மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.1.10

Doubt: வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன?

Doubts: கேள்வி பதில் பகுதி பதினொன்று!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பதினொன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
---------------------------------------------------
email No.43
ஆண்டெஸ் ராஜ்!
வணக்கம் ஆசிரியரே..

1.மீன லக்ன ஜாதகத்திற்கு சுக்ரன் இரண்டு துஷ்ஸ்தானன்களுக்கு அதிபதி அல்லவா,அவர் ஆறாம் வீட்டில் மறைவது நல்லதா.மேலும் நவாம்சத்திலும் கடகத்தில் நீசமாகிறார்.சுயவர்க பரல்களும் 3 தான் உள்ளது.ஆனால் அவருடன் யோகாதிபதி செவ்வாயும் ஆறாம் வீடான சிம்மத்தில் உள்ளார்.
சுக்ரன் என் ஜாதகத்தில் very weak positionla இருக்கிறார் .என் சந்தேகம் என்னவென்றால் மீன லக்னத்திற்கு சுக்ரன் தீயவர் தானே,அவர் weak positionla இருக்கிறது நல்லதா ???....இப்போது ராகு திசை சுக்ர புத்தி நடக்கிறது..இந்த சுக்ர புத்தியில் காதல் கனிந்து வாடியும் விட்டது..Is it happened because of weak sukran.காதல் வாழ்க்கை காலி தானா வாத்தியாரே.ஒரே குழப்பமாக உள்ளது

சுக்கிரன் கடகத்தில் எப்படி நீசமடைவார். என்னைக் குழப்புகிறீர்களே? கனிந்து வந்த காதலை வாட விட்டது உங்கள் தவறு. வேறு ஒரு மயில் கிடைக்காமலா போய்விடும்? முயற்சி செய்யுங்கள். கிடைத்தால் உடனே மணந்து கொண்டுவிடுங்கள். மயில் கிடைக்காவிட்டால், உங்கள் பெற்றோர்கள் பார்க்கும் ஒரு குயிலை மணந்து கொள்ளுங்கள். சுக்கிரபுத்தி நடப்பதால் இதைச் சொல்கிறேன்!

2. லக்னத்தில் 35 பரல்கள் ,லக்னாதிபதி சுய வர்க்கத்தில் 6 பரல்கள்,ஏழாம் வீட்டில் 25 பரல்கள் ,ஏழாம் அதிபன் அமர்ந்த ஐந்தாம் வீட்டில் 23 பரல்கள்,புதன் சுயவர்க பரல்கள் 2...ஐந்தாம் அதிபன் சந்திரன் ரோகினி நட்சத்திரத்தில் உச்சமாக சுயவர்க்கத்தில் 8 பரல்களுடன் உள்ளார்.பலன் என்ன ஆசிரியரே..சிரமத்திற்கு மன்னிக்கவும் ..
நன்றி ஆசிரியரே..
ராஜ்

மூன்று வீடுகளை வைத்துக் கும்மி அடித்திருக்கிறீர்கள். அதுவும் கும்மிப்பாட்டு மூன்று மொழிகளில் கலந்து இருக்கிறது. லக்கினம், ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு என்று நீண்ட பாடலாக இருக்கிறது. என்ன பலன் எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே? பலன் என்ன என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு என்ன நோய் என்ண்வென்று சொல்லாமல், மருத்துவரிடம் சென்று, எனக்கு என்ன நோயென்று சொல்ல முடியுமா? என்று கேட்பதைப் போல் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி!
-------------------------------------------
email No.44
G.சீனிவாசன்
Dear sir,
with your permission i would like to ask some questions

1.how will be the lagna lord period if he is placed in eigth place in exalted position/friend`s place/malefic position/neetcha ? as perception from reading during lagne lord period wherever he is there he will confer good result for nativity.

லக்கினாதிபதி எட்டில் இருந்தால் அவருடைய தசா/புத்தி எப்படி இருக்கும் என்பது வரை உங்கள் கேள்வி சரி. அது உச்ச வீடாக இருந்தால் என்ன பலன்? நட்பு வீடாக இருந்தால் என்ன பலன்? பகை வீடாக இருந்தால் என்ன பலன்? நீச வீடாக இருந்தால் என்ன பலன்? என்று ஏன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்? சென்னையில் வீடு வாங்கலாமென்று இருக்கிறேன். போயஸ் கார்டனில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? டி.நகரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? அடையார் க்ரீன்வேஸ் சாலையில் வாங்கினால் என்ன விலை இருக்கும்?வேளாச்சேரியில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? அம்பத்தூரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? ஸ்ரீஇபெரும்புதூரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? என்று கேட்டுக்கொண்டே போனால் என்ன சொல்வது? சொல்லுங்கள்? பொட்டில் அடித்த மாதிரிக் கேள்வி சின்னதாகவும், கேட்க நினைப்பதைச் சொல்வதாகவும் இருக்க வேண்டாமா? Be specific with your question!

லக்கினாதிபதி ஜாதகனுக்கு எப்போதும் நன்மைகளைச் செய்வார் என்பது பொதுவிதி. ஜாதகத்தில் அவருடைய பொஸிசனை வைத்துப் பலன்கள் மாறாதா? மகனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்பது தந்தைக்கான பொது விதி! அதற்காக முப்பது லட்சரூபாய் capitation fee கொடுத்து மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் அவரால் எப்படி சீட் வாங்கித் தரமுடியும்? அல்லது எட்டு லட்ச ரூபாய் செலவழித்துப் பொறியியற் கல்லூரியில் அவரால் எப்படி சீட் வாங்கித் தரமுடியும். அவர் ஒரு சாதாரணக் குடிமகனாக (அந்தக் குடிமகன் அல்ல) குறைந்த ஊதியத்திற்கு இடுப்பு ஒடிய வேலை செய்துகொண்டிருப்பவரென்றால் அதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? மாநிலத்திலேயே முதல் 100 பேர்களில் ஒருவன் எனும் தரவரிசையில் ஒருவனாகப் படித்து மகனல்லவா அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதுபோல ஜாதகத்தில் வித்யாகாரகன், அறிவுக்குக் காரகன், மனகாரகன் எல்லாம் சேர்ந்து நன்றாக இருந்தால்தானே ஜாதகன் அதைச் சாதிக்க முடியும். ஜாதகத்தில் பலன்கள் எல்லாம் கூட்டு முயற்சி. ஒரு விதியை மட்டும் வைத்துக் கொண்டு ரீல் ஓட்ட முடியாது. லக்கினகாரகனும் தனியாக ரீல் ஓட்ட முடியாது. தனியாக ஓட்டமுடிந்தால் அவன் ஒருவனே போதுமே சாமி. மற்ற கிரகங்கள் எல்லாம் எதற்கு?

2.if mars is lagna lord, if it is placed in sixth house how that will work as my perception from lessons mars is malefic planet & any planet positioned in sixth will not confer good result except saturn & ragu.

நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

3.sixth &eigth combination of major period & sub period lord will not give result even in the case of lagna lord & rasi lord.my question is any one has the period of Jupiter and sub period of mercury but both are in sixth/eighth in respective of each.
thanks
g.srinivasan

நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நான் நன்றியை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!
............................................................................
email No. 45
ரதி தேவி

Dear Sir,

Your class is simply superb. Your doubt clarification is very efficient and useful.Your approaching method to explain subject is extra ordinary.Every one can understand easily.

வகுப்பறையில் மூன்று வருடங்களாகப் பாடங்களை நடத்திக் கொண்டி ருக்கிறேன். பாடங்களில் கேட்கப்படும் சில சந்தேகங்களைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே அம்மணி? (சகோதரி)

1.My doubt is that Rasiyil 10m idathu athibathi sani 5l irunthu,Amsathil 8l neechamahi uccha suriyanudan sernthirunthal yeena vilaivu?. in amsathil, Neecha panga raja yogam seyalbaduma? 10 place paralgal 31 and suyavarga paral 3. Is it good for job?
please clarify my doubts sir?
Your student,
Rathi Devi.

இங்கே சனியை மட்டும் பார்ப்போம். அவன் பத்தாம் இடத்து அதிபதி. நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறான். அதோடு பத்தாம் வீட்டில் 31 பரல்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதில் படிப்படியான உயர்வுகளும் இருக்கும். சுயவர்க்கப்பரல்கள் குறைவாக இருப்பதால், நீங்களும் கிடைக்கும் வேலையில் உண்மையாகவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும். அப்போதுதான் உரிய அங்கீகாரம் கிடைக்கும் உரிய நேரத்தில் கிடைக்கும்
------------------------------------------------------
email No. 46
JP.தயாள்

Respected Sir,

1.Earlier u 've said ,Bhukthi and athram will have equal power What about the dasa ? which will dominate ?

அந்தரமும், புத்தியும் சேர்ந்ததுதானே சாமி தசை என்பது. அவை இரண்டும் இல்லாமல் தசை எப்படி இருக்கும் சொல்லுங்கள்?

2.Generally each grahga has two houses ? One good and other bad ( for dhaush lagna , 5 and 12 th house lord is sevvai , simmarly 6 and 11 house lord is sukran) How these house owners perform ??

கலவையான (mixed result) பலன்களைக் கொடுக்கும்.

3.Will lord of 12 owner (sevvai )is in eighth ( kadagam) and getting neesam, is it nesabangam ? is it comes under any yogam ?Is it good or bad ?

நீசபங்கத்தைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். 12ஆம் இட அதிபதி எட்டில் வந்து அமர்வதனாலேயே நீசபங்க யோகம் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஒரு உச்சனும், ஒரு நீசனும் ஒன்றாகச் சேர்ந்தால் மட்டுமே நீசபங்க யோகம் மலரும்! அதாவது கிடைக்கும். ஒரு வாலிபனும், ஒரு கன்னியும் சேர்ந்து மணந்து கொண்டால்தான் அதற்குத் திருமணம் என்று பெயர். அதைப்போல என்று வைத்துக் கொள்ளூங்கள்

4.Does rasi athapathi has any role ?

விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தவுடன், ராசி அதிபதிக்கு என்ன ரோலென்று கேட்கிறீர்கள். சீதைக்கு ராமர் சித்தப்பா என்று ஒருவன் சொன்னானாம், அந்த ரோலை ராசியதிபதிக்குக் கொடுத்துவிடுவோம். மொத்தம் 300 பாடங்களை நடத்தியிருக்கிறேன். இன்னும் உங்களுக்கு முக்கிய பாத்திரங்களான ராமர், சீதை, லெட்சுமணன், ஊர்மிளாவை எல்லாம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? மீண்டும் பத்துமுறை ராமாயணக்கதையைக் கேளுங்கள். அதாவது பழைய பாடங்கள் அனைத்தையும் குறைந்தது மூன்று முறைகளாவது படியுங்கள்! அப்போதுதான் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள் புரியும்.1.

5.If the dasa of the particular planet is happening ? whether the suya varaga paral of the planet alone counts his performance of the dasa ?Or astavarga paral of his own house counts ? Or astavarga paral of the house where he is counts? which will dominate?If suya varga paral is less , and astavaraga paral is own house is more ? will this have any change ?

பெண்ணுக்கு அழகைத் தருவது எது? மலர்ந்த முகமா? சிவந்த நிறமா? வனப்பான மேனியா? இளமை ததும்பும் வயதா? கிறங்க அடிக்கும் விழிகளா? கொஞ்சும் அதரங்களா? மயக்கும் பேச்சா? எதைச் சொல்வது? நீங்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள். நான் அதற்குப் பதில் சொல்கிறேன்:-)))))

pl bear my questions and if iam rong
thanks and regards
Dayal

வேறுவழி? பொறுமையைத் துணையாகக் கொண்டுள்ளேன்!
-----------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26 comments:

  1. அய்யா இனிய காலை வணக்கம் ,

    இன்றைய கேள்வி பதில் பகுதி அருமை.லக்னாதிபதி குறித்த விளக்கம் சிறப்பு .....

    நனறி வணக்கம்.

    ReplyDelete
  2. ஆசிரியரே!

    அதிகாலை நேர, பொன் பொழுது வணக்கம்!.

    E - மெயில் எண் - 39 / 4 க்கு
    ஆசிரிய பெரும்தகையே !!!

    தாங்கள் சொல்லி உள்ளது முற்றிலும் உண்மை.

    இதை அடியேன் சொல்லவில்லை

    ஒரு ஜாதகனின் (கும்பம்), " தாயின் கூற்று"!

    8 கருவ்ற்றதில், நன்றாக ஜனித்தது 6 , இருப்பது 5 - ல், ஜாதகன் மட்டும் தான் " துரு துரு வென்று"!, இன்றுவரை இருப்பது என்று!.


    E - மெயில் எண் - 44 / 1 க்கு
    ஆசிரிய பெரும்தகையே !!! தாங்கள் சொல்லி உள்ளது உண்மை.

    கவனிக்க வேண்டும் குருநாதனே !!!

    (எதனை தாங்கள் வலைக்கு ஏற்றணும், ஏற்றகுடாது என்பது நன்கு தெரியும் அதனால் தான் அடியேனின் கருத்து அனைத்தைஎம் சொல்லுகின்றேன் ஐயா !)

    இதில் தவறு இருப்பின் தாங்கள் பெரிய மனது பண்ணி உண்மையிலே ( என்குருனாதன் பழனி ஆண்டவர் மேல் ஆணையாக! அடியேன் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா) அடியேனின் கவனதிக்கு கொண்டு வரணும் .

    இதைஎல்லாம் அடியேன் சொல்ல முக்கியமான காரணமும் உண்டு ஐயா !

    இறைவன் மேல் @ ஜாதகத்தில் மேல் நம்பிக்கை இல்லாத பல ஜென்மங்கள், இங்கும் வந்து தொல்லை தருவதினால் தான் ஐயனே!!!

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்.

    குரு துலா லக்கினதிற்கு பாவி என்பதால் இந்த கேள்வியினை கேட்கிறேன். என ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.

    There will be a separate session for few personal horoscopes in our classroom. Please wait.

    என கூரியிந்தீர்.....ஆவழுடன்..

    வணக்கம்

    ReplyDelete
  4. காலை வணக்கம்.
    உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  5. சுய ஜாதகத்தை வைத்து ம்ட்டுமே கேள்விகள் வருகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.சரி. அது ஒன்றும் பிழை அல்ல. இன்னும் ஆழமான கேள்விகள்
    வரவேண்டும்.
    சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவ‌ர் திருவாள‌ர் டி.என்.ஆர் தஞ்சையில் வ‌சித்து வ‌ரும் சைவ‌ சித்தாந்த‌ப் பெருந்த‌கை.அவ‌ருக்கு 4 புத‌ல்வ‌ர்க‌ள்.சிலர் அவர்களை ராமர்,லட்சுமணர்,பரத, சத்ருக்னர் என்பார்கள்.ஒரு முறை "இந்த நால்வரும் நான்கு வேதங்களைப் போன்றவர்கள்"என்றார் ஓர் அறிஞர்.அப்போது கடைக்குட்டி கூறினார்:" மூன்றாவது அண்ணன் சாமவேதம்! அது இராவணனுக்கு உரியது.எனவே அவர் இராக்கதர்!" வழக்கு தெய்வத்திரு டி.வி.கோபாலையர் என்ற பேரறிஞர் வசம் சென்ற‌து. "கடைக்குட்டி இராவண‌னின் தம்பிதானே!கும்பகர்ணண்!"என்றாரே பார்க்கலாம்.சொல்லி வைத்தாற்போல் கடைக்குட்டி கொஞ்சம் தூக்க‌ப்பிரியர்தான்.கேட்டவர் அனைவரும் நகைத்தனர் என்று சொல்லவா வேண்டும்?

    ReplyDelete
  6. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் ,
    இன்றைய கேள்வி பதில் பகுதி அருமை.லக்னாதிபதி குறித்த விளக்கம் சிறப்பு .....
    நனறி வணக்கம்./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  7. /////kannan said...
    ஆசிரியரே!
    அதிகாலை நேர, பொன் பொழுது வணக்கம்!.
    E - மெயில் எண் - 39 / 4 க்கு
    ஆசிரிய பெரும்தகையே !!!
    தாங்கள் சொல்லி உள்ளது முற்றிலும் உண்மை.
    இதை அடியேன் சொல்லவில்லை
    ஒரு ஜாதகனின் (கும்பம்), " தாயின் கூற்று"!
    8 கருவ்ற்றதில், நன்றாக ஜனித்தது 6 , இருப்பது 5 - ல், ஜாதகன் மட்டும் தான் " துரு துரு வென்று"!, இன்றுவரை இருப்பது என்று!.
    E - மெயில் எண் - 44 / 1 க்கு
    ஆசிரிய பெரும்தகையே !!! தாங்கள் சொல்லி உள்ளது உண்மை.
    கவனிக்க வேண்டும் குருநாதனே !!! (எதனை தாங்கள் வலைக்கு ஏற்றணும், ஏற்றகுடாது என்பது நன்கு தெரியும் அதனால் தான் அடியேனின் கருத்து அனைத்தைஎம் சொல்லுகின்றேன் ஐயா !)
    இதில் தவறு இருப்பின் தாங்கள் பெரிய மனது பண்ணி உண்மையிலே ( என்குருனாதன் பழனி ஆண்டவர் மேல் ஆணையாக! அடியேன் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா) அடியேனின் கவனதிக்கு கொண்டு வரணும் . இதைஎல்லாம் அடியேன் சொல்ல முக்கியமான காரணமும் உண்டு ஐயா !
    இறைவன் மேல் @ ஜாதகத்தில் மேல் நம்பிக்கை இல்லாத பல ஜென்மங்கள், இங்கும் வந்து தொல்லை தருவதினால் தான் ஐயனே!!!////

    நல்லது.உங்கள் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  8. ////Success said...
    ஐயா வணக்கம்.
    குரு துலா லக்கினதிற்கு பாவி என்பதால் இந்த கேள்வியினை கேட்கிறேன். என ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.
    There will be a separate session for few personal horoscopes in our classroom. Please wait.
    என கூரியிந்தீர்.....ஆவலுடன்..
    வணக்கம்//////

    இந்தக் கேள்வி பதில் பகுதி முடிந்தவுடன். அது பற்றிய அறிவிப்பு வெளியாகும்! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  9. /////DHANA said...
    காலை வணக்கம்.
    உள்ளேன் ஐயா!//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. /////kmr.krishnan said...
    சுய ஜாதகத்தை வைத்து மட்டுமே கேள்விகள் வருகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.சரி. அது ஒன்றும் பிழை அல்ல. இன்னும் ஆழமான கேள்விகள் வரவேண்டும்.//////

    அது என்னவோ உண்மைதான். பலருக்கும் பொதுவான சந்தேகத்தை யோசித்துக் கேட்கும் எண்ணம் இல்லை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவ‌ர் திருவாள‌ர் டி.என்.ஆர் தஞ்சையில் வ‌சித்து வ‌ரும் சைவ‌ சித்தாந்த‌ப் பெருந்த‌கை.அவ‌ருக்கு 4 புத‌ல்வ‌ர்க‌ள்.சிலர் அவர்களை ராமர்,லட்சுமணர்,பரத, சத்ருக்னர் என்பார்கள்.ஒரு முறை "இந்த நால்வரும் நான்கு வேதங்களைப் போன்றவர்கள்"என்றார் ஓர் அறிஞர்.அப்போது கடைக்குட்டி கூறினார்:" மூன்றாவது அண்ணன் சாமவேதம்! அது இராவணனுக்கு உரியது.எனவே அவர் இராக்கதர்!" வழக்கு தெய்வத்திரு டி.வி.கோபாலையர் என்ற பேரறிஞர் வசம் சென்ற‌து. "கடைக்குட்டி இராவண‌னின் தம்பிதானே!கும்பகர்ணண்!"என்றாரே பார்க்கலாம்.சொல்லி வைத்தாற்போல் கடைக்குட்டி கொஞ்சம் தூக்க‌ப்பிரியர்தான்.கேட்டவர் அனைவரும் நகைத்தனர் என்று சொல்லவா வேண்டும்?///////

    அந்த ஞானம், ம்ற்றும் நகைச்சுவை உணர்வு உள்ள பெரியவர்களைத் தற்போது காண்பது அறிதாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ஐயா இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  12. அன்பு ஐயா அவர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் போல் விளக்கங்களுடன் பதில்கள் சூப்பர், ஐயா குருவுடன் ஞானகாரகன் கேது, ஒரு ஜாதக்கதில் 5,7,9 இதில் ஏதாவது ஒரு இடதில் சேர்ந்துயிருந்தால், ஜாதகன் ஞானியாகவும், இறைவனின் அருள் பெற்றவனாக இருப்பான் என்பது உண்மையா?

    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  13. hello sir, how are you. sorry for being absent for so loong. chik un gunya vaati ettuthu vittathu..

    i have somethin intteresting to tell you.ennodu friend recenta oru jothidar ammavai parka ponan. avaar avanai naangu kelivagal(nakkai pidungaramari alla..lol..) kettathaga sonaan, nangu kelvikalukum numbergale pathilgal... athatvuthu muthalil pathirkul oru number appuram 100kul oru number ..eppadi naangu questions..okay?
    eppo intha naangu pathilgali vaithe avaar avan jathaga kattathai pottu vittaram...i felt very surprised and im lookin forwrd to meet that lady(old) astrologer..are you familiar with this type of astrologers?

    it is mathematically nearly impossible to guess the positions of fast movin planets ina persons horoscope.

    ReplyDelete
  14. also, i read pullipaani moonnuru athil nool asiriyar sevvai kanniyil natpu than endru sollukirar? avarudaya anubavathil athu seri engirar. anaal mattra noolkalil sevvai kaniyil pakkai endru irukirathu.

    also, please take a look at this video. very interesting test on astrology. let all the students and skeptics see it too..thanx
    http://www.youtube.com/watch?v=3N1dIUTbZTo

    ReplyDelete
  15. அய்யா...
    கேள்வி பதில் பகுதி மிகஅருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. அன்பு ஆசானுக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    இன்றைய பாடம் மிகவும் சுவையாக-நல்ல நகைச்சுவை கலந்து இருந்தது super பின்னிடேள் பேங்க,
    இந்த ஊர் Green Tea with honey சாபிட்ட ஒரு உற்சாகம்.

    your last line freaks,i was reading while tavelling in MRT(Train), was trying hard to control my laugh :-)

    ReplyDelete
  17. //email No.43
    ஆண்டெஸ் ராஜ்!
    வணக்கம் ஆசிரியரே..

    1.மீன லக்ன ஜாதகத்திற்கு சுக்ரன் இரண்டு துஷ்ஸ்தானன்களுக்கு அதிபதி அல்லவா,அவர் ஆறாம் வீட்டில் மறைவது நல்லதா.மேலும் நவாம்சத்திலும் கடகத்தில் நீசமாகிறார்.சுயவர்க பரல்களும் 3 தான் உள்ளது.ஆனால் அவருடன் யோகாதிபதி செவ்வாயும் ஆறாம் வீடான சிம்மத்தில் உள்ளார்.
    சுக்ரன் என் ஜாதகத்தில் very weak positionla இருக்கிறார் .என் சந்தேகம் என்னவென்றால் மீன லக்னத்திற்கு சுக்ரன் தீயவர் தானே,அவர் weak positionla இருக்கிறது நல்லதா ???....இப்போது ராகு திசை சுக்ர புத்தி நடக்கிறது..இந்த சுக்ர புத்தியில் காதல் கனிந்து வாடியும் விட்டது..Is it happened because of weak sukran.காதல் வாழ்க்கை காலி தானா வாத்தியாரே.ஒரே குழப்பமாக உள்ளது

    சுக்கிரன் கடகத்தில் எப்படி நீசமடைவார். என்னைக் குழப்புகிறீர்களே? கனிந்து வந்த காதலை வாட விட்டது உங்கள் தவறு. வேறு ஒரு மயில் கிடைக்காமலா போய்விடும்? முயற்சி செய்யுங்கள். கிடைத்தால் உடனே மணந்து கொண்டுவிடுங்கள். மயில் கிடைக்காவிட்டால், உங்கள் பெற்றோர்கள் பார்க்கும் ஒரு குயிலை மணந்து கொள்ளுங்கள். சுக்கிரபுத்தி நடப்பதால் இதைச் சொல்கிறேன்!

    2. லக்னத்தில் 35 பரல்கள் ,லக்னாதிபதி சுய வர்க்கத்தில் 6 பரல்கள்,ஏழாம் வீட்டில் 25 பரல்கள் ,ஏழாம் அதிபன் அமர்ந்த ஐந்தாம் வீட்டில் 23 பரல்கள்,புதன் சுயவர்க பரல்கள் 2...ஐந்தாம் அதிபன் சந்திரன் ரோகினி நட்சத்திரத்தில் உச்சமாக சுயவர்க்கத்தில் 8 பரல்களுடன் உள்ளார்.பலன் என்ன ஆசிரியரே..சிரமத்திற்கு மன்னிக்கவும் ..
    நன்றி ஆசிரியரே..
    ராஜ்

    மூன்று வீடுகளை வைத்துக் கும்மி அடித்திருக்கிறீர்கள். அதுவும் கும்மிப்பாட்டு மூன்று மொழிகளில் கலந்து இருக்கிறது. லக்கினம், ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு என்று நீண்ட பாடலாக இருக்கிறது. என்ன பலன் எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே? பலன் என்ன என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு என்ன நோய் என்ண்வென்று சொல்லாமல், மருத்துவரிடம் சென்று, எனக்கு என்ன நோயென்று சொல்ல முடியுமா? என்று கேட்பதைப் போல் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி!//

    வாத்தியாரே...
    1.முதல் கேள்வியில் என் சந்தேகம் சுக்ரன் ஆறில் மறைவது நல்லதல்ல அல்லவா...அனால் மீன லக்னத்திற்கு 3 & 8 வீடுகளுக்கு உரியவன் தானே சுக்ரன்.அதனால் அவர் மறைவது நல்லதா என்பது ஒரு சந்தேகம்,மற்றும் கடகம் சுக்ரனுக்கு பகை வீடு அல்லவா,அம்சத்தில் சுக்ரன் கடகத்தில் உள்ளார்.சுய வர்கத்திலும் 3 பரல் தான் கொண்டுள்ளார்..காதல்,திருமணம் போன்றவற்றிற்கு அவர் தானே incharge.அதனால் தான் கேட்கிறேன் காதல் வாழ்க்கை இனி அமையுமா ,நன்றாக இருக்குமா..தற்போது ராகு திசை சுக்ர புத்தி நடக்கிறது.ராகு 12 ஆம் வீட்டில் உள்ளார்,சுக்ரன் 6 வீட்டில் உள்ளார்.
    2.இரண்டாம் கேள்வியில் நான் கேட்ட பலன் திருமண பலன்.

    ReplyDelete
  18. /////Kumares said...
    ஐயா இனிய காலை வணக்கம்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  19. /////RVC said...
    present sir//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  20. /////ஜீவா said...
    அன்பு ஐயா அவர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் போல் விளக்கங்களுடன் பதில்கள் சூப்பர், ஐயா குருவுடன் ஞானகாரகன் கேது, ஒரு ஜாதக்கதில் 5,7,9 இதில் ஏதாவது ஒரு இடதில் சேர்ந்துயிருந்தால், ஜாதகன் ஞானியாகவும், இறைவனின் அருள் பெற்றவனாக இருப்பான் என்பது உண்மையா?
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா/////

    குருவுடன் கேது சேர்ந்தால் ஜாதகனுக்கு எதிலும் ஒரு பற்று அல்லது பிடிப்பு (detachment) இல்லாத நிலை உண்டாகும். ஞானத்திற்கு அதுதானே முதல் படி!

    ReplyDelete
  21. /////mike said...
    hello sir, how are you. sorry for being absent for so loong. chik un gunya vaati ettuthu vittathu..
    i have somethin intteresting to tell you.ennodu friend recenta oru jothidar ammavai parka ponan. avaar avanai naangu kelivagal(nakkai pidungaramari alla..lol..) kettathaga sonaan, nangu kelvikalukum numbergale pathilgal... athatvuthu muthalil pathirkul oru number appuram 100kul oru number ..eppadi naangu questions..okay?
    eppo intha naangu pathilgali vaithe avaar avan jathaga kattathai pottu vittaram...i felt very surprised and im lookin forwrd to meet that lady(old) astrologer..are you familiar with this type of astrologers?
    it is mathematically nearly impossible to guess the positions of fast movin planets ina persons horoscope.////

    எனக்கு அது பற்றித் தெரியாது ராசா! நீங்கள் சொல்வது புதுச் செய்தியாக உள்ளது!

    ReplyDelete
  22. ////mike said...
    also, i read pullipaani moonnuru athil nool asiriyar sevvai kanniyil natpu than endru sollukirar? avarudaya anubavathil athu seri engirar. anaal mattra noolkalil sevvai kaniyil pakkai endru irukirathu.
    also, please take a look at this video. very interesting test on astrology. let all the students and skeptics see it too..thanx
    http://www.youtube.com/watch?v=3N1dIUTbZTo/////

    அதைவைத்து அப்படி எழுதப்பெற்றிருக்கிறது என்று தெரியவில்லை சாமி!

    ReplyDelete
  23. /////வேலன். said...
    அய்யா...
    கேள்வி பதில் பகுதி மிகஅருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  24. /////சிங்கைசூரி said...
    அன்பு ஆசானுக்கும், வகுப்பறை நண்பர்களுக்கும் காலை வணக்கம்.
    இன்றைய பாடம் மிகவும் சுவையாக-நல்ல நகைச்சுவை கலந்து இருந்தது super பின்னிடேள் பேங்க,
    இந்த ஊர் Green Tea with honey சாபிட்ட ஒரு உற்சாகம்.
    your last line freaks,i was reading while tavelling in MRT(Train), was trying hard to control my laugh :-)////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  25. /////Gresilz said...
    //email No.43
    ஆண்டெஸ் ராஜ்!
    வணக்கம் ஆசிரியரே..
    வாத்தியாரே...
    1.முதல் கேள்வியில் என் சந்தேகம் சுக்ரன் ஆறில் மறைவது நல்லதல்ல அல்லவா...அனால் மீன லக்னத்திற்கு 3 & 8 வீடுகளுக்கு உரியவன் தானே சுக்ரன்.அதனால் அவர் மறைவது நல்லதா என்பது ஒரு சந்தேகம்,மற்றும் கடகம் சுக்ரனுக்கு பகை வீடு அல்லவா,அம்சத்தில் சுக்ரன் கடகத்தில் உள்ளார்.சுய வர்கத்திலும் 3 பரல் தான் கொண்டுள்ளார்..காதல்,திருமணம் போன்றவற்றிற்கு அவர் தானே incharge.அதனால் தான் கேட்கிறேன் காதல் வாழ்க்கை இனி அமையுமா ,நன்றாக இருக்குமா..தற்போது ராகு திசை சுக்ர புத்தி நடக்கிறது.ராகு 12 ஆம் வீட்டில் உள்ளார்,சுக்ரன் 6 வீட்டில் உள்ளார்.
    2.இரண்டாம் கேள்வியில் நான் கேட்ட பலன் திருமண பலன்.//////

    சொந்த ஜாதகத்தை வைத்துக்கேட்கப்படும் கேள்விகளுக்குப் பலன் சொல்வதற்கு, முழு ஜாதகமும் வேண்டும்.
    பின்னால் அதற்கு என்று தனியாக ஒரு தொடர் வகுப்பு உள்ளது. அப்போது கேளுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com