மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.1.09

கவிஞர் சொன்ன கட்டில் வரி!



கவிஞர் சொன்ன கட்டில் வரி!

"வாத்தியாரே ஒரு கேள்வி...!"

"கேட்டு விடு ராசா, என்ன தயக்கம்?"

"காதல் உணர்வு யாருக்கு அதிகமாக இருக்கும்?"

"வாத்தியாரிடம் கேட்கும் கேள்வியா இது?"

"நீங்கள்தான் பிரம்பில்லாமல் பாடம் நடத்தும் வாத்தியார் என்று டிஸ்கி
போட்டிருக்கிறீர்களே! உங்களிடம் கேட்காமல் யாரிடம் கேட்பதாம்?
பிகு பண்ணாமல் சொல்லுங்கள்!"

"சுக்கிரன் நன்றாக அமைந்தவர்களுக்குத்தான் மெல்லிய உணர்வுகள்
இருக்கும்! மெல்லிய உணர்வுகள் இருப்பவர்களுக்குத்தான் காதல்
உணர்வு
மிகுந்திருக்கும்!"


"ஏன் அய்யா வறுத்து எடுக்கிறீர்கள்? சுக்கிரன் நன்றாக அமைவது என்றால்
என்ன? அதை முதலில் சொல்லுங்கள்!"

"சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கவேண்டும் அல்லது உச்சம் பெற்றிருக்க
வேண்டும். அல்லது ஜாதகத்தில் திரிகோண இடங்களில் அல்லது கேந்திரங்களில்
இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!"

"எனக்கு சுக்கிரனுடன் ராகுவும் சேர்ந்து இருக்கிறான்.அதற்கு எப்படிக் கணக்குப்
பண்ணுவது? நீங்களே சொல்லித்தாருங்கள்!"

"ஆகா, சொல்லித் தந்தால் போயிற்று!"
===============================================================
சந்திரனைக் கண்ட அல்லியென காதலி துள்ளி வந்து நிற்கிறாள். நாணத்தால் அவள்
முகம் சிவந்து இருக்கிறது!

அவளின் அழகில் மயங்கிய காதலன், கிறங்கிப் பாடுகிறான்

"கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளைத் தமிழில்

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி"


உந்தன் கிள்ளை மொழியிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்?
துள்ளித் துள்ளிவரும் நடையில்

மனம் மெல்லத் துடிப்பதும் ஏன்?

உன்னைக் காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ! வாராயோ!"


என்னவொரு நயம் பாருங்கள். அவளுடைய தமிழ் கொஞ்சுகின்ற
பிள்ளைத் தமிழாம். அவளுடைய மொழி கிள்ளை மொழியாம்.
நடை துள்ளிவரும் மானின் நடையாம். அவள், அவன் மனதைக் கேட்டு
வாங்காமல் கொள்ளை அடிகின்றாளாம். கொள்ளை அடித்தவளின்
கரங்களுக்குச் சென்ற மனம் அவளுடைய ஸ்பரிசத்தால் அதாவது
அவளுடைய மென்மையான விரல்கள் பட்டதால் துடிக்கிறதாம்.

அவள் விட்டாளா? அதெப்படி விடுவாள்? காதல் மயக்கம் தலைக்கேற
அவளும் பாடுகின்றாள்

"புன்னைமரத் தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்

பொன்னிநதிக் கரையோரம் மன்னன் நினைவில்

கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன்.


உந்தன் செல்ல மொழியிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்?

துள்ளித் துள்ளிவரும் நடையில்

மனம் மெல்லத் துடிப்பதும் ஏன்?

உன்னைக் காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ! வாராயோ!"


அடடா, என்னவொரு அற்புதமான, இயைந்த பதில் பாருங்கள்
புன்னை மரத் தோப்போரம் அவனுக்காக அவள் காத்திருந்தாளாம்
அந்தப் புன்னை மரமும் பொன்னி நதிக் கரையோரம் இருந்ததாம்.
அவன் முன்பு சொன்ன குயில் பாட்டைச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்து
கொண்டிருந்தாளாம். அதோடு மட்டுமா? மன்னன் அவன் நினைவில்
அந்தக் கன்னி, கண் இமைகள் மூடாமல் காத்து இருந்தாளாம்.

அவனைக் கண்டவுடன், அவன் செல்ல மொழியைக் கேட்பதற்காக
மானைப் போலத் துள்ளி வந்தாளாம்!.

இது சுக்கிரன் தனித்து, நல்ல நிலைமையில் உள்ள காதலர்களுக்கான பாடல்!

சரி, வாருங்கள். அடுத்த பாட்டைப் பார்ப்போம்!

"கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில்வரி
போடப் போறேன்டா வரியைக் கட்டிவிட்டு கட்டிப்புடிடா

கட்டில்வரி முத்தம்தான்டா
வரியே மிச்சமின்றிக் கட்டிப்புடிடா"


எந்த முன்னோட்டமும், வெட்கமும், விவேகமும் இல்லாத காதல் இந்தக் காதல்!

காதலி நேரடியாகவே, ஏன் அதிரடியாகவே அழைப்பு விடுகிறார். புன்னை மரம்
குயில் பாட்டு, கண் இமைகள் போன்று எந்த மெல்லிய உணர்வுகளும் இல்லாத
புண்ணாக்குக் காதல் இந்தக் காதல்.

மாட்டுக் கொட்டிலில், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்ற
தீவனங்களைத்
தொட்டியில் கலக்கி வைத்து விட்டு,
மாட்டை அவிழ்த்து விட்டால், மாடு வந்து
மூச்சிரைக்க
அதைக் குடித்துப் பசியாறுமே, அந்த வகையிலான காதல் இது!


அதற்கு அடுத்துத் தொடர்ந்து வரும் வரிகளைப் பதிவில் எழுத முடியாது.

"எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்.......அதைக் கண்டுபிடித்து...................
அந்த இடத்தில்..........என்று பாட்டு தலை தெறிக்கும் வேகத்தில் போகும்!

வகுப்பிற்குப் பெண் வாசகிகளும் வருகிறார்கள். ஆகவே எழுத முடியாது!

பாடலின் முழு வரிகளும் தேவைப்படுபவர்கள், கூகுள் ஆண்டவரிடம் கேட்டு
பெறலாம்! புன்னகையோடு அதைத் தருவார் அவர் :-)))))

இது சுக்கிரனுடன் ராகு சேர்வதால் ஏற்படும் உணர்வில் காதல் வயப்படுபவர்கள்
பாடும் பாடல்! அந்த மாதிரி உணர்வு உள்ளவர்கள் விரும்பும் பாடல்

கவிஞர்களுக்கு எல்லாக் காதலுமே கைவந்த கலை. சூழ்நிலையைச் சொன்னால்
பாட்டை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். இரண்டாவது பாடலில், கவிஞர் ஒரு
அதிகப் படியான தகவலையும் தந்துள்ளார். அது கட்டிலுக்கான வரி. அதை
அவ்வப்போது மிச்சம் வைக்காமல் செலுத்தினால் போதும் என்கிறார்!

நீங்கள் (மணமான வாசகர்கள்) ஒழுங்காக வரியைச் செலுத்துகிறீர்களா?

விளக்கம் போதுமா?

கதைத்தது போதும்! வாருங்கள், பாடத்தைப் பார்ப்போம்!
===============================================================
ராகுவைப் பற்றிய பாடம் - பகுதி 5

உட் தலைப்பு: ராகுவும் சுக்கிரனும் (Rahu and Venus)

இதற்கு முன் பதிவைப் படித்திராதவர்களை, அதைப் படித்துவிட்டு வந்து இதைப்
படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!

அதன் சுட்டி இங்கே உள்ளது!

ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் உண்டாகும் பலா பலன்கள்!

ராகுவும், சுக்கிரனும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த வீட்டில் இருந்தாலும் நல்லதல்ல!
அது பொதுப்பலன். வேறு சுபக்கிரககங்களின், அல்லது யோகாரகனின் பார்வை
அவர்கள் இருக்கும் வீட்டின் மேல் விழுந்தால் விதிவிலக்கு உண்டு.
இல்லையென்றால் இல்லை!

அவ்வாறு சேர்ந்திருக்கும் இருவராலும் ஜாதகனுக்கு பிரச்சினைக்குரிய நோய்கள்
உண்டாகும். சிலருக்குப் பாலியல் நோய்கள் வரலாம். சிலருக்கு புற்று நோய்
உண்டாகலாம்.
------------------------------------------------------------------------------
1ல்
லக்கினத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

Rahu and Venus together is a good combination for material wealth.
Makes a person able to deal with anybody in society in a sort of free way.
As Venus is love in general, it shows an attraction for foreign partners,
unusual partners, or partners from a different background.
This combination is quite strong in Taurus for both Rahu and Venus -
can give rise to strong urges for comforts and luxury.
One could become a slave to one's desires here - potentially.

ஜாதகன் 'அந்த' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருப்பான். 'அந்த'
விஷயம் என்னவென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகனுக்கு
இரவு பகல் என்று கணக்குக் கிடையாது. எப்போதும் அதன் நினைவாகவே
அலைவான் அல்லது இருப்பான்.

சிலருக்கு அதனால் டன்டனக்காதான். வேறேன்ன? பாலியல் நோய்தான்.
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டல்லவா? அந்த அதீத ஈடுபாட்டிற்கு
அதுதான் விலை!

அளவோடு இருந்தால் அந்த சீக்கு வராது. ஆனால் கூட்டாளிகள் இருவரும்
அதாவது லக்கினத்தில் இருக்கும் ராகுவும் சுக்கிரனும் விடமாட்டார்கள்.

இதே அமைப்புடைய ஜாதகி படு கவர்ச்சியாக இருப்பாள். பலரையும்
திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சியுடன் இருப்பாள். அலங்காரமாக
இருப்பாள்.பார்க்கிறவனைச் சொக்க வைப்பாள்.

அழகு வேறு; கவர்ச்சி வேறு!
பெண் அழகாக இருக்கலாம்; கவர்ச்சியாக இருக்கலாமா?
அதுவும் பலரைச் சாய்க்கும் அளவிற்கு கவர்ச்சியாக இருக்கலாமா?

கவர்ச்சிக்கு வரிந்து கட்டிக்கொண்டு வர நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!:-))))
-----------------------------------------------------------------------
2ல்
******இரண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The native will marry a good wife.Health and wealth are indicated in a
large measure!

இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். ஜாதகனின் குடும்ப வாழ்க்கை சுகமாக
இருக்கும். ஜாதகனோ அல்லது ஜாதகியோ யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப
வாழ்க்கையில் சம்போகத்தைப் பிரதானமாக நடத்தி எப்பொதும் மகிழ்வுடன்
இருப்பார்கள். பேச்சாற்றல் நிறைந்திருக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.
இந்த வீட்டில் அந்த இருவராலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது.
-----------------------------------------------------------------------------
3
மூன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The mental quality is good, but the health will be poor lacking in vitality. Rahu's
association will enhance the bad effects

இளம் வயதிலேயே ஜாதகனுக்குப் பல தீய பழக்கங்கள் ஏற்படும்.
பீடி, சிகரெட்டில் இருந்து கஞ்சாவரை, ஒன்றையும் ஜாதகன் விட்டு
வைத்திருக்க மாட்டான். தெனாவட்டாக இருப்பான்.
சைட் அடிப்பதில் இருந்து சைடில் ஒதுங்குவதுவரை அத்தனை
வேலைகளையும் ஜாதகன் செய்வான். ஆசைப்பட்டதை அடைய
வெட்கமின்றி, தன் வயதைவிடக் குறைந்த வயதுடைய
பெண்ணின் காலில் விழுவதற்குக்கூட ஜாதகன் தயங்க மாட்டான்.

ஜாதகன் ஊர் சுற்றி. பெண்ணாக இருந்தால் வீடு தங்க மாட்டாள்.
அவளுக்குப் பல சிநேகிதங்கள் கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே
என்பாள். அவளைக் கட்டுப்படுத்துவது கடினம்.
-------------------------------------------------------------------------
4
******நான்கில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

This is a favourable place for this combination

ஜாதகனுக்கு எல்லா வசதிகளும் வந்து சேரும். எல்லா சுகங்களும்
கிடைக்கும். அந்த எல்லாம் என்பதில் பெண் சுகமும் அடக்கம்!
பெண்ணின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருந்தால், எல்லா
வசதிகளும் அவளைத் தேடிவரும். கோலமிட்டுக் கொண்டாடி
அவள் காலடியில் விழுந்து கிடக்க நல்லதொரு துணைவனும்
அவளுக்குக் கிடைப்பான்.
-------------------------------------------------------------------------
5
******ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

உழைக்காமல் கிடைக்கின்ற செல்வம் ஜாதகனைத் தேடிவரும்.
பல வழிகளிலும் ஜாதகனுக்குப் பணவரவுகள் இருக்கும். சீட்டாட்டம்,
குதிரை ரேஸ், லாட்டரிச் சீட்டு. பங்கு வணிகம் என்று அவன் எதைத்
தொட்டாலும் பணம் கொட்டும்.

Rahu with Venus in 5th house gives more contact with opposite sex.

இந்த அமைப்பினர்கள் காதலிக்கவென்றே பிறந்தவர்கள்.
பலர் காதலில் சிக்குண்டு கிடப்பார்கள். பெண்ணிடம் சுலபமாக
மயங்கி விடுவார்கள். ஜாதகியாக இருந்தால் ஆணிடம் தன்னைச்
சுலபமாகப் பறி கொடுத்துவிடுவாள்!

ஆகவே இந்த அமைப்பு உடையவர்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்! குறிப்பாகப் பெண்கள்!
-------------------------------------------------------------------------------
6.
ஆறில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The natives personal life will be scandalous!

எப்போதும் மாற்று இனத்தினரின் ஸ்பரிசத்திற்காக ஏங்குபவர்கள்.
ஸ்பரிசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அதேபோல புணர்ச்சிக்கும்
இந்த ஜாதகர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும்
கிடையாது. இரத்த சோகை, இரத்தப் புற்று நோய் போன்ற நோய்கள்
உண்டாகும் அபாயமும் உண்டு!
----------------------------------------------------------------------
7
ஏழில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

venus + rahu indicates extra marital / hidden affairs.
Conjunction of Venus and Rahu also makes native marry a foreign person.
Also 2/12 or 12/2 positions between Rahu and Venus make person marry
with a foreign Person.

Astrologically Venus is known as the goddess of love. In a male horoscope
Venus represents his to be wife. Rahu multiplies it to the extreme level.

But desires, pleasure and true love are three different things. Each plays
a role in human life and with minute observation one can really deduce
their level of intensity in a human life. Rahu and Venus combination ends
in a sudden love marriage, provided Mars is set free from afflictions.

Rahu and Ketu are karmic planets. They play decisive role in shaping
the destiny of one’s conjugal life Rahu-Ketu axis along with certain
combinations definitely cause problems in marriage. The nature and
extent could be different, but affliction of conjugal life is a mortal
certainly. Venus is Karaka for marriage. Hence, Venus in conjunction
with Rahu or Ketu will definitely create marital problems.

எல்லைமீறி நடப்பவர்கள்.வீட்டிற்கு அடங்காதவர்கள்.இந்த அமைப்புள்ள
பலருக்குக் காதல் திருமணம் நடைபெறும். வயது வித்தியாசம் பார்க்க
மாட்டார்கள்,ஜாதி, மதம், இனம் பார்க்க மாட்டார்கள். எதிர்ப்புக்களையும்
மீறி, காதல் மணம் புரிவார்கள். சிலர் சமூகக் கோட்பாடுகளை மதிக்க
மாட்டார்கள். தங்கள் வழியே சரி என்று நடப்பார்கள்!
------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The native will meet many emotional disappointments in life because of
this combination

அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும். விஷக்கடிகள் உண்டாகும்.
Food Poison போன்றவற்றால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும்.
சிலரை மாடு முட்டலாம்.சிலருக்கு வாகனங்களால் விபத்து ஏற்படும்.

பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். ஆடவராக இருந்தாலும் சரி,
மகளிராக இருந்தாலும் சரி, பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும்.

எச்சரிக்கையாக இருந்தால், அதிக பாதிப்புக்கள் இன்றித் தப்பிக்கலாம்.
------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர்கள். வெளிநாடுகளுக்கு
அடிக்கடி சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளி
நாடுகளில் தங்கி பொருள் ஈட்டும் யோகமும் கிடைக்கும்.

பல துன்பங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
10
**********பத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

ஜாதகன் இடைத்தரகர் வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவான். உயர்ந்த
வசதிகளோடு வாழ்க்கை மகிழ்வுடையதாக இருக்கும். வண்டி, வாகனங்கள்
விற்பனை அல்லது அவற்றைக் கொண்டு சிலர் தொழில் செய்து மேன்மை
அடைவார்கள். சிலருக்கு மனைவியால் யோகம் உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

The native will be of wandering nature!

ஜாதகன் ரகசிய உறவுகளை உடையவர். ஜாதகனே பல ரகசிய உறவுகளை
ஏற்படுத்திக் கொள்வான். அதிலேயே திளைப்பார். பிற மதத்துப்
பெண்களோடும் உறவுகள் இருக்கும். எல்லையைக் கடந்த, வரம்புகளைக்
கடந்த என்று பல வகைகளிலும் ஜாதகர் ரகசிய உறவுகளை ஏற்படுத்திக்
கொள்வான்
---------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:

பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஜாதகன் எந்த வழியில்
தன் செல்வம், சக்தி, நேரம் ஆகியவற்றைத் தொலைப்பான் எனக் காட்டும்.
இந்த அமைப்பு உள்ள ஜாதகனின் செல்வம் ரகசிய வழிகளில் தொலையும்.
அல்லது அவனே முன் நின்று தொலைப்பான்

எல்லவித சுக போகங்களையும் ஜாதகர் அனுபவிப்பான். ஜாதகன் தன்
இச்சைகளை ரகசியமாகத் தீர்த்துக் கொள்வான். அது எந்தவிதமான
இச்சையாகவும் இருக்கலாம்!
--------------------------------------------------------------------------
அலசல் தொடரும். குறிப்பிடப்பட்டுள்ளவைகள் எல்லாமே பொதுப்பலன்கள்
தனி்ப்பட்ட ஜாதகங்களுக்கு அதன் அமைப்பை வைத்து இவைகள் மாறுபடலாம்
ஆகவே யாரும் குதிக்கவும் வேண்டாம்; குழம்பவும் வேண்டாம்!

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

50 comments:

  1. Good Morning Sir,
    So far I have not seen any horoscope with Ragu and Venus combination. This combination seems to be rare, Your treatise is very good. Thanks.

    ReplyDelete
  2. your lesson is absolutely correct sir, thanks. i need the moon combination with rahu.

    by
    sridhar

    ReplyDelete
  3. //So far I have not seen any horoscope with Ragu and Venus combination. This combination seems to be rare//

    அப்படி இல்லையே

    12 பேரில் ஒருவருக்கு இது போல் இருக்குமே

    ReplyDelete
  4. Dear Sir,


    What about moon Combination?. What about Combination of Kethu, Saturn and Moon. Suppose these three combination will affect in 5th place?
    Could you please explain sir.

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  5. ஐயா,
    வணக்கம். எனக்கு சுக்ரனுடன் கேது தான் கூட்டணி.
    லக்னத்தில் ராகுவுடன் சுக்ரன் சேர்வதால்தான் புள்ளி ராசாக்களுக்கு (நமது வகுப்பறை மாணவர்அல்ல)எய்ட்ஸ் வர வாய்ப்பிருக்கிறதா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. Good morning Sir,

    Rahu Venus combination is a rare one, I agree. If another planet also in combiantion to these two , what would be the result?

    Thanks,

    GK, BLR.

    ReplyDelete
  7. /////Blogger krish said...
    Good Morning Sir,
    So far I have not seen any horoscope with Ragu and Venus combination. This combination seems to be rare, Your treatise is very good. Thanks.////

    வான்வெளியில் சுற்றும் சுக்கிரன், வருடத்தில் சுமார் ஒரு மாத காலம் (இது குறைந்த அளவு) ராகுவுடன் இருப்பார்.
    அந்த காலகட்டத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளின் ஜாதகத்திலும் இந்தக் கூட்டணி இருக்கும்!

    அது அசாதாரமாகக் காணப்படுவது அல்ல! டாக்டர் ப்ரூனோ அவர்களின் பின்னூட்டத்தைப் பாருங்கள்!

    ReplyDelete
  8. /////Blogger sridhar said...
    your lesson is absolutely correct sir, thanks. i need the moon combination with rahu.
    by
    sridhar/////

    அடுத்த பதிவில் அது வரும்!

    ReplyDelete
  9. //////Blogger புருனோ Bruno said...
    //So far I have not seen any horoscope with Ragu and Venus combination. This combination seems to be rare//
    அப்படி இல்லையே
    12 பேரில் ஒருவருக்கு இது போல் இருக்குமே!////

    வான்வெளியில் சுற்றும் சுக்கிரன், வருடத்தில் சுமார் ஒரு மாத காலம் (இது குறைந்த அளவு) ராகுவுடன் இருப்பார்.
    அந்த காலகட்டத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளின் ஜாதகத்திலும் இந்தக் கூட்டணி இருக்கும்!

    அது அசாதாரமாகக் காணப்படுவது அல்ல! டாக்டர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
    நன்றி டாக்டர்!

    ReplyDelete
  10. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir,
    What about moon Combination?. What about Combination of Kethu, Saturn and Moon. Suppose these three combination will affect in 5th place?
    Could you please explain sir.
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman////

    அடுத்தடுத்த பதிவுகளில் அவைகள் வரும். பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. /////Blogger வேலன். said...
    ஐயா,
    வணக்கம். எனக்கு சுக்ரனுடன் கேது தான் கூட்டணி.
    லக்னத்தில் ராகுவுடன் சுக்ரன் சேர்வதால்தான் புள்ளி ராசாக்களுக்கு (நமது வகுப்பறை மாணவர்அல்ல)எய்ட்ஸ் வர வாய்ப்பிருக்கிறதா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    எந்த மனிதனுக்கும் அந்த நோய் வரக்கூடாது. பாவம், பிழைத்துப் போகட்டும்!

    ReplyDelete
  12. /////Blogger Geekay said...
    Good morning Sir,
    Rahu Venus combination is a rare one, I agree. If another planet also in combiantion to these two , what would be the result?
    Thanks,
    GK, BLR.////

    நீங்கள் சொல்வது தவறு.

    18 ஆண்டுகளில், தன் சுற்றில் ராகு, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் சனியுடன் இருப்பார்
    18 ஆண்டுகளில், தன் சுற்றில் ராகு, சுமார் ஒரு ஆண்டு காலம் குருவுடன் இருப்பார்
    சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆண்டில் ஒரு மாத காலமாவது ராகுவுடன் இருக்க நேரிடும்
    சந்திரன் 27 நாட்களில் 2.25 நாட்கள் ராகுவுடன் சேர்ந்திருப்பார். ஆகவே எந்தக் கிரகமும் விதிவிலக்கல்ல.

    ராகுவுடன் ஏதாவது ஒரு கிரகம் சேர்ந்திருக்கும். அல்லது சேராமல் தனித்தும் இருக்கும். அதை 2/3 & 1/3 என்கின்ற
    விகிதத்தில் வைத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  13. Dear Sir

    Excellent Explantion about date and time....You are like a University.

    You are like Northpole..

    Thank u

    Loving Student
    A

    ReplyDelete
  14. Dear Sir

    Excellent Explanation about date and time....You are like a University.

    You are like a Northpole..

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. தங்கள் கீழ்படிந்த இந்த மாணவனுக்கு ரிஷப லக்கினம்,,,சிம்மத்தில் சுக்கிரன் சுயசாரம்....நடப்பு சுக்கிரதசையில் பத்து வருஷம் ஓடிவிட்டது..தற்போது சுக்கிரதசை...ராகு புக்தி..புத அந்திரம்...சுயபுராணம் ஓவர்....சுக்கிரன்-ராகு சேர்ந்து ஆடும் பரமபதத்தை பக்குவமாக விளக்கிய பண்புற்குரிய ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்...

    ReplyDelete
  16. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Excellent Explanation about date and time....You are like a University.
    You are like a Northpole..
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman////

    தவறு! நான் கற்றது கைமண் அளவே! ஜோதிடம் என்பது கடல். அதில் எல்லாக் கடல்களையும் நான் பார்த்தில்லை.வங்கக் கடலை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அதுவும் கரையோரம் உள்ள சில பகுதிகளை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்!
    பிரசன்ன மார்க்கம் என்று ஜோதிடத்தில் இன்னும் ஒரு கடல் இருக்கிறது. அதை நான் இனிமேல்தான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  17. /////Blogger படித்துறை.கணேஷ் said...
    தங்கள் கீழ்படிந்த இந்த மாணவனுக்கு ரிஷப லக்கினம்,,,சிம்மத்தில் சுக்கிரன் சுயசாரம்....நடப்பு சுக்கிரதசையில் பத்து வருஷம் ஓடிவிட்டது..தற்போது சுக்கிரதசை...ராகு புக்தி..புத அந்திரம்...சுயபுராணம் ஓவர்....சுக்கிரன்-ராகு சேர்ந்து ஆடும் பரமபதத்தை பக்குவமாக விளக்கிய பண்புற்குரிய ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.../////

    உங்கள் வணக்கங்களுக்கு நன்றி கணேஷ்!

    ReplyDelete
  18. ஐயா,வணக்கம்.
    ராகு,சுக்கிரன் இவர்களின் சேர்க்கையின் நியதிகளில், ராகு தனது ஏழாம் இடத்து பார்வையால் பார்க்கப்படுவதுகூட சேருமா?

    ReplyDelete
  19. //18 ஆண்டுகளில், தன் சுற்றில் ராகு, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் சனியுடன் இருப்பார்
    18 ஆண்டுகளில், தன் சுற்றில் ராகு, சுமார் ஒரு ஆண்டு காலம் குருவுடன் இருப்பார்
    சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆண்டில் ஒரு மாத காலமாவது ராகுவுடன் இருக்க நேரிடும்
    சந்திரன் 27 நாட்களில் 2.25 நாட்கள் ராகுவுடன் சேர்ந்திருப்பார். ஆகவே எந்தக் கிரகமும் விதிவிலக்கல்ல.

    ராகுவுடன் ஏதாவது ஒரு கிரகம் சேர்ந்திருக்கும். அல்லது சேராமல் தனித்தும் இருக்கும். அதை 2/3 & 1/3 என்கின்ற
    விகிதத்தில் வைத்துக்கொள்ளலாம்!//

    விளக்கத்திற்கு நன்றி அய்யா !

    எங்கோ படித்தது :

    சர்ப கண்ட யோகம்:- ராகுவும், மாந்தியும் 2-ன் வீட்டில் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பாம்புக்கடி ஏற்படக் கூடும்.

    GK, BLR.

    ReplyDelete
  20. Ayya,

    You said in Raghu part-II chapter that those who have Raghu in 2nd position from Lagna can save their wealth by having it held through mother or wife. What if wife too have Raghu in 2nd position from Lagna in her horoscope?

    ReplyDelete
  21. ஐயா ரிஷப லக்னத்திற்கு 12ல் சுக்கிரன்(மேஷத்தில்) தனித்து இருந்தால் சுய பரல்கள்‍ சுக்கிரன்‍- 4 ) கெடடுதலா?

    ReplyDelete
  22. ஐயா,

    திருமண பொருத்தத்தில், பையனுக்கு 2 ல் மாந்தி,பெண்ணுக்கும் 2 ல் மாந்தி இந்த ஐதாகத்தை சேர்க்கலாமா?


    மற்ற எல்லா பொருத்தங்கள் உள்ளது.

    விளக்கம் தேவை.

    அன்புடன்
    காவேரி கணேஷ்

    ReplyDelete
  23. ஆசான் அவர்களுக்கு வணக்கம்!
    இதுவரை துவைத்த கிரகங்களில் ராகுவை தான் மிகவும் துவைக்கிறீர்கள் (மகா திசை 18 வருடங்கள் என்பதாலா?).......
    பாடங்கள் அனைத்தும் அருமை! நன்றி.

    ReplyDelete
  24. ////Blogger தியாகராஜன் said...
    ஐயா,வணக்கம்.
    ராகு,சுக்கிரன் இவர்களின் சேர்க்கையின் நியதிகளில், ராகு தனது ஏழாம் இடத்து பார்வையால் பார்க்கப்படுவதுகூட சேருமா?/////

    சேர்க்கை நியதிகள் தனி!

    ReplyDelete
  25. ////Blogger Geekay said...
    //18 ஆண்டுகளில், தன் சுற்றில் ராகு, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் சனியுடன் இருப்பார்
    18 ஆண்டுகளில், தன் சுற்றில் ராகு, சுமார் ஒரு ஆண்டு காலம் குருவுடன் இருப்பார்
    சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆண்டில் ஒரு மாத காலமாவது ராகுவுடன் இருக்க நேரிடும்
    சந்திரன் 27 நாட்களில் 2.25 நாட்கள் ராகுவுடன் சேர்ந்திருப்பார். ஆகவே எந்தக் கிரகமும் விதிவிலக்கல்ல.
    ராகுவுடன் ஏதாவது ஒரு கிரகம் சேர்ந்திருக்கும். அல்லது சேராமல் தனித்தும் இருக்கும். அதை 2/3 & 1/3 என்கின்ற
    விகிதத்தில் வைத்துக்கொள்ளலாம்!//
    விளக்கத்திற்கு நன்றி அய்யா !
    எங்கோ படித்தது :
    சர்ப கண்ட யோகம்:- ராகுவும், மாந்தியும் 2-ன் வீட்டில் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பாம்புக்கடி ஏற்படக் கூடும்.
    GK, BLR.//////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  26. /////Blogger Indian said...
    Ayya,
    You said in Raghu part-II chapter that those who have Raghu in 2nd position from Lagna can save their wealth by having it held through mother or wife. What if wife too have Raghu in 2nd position from Lagna in her horoscope?////

    கஷ்டம்தான்! அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை.தம்பதிகளில் ஒருவருக்குப் பணம் சேர்க்கும் அமைப்பு இருக்கும்.
    ஜோடி சேரும்போது இரண்டுமே ரயிலாக இருக்காது! ஒன்று ரயில் ஒன்று தண்டவாளம் அதுதான் நியதி!

    /////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா ரிஷப லக்னத்திற்கு 12ல் சுக்கிரன்(மேஷத்தில்) தனித்து இருந்தால் சுய பரல்கள்‍ சுக்கிரன்‍- 4 ) கெடுதலா?/////

    12ஆம் வீட்டு அதிபதி இருக்கும் இடம், 12ஆம் வீட்டின் அஷ்டகவர்க்கப்பரல், 12ஆம் வீட்டின் மேல் விழும் சுபக்கிரகங்களின் பார்வை போன்று பல விஷயங்கள் உள்ளன. அமர்ந்திருக்கும் கிரகம் ஒன்றை மட்டும் வைத்துப் பலன் இல்லை! பலனைக் கணிப்பதற்குப் பல விஷயங்கள் உள்ளன! பொறுத்திருங்கள் பாடம் அனைத்தும் முடியும் போது நீங்களே முக்கால் ஜோதிடராகிவிடுவீர்கள். உங்களுக்கு நீங்களே திவ்யமாகப் பலன்களைப் பார்த்துக்கொள்ளலாம். அதில் ஒரே ஒரு பிரச்சினை மட்டும் உள்ளது. அது என்ன என்றால், பாடத்தை முழுதாகப் படித்து நீங்கள் உங்கள் மனதில் ஏற்ற வேண்டும்!

    ReplyDelete
  27. ////Blogger KaveriGanesh said...
    ஐயா,
    திருமண பொருத்தத்தில், பையனுக்கு 2 ல் மாந்தி,பெண்ணுக்கும் 2 ல் மாந்தி இந்த ஜாதகத்தை சேர்க்கலாமா?
    மற்ற எல்லா பொருத்தங்கள் உள்ளது.
    விளக்கம் தேவை.
    அன்புடன்
    காவேரி கணேஷ்/////

    மற்ற பொருத்தங்கள் இருந்தால் என்ன தயக்கம்? எல்லாப் பொருத்தமும் கூடிய ஜாதகம் என்பது மிகவும் சிரமம்.
    மாந்திக்கு மாந்தி என்பது நிவர்த்திதான். இருந்தாலும் இருவரில் ஒருவருக்கு மாந்தி வலுவாக இருந்தால் குடும்பம் நடத்த விடமாட்டான். எதற்கும் ஒரு பணிக்கரைப் பார்த்து இருவருக்கும் மாந்தி ஒரே அளவான பாதிப்பில்தான் உள்ளதா என்று பாருங்கள். பிறகு அவர்களைச் சேருங்கள்!

    ReplyDelete
  28. ////Blogger அணுயோகி said..
    ஆசான் அவர்களுக்கு வணக்கம்!
    இதுவரை துவைத்த கிரகங்களில் ராகுவை தான் மிகவும் துவைக்கிறீர்கள் (மகா திசை 18 வருடங்கள் என்பதாலா?).......
    பாடங்கள் அனைத்தும் அருமை! நன்றி.////

    மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆடைகளை இப்படித்தான் துவைக்க வேண்டும்.

    ReplyDelete
  29. எனக்கு தெரிந்த ஒரு பையனின் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்கை உள்ளதை பார்த்தேன் (எந்த கட்டத்தில் என்று சரியாக நினைவு இல்லை.).ஆனால் அவன் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

    " நான் கல்லூரியில் காதலித்த பெண் இப்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விதவை ஆகி விட்டாள்.நான் அவளை இப்போது திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்..செய்யலாமா "

    இதுதான் அவனுடிய கேள்வி . அவன் கேட்கவில்லை அவனுடைய சுக்கிரன் ராகு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது அய்யா.

    ReplyDelete
  30. /////Blogger Ragu Sivanmalai said...
    எனக்கு தெரிந்த ஒரு பையனின் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்கை உள்ளதை பார்த்தேன் (எந்த கட்டத்தில் என்று சரியாக நினைவு இல்லை.).ஆனால் அவன் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.
    " நான் கல்லூரியில் காதலித்த பெண் இப்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விதவை ஆகி விட்டாள்.நான் அவளை இப்போது திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன்..செய்யலாமா "
    இதுதான் அவனுடைய கேள்வியை அவன் கேட்கவில்லை அவனுடைய சுக்கிரன் ராகு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது அய்யா.//////

    இருக்கலாம்! தகவலுக்கு நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  31. ஹலோ சார்,

    \\So far I have not seen any horoscope with Ragu and Venus combination. // ஆஹா, என்னதிது எனக்கு இருக்கே அது மாதிரி.அதுவும் 10ல் சுக்கிரனும் ராகுவும்...

    //12 பேரில் ஒருவருக்கு இது போல் இருக்குமே.. // ஆஹா அப்ப நானும் அந்த 12ல் ஒருத்தியா?

    சார், எல்லா பாடமும் நான் படித்துக் கொண்டு தான் வருகிறேன்.ஆனாலும் இந்த பாடத்தில் நீங்கள் சொன்னது போல எனக்கு 10ல் சுக் னும் ராகுவும் சேர்ந்து இருக்கிறார்கள்.ஆனால் நீங்க சொன்ன பலன் இல்லையே?என்ன பண்ணலாம்.ஒருவேளை 5ல் இருக்கற குரு பாக்கறதாலயா?

    ReplyDelete
  32. //மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆடைகளை இப்படித்தான் துவைக்க வேண்டும்.\\

    :-))

    ReplyDelete
  33. Dear Sir,

    Good lesson with nice poems....wow,Ragu lesson is still going on with lots of combination...can we expect ragu combination with jupiter also?

    -Shankar

    ReplyDelete
  34. Hi sir, really fantastic job by you am regular reader of u. tell me the combination for rahu and jupiter in 5th house (for me 5th house is meena rasi)

    ReplyDelete
  35. /////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    \\So far I have not seen any horoscope with Ragu and Venus combination. // ஆஹா, என்னதிது எனக்கு இருக்கே அது மாதிரி.அதுவும் 10ல் சுக்கிரனும் ராகுவும்...
    //12 பேரில் ஒருவருக்கு இது போல் இருக்குமே.. // ஆஹா அப்ப நானும் அந்த 12ல் ஒருத்தியா?
    சார், எல்லா பாடமும் நான் படித்துக் கொண்டு தான் வருகிறேன்.ஆனாலும் இந்த பாடத்தில் நீங்கள் சொன்னது போல எனக்கு 10ல் சுக் னும் ராகுவும் சேர்ந்து இருக்கிறார்கள்.ஆனால் நீங்க சொன்ன பலன் இல்லையே?என்ன பண்ணலாம்.ஒருவேளை 5ல் இருக்கற குரு பாக்கறதாலயா?/////

    பெண்களுக்கு என்று ஜாதகத்தில் சில சிறப்பான நியதிகளும், விதிவிலக்குகளும் உண்டு. அந்த Topicல், தனியாகச் சில கட்டுரைகளைப் பிறகு எழுத உள்ளேன். அப்போது உங்களுக்கு, உங்கள் கேள்விகள் பலவற்றிற்கு விடை கிடைக்கும்
    சகோதரி!

    ReplyDelete
  36. /////Blogger Geekay said...
    //மேலாடைகள். கீழாடைகள் என்று உண்டு அல்லவா? கீழ் ஆடைகளை இப்படித்தான் துவைக்க வேண்டும்.\\
    :-))/////

    என்ன சிரிக்கிறீர்கள்? கீழ் ஆடைகளில் அழுக்கு அதிகமாகப் படியுமே? அவற்றை தனிப்பட்ட முறையில் அல்லவா துவைப்போம்?

    ReplyDelete
  37. ////Blogger hotcat said...
    Dear Sir,
    Good lesson with nice poems....wow,Ragu lesson is still going on with lots of combination...can we expect ragu combination with jupiter also?
    -Shankar//////

    Yes! That will be the next lesson!

    ReplyDelete
  38. /////Blogger VigneshGopalsamy said...
    Hi sir, really fantastic job by you I am a regular reader of your blog. tell me the combination for rahu and jupiter in 5th house (for me 5th house is meena rasi)//////

    That will be in the next lesson!

    ReplyDelete
  39. சார் , பாடம் மிக தெளிவு !!
    நன்றி :)

    ReplyDelete
  40. /////Blogger DevikaArul said...
    சார் , பாடம் மிக தெளிவு !!
    நன்றி :)//////

    நீங்கள் சொன்னால் சரிதான் சகோதரி!

    ReplyDelete
  41. அய்யா,
    பாடம் அருமையாக உள்ளது.

    எனக்கு சூரியனும் ராகுவும் சிம்மத்தில் உள்ளது (அதற்கு விளக்கம் வரும் பதிவுகளில் தருவீர்கள் என நம்புகிறேன்).

    "சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கவேண்டும் அல்லது உச்சம் பெற்றிருக்க
    வேண்டும். அல்லது ஜாதகத்தில் திரிகோண இடங்களில் அல்லது கேந்திரங்களில்
    இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு
    மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!"

    வகுப்பறை மற்றும் சில ஜோசிய சம்பந்தமான புத்தகங்களில் சுக்கிரன் நீசமான கன்னி ராசியில் புதனோடு (உச்சம்) பெற்று இருந்தால், நீச்ச பங்கம் ஆகி, அது ஒரு ராஜ யோகத்தை தரும் என இருக்கிறது. இந்த மாதிரி ராஜ யோகம் என்ன மாதிரி பலன்களை தரும்? எனக்கு கண்ணியில் சுக்கிரன் 5 பரல்களுடன் புதன் 6 பரல்களோடு அமர்ந்து இருக்கிறார். தற்போது சுக்கிர தசை சுய புக்தி நடை பெறுகிறது. இந்த பாடம் ராகு பற்றிய பாடமாக இருதாலும், விளக்கம் அளிப்பிர்கள் என நம்புகிறேன்.

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  42. paadam arumai sir.

    Please write about Rahu+sun or moon soon as they are opposite planets and should be interesting.

    Thanks

    ReplyDelete
  43. /////Blogger Sridhar said...
    அய்யா,
    பாடம் அருமையாக உள்ளது.
    எனக்கு சூரியனும் ராகுவும் சிம்மத்தில் உள்ளது (அதற்கு விளக்கம் வரும் பதிவுகளில் தருவீர்கள் என நம்புகிறேன்).
    "சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கவேண்டும் அல்லது உச்சம் பெற்றிருக்க
    வேண்டும். அல்லது ஜாதகத்தில் திரிகோண இடங்களில் அல்லது கேந்திரங்களில்
    இருக்க வேண்டும் அல்லது சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு
    மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்!"
    வகுப்பறை மற்றும் சில ஜோசிய சம்பந்தமான புத்தகங்களில் சுக்கிரன் நீசமான கன்னி ராசியில் புதனோடு (உச்சம்) பெற்று இருந்தால், நீச்ச பங்கம் ஆகி, அது ஒரு ராஜ யோகத்தை தரும் என இருக்கிறது. இந்த மாதிரி ராஜ யோகம் என்ன மாதிரி பலன்களை தரும்? எனக்கு கன்னியில் சுக்கிரன் 5 பரல்களுடன் புதன் 6 பரல்களோடு அமர்ந்து இருக்கிறார். தற்போது சுக்கிர தசை சுய புக்தி நடை பெறுகிறது. இந்த பாடம் ராகு பற்றிய பாடமாக இருதாலும், விளக்கம் அளிப்பிர்கள் என நம்புகிறேன்.
    நன்றி,
    ஸ்ரீதர் S//////

    கன்னிராசியில் கிடைக்கும் அந்த நீச பங்க ராஜயோகத்தால், ஜாதகனுக்கு சுக்கிரன் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலன்களையும், புதன் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலன்களையும் முழுமையாக வழங்குவார்கள். அது அவர்களுடைய தசாபுத்திகளில் நடைபெறும்.

    ReplyDelete
  44. //////Blogger Dr.Vinothkumar said...
    paadam arumai sir.
    Please write about Rahu+sun or moon soon as they are opposite planets and should be interesting.
    Thanks////


    அடுத்தடுத்த பாடங்களில் அனைத்தும் வரும் நண்பரே!

    ReplyDelete
  45. Dear sir,

    If ragu is in 2nd position, and ketu in 8th position -is it called ragu/ketu dosham?
    for person having this dosham have to get married to same position ragu and ketu placed...If so, how this couple can save money?

    -Shankar

    ReplyDelete
  46. i have raghu and venus combination on 3rd house(meenam).

    ReplyDelete
  47. Blogger hotcat said...
    Dear sir,
    If ragu is in 2nd position, and ketu in 8th position -is it called ragu/ketu dosham?/////

    ராகுவும் கேதுவும் எப்போதும் 180 பாகைகளில் இருப்பார்கள். 2/8ற்கு தோஷம் கிடையாது.

    for person having this dosham have to get married to same position ragu and ketu placed...If so, how this couple can save money?
    -Shankar/////

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!கையில் பணம் தங்குவதற்கு authority for finance குரு பகவான் நன்றாக இருந்தால் போதும்

    ReplyDelete
  48. //////Blogger மெட்ராஸ்காரன் said...
    Present Sir....Thanks for the info on Raagu & Venus/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  49. /////Blogger aravindaan said...
    i have raghu and venus combination on 3rd house(meenam).//////

    சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்களே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com