மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

23.3.07

வாத்தியாரின் தொல்லை!


=================================================
வாத்தியாரின் தொல்லை!

வாத்தியாரின் தொல்லை - ஒரு
வாரத்திற்கு இல்லை!

அட்டா, என்ன மகிழ்ச்சியான செய்தி!

ஆமாம் என் வகுப்பறைக் கண்மணிகளே!
வகுப்பறைக்கு ஒரு வாரம் விடுமுறை!

இந்தவார ஆசிரியராக இருக்கச் சொல்லி
‘வலைச்சரம்’ பத்திரிக்கைக்காரர்கள்
(வகை தெரியாமல்)
கேட்டுக் கொண்டுள்ளதால்
அங்கே பணியாற்றச் சென்று விட்டேன்!

அதனால்,
விட்டது தொல்லை என்று
நீங்கள் யாரும் ஓடி விடாமல்
அங்கே வலைசரத்திற்கு வந்து விடுங்கள்
வருகைப் பதிவேடு இந்த ஒருவாரத்திற்கு
அங்கே இருக்கும்!

அங்கே வந்து சேரும் வழி எப்படி என்பது
இங்கே சுட்டியில் உள்ளது

அன்புடன்,
வாத்தியார்

12 comments:

VSK said...

:((

:))
!!!!

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா,

அங்கே ஏற்கனவே நான் வருகை பதிந்தாச்சு !
:)

உங்கள் நண்பன் said...

//வாத்தியாரின் தொல்லை - ஒரு
வாரத்திற்கு இல்லை!

அட்டா, என்ன மகிழ்ச்சியான செய்தி!//

ஹி. ஹி... இவ்வளவு நாள் வகுப்பெடுக்குறீங்க, உங்களுக்கு இது கூட தெரியாமப் போயுடுமா என்ன?:))

//அங்கே வந்து சேரும் வழி எப்படி என்பது
இங்கே சுட்டியில் உள்ளது
//

அப்பாடி போயிட்டாருனு பாத்தா, இவரு போர இடத்திற்க்கு வழியெல்லம் கூட சொல்லி அங்க வரவைக்கிறாரே....

//கேட்டுக் கொண்டுள்ளதால்
அங்கே பணியாற்றச் சென்று விட்டேன்!
//
வலைச்சரத்தின் ஜாதகத்தை பாத்தீங்களா? ஒரு வாரம் கண்டம்னு இருக்கப் போகுது...:))))))

சரி வாத்தி ஜமாய்ச்சிடுவோம்...

எங்களின் வலைப்பதிவு ஆசிரியர் இந்தவார வலைசர ஆசிரியர் ஆனதற்க்கு வாழ்த்துத் தெரிவித்து,ஒரு வார விடுமுறையை கொண்டாட உள்ளோம்,
ஸ்டாட் த மியூசிக்........


அன்புடன்...
சரவணன்.

சென்ஷி said...

அங்கன வந்து ஆஜர் கொடுத்துட்டேன்.
இங்கயும் கொடுத்துடறேன் :)


தலை நகர(ரா) மாணவன்
சென்ஷி

SP.VR. சுப்பையா said...

வி.எஸ்.கே சார்!
வருத்தம் & மகிழ்ச்சி என்று
இரண்டு குறியீடுகளையும் போட்டு
என்னையும் அந்த இரண்டுவித உணர்வுகளுக்கு
ஒருசேர ஆளாக்கிவிட்டீர்கள்!

SP.VR. சுப்பையா said...

சரவணன் உங்களைப்போல பத்து மாணவர்கள்
வேண்டாம் நீங்கள் ஒருத்தரே போதும் -
வகுப்பறைக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும்:-)))

மியூஸிக்கை நிறுத்த வேண்டாம் -தொடருங்கள்!

SP.VR. சுப்பையா said...

கோவியாரும் & சென்ஷியும் தான்
ந்ல்ல மாண்வர்கள்
வருடத் தேர்விற்கு வருகைப் பதிவேடு
முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்!

சென்ஷி said...

//கோவியாரும் & சென்ஷியும் தான்
ந்ல்ல மாண்வர்கள்
வருடத் தேர்விற்கு வருகைப் பதிவேடு
முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்!//

அப்பாடா.. வாத்தியார்ட்ட நல்ல பேர் வாங்கியாச்சு. இன்னிக்கு நைட்டு நிம்மதியா தூங்கலாம். கனவுல பிரம்பு வராது.. :))

சென்ஷி

சேதுக்கரசி said...

//கோவியாரும் & சென்ஷியும் தான்
ந்ல்ல மாண்வர்கள்
வருடத் தேர்விற்கு வருகைப் பதிவேடு
முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள்!//

வருகைப் பதிவேடுன்னு ஒண்ணு இருக்கா? :-( அப்படின்னா இந்த வருசம் ஜோசிய வகுப்பில் நான் பெயில் தான்.

SP.VR. சுப்பையா said...

///சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: வருகைப் பதிவேடுன்னு ஒண்ணு இருக்கா? :-( அப்படின்னா இந்த வருசம் ஜோசிய வகுப்பில் நான் பெயில் தான்.///

இல்லை அரசியாரே!
நம் வகுப்பறையில் பெண்களுக்கென்று சில ஒதுக்கீடுகள் உள்ளன!
அதன்படி நீங்கள் பாஸாகிவிடுவீர்கள் கவலைப்ப்படவேண்டாம்!

பாடத்தை மட்டும் படியுங்கள் - அதற்கு ஒதுக்கீடு இல்லை!:-)))

Ragupathi said...

Dear Sir,

Please provide all astrology parts in PDF. It will be good for reading and taking print out.

நாமக்கல் சிபி said...

ஐயா! ஜாலி!