மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.7.09

புதுமுகமா? வாருங்கள் குறுக்கு வழியில் போவோம்!புதுமுகமா? வாருங்கள் குறுக்கு வழியில் போவோம்!

புதிதாக நுழைபவர்கள், இங்கே இன்று நடக்கும் பாடத்தை முதலில் படித்தவுடன், ஒன்றும் புரியாது. அதே நேரத்தில் ஆர்வமாகவும் இருக்கும்.

என்ன செய்வது என்று தெரியாது. யாரைக் கேட்பது என்றும் தெரியாது. சரி, சைடு பாரைப் பார்ப்போம் என்று பார்த்தால், திகைப்பாக இருக்கும். 215 பாடங்களா? என்றைக்குப் படிப்பது? என்றைக்கு முடிப்பது?

அதோடு இங்கே இருக்கும் சீனியர்களுடன் என்றைக்கு ஐக்கியமாவது?

முன்பு ஒரு சமயம், ஒரு ஜோதிட நூலில், அதை எழுதிய பெருந்தகையாளன், அசத்தலாகச் சொல்லியிருந்தான்:

“அடேய், சரவளி, காலப் பிரகாசிகா, ஜெய்மானி ஜோதிடம், அகத்தியருக்கு முருகன் சொன்ன குமாரசுவாமிய ஜோதிடம் ஆகிய நூல்களையெல்லாம் கற்றுத் தேர்வதென்றால் உனக்கு ஆயுள் பற்றாது. சமஸ்கிருதத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஜோதிட சுலோகங்கள் உள்ளன. அனைத்தையும் உன் மண்டையில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றுவதற்குள், உனக்கு கர்மகாரகன் போர்டிங் பாஸ் கொடுத்து, உன்னை மேல் உலகத்திற்கு அனுப்பி விடுவான். அந்தக் காலத்தில் படித்தார்கள் என்றால், கவனச் சிதறல் இல்லாத வேப்ப மரத்தடிக் கல்வி. இன்றைய சூழ்நிலையில், நம்மைச் சூழ்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு புகையில் நமக்கு ஏதாவது ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதே பெரிய காரியம். ஓசோன் படத்திலேயே ஓட்டை விழுந்து விட்டது. உனக்கு விழுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆகவே என்னுடன் வா, நான் ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு குறுக்கு வழியைக் காட்டுகிறேன்” என்றான். காட்டினான். 100 பக்கப் புத்தகம். நான் படித்து வியந்திருக்கிறேன்.

என்ன கொடுமை என்றால், என்னிடம் இருந்து அதைப் படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிக் கொண்டு போன சிநேகிதன் அதை போக்கடித்து விட்டான். தொலைந்து போய்விட்டதென்று தலையச் சொறிந்தான் (அவனுடைய தலையைத்தான்). நானும் தொலைந்து போகிறான் என்று விட்டு விட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோகம் அது! அதிலிருந்து நான் யாருக்கும், எந்தப் புத்தகத்தையும் இரவலாகக் கொடுப்பதில்லை. கெட்ட பின்னே ஞானம்!

ஒரு சிந்தனையாளன் சொன்னான்:
”மனைவியையும், புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது”

அவன் சொன்னது அசத்தலான உண்மை!
========================================
புதிதாக வருகிறவர்களுக்கு, நானும் ஒரு குறுக்கு வழியைக் காட்டப் போகிறேன்.
அதைக் காட்டுவதற்காகத் துணைப் பதிவு ஒன்றை இன்று ஆரம்பித்திருக்கிறேன்.
அதில் தினமும் பாடங்கள் சுருக்கமாக upload ஆகும்.

அனைத்துமே பழைய பாடங்கள்தான். தெரிவு செய்து படிப்பதற்குச் சுலபமாக
இருக்கும்.

அதை book mark செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது உள்ளே சென்று பாருங்கள்.
உங்களுக்குத் தேவையான செய்திகளைக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் அல்லது
உங்கள் கணினியில் copy செய்து வைத்துக் கொள்ளுங்கள். உதவியாக இருக்கும்.

அந்தப் பகுதிக்குக் கேள்வி, பதில், பின்னூட்டம் என்று எதுவும் கிடையாது.
அதை மனதில் கொள்க.

சென்று பாருங்கள். அதற்கான சுட்டி ( Link) இங்கே!

Enjoy!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

37 comments:

hotcat said...

Sir,

What made you so passion to teach others...you are juz amazing!

Thanks
Shankar

தம்பி கிருஷ்ணா said...

நான் தான் ரெண்டாவது..
வணக்கம் ஐயா.
புதிய மாணவர்களுக்கு ஒரு நல்ல ஐடியா..
ஆனாலும் ஜோதிடத்தை பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டுமானால் அடிப்படை விடயங்கள் சகலதும் ஐயம்திரிபற தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை. இல்லாவிட்டால் இடையில் குழம்பிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Shyam Prasad said...

நான் வருகிறேன்

krish said...

Great.

செல்லி said...

//” புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது”//
That's true!.

kmr.krishnan said...
This comment has been removed by the author.
kmr.krishnan said...

உஙகள் அர்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறேன், அய்யா!‌

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
Sir,
What made you so passion to teach others...you are juz amazing!
Thanks
Shankar/////

மாணவர் பதிவேட்டைப் பாருங்கள். இன்றைய என்னிக்கை 522
இததனை பேர்கள் நம் வகுப்பறையில் படிக்கின்றார்கள் எனும் மகிழ்ச்சியைவிட, அத்தனை பேர்களுக்கும் இன்னும் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பாடம் நடத்த வேண்டுமே - என்கின்ற கவலைதான் என் மனதில் எஞ்சி நிற்கிறது. அந்தக் கவலையை போக்கும் விதமாகத்தான், பழைய பாடங்களை வரிசைப் படுத்துவதிலும், புதிய பாடங்களை முறையாக வலையேற்றுவதிலும் மும்மராக இருக்கிறேன்!

SP.VR. SUBBIAH said...

///Blogger தம்பி கிருஷ்ணா said...
நான் தான் ரெண்டாவது..
வணக்கம் ஐயா.
புதிய மாணவர்களுக்கு ஒரு நல்ல ஐடியா..
ஆனாலும் ஜோதிடத்தை பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டுமானால் அடிப்படை விடயங்கள் சகலதும் ஐயம்திரிபுற தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை. இல்லாவிட்டால் இடையில் குழம்பிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்./////

புரிதலுக்கு நன்றி கிருஷ்ணா!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Shyam Prasad said...
நான் வருகிறேன்/////

என்ன வெறும் attendance மட்டும்தானா ஷியாம்?

SP.VR. SUBBIAH said...

//////Blogger krish said...
Great./////

உண்மையான great ஒருவன்தான். அவன் இன்னும் கண்ணில் பட மாட்டேன் என்கிறான் க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger செல்லி said...
//” புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது”//
That's true!./////

எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் சகோதரி - இரவலாக படிக்கும் ஆசாமிகளைத்தவிர!

SP.VR. SUBBIAH said...

/////Blogger kmr.krishnan said...
உஙகள் அர்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறேன், அய்யா!‌/////

உங்கள் வயதிற்கு, நீங்கள் எனக்குத் தலை வணங்கக்கூடாது. ஆசீர்வதியுங்கள்!!

நாமக்கல் சிபி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

நீங்க ரொம்ப நல்லவரு.........!

Hari said...

Dear Vaathiyar Aiiya,

I remember earlier you've told us to publish an article regarding "how to do meditation/prathanai". Can you please spend some on this as now the days it is difficult to sit and perform prathannai and mind gets diverted very easily during that time. It would be great help

Regards
Hari

மிஸ்டர் அரட்டை said...

yennaipola pazhaya mugathirkum indha record room ubayogamaga irukkum

minorwall said...

ரொம்ப காலமா நவாம்சம் புரியாமல் ஜாதகத்தையே பார்க்காமல் numerology மட்டுமே பார்த்துட்டு ஓடிட்டேன். ரெண்டு கட்டத்தை வெச்சுகிட்டு எப்பிடி பலன் சொல்லுறாங்கன்னு அந்த சுப்ஜெக்ட் மேலேயே ஒரு எரிச்சல்..ரொம்ப
பேசிக்கான மேட்டர் .ரொம்ப லேட்டா இன்னிக்கு எனக்கு புரிஞ்சுது..
நல்லா, தெளிவாவே புரிஞ்சுடுச்சு..நவாம்சம் கணிப்பு..சோ, நவாம்சம் ஓகே..
கூடுதுரையாரின் sorting is really so helpful in making such searches..thanks alot kooduthuraiyar..ஆசிரியரின் நேரத்தை வீணடிக்காமல் இருக்க பழைய பாடங்களின் பின்னூட்டத்தை படிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது..

புதுமுகங்களுக்கான ஆசிரியரின் கரிசனம் வணக்கத்துக்குரியது.நன்றி.

Sakthi Ganesh said...

Sir,
You are doing some wonderful job for making your students to learn (Konjamaavathu mara mandaikalil eetri vida vendum endru muyarchi segirerigal) thanks for your effort, and we will also cooparate, and understand your effortful work and try to learn the maximum. Sakthi ganesh.

SP.VR. SUBBIAH said...

////Blogger நாமக்கல் சிபி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
நீங்க ரொம்ப நல்லவரு.........!/////

இரண்டாவது வரி சரி!
முதல் வரி எதற்கு ராஜா?

SP.VR. SUBBIAH said...

////Blogger Hari said...
Dear Vaathiyar Aiiya,
I remember earlier you've told us to publish an article regarding "how to do meditation/prathanai". Can you please spend some on this as now the days it is difficult to sit and perform prathannai and mind gets diverted very easily during that time. It would be great help
Regards
Hari////

எழுதுகிறேன் நண்பரே! சற்றுப் பொறுத்திருங்கள். பழைய பாடங்களைத் தூசி தட்டி ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger மிஸ்டர் அரட்டை said...
yennaipola pazhaya mugathirkum indha record room ubayogamaga irukkum///

இருந்தால் மகிழ்ச்சிதான்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger minorwall said...
ரொம்ப காலமா நவாம்சம் புரியாமல் ஜாதகத்தையே பார்க்காமல் numerology மட்டுமே பார்த்துட்டு ஓடிட்டேன். ரெண்டு கட்டத்தை வெச்சுகிட்டு எப்பிடி பலன் சொல்லுறாங்கன்னு அந்த சப்ஜெக்ட் மேலேயே ஒரு எரிச்சல்..ரொம்ப பேசிக்கான மேட்டர் .ரொம்ப லேட்டா இன்னிக்கு எனக்கு புரிஞ்சுது..
நல்லா, தெளிவாவே புரிஞ்சுடுச்சு..நவாம்சம் கணிப்பு..சோ, நவாம்சம் ஓகே..
கூடுதுரையாரின் sorting is really so helpful in making such searches..thanks alot kooduthuraiyar..ஆசிரியரின் நேரத்தை வீணடிக்காமல் இருக்க பழைய பாடங்களின் பின்னூட்டத்தை படிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
புதுமுகங்களுக்கான ஆசிரியரின் கரிசனம் வணக்கத்துக்குரியது.நன்றி./////

ஆமாம், பழைய பின்னூட்டங்களையும் படியுங்கள். அதில் பல செய்திகள் உள்ளன!

SP.VR. SUBBIAH said...

///Blogger Sakthi Ganesh said...
Sir,
You are doing some wonderful job for making your students to learn (Konjamaavathu mara mandaikalil eetri vida vendum endru muyarchi segirerigal) thanks for your effort, and we will also cooparate, and understand your effortful work and try to learn the maximum. Sakthi ganesh./////

உங்கள் புரிதலுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே!

subbu said...

Sir,
I have also joined. Will send the details soon to your mail ID.

Thanks

Subbu

dbalaas said...

unmailaye nalla idea sir pudumugankalukku

SP.VR. SUBBIAH said...

////Blogger subbu said...
Sir,
I have also joined. Will send the details soon to your mail ID.
Thanks
Subbu////

சீக்கிரம் அனுப்புங்கள் 31.7.2009 உடன் admission முடிய உள்ளது!

SP.VR. SUBBIAH said...

////Blogger dbalaas said...
unmailaye nalla idea sir pudumugankalukku////

பழையமுகங்களுக்கும் பயன்படும்!

Dinesh babu said...

மிக அற்புதமான ஐடியா! மிக்க நன்றி அய்யா!

SP.VR. SUBBIAH said...

////Blogger Dinesh babu said...
மிக அற்புதமான ஐடியா! மிக்க நன்றி அய்யா!////

நீங்கள் அனைவரும் அவற்றை முறையாகப் பயன்படுத்துங்கள். அது இன்னும் அற்புதம்!

vedhalam said...

அடியேன் வேதலம்... புதிய மாணவன் ... இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்... உங்கள் பதிவை இரண்டு நாட்களுக்கு முன் தன பார்த்தேன்... நீண்ட நாட்களாக ஒரு நல்ல குருவை தேடி இருந்த என் பயணம் முடிந்தது என்றே நினைகிறேன்...(மாணவனில் "ஏக்கலைவனாக" இருக்க எண்ணி இந்த Blog கை தேடினேன் ஆனால் கிடைக்க வில்லை...அதனால் புனை பெயரில் " வேதலம்" னில் இணைகிறேன்.(உங்களை கேள்வி கேட்பதில் "வேதலமாக" ...) இணைத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ( இணைவது என்பது உங்களுக்கு email அனுபினாலே போதும் என்று நம்புகிறேன் இல்லை வேறு எதாவது பதிவு தேவையா? )- நன்றி

SP.VR. SUBBIAH said...

////vedhalam said...
அடியேன் வேதலம்... புதிய மாணவன் ... இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்... உங்கள் பதிவை இரண்டு நாட்களுக்கு முன் தன பார்த்தேன்... நீண்ட நாட்களாக ஒரு நல்ல குருவை தேடி இருந்த என் பயணம் முடிந்தது என்றே நினைகிறேன்...(மாணவனில் "ஏக்கலைவனாக" இருக்க எண்ணி இந்த Blog கை தேடினேன் ஆனால் கிடைக்க வில்லை...அதனால் புனை பெயரில் " வேதலம்" னில் இணைகிறேன்.(உங்களை கேள்வி கேட்பதில் "வேதலமாக" ...) இணைத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ( இணைவது என்பது உங்களுக்கு email அனுபினாலே போதும் என்று நம்புகிறேன் இல்லை வேறு எதாவது பதிவு தேவையா? )- நன்றி/////

பயணத்தை நிறுத்தாதீர்கள்.தேடுதலையும் நிறுத்தாதீர்கள்!
அதென்ன வேதலம்? இல்லை வேதாளமா?
விக்கிரமாதித்தன் கதைகளில் வருமே- அந்த வேதாளமா?

T.V.Radhakrishnan said...

super

SP.VR. SUBBIAH said...

///T.V.Radhakrishnan said...
super///

நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

Mãstän said...

Followers (741) ????

741 பேரா???? வாவ்

வாழ்த்துக்கள் சார் :)

SP.VR. SUBBIAH said...

///Blogger Mãstän said...
Followers (741) ????
741 பேரா???? வாவ்
வாழ்த்துக்கள் சார் :)////

நீங்கள் அந்த எண்ணிக்கையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்கள்.
என் நிலைமை அப்படியல்ல! எனக்குக் கவலையாக இருக்கிறது.
இன்னும் அதிகப் பொறுப்புணர்வுடனும், அதிகம் பேர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் நான் எழுத வேண்டுமே என்கின்ற கவலைதான் மேலிட்டு நிற்கிறது!

kalai said...

thank u for this post sir. I was ur offline student for the past 4 months and tried to grasp your lessons. I have joined your blog few weeks before. You are wonderful and I like ur way of writing as if u teach in person.
Again thanks much sir, will try to type in tamil next time.-Kalai

SP.VR. SUBBAIYA said...

/////kalai said...
thank u for this post sir. I was ur offline student for the past 4 months and tried to grasp your lessons. I have joined your blog few weeks before. You are wonderful and I like ur way of writing as if u teach in person.
Again thanks much sir, will try to type in tamil next time.-Kalai ////

நல்லது. தொடர்ந்து படியுங்கள்!