மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.7.09

பணம் வழங்கும் பெட்டியும், வோட்டுப் பெட்டியும்!

பணம் வழங்கும் பெட்டியும், வோட்டுப் பெட்டியும்!

தானியங்கிப் பணம் வழங்கிப் (Automatic Teller Machine) பெட்டிக்கும்
வோட்டுப் பெட்டிக்கும் என்ன வித்தியாசம்?

தானியங்கிப் பணம் வழங்கி (Automatic Teller Machine) ஓட்டைப் போட்ட
பிறகுதான் (after inserting our card) பணம் தரும்.

ஆனால் ஓட்டுப்பெட்டி ஓட்டைப் போடும் முன்பே பணம் தரும்!

சென்ற தேர்தலில், சில தொகுதிகளில் ஒரு வாக்கிற்கு ஆயிரம் முதல்
முவாயிரம் வரை பணம் விளையாடியதாகத் தகவல்.

இப்போது அது முக்கியமல்லை!

அதை வழங்கியவர்களுக்கு, அரசியல் கட்சிகளுக்குத்தான் எத்தனை
கோடிப் பணம் - மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக?

பார்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், அரசியலில் ஆர்வம் வரும்.
நாமும் சேர்ந்து கிளப்புவோமா என்று நினைப்பான்.

கிளப்ப முடியுமா?

அதெப்படி முடியும்? அதெற்கெல்லாம் ஜாதகப்படி ஒரு அம்சம் வேண்டாமா?

அதற்கான அம்சங்களைக் கீழே கொடுத்துள்ளேன்

உங்களுக்கு ஏதாவது தேறுமா? பாருங்கள்
*******************************

1
ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் உரிய கோளான சூரியன்,
ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
நன்றாக இருந்தால் மட்டும் போதுமா? இல்லை!,
கோள்களில் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் ஆசீர்வாதத்தையும்
- அதாவது பார்வையையும் அவர் பெற்றிருக்க வேண்டும்!

2
ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் உரிய கோளான செவ்வாய் ஜாதகத்தில்
வலிமையாக இருக்க வேண்டும்.

3
சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!

4.
நல்ல நிலைமையில் இருக்கும் புதன் மட்டுமே ஜாதகனுக்குப் பேச்சாற்றலைக்
கொடுக்கும். பேச்சாற்றல் அரசியலில் எவ்வளவு முக்கியம் என்பது
உங்களுக்குத் தெரியாதா என்ன?

5
ஐந்தாம் வீட்டதிபதி அதற்கு முன் வீட்டில் இருந்தால் - அதாவது 4ல் இருந்தால்,
ஜாதகன் தன் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, மந்திரியாகி விடுவான்

6
ஓன்பதாம் வீட்டில் குரு இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அரசியல்
வாழ்க்கைக்கு அது மிகவும் நன்மையளிக்கும்

7.
நான்காம் வீடு பொது வாழ்க்கையைக் குறிக்கக்கூடியது. அதில் வலிமையான
கிரகம் இருந்தாலோ அல்லது பார்வையிட்டாலோ, ஜாதகன், அரசியலில்
பெரும் வெற்றியைப் பெறுவான்.

------------------------------------------
இன்று இவ்வளவுதான்.
அடுத்த பாடம் நாளை!

அன்புடன்
வகுப்பறை
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

32 comments:

  1. பதிவு ரத்தினச் சுக்கமாக இருந்தது, நாளை இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  2. ////Blogger மதி said...
    பதிவு ரத்தினச் சுக்கமாக இருந்தது, நாளை இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன்.
    நன்றி.////

    நேரமின்மையால் பதிவு ரத்தினமாகிவிட்டது. பெரிய பதிவு என்றால், திங்கட்கிழமையன்று வலையேற்றுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். நடுவில் 3 நாட்கள் வெளியூர் பயணம்!

    ReplyDelete
  3. ///3
    சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
    ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!///

    ஐயா,வணக்கம்.
    4ல் அதாவது மேஷத்திலிருக்கும் சூரியனுடன் சேர்ந்திருக்கும் புதனை லக்னாதிபதி சனி கடகத்திலிருந்து பார்க்கும் நிலையில் மேற்கண்ட விதி பொருந்துமா?
    (நாமும் சேவை (உண்மையிலேயே சேவைதான்) செய்யலாம் என்றுதான்)

    ReplyDelete
  4. Dear Sir

    Narukkendru 7 bullets neengal Koduthu Asathivittu..Indru Padam Ivvalavuthan endru vitterrgal..

    Idhu Podhum Aiyya Endru Sollamudiyavillai(Intrest)...Innum Vendum Enbadhu Namadhu manavarkalin Thrust for Astro..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. உஙகள் பதிவு மிக சரி அய்யா!இந்திரா காந்தி ஜாதகத்தில் குரு பார்வை
    சூரியனுக்கு உள்ளதே!
    KMR.KRISHNAN
    http;//parppu.blogspot.com

    ReplyDelete
  6. நம் ஜாதகம் தேராது..யாராவது தெரிந்தவர்களின் ஜாதகம் அவ்வாறு இருக்கா என்டு பார்க்கனும் (கவனமா இருக்கனும் அல்லோ) சரி ஜயா 3 நாளைக்கு லீவு ஜாலி.. ;) திங்கள் மீண்டும் வருகிறேன்..

    ReplyDelete
  7. ////Blogger தியாகராஜன் said...
    ///3
    சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
    ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!///
    ஐயா,வணக்கம்.
    4ல் அதாவது மேஷத்திலிருக்கும் சூரியனுடன் சேர்ந்திருக்கும் புதனை லக்னாதிபதி சனி கடகத்திலிருந்து பார்க்கும் நிலையில் மேற்கண்ட விதி பொருந்துமா?
    (நாமும் சேவை (உண்மையிலேயே சேவைதான்) செய்யலாம் என்றுதான்)/////

    மூன்றின் சுயவர்க்கமும் முக்கியம் தியாகராஜன். அதையும் பாருங்கள்!

    ReplyDelete
  8. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Narukkendru 7 bullets neengal Koduthu Asathivittu..Indru Padam Ivvalavuthan endru vitterrgal..
    Idhu Podhum Aiyya Endru Sollamudiyavillai(Intrest)...Innum Vendum Enbadhu Namadhu manavarkalin Thrust for Astro..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    தாகம்! அது எனக்கும் தெரியும் நண்பரே!
    அடுத்த பதிவுகளில் அசத்திவிடுவோம்

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    உஙகள் பதிவு மிக சரி அய்யா!இந்திரா காந்தி ஜாதகத்தில் குரு பார்வை
    சூரியனுக்கு உள்ளதே!
    KMR.KRISHNAN
    http;//parppu.blogspot.com////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன்!

    ReplyDelete
  10. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    நம் ஜாதகம் தேராது..யாராவது தெரிந்தவர்களின் ஜாதகம் அவ்வாறு இருக்கா என்டு பார்க்கனும் (கவனமா இருக்கனும் அல்லோ) சரி ஜயா 3 நாளைக்கு லீவு ஜாலி.. ;) திங்கள் மீண்டும் வருகிறேன்../////

    மூன்று நாட்கள் விடுப்பு என்று சும்மா இருக்காதீர்கள் இமானுவேல்!
    பழைய பாடங்களைப் படியுங்கள்.
    பரீட்சை வைத்தாலும் வைப்பேன்!:-)))))

    ReplyDelete
  11. யப்பா, நமக்கு அரசியல் எல்லாம் வேண்டாமப்பா!

    ReplyDelete
  12. Sir,

    Your lessons are good. I have been following this for 1 year. Sometimes I will analyse it with my son's horoscope.

    ReplyDelete
  13. ஆட்சியாளர் ஆவதற்கு மகாபுருஷ யோகங்கள் அவ்வளவு முக்கியம் இல்லையா அய்யா

    ReplyDelete
  14. Sir,

    I have sun, mercury and sani in lagna....but but but.....mercury is retrograde, anyhow I am not interested in politics.

    -Shankar

    ReplyDelete
  15. தாங்கள் சொன்னது அந்தந்த கிரகங்களின் தசா புத்தியில் நடக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது அப்படியில்லாவிட்டாலும் நடக்குமா.

    ReplyDelete
  16. Nanri ayya...........

    Neengal sonnathil......5 out of 7 ayya.........ENAKU...

    Eventhough SOmewat interest is their for me......if i became a leader means.....Astro Kattaya paadamaaga Aakuven ayya....

    ReplyDelete
  17. வணக்காம் ஐயா,பதிவு அருமை.திங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    மதுரை தனா.

    ReplyDelete
  18. ennaku oru doubt kiragamalika yogam ennral enna athan palan enna

    nanri

    ReplyDelete
  19. ஜயகோ பரீட்சையா !~#*! (.. பார்க்கிறேன் படிக்கிறேன் ஜயா பழைய பாடங்களை !

    ReplyDelete
  20. ////Blogger Dinesh babu said...
    யப்பா, நமக்கு அரசியல் எல்லாம் வேண்டாமப்பா!////

    எனக்கும் வேண்டாம் சாமி!

    ReplyDelete
  21. ////Blogger Kavitha said... Sir,
    Your lessons are good. I have been following this for 1 year.

    Sometimes I will analyse it with my son's horoscope.///

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா.////

    வருகைப்பதிவிற்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  23. ////Blogger chaks said...
    ஆட்சியாளர் ஆவதற்கு மகாபுருஷ யோகங்கள் அவ்வளவு முக்கியம்

    இல்லையா அய்யா////

    அதுவும் உண்டு.அத்துடன் இவையும் உண்டு!

    ReplyDelete
  24. ////Blogger hotcat said...
    Sir,
    I have sun, mercury and sani in lagna....but but but.....mercury is

    retrograde, anyhow I am not interested in politics.
    -Shankar////

    அதுதான் நல்லது! நமக்கெதற்கு அரசியல் சங்கர்?

    ReplyDelete
  25. ////Blogger ananth said...
    தாங்கள் சொன்னது அந்தந்த கிரகங்களின் தசா புத்தியில் நடக்கும்

    என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது அப்படியில்லாவிட்டாலும்

    நடக்குமா.////

    அந்தந்த கிரகங்களின் தசாபுத்தியில்தான் பலன்கள்!

    ReplyDelete
  26. ////Blogger Bala said...
    Nanri ayya...........
    Neengal sonnathil......5 out of 7 ayya.........ENAKU...
    Eventhough SOmewat interest is their for me......if i became a leader

    means.....Astro Kattaya paadamaaga Aakuven ayya....////

    அத்ற்காகவாவது நீங்கள் அரசேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  27. ////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,பதிவு அருமை.திங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
    அன்புடன்
    மதுரை தனா.////

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி தனா!

    ReplyDelete
  28. ///Blogger vellathurai said...
    ennaku oru doubt kiragamalika yogam ennral enna athan palan enna
    nanri////

    ஜாதகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கிரகங்கள் ஒரு மலர்மாலையைப் போல அமைந்து
    இருக்கும் தன்மைக்கு கிரக மாலிகா யோகம் என்று பெயர். அந்த யோகம் உள்ள
    ஜாதகனைக் கிரகங்கள் நெறிப்படுத்தி ஒரு உயர்வான நிலைக்குக் கொண்டு செல்லும்!

    The Graha Malika Yoga is a Yoga held in equal esteem with the
    Kala Sarpa and Kala Amrita Yogas.
    It tends to dominate a persons life in a certain direction until the

    age of maturity of the Yoga. Also sometimes smaller Graha Malika
    Yogas function for only a limited amount of time.
    The focal point of the Yoga is the planet ending the yoga.
    That is the goal of the Yoga, or the purpose for which it was created.
    Each planet in its order from the beginning will give certain events
    leading to the goal.Graha Malika Yoga includes the nodes

    ReplyDelete
  29. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஜயகோ பரீட்சையா !~#*! (.. பார்க்கிறேன் படிக்கிறேன் ஜயா பழைய

    பாடங்களை !////

    கவலை எதற்கு இமானுவேல். நீங்கள் என்ன எழுதினாலும் உங்களுக்கு
    மதிப்பெண் உண்டு. உங்களுடைய இலங்கைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    அதனால் உங்களுக்குத் தனி இடம்!

    ReplyDelete
  30. இப்பொழுது கதைப்பது யாழ்ப்பாண தமிழ் இல்லை ஜயா . mixed தமிழ் . இலங்கையில் 7 இடத்திற்கு மேல் 1-2 வருடங்கள் வசித்து இருக்கிறேன். ஆதாலால் எல்லா உச்சரிப்பும் கலந்து தான் வரும். பரீட்சை என்றால் திறந்த புத்தகம்தானே.. ":--)

    ReplyDelete
  31. ///Blogger Emmanuel Arul Gobinath said...
    இப்பொழுது கதைப்பது யாழ்ப்பாண தமிழ் இல்லை ஜயா . mixed தமிழ் . இலங்கையில் 7 இடத்திற்கு மேல் 1-2 வருடங்கள் வசித்து இருக்கிறேன். ஆதாலால் எல்லா உச்சரிப்பும் கலந்து தான் வரும். பரீட்சை என்றால் திறந்த புத்தகம்தானே.. ":--)////

    தகவலுக்கு நன்று இமானுவேல்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com