மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.7.09

நம்பாவிட்டால் நஷ்டமில்லை!

நம்பாவிட்டால் நஷ்டமில்லை!

எந்தவித உபாயமும் இல்லாமல் நாளை நடக்கவிருப்பதை துல்லியமாகச்
சொல்லும் ஆறாவது அறிவு எனும் புகழ் பெற்ற - ஈ.எஸ்.பி சக்தி
(extrasensory perception) கொண்டவர்களைப் பற்றிய பல செய்திகள்,
கதைகள் உண்டு.

இணையத்தில் ஏறாளமாகக் கொட்டிக்கிடக்கிறது. விருப்பமுள்ளவர்கள்
தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் அவற்றை
நான் புத்தகங்கள் மூலமாகத்தான் படித்துத் தெரிந்து கொண்டேன்.

அதைப் பற்றி முன்பே வகுப்பறையில் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
நாஸ்ட்ரடாமஸ் அவர்களில் ஒருவர்.

நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர் ஒருவர், அதைப் பற்றிய
புத்தகம் ஏதாவது உள்ளதா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

புத்தகத்தின் விவரம் கீழே உள்ளது. அந்தப் பதிப்பகத்தில் புத்தகத்தைக்
கேட்டு, வாங்கிப் படித்துப் பரவசம் அடையுங்கள்.

சிலருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. அவர்களுக்கு ஒரு
வணக்கம் சொல்லிவிடுகிறேன்.
உங்கள் நம்பிக்கையின்மை வாழ்க! வளர்க!

உங்கள் நம்பிக்கையின்மையால யாருக்கும் நஷ்டமில்லை.
அதுதான் மகிழ்ச்சியளிக்கூடிய விஷயம்!
------------------------------------------------------
ஈ.எஸ்.பி சக்தி (extrasensory perception) யைப் பற்றிய விளக்கம்!

Telepathy = Communication through means other than the senses,
as by the exercise of an occult power.

Occult = The word occult comes from the Latin word occultus
(clandestine, hidden, secret), referring to "knowledge of the hidden".

ESP or extrasensory perception = Extrasensory perception (ESP)
involves awareness of information about events external to the self
not gained through the senses and not concluded from previous
experience. The term was coined by Duke University researcher
J. B. Rhine to denote psychic abilities such as telepathy,
precognition, retrocognition, intuition and psychokinesis.
ESP is also sometimes casually referred to as a sixth sense,
gut instinct or hunch. The term implies sources of information
currently unexplained by science.

உபயம்: விக்கி மகராஜா! மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.
தனித் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்!
--------------------------------------------------
புத்தகத்தைப் பற்றிய விவரம்:

அதிசய மனிதர்களின் அதிசய சாதனைகள்
எழுதியவர்: மஞ்சரி மாத இதழ் புகழ் எழுத்தாளர் எம்.எஸ்.பிரகாஷ்
பக்கங்கள் 243
விலை: Rs.17:00 (20 ஆண்டுகளுக்கு முந்திய விலை. இப்போது
என்ன விலை என்று தெரியவில்லை)

பதிப்பிட்டவர்கள்:

நர்மதா பதிப்பகம்
16, ராஜபாதர் தெரு
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை - 600 017
=======================================

வாழ்க வளமுடன்!

26 comments:

 1. கட்டாயம் நம்புகிறேன் அய்யா!!

  KMR.KRISHNAN
  http;//parppu.blogspot.com

  ReplyDelete
 2. //சிலருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. அவர்களுக்கு ஒரு
  வணக்கம் சொல்லிவிடுகிறேன்.
  உங்கள் நம்பிக்கையின்மை வாழ்க! வளர்க!
  உங்கள் நம்பிக்கையின்மையால யாருக்கும் நஷ்டமில்லை.
  அதுதான் மகிழ்ச்சியளிக்கூடிய விஷயம்!
  //

  இப்பெல்லாம் எதையும் எழுதும் முன் நீறைய யோசிக்கிறிங்க போல.

  வாத்தியாரின் பண்பு வாழ்க !

  ReplyDelete
 3. oru siru vinnappam. thayavu seithu sevvai thosham pattri oru thanip pathivu idumaaru anbodu vendik kettuk kolgiren.nandri.

  ReplyDelete
 4. ////Blogger kmr.krishnan said...
  கட்டாயம் நம்புகிறேன் அய்யா!!
  KMR.KRISHNAN
  http;//parppu.blogspot.com/////

  நன்றி கிருஷ்ணன்!

  ReplyDelete
 5. /////Blogger கோவி.கண்ணன் said...
  //சிலருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. அவர்களுக்கு ஒரு
  வணக்கம் சொல்லிவிடுகிறேன்.
  உங்கள் நம்பிக்கையின்மை வாழ்க! வளர்க!
  உங்கள் நம்பிக்கையின்மையால யாருக்கும் நஷ்டமில்லை.
  அதுதான் மகிழ்ச்சியளிக்கூடிய விஷயம்!
  //
  இப்பெல்லாம் எதையும் எழுதும் முன் நீறைய யோசிக்கிறிங்க போல.
  வாத்தியாரின் பண்பு வாழ்க !/////

  இப்ப எல்லாம் என்பது கரெக்ட்! என்னை யோசிக்க வைப்பவர்கள்.
  இறை, மற்றும் ஜோதிட மறுப்பாளர்கள்தான்!. அவர்களுக்கு எப்பொதுமே
  நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
  நானும் ஒரு காலத்தில் அப்படி இருந்தவன்தான்!
  அவர்களின் மனநிலை எனக்குத் தெரியும்.

  ReplyDelete
 6. ////Blogger நேசன்..., said...
  oru siru vinnappam. thayavu seithu sevvai thosham pattri oru thanip pathivu idumaaru anbodu vendik kettuk kolgiren.nandri./////

  எழுதுகிறேன் நண்பரே!

  ReplyDelete
 7. Sir, what would be the position of planets in horoscope to get this type of ocult power? can u explain astrologically?

  Thanks & Regards
  Big B

  ReplyDelete
 8. Nostradamus உடைய prophecy மற்றும் அவரைப் பற்றி நானும் படித்திருக்கிறேன். உதாரணத்திற்கு சில இங்கு பார்க்கலாம். http://www.scribd.com/doc/13536810/Nostradamus-Prophecies

  http://www.scribd.com/doc/12838234/Nostradamus-Complete-Quatrains

  மகாவிஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரத்தை பற்றிய சில குறிப்புகள்.
  http://www.scribd.com/doc/2067825/The-Prophecies-of-TomorrowAnalysis-of-Indian-Mythology

  ReplyDelete
 9. Ayya Pathivu Nanru........


  Ayya Oru Doubtu........5th Housil(Trikonavil)...Sukran Pagai petraal....

  Athu Nanmaya Theemaya...........But 5th lord is samam(Suriyan)..


  Doubt is puthira sthaanam keduma kedatha???

  ReplyDelete
 10. அன்புள்ள வாத்தியார் அய்யா, ஜோதிட பாடம் என்ன ஆயிற்று? சனி பெயர்ச்சி அப்புறம் எழுத போகிறீர்களா? Telepathyல் எனக்கு நம்பிக்கை உண்டு. சிலமுறை எனக்கே சில Intuition வந்து அது சரியாக நடந்திருக்கிறது. அதற்காக நான் Nostradamus என்று சொல்லவில்லை, ஜஸ்ட் லைக் தட் எல்லார்க்கும் வருவது போல் தான்!

  ReplyDelete
 11. நம்புகிறோம் ஐயா,காற்றை ஒலி,உணர்வு என்ற இரு பரிமானஙளால் மட்டுமே அறிநதுகொள்ள முடியும்.பார்த்தால் மட்டுமே நம்புவோம் என்பவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?சரிதானே ஐயா?

  அன்புடன்,
  மதுரை தனா.

  ReplyDelete
 12. /////Blogger bala said...
  Sir, what would be the position of planets in horoscope to get this type of ocult power? can u explain astrologically?
  Thanks & Regards
  Big B////

  இந்த சக்தி எல்லாம் கோடியில் ஒருவருக்கு இருக்கலாம். அதற்கு உரிய கிரக நிலைப்பாடுகள் பற்றி யாரும் எழுதியுள்ளதாகத் தெரியவில்லை. கண்ணில் படவில்லை பாலா!

  ReplyDelete
 13. ///////Blogger ananth said...
  Nostradamus உடைய prophecy மற்றும் அவரைப் பற்றி நானும் படித்திருக்கிறேன். உதாரணத்திற்கு சில இங்கு பார்க்கலாம். http://www.scribd.com/doc/13536810/Nostradamus-Prophecies
  http://www.scribd.com/doc/12838234/Nostradamus-Complete-Quatrains
  மகாவிஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரத்தை பற்றிய சில குறிப்புகள்.
  http://www.scribd.com/doc/2067825/The-Prophecies-of-TomorrowAnalysis-of-Indian-Mythology/////////

  தகவலுக்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 14. /////Blogger Bala said...
  Ayya Pathivu Nanru........
  Ayya Oru Doubtu........5th Housil(Trikonavil)...Sukran Pagai petraal....
  Athu Nanmaya Theemaya...........But 5th lord is samam(Suriyan)..
  Doubt is puthira sthaanam keduma kedatha???/////

  புத்திரபாக்கியத்திற்கு வேறு combinations உள்ளன. பழைய பாடங்களில் எழுதியுள்ளேன்

  ReplyDelete
 15. ////Blogger சப்ராஸ் அபூ பக்கர் said...
  நம்பிட்டோமில்ல......////

  நம்பினோர் கெடுவதில்லை அபூ பக்கர்!

  ReplyDelete
 16. /////Blogger thirunarayanan said...
  solvatharku ondrum illai////////

  அதுவரை சரிதான்!

  ReplyDelete
 17. ////Blogger Dinesh babu said...
  அன்புள்ள வாத்தியார் அய்யா, ஜோதிட பாடம் என்ன ஆயிற்று? சனி பெயர்ச்சி அப்புறம் எழுத போகிறீர்களா? Telepathyல் எனக்கு நம்பிக்கை உண்டு. சிலமுறை எனக்கே சில Intuition வந்து அது சரியாக நடந்திருக்கிறது. அதற்காக நான் Nostradamus என்று சொல்லவில்லை, ஜஸ்ட் லைக் தட் எல்லார்க்கும் வருவது போல் தான்!/////

  அதுவும் உண்மை. நான் மகர ராசிக்காரன். திருவோணம். அஷ்டமச்சனி படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரே வேலையை இரண்டுமுறை செய்யும்படியாகிவிடுகிறது. அல்லது இரண்டுமுறை அலைய வேண்டியதிருக்கிறது. எல்லாம் இரண்டு மாதங்களில் சரியாகிவிடும்!
  அந்தச் சிரமங்களினிடையே இந்த இரண்டாண்டு காலத்தில் எத்தனை பாடங்களை எழுதியுள்ளேன் சற்று நினைத்துப் பாருங்கள்!

  ReplyDelete
 18. ///////Blogger dhanan said...
  நம்புகிறோம் ஐயா,காற்றை ஒலி,உணர்வு என்ற இரு பரிமானஙளால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.பார்த்தால் மட்டுமே நம்புவோம் என்பவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?சரிதானே ஐயா?
  அன்புடன்,
  மதுரை தனா.//////

  நீங்கள் (மதுரைக்காரர்) சொன்னால் சரிதான்!

  ReplyDelete
 19. ஆசிரியர் அவர்களுக்கு,

  என்னுடைய கீழ்கண்ட சந்தேகங்களுக்கு விடை அளிக்கவும்.
  முக்கியமாக கிரகங்களின் பலம்

  1. ராசி கட்டத்தில் 3,6,8,12 ஆகிய வீடுகளில் மறைந்து போன நல்ல கிரகங்கள், நவாம்சத்தில் ஆட்சி, உச்ச மற்றும் நட்பு வீடுகளில் இருந்தால் எத்தகைய பலன் உண்டு?
  கிரகங்களின் பலம எத்தகையது?

  உ. ராசியில் 5 ஆம் வீடுகுரியவன் 6 ஆம் வீட்டில் மறைந்து, நவாம்சத்தில் சொந்த வீட்டில் இருப்பது.

  2. கிரகங்களின் பரிவர்த்தனை:
  நல்ல மற்றும் தீய கிரகங்களின் பரிவர்த்தனை எத்தகைய பலன்? முழு பலன் உண்டா?

  உ.சந்திரன் மற்றும் சனி பரிவர்த்தனை

  3. நல்ல கிரகங்கள் தீய கிரகங்களின் வீடுகளில் அமர்ந்து, மேலும் தீய கிரகங்களின் பார்வை பெரும்பொழுது, அந்த நல்ல
  கிரகங்கள் பலம என்ன?
  உ. சுப கிரகங்கள் சுக்கிரன் அல்லது குரு, சனி வீட்டில் அமர்ந்து மேலும் saniyin பார்வை பெற்றால், அவைகளின் பலம என்ன?

  ReplyDelete
 20. Dear Sir,

  I believe in telepathy, its happened to me and my friend for example if i think to call him and to tell something, within in a day he will call me.

  ReplyDelete
 21. வாத்தியார் அவர்களுக்கு,

  இதுவரை எடுத்த பாடங்கள் அருமை...

  இன்னும் மற்றுமொரு பாடம் எடுக்க என் வேண்டுகோள்.

  ஒரு கிரகம் அது நின்ற வீட்டில், அது நின்ற நட்சத்திர சாரத்தின் அதிபதியினால், அதனுடைய தசா புக்தியில் எத்தகைய பலன்கள் இருக்கும்.

  இதை தாங்கள் கண்டிப்பாக அடுத்த சுட்டியில் எடுக்க என் வேண்டுகோள்.

  ReplyDelete
 22. ////Blogger saravanan said...
  ஆசிரியர் அவர்களுக்கு,
  என்னுடைய கீழ்கண்ட சந்தேகங்களுக்கு விடை அளிக்கவும்.
  முக்கியமாக கிரகங்களின் பலம்
  1. ராசி கட்டத்தில் 3,6,8,12 ஆகிய வீடுகளில் மறைந்து போன நல்ல கிரகங்கள், நவாம்சத்தில் ஆட்சி, உச்ச மற்றும் நட்பு வீடுகளில் இருந்தால் எத்தகைய பலன் உண்டு?
  கிரகங்களின் பலம் எத்தகையது?/////

  நவாம்சத்தில் நல்ல நிலையில் இருந்தால் அதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.அதற்குத்தான் நவாம்சம்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  உ. ராசியில் 5 ஆம் வீடுகுரியவன் 6 ஆம் வீட்டில் மறைந்து, நவாம்சத்தில் சொந்த வீட்டில் இருப்பது.

  மேலே உள்ள பதில்தான் இதற்கும்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  2. கிரகங்களின் பரிவர்த்தனை:
  நல்ல மற்றும் தீய கிரகங்களின் பரிவர்த்தனை எத்தகைய பலன்? முழு பலன் உண்டா?
  உ.சந்திரன் மற்றும் சனி பரிவர்த்தனை

  பரிவர்த்தனையில் சொந்த வீடு என்னும் அமைப்பு இருக்கும் பாருங்கள். பிறகு பலன் இல்லாமல் போகுமா?
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  3. நல்ல கிரகங்கள் தீய கிரகங்களின் வீடுகளில் அமர்ந்து, மேலும் தீய கிரகங்களின் பார்வை பெரும்பொழுது, அந்த நல்ல
  கிரகங்கள் பலம என்ன?/////

  ஒரே நேரத்தில் இரண்டு விபத்தில் சிக்கிய பலன்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  உ. சுப கிரகங்கள் சுக்கிரன் அல்லது குரு, சனி வீட்டில் அமர்ந்து மேலும் saniyin பார்வை பெற்றால், அவைகளின் பலம என்ன?

  மேலே உள்ள பதில்தான் இதற்கும்! (சுக்கிரனுக்கு மட்டும் விலக்கு.அவர் சனியின் நண்பர்)

  ReplyDelete
 23. ////Blogger arumuganainar said...
  Dear Sir,
  I believe in telepathy, its happened to me and my friend for example if i think to call him and to tell something, within in a day he will call me.////

  தகவலுக்கு நன்றி நைனார்!

  ReplyDelete
 24. Blogger saravanan said...
  வாத்தியார் அவர்களுக்கு,
  இதுவரை எடுத்த பாடங்கள் அருமை...
  இன்னும் மற்றுமொரு பாடம் எடுக்க என் வேண்டுகோள்.
  ஒரு கிரகம் அது நின்ற வீட்டில், அது நின்ற நட்சத்திர சாரத்தின் அதிபதியினால், அதனுடைய தசா புக்தியில் எத்தகைய பலன்கள் இருக்கும்.
  இதை தாங்கள் கண்டிப்பாக அடுத்த சுட்டியில் எடுக்க என் வேண்டுகோள்./////

  அது நின்ற நட்சத்திர சாரத்தின் அதிபதியைப் பொறுத்து பலன்கள் கூடும் அல்லது சற்றுக் குறையும்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com