மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

19.3.07

ஜாதிகள் இருக்குதடி பாப்பா!ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 16
By SP.VR.சுப்பையா

என் இனிய வலையுலக நண்பரும், இதயநோய்
மருத்துவருமான திரு.எஸ்.கே அவர்கள் இதே
தலைப்பில் பதிவு ஒன்றைப் பதிந்திருந்தார்.

வியப்புடன் அவருடைய பதிவுற்குள் நுழைந்து
படித்தேன். அருமையான பதிவு. மனிதனின்
இரத்தம் நான்கு வகைப்படும். அது பிற்ப்பு முதல்
இறப்புவரை மாறாது என்று எழுதியிருந்தார்

ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான். அது அவன்
காலம் முழுவதும் தொடர்ந்து அவன் காலமாவது
வரை மாறாமல் இருக்கும்

ஆமாம் ஜாதகங்கள் நான்கு வகைப்படும். நான்கு
வகையிற்குள் மட்டுமே ஏதாவ்து ஒன்றில் அடங்கி
விடும். எந்தக் கொம்பனாக இருந்தாலும் அந்த
வகையை விட்டு வெளியே வந்து வேறு வகைக்குக்
கட்சி மாறமுடியாது.

அவை என்ன என்கிறீர்களா?

சொல்கிறேன் கேளுங்கள்!

1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
என்பதுதான் அந்த நான்கு ஜாதிகள்!
-----------------------------------------------------
தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு,
5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(First House - Lagna - it is the house of physical strength
Character, Influence and self control over the life
Fifth House- House of Poorva Punya - Keen Intelligence
Ninth House - House of Bhagya (Gains), Father, Ancestral
Properties & Charitable Deeds)
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் பெயரும் புகழோடும்
இருப்பான்,நிறைய தர்ம காரியங்களைச் செய்வான்,
கோவில் குள்ங்களைக் கட்டுவான், பள்ளிக்கூடங்களைக்
கட்டுவான் பல சமூக சேவைகளைச் செய்வான்.
இறந்த பிறகும் அவன் பெயர் பூமியில் நிலைத்து நிற்கும்.
--------------------------------------------------------
தன ஜாதகம் என்பது Birth Chartல் 2ம் வீடு,
6ம் வீடு, 10ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Second house is the house of finance,
Sixth house is the house of servants
10th House is the house of profession / Business
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் நிறைய
சம்பாதிப்பான், பணம் சேர்ப்பான், அபரிதமான
செல்வம் சேரும் - ஆனால் அவன் அதை
enjoy பண்ண மாட்டான்.He will earn money,
accumulate the money and leave the wealth to
someone, either it may be his children, relatives
or friends who will enjoy it
--------------------------------------------------------
காம ஜாதகம் என்பது Birth Chartல் 3ம் வீடு,
7ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Third House is the house of courage,
Seventh house is the house of women
Eleventh house is the house of fortune)
இந்த ஜாதகன்தான் உலகில் எல்லாவற்ரையும்
அனுபவிக்கப் பிறந்தவன். அவனுடைய பண்மோ,
அல்லது அவன் தந்தை வைத்துவிட்டுப்போன
பணமோ, அல்லது மாமனாரிடம் கொள்ளையாகக்
கிடைதத் பணமோ அல்லது நண்பர்களின் பண்மோ
அல்லது கடன் வாங்கி ஏமாற்றிய பணமோ அது
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக செலவுசெய்து
வாழ்க்கையின் எல்லா சிற்றின்பங்கள், பேரின்பங்கள்
என்று இன்பமாக அனுபவித்துவிட்டுப் போகக்
கூடியவன் இவன்தான்
---------------------------------------------------
ஞான ஜாதகம் என்பது Birth Chartல் 4ம் வீடு,
8ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகள் பலமாக
உள்ள ஜாதகம்
(4th House is the house of Comforts-சுக ஸ்தானம்
8th House is the house of difficulties and 12th house
is the house of Losses -
விரைய ஸ்தானம்
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழ்ந்து,
எல்லா கஷ்டங்களையும் பட்டுப் பரிதவித்து
சொத்துக்கள், கையிலிருந்த் காசு பணத்தையெல்லாம்
பரிகொடுத்து, அல்லது ஏமாந்துவிட்டுக் கடைசியில்
ஞானியாகி அல்லது நடு வயசிலேயே ஞானியாகி
"உலகே மாயம் - வாழ்வே மாயம்" என்று தத்துவம்
பேசும் நிலைக்கு வந்துவிடக்கூடிய ஞானி இந்த ஜாதகன்
இதே ஒன்று முதல் பன்னிரெண்டு வீடுகளுக்கும்
வேறு பணிகளும் உண்டு. மொத்தம் 12 x 3 = 36
பணிகள் உள்ளன. இவ்ற்றில் ஒரு ஜாதகனுக்கு
18 மட்டுமே இருக்கும் மீதி 18 இருக்காது. அதுதான்
அமைப்பு.

எதெது உள்ளது எதெது மறுக்கப்பட்டுள்ள்து
என்று தெரிந்து கொண்டு கிடைத்தைதைக் கொண்டு
சந்தோஷ்மாக வாழ்வதுதான் வாழ்க்கை!

கவிஞர மேத்தா அவர்கள் சொன்னதுபோல உழைப்ப
வனுக்கு ஒழுங்காகக் கூலி கிடைக்காது. ஆனால்
உழைப்பதுபோல நடிப்பவனுக்கு (நடிகனுக்கு)
கோடிக்கணக்கில் பண்ம் கிடைக்கிறது.

பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ஃபரூக்
மரைக்காயர் ஒருமுறை சொன்னார். கடவுளால்
உனக்குக் கொடுக்கப்பட்டதை யாராலும் பறிக்க
முடியாது. அதுபோல கடவுளாம் மறுக்கப்பட்டதை
யாராலும் உனக்குத் தரமுடியாது.

விவரமாக ஜாதகங்களிலிருந்து அதைத்
தெரிந்து கொள்ளலாம்.

அது பற்றி விவரமாகப் பின்வரும் பதிவு ஒன்றில்
பார்ப்போம். அடிப்படைப் பாடங்கள் தெரியாமல்
அதைப் புரிந்து கொள்வது சிரமம்.

ஆகவே முதலில் அடிப்படைப் பாடங்கள்!

அடிப்படைப் பாடங்கள் மொத்தம் 18 உள்ளன
நாளையிலிருந்து ஒவ்வொரு பாடமாகப் பார்ப்போம்
/ படிப்போம்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன்
==========================

நேற்று இரண்டு பின்னூட்டங்கள் இந்த்ப் பதிவுகளுக்கு
எதிராக வந்தன. அவற்றை நான் வெளியிடவில்ல!

அந்த நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்
இது உங்களுக்கான் வகுப்பு அல்ல!

இது ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு
மட்டுமே என்று நடத்தப்படும் வகுப்பு!

நீங்கள் உங்கள் அவநம்பிக்கைகளை உங்களோடு

மட்டும் வைத்துக் கொள்ளூங்கள்.

எங்கள் நம்பிக்கைகளைச் சிதைப்பதற்கு உங்களுக்கு
எந்த உரிமையும் கிடையாது!

(தொடரும்)
---------------------------------

நேற்றுப் பதிந்த பதிவைப் படிக்காதவர்களை
அதைப் படிக்க வேண்டுகிறேன் அதில் முக்கியமான
இரண்டு செய்திகள் உள்ளன!

21 comments:

வடுவூர் குமார் said...

ஜாதகத்திலும் "வகை" இருக்கா?கேள்விப்படாத தகவல்.
எனக்கு அந்த 4காவது ஜாதகம் ஓரளவு ஒத்துப்போகிறது.

Rajagopal said...

குருவே,

உங்கள் சீரிய பணி தொடர எனது வாழ்த்துக்கள். சொல்ல வந்த விசயத்தை விட்டு தலைப்பை வைத்து அரசியல் பண்ணுபவர்களின் பின்னூட்டங்களை புறக்கணிக்க வேண்டுகின்றேன். நீங்கள் செய்தது சரியே.

ராஜகோபால்

வெட்டிப்பயல் said...

என்னோடது எந்த டைப்னு எப்படி கண்டிபிடிக்க???

என் பிறந்த நாள், ஊர் சொன்னா கண்டுபிடித்து சொல்ல முடியுமா???

SP.VR. சுப்பையா said...

///வடுவூர் குமார் said...
ஜாதகத்திலும் "வகை" இருக்கா?கேள்விப்படாத தகவல்.
எனக்கு அந்த 4காவது ஜாதகம் ஓரளவு ஒத்துப்போகிறது.///

உலகில் 40% பேர்களின் ஜாதகம் இந்த 4ஆம் வகையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும்
முதல் வகை ஒரு 5 முதல் 10% இருக்கலாம்
அதுபோல 2ம் வகையினர்10% முதல் 15 % அளவுதான் இருப்பார்கள்

SP.VR. சுப்பையா said...

//Rajagopal said...
குருவே,
உங்கள் சீரிய பணி தொடர எனது வாழ்த்துக்கள். சொல்ல வந்த
விசயத்தை விட்டு தலைப்பை வைத்து அரசியல் பண்ணுபவர்களின்
பின்னூட்டங்களை புறக்கணிக்க வேண்டுகின்றேன். நீங்கள் செய்தது சரியே.
ராஜகோபால்//

உங்கள் எண்ணங்களுக்கும், ஆதரவான் பின்னூட்டதிற்கும் நன்றி!

கீதா சாம்பசிவம் said...

இந்த 4 வகை ரத்தங்கள் பற்றியும், அதில் பிறப்பவர்கள் பற்றியும் திருமந்திரத்தில் வந்துள்ளது. அந்தச் செய்யுளும், அதன் அர்த்தமும் முடிஞ்சா எழுதுங்களேன்.

SP.VR. சுப்பையா said...

// வெட்டிப்பயல் அவர்கள் சொல்லியது: என்னோடது எந்த டைப்னு எப்படி கண்டிபிடிக்க???
என் பிறந்த நாள், ஊர் சொன்னா கண்டுபிடித்து சொல்ல முடியுமா???//

உங்களைப் போல இன்னும் சிலர்
ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள் அடிப்படைப் பாடம் நடத்தி முடித்தபின் இதுபற்றி ஒருபதிவு தனியாகப் பதிகிறேன்
அடைப்படைப் பாடமின்றி அது புரியாது அதனாலதான்!

SP.VR. சுப்பையா said...

///கீதா சாம்பசிவம் said...
இந்த 4 வகை ரத்தங்கள் பற்றியும், அதில் பிறப்பவர்கள் பற்றியும்
திருமந்திரத்தில் வந்துள்ளது. அந்தச் செய்யுளும்,
அதன் அர்த்தமும் முடிஞ்சா எழுதுங்களேன்.///

நீங்கள் சொல்வது எனக்குப் புதிய செய்தி. அதற்கு நன்றி!
என்னிடம் திருமந்திரம் நூல் உள்ளது!
தேடிப் பார்க்கிறேன் சகோதரி!

SK said...

இதை நம்புகிறவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக பாடம் நடத்துகிறீர்கள் ஆசானே!

மற்றதைப் பற்றிக் கவலைப்படாமல், தொடருங்கள்!

சென்ஷி said...

present sir

senshe

ramachandranusha said...

ஐயா, 100% சதவீதம் நம்பிக்கையில்லாவிட்டாலும், புதிய சப்ஜெட், படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. அதனால் கடைசி பெஞ்சு. ஓரே ஒரு கேள்வி // தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு, 5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக் கொண்ட ஜாதகம்//
உதாரணமாய் மேற் சொன்னவைகளில் ஒன்றாம் வீடு , 5, 9ம் வீடு என்றெல்லாம் சொல்கிறீர்களே அங்கு எல்லாம் என்ன என்ன இருக்க வேண்டும்? நாலுக்குள் எதுவென்று தெரிந்துக் கொள்ளலாம் இல்லையா?

SP.VR. சுப்பையா said...

///// SK said... இதை நம்புகிறவர்களுக்குப் புரியும் வண்ணம்
எளிமையாக பாடம் நடத்துகிறீர்கள் ஆசானே!
மற்றதைப் பற்றிக் கவலைப்படாமல், தொடருங்கள்!////

உங்கள் கருத்திற்கும், விமர்சனத்திற்கும், ஆதரவிற்கும்
நன்றி அய்யா!

SP.VR. சுப்பையா said...

/////ramachandranusha said...
ஐயா, 100% சதவீதம் நம்பிக்கையில்லாவிட்டாலும், புதிய சப்ஜெட், படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. அதனால் கடைசி பெஞ்சு. ஓரே ஒரு கேள்வி // தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு, 5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக் கொண்ட ஜாதகம்//
உதாரணமாய் மேற் சொன்னவைகளில் ஒன்றாம் வீடு , 5, 9ம் வீடு என்றெல்லாம் சொல்கிறீர்களே அங்கு எல்லாம் என்ன என்ன இருக்க வேண்டும்? நாலுக்குள் எதுவென்று தெரிந்துக் கொள்ளலாம் இல்லையா?///
வீடுகளின் பலன்களை (The strength of the houses)
நிர்நயம் செய்யும் பகுதி மிகவும் பெரியது.
அதை அடிப்படைப் பாடங்கள் முடிந்தவுடன் சொல்லிக் கொடுக்கலாம்
என்றுள்ளேன். அப்போதுதான் அவைகள் சற்றுப் பிடிபடும்.
ஆகவே சற்றுப் பொருத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் சகோதரி!

SP.VR. சுப்பையா said...

///senshi said: present sir
senshe ///

என்ன சென்ஷி, தினமும் வருகைப் பதிவு மட்டும்தானா?

SP.VR. சுப்பையா said...

///senshi said: present sir
senshe ///

என்ன சென்ஷி, தினமும் வருகைப் பதிவு மட்டும்தானா?

மதுரையம்பதி said...

உள்ளேன் வாத்தியாரய்யா!, இந்த பதிவில் உள்ளது புதிய தகவல். நன்றி.

Madaiyan said...

நான்கு வகையான ஜாதகங்கள் என்பது புதிய விளக்கம். உங்களுடைய கட்டுரைகள் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நீங்கள் சொல்வதிலிருந்து ஒரு ஜாதகனுக்கு 18 மட்டுமே இருக்கும் என்கிறீர்கள். இதற்கு ஏதாவது விதி விலக்கு இருக்கிறதா?

மெளனம் said...

"ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான்"


நமது மனதினால் உருவாகும்

எண்ணங்கள் அதாவது வாக் எனப்படுகிறது 4 வகைப்படும் அவை
1.பரா 2.பஸ்யந்தி 3.மத்யமா 4.வைகரி எனப்படுபவை
-இந்திய ஆன்மீகம்
The four types fundamental interaction responsible for all observed processes are:

1. Strong interactions, responsible for forces between quarks and gluonsGlossary Term and nuclear binding.
2. Electromagnetic interactions, responsible for electric and magnetic forces.
3. Weak interactions, responsible for the instability of all but the least massive fundamental particlesGlossary Term in any class.
4. Gravitational interactions, responsible for forces between any two objects due to their energy (which, of course, includes their mass).

gluons,photons,W bosons and Z bosons the 4 force carrier

particles that are responsible for strong(gluon),electro magnetic(photon),weak interactions(W and Z bosons) respectively.
-western science

Kumares said...

ஐயா அவசரமில்லை, நேரம் உள்ள போது மட்டும் விடை தாருங்கள்...சந்தேகங்கள் மறந்து விடும் என்பதால் உடனுக்குடன் கேட்கிறேன்..

ஐயா வீடுகளில் உள்ள பரல்களின் எண்ணிக்கையை கொண்டு அந்த இஸ்தானம் நல்ல நிலையில் உள்ளதா என்று பார்க்க முடியும் இல்லயா...

அப்படியானால் அவ் வீடுகளின் பரல்களின் எண்ணிக்கையை கூட்டும் போது எந்த வகைக்கு கூடுதல் புள்ளிகள் வருகிறதோ அதை கொண்டு அது எந்த வகை ஜாதகம் என்று முடிவு எடுக்க முடியுமா?

அப்படி கணிக்கும்போது 2 வீடுகளுக்கு ஒரே புள்ளிகள் வந்தால் என்ன என்று முடிவு எடுப்பது..

உதாரணம்
2 ம் வீடு + 4 ம் வீடு = 10 ம் வீடு = 88 பரல்
4 ம் வீடு + 8 ம் வீடு + 12 ம் வீடு = 88 பரல்
இது எந்த வகை ஜாதகம்???????????

தனி காட்டு ராஜா said...

//நேற்று இரண்டு பின்னூட்டங்கள் இந்த்ப் பதிவுகளுக்கு
எதிராக வந்தன. அவற்றை நான் வெளியிடவில்ல!

அந்த நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்
இது உங்களுக்கான் வகுப்பு அல்ல!

இது ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு
மட்டுமே என்று நடத்தப்படும் வகுப்பு!

நீங்கள் உங்கள் அவநம்பிக்கைகளை உங்களோடு
மட்டும் வைத்துக் கொள்ளூங்கள்.

எங்கள் நம்பிக்கைகளைச் சிதைப்பதற்கு உங்களுக்கு
எந்த உரிமையும் கிடையாது!//


உங்க approach எனக்கு பிடிச்சிருக்கு ......

meiarasan arasan said...

நன்றி