மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.1.10

Doubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?

Doubts: கேள்வி பதில் பகுதி எட்டு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.32
ராஜன் குமரேசன்

வாத்தியார்,

thanks for the email lessons about the much waited 10th house.It will take few more days to understand as

it is too heavy one.It is very helpful for many people.
Below is the some of the doubts I have

1 .நீச கிரகத்தை இன்னொரு நீச கிரகம் பார்த்தால் என்ன பலன்.இது யோகா கணக்கில் வருமா? கடக செவ்வாய், மகர குரு இரண்டும் நீசம். இதன் 7 ஆம் பார்வை எப்படி இருக்கும்?

வராது! ஒரு சீட்டு வாங்காமல் பயணிப்பவர் (Ticketless Traveller) இன்னொரு சீட்டு வாங்காமல் பயணிப்பவருக்கு எப்படி உதவ முடியும்? ஆனால் குரு எந்த நிலைமையில் இருந்தாலும் அவருடைய பார்வை நன்மையைத்தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. அதனால், அவருடைய பார்வை சற்றுப் பயன்தரும்!

2 .சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு.இங்கே, சூரியன் நீசம். இந்த அமைப்பு நீச பங்க ராஜ யோகம் ஆகுமா?.இங்கே சந்திரன் இருந்தால் பலன் மாறுமா?

ஒரு உச்சனும் ஒரு நீசனும் சேர்ந்து இருந்தால்தானே நீசபங்க ராஜ யோகம் உண்டாகும்? அது இல்லாத நிலையில் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கிறீர்கள்?

3.மிதுன லக்கின பத்தாம் இடம் மீனம். இதில் கேது இருந்து , லக்கினத்தில் குரு இருந்தால் சித்தர் போல இருக்கமுடியும் என்பது சரியா?

சரியில்லை! முதலில் ஜாதகனுக்கு ஞானம் வருமா என்று பாருங்கள். ஞானம் வருவதற்கு 4,8 12 ஆம் இடங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு அடுத்த நிலைதான் சித்தியடைவது!

4 .லக்கினாதிபதிக்குப் ( 3 ) பதில் ராசியதிபதிக்கு நல்ல பரல் ( 6 ) இருந்தால் நல்லதா?

மனைவியாக வருபவளுக்குப் பதில் மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா? என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி! லக்கினாதிபதிக்குப் பலன்கள் தனி. ராசி அதிபதிக்குப் பலன்கள் தனி. முதலில்
பழைய பாடங்களைப் படியுங்கள்

5.பத்தாம் இடக்கேது தொழிலில் இடைஞ்சல் பன்னாமல் இருக்க என்ன பண்ண வேண்டும்?

லஞ்சம் கொடுக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள்? பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும்? பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே? ஜாக்கிரதையாகத் தொழிலைச் செய்யுங்கள். இறைவனைத் தினமும் வழிபடுங்கள். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்!
-----------------------------------------------------
email No.33
சந்திரசேகரம் சஞ்சீவகாந்த்

Sir
vanakkam. i am chanjeev

1.can you please let me know about how to analyse previous jenma in our horoscope deeply?

முன் ஜென்மத்தை அலசுவதற்கெல்லாம் வழி இல்லை! இருக்கிற உபத்திரவங்கள் போதாதா? அதை எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் - சொல்லுங்கள்?

2.the houses are blank and there is no aspect what will happen?

பஸ்ஸில் கூட்டமே இல்லை என்ன செய்யலாம்? நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா? படுத்துக்கொண்டே செல்லுங்கள். எதற்காகக் கூட்டமே
இல்லையென்று கவலைப் படுகிறீர்கள்? பார்வை இல்லையே என்று கவலைப்படுவதும் அப்படித்தான். சரி, விஷயத்துக்கு வருவோம். கட்டம் காலியாக இருப்பதால், அதில் கிரகம் இல்லை, பார்வையும் இல்லை என்று
எப்படிச் சொல்கிறீர்கள்? பார்வைகளைப் பற்றி நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது.காலியாக உள்ள கட்டத்திற்கு எதிரில் உள்ள கட்டமும் (opposite house) காலியாக இருக்கிறதா? செவ்வாய், குரு, சனி
ஆகியவற்றிற்கெல்லாம் ஓரப் பார்வை உண்டு. அது தெரியுமா? முதலில் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

3.if we want see A man when will go abroad(long distance). how?

ஒன்பதாம் வீடுதான் வெளி நாட்டுப் பயணத்திற்கானது. யார், யார் போவார்கள்? அந்தப் பாடத்தில் அதை எழுதியிருக்கிறேன். முதலில் நீங்கள் பழைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படியுங்கள். ஒரு திரைப்படத்திற்கு
இடைவேளைக்குப் பிறகு வந்து விட்டு, முன் கதையில் நடந்தவற்றை ஒவ்வொன்றாகக் கேட்பதைப் போன்றது இது!
-----------------------------------------------------------
email No.34
போஜராஜன்

என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி
பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?

பத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத் தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது!
எவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு!

------------------------------------------------------------
email No.35
அருள் நிதி

அன்பான ஆசிரியர் அவர்களுக்கு,
சந்தேக விளக்கங்களுக்கு முதற்கண் நன்றி...

1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது
அவர் நக்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா?

குழப்புகிறீர்களே? அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது? அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.
அதை மட்டுமே பாருங்கள்!

2. செவ்வாய் தன் எதிரி சனியின் வீட்டில் உச்சம் அடைவதால் அந்த வீட்டிற்குண்டான உச்ச பலன்களை தருவாரா?

செவ்வாய் உச்சம் பெற்றதற்காக மகிழ்ச்சிகொள்ளாமல், அவர் எதிரி வீட்டில் இருக்கிறாரே என்று கவலை கொள்ளும் உங்களை என்ன செய்வது? தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன? குடிசையில் பிறந்திருந்தால் என்ன? அரண்மனைவாசியாக இருந்தால் என்ன? பெண் அழகாக இருந்தால் போதாதா? உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா? உச்சமானதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்

3.கடக,சிம்ம லக்னத்துக்கு யோககாரனான் செவ்வாய், கடக லக்னத்துக்கு 7 -ல்(உச்சம்) சுய பரலில் நன்கு மற்றும் பாபர் பார்வையின்றி ராசி மற்றும் அம்சத்தில் இருந்து மேசத்தில் உள்ள சனியுடன்(பாபர் பார்வையின்றி
சுய பரல் நன்று) பரிவர்த்தனை ஆகி இருந்தால் செவ்வாய் நல்ல பலன்களை தருவாரா? அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா? இது ஒரு உதாரணம்தான் தனிப்பட்ட ஜாதகம் இல்லை.

Parivartanai of Sani and Kuja, no matter how repressed it makes the personality, will give full discipline from Sani and full productivity from Kuja. The native will definitely accomplish something in life despite one's habit of taking the longer, harder road toward nearly every goal.

4.சனியும் சூரியனும் பரிவர்த்தனையானால் (1,2,4,5,7,9அல்லது 10க்கு அதிபதிகள்) அந்த வீட்டிற்குண்டான பலன் பாதிக்கப்படுமா???

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் நடித்த படத்தில் சண்டைக் காட்சி இருக்குமா? என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி! இருக்கும் பரிவர்த்தனைகளிலேயே சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது. அதிக தீமையானது. பலன்கள் பாதிப்பு அடையும்!

The combination of exchange/parivartan between sun and Saturn is the most worst combination and rest of the exchange/parivartan gives boosting and in this case of sun and satrun totally distroy the houses and the results related to those house in your case it is 5 & 11 house related to children ,mind ,income,elder brothers etc. all will be badly affected.

5.ராகு மற்றும் கேதுவுக்கு தனித்தனியே நண்பர்கள்,பகைவர்கள் உண்டா?

சனி, புதன் ஆகிய இருவரும் நண்பர்கள். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும் பகைவர்கள். குருவும், சந்திரனும் சமமானவர்கள்.

6.நம் உடலின் பகுதிகளுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் எவை எவை? நீங்கள் 7 கிரகங்களை பற்றி தனித்தனியே கொடுத்துள்ள பாடங்களில் இவை இல்லை....எடுத்துகாட்டாக
இரத்த செல்= ?
நரம்பு மண்டலம்=?
தசை மண்டலம்=?
மூளை=?
இதயம்=?

Planets & human body.
The planetary rulerships are as follows:
Sun rules bones.
Moon rules blood.
Mars rules marrow.
Mercury rules skin.
Jupiter rules fat.
Venus rules semen (materials related to the reproductive system).
Saturn rules muscles.
If Sun is afflicted, it can show some problems related to bones.
Weakness of Moon may give blood related problems. And so on.
---------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

54 comments:

  1. காலை வணக்கம் ஆசானே,
    பதில்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. *என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி
    பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?

    பத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத் தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது!
    எவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு!*

    மன்னிக்கவும் வாத்தியார் சார்.

    இந்தப் பதில் சரியானதுதானா? சிறிது யோசித்துப் பதில் அளிக்கவும்.

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    நச், நச், நச்.
    மிச்சம், சொச்சம் எதுவும் இல்லை,
    மொத்தத்தில் இருக்கையின் நுனியில்
    அமர்ந்து விறு விறு விறென்று படித்துத்
    தெளிந்தேன்.

    நன்றிகள் குருவே!

    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. முன் ஜென்ம புண்ணிய பாவங்களை அறிய ஷஷ்டியம்சா (D60)உபயோகிக்கிறார்கள்.பரிகாரமும் கூறப்படுகிறது. கிரக வக்கரகதி முன் ஜென்ம தொடர்பு என்றும் கூறப்படுகிறது. ஷஷ்டியம்சா கணிக்க துள்ளியமான பிறந்த நேரம் வேண்டும்.அதனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை.

    ReplyDelete
  5. ".......மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா?.... நல்ல குறும்பு!
    நீசபங்க ராஜயோகத்திற்கான பதில் இன்னும் கூர்மைப்படுத்தலாம்.புதியவர்களுக்குப் புரியாது.மற்றவை பல்சுவை! அருமை

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்,

    தங்கள் பதில் அருமை அய்யா ?ஒரு சில சந்தேகங்கள் உங்கள் பதில்களில் ...
    1.நீசனை நீசன் பார்ப்பின் குச்சும் மச்சு ஆகும் என்கிறார்களே ?அதை பற்றி ?
    2.ஞானம் பெற 4 ,8,12 இடம் பலமாக இருக்க வேண்டும் எனறீர்களே ,4 இல் குரு இருந்து 8,மற்றும் 12 ம் இடங்களை பார்த்தால் ஞானம் பெற வாய்ப்பு உண்டா அய்யா ?

    நன்றி வணக்கம்...

    ReplyDelete
  7. ஐயா!!!

    எனது சந்தேகங்களுக்கு சலித்துக்கொள்ளாமல் நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி...

    அருள்நிதி.

    ReplyDelete
  8. ஐயா !

    மாய கண்ணனை காணாது தாய் யசோதா ஏங்கியதை போல்!

    தாய் யசோதா வை காணாது கருநீல கண்ணன் ஏங்கியதை போல்!

    சூரியனை காணாது சூரியகாந்தி பூ வாடியதை போல்!

    சந்திரனை காணாது அல்லி பூ வாடியதை போல்!

    காதலனை காணாது காதலி ஏங்கியதை போல் !

    ஐயனின் வருகையை ஒரு நாள் காணாது இம்மாணவன் ஏங்கினேன் ஐயா!!!!!!!!!!!!!!!

    1. ஒரு திசை (சூர்ய அல்லது சந்திர திசை) மிகவும் நன்மையை தரும் எனில் அந்த திசை நாதன் நன்றாகத்தானே உள்ளான். என்பதுதானே கணக்கு ஐயா! ( ஷார்ட் கட் கணக்கு பாடம் ஐயா )

    2. பாவபலனை ஒருவன் அனுபவிப்பது போல், யோகா பலனை எப்படியும் அனுபவித்து தானே ஆகணும். இதில் மாற்றம் ஏதேனும் வருமா ? ஐயா!

    3 . " நீசபங்க ராஜ யோகத்திக்கு" ரத்ன சுருக்கமான, மன்னிக்கவேண்டும்!!! மேலும் மேலும் இரண்டு வரிகள் ஐயா!!!

    ReplyDelete
  9. மரியாதைக்குரிய வாத்தியார் ஐயாவுக்கு,

    ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?

    மனமிரங்கினால் பதில் கூறுங்களேன்.

    அதாவது சூரியனுடன் ராகுவும் (5TH PLACE), சந்திரனுடன் கேதுவும் (11TH PLACE) இணைந்திருந்தால் அந்த ஜாதகன் சபிக்கப்பட்டவனா?
    இந்த அமைப்பு சூரிய கிரகணத்தில் பிறந்ததை குறிக்குமா? அல்லது சந்திர கிரகணத்தில் பிறந்ததை குறிக்குமா?

    தயவு செய்து பதில் கூறுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றியுடன்,
    முருகன் அடிமை சரவணன்.

    ReplyDelete
  10. சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்

    http://kaveriganesh.blogspot.com

    ReplyDelete
  11. Present sir,

    In our question hours superrrrrrrrrr!

    Sankar

    ReplyDelete
  12. //Planets & human body.
    The planetary rulerships are as follows:
    Sun rules bones.
    Moon rules blood.
    Mars rules marrow.
    Mercury rules skin.
    Jupiter rules fat.
    ..
    ...................//
    ஆசிரியருக்கு வணக்கம்,

    செவ்வாய் ரத்தகாரகன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
    நீங்கள் "Moon rules blood." என்று சொல்கிறீர்கள் !!!!!!!!
    அம்மா,ஜோசியம் ரொம்ப கொழப்பமான topic என்றும் சொல்வார்கள்.
    தவிர, Just for information...I have read the below somewhere.
    Planets & Human System
    Sun = Circulatory System, pulse of life
    Moon = Support System & Involuntary Nervous System
    Mercury = Respiratory System
    Venus = Skin, Hair, Kidneys & sex organs
    Mars = Muscular System
    இது பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
    நன்றி,
    bharath

    ReplyDelete
  13. /////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    பதில்களுக்கு நன்றி.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  14. //////வாசகன் said...
    *என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது.

    எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி
    பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?
    பத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத்

    தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது!
    எவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல்

    போய்விடும் அபாயம் உண்டு!*
    மன்னிக்கவும் வாத்தியார் சார்.
    இந்தப் பதில் சரியானதுதானா? சிறிது யோசித்துப் பதில் அளிக்கவும்.///////

    எதற்கு மன்னிப்பு? உங்கள் கருத்தை நீங்கள் சொல்லலாம். எழுதியதை ஒரு முறைக்கு இரு முறை படித்துப்

    பார்த்துத்தான் பதிவில் ஏற்றுவது என்னுடைய வழக்கம்! சுய தொழிலில் இரண்டு விதம் உள்ளது. பணத்தை

    முதலீடு செய்து செய்யும் சுய தொழில்கள். பணம் இல்லாமல் செய்யும் சுய தொழில்கள் (துவக்கத்தில் விசிட்டிங்

    கார்டு மட்டும் இருந்தால் போதும்) உதாரணத்திற்கு business under commssion basis. இதை யார்

    வேண்டுமென்றாலும் செய்யலாம்.

    ஒரு வீட்டின் அதிபதி 12ல் இருந்தால் விரையம் உண்டாகும். 2ஆம் அதிபதி 12ல் இருந்தால் பணம் விரையமாகும். The expenditure will be more than the earnings & savings. 10ஆம் அதிபதி (தொழில்காரகன்) 12ல் இருந்தால், அதே விரையம் தொழில் மூலமாக ஏற்படும். அதனால் தான் கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது என்று சொல்லியுள்ளேன். எனது அனுபவத்தை வைத்துச் சொல்லியுள்ளேன்.

    அந்த அமைப்பும் இருந்து, மாற்றுக் கருத்தும் இருப்பவர்கள், செய்து பார்க்கலாம். எனக்கு ஒன்றும்

    ஆட்சேபனை இல்லை!

    வெறும் கையால் முளம் போடுவது என்பார்கள். அதுவும் சுயதொழில்தான். அதைச் செய்வதில் தவறில்லை.
    share brokers, real estate brokers, cotton brokers etc எல்லாம் அந்த அமைப்பில் வரும். ஆனால் அதற்கும்

    அனுபவம் தேவை (யாரிடமாவது வேலை செய்து தொழில் அறிவைப் பெற்ற நிலைமை) That is doing a business

    without any investment!

    என்னுடைய பதிவுகளை, நன்கு ஜோதிடம் அறிந்தவர்களும், சில தொழில் முறை ஜோதிடர்களும்

    படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் எனக்குத் தெரியாத எதையும் நான் எழுதுவதில்லை.
    I don't want to misguide anybody!

    அடுத்த முறை நீங்கள் பின்னூட்டம் இடும்போது உங்கள் சொந்தப் பெயரிலேயே பின்னூட்டம் இடுங்கள்.
    வாசகன் என்னும் பொதுப் பெயரில் ஒளிந்து கொள்ள வேண்டாம்! உங்களை அடையாளைப்படுத்திக்

    கொள்வதில் என்ன தயக்கம்? அதை முதலில் நீங்கள் யோசித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  15. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    நச், நச், நச். மிச்சம், சொச்சம் எதுவும் இல்லை, மொத்தத்தில் இருக்கையின் நுனியில் அமர்ந்து விறு விறு விறென்று படித்துத் தெளிந்தேன்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  16. ////krish said...
    முன் ஜென்ம புண்ணிய பாவங்களை அறிய ஷஷ்டியம்சா (D60)உபயோகிக்கிறார்கள்.பரிகாரமும்
    கூறப்படுகிறது. கிரக வக்கரகதி முன் ஜென்ம தொடர்பு என்றும் கூறப்படுகிறது. ஷஷ்டியம்சா கணிக்க துள்ளியமான பிறந்த நேரம் வேண்டும்.அதனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை.////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////kmr.krishnan said...
    ".......மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா?.... நல்ல குறும்பு!
    நீசபங்க ராஜயோகத்திற்கான பதில் இன்னும் கூர்மைப்படுத்தலாம்.புதியவர்களுக்குப் புரியாது.மற்றவை
    பல்சுவை! அருமை////

    நீசபங்க ராஜயோகம் பற்றிப் பதிவில் பழைய பாடத்தில் உள்ளது. இந்த வயசில் ஏது குறும்பு? சொல்வதைச் சுருதி சுத்தமாகச் சொல்வதற்கு, சில உதாரணங்களை அப்படித்தான் எழுத வேண்டியதாக உள்ளது கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  18. astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    தங்கள் பதில் அருமை அய்யா ?ஒரு சில சந்தேகங்கள் உங்கள் பதில்களில் ...
    1.நீசனை நீசன் பார்ப்பின் குச்சும் மச்சு ஆகும் என்கிறார்களே ?அதை பற்றி ?/////

    அதெல்லாம் சொல்லடைகள். அவ்வளவுதான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2.ஞானம் பெற 4 ,8,12 இடம் பலமாக இருக்க வேண்டும் எனறீர்களே ,4 இல் குரு இருந்து 8,மற்றும் 12 ம்
    இடங்களை பார்த்தால் ஞானம் பெற வாய்ப்பு உண்டா அய்யா ?
    நன்றி வணக்கம்...

    4,8,12 ஆகிய மூன்று வீடுகளுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  19. /////Arul said...
    ஐயா!!!
    எனது சந்தேகங்களுக்கு சலித்துக்கொள்ளாமல் நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி...
    அருள்நிதி.////

    சலிப்பு உணர்வு இல்லை. கிடையாது. இருந்தால் எப்படி நான் தொடர்ந்து பதிவுகளை எழுத முடியும்? இத்தனை பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்ல முடியும்?

    ReplyDelete
  20. ////kannan said...
    ஐயா !
    மாய கண்ணனை காணாது தாய் யசோதா ஏங்கியதை போல்!
    தாய் யசோதா வை காணாது கருநீல கண்ணன் ஏங்கியதை போல்!
    சூரியனை காணாது சூரியகாந்தி பூ வாடியதை போல்!
    சந்திரனை காணாது அல்லி பூ வாடியதை போல்!
    காதலனை காணாது காதலி ஏங்கியதை போல் !
    ஐயனின் வருகையை ஒரு நாள் காணாது இம்மாணவன் ஏங்கினேன் ஐயா!!!!!!!!!!!!!!!///////

    சத்தம் பலமாக இருக்கிறது சாமி! தினமும் இந்தக் கோஷம் தேவையா? யோசித்துப்பாருங்கள்

    ReplyDelete
  21. //////முருகன் அடிமை said...
    மரியாதைக்குரிய வாத்தியார் ஐயாவுக்கு,
    ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?
    மனமிரங்கினால் பதில் கூறுங்களேன்.
    அதாவது சூரியனுடன் ராகுவும் (5TH PLACE), சந்திரனுடன் கேதுவும் (11TH PLACE) இணைந்திருந்தால்

    அந்த ஜாதகன் சபிக்கப்பட்டவனா? இந்த அமைப்பு சூரிய கிரகணத்தில் பிறந்ததை குறிக்குமா? அல்லது சந்திர கிரகணத்தில் பிறந்ததை குறிக்குமா?
    தயவு செய்து பதில் கூறுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றியுடன்,
    முருகன் அடிமை சரவணன்./////

    சொந்த ஜாதகத்தை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிவில் இடமில்லை. மின்னஞ்சலில் வாருங்கள். நேரம் கிடைக்கும்போது பதில் சொல்கிறேன்

    ReplyDelete
  22. /////KaveriGanesh said...
    சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள் http://kaveriganesh.blogspot.com/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////jadam said...
    Present sir,
    In our question hours superrrrrrrrrr!
    Sankar////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  24. ////Bharath said...
    //Planets & human body.
    The planetary rulerships are as follows:
    Sun rules bones.
    Moon rules blood.
    Mars rules marrow.
    Mercury rules skin.
    Jupiter rules fat. ..
    ...................//
    ஆசிரியருக்கு வணக்கம்,
    செவ்வாய் ரத்தகாரகன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
    நீங்கள் "Moon rules blood." என்று சொல்கிறீர்கள் !!!!!!!!
    அம்மா,ஜோசியம் ரொம்ப குழப்பமான topic என்றும் சொல்வார்கள்.
    தவிர, Just for information...I have read the below somewhere.
    Planets & Human System
    Sun = Circulatory System, pulse of life
    Moon = Support System & Involuntary Nervous System
    Mercury = Respiratory System
    Venus = Skin, Hair, Kidneys & sex organs
    Mars = Muscular System
    இது பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
    நன்றி,
    bharath///////

    சூரியனும், புதனும் நெருப்புக் கிரகங்கள். சந்திரன் நீருக்கான கிரகம். அதை வைத்து ரத்த சம்பந்தமான அத்தனை நோய்களுக்கும் பலமில்லாத சந்திரனே காரணமாவான் என்பது ஜோதிட விதி! மற்ற விவரங்களை நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்!

    ReplyDelete
  25. வணக்கம் அய்யா,
    wish you happy new year..!
    May the powerful almighty bestow you and your family with his "Choicest Blessings" throught this fantastic New Year..!

    you told that ஞானம் பெற 4 ,8,12 இடம் பலமாக இருக்க வேண்டும் எனறீர்களே,what should be there in that place along with kethu bagavan.Can you pls explain me in detail...

    ReplyDelete
  26. Vaathiyariya,

    Thanks for your explanations..

    I had raised this since I red somewhere that * Neesananai Neesan parthal Yogam ** irrukum enbathal Keten ***.MAy be Some one might have told, Guru parka Kodi Nanamai ...

    Question about Ketu was like How to come out with the struggles of 10th place kethu.

    Though the individual has skills ( kethu in 10th place) , the same individual's skill will not be notified to others or respected or recognized etc

    My intension was to know about any *** Parigaram ** for that.

    Number 1 : Prayer is the one as always for everything.For kethu, Praying Vinayagar will take care of it.

    I would like to know if any other one

    Thanks
    Rajan

    ReplyDelete
  27. /////Arun A. said...
    வணக்கம் அய்யா,
    wish you happy new year..!
    May the powerful almighty bestow you and your family with his "Choicest Blessings" throught this fantastic New Year..!
    you told that ஞானம் பெற 4 ,8,12 இடம் பலமாக இருக்க வேண்டும் எனறீர்களே,what should be there in that place along with kethu bagavan.Can you pls explain me in detail...////

    பழைய பாடங்களில் உள்ளது. படித்துப்பாருங்கள்!

    ReplyDelete
  28. /////Rajan said...
    Vaathiyariya,
    Thanks for your explanations..
    I had raised this since I red somewhere that * Neesananai Neesan parthal Yogam ** irrukum enbathal Keten ***.MAy be Some one might have told, Guru parka Kodi Nanamai ...
    Question about Ketu was like How to come out with the struggles of 10th place kethu.
    Though the individual has skills ( kethu in 10th place) , the same individual's skill will not be notified to others or respected or recognized etc
    My intension was to know about any *** Parigaram ** for that.
    Number 1 : Prayer is the one as always for everything.For kethu, Praying Vinayagar will take care of it.
    I would like to know if any other one
    Thanks
    Rajan//////

    நீங்கள் சொன்ன பரிகாரம் சிறந்தது. அதையே செய்யுங்கள்!

    ReplyDelete
  29. ஐயா!!!

    தலைவியிடம் தோழி கேக்கின்றால்!

    மாதர் குலத்து மணிமகிடமே!
    ஏன் நீ உடல் தளர்த்து, முகம் வாடி,
    கோவை பழம்போன்று உனது பொற்பாதங்கள் சிவக்க காரணம் என்ன என்று ?

    தலைவி சொல்லுகின்றாள் :

    பொருள் ஈட்டும் பொருட்டு, என்னவன் சென்று இருதினங்கள் ஆகுது .
    என்னவனின் வரவை நோக்கியே! உடலும் தளர்த்து, முகமும் வாடி,
    வீட்டிக்கும்! வீட்டு முற்றதிக்கும் எனது கால்கள் நடந்து! கோவை பழம்போல் சிவந்து போயின என்று !

    ஐயா !

    இது நாயன்மார்கள் சிவன்மேல் கொண்ட காதல் போன்றது,!

    இது ஆழ்வார்கள்! எம்பெருமான் கோபாலன் மேல் கொண்ட காதல் போன்றது,!

    இது ஆண்டாள் மாயகண்ணன் மேல் கொண்ட காதல் போன்றது!

    மானசிகமான குருநாதர் கூறுங்கள்!

    இதில், தவறு ஏதேனும் உண்டோ

    ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  30. *என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?
    இந்த கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி அய்யா.
    நான் ஒரு சிறு தொழில் செய்து நஷ்டம் அடைந்தது உண்மைதான்.
    வேலை செய்து சம்பாதித்து இன்வெஸ்ட்மென்ட் கூட நஷ்டம் அடைகிறதே?
    மேலும் பார்ட் டைம் ஆக இரண்டு வேலை செய்கிறேன்.பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள்
    ஏதேனும் குழப்பமா?. சுக்கிரனும் உச்சத்தில் மீனத்தில் இருக்கிறார்.

    pojarajan, Madurai

    ReplyDelete
  31. இன்னிக்கு நீங்க செம மூட்லே reply பண்ணிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது சார்.
    ticketless traveller லே ஆரம்பிச்சு மனைவிக்குப் பதில் மாமியார் என்று சீண்டி கடைசியில் MGR நம்பியார் stunt என்று இன்னிக்கு கிளாஸ் ஒரே ரகளைதான் போங்க..

    ReplyDelete
  32. ///krish said...
    முன் ஜென்ம புண்ணிய பாவங்களை அறிய ஷஷ்டியம்சா (D60)உபயோகிக்கிறார்கள்.பரிகாரமும் கூறப்படுகிறது. கிரக வக்கரகதி முன் ஜென்ம தொடர்பு என்றும் கூறப்படுகிறது. ஷஷ்டியம்சா கணிக்க துள்ளியமான பிறந்த நேரம் வேண்டும்.அதனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை.///

    krish..
    இதெல்லாம் ரொம்ப ஓவர்.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க..out of syllabus...but so interesting ..topic .....

    ReplyDelete
  33. Dear Sir,

    Thanks for the clarifications.

    Balakumaran

    ReplyDelete
  34. லக்கனம் : மகரம்
    மூன்றில் :சனி,ராகு
    நான்காம் இடத்தில் :சூரியன், புதன், சுக்கிரன்
    ஆரில் :சந்திரன்
    ஒன்பதில் :குரு,கேது
    பதினொன்றில் : செவ்வாய்

    சந்திரனுக்கு முன்னும், பின்னும்,கிரகம் இல்லை நான் தனிமை படுத்த படுவேனா? ஒரு ஜாதகம் பார்பவர்சொல்லுகிறார், குருவும், கேதுவும் சேர்ந்து இருக்கிறது அதனால் நான் சன்யாசி ஆவேன் என்று சொல்லுகிறார் இது உண்மையா?

    தயவு செய்து இந்த கேள்விகளுக்கு அய்யா பதில் கூற வேண்டி தாழ்மையுடன்
    கேட்டுக்கொள்கிறேன்
    அன்புடன் ஜீவா.

    ReplyDelete
  35. minorwall said..
    இன்னிக்கு நீங்க செம மூட்லே reply பண்ணிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது சார்.
    ticketless traveller லே ஆரம்பிச்சு மனைவிக்குப் பதில் மாமியார் என்று சீண்டி கடைசியில் MGR நம்பியார் stunt என்று இன்னிக்கு கிளாஸ் ஒரே ரகளைதான் போங்க..///
    ஆமாம் கிரிஷ் சார், சாருக்கு சுக்கிரன் உச்சம் எப்பவும் செம மூடு அப்புறம் 337 டானிக்கு குடிப்பார் 2010ல்ல இது முதல் திங்க கிழமை. அப்புறம் வாத்தியாரின் கற்பனை பதிலை படித்து பாருங்கள் ரொம்பா......................... சந்தோஷாமாயிருக்கும்
    சுந்தரி.

    ReplyDelete
  36. /////kannan said...
    ஐயா!!!
    தலைவியிடம் தோழி கேட்கின்றாள்:
    மாதர் குலத்து மணிமகுடமே! ஏன் நீ உடல் தளர்த்து, முகம் வாடி, கோவைப் பழம்போன்று உனது பொற்பாதங்கள் சிவக்க காரணம் என்ன என்று ?
    தலைவி சொல்கின்றாள் : பொருள் ஈட்டும் பொருட்டு, என்னவன் சென்று இருதினங்கள் ஆகுது .
    என்னவனின் வரவை நோக்கியே! உடலும் தளர்த்து, முகமும் வாடி, வீட்டிக்கும்! வீட்டு முற்றதிக்கும் எனது கால்கள் நடந்து! கோவை பழம்போல் சிவந்து போயின என்று !
    ஐயா ! இது நாயன்மார்கள் சிவன்மேல் கொண்ட காதல் போன்றது,!
    இது ஆழ்வார்கள்! எம்பெருமான் கோபாலன் மேல் கொண்ட காதல் போன்றது,!
    இது ஆண்டாள் மாயகண்ணன் மேல் கொண்ட காதல் போன்றது
    மானசிகமான குருநாதர் கூறுங்கள்!
    இதில், தவறு ஏதேனும் உண்டோ ஐயா
    !!!!!!!!!!!!!!!!!!!////////

    இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை சாமி. நான் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டேன்!

    ReplyDelete
  37. //////Pojarajan said...
    *என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?
    இந்த கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி அய்யா.
    நான் ஒரு சிறு தொழில் செய்து நஷ்டம் அடைந்தது உண்மைதான். வேலை செய்து சம்பாதித்து இன்வெஸ்ட்மென்ட் கூட நஷ்டம் அடைகிறதே? மேலும் பார்ட் டைம் ஆக இரண்டு வேலை செய்கிறேன்.பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் ஏதேனும் குழப்பமா?. சுக்கிரனும் உச்சத்தில் மீனத்தில் இருக்கிறார். pojarajan, Madurai

    என்ன தசா/புத்தி நடைபெறுகிறது என்று பாருங்கள். கஷ்டங்கள் தொடர்கதை அல்ல! தசை மாறும்போது எல்லாம் மாறிவிடும் - இரவு பகலைப்போல!

    ReplyDelete
  38. ////minorwall said...
    இன்னிக்கு நீங்க செம மூட்லே reply பண்ணிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது சார்.
    ticketless traveller லே ஆரம்பிச்சு மனைவிக்குப் பதில் மாமியார் என்று சீண்டி கடைசியில் MGR நம்பியார் stunt என்று இன்னிக்கு கிளாஸ் ஒரே ரகளைதான் போங்க..//////

    சமயங்களில் மாணவர்கள்தான் ரகளை செய்வார்கள். வாத்தியாருமா செய்கிறார்? கேட்கவே நன்றாக இல்லை மைனர்! வாத்தியாரை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

    ReplyDelete
  39. ////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the clarifications.
    Balakumaran/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  40. /////ஜீவா said...
    லக்கினம் : மகரம்
    மூன்றில் :சனி,ராகு
    நான்காம் இடத்தில் :சூரியன், புதன், சுக்கிரன்
    ஆறில் :சந்திரன்
    ஒன்பதில் :குரு,கேது
    பதினொன்றில் : செவ்வாய்
    சந்திரனுக்கு முன்னும், பின்னும்,கிரகம் இல்லை நான் தனிமை படுத்தப் படுவேனா? ஒரு ஜாதகம் பார்ப்பவர்சொல்லுகிறார், குருவும், கேதுவும் சேர்ந்து இருக்கிறது அதனால் நான் சன்யாசி ஆவேன் என்று சொல்லுகிறார் இது உண்மையா? தயவு செய்து இந்த கேள்விகளுக்கு அய்யா பதில் கூற வேண்டி தாழ்மையுடன்
    கேட்டுக்கொள்கிறேன்
    அன்புடன் ஜீவா.////////

    ஒன்பதாம் வீட்டில் குரு இருக்கிறாரே! அவர் பார்த்துக்கொள்வார். கவலைப் படாதீர்கள்! உங்களின் வயதென்ன? திருமணமாகி விட்டதா? இன்னும் திருமணமாகவில்லை என்றால், முதலில் ஒரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். வருகிற அம்மணியிடம் விட்டு விடுங்கள்.அவர் பார்த்த்துக் கொள்வார்!

    ReplyDelete
  41. அருமையான கேள்வி பதில்கள் ஐயா நன்றி
    சேர்மராஜ்

    ReplyDelete
  42. Minorwall
    முன் ஜென்மத்தை பற்றி சொல்வது மிக எளிது. நாம் சொல்லியது தானே.ஜோதிடத்தின் விஸ்த்தாரத்தையும் அதை வாத்தியார் எப்படி எளிதாக ஆக்குகிறார் என்பதற்காக கூறினேன்.நம் ஜாதகத்தை வைத்து சகோதரர்களுக்கு பலன் சொல்லும் முறையும் உள்ளது.

    ReplyDelete
  43. ///tamiltemples said...
    அருமையான கேள்வி பதில்கள் ஐயா நன்றி
    சேர்மராஜ்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  44. When consultued with an astrologer for a girl born {4/12/1984 10:44 AM Madurai)
    they said saturn aspects some planets and she will have less progency
    But when i checked i dont find those aspects based on your lessons..
    Please clarify my confusion.

    Thanks a lot

    Regards,
    B.Srinath

    ReplyDelete
  45. வணக்கம் சார்..
    சொந்த ஜாதகத்தில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும்...ஆனால் வேறு வழி இல்லை ஆசானே.மீன லக்னம்,மூன்றில் சந்திரன் மாந்தியுடன்,நான்காம் வீட்டில் குரு,ஐந்தாம் வீட்டில் புதனும் சூரியனும்,ஆறாம் வீட்டில் சுக்ரன்,செவ்வாய்,கேது நிற்கிறார்கள் ,பத்தாம் வீட்டில் சனி வக்ரமாக இருக்கிறார்,ராகு பன்னிரண்டில்...ஏற்கனவே கடந்த ஆண்டு ராகு திசை சுக்ர புத்தியில் காதல் தோல்வி அடைந்து,விபத்தை சந்தித்து பல இன்னல்கள் பட்டேன்.இந்த வருடம் கூட குரு மற்றும் சனி 12 and 7 இடங்களுக்கு வருவதால் இன்னும் என்னவெல்லாம் வரபோகுதுன்னு குழப்பமா இருக்கு சார்...சிரமத்திற்கு மன்னிக்கவும்..இன்னும் அந்த ராகு திசை சுக்ர புத்தி தன நடக்கிறது..Pls do reply my query sir

    ReplyDelete
  46. ///// SP.VR. SUBBIAH said...
    சமயங்களில் மாணவர்கள்தான் ரகளை செய்வார்கள். வாத்தியாருமா செய்கிறார்? கேட்கவே நன்றாக இல்லை மைனர்! வாத்தியாரை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?/////
    ஒரு change க்கு வாத்தியாரை பெஞ்ச் மேலே ஏத்தினால் எப்பிடியிருக்கும் சார்.?அப்பிடிப் பண்ணினால் உலகத்திலேயே first classroom இதுவாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  47. krish ,
    இதுபோன்ற நல்ல interesting topic பத்தி வெப்சைட், புக்ஸ், colections இருந்தால் பகிர்ந்து கொண்டால் எல்லோருமே படிக்கலாம்.
    ////முன் ஜென்மத்தை பற்றி சொல்வது மிக எளிது. நாம் சொல்லியது தானே.///
    நாம் சொல்லியதுதானே என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை..

    ஆசிரியர் அவர்களுக்கு,
    தாய் மாமன் பற்றி 5ஆம் இடம் சொல்லும் என்பது எந்த அளவில் உண்மை?வாய்ப்புகள் உள்ளதா?
    ஒருவரின் ஜாதகத்தை வைத்து உடன்பிறந்தோர்,உறவினர் ஜாதகம் சொல்லுதல் சாத்தியமா?
    நம்மதையே பார்த்து கொஞ்சம் போரடிக்குது.மத்தவங்களையும் கலைக்கலாமேன்னு ஒரு இதுதான்.

    ReplyDelete
  48. Srinath said...
    When consultued with an astrologer for a girl born {4/12/1984 10:44 AM Madurai)
    they said saturn aspects some planets and she will have less progency
    But when i checked i dont find those aspects based on your lessons..
    Please clarify my confusion.
    Thanks a lot
    Regards,
    B.Srinath///

    இது தனிப்பட்ட ஜாதகத்தைப் பற்றிய சந்தேகம். இதற்குப் பதிவில் இடமில்லை. மின்னஞ்சல் மூலமாக
    வாருங்கள். classroom2007@gmail.com. நேரம் கிடைக்கும்போது பதில் சொல்கிறேன்!

    ReplyDelete
  49. ////prithvi said...
    வணக்கம் சார்..
    சொந்த ஜாதகத்தில் சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும்...ஆனால் வேறு வழி இல்லை ஆசானே.மீன
    லக்னம்,மூன்றில் சந்திரன் மாந்தியுடன்,நான்காம் வீட்டில் குரு,ஐந்தாம் வீட்டில் புதனும் சூரியனும்,ஆறாம்
    வீட்டில் சுக்ரன்,செவ்வாய்,கேது நிற்கிறார்கள் ,பத்தாம் வீட்டில் சனி வக்ரமாக இருக்கிறார்,ராகு
    பன்னிரண்டில்...ஏற்கனவே கடந்த ஆண்டு ராகு திசை சுக்ர புத்தியில் காதல் தோல்வி அடைந்து,விபத்தை
    சந்தித்து பல இன்னல்கள் பட்டேன்.இந்த வருடம் கூட குரு மற்றும் சனி 12 and 7 இடங்களுக்கு வருவதால் இன்னும் என்னவெல்லாம் வரபோகுதுன்னு குழப்பமா இருக்கு சார்...சிரமத்திற்கு மன்னிக்கவும்..இன்னும் அந்த
    ராகு திசை சுக்ர புத்தி தன நடக்கிறது..Pls do reply my query sir

    இது தனிப்பட்ட ஜாதகத்தைப் பற்றிய சந்தேகம். இதற்குப் பதிவில் இடமில்லை. மின்னஞ்சல் மூலமாக
    வாருங்கள். classroom2007@gmail.com. நேரம் கிடைக்கும்போது பதில் சொல்கிறேன்!

    ReplyDelete
  50. /////minorwall said...
    ///// SP.VR. SUBBIAH said...
    சமயங்களில் மாணவர்கள்தான் ரகளை செய்வார்கள். வாத்தியாருமா செய்கிறார்? கேட்கவே நன்றாக
    இல்லை மைனர்! வாத்தியாரை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?/////
    ஒரு change க்கு வாத்தியாரை பெஞ்ச் மேலே ஏத்தினால் எப்பிடியிருக்கும் சார்.?அப்பிடிப் பண்ணினால் உலகத்திலேயே first classroom இதுவாகத்தான் இருக்கும்./////

    இப்போதும் நம் வகுப்புதான் முதல் இடத்தில் உள்ளது. 1186 மாணவர்களை வைத்து எந்த வகுப்பில்(தனி ஒருவர்
    வாத்தியாராக இருந்து) பாடம் நடக்கிறது? சொல்லுங்கள் மைனர்!

    ReplyDelete
  51. /////minorwall said...
    krish ,
    இதுபோன்ற நல்ல interesting topic பத்தி வெப்சைட், புக்ஸ், colections இருந்தால் பகிர்ந்து கொண்டால் எல்லோருமே படிக்கலாம்.
    ////முன் ஜென்மத்தை பற்றி சொல்வது மிக எளிது. நாம் சொல்லியது தானே.///
    நாம் சொல்லியதுதானே என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை..
    ஆசிரியர் அவர்களுக்கு,
    தாய் மாமன் பற்றி 5ஆம் இடம் சொல்லும் என்பது எந்த அளவில் உண்மை?வாய்ப்புகள் உள்ளதா?
    ஒருவரின் ஜாதகத்தை வைத்து உடன்பிறந்தோர்,உறவினர் ஜாதகம் சொல்லுதல் சாத்தியமா?
    நம்மதையே பார்த்து கொஞ்சம் போரடிக்குது.மத்தவங்களையும் கலைக்கலாமேன்னு ஒரு இதுதான்.///////

    ஜோதிடத்தை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் குறைவு. அது பெரிய கடல். கற்றுத் தேருவதற்கு வயது
    பத்தாது. காலம் முடிந்துவிடும். கற்றுத்தேர்ந்தவர்களுடனேயே ஜோதிடம் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடும்.நடக்கும் என்பார் நடக்காது.நடக்காது என்பார் நடந்துவிடும். அதற்குக் காரணம் 5ஆம் வீடு என்னும் பூர்வ
    புண்ணியம். அதில் என்ன ஸ்டோர் ஆகியுள்ளது என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம்.
    பிரதம மந்திரியின் வறட்சி மற்றும் வெள்ள நிதி போல பல சமயங்களில் அது ஜாதகனுக்கு நிதி (நன்மை) அளித்து அது கைகொடுக்கும். ஆகவே சாதாரணமான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரு ஜோதிடனால்,
    சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.

    பல் மருத்துவர், கண் மருத்துவர், பிரசவ மருத்துவர், வயிற்றுவலி மருத்துவர் என்று பலவிதமான மருத்துவர் இருப்பதைப்போல, ஜோதிடத்திலும் ஒவ்வொரு பிரிவிலும் அனுபவம் பெற்ற ஜோதிடர்கள் இருப்பார்கள். கல்வி,
    மண வாழ்க்கை, பணக்கஷ்டம், வேலை, நோய்நொடிகள், ஆயுள் என்று ஒவ்வொரு துறையிலும் அனுபவம் உள்ளவர்கள் இருப்பார்கள். அது போல காய்ச்சல், சளி போன்ற அன்றாட நோய்களுக்கான மருத்துவர்கள்
    இருப்பதைப் போல பொதுப் பிரச்சினைகளைப் பார்த்துச் சொல்லும் ஜோதிடர்களும் இருப்பார்கள். எல்லாம் அனுபவத்தை வைத்துத்தான்.பலரது ஜாதகங்களைப் பார்த்த அனுபவம். அவர்களுக்கு, அவர்களுடைய துறைகளில் மட்டுமே அனுபவம் இருக்கும்.

    கர்நாடக இசை, மேற்கத்திய இசை, கிராமிய இசை, மெல்லிசை என்று அத்தனை இசைகளிலும் கலக்கும்
    இளையராஜாவைப்போல, அனைத்தும் தெரிந்த ஜோதிடர்கள் மிகவும் குறைவு. எனக்குத் தெரிந்து பெங்களூர் வெங்கட்ராமன் அவர்கள் அப்படிப் பலதுறை ஜோதிட வித்தகர். அவர் இப்போது இல்லை. காலமாகிவிட்டார்.

    தனி மனித ஜாதகத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன. அதனால் ஒரு மனிதனின் ஜாதகத்தைப் பார்த்து
    அவனுக்கு உரிய பலனை மட்டுமே சொல்ல முடியும். தாய் வழி, தந்தைவழி உறவுகளால், அவனுக்குப் பலன் இருக்குமா? அல்லது இருக்காதா? பூர்வீகச் சொத்து கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பது போன்ற
    பொதுப்பலனை மட்டுமே சொல்ல் முடியும்.

    அப்பாவிற்கு எத்தனை தொடுப்பு, மாமாவிற்கு எத்தனை தொடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களைச் சொல்ல முடியாது. அதற்கு அவர்களுடைய ஜாதகங்களைப் பார்க்க வேண்டும்

    விளக்கம் போதுமா மைனர்?

    ReplyDelete
  52. Minorwall,
    http://mimishandshuna.com/forum/
    index.php
    There are number of vedic astrology books and softwares in this forum.
    பூர்வஜென்மத்தை பற்றி ஜோதிடம் உண்மையா பொய்யா என யாருக்கு தெரியும் என்ற அர்த்தத்தில் கூறினேன்.அவ்வளவு தான்.

    ReplyDelete
  53. அப்பாவிற்கு எத்தனை தொடுப்பு, மாமாவிற்கு எத்தனை தொடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களைச் சொல்ல முடியாது என்றால் யாரையும் கலாய்க்க முடியாது..சரி..விட்டுவிடுவோம்...

    ReplyDelete
  54. நன்றி krish அவர்களே.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com