மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.7.09

பந்து பொறுக்கிப்போட மட்டுமே அவர்கள்!


பந்து பொறுக்கிப்போட மட்டுமே அவர்கள்!

அஷ்டக் வர்கா (அஷ்டக வர்கம்) என்பது ஏதோ வடநாட்டைச் சேர்ந்த நொறுக்குத்தீனி.
பானிபூரி, பேல்பூரியைப் போல அதுவும் தமிழ் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த
சாட் (chat) அயிட்டம் என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
இது உங்களுக்கான பதிவு அல்ல!

மற்றவர்கள் உள்ளே வாருங்கள்!
---------------------------------------------------------------------
Ashtaka means “consisting of eight”
Varga means “a group”.

எட்டுப் பேரைக் கொண்ட ”படை” என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் படையில் உள்ள வீரர்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,
சுக்கிரன், சனி & லக்கினம்.

அந்த வீரர்களின் வலிமை ஜாதகத்திற்கு ஜாதகம் வேறுபடும்.

ராகு & கேது?

அவர்களை இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. பந்து பொறுக்கிப்போட
மட்டுமே அவர்கள்.

அவர்களை ஏன் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால், அவர்களுக்கு சொந்தமாக
Dress, Shoe, Tennis Rocket என்று எதுவும் கிடையாது (அதாவது அவர்களூக்குச்
சொந்த வீடு இல்லை!)

தோற்றம், அறிவு, படிப்பு, புத்திசாலித்தனம், திறமை, குணம், பார்க்கும் வேலை,
வாங்கும் சம்பளம், சொல்வாக்கு, செல்வாக்கு, ஆகியவற்றை வைத்து மதிப்பெண்கள்
கொடுத்தால், எல்லோருக்கும் விதம்விதமான மதிப்பெண்கள் வரும்.

அதுபோல உங்கள் ஜாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, உங்கள் ஜாதகத்தில்
உள்ள கிரகங்கள், உள்ள 12 வீடுகள் ஆகியவற்றிற்கு மதிப்பெண் போட்டால் என்ன
கிடைக்கும்?

அது உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள், இருக்கும் இடம், இருக்க வேண்டிய இடம்,
ஆதிபத்யம், காரகத்துவம், பார்வை, சேர்க்கை போன்றவற்றை வைத்து, கிடைக்க
வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கும்!

கிரகம் எல்லா செமஸ்டர்களிலும் பாஸான அல்லது பெயிலான மார்க் சீட் கிடைக்கும்.
அதுபோல எல்லா கிரகங்களுக்கும் ப்ளஸ் லக்கினத்திற்கும் போட்டால் மொத்தம் எட்டு
மார்க் சீட்டுகள் கிடைக்கும். அந்த எட்டு சீட்டையும், மேஷம் முதல் மீனம் வரை வரும்படி
அமைத்துக் கூட்டிப் பார்த்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண்கள் தெரியவரும்.
அதைவைத்துப் பலன் சொல்வது கொஞ்சம் சுலபம்!

மதிப்பெண்களுக்குப் பெயர் பரல்கள்.

தனித்தனியாக கிரகங்களுக்குப் போடுவது சுயவர்க்கப் பரல்கள்.
மொத்தமாகக் கூட்டி வருவது மொத்தப் பரல்கள் அல்லது அஷ்டகவர்க்கப் பரல்கள்.

அப்பாடா, ஒரு வழியாகப் புரிய வைத்து விட்டேன் (?)
இதற்குப் பெயர்தான் அஷ்டகவர்க்கம்!
===========================================================================
அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று நிறையப் பேர்கள்
கேட்டுள்ளார்கள். அதைக் கீழே கொடுத்துள்ளேன். இப்போது மென்பொருள் உள்ளதால்
அது கணித்துக் கொடுத்துவிடும்.

ஆகவே அந்தப் பாடத்தைக்கற்றுக் கொள்வது தேவையற்றது. நேரத்திற்குக் கேடு
என்பது என் எண்ணம். ஒரு மணி நேரம் ஆகும்

நான் கற்றுக்கொண்ட காலத்தில் கணினி எல்லாம் கிடையாது. வேறு வழியில்லாமல்
மண்டையைக் குடைந்து அதையெல்லாம் மனதில் ஏற்றினேன்.

இல்லை, நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். என்பவர்களுக்காக
அவற்றைக் கஷ்டப்பட்டு Excel Formatல் தட்டச்சு செய்து 6.2.2008 தேதியிட்ட
இடுகையில் கொடுத்திருக்கிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் அதைப் படித்து இன்புறலாம் அல்லது கஷ்டப்படலாம்:-)))
----------------------------------------------------------------------------------
மற்றவர்கள் இந்த இணைய தளத்தில் உள்ள மென்பொருளைத் தரவிறக்கம் செய்து
உங்கள் கணினியில் சேமித்து வைத்து உபயோகியுங்கள்.
(மென்பொருள் = software, தரவிறக்கம் = download)
அது உங்களுக்குச் சிறந்த முறையில் பயன்படும்!
======================================================
அதற்கான மென்பொருள் - Jagannatha hora - இணையத்தில் கூவிக்கூவி இலவசமாகத்
தருகிறார்கள். வாங்கிக் கொள்ளூங்கள். கூவிக்கூவிக் கொடுக்கும் இடத்தின் பெயர்
இங்கே உள்ளது.

மவுசை வைத்துக் கிளிக்கினால், அங்கே போய்விடலாம்!


---------------------------------------------------------------------
இப்போது உங்களுக்காக இரண்டு விளக்கப் படங்கள்

இது இந்தியாவின் ஜாதகம்

இது இந்தியாவின் அஷ்டகவர்க்க் Chart
சிவப்புக் கலரில் குறியிடப்பட்டிருப்பது இந்த்திய ஜாதகத்தில்
குரு’ வின் சுயவர்க்கப்பரல்
=================================================
இந்திய ஜாதகத்தின் பரல்களைப் பார்த்து, இப்படிக் குறித்துக் கொள்ளுங்கள்!

ரிஷப லக்கினம் - 4
மிதுனத்தில் செவ்வாய் - 2
...................................
கடகத்தில் சூரியன் - 4
கடகத்தில் சந்திரன் - 5
கடகத்தில் சனி - 2
கடகத்தில் புதன் - 4
கடகத்தில் சுக்கிரன் - 4
இந்த ஐவரும் லக்கினத்தில் இருந்து 3ஆம் இடமான கடகத்தில் இருக்கிறார்கள்.
அவர்களின் சுயவர்க்கப் பரல்களை, அவர்களின் பெயர்களுக்குப் பக்கத்திலேயே
குறித்துள்ள்ளேன். தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்
------------------------
துலாத்தில் குரு - 4
=====================================
இந்தியாவின் லக்கினம் ரிஷப லக்கினம். லக்கினத்தில் 44 பரல்கள்.
உலகிலேயே மிகப் பெரிய, அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு
என்னும் பெருமை இந்த அதிகப் படியான பரல்களால்தான்

சரி, இரண்டாம் வீடான மிதுனத்தில் எத்தனை பரல்கள். 19 பரல்கள்தான்.
நாட்டிற்கு அது பொருளாதாரத்தைக் குறிக்கும் இடம். அங்கே பரல்கள்
இவ்வளவு குறைவாக இருப்பதால்தான் நம் நாட்டுப் பொருளாதாரம்
இன்றைய நிலையில் மெச்சிக்கொள்ளூம்படியாக இல்லை.
அதிக அளவில் கடன் உள்ளது

எதிர்காலத்தில், அது சரியாகும். அதை இப்போது சொன்னால் சஸ்பென்ஸ்
போய்விடும். சமயம் வரும்போது சொல்கிறேன்!
-----------------------------------------------
உங்கள் ஜாதகத்திற்கும் இப்படியே குறித்து வைத்துக் கொள்ளூங்கள்.

அதைவிடுத்து, சார், சுய வர்க்கப் பரல்கள் என்றால் என்ன?’ வென்று
அப்பாவித்தனமாக இனியும் கேட்காதீர்கள்.
கேட்டால், உங்களை வகுப்பறை மானிட்டர் உண்மைத்தமிழரிடம்
பிடித்துக் கொடுத்துவிடுவேன். உடன் நாரதர் சிபியும் இருப்பார்!:-))))))

இந்தக் கட்டுரையை எழுதக் காரணம்: கடந்த 3 நாட்களில் சுயவர்க்கம் என்றால் என்ன?
என்று கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துவிட்டன. அதற்காக அவசரம்
அவசரமாக எழுதினேன்.

அஷ்டகவர்க்கம் தெரியாமல் ஜோதிடப் பாடங்களைப் படிப்பது,
கோனார் நோட்ஸ் இல்லாமல் பத்தாம் வகுப்பு படிப்பதைப் போன்றது!

இதை Record Room ல் சேமித்து வைத்துள்ளேன், இனிமேல் வந்து கேட்பவர்களுக்கு,
cut & paste ready made reply: Please go & see in the Record Room

வகுப்பறையில் 500 பேர்களையும், வகுப்பிற்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு
கேள்வி கேட்பவர்கள் 500 பேர்களையும் - ஆக மொத்தம் 1,000 பேர்களை வைத்துக்
கொண்டு பாடம் நடத்துவது எவ்வளவு சிரமம், தனி ஆளாக நான் வேறு என்ன
செய்ய முடியும்? என்று யோசித்து நீங்களே ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்
--------------------------------------------------

வகுப்பறையில் புதிதாகக் கட்டப் பெற்றுள்ள Record Room ஐப் பார்த்தீர்களா?
உங்களுக்கு வேண்டிய அடிப்படைபாடங்கள் அங்கே கிடைக்கும்
அதற்குச் செல்லும் வழி இங்கே!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------
உருப்படியான விளக்கம் கீழே உள்ளது. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.
அப்படியே தந்துள்ளேன். படித்து மேலும் தெளிக!


The "Ashtakvarga" is recognized as an outstanding system of prediction
among the several systems advocated in the standard works on Indian Astrology.

It has been commended as the best and the most indispensable key,
so that all predictions have to be made only after a consideration of the
Ashtakvarga.

The system appears to have originated in the very remote past.

Acharya Varahmihira (circa 500 A.D.) mentions it rather casually,
as if it had already become an integral part of the standard teaching
on astrology in his day, not requiring a very detailed exposition.
It is quite likely, therefore, that the system originated some centuries
before Varah, perhaps a couple of centuries before Christ.
==================================================================
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

49 comments:

 1. AYYA INRAIYA PAADAM MIGVUM ELIYA MURAIYIUL IRRUNDHDHADHU.IDHARKKUMEL VILAKKAMAGA YARALUM VILAKKA MUDIYADHU.NANRI.
  AYYA ENNUDIA MINNAJAL MUGAVARI KIDIATHTHADHA? PAADANGALAI EPPODHU IRRUNDHU PAARKKALAM. NANRI NANRI

  ReplyDelete
 2. வாத்தியார் ஐயா அவர்கலுக்கு,
  இன்ட்ரைய பாடம் பல முரை படித்த பாடமானாலும் revision செய்வது போலிருன்டதது. jaganath hora software ல் ராசி கட்டத்தில் A1, A4 என்ரு
  எழுதியிருப்பது எதை குரிக்கிரது என்ரு சொல்லமுடியுமா?

  ReplyDelete
 3. நீஙகள் உண்மையாகவே வாத்தியார்தான்!!

  kmr.krishnan
  http://parppu.blogspoy.com

  ReplyDelete
 4. ////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
  AYYA INRAIYA PAADAM MIGVUM ELIYA MURAIYIUL IRRUNDHDHADHU.IDHARKKUMEL VILAKKAMAGA YARALUM VILAKKA MUDIYADHU.NANRI.
  AYYA ENNUDIA MINNAJAL MUGAVARI KIDIATHTHADHA? PAADANGALAI EPPODHU IRRUNDHU PAARKKALAM. NANRI NANRI////

  மீக்கு பம்பிச்சேசினானு செட்டிகாரு. இன்கா ராதேலேதா?
  எந்துக்கு பெத்த லெட்டர்ல மீரு டைப் சேஸ்துன்னாரு. நார்மல் லெட்டர்லோ
  ஜரா டைப் செய்யண்டி!

  ReplyDelete
 5. ////Blogger kandadhai sollugiren said...
  வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
  இன்றைய பாடம் பல முறை படித்த பாடமானாலும், revision செய்வது போலிருந்தது. jaganath hora software ல் ராசி கட்டத்தில் A1, A4 என்று எழுதியிருப்பது எதை குறிக்கிறது என்று சொல்லமுடியுமா?///

  ஜகந்நாத ஹோரவை, அஷ்டகவர்கத்திற்கு மட்டுமே பயன் படுத்துவேன். மற்றவற்றிற்கு என்னிடம் வேறு மென்பொருள் உள்ளது. நீங்கள் கேட்டுள்ளது பற்றி, படித்துப் பார்த்துவிட்டுப் பதில் அளிக்கிறேன்!

  ReplyDelete
 6. ////Blogger kmr.krishnan said...
  நீஙகள் உண்மையாகவே வாத்தியார்தான்!!
  kmr.krishnan
  http://parppu.blogspoy.com/////

  பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 7. நானும் பல முறை Jagannatha Horaவை பயன்படுத்தியிருக்கிறேன். அதைபோல் ஒரு முழுமை பெற்ற program வேறு எதையும் பார்க்க வில்லை. அதிலுள்ள பல விசயங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

  ராகு கேதுக்களுக்கு தன்னிச்சையான பலம் இருக்கிறது. அவர்களுக்கு பரல் மூலமாகவோ மற்றவற்றின் மூலமாகவோ பலம் தேவையில்லையோ என்னவோ.

  பரல் பலம் விளங்குகிறது. ஷட் பலம் என்பது எதற்கு. ஷட் பலம் பார்க்காமல் பலன் பார்த்தால் சரியாக வராது என்று முன்பொரு முறை படித்திருக்கிறேன்.

  நண்பர் குறிப்பிட்ட A1, A4 பற்றி முன்பொரு முறை படித்திருக்கிறேன். ஆனால் இப்போது மறந்து விட்டது. ஆசிரியர் பார்த்து சொல்வதாக சொல்லிவிட்டதால் இதை அவரிடமே விட்டு விடுகிறேன்.

  ReplyDelete
 8. A1,A2,etc., represents Arudapadas. Along with Aruda Lagna mentioned as AL, the perception of the individual by the world is indicated. Lagna is real self and Aruda Lagna is the maya. At the beginners level these will be overwhelming as our teacher says "LKG student trying to read plus 2 books."

  ReplyDelete
 9. A1, A2 ஆருட பாதம் பற்றியதுதான். அதைப் பற்றி Jagannatha Hora Program help sectionல் இருக்கிறது. Aruda Lagna/pada என்று இருக்கும். இணையத்தில் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். இதைப் பற்றி தனிப் பதிவோ தனிப் புத்தகமோ எழுதினால்தான் இதை முழுமையாக விளக்க முடியும். இதைப் பற்றி இப்போதே தெரிந்து கொண்டு ஆக வேண்டும் இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்பவர்களுக்கு மட்டும் கீழே சில இணைய தளங்களின் முகவரியைக் கொடுத்துள்ளேன். பார்த்து படித்து இன்புறுங்கள் (அல்லது குழம்பிக் கொள்ளுங்கள். இது அவரவர் விருப்பம்) http://www.jupitersweb.com/arudha.htm
  http://www.barbarapijan.com/bpa/Topics/arudha_lagna.htm
  http://tribes.tribe.net/jyotishstudunt/thread/9166f911-c42a-4fe8-a255-0cd4bcd16c3b

  ReplyDelete
 10. ஜகன்னாத ஹோரா ப்ரோக்ரமிலேயே அந்த மென்பெருளை எப்படி உபயோகிப்பது என்ற விளக்கங்களும் இருக்கிறது. நானும் அதை நிறைய உபயோகிக்கிறேன். அதை தாங்கள் முன்பே அறிமுகபடுதியதற்கு மிக்க நன்றி அய்யா.

  ReplyDelete
 11. Blogger ananth said...
  நானும் பல முறை Jagannatha Horaவை பயன்படுத்தியிருக்கிறேன். அதைபோல் ஒரு முழுமை பெற்ற program வேறு எதையும் பார்க்க வில்லை. அதிலுள்ள பல விசயங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
  ராகு கேதுக்களுக்கு தன்னிச்சையான பலம் இருக்கிறது. அவர்களுக்கு பரல் மூலமாகவோ மற்றவற்றின் மூலமாகவோ பலம் தேவையில்லையோ என்னவோ.
  பரல் பலம் விளங்குகிறது. ஷட் பலம் என்பது எதற்கு. ஷட் பலம் பார்க்காமல் பலன் பார்த்தால் சரியாக வராது என்று முன்பொரு முறை படித்திருக்கிறேன்.
  நண்பர் குறிப்பிட்ட A1, A4 பற்றி முன்பொரு முறை படித்திருக்கிறேன். ஆனால் இப்போது மறந்து விட்டது. ஆசிரியர் பார்த்து சொல்வதாக சொல்லிவிட்டதால் இதை அவரிடமே விட்டு விடுகிறேன்.///////

  ஜோதிடம் பெரிய கடல் நீங்கள் சொல்லும் ஷட் பலம், ஆருத்ரா லக்கினம் எல்லாம்
  பின்னால் வரும். ஒரு ஒழுங்கு முறையில் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கிறேன். அவற்றை எல்லாம் நடுவில் எழுதினால் குழப்பம் ஏற்படும்.
  ஆகவே பொறுத்திருந்து படிக்கும்படி கேடுக்கொள்கிறேன்

  ReplyDelete
 12. Blogger krish said...
  A1,A2,etc., represents Arudapadas. Along with Aruda Lagna mentioned as AL, the perception of the individual by the world is indicated. Lagna is real self and Aruda Lagna is the maya. At the beginners level these will be overwhelming as our teacher says "LKG student trying to read plus 2 books."/////

  What you are saying is 100% correct Mr.Krish! Thanks for your comment!

  ReplyDelete
 13. Blogger ananth said...
  A1, A2 ஆருட பாதம் பற்றியதுதான். அதைப் பற்றி Jagannatha Hora Program help sectionல் இருக்கிறது. Aruda Lagna/pada என்று இருக்கும். இணையத்தில் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். இதைப் பற்றி தனிப் பதிவோ தனிப் புத்தகமோ எழுதினால்தான் இதை முழுமையாக விளக்க முடியும். இதைப் பற்றி இப்போதே தெரிந்து கொண்டு ஆக வேண்டும் இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்பவர்களுக்கு மட்டும் கீழே சில இணைய தளங்களின் முகவரியைக் கொடுத்துள்ளேன். பார்த்து படித்து இன்புறுங்கள் (அல்லது குழம்பிக் கொள்ளுங்கள். இது அவரவர் விருப்பம்) http://www.jupitersweb.com/arudha.htm
  http://www.barbarapijan.com/bpa/Topics/arudha_lagna.htm
  http://tribes.tribe.net/jyotishstudunt/thread/9166f911-c42a-4fe8-a255-0cd4bcd16c3b//////

  உபரித் தகவலுக்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 14. /////Blogger chaks said...
  ஜகன்னாத ஹோரா ப்ரோக்ரமிலேயே அந்த மென்பெருளை எப்படி உபயோகிப்பது என்ற விளக்கங்களும் இருக்கிறது. நானும் அதை நிறைய உபயோகிக்கிறேன். அதை தாங்கள் முன்பே அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா.//////

  அவ்வாறு உள்ள விளக்கங்களை எல்லோரும் படித்தால் நன்றாக இருக்கும் சக்ஸ்!

  ReplyDelete
 15. Vaathiyar Avargaley, Single-a evvalavu thaan handle pannurarthunnu neengaley ketta eppadi..... Neenga Singa(lagnam)aachey. Singam eppavum single-aa thaan varum....Singam vazhi...thani vazhiyum kooda.... Ungalaal kandippa mudiyum. Vaazhthukkal

  ReplyDelete
 16. வாத்தியார் அவர்களுக்கு,

  இந்தியாவின் 2 ஆம் வீட்டு பரல்கள் மிகவும் குறைவு..பிறகு எப்படி இந்திய வல்லரசு ஆகா முடியும் பணம் இல்லாமல்...

  இதை விளக்கினால் என்னுடைய குறைவான் பரலகள் உள்ள வீடுகளின் நிலையையும், அவை என்று நல்ல பலன்களை தரும் என்பதையும் என்னால் அறிய முடியும்...

  ReplyDelete
 17. Dear Sir

  Astavarga padam Arumai Sir. Already you initialize this lesson (Already you given clear picture)- may be your are started for other students.


  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 18. astaka vargam vilakkam arumai ayya.
  nandri

  ReplyDelete
 19. Ayya

  Neengal evlo periya sevai segireergal. Paralgal patriya ungal paadam megivum arumai matrum elimai. Ennai ponravargalukku ithu romba uthaviyaka irukirathu sir. Ungal pani men melum thodarattum

  ReplyDelete
 20. உள்ளேன் ஐயா ..
  (வாத்தியாரின் சுந்தர தெலுங்கிற்கு தங்கள் சகோதரிதான் வாத்தியாரா ? பின்னிட்டீங்க ...)

  ReplyDelete
 21. Dear Sir,

  சுயவர்க பரல்கள் பற்றி விளக்கமாக சொன்னதுக்கு,
  மிக்க நன்றி, கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்.
  உண்மை உண்மைதான்.

  Rgds,
  Nainar

  ReplyDelete
 22. வணக்கம்,

  தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழி
  கூகிள் உள்ளது!!!

  எந்த ஒரு சாப்ட்வேர்ரும் தேவைஇல்லை

  மேலும் விவரம்கள்ளுக்கு இந்த சுட்டிய அழுத்தவும்
  http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html#StoreIE

  நன்றி

  கிருஷ்ணமுர்த்தி
  சென்னை

  ReplyDelete
 23. vanakkam aiyya

  neegal sonnathu pola 2 months
  leave eduthu padithen.india jathagathil 11 il niraya paralgal ullathu.

  ReplyDelete
 24. ////Blogger Srinath said...
  Vaathiyar Avargaley, Single-a evvalavu thaan handle pannurarthunnu neengaley ketta eppadi..... Neenga Singa(lagnam)aachey. Singam eppavum single-aa thaan varum....Singam vazhi...thani vazhiyum kooda.... Ungalaal kandippa mudiyum. Vaazhthukkal////

  முடியும் என்கின்ற நம்பிக்கையில்தான் நானும் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் ஸ்ரீநாத்!

  ReplyDelete
 25. /////Blogger Vaalga valamudan-Saravanan said...
  வாத்தியார் அவர்களுக்கு,
  இந்தியாவின் 2 ஆம் வீட்டு பரல்கள் மிகவும் குறைவு..பிறகு எப்படி இந்திய வல்லரசு ஆகா முடியும் பணம் இல்லாமல்..
  இதை விளக்கினால் என்னுடைய குறைவான பரல்கள் உள்ள வீடுகளின் நிலையையும், அவை என்று நல்ல பலன்களை தரும் என்பதையும் என்னால் அறிய முடியும்...////

  பணம் இருந்தால் மட்டுமே வல்லரசாக முடியும் என்று யார் சொன்னது?
  முதலில் வல்லரசாகிவிடுவோம். பிறகு தன்னால் பணம் வரும்!
  ரஷ்யா பணத்தைக் கொண்டா வல்லராசானது? 80 ஆண்டுகள் அதைத் தக்கவைத்திருந்தது?
  இப்போது விழுந்து கிடப்பது வேறு கதை!

  ReplyDelete
 26. /////Blogger dbalaas said...
  doubt clear////

  க்ளியர் என்றால் எனக்கும் மகிழ்ச்சியே!

  ReplyDelete
 27. ////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Astavarga padam Arumai Sir. Already you initialize this lesson (Already you given clear picture)- may be your are started for other students. Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  ஆமாம் புதுமுகங்களுக்காகத்தான் மறுபடியும் ஒருமுறை ஓட்டிக்காட்டினேன்!

  ReplyDelete
 28. ////Blogger thirunarayanan said...
  astaka vargam vilakkam arumai ayya.
  nandri/////

  நன்றி திருநாராயணன்!

  ReplyDelete
 29. ////Blogger cow said...
  Ayya
  Neengal evlo periya sevai segireergal. Paralgal patriya ungal paadam megivum arumai matrum elimai. Ennai ponravargalukku ithu romba uthaviyaka irukirathu sir. Ungal pani men melum thodarattum/////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 30. /////////Blogger தம்பி கிருஷ்ணா said...
  உள்ளேன் ஐயா ..
  (வாத்தியாரின் சுந்தர தெலுங்கிற்கு தங்கள் சகோதரிதான் வாத்தியாரா ? பின்னிட்டீங்க ...)//////

  என் சகோதரி மட்டுமல்ல, எனது வாடிக்கையாளர்களும் காரணம்!

  ReplyDelete
 31. /////Blogger arumuga nainar said...
  Dear Sir,
  சுயவர்க பரல்கள் பற்றி விளக்கமாக சொன்னதுக்கு,
  மிக்க நன்றி, கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்.
  உண்மை உண்மைதான்.
  Rgds,
  Nainar//////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 32. /////Blogger kimu said...
  வணக்கம்,
  தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழி
  கூகிள் உள்ளது!!!
  எந்த ஒரு சாப்ட்வேரும் தேவைஇல்லை
  மேலும் விவரம்கள்ளுக்கு இந்த சுட்டிய அழுத்தவும்
  http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html#StoreIE
  நன்றி
  கிருஷ்ணமுர்த்தி
  சென்னை////

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 33. ////Blogger sundar said...
  vanakkam aiyya
  neegal sonnathu pola 2 months
  leave eduthu padithen.india jathagathil 11 il niraya paralgal ullathu./////

  ஆமாம், அதனால்தான் பணம் கடனாகவோ உடனாகவோ கொட்டிக் கொண்டிருக்கிறது. பிடித்துவைக்கும் அண்டாதான் ஓட்டை (2ஆம் வீடு)

  ReplyDelete
 34. Ayya ungal badhilai paarththen migavum nanri.thappaga ninaikkavendaam,ennudaiya. e-mail vilasathil ungal paadangal kidaikka peravillai. engu paarkkalam ena theriviyingal.mikka nanri.

  ReplyDelete
 35. Thank you for explaining this again sir and putting it in the Record room for reference. It is a great idea to have built the Record room.

  For Macintosh users if you would like to run the Jagannatha Hora software, you can install it using the Crossover software. I tried it and it works perfectly on mine. The link is here - http://www.codeweavers.com/products/cxmac/

  ReplyDelete
 36. உண்மையில் உங்கள் பணி மகத்தானது.எனக்கு இப்படி ஒரு வாத்தியார் கிடைப்பாரென்று சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..........நன்றிகள்.......

  ReplyDelete
 37. ரிஷப லக்னத்திற்கு 4 பரல்கள் , மிதுனத்திற்கு செவ்வாய் 2 பரல்கள் . இது மாதிரி எல்லா கிரகத்திற்கும் பரல்கள் எப்படி போட்டீர்கள் ? அஷ்டகவர்க்த அட்டவணையில் உள்ளத்தையும் எல்லா கிரஹதை எவ்வாறு "மேட்ச்" பண்ணிர்கள்? இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் மன்னிக்கவும் .

  ReplyDelete
 38. அய்யா புரிந்து விட்டது. படத்தை நன்றாக பார்த்து புரிந்துக் கொண்டேன் . நன்றி

  ReplyDelete
 39. /////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
  Ayya ungal badhilai paarththen migavum nanri.thappaga ninaikkavendaam,ennudaiya. e-mail vilasathil ungal paadangal kidaikka peravillai. engu paarkkalam ena theriviyingal.mikka nanri.//////

  peumal@in.com .....உங்கள் மெயில் Id இதுதானே ராஜாராம்? ஒரு டெஸ்ட் மெயில் அனுப்பியுள்ளேன்.
  அதற்குப் பதில் அனுப்புங்கள். பாடம் தன்னால் வரும்!

  ReplyDelete
 40. ////Blogger Dinesh babu said...
  Thank you for explaining this again sir and putting it in the Record room for reference. It is a great idea to have built the Record room.
  For Macintosh users if you would like to run the Jagannatha Hora software, you can install it using the Crossover software. I tried it and it works perfectly on mine. The link is here - http://www.codeweavers.com/products/cxmac/////

  தகவலுக்கு நன்றி தினேஷ் பாபு!

  ReplyDelete
 41. ////Blogger நேசன்..., said...
  உண்மையில் உங்கள் பணி மகத்தானது.எனக்கு இப்படி ஒரு வாத்தியார் கிடைப்பாரென்று சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..........நன்றிகள்......./////

  இதற்கு ஏன் சத்தியம்? எனக்குப் பள்ளியிலும், பணியிலும் வழி நடத்தியவர்களால் கற்றுக் கொண்டது. அதை நான் சற்று மேம்படுத்திச் சொல்லித் தருகிறேன். அவ்வளவுதான்!

  ReplyDelete
 42. /////Blogger Shyam Prasad said...
  ரிஷப லக்னத்திற்கு 4 பரல்கள் , மிதுனத்திற்கு செவ்வாய் 2 பரல்கள் . இது மாதிரி எல்லா கிரகத்திற்கும் பரல்கள் எப்படி போட்டீர்கள் ? அஷ்டகவர்க்த அட்டவணையில் உள்ளத்தையும் எல்லா கிரஹதை எவ்வாறு "மேட்ச்" பண்ணிர்கள்? இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் மன்னிக்கவும் ./////

  நீங்களே அடுத்த பினூட்டத்தில் சொல்லிவிட்டீர்கள். எனக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.நன்றி!

  ReplyDelete
 43. ////Blogger Shyam Prasad said...
  அய்யா புரிந்து விட்டது. படத்தை நன்றாக பார்த்து புரிந்துக் கொண்டேன் . நன்றி/////

  புரிந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி!

  ReplyDelete
 44. அய்யா,


  எனக்கு ஓரு தகவலும் (பாடங்கள்) கிடைக்கப்பெறவில்லை. தப்பாக இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

  My email address is: tvvasanthan@hotmail.com

  pls send me

  thanks

  ReplyDelete
 45. சூப்பர்ப்.. சூப்பர்ப்.. சூப்பர்ப்..!

  வாத்தியார் பெருந்தன்மையுடன் பாடங்களை ரிப்பீட்டு போட்டிருக்கிறார்.

  மாணவச் செல்வங்களே.. பாடங்களை படித்துப் புரிந்து கொண்டு நீங்களும் ஜூனியர் வாத்தியாராக மாறுங்கள்..!

  மீண்டும், மீண்டும் கேள்விகளைக் கேட்டு வாத்தியாரை கஷ்டப்படுத்த வேண்டாம்..

  இதைவிட மிக எளிமையான தமிழை வலையுலகத்தில் உங்களால் காண முடியாது..!

  வாழ்க வாத்தியார்..!!!

  ReplyDelete
 46. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  சூப்பர்ப்.. சூப்பர்ப்.. சூப்பர்ப்..!
  வாத்தியார் பெருந்தன்மையுடன் பாடங்களை ரிப்பீட்டு போட்டிருக்கிறார்.
  மாணவச் செல்வங்களே.. பாடங்களை படித்துப் புரிந்து கொண்டு நீங்களும் ஜூனியர் வாத்தியாராக மாறுங்கள்..!
  மீண்டும், மீண்டும் கேள்விகளைக் கேட்டு வாத்தியாரை கஷ்டப்படுத்த வேண்டாம்..
  இதைவிட மிக எளிமையான தமிழை வலையுலகத்தில் உங்களால் காண முடியாது..!
  வாழ்க வாத்தியார்..!!!/////

  நன்றி உனா தானா!
  27.07.2009ல் எழுதிய பதிவை இப்போதுதான் படிக்கிறீர்களா?

  ReplyDelete
 47. Organic Products

  Buy the African organic health products online at affordable price, we provide the best organic health products, African natural supplements, organic

  to get more -https://eksorganic.blogspot.com/

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com