மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.3.07

இரண்டு பிரபலங்களின் ஜாதகங்கள்

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 7
By SP.VR.SUBBIAH

முன் பதிவில் கோள்களின் பெயர்களையும், 12 ராசிகளின்
பெயர்களையும், அந்தப் பன்னிரெண்டு ராசிகளின் வழியே
கோள்கள் ஒருமுறை சுற்றி வருவதற்கு எடுத்துக்
கொள்ளும் காலத்தின் அளவையும் கொடுத்திருந்தேன்.

இன்றையப் பதிவில் அந்தக் கோள்களுக்கு ராசிகளுடன்
உள்ள தொடர்பையும், அவைகளுக்கு ராசிகளில் உள்ள
உரிமைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் முழு ஞானம் உள்ள ஒருவரிடம் ஒரு
மிகவும் பிரபலமான தலைவர் ஒருவரின் ஜாதகத்தைக்
( பெயரைச் சொல்லாமல்) காட்டி, இந்த ஜாதகம் எப்படி
யுள்ளது? என்று கேட்டால், அவர் அதைப் பரிசோதித்துப்
பார்த்து விட்டு இது ராஜ யோகம் உள்ள ஜாதகம்
இந்த ஜாதகர் நாட்டின் தலைமைப் பதவிவரைக்கும்
வரக்கூடியவர் என்று சொல்வார்!

அவர் எப்படிச் சொல்வார் என்றால், ஜாதகத்தில் அது
தெரியும்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள்
ஜாதகத்தில் உச்சம் பெற்றும், மற்றும் இரண்டு அல்லது
மூன்று கிரகங்கள் ஆட்சி பலத்துடனும் இருந்தால் அது
அந்த யோகத்தைக் கொடுக்கும்..

உதாரணத்திற்கு இரண்டு ஜாதகங்களைக் கொடுத்துள்ளேன்
ஒன்று தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி
அவர்களுடையது. மற்றொன்று இந்தியாவிலேயே அதிகம்
பார்வையிடப் பெற்ற முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா
காந்தி அவர்களுடையது.

கலைஞர் அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள்
வலுவாக உள்ளன. திருமதி காந்தி அவர்களுடைய
ஜாதகத்தில் 6 கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில்
உள்ளன. (Exchange of house with each other)

------------------------------------------------------------------------------------------------
பார்த்தவுடன் அந்த ஜோதிடருக்கு எப்படித் தெரிந்தது?
அவருக்கு மட்டுமல்ல ஜோதிட விதிகளைத் தெரிந்து
வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அது புலப்படும்

இன்றைய பாடத்தில், கோள்களுக்கு உரிய வீடுகளைப்
பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும்
போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும்
உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன்

நான் படிக்கும்போது, இப்படிக் கணினி, அட்டவணை தயாரிக்க
MS office software எல்லாம் கிடையாது.

எழுத்துவடிவில் ஓட்டமாக இருக்கும். படிப்பவர்கள்தான்
தங்கள் புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ப பிரித்துப் படித்துக்
கொள்ள வேண்டும்!

--------------------------------------------------------------


----------------------------------------------------------
இன்றைக்கு இவ்வளவு போதும்!
தொடர்ந்து ஏழு பதிவுகள் பதிந்து விட்டேன்.
நான்கு தினங்கள் வகுப்பிற்கு விடுமுறை.

நடத்தியுள்ள பாடங்களையெல்லாம் முடிந்தவரை (?)
மனனம் செய்துவையுங்கள்

மீண்டும் 5.3.2007 திங்கட்கிழமையன்று சந்திப்போம்

(தொடரும்)
--------------------------------------------------------

எனக்கு இன்னொரு வலைப்பதிவு இருக்கிறது
கண்மணிகளா! அதில் கவியரசரைப் பற்றிய
தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த
வகுப்பையும் கவனிக்க வேண்டாமா?
அந்த வகுப்பிற்கு தொடர்பு கொள்ள இங்கே சொடுக்கவும்!


12 comments:

சிவபாலன் said...

சார்

வகுப்பு மிகுந்த உற்சாகமாக செல்கிறது..

நன்றி

SP.VR. சுப்பையா said...

///சிவபாலன் அவர்கள் சொல்லியது: வகுப்பு மிகுந்த உற்சாகமாக செல்கிறது..//

வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் உற்சாகமாகச் செல்கிறது - கோவியாரத்தை தவிர.
விளக்கத்திற்கு முன் பதிவைப் படிக்கவும்:-))))

Madaiyan said...

அய்யா,

புதன் + சுக்கிரன் நிபுன யோகமா? அல்லது புதன் + சூரியன் நிபுன யோகமா? (கலைனர் அவர்கள் ஜாதகம்). புதாதித்ய யோகத்தைத்தானே நிபுன யோகம் என்று சொல்வார்கள்?

SP.VR. சுப்பையா said...

//புதாதித்ய யோகத்தைத்தானே நிபுன யோகம் என்று சொல்வார்கள்? //

இல்லை
சந்திரனும், குருவும் சம்பந்தப்பட்டது -கஜகேசரி யோகம்.
சூரியமும், புதனும் சேர்ந்திருப்பது ஆதித்த யோகம்.
புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது நிபுணா யோகம்(Being expert or Expertise)
இதுபோல 300 யோகங்கள் உள்ளன
அவற்றிற்குத் தனிதனியான பலன்களும உள்ளன

அவை ப்ற்றிய விவரங்கள் பின் பதிவுகளில் வரும்!

Madaiyan said...

விளக்கத்திற்கு நன்றி அய்யா.

நெல்லை காந்த் said...

Class going on very interesting,

வடுவூர் குமார் said...

சனி வீட்டில் சந்திரன்
சந்திரன் வீட்டில் சனி
எனக்கு இங்கு குழம்புகிறது.
இன்னும் சுலபமாக்க முடியுமா?
நன்றி ஐயா.
படங்கள், இப்போது சரியான அளவில் படிக்கக்கூடிய முறையில் உள்ளது.

SP.VR. சுப்பையா said...

//நெல்லை காந்த் அவர்கள் சொல்லியது: Class going on very interesting, //

நான் எழுதும்போது, முக்கியத்துவம் கொடுப்பது - பதிவு சுவை குறையாமல் இருக்கவேண்டும் என்பதில்தான்!

SP.VR. சுப்பையா said...

/// vaduvuraar said: சனி வீட்டில் சந்திரன் சந்திரன் வீட்டில் சனி
எனக்கு இங்கு குழம்புகிறது.
இன்னும் சுலபமாக்க முடியுமா?///

Ownership of Planets என்று ஒரு கட்டம்கட்டி ஒரு பெட்டிச்
செய்தி இருக்கும் பாருங்கள்.
அதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள சொந்த வீடுகள்
பற்றி விளக்கப்பட்டிருக்கும்.
அதில் எது ச்னி வீடும் என்றும், எது சந்திரனின் வீடு என்றும்
பார்த்துக் கொள்ளுங்கள்
அத்ற்குப் பிறகு காந்தி அம்மையார் அவர்களுடைய
ஜாதகத்தை ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒன்றிற்கொண்டு வீடு
மாறி அமர்ந்திருப்பது புரியும்
அதற்குப் பெயர்தான் பர்வர்த்தனை
(Exchange of House)
இது அந்த அம்மையார் பிறந்த நேரத்தில் இருந்த அமைப்பு

கிரகங்கள் தானாகவெல்லாம் ஒருவருக்காக மாறிப்போய் அப்படி
அமர்ந்து கொள்ளாது

Mathuraiampathi said...

சார்,

பாடம் சூடு பிடிக்கிறது....புரிந்து கொண்டாலும், பின்வரும் பாடங்கள் எளிதாக விளங்க மனனம் முக்கியம் என்றே தோன்றுகிறது.

நீங்கள் 4 தினங்கள் விடுமுறை தந்தாலும் எனக்கு அடுத்த (11/03/07)ஞாயிறு வரை விடுமுறை அளிக்க வேண்டுகிறேன். மதுரையில் வேலை இருக்கிறது.

ஆமாம் தாங்கள் பட்டுகோட்டை/காரைக்குடியில் இருந்தால் செல் நம்பர் தரவும். சந்திக்க ஆவல். அடுத்த வாரம் நான் காரைக்குடி வருகிறேன்.

சென்ஷி said...

இன்னைக்கு சென்ஷி ஆஜர் சார்

santhiganesh said...

this is going on excellent for me.....Feeling very great to learn this!!!!!!!!!