தை வீணாக்கியமைக்கு மன்னிக்கவும்".
எனது கேள்விகள் அய்யா...

1.செவ்வாய் இரண்டில் பொதுவாக நல்லது அல்ல...அதுவும் முக்கியமான இடம் இரண்டில் இருந்தால்???... இரண்டாம் வீடு, மகரத்தில் உச்ச செவ்வாய். அவர் ஐந்துக்கும் பன்னிரெண்டுக்கும் அதிபதி. அவருக்கு கேந்திரத்தில் சந்திரன் (ஐந்தில்) மற்றும் லக்னாதிபதி குரு மற்றும் லாபாதிபதி சுக்கிரனும் (பதினொன்றில்). இரண்டாம் வீட்டின் பரல் இருபத்தேழு செவ்வாயின் பரல் நான்கு. இந்த அமைப்பில் உள்ள தீயக் கிரகம் செவ்வாய் (சகோதரகாரன் மற்றும் பூமிகாரகன் என்று அதற்கு தனி மதிப்புக் கொடுப்பார் திருவாளர் செவல் பட்டி சிங்காரம் செட்டியார் அவர்கள்) செவ்வாய் திசை எப்படி இருக்கும்? 2.அது தனம்,வாக்கு,குடும்பம் இவைகளுக்கு எந்தவிதமான விளைவுகளைத் தரும்? 2A. இரண்டில் செவ்வாய் உச்சம், ராசிக்கு அதிபதி அப்படி இருக்க ஜாதகனுக்கு வீடு, பூமி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் பொருள்கள் மூலம் லாபம் கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை?

உண்மைக்கு ஒரே அளவுதான்!:-)))) செவ்வாய் உச்சம் பெற்று அமைந்துள்ளதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பூர்வ புண்ணிய அதிபதி உச்சம் பெறுவது ஜாதகனுக்குப் பலவிதத்திலும் நன்மை உடையதாக அமையும். அதனால் நன்மைகளே நடக்கும் என்று நம்பிக்கையோடு இருங்கள்!

2.ராகு இருக்கும் இடம் பெறும் பார்வை இவைகளைக் கொண்டே நல்லவனா கெட்டவனா என்பது..... நிற்க, அந்த ராகு இருப்பது மூன்றில் அவர் இருக்கும் வீட்டுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதி குருவும் சுக்கிரனும். மூன்றாம் வீட்டுக்கு அதிபதி சனி (வக்கிரம், ஒரு பரல் நீசம்) சந்திரனுடன், அம்சத்தில் சந்திரன் வீட்டில் இருக்கிறார். ராகு இருக்கும் வீட்டின் பரல் முப்பத்தைந்து. (ராகுவைப் போல் கொடுப்பாரில்லை...ஜோதிட மொழி) 3. இந்த ராகு அவரின் தசையில் கட்டிவைத்து அடித்து பிழிந்து எடுப்பானா? மூன்றில் முப்பத்தைந்து பரலுடன் இருப்பதால் எதாவது கொடுப்பானா? 3.ராகு திசையில் முன் பாதி பின் பாதி என்று எதாவது பலன்கள் வேறுபடுமா? பொதுவான ஒரு கேள்வி அய்யா.

ராகு தசையைப்பற்றிய விரிவான பாடம் பழைய பதிவுகளில் உள்ளது. அதைப் படித்துத் தெளிவு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. கால சர்ப்ப தோஷத்தில் அகப்பட்டவர்கள் வாழ்வில் பெரும்பாலும் அவதிப்பட்டு ஒரு நிலைக்கு வந்தவர்களே அப்படிப் பட்டவர்கள் மீண்டும் ஒரு சிரமமான கட்டத்திற்கு ஜாதகம் கொண்டு செல்லுமா (எல்லோருக்கும் மொத்தம் 337 பரல்கள் தான்).

பெரும்பாலனவர்களைக் கொண்டு செல்லும். உதாரணம் ஹர்ஷத் மேத்தாவின் ஜாதகம்!

5.பாடங்களில் சந்தேகம் வர வழி இல்லை அத்தனையும் அவ்வளவு தெளிவு; இல்லை இல்லை அதை இப்படிக் கூறலாம் என்போன்றோரின் ஜோதிட அறிவுக்கு தேவைக்குச் சற்று அதிகமான விளக்கம் என்பேன். ஆகவே இதை ஒரு case study- யை போல் கேட்டுள்ளேன்.

கேஸ் ஸ்டெடி என்று சொந்த ஜாதகத்தை வைத்து உங்களைப் போல எல்லோரும் கேட்டால், எப்படி பதில் சொல்வது? அதற்கு உரிய நேரம் எனக்கு வேண்டாமா? எனக்கும் நாளொன்றிற்கு 24 மணிகள்தானே?
---------------------------------------------------
email.No.57
சூர்யா

There is a lagna in rasi and in navamsam. How to assess navamsam? With respect to rasi lagna or navamsa lagna? I still remember you gave one example how to assess rasi and navamsam. In that case Both rasi lagna and navamsa lagna are same?

ராசியிலும், நவம்சத்திலும் ஒரே லக்கினம் என்றால் அது வர்கோத்தம லக்கினம் ஆகும். லக்கினம் வர்கோத்தம் ஆகும் பலன் அந்த ஜாதகனுக்குக் கிடைக்கும். நவாம்சம் & வர்கோத்தமப் பாடங்களை எடுத்துப் படியுங்கள்!
-----------------------------
email.No.58
S.தினேஷ், ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம்

அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் .

1.என் தம்பிக்கு துலா லக்னம்,விருச்சிக ராசி. 10'ல் அதாவது கடகத்தில், குரு,செவ்வாய். குரு உச்சம் பெற்று விட்டான்.செவ்வாய் நீச்ச பங்கம் செவ்வியும் சந்திரனும் பரிவர்த்தனம் பெற்றுவிட்டனர். அனால் இருவரும்
நீச்சம்.செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றதால் சந்திரனும் நீச்ச பங்கம் பெறுவானா?? பரிவர்த்தனை ஆனதால் நீச்ச பலன்கள் இல்லாமல் போகுமா?? எப்படி இருக்கும். சற்று விளக்கி கூறுங்கள்.

துலா லக்கினத்திற்கு குரு 3 & 6ஆம் இடங்களுக்கு உரியவன். இருந்தாலும், குரு சுபக்கிரகம். உச்ச குரு 10ல் இருப்பதாலும், 2 மற்றும் 7ஆம் அதிபதி செவ்வாய் அவருடன் இருப்பதாலும் (நீசபங்கம், மற்றும் குருமங்கள யோகத்துடன் இருப்பதாலும்) அந்த இடத்து அதிபதி பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாலும் உங்கள் தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கும் கவலையை விடுங்கள். 10ஆம் வீட்டில் 30ற்கு மேற்பட்ட பரல்களும்,
அதன் அதிபதி சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கிறாரா என்றும் பாருங்கள்.
--------------------------------------------------------------
சந்தேகங்களைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. பதில்கள் வரிசையாக வரும். அத்தனை பொது சந்தேகங்களுக்கும் நிச்சயம் பதில் வரும். நம்முடைய கேள்விகளுக்குப் பதிலை இன்னும் காணோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். வரிசைப்படி பதில்கள் நிச்சயம் வரும்!
---------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

32 comments:

  1. அய்யா இனிய காலை வணக்கம்,
    சந்தேகங்களுக்கு தாங்கள் அளிக்கும் விளக்ங்கள் விரிவாக தெளிவாக உள்ளன.

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  2. Indraya Kelvi Bathil Migavum arumai..

    ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி கஷ்டங்களைக் கொடுக்கும். துன்பமான சூழலைக்
    கொடுக்கும்/அனுபவிக்க நேரிடும்.

    Ayya ithil 2 theeya grahamgalum balamudan(Ucham,Vargotham pola) irunthalum theeya palan thaan kidaikuma?

    ReplyDelete
  3. பாடமும் - படமும் - ரீ-மீக்ஸ் பாடலும் அருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  5. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    சந்தேகங்களுக்கு தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் விரிவாக தெளிவாக உள்ளன.
    நன்றி வணக்கம்!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////Strider said...
    Indraya Kelvi Bathil Migavum arumai..
    ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி கஷ்டங்களைக் கொடுக்கும். துன்பமான சூழலைக் கொடுக்கும்/அனுபவிக்க நேரிடும்.
    Ayya ithil 2 theeya grahamgalum balamudan(Ucham,Vargotham pola) irunthalum theeya palan thaan kidaikuma?//////

    அப்படி அமர்ந்திருக்கும் அதிபதிகள் என்ன காரகத்திற்கு உரியவர்களோ, அதற்கான பலனைத் தான் உச்சம் பெற்று, வர்கோத்தமம் பெற்று அமர்ந்ததற்கான (நன்மையான பலன்களை) ஜாதகனுக்குத் தருவார்கள்! அதோடு தசா புத்திகளின் தன்மைக்கு ஏற்பப் பலனைக் குறைக்கவும் செய்வார்கள். கலவையான பலன்களாக இருக்கும்!
    நவாம்சத்தையும் பாருங்கள்!பொதுப் பலன்களை வைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்!

    ReplyDelete
  7. ////வேலன். said...
    பாடமும் - படமும் - ரீ-மீக்ஸ் பாடலும் அருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    எல்லாம் உங்களுக்காகத்தான் வேலன். variety வேண்டாமா? அதுக்காகத்தான்! நன்றி!

    ReplyDelete
  8. sorry my keymap not working-

    Kelvi-bathi Arumai Asanae,

    I have query an extension from Arun nidhi question.

    Rishaba Lagnam- Cha in 12 house, 9house Guru (Magara Neecham) aspects 12th house, no other aspects to 12th house. from this scenario , Do you see any Sleeping disorder w.r.t Jatthakam aspects Sir.

    ReplyDelete
  9. what is the good result and bad result when saturn and mars both aspects 6th house in rasi and navamsa?

    ReplyDelete
  10. ///சிங்கைசூரி said...
    sorry my keymap not working-
    Kelvi-bathi Arumai Asanae,
    I have query an extension from Arun nidhi question.
    Rishaba Lagnam- Cha in 12 house, 9house Guru (Magara Neecham) aspects 12th house, no other aspects to 12th house. from this scenario , Do you see any Sleeping disorder w.r.t Jatthakam aspects Sir.

    குருவிற்கு 5, 7, 9ஆம் பார்வைகள் உண்டு! மகரத்தில் இருக்கும் குரு ரிஷபலக்கினத்திற்குப் 12ஆம் வீடான மேஷத்தை எப்படிப் பார்க்கும்? சொல்லுங்கள். அதொடு 12ஆம் அதிபதி செவ்வாய் என்ன ஆனார்? அவர் முக்கியமா? இல்லையா?

    ReplyDelete
  11. ////RajeshEra said...
    what is the good result and bad result when saturn and mars both aspects 6th house in rasi and navamsa?/////

    All planets have பார்வை or aspects. Or to put it in simpler terms they "look" at other planets and signs. All planets aspect the sign or planet placed exactly opposite to them, i.e., in the 7th house from them. This is normally called the 7th house aspect, or the full aspect. Apart from this 7th aspect, some planets have "special" aspects.

    Mars aspects the 4th and the 8th houses from its position.
    Jupiter aspects the 5th and the 9th houses from its position.
    Saturn aspects the 3rd and the 10th houses from its position.

    The houses and the planets aspected by a planet get influenced by the planet. The effect will be good or bad depending on the nature, condition, Lordship etc of the aspecting planet and also on the relation between the two planets/two houses

    ReplyDelete
  12. presents sir,

    Thans for the answers. if possible pls explain on Chevvai Dosam. and its effects, exemptions and benefits.

    ReplyDelete
  13. Dear Sir.
    We all know Sani is a malefic planet.How will be its maha dasa.Full damage?Also I have read from books and heard from astrologers that sani maha dasa coming as 4th dasa is not good.I would like to know why.

    Also even if the sani is ucham in 11th House with 3 paral,how will be its dasa.

    Please educate us on this.


    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  14. அன்பு ஐயாவுக்கு வணக்கம்,ரீமிக்ஸ் பாடலும், படமும் சூப்பர்.
    வாழ்க வளமுடன்
    அன்புடன் ஜிவா

    ReplyDelete
  15. எந்த சாஸ்திரமும் படித்து கிரகித்துக் கொள்வதற்கு புதனுடைய அருளும் அதை தேவையான பொழுது தேவையான இடத்தில் பயன்படுத்துவதற்கு குருவின் அருளும் தேவை என்று படித்திருக்கிறேன். (என்ன படித்தேன் என்று ஞாபகம் இருக்கிறது. எங்கு படித்தேன் என்பதுதான் ஞாபகத்திற்கு வருவதில்லை.) குருவிற்கு குரு என்று பெயர் வருவதற்கும் அது நிலைப்பதற்கும் அந்த தேவ குருவின் அருள் தேவை.

    நிற்க, எனக்கு தெரிந்த சுமார் 20 பேரின் ஜாதகத்தை ஆராய்ந்து வருகிறேன். யாருக்கும் பார்த்து பலன் சொல்வதில்லை. எனது ஜோதிட அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக மட்டும்தான். இப்போதுதான் பல விஷயங்கள் பிடிபட ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு முதுகெழும்பு போன்றது என் சொந்த ஜாதகம்தான். இன்றுவரை எனக்கு நடந்தவற்றை பார்த்து என் ஜாதகத்தில் உள்ள எந்த கிரக நிலையால் நடந்தது என்று குறித்து வருகிறேன்.

    ReplyDelete
  16. /////RVC said...
    present sir.//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  17. /////Ram said...
    presents sir,
    Thans for the answers. if possible pls explain on Chevvai Dosam. and its effects, exemptions and benefits.

    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  18. /////Rathinavel.C said...
    Dear Sir.
    We all know Sani is a malefic planet.How will be its maha dasa.Full damage?Also I have read from books and heard from astrologers that sani maha dasa coming as 4th dasa is not good.I would like to know why.
    Also even if the sani is ucham in 11th House with 3 paral,how will be its dasa.
    Please educate us on this.
    Thanks
    Rathinavel.C/////

    The effect will be good or bad depending on the nature, condition, Lordship etc of Saturn. But in general, the maha dasa of Saturn will not be good!

    ReplyDelete
  19. ////ஜீவா said...
    அன்பு ஐயாவுக்கு வணக்கம்,ரீமிக்ஸ் பாடலும், படமும் சூப்பர்.
    வாழ்க வளமுடன்
    அன்புடன் ஜிவா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. /////ananth said...
    எந்த சாஸ்திரமும் படித்து கிரகித்துக் கொள்வதற்கு புதனுடைய அருளும் அதை தேவையான பொழுது தேவையான இடத்தில் பயன்படுத்துவதற்கு குருவின் அருளும் தேவை என்று படித்திருக்கிறேன். (என்ன படித்தேன் என்று ஞாபகம் இருக்கிறது. எங்கு படித்தேன் என்பதுதான் ஞாபகத்திற்கு வருவதில்லை.) குருவிற்கு குரு என்று பெயர் வருவதற்கும் அது நிலைப்பதற்கும் அந்த தேவ குருவின் அருள் தேவை.
    நிற்க, எனக்கு தெரிந்த சுமார் 20 பேரின் ஜாதகத்தை ஆராய்ந்து வருகிறேன். யாருக்கும் பார்த்து பலன் சொல்வதில்லை. எனது ஜோதிட அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக மட்டும்தான். இப்போதுதான் பல விஷயங்கள் பிடிபட ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு முதுகெழும்பு போன்றது என் சொந்த ஜாதகம்தான். இன்றுவரை எனக்கு நடந்தவற்றை பார்த்து என் ஜாதகத்தில் உள்ள எந்த கிரக நிலையால் நடந்தது என்று குறித்து வருகிறேன்.//////

    நானும் உங்களைப்போல்தான் கற்றேன். என்னிடம் உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 300 பேர்களின் ஜாதகங்கள் உள்ளன! எனது ஜோதிட அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு அவைகள் பெரிதும் பயன்பட்டன/படுகின்றன. கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. Dear Sir.
    Good evening sir. Thanks for ur today lesson sir. All the answers are very very nice sir. I need horoscope book sir. sorry for my botherings sir.
    sundari

    ReplyDelete
  22. தஸா பற்றிய விரிவான பதில் ஒரு பாடம் போலவே அமைந்துள்ளது.இது போன்று நல்ல பதில்களைப் பாடமாகவும் மாற்றி விடலாம். நல்ல பதில்களைக் வெளிக்கொண்டுவர நல்ல கேள்விகள் கேட்கப் பட வேண்டும்.
    நமது உபநிஷத்துக்கள், புராண‌ஙகள் பலவும் கேள்வி பதிலாகவே அமைந்துள்ளன.ஏன் கீதை கூட அர்ஜுனன் கிருஷ்ணன் சம்வாதம்தானே!


    விஜய் டி.வியில் தினசரி காலை 6 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் "மஹாபாரதத்தில் தர்மசாஸ்திரம்" உபன்யாசம் நடைபெறுகிறது.ந‌ம் வாலிபர்கள் அனைவரும் கேட்டுப் பயன் பெற வேண்டுகிறேன்.இந்த முதியவனின் வேண்டுகோளை 100 பேராவது கேட்பார்களா?

    ReplyDelete
  23. ////sundari said...
    Dear Sir.
    Good evening sir. Thanks for ur today lesson sir. All the answers are very very nice sir. I need horoscope book sir. sorry for my botherings sir.
    sundari///////

    புத்தகம் தயாரிப்பில் உள்ளது. விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  24. /////NARESH said...
    Yes I am presence sir///

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  25. /////kmr.krishnan said...
    தஸா பற்றிய விரிவான பதில் ஒரு பாடம் போலவே அமைந்துள்ளது.இது போன்று நல்ல பதில்களைப் பாடமாகவும் மாற்றி விடலாம். நல்ல பதில்களைக் வெளிக்கொண்டுவர நல்ல கேள்விகள் கேட்கப் பட வேண்டும்./////

    வரப்போகும் ஜோதிடப் புத்தகங்களில், இந்தக் கேள்வி பதில் பகுதியையும் சேர்த்துவிடலாமா என்னும் யோசனையில் உள்ளேன். மாணவர்கள் தங்கள் கருத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////நமது உபநிஷத்துக்கள், புராண‌ஙகள் பலவும் கேள்வி பதிலாகவே அமைந்துள்ளன.ஏன் கீதை கூட அர்ஜுனன் கிருஷ்ணன் சம்வாதம்தானே!
    விஜய் டி.வியில் தினசரி காலை 6 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் "மஹாபாரதத்தில் தர்மசாஸ்திரம்" உபன்யாசம் நடைபெறுகிறது.ந‌ம் வாலிபர்கள் அனைவரும் கேட்டுப் பயன் பெற வேண்டுகிறேன்.இந்த முதியவனின் வேண்டுகோளை 100 பேராவது கேட்பார்களா?/////

    அதற்கு மேலும் கேட்பார்கள். காரணம் வகுப்பறையில் சுமார் 60% பேர்கள் 45 வயதைத் தாண்டியவர்கள்.
    பலருடைய பெயர்கள் வயதுடன் எனக்குத் தெரியும். அதனால் சொல்கிறேன் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா,
    சார் கேள்வி பதில் பாடங்களையும் ஜாதக புத்தகத்தில் சேர்த்து விடுங்கள். எனக்கு
    ரொம்ப பிடித்திருக்கிறது இப்போ நான் பழைய பட்ங்களை திருப்ப படித்தேன்
    ஐயா அந்த் வாழைப்பழங்களை(கத்தியாலா பெயர் எழுதன பழங்கள்) அந்த மந்திர‌
    பொம்பை பழத்தை அறைகுள்ளயிருந்து தூக்கின்னு வந்து போட்டு விட்டது ந்ம்ப அப்பா,பெரிப்பா கண்ணுக்கு தெரியலா அந்த ஜோசியகார அப்பா கண்ணுக்கு தெரிந்தத சொல்லுங்க சார்.
    சுந்தரி.

    ReplyDelete
  27. ////sundari said...
    வணக்கம் ஐயா,
    சார் கேள்வி பதில் பாடங்களையும் ஜாதக புத்தகத்தில் சேர்த்து விடுங்கள். எனக்கு
    ரொம்ப பிடித்திருக்கிறது இப்போ நான் பழைய பாடங்களை திருப்ப படித்தேன்
    ஐயா அந்த வாழைப்பழங்களை(கத்தியால் பெயர் எழுதின பழங்கள்) அந்த மந்திர‌
    பொம்மை பழத்தை அறைகுள்ளிருந்து தூக்கிக் கொண்டு வந்து போட்டு விட்டது நம்ப அப்பா,பெரிப்பா கண்ணுக்கு தெரியலையா அந்த ஜோசியகாரர் அப்பா கண்ணுக்கு தெரிந்ததா சொல்லுங்க சார்.
    சுந்தரி.////

    அதை Black Magic என்பார்கள். சத்தத்துடன் விழுந்தது மட்டும்தான் கண்னில் பட்டதாக என் தந்தையார் சொல்வார்!

    ReplyDelete
  28. Vaathiyariya,

    Any special consideration if one Gragha in same position/Bhava on lagna and Rasi chart.

    For Example: Sani is in 3rd house from Lagnam in Rasi and in Navamsha Chart also.

    If it is occupied in the same gragha's place then it is called vargothamam which has different benefit.But what about the case of the above example?.Any benefit on the same

    Thanks
    Rajan

    ReplyDelete
  29. ////Rajan said...
    Vaathiyaraiya,
    Any special consideration if one Gragha in same position/Bhava on lagna and Rasi chart.
    For Example: Sani is in 3rd house from Lagnam in Rasi and in Navamsha Chart also.
    If it is occupied in the same gragha's place then it is called vargothamam which has different benefit.But what about the case of the above example?.Any benefit on the same
    Thanks
    Rajan////

    வர்கோத்தமம் ஆனதற்கான பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும். நன்மையும் கிடைக்கலாம். தீமையும் கிடைக்கலாம். அது அந்த ஜாதகனின் ஜாதகத்தில் சனியின் நிலைமையைப் பொறுத்தது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com