மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.7.09

மறுக்கமுடியாத உண்மைகள்!

மறுக்கமுடியாத உண்மைகள்

இன்று, வீடுகள் பெரியதாகி விட்டன;குடும்பங்கள் சின்னதாகிவிட்டன.

பட்டப்படிப்பு வகைவகையாக வளர்ந்து விட்டது; பொது அறிவு தளர்ந்து விட்டது.

மருத்துவத்தில் முன்னேறிவிட்டோம்; ஆரோக்கியத்தில் பின்தங்கி விட்டோம்.

சந்திரனைத் தொட்டு விட்டோம்; ஆனால் அடுத்த வீட்டில் குடியிருப்பவன் பெயர் தெரியாது.

வருமானம் அதிகமாகிவிட்டது; மன அமைதி குறைந்து விட்டது

இதுதான் நிதர்சனமான உண்மை!
--------------------------------------------------------------

அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.

இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்தது இறைவனின் கருணை!

கவலைகளை உதறிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள்.

மற்றவர்களையும் அனுபவிக்க விடுங்கள்!
-----------------------------------------------------------------
”வாத்தி (யார்), எதற்காக இது?”

”சும்மா, ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருந்தால் போரடித்துவிடும்.
ஒரு மாறுதலுக்காக இது!”

வாழ்க வளமுடன்!

71 comments:

அமர பாரதி said...

உள்ளேன் அய்யா. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.

நாமக்கல் சிபி said...

//அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.

இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்தது இறைவனின் கருணை!

கவலைகளை உதறிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள்.//

இதைத்தான் பித்தானந்தாவும் வலியுறுத்துகிறார்!

SP.VR. SUBBIAH said...

////Blogger அமர பாரதி said...
உள்ளேன் அய்யா. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.////

நன்றி அமரபாரதி!

SP.VR. SUBBIAH said...

////Blogger நாமக்கல் சிபி said...
//அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.
இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்தது இறைவனின் கருணை!
கவலைகளை உதறிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள்.//
இதைத்தான் பித்தானந்தாவும் வலியுறுத்துகிறார்!//////

பித்தானந்தா என்று அடிக்கடி சொல்கிறீர்கள். எங்கள் கண்ணிலேயே காட்டமாட்டேன் என்கிறீர்களே?
மாலை ஏழு மணிக்குமேல் அவரை எங்கே சந்திக்கலாம்?:-)))))

வேலன். said...

சந்திரனை தொட்டுவிட்டோம் ஆனால் அடுத்தவன் வீட்டு நபர் பெயர் தெரியாது..முற்றிலும் உண்மை அய்யா...

பிறக்கும்போது கொண்டவந்ததில்லை - இறக்கும்போது கொண்டுபோவபோவதில்லை - இடையில் சேர்க்கும் செல்வம் இறைவன் கொடுத்தது என்று ஏன் மனிதர்களுக்கு புரிவதில்லை...

நன்மைகள் செய்வோம். நல்லதே நடக்கும் ....

ஆசிரியர் வழியில்...

அன்பு மாணவன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger வேலன். said...
சந்திரனை தொட்டுவிட்டோம் ஆனால் அடுத்தவன் வீட்டு நபர் பெயர் தெரியாது..முற்றிலும் உண்மை அய்யா...
பிறக்கும்போது கொண்டவந்ததில்லை - இறக்கும்போது கொண்டுபோவபோவதில்லை - இடையில் சேர்க்கும் செல்வம் இறைவன் கொடுத்தது என்று ஏன் மனிதர்களுக்கு புரிவதில்லை...
நன்மைகள் செய்வோம். நல்லதே நடக்கும் ....
ஆசிரியர் வழியில்...
அன்பு மாணவன்,
வேலன்./////

அதைப் புரியவைத்துத்தான் கர்மகாரகன் டிக்கெட் கொடுப்பான்!
நன்றி வேலன்!

நாமக்கல் சிபி said...

//பித்தானந்தா என்று அடிக்கடி சொல்கிறீர்கள். எங்கள் கண்ணிலேயே காட்டமாட்டேன் என்கிறீர்களே?
மாலை ஏழு மணிக்குமேல் அவரை எங்கே சந்திக்கலாம்?:-)))))//

ஆசிரமத்தின் முகவரி இங்கே இருக்கிறது பாருங்கள்!

http://pithanantha.blogspot.com/

வண்ணத்துபூச்சியார் said...

மறுக்க முடியாத பதிவு.

SP.VR. SUBBIAH said...

////Blogger நாமக்கல் சிபி said...
//பித்தானந்தா என்று அடிக்கடி சொல்கிறீர்கள். எங்கள் கண்ணிலேயே காட்டமாட்டேன் என்கிறீர்களே?
மாலை ஏழு மணிக்குமேல் அவரை எங்கே சந்திக்கலாம்?:-)))))//
ஆசிரமத்தின் முகவரி இங்கே இருக்கிறது பாருங்கள்!
http://pithanantha.blogspot.com//////

முகவரிக்கு நன்றி! மாலை ஏழு மணிக்குமேல் அந்த முகவரியில் இருப்பாரா? அதுதான் கேள்வி. கிரிடிட் கார்டுடன் பார்க் ஷெரட்டான் ஹோட்டலுக்குப் போய் விடுவதாகக் கேள்வி!

SP.VR. SUBBIAH said...

//Blogger வண்ணத்துபூச்சியார் said...
மறுக்க முடியாத பதிவு.//////

நன்றி நண்பரே!

புதுகைத் தென்றல் said...

வாழு வாழவிடு அதுவும் மகிழ்ச்சியாக என்ற செய்தியை தந்த இந்தப் பாடம் அருமை. பாடத்தின் நடுவே குட்டிக் கதைகள், சொல்லும் என் தமிழாசிரியை நினைவுக்கு வந்தார்.

யூர்கன் க்ருகியர் said...

அறிவுரைக்கு ரொம்ப நன்றி அய்யா !

visu said...

வாழ்க்கையில் மாற்றம் என்பது மறுக்க முடியாத உண்மை . . .

அது சரி . .
அடுத்த சென்மம் என உள்ளதா நமக்கு . .

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என வள்ளுவர் வழியில் நடக்கும் நமக்கு பிறப்பு இல்லை . . .

எடுத்த இந்த பிறவியிலேயே முத்தி நிச்சயம் உண்டு . .

SP.VR. SUBBIAH said...

////Blogger புதுகைத் தென்றல் said...
வாழு வாழவிடு அதுவும் மகிழ்ச்சியாக என்ற செய்தியை தந்த இந்தப் பாடம் அருமை. பாடத்தின் நடுவே குட்டிக் கதைகள், சொல்லும் என் தமிழாசிரியை நினைவுக்கு வந்தார்.////

அந்தத் தமிழாசிரியைக்கு, உங்களைப் போல (நினைவில் வைத்திருக்கும்) நல்ல மாணவி கிடைத்தார் பாருங்கள் அதுதான் மேன்மை!

SP.VR. SUBBIAH said...

////Blogger யூர்கன் க்ருகியர் said...
அறிவுரைக்கு ரொம்ப நன்றி அய்யா !////

நன்றி! சென்ற பின்னூட்டத்தில் உங்களிடம் நான் கேட்டிருந்த கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே சாமி?

SP.VR. SUBBIAH said...

///Blogger visu said...
வாழ்க்கையில் மாற்றம் என்பது மறுக்க முடியாத உண்மை . . .
அது சரி . .
அடுத்த சென்மம் என உள்ளதா நமக்கு . .
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என வள்ளுவர் வழியில் நடக்கும் நமக்கு பிறப்பு இல்லை . . .
எடுத்த இந்த பிறவியிலேயே முத்தி நிச்சயம் உண்டு . .////

உங்கள் நம்பிக்கை வாழ்க! இறையருளால் அப்படியே நடக்கட்டும்!

அய்யன் வள்ளுவர் வழியில் நடப்பவர்கள் எத்தனை பேர்கள் உள்ளார்கள் சுவாமி?
புலால் உண்ணாமை, கள் உண்ணாமை என்று வள்ளுவர் எழுதியதை இன்று எத்தனை பேர்கள்
கடை பிடிக்கிறார்கள்?அவர்களுக்கெல்லாம் தொடர்ந்து பிறவி உண்டு. கடனைச் செலுத்த வேண்டுமே!:-)))

கோவி.கண்ணன் said...

//அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.//

எந்த பிறவியிலும் நீங்கள் நீங்களாகத்தான் பிறப்பீர்கள் பெயரும், உருவமும், சூழலும் மாறி இருக்கும்.

SP.VR. SUBBIAH said...

////Blogger கோவி.கண்ணன் said...
//அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.//
எந்த பிறவியிலும் நீங்கள் நீங்களாகத்தான் பிறப்பீர்கள் பெயரும், உருவமும், சூழலும் மாறி இருக்கும்.////

நான் நானாகப் பிறப்பேனா? என்ன கோவியானந்தா, புதுக்கதையாக இருக்கிறது?
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன், ப்ளீஸ்....!

dhanan said...

மறுக்க முடியாத நிதர்சனமான உண்மைகள்.கருத்துக்களுக்கு நன்றிகள்.

அன்புடன்,
மதுரை தனா.83

k subraa said...

I HAVE NEVER RECEIVE LESSON(1 & 2)

நிகழ்காலத்தில்... said...

////Blogger கோவி.கண்ணன் said...
//அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.//
எந்த பிறவியிலும் நீங்கள் நீங்களாகத்தான் பிறப்பீர்கள் பெயரும், உருவமும், சூழலும் மாறி இருக்கும்.////

நான் நானாகப் பிறப்பேனா? என்ன கோவியானந்தா, புதுக்கதையாக இருக்கிறது?
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன், ப்ளீஸ்....!//

நீங்க நீங்களாகத்தான் பிறப்பீர்கள்.
ஆனா அது நீங்கதான்னு உங்களுக்கு தெரியாது.:))

ஆன்மாவைச் சொல்கிறார்.

இந்தப் பிறவி வேலையையே நாம் முழுமையாக, நிறைவாக, நிறைவேற்றுவோமா என்பது இறையருள் சித்தம்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger dhanan said...
மறுக்க முடியாத நிதர்சனமான உண்மைகள்.கருத்துக்களுக்கு நன்றிகள்.
அன்புடன்,
மதுரை தனா.83////

நன்றி தனா!

SP.VR. SUBBIAH said...

////Blogger k subraa said...
I HAVE NEVER RECEIVE LESSON(1 & 2)////

அந்த சிறப்பு வகுப்பில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் பாடங்கள் வரும்.நீங்கள் பதிவு செய்யுங்கள் - email Id:
classroom2007@gmail.com

SP.VR. SUBBIAH said...

////Blogger நிகழ்காலத்தில்... said...
////Blogger கோவி.கண்ணன் said...
//அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.//
எந்த பிறவியிலும் நீங்கள் நீங்களாகத்தான் பிறப்பீர்கள் பெயரும், உருவமும், சூழலும் மாறி இருக்கும்.////
நான் நானாகப் பிறப்பேனா? என்ன கோவியானந்தா, புதுக்கதையாக இருக்கிறது?
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன், ப்ளீஸ்....!//
நீங்க நீங்களாகத்தான் பிறப்பீர்கள்.
ஆனா அது நீங்கதான்னு உங்களுக்கு தெரியாது.:))
ஆன்மாவைச் சொல்கிறார்.
இந்தப் பிறவி வேலையையே நாம் முழுமையாக, நிறைவாக, நிறைவேற்றுவோமா என்பது இறையருள் சித்தம்.////

ஆன்மாவைப் பற்றியா அவர் சொல்கிறார்? எனக்கு ஆச்சரியமாக உள்ளது!
பொறுத்திருப்போம். அவரே வந்து சொல்லுவார்!

கோவி.கண்ணன் said...

//ஆன்மாவைப் பற்றியா அவர் சொல்கிறார்? எனக்கு ஆச்சரியமாக உள்ளது!
பொறுத்திருப்போம். அவரே வந்து சொல்லுவார்!//

இதிலென்ன வியப்பு என்று தெரியவில்லை. கோவியார் இறைமறுப்பு, ஆன்மா மறுப்பு என்று பதிவில் எழுதியதில்லை. மூடநம்பிக்கைச் சாடல் உங்களுக்கு இறைமறுப்பாக தெரிந்தால் சுயபரிசோதனைச் செய்ய வேண்டியது நான் அல்ல.
:)

எப்போதுமே எந்தப் பிறவியிலும் நீங்கள் நீங்களாகத் தான் பிறப்பீர்கள், நான் நானாகத்தான் பிறப்பேன். உடலும், பெற்றோரும், வாரிசுகளும் மட்டும் மாறும், அல்லது அந்த உறவு முறைகள் மாறும். மீண்டும் பிறக்கும் போது உங்களின் தற்போதைய பேரனுக்கு நீங்கள் மகனாகப் பிறந்தால் உங்க தற்போதைய மகனுக்கு நீங்க பேரன். சரியா ?

SP.VR. SUBBIAH said...

////Blogger கோவி.கண்ணன் said...
//ஆன்மாவைப் பற்றியா அவர் சொல்கிறார்? எனக்கு ஆச்சரியமாக உள்ளது!
பொறுத்திருப்போம். அவரே வந்து சொல்லுவார்!//
இதிலென்ன வியப்பு என்று தெரியவில்லை. கோவியார் இறைமறுப்பு, ஆன்மா மறுப்பு என்று பதிவில் எழுதியதில்லை. மூடநம்பிக்கைச் சாடல் உங்களுக்கு இறைமறுப்பாக தெரிந்தால் சுயபரிசோதனைச் செய்ய வேண்டியது நான் அல்ல.
:)//////

அடடா, இதை உங்கள் வாயில் இருந்து வரவழைக்கத்தான், அவரைப் பொறுத்திருங்கள் என்று சொன்னேன்.
கரெக்டாக வந்து சொல்லிவிட்டீர்கள். நன்றி. நீங்கள் நாகபட்டிணம் நீலாவின் பக்தன் என்பது எனக்குத் தெரியாதா என்ன?.

நீங்கள் நீலாவின் பெருமைகளை ஒரு ஆன்மிகத் தொடராக எழுதுங்கள். அதுதான் என் ஆசை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

/////// எப்போதுமே எந்தப் பிறவியிலும் நீங்கள் நீங்களாகத் தான் பிறப்பீர்கள், நான் நானாகத்தான் பிறப்பேன். உடலும், பெற்றோரும், வாரிசுகளும் மட்டும் மாறும், அல்லது அந்த உறவு முறைகள் மாறும். மீண்டும் பிறக்கும் போது உங்களின் தற்போதைய பேரனுக்கு நீங்கள் மகனாகப் பிறந்தால் உங்க தற்போதைய மகனுக்கு நீங்க பேரன். சரியா ?//////

நான் நானாகப் பிறந்தால், அடுத்த பிறவியில் நாகபட்டிணம் அல்லது வேளாங்கன்னியில் பிறக்க விருப்பம். இதற்கு எங்கே மனுச் செய்ய வேண்டும்?:-)))))

வெ.இராதாகிருஷ்ணன் said...

இவையெல்லாம் பொதுவான உண்மைகள் என கொள்ளலாமேயன்றி மறுக்கமுடியாத உண்மைகள் என கொள்ள இயலாது.

பொதுப்படுத்தப்பட்ட விசயங்களால் பல உண்மைகள் ஒளிந்து பின்னர் ஒழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

அடுத்த ஜென்மம் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கும்போது அதில் என்னவாகப் பிறப்போம் என்பது தெரியாது எனச் சொல்வது மறுக்க இயலாத உண்மை என்பதைவிட உண்மையாகவே அது இருக்க வாய்ப்பின்றி போகிறது.

vattukozhi said...

ulleyen iyyaa.

கோவி.கண்ணன் said...

//அடடா, இதை உங்கள் வாயில் இருந்து வரவழைக்கத்தான், அவரைப் பொறுத்திருங்கள் என்று சொன்னேன். கரெக்டாக வந்து சொல்லிவிட்டீர்கள். நன்றி. //

என்பதிவில் வள்ளலார் படமும் இருக்கிறதே கவனிக்கவில்லையா ஐயா.

//நீங்கள் நாகபட்டிணம் நீலாவின் பக்தன் என்பது எனக்குத் தெரியாதா என்ன?.//

அந்த கோவில் பெயர் காயரோகணம் - கருந்தடங்கன்னி(நீலாயதாட்சி) கோவில். நீலாயதாட்சிக்கு தனி சன்னதி உண்டு. அந்தக் கோவிலில் இருந்து தான் என் திருமண ஊர்வலம் தொடங்கியது. பக்தியெலலம் எதுவும் தற்போது கிடையாது.

வாரிசுகளும் பக்தர்களைப் போல் வணக்கம் செலுத்துவார்களா ? :)

//நீங்கள் நீலாவின் பெருமைகளை ஒரு ஆன்மிகத் தொடராக எழுதுங்கள். அதுதான் என் ஆசை!
//

ஐயோ சாமி, கனவில் பாம்பு வந்தது போன்ற கதைகளை என்னால் எழுத முடியாது. அவதாரம், பெருமை மெய்சிலிர்ப்பு என்று திருப்திப்பட்டுக்கொள்வதால் தான், ஒரு பக்தன் கடைசிவரையில் பக்தனாகவே இருக்கவேண்டி இருக்கிறதோ அல்லது அதுக்கும் மேல் செல்ல பக்தர்கள் விரும்பதில்லையோ.
:)

கோவி.கண்ணன் said...

//நான் நானாகப் பிறந்தால், அடுத்த பிறவியில் நாகபட்டிணம் அல்லது வேளாங்கன்னியில் பிறக்க விருப்பம். இதற்கு எங்கே மனுச் செய்ய வேண்டும்?:-)))))

Wednesday, July 29, 2009 3:07:00 PM

//

:)) சுனாமி பயமே இல்லையா ?

நிகழ்காலத்தில்... said...

:))))

வாத்தியார் வாத்தியார்தான்:)

தம்பி கிருஷ்ணா said...

உள்ளேன் ஐயா ..

SP.VR. SUBBIAH said...

////Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
இவையெல்லாம் பொதுவான உண்மைகள் என கொள்ளலாமேயன்றி மறுக்கமுடியாத உண்மைகள் என கொள்ள இயலாது.
பொதுப்படுத்தப்பட்ட விசயங்களால் பல உண்மைகள் ஒளிந்து பின்னர் ஒழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
அடுத்த ஜென்மம் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கும்போது அதில் என்னவாகப் பிறப்போம் என்பது தெரியாது எனச் சொல்வது மறுக்க இயலாத உண்மை என்பதைவிட உண்மையாகவே அது இருக்க வாய்ப்பின்றி போகிறது.////

Take it easy, Sir!
இந்த ஜென்மத்தில் பட்ட கஷ்டங்கள் போதும்! அடுத்த ஜென்மம் எதற்கு?
இருந்தாலும் வேண்டாம். அடுத்த ஜென்மத்தில் என்ன என்பதைப்பற்றி நகைச்சுவைக்காகப்
பேசுவதில் தவறில்லை

SP.VR. SUBBIAH said...

///Blogger vattukozhi said...
ulleyen iyyaa./////

என்ன, வருகைப் பதிவு மட்டும்தானா? நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger கோவி.கண்ணன் said...
//அடடா, இதை உங்கள் வாயில் இருந்து வரவழைக்கத்தான், அவரைப் பொறுத்திருங்கள் என்று சொன்னேன். கரெக்டாக வந்து சொல்லிவிட்டீர்கள். நன்றி. //
என்பதிவில் வள்ளலார் படமும் இருக்கிறதே கவனிக்கவில்லையா ஐயா.
//நீங்கள் நாகபட்டிணம் நீலாவின் பக்தன் என்பது எனக்குத் தெரியாதா என்ன?.//
அந்த கோவில் பெயர் காயரோகணம் - கருந்தடங்கன்னி(நீலாயதாட்சி) கோவில். நீலாயதாட்சிக்கு தனி சன்னதி உண்டு. அந்தக் கோவிலில் இருந்து தான் என் திருமண ஊர்வலம் தொடங்கியது. பக்தியெலலம் எதுவும் தற்போது கிடையாது.
வாரிசுகளும் பக்தர்களைப் போல் வணக்கம் செலுத்துவார்களா ? :)/////

50 வயசிற்குமேல் செலுத்துவார்கள். செலுத்தாவிட்டாலும் யாருக்கும் நஷ்டமில்லை!
..........................................................................
//நீங்கள் நீலாவின் பெருமைகளை ஒரு ஆன்மிகத் தொடராக எழுதுங்கள். அதுதான் என் ஆசை!
//
ஐயோ சாமி, கனவில் பாம்பு வந்தது போன்ற கதைகளை என்னால் எழுத முடியாது. அவதாரம், பெருமை மெய்சிலிர்ப்பு என்று திருப்திப்பட்டுக்கொள்வதால் தான், ஒரு பக்தன் கடைசிவரையில் பக்தனாகவே இருக்கவேண்டி இருக்கிறதோ அல்லது அதுக்கும் மேல் செல்ல பக்தர்கள் விரும்பதில்லையோ.
:)////////

கடைசிவரைக்கும் இருந்தால் அதுவே பெரிய காரியம்!
சிலபேர்கள் ஆடி அடங்கி, படுக்கையில் (மருத்துவமனைப் படுக்கையில்) படுத்த பிறகுதான், சிவா, ராமா என்கிறார்கள். அதுவரைக்கும் டாஸ்மாக் சரக்கும், கறிக்கோழியும்தான் தெய்வம்! அவர்களை நினைக்கும்பொது நீங்களும், நானும் கோடி மடங்கு பரவாயில்லை (உதித் நாராயணனின் பறவாயில்ல்லை இல்லை இது! இது உண்மையிலேயே பரவாயில்லை)

SP.VR. SUBBIAH said...

////Blogger கோவி.கண்ணன் said...
//நான் நானாகப் பிறந்தால், அடுத்த பிறவியில் நாகபட்டிணம் அல்லது வேளாங்கன்னியில் பிறக்க விருப்பம். இதற்கு எங்கே மனுச் செய்ய வேண்டும்?:-)))))///
:)) சுனாமி பயமே இல்லையா ?//////

சுனாமியைப் பற்றி பினாமிகள் பெயரில் சொத்து வைத்திருப்பவர்கள்தான் கவலைப்பட வேண்டும்!பயப்பட வேண்டும். எனக்கு இரண்டும் இல்லை

SP.VR. SUBBIAH said...

Blogger நிகழ்காலத்தில்... said...
:))))
வாத்தியார் வாத்தியார்தான்:)//////

நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் நான் நான்தான்!;-)))

SP.VR. SUBBIAH said...

////Blogger தம்பி கிருஷ்ணா said...
உள்ளேன் ஐயா ../////

நல்லது தம்பி!

dharshini said...

நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
// //அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.

இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்தது இறைவனின் கருணை!// true lines..

கோவி.கண்ணன் said...

//சுனாமியைப் பற்றி பினாமிகள் பெயரில் சொத்து வைத்திருப்பவர்கள்தான் கவலைப்பட வேண்டும்!பயப்பட வேண்டும். எனக்கு இரண்டும் இல்லை//

சுனாமியில் இறந்தவர்களில் 99 விழுக்காடு பணக்காரர்கள், பினாமிகள் இல்லை

கோவி.கண்ணன் said...

41 ஆவது பின் ஆட்டம் !
:)

krish said...

நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.

SP.VR. SUBBIAH said...

////Blogger dharshini said...
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
// //அடுத்த ஜென்மத்தில் என்னவாகப் பிறப்போம் என்று தெரியாது.
இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்தது இறைவனின் கருணை!// true lines../////

நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger கோவி.கண்ணன் said...
//சுனாமியைப் பற்றி பினாமிகள் பெயரில் சொத்து வைத்திருப்பவர்கள்தான் கவலைப்பட வேண்டும்!பயப்பட வேண்டும். எனக்கு இரண்டும் இல்லை//
சுனாமியில் இறந்தவர்களில் 99 விழுக்காடு பணக்காரர்கள், பினாமிகள் இல்லை/////

அதுவும் உயிர்தானே சாமி. இறப்பை எதற்காக வகைப்படுத்த வேண்டும்!போகட்டும் விடுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்./////

அது தமிழர்களிடையே புகழ்பெற்ற பாடலாயிற்றே சுவாமி!
தெரியாமல் இருக்குமா?
கீழே கொடுத்துள்ளேன்!

கத்தும்கடல்சூழ் நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும்
குத்தி உலையில் இட ஊரடங்கும்
ஓரகப்பை அன்னம் இலையில் இட வெள்ளியெழும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////

காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது!

krish said...

நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////

காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது!///
இதை தவிற வேறு ஒரு பாடல் என் தந்தையார் கூறியது.
ஒரு சமயம் கவி காளமேகம் நாகை வந்தபோது பசியுடன் அங்கு மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் சோறு எங்கே விற்கும் என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டயில் விக்கும் என்றனர். கோபமடைந்த கவி பாக்கு தெறிக்கும் என்று தொடங்கும் பாடலை சுவற்றில் எழுத ஆரம்பிதார். அப்போது கோவில் மணி அடித்தால் பாதியில் விட்டு சென்றார். அச்சிறுவர்கள் அதை நாக்கு தெரிக்கும் நன் நாகை என்று முடித்தனர். காளமேகம் சரம கவி அதனால் நாகை மக்கள் பேச்சு வன்மை பெற்றவர் என்று என் தந்தையார் கூறுவார்கள்.முழு பாடல் நினைவில்லை.

கோவி.கண்ணன் said...

// SP.VR. SUBBIAH said...
////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////

காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது
//

ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்

SP.VR. SUBBIAH said...

///Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////
காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது!///
இதை தவிற வேறு ஒரு பாடல் என் தந்தையார் கூறியது.
ஒரு சமயம் கவி காளமேகம் நாகை வந்தபோது பசியுடன் அங்கு மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் சோறு எங்கே விற்கும் என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டயில் விக்கும் என்றனர். கோபமடைந்த கவி பாக்கு தெறிக்கும் என்று தொடங்கும் பாடலை சுவற்றில் எழுத ஆரம்பிதார். அப்போது கோவில் மணி அடித்தால் பாதியில் விட்டு சென்றார். அச்சிறுவர்கள் அதை நாக்கு தெரிக்கும் நன் நாகை என்று முடித்தனர். காளமேகம் சரம கவி அதனால் நாகை மக்கள் பேச்சு வன்மை பெற்றவர் என்று என் தந்தையார் கூறுவார்கள்.முழு பாடல் நினைவில்லை.////

எனக்கு இது புதிய செய்தி. அறியத்தந்தமைக்கு நன்றி
அடுத்த பின்னூட்டத்தைப் பாருங்கள், கோவியார் கை கொடுக்க வந்துவிட்டார் அது பற்றிய முழுத்தகவலுடன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger கோவி.கண்ணன் said...
// SP.VR. SUBBIAH said...
////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////
காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது
//
ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்//////

படித்தேன் சுவையாக உள்ளது! நன்றி
இது தொடர்பாக என்னிடமும் ஒரு செய்தி உள்ளது. அது வேறு ஒரு ஆசுகவியைப் பற்றியது.
அவர் பெயர் பாடுவார் முத்தப்ப செட்டியார். தனிப் பதிவாக அடுத்தவாரம் எழுதுகிறேன். படித்து மகிழுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger கோவி.கண்ணன் said...
// SP.VR. SUBBIAH said...
////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////
காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது
//
ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்//////

பின்னூட்டத்தில் சுட்டியைக் கொடுப்பதற்கான HTML Tagஐப் பற்றிச் சொல்லித்தாருங்கள் கோவியாரே!

balaji said...
This comment has been removed by the author.
balaji said...

இந்த ஜென்மதிலே வாழ்க்கை இவ்வளவு விரக்தியா இருக்கு. சிலசமயம் ஏதுமேலயும் பிடிப்பு இல்லாமல் இருக்கு.நான் கஸ்டப்படுறதால இப்படி பேசுரென் என்று ‌சில பேர் நிணைக்கலாம். ஒரு வேளை எனக்கு வசதியும் வரலாம், வரும், அப்படி வந்தாலும் இந்த நிலையில்ல வசதிக்காகவா நான் வாழனும், கிடைச்ச வரைக்கும் இன்பமோ, துன்பமோ இந்த பிறவியே போதும். ஒரு வேளை எனக்கு அடுத்த பிறவி இருந்தாலும் பெருமாளையும், பெருமாள் நாமத்தையும் மறக்காம சொல்லுற பாக்கியம் தான் வேண்டும்.

Emmanuel Arul Gobinath said...

ஜயா இருக்கிறேன்.. சில கிழமைகளின் பின் ஆஜர். பாடங்கள் இன்னும் கிடப்பில் இருக்கிறது வேலை நிமித்தம் சற்று ஆடிப்போயுள்ளேன்.. நீங்கள் சொன்னால் சரி தான்.. !! :) .. ஆனால் நீங்கள் சொன்ன அந்த சஸ்பென்ஸ் கதையை இன்னும் சொல்ல வில்லை..(email ல் அனுப்புவதாக கூறிய)

SUBBU said...

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே

என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

SP.VR. SUBBIAH said...

/////Blogger balaji said...
இந்த ஜென்மதிலே வாழ்க்கை இவ்வளவு விரக்தியா இருக்கு. சிலசமயம் ஏதுமேலயும் பிடிப்பு இல்லாமல் இருக்கு.நான் கஸ்டப்படுறதால இப்படி பேசுகிறேன் என்று ‌சில பேர் நிணைக்கலாம். ஒரு வேளை எனக்கு வசதியும் வரலாம், வரும், அப்படி வந்தாலும் இந்த நிலையில்ல வசதிக்காகவா நான் வாழனும், கிடைச்ச வரைக்கும் இன்பமோ, துன்பமோ இந்த பிறவியே போதும். ஒரு வேளை எனக்கு அடுத்த பிறவி இருந்தாலும் பெருமாளையும், பெருமாள் நாமத்தையும் மறக்காம சொல்லுற பாக்கியம் தான் வேண்டும்./////////

உங்கள் விருப்பம் நிறைவேறும் பாலாஜி!
பாஜாஜி மற்றும் ரமேஷ் எனும் பெயரில் வகுப்பறைக்கு நிறையப் பேர்கள் வருகிறார்கள். கூடவே எதாவது அடையாளப் பெயரும் வைத்துக்கொண்டால் வாத்தியாருக்கு அடையாளம் தெரியும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Emmanuel Arul Gobinath said...
ஜயா இருக்கிறேன்.. சில கிழமைகளின் பின் ஆஜர். பாடங்கள் இன்னும் கிடப்பில் இருக்கிறது வேலை நிமித்தம் சற்று ஆடிப்போயுள்ளேன்.. நீங்கள் சொன்னால் சரி தான்.. !! :) .. ஆனால் நீங்கள் சொன்ன அந்த சஸ்பென்ஸ் கதையை இன்னும் சொல்ல வில்லை..(email ல் அனுப்புவதாக கூறிய)/////

உங்கள் மாதிரி எனக்கும் ஓய்வில்லாத வேலை இமானுவேல். கதை மனதில் இருக்கிறது. தட்டச்சு செய்து பதிவில் ஏற்ற வேண்டும். இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger SUBBU said...
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்!//////

சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனதில் நினைத்தாலும் போதும்!
நன்றி சுப்பு. எந்த ஊர் சுப்பு நீங்கள்?

SUBBU said...

// SP.VR. SUBBIAH said...
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனதில் நினைத்தாலும் போதும்!
நன்றி சுப்பு. எந்த ஊர் சுப்பு நீங்கள்?
//
திருக்களப்பூர், எங்கு இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?

Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumayana Varigal Sir. Nijamaga Manasellam Sandthosam...

Namadhu Vaguparayin idaye ippadi oru padhivu vendum Sir...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Sripathi Balaji said...

ஐயா அந்த சஸ்பென்ஸ் கதைக்கு இரண்டு நாள் காத்துருக்கத்தான் வேண்டுமா?

SP.VR. SUBBIAH said...

////Blogger SUBBU said...
// SP.VR. SUBBIAH said...
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனதில் நினைத்தாலும் போதும்!
நன்றி சுப்பு. எந்த ஊர் சுப்பு நீங்கள்?
// திருக்களப்பூர், எங்கு இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?/////

இதுதானே வேண்டாம் என்கிறது! எங்கள் பெரிய அண்ணனுக்குத் தெரியாதது எதுவுமே கிடையாது. கேட்டேன் சொல்லிவிட்டார், பெரம்பலூர் அருகே அரியலூர் மாவட்டம். சரியா?
என் பெரிய அண்ணனின் பெயர் தெரியுமா? அவர் பெயர்: கூகுள் ராஜா!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Arumayana Varigal Sir. Nijamaga Manasellam Sandthosam...
Namadhu Vaguparayin idaye ippadi oru padhivu vendum Sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sripathi Balaji said...
ஐயா அந்த சஸ்பென்ஸ் கதைக்கு இரண்டு நாள் காத்துருக்கத்தான் வேண்டுமா?////

Alfred Hitchcock படங்களை இரண்டு அல்லது 3 நாட்கள் காத்திருந்து முட்டி மோதிப் பார்த்தவன்நான். அப்படிப் பார்க்கும்போது அவர் படங்கள் இரண்டு மடங்கு சஸ்பென்ஸாக இருக்கும்!

கோவை விமல்(vimal) said...

ullen ayya, kindly add my email address too (vimalind@gmail.com).

SUBBU said...

//இதுதானே வேண்டாம் என்கிறது! எங்கள் பெரிய அண்ணனுக்குத் தெரியாதது எதுவுமே கிடையாது. கேட்டேன் சொல்லிவிட்டார், பெரம்பலூர் அருகே அரியலூர் மாவட்டம். சரியா?
என் பெரிய அண்ணனின் பெயர் தெரியுமா? அவர் பெயர்: கூகுள் ராஜா!//

சரியாக சொன்னீர்கள், East or West Google is Best :))))))))

ceylonstar said...

Hello Sir,

I am not able to find the old labels. Are you removing them?

Please don't....I am trying to catch up all you writings.

thankx,
:)

SP.VR. SUBBIAH said...

Blogger கோவை விமல்(vimal) said...
ullen ayya, kindly add my email address too (vimalind@gmail.com).////

உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது விமல்!

SP.VR. SUBBIAH said...

////Blogger SUBBU said...
//இதுதானே வேண்டாம் என்கிறது! எங்கள் பெரிய அண்ணனுக்குத் தெரியாதது எதுவுமே கிடையாது. கேட்டேன் சொல்லிவிட்டார், பெரம்பலூர் அருகே அரியலூர் மாவட்டம். சரியா?
என் பெரிய அண்ணனின் பெயர் தெரியுமா? அவர் பெயர்: கூகுள் ராஜா!//
சரியாக சொன்னீர்கள், East or West Google is Best :))))))))//////

அதுபோல ஒரு பெரியண்ணன் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்!
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்!

SP.VR. SUBBIAH said...

///Blogger ceylonstar said...
Hello Sir,
I am not able to find the old labels. Are you removing them?
Please don't....I am trying to catch up all you writings.
thankx, :)////

நான் எதையும் மாற்றவில்லை, ராஜா!
நீக்கவில்லை ராஜா!

ceylonstar said...

IF I HAD MY LIFE TO LIVE OVER

I'd dare to make more mistakes next time.
I'd relax, I would limber up.
I would be sillier than I have been this trip.
I would take fewer things seriously.
I would take more chances.
I would climb more mountains and swim more rivers.
I would eat more ice cream and less beans.
I would perhaps have more actual troubles,
but I'd have fewer imaginary ones.

You see, I'm one of those people who live
sensibly and sanely hour after hour,
day after day.

Oh, I've had my moments,
And if I had it to do over again,
I'd have more of them.
In fact, I'd try to have nothing else.
Just moments, one after another,
instead of living so many years ahead of each day.

I've been one of those people who never goes anywhere
without a thermometer, a hot water bottle, a raincoat
and a parachute.
If I had to do it again, I would travel lighter than I have.

If I had my life to live over,
I would start barefoot earlier in the spring
and stay that way later in the fall.
I would go to more dances.
I would ride more merry-go-rounds.
I would pick more daisies.

Nadine Stair,
85 years old.